Advertisement

பாடல் – 7
    அறை வாயிலில் அவளை விட்ட சம்யுக்தா “சொன்னது எல்லாம் புரிஞ்சுது இல்ல, பாத்து நடந்துக்கோ” என்றதுடன் அங்கு இருந்து நகர்ந்துவிட்டாள். 
     அறைக்குள் சென்ற இனியா கதவை சாத்திவிட்டு உள்ளே வர யோசனையுடன் இருந்த அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த விஷ்வா “எந்த கப்பல பிடிக்க போற” என்றான், அதில் கலைந்தவள் “என்ன” என்க “இல்ல ரொம்ப தீவிரமா எதையோ யோசிசிட்டு இருந்தில்ல அதான் எந்த கப்பல பிடிக்க இப்படி யோசிக்கிற அப்டின்னு கேட்டேன்” என்றான். 
     “ஓ, அது ஒன்னு இல்ல உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் அதை எப்படி ஆரம்பிக்கிறதுனு யோசிச்சிட்டு இருந்தேன்” என தன் மனதை மறைக்காமல் கூறினாள். 
    “பேசறது இருக்கட்டும் ஃபர்ஸ்ட் இப்படி வந்து உக்காரு” என தன் அருகே அவளை அமறுமாரு கைகளை காட்ட அவனை விட்டு சிறிது இடைவேளை விட்டு அமர்ந்தாள் இனியா. 
      அவள் அமர்ந்த பின் “சரி, நானும் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்று அவன் சொல்ல, என்ன என்பதை போல பார்த்தாள் இனியா. “இல்ல லேடிஸ் ஃபர்ஸ்ட், சோ நீ சொல்லு” என்றவன் கூற்றில் தான் சொல்ல வந்ததை சொல்ல ஆரம்பித்தாள் அவள்.
    “அது வந்து, இப்போ வரைக்கும் நம்ம ரெண்டு பேரும் சரியா பேசுனது கூட இல்ல அதான்…..” என்று இழுத்தவள் ஒரு பெரு மூச்சுடன் “மொதல்ல ரெண்டு பேரும் ஒருத்தவங்கள பத்தி ஒருதங்க நல்லா புரிஞ்சிக்கலாம் அதுக்கு அப்பறம் இதெல்லாம்” என்றவள் அவன் என்ன சொல்வானோ என்ற சிறு பயத்துடன் நிமிர்ந்து பார்க்க ஒரு சிறு புருவ சுளிப்பு தவிர எந்த மாற்றமும் இல்லை அவனிடம். அதில் நிம்மதி வர பெற்றவளாய் இத்தனை நேரம் தன்னை அறியாமல் பிடித்து வைத்திருந்த மூச்சை அவள் வெளியிட, “நானும் இதான் சொல்லலாம்னு இருந்தேன், நீ மேலயே படுத்துக்கோ நான் கீழ படுக்கரேன்” என்றவன் பெட்டில் இருந்து ஒரு தலையணையை எடுக்க “இல்ல,நீங்களும் மேலயே படுதுக்கோங்க, எனக்கு ஒன்னும் பிரச்சன இல்ல” என்றாள் அவன் மனைவி. 
     “அதுக்கு இல்ல” என்று அவன் எதோ சொல்ல வர “நா தூங்கியாச்சு” என்றபடி வேகமாக கட்டிலின் ஒரு பக்கம்  படுத்துக்கொண்டாள். அவள் சொல்லிய விதத்தில் ஒரு சிறு புன்னகை மலர எதையோ யோசித்தபடி விஷ்வாவும் மறுபக்கம் படுத்து கொண்டான். 
     காலை முதல் அலைந்தது சோர்வாக இருக்க இருவரும் படுத்ததும் உறங்கி விட்டனர். 
***************
     மறுநாள் காலை நேரத்தில் எழுந்த இனியா, முதல் நாள் நடந்தது நினைவு வர திரும்பி தனது அருகில் தூங்கிக்கொண்டு இருந்த விஷாவை பார்த்தாள். தான் சொன்னதை எதுவும் மறுப்பு கூறாமல் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டவனை நினைத்தவள், மனதில் ‘ நேத்து காலைலையும் இப்படித்தான் நான் ஜெயிக்கணும்னு விட்டு கொடுத்தாங்க, எனக்காக ஒன்னொன்னும் பாத்து பாத்து செய்யர  இவங்க மனசு கஷ்டப் படாம பாத்துக்கணும் ‘ என்று எண்ணியபடி எழுந்து கொண்டாள். இன்னும் சிறிது நாளில் தானே அவனை கஷ்டப் படுத்த போவது அறியாமல்.
     உள்ளேயே இருந்த குளியல் அறையில் புகுந்தவள் அடுத்த அரை மணி நேரத்தில் ஆகாய நீல புடவை உடுத்தி தலையில் துண்டுடன் வெளியே வர, தனது தூக்கத்தில் இருந்து எழுந்து கட்டிலில் அமர்ந்து இருந்தான் விஷ்வா. 
     இவளை பார்த்தவுடன் அவன் முகம் தானாக மலர, அவன் புன்னகை இவளையும் தொற்றிக்கொள்ள “குட் மார்னிங்” என்றாள், அவனும் அவளுக்கு பதிலுக்கு “குட் மார்னிங்” என்று சொல்லிவிட்டு அவள் நீட்டிய துண்டை வாங்கி கொண்டு குளியல் அறையில் புகுந்துவிட்டான்.  
      சிறிது நேரத்தில் அவன் வெளியே வர அங்கு அறையில் இனியா இல்லை. வெளியே சென்றிருப்பாள் என்று எண்ணியவன் அங்கு இருந்த நிலை கண்ணாடியை பார்த்து தனது தலையை துவட்ட ஆரம்பிக்க கையில் காபி கப்புடன் உள்ளே வந்தாள் அவள். 
    உள்ளே வந்தவள் கண்களில் முதலில் பட்டது கை இல்லா பனியனுடன் அங்கு நின்றிருந்த அவள் கணவன் தான். கைகளை மடக்கி தன் தலையை அவன் துவட்டும் பொழுது தெரிந்த புஜங்களை பார்த்தவள் முகம் செம்மையுற மறுபக்கம் திரும்பிக்கொண்டு “காபி” என்றாள் மெல்லிய குரலில். அவள் குரல் கேட்டு அவளிடம் வந்தவன் அவள் கரங்களில் இருந்து காபியை வாங்கி கொண்டான். அவன் அதை வாங்கியவுடன் தன் தலையை நிமிர்த்தாமல் வெளியேறி விட்டாள் இனியா. அவள் வெளியேறிய வேகத்தையும், தன் காரணமாக அவள் கன்னங்களில் மெல்லிசாக படர்ந்திருந்த செம்மையையும் பாத்தவன் முகம் அவன் மனதில் இருந்த ஆனந்தத்தை பிரதிபலிக்க கட்டிலில் இருந்த சட்டையை அணிந்தவன் தங்கள் அறையை விட்டு வெளியேறினான்.
 ************
    “மார்னிங் விஷ்வா, வந்து இப்படி உக்காருங்க” என்று வெளியே வந்தவனை வரவேற்றது நரேன், சம்யுக்தாவின் கணவன். முந்தைய நாளே இருவரும் அறிமுகம் ஆகியிருந்தனர். 
        சிறிது நேரம் இருவரும் பொதுவாக பேசிக்கொண்டு இருக்க, பின்கட்டில் இருந்து உள்ளே வந்த முருகேசன் விஷ்வாவை பார்த்ததும், “இனியா, மாப்ள எழுந்துட்டாரு பாரு, குடிக்க காபி கொண்டு வா” என்று உள் நோக்கி குரல் கொடுத்தார். “இல்ல மாமா அப்போவே கொடுதுட்டங்க” என்று பதில் அளித்த விஷ்வா, அவர் அருகே அமர்ந்ததும் அவரிடமும் பேசிக்கொண்டு இருந்தான்
     சிறிது நேரத்தில் மூவரையும் காவியா சாப்பிட அழைக்க, காலை உணவை பத்மாவும் விஜயாவும் பரிமாற, அனைவரும் உண்டனர். 
     காலை உணவை முடித்த சிறிது நேரத்தில் விஜயா சம்யுக்தா மற்றும் நரேன் விடைபெற்று விட, பத்மாவும் இனியாவும் மதிய சமயலை தயாரித்துக் கொண்டிருந்தனர், அப்பொழுது முருகேசனிடம் சென்ற விஷ்வா “மாமா இன்னைக்கு என்ன பிளான்” என்று கேட்க “இன்னைக்கு ரெஸ்ட் மாப்ள, நாளைக்குத்தான் குலதெய்வ கோவிலுக்கு போகனும்” என்றார். 
     “அப்போ இன்னைக்கு சாயந்திரம் இனியா அப்பறம் காவியாவை நா கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போகவா” என்று அவன் கேட்க “இனியாவ கூட்டிட்டு போக என்கிட்ட நீங்க கேட்க்கவே வேண்டாம் போறோம்னு சொல்லிட்டு போனா போதும், அப்பறம் உங்களுக்கு காவியா வர்றது தொந்தரவு இல்லைனா அவளையும் கூட்டிட்டு போங்க” என்றுவிட்டார். 
      “காவியா வர்றது தொந்தரவு எல்லாம் இல்ல மாமா, அவ வந்தா இன்னும் ஜாலியா இருக்கும்” என்று அவருக்கு பதில் அழித்தவன், “இனியா” என்று சமயல் அறை நோக்கி குரல் கொடுக்க “சொல்லுங்க” என்றபடி அவன் முன் வந்து நின்றாள் அவன் மனையாள் 
      “சாயங்காலம் கொஞ்சம் வெளிய போகனும் ஒரு 4 மணி வாக்குல கிளம்பிக்கோ, அப்படியே காவியாவையும் கிளம்ப சொல்லு ” என்க “எங்க போறோம்” என்று கேட்டவளுக்கு “அது சர்ப்ரைஸ்” என்ற பதிலுடன் தனது மொபைல் எடுத்து நோண்ட ஆரம்பித்து விட்டான்.
    சிறிது நேரம் எங்கே அழைத்து செல்வான் என்று யோசித்தவள் பின்னர்  காவியாவும் தங்களுடன் வருகிறாள் என்றால் கண்டிப்பாக இதைத்தான் நேற்று இருவரும் ரகசியம் பேசியிருப்பர்கள் என்ற முடிவுடன் அறையில் தூங்கி கொண்டிருந்த தன் தங்கையை தேடி சென்றாள். 
     “ஏய் காவி” என்று அவள் தோல்களை இனியா தட்ட “ம்ம்ம்” என்ற சிறு முனகலுடன் திரும்பி படுத்தாள் காவியா. “ஏய் எரும எழுந்திரு டி” என்று மேலும் சிறிது பலமாக இனியா அவளை எழுப்ப “என்னக்கா…என்ன வேணும் உனக்கு இப்போ” என்று அரை தூக்கத்தில் அவள் எழுந்து அமர ” நீ என் தங்கம்ல” என்று கொஞ்ச ஆரம்பித்த இனியாவை “இந்த கொஞ்சல்ஸ் எல்லாம் மாம்ஸ் கிட்ட வச்சுக்கோ, இப்போ என் தூக்கத்த கெடுக்காம எதுக்கு இங்க நீ வந்தினு சொல்லு” என்ற காவியாவிடம் ” அது ஒன்னும் இல்ல சாயந்திரம் நம்ம மூணு பேரும் வெளிய போறோம் நாலு மணிக்கு ரெடியா இரு” என்று சொன்னவள், “என்ன இன்னைக்கே வா போறோம்” என்று மலர்ந்த தன் தங்கை முகத்தை பார்த்து ” ஆமா நேத்து நீயும் அவரும் எதோ ரகசியம் பேசுனீங்களே அது இத பத்தி தான” என்று கேட்க,”ஆமா அதுக்கு இப்போ என்ன” “இப்போவாச்சும் எங்க போறோம் சொல்லு டி” என்று கேட்க ” நீ ஒரு சரியான இம்ச அக்கா, அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல போக போறோம்ல அப்போ நீயே பாத்து தெரிஞ்சுக்கோ” என்றபடி மீண்டும் படுத்துவிட்டாள்.
     தான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் மீண்டும் படுத்தவள் தலையில் நங்கென்று கொட்ட எழுந்த கைகளை சிரமப்பட்டு அடக்கியவள்,  இனி இவளிடம் கேட்டு பிரயோஜனம் இல்லை என்று நினைவுடன் சற்று நேரம் ஓய்வு எடுக்க தன் அறைக்கு சென்றாள். முந்தைய நாள் அலுப்பு இன்னும் தீராமல் இருக்க படுத்தவுடன் உறங்கியும் விட்டாள். 
********”””
     யாரோ தன்னை தட்டுவது போல இருக்க, அந்த கைகளை தள்ளிவிட்டு திரும்பி படுத்தாள் இனியா. ஆனாலும் விடாமல் மீண்டும் அந்த கை அவளை எழுப்பிய படி இருக்க தூக்கம் கலைந்த எரிச்சலில் எழுந்து அமர்ந்தவள் கண்களை துடைத்துக்கொண்டே காவியா தன்னை எப்பொழுதும் இப்படி எழுப்பும் எண்ணத்தில் “ஏய் காவி மனுஷி கொஞ்ச நேரம் தூங்கிற கூடாதே உடனே……” என்று தன் கைகளை கண்களில் இருந்து விலக்கி எதோ திட்ட வந்தவள் அங்கு சிறு ஆர்வத்துடன் தன்னையே பார்த்துக்கொண்டு இருந்த தன் கணவனை கண்டவுடன் கப்சிப் என்று தன் பேச்சை நிறுத்தி விட்டாள். ‘ நல்ல வேல எடகூடமா எதும்  சொல்லிடல’ என்று நினைத்தவள் அவனை ஒரு அசட்டு சிரிப்புடன் பார்த்து ” இல்ல காவியானு நினச்சு ” என்று இழுக்க “ஒன்னும் பிரச்சன இல்ல, நேரம் ஆகுது சீக்கிரம் போய் கிளம்ப சொல்லத்தான் எழுப்பினேன்” என்றவன் அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.
      அவன் ஏற்கனவே கிளம்பி இருந்ததை பார்த்தவள் திரும்பி நேரத்தை பார்க்க அது மாலை மூன்று மணியை காட்டியது. அச்சோ இவ்வளோ நேரம் தூங்கிட்டோமே என்ற நினைப்புடன் விரைவாக கிளம்ப சென்றாள்.
       அரை மணி நேரத்தில் கிளம்பியவள் தன் அறையை விட்டு வெளியே வர “இனியா கொஞ்சம் இங்க வா” என்ற பத்மாவின் குரலில் அவரிடம் சென்றாள். 
     அவள் வந்ததும் “என்ன பொண்ணு நீ, இப்படித்தான் மதிய சாப்பாட்டுக்கு கூட எழுந்தரிக்காம தூங்கறதா. மாபிள்ளை என்ன நினைசிருப்பாரு உன்ன பத்தி, உன்ன எழுப்பரேனு சொன்னதுக்கு கூட அவ பாவம் அசந்து தூங்கரா எழுப்ப வேண்டாம்னு சொல்லிட்டாரு, இருந்தாலும் அவர இப்படி வந்த முதல் நாளே நீ இல்லாம தனியா சாப்ட வச்சது தப்புதான” என்று அவளை பத்மா திட்ட , அப்பொழுதுதான் தன் தவறை உணர்ந்தவள் வயிறும் பசியை உணர்த்த, தன் அம்மாவை பார்த்தவள் “அம்மா உங்க மாப்பிள தனியா சாப்ட்டாருனு என்னய பட்னி போடறது ரொம்ப தப்பு பாத்துக்கோங்க” என்று சொன்னவள் டைனிங் டேபிள் சென்று தட்டை எடுத்து வைக்க, அவளிடம் வந்த பத்மா அவளுக்கு பரிமாற ஆரம்பித்தார்.
     
    அவள் சாப்பிட்டு முடிக்கவும் விஷ்வா அவளை அழைக்கவும் சரியாக இருக்க பெரியவர்களிடம் சொல்லிவிட்டு மூவரும் கிளம்பினர். 
    அவன் கூட்டி சென்ற இடமோ இனியா வை மட்டும் அல்லாமல் காவியாவை யும் சந்தோசத்தில் துள்ளி குதிக்க வைத்தது.
     

Advertisement