Advertisement

பாடல் – 4
    “உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்று சுற்றிலும் தன் பார்வையை திருப்பியபடி இனியா சொல்ல “சொல்லு இனியா” என்றவன் குரல் எதோ வித்தியாசமாய் மனதில் பட அதை ஒதுக்கியவள் “இல்ல, அது வந்து” என்று இழுத்தவளிடம் , “பயப்படாம சொல்லு” என்றவன் அவளை சற்று நெருங்கி நின்றான்.
      
       அவன் தன்னை நெருங்கியதும் ஒரு எட்டு பின்னால் நகர்ந்தவள்  “எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு, உங்க கூட வாழ்ந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோனுது” என்று தன் மனதை அவனுக்கு தெரிவித்துவிட்டாள். இவள் இவ்வாறு சொன்னதும் ஆச்சர்யத்துடன் இவள் முகம் பார்த்தவன் “நிஜமாவா சொல்லற” என்று கேட்க “அமா,நிஜமாவே சொல்றேன், ஐ லவ் யூ சோ மச்” என்றாள். 
      
      “இவ்வளோ நாள் இல்லாம இப்போ என்ன திடீர்னு ” என்று யோசனையுடன் அவன் கேட்க, “அது ரொம்ப நாள் சொல்லனும் நினைச்சேன், ஆனா அப்போ எல்லாம் சம்யு கூட இருந்தா அதான் வந்து பேச முடியல” என்றவள் “அப்பறம் இன்னும் ஒன் வீக்ல எனக்கும் காலேஜ் முடிஞ்சு நா ஊருக்கு கிளம்பிடுவேன், அதுக்கு அப்பறம் உங்கள இப்படி நேருல பாத்து சொல்ல முடியுமானு தெரியல அதான் இன்னைக்கு தனியா வர்ற சான்ஸ் கிடச்சதும் வந்துட்டேன்” என்று நீளமாக அவனை நிமிர்ந்து பார்க்காமல் சொல்லிவிட்டாள்.
      சிறிது நேரம் அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லாமல் போக, இவள் நிமிர்ந்து பார்க்க, அங்கு அவன் முகத்திலோ இன்னவென்று அவள் சொல்ல முடியாத ஒரு உணர்வு. இவள் பார்த்ததும் தன் முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தவன் “நா பதில் சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட எனக்கு முக்கியமான ஒருத்தவங்கள காட்ட நினைக்கறேன், கொஞ்சம் என்கூட நீ வர முடியுமா” என்று கேட்டான். இதற்கு முன்னும் அவன் தன்னிடம் யாரையோ அறிமுகப்படுத்த போவதாக சொன்னது நினைவில் வர்ற, அது யார் என்று எண்ணியவள் முகம் யோசனையை தத்தெடுக்க அதை பார்த்தவன் “இங்க பக்கதுலதான் இருக்காங்க, ஒரு அறை மணி நேரம் தான் ஆகும் போய்ட்டு வர்ற, உனக்கு விருப்பம் இல்லாட்டி வேண்டாம்” என்று அவன் மெதுவாக சொல்ல “இல்ல இல்ல நா வரேன்” என்று சொல்லிவிட்டாள். பின்னர் “சரி வா” என்று அங்கு நிறுத்தி இருந்த தனது பல்சரை அவன் எடுக்க, இருக்கட்டும் நா என்னோட ஸ்கூட்டில வர்றேன் ” என்று தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். 
       அவன் முன்னால் வழி காட்டி செல்ல அவனை பின் தொடர்ந்து சென்றவள் அவன் ஒரு வீட்டின் முன் வண்டியை நிறுத்த , தானும் தனது வண்டியை அங்கு நிறுத்தினாள். பின் அவளை வீட்டிற்குள் அவன் அழைத்து செல்ல, அங்கு யாரும் இல்லாததை கண்டவள் “இங்க யாரும் இருக்கற மாதிரி தெரியலை யே ” என்று அவனிடமும் கேட்டாள். 
     “அது…..அவங்க வெளிய போய் இருக்காங்க, இதோ இப்போ வந்திருவாங்க, நீ உட்க்காரு நா போய் காபி, ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வர்றேன்” என்று அவளை அமர சொன்னவன் கிச்சனுக்குள் நுழைந்து விட்டான். 
     சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து இருந்தவள், அவன் வரும் அரவம் இல்லாமல் போக, என்ன செய்கிறான் என்று பார்க்க கிட்சன் பக்கம் சென்றாள்.
     அவள் கிச்சன் உள் நுழைய போகும் நேரம் “மச்சி, பட்சி மடிஞ்சிருச்சு டா” என்றவன் குரல் கேட்டு அதிர்ச்சியில் அங்கேயே நின்று விட்டாள். தான் பேசுவதை இவள் கேட்பது தெரியாதவனும், எதிற்பக்கம் இருப்பவன் எதோ கேட்க “எனக்கே ஆச்சர்யம்தான் இவ்வளோ சிக்கரம் அவ ஓத்துக்கிட்டது, நான் கூட இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்னு நினைச்சேன், ஆனா இன்னைக்கு அவளா வந்து பேசினதும் ஒரே ஆச்சர்யமா போய்டுச்சு” என்றவன் தொடர்ந்து “அப்பறம் இன்னும் ஒரு வாரத்தில ஊருக்கு கிளம்புவா போல அதான் லேட் பண்ண வேண்டாம்னு நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வந்துட்டேன், நீயும் சிக்கரம் வந்திடு, சரி இப்போ கட் பண்றேன், ரொம்ப நேரம் காணோம்னு இங்க வந்தாலும் வந்திருவா” என்றவன் மொபைலை கீழே வைத்துவிட்டு அருகில் இருந்த காஃபியில் எதையோ கலக்குவது போல தெரிய, இனியும் தான் இங்கு இருப்பது நல்லது இல்லை என்று முடிவு எடுத்த இனியா, சத்தம் எதுவும் இல்லாமல் அங்கு இருந்து வெளியேறி விட்டாள். வெளியே வந்தவள் மனமோ ‘ நல்ல வேலை அவன் வண்டியில் வராம நம்ம வண்டியில் வந்தோம் ‘ என்று நிம்மதி கொள்ள, உடனே தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அங்கு இருந்து கிளம்பி விட்டாள். வீட்டிற்க்கு வந்த பின்பே அவள் படபடப்பு சற்று குறைந்தது. 
    அந்த ஊட்டி குளிரிலும் அவள் முகம் வேர்த்திருக்க, அதை தனது கைக்குட்டையால் துடைத்தபடி யார் கண்ணிலும் படாமல் தனது அறைக்குள் நுழைந்து விட்டாள். அறைக்குள் நுழைந்தவளை வரவேற்றதோ அங்கு கட்டிலின் மேல் அலறிக்கொண்டு இருந்த அவள் அலைபேசியே”, தனது நடுங்கும் கரங்களில் அதை எடுத்து பார்த்தவள் அதில் ‘ அஜி ‘ என்ற பெயர் மின்ன தனது மொபைலை அணைத்து விட்டாள். அணைத்தவள் கண்களில் இருந்து கன்னத்தை நனைக்க உருண்டது சில கண்ணீர் துளிகள்.
**********
    தனது கண்ணீரை யாரோ துடைப்பது போல தோன்ற கண்களை திறந்து பார்க்க, அருகில் அமர்ந்து இருந்த காவியா “என்னாச்சு அக்கா, எதாச்சும் பிரச்சனையா” என்று அக்கறையுடன், காரில் முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த  தங்கள் பெற்றோர் காதில் விழாமல் மெதுவாக கேட்டாள். அவள் கேட்டதற்கு மறுப்பாக இனியா தலை அசைக்க, ” இல்ல கா நானும் இப்போ கொஞ்ச நாளா உன்ன கவனிசுட்டுதான் இருக்கேன் நீ சரி இல்ல, இந்த கல்யாணம் பிடிக்கலைனா வெளிப்படையா சொல்லிடு, அது விட்டுட்டு இப்படி மனசுல போட்டு குழப்பிக்கிட்டு இருக்காத” என்று காவியா சொல்ல, அவள் அன்பில் மேலும் தனது கண்கள் கரிக்க, அதை மறைத்துக்கொண்டவள் ” அதெல்லாம் ஒன்னும் இல்ல, இன்னும் கொஞ்ச நாள்ல உங்களை எல்லாம் விட்டுட்டு போறத நினைச்சுதான் கொஞ்சம் மனசு கஷ்டமா இருக்கு” என்று கூறி அவளை சமாளித்துவிட்டாள். 
     வரும் வழியிலேயே இரவு உணவை முடித்துக் கொண்டவர்கள் வீட்டிற்கு வந்ததும் தத்தமது அறைகளில் ஓய்வெடுக்க சென்றுவிட்டனர். தங்கள் அறைக்கு வந்த இனியாவுக்கோ மீண்டும் நினைவுகள் பின் நோக்கி சென்றன. 
***********
     அன்று அவன் வீட்டில் இருந்து வந்த பின்னர் அடுத்த ஒரு வாரத்திற்கு வெளியே செல்லும் வாய்ப்பு ஏற்படவில்லை இனியாவுக்கு. இறுதி செமஸ்டர் நடந்து கொண்டு இருந்ததால் கல்லூரிக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, அடுத்த ஆறாவது நாளில் வரும் ஒரு தேர்வை மட்டும் சென்று எழுதி வந்துவிட்டால் அத்தோட அவள் படிப்பும் முடிந்து தன் வீட்டிற்க்கு சென்றுவிடலாம். அதன் பின் அவனை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்ற நினைவே அவளுக்கு நிம்மதியை தந்தது.
      நாட்கள் அதன் போக்கில் செல்ல தேர்வு எழுதும் நாளும் வந்தது. இடையில் ஒரு முறை அவளுக்கு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்க அதை அட்டெண்ட் செய்தவள் காதில் “அன்னைக்கு சொல்லாம எங்க போய்ட்ட நீ, எவ்வளோ டைம் உனக்கு கால் பன்றது” என்ற குரலில் அதை உடனடியாக அணைத்துவிட்டாள். பின் அன்று மாலை யாரும் அறியாமல் அந்த சிம் கார்டையும் உடைத்து விட்டாள். அதுவரை மனதை விட்டு மறைந்திருந்த பயம் மீண்டும் அவளை கவ்விக்கொண்டது. 
         எப்பொழுதும் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் இனியா, வழக்கம்போல பேருந்து நிலையத்தில் அவன் இருந்தால் என்ன செய்வது என்ற பயத்தில், பேருந்தில் போகாமல் தெரிந்த ஒருவரின் ஆட்டோவில் அன்று கல்லூரிக்கு சென்றுவிட்டாள். ஆட்டோ வேறு வழியில் வந்ததால் அவனை பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. 
       பரிட்சை முடிந்த பின் சிறிது நேரம் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தவள், தனது தோழிகள் கிளம்புவதாக கூற தானும் கிளம்பினாள். அவள் தோழிகள் வீடு இவள் வீடு இருந்த எதிர் திசையில் இருந்ததால் அவர்களுடன் செல்லாமல் ஆட்டோவில் செல்ல முடிவு எடுத்தவள்,  காலை வந்த ஆட்டோவை அழைக்க அவர் வெளியே இருப்பதாகவும் தற்சமயம் வர முடியாது என்றும் கூறிவிட்டார், வேறு ஆட்டோவும் அச்சமயம் கிடைக்காததால் தான் எப்பொழுதும் செல்லும் நேரத்திற்கு சற்று முன்னதாகவே சென்றால் அவன் கண்களில் பட மாட்டோம் என்று எண்ணியவாறு தனது தோழிகளிடம் விடைபெற்று, பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டாள். 
      அன்று சில வகுப்புகளுக்கு மட்டுமே பரிட்சை இருந்திருக்க, அதை எழுத வந்தவர்களும் மதியமே கிளம்பியிருக்க அந்து பேருந்து நிலையம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. கல்லூரியில் இருந்து சில எட்டுக்களில் பேருந்து நிலையம் இருந்தது. மனதில் ஒரு பயத்துடனே அங்கு வந்து நின்றவள் பேருந்து வருகிறதா என்று பார்த்துக்கொண்டு நிற்க “என்னாச்சு இனியா, அன்னைக்கு ஏன் சொல்லாம கிளம்பிட்ட” என்று தனக்கு வெகு அருகில் கேட்ட குரலில் தூக்கி வாரிப் போட திரும்பினாள். 
     திரும்பியவள் கண்களில் பட்டதோ அஜித். இவன் எங்கே இங்கு , அதுவும் இந்த நேரத்தில் என்று கண்களில் மிரட்சியுடன் அவனை பார்த்தவள் தனது கைப்பையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். அவள் தன்னை பயத்துடன் பார்ப்பதை கண்டு “நான் கேட்டதுக்கு இந்த பார்வை பதில் இல்லையே” என்றவன் புருவங்கள் யோசனையில் சுருங்க, “அப்போ அன்னைக்கு நா பேசுனத நீ கேட்டுட்ட, அப்படித்தான” என்று அவன் கேட்க அவள் பதில் ஏதும் சொல்லாமல் தனது கல்லூரிக்குள் செல்ல திரும்பினாள். 
      திரும்பியவள் ஒரு எட்டு வைப்பதற்குள் அவள் இடது கைகளை பிடித்துவிட்டான் அவன். “எங்க போக பாக்கற, அதுக்குள்ள உன்ன போக விடவா ஒரு வருஷம் உன் பின்னாலயே சுத்துனேன், இன்னைக்கு நீ என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது” என்றவன் அருகில் நிறுத்தி இருந்த காரை நோக்கி அவளை இழுக்க, சட்டென்று தன் கைப்பையில் வைத்திருந்த pepper sprayவை எடுத்து அவன் கண்களில் அடித்துவிட்டாள். கண்களின் எரிச்சல் தாங்காமல் அவன் அவள் கைகளை விட, சிட்டாக தனது கல்லூரிக்குள் ஓடி விட்டாள். இவை அனைத்தும் பேருந்தின் நிழல் குடையின் மறைவில் நடந்திருக்க, இங்கு நடந்த எதுவும் கல்லூரியின் வாயிலில் இருந்த காவலாளி யின் கண்களில் பட வில்லை. இவள் ஓடி வேகமாக ஓடி வந்ததை பார்த்தவர் ” என்னமா ஆச்சு, எதாச்சும் பிரச்சனையா” என்று கேட்க பேருந்து நிலையத்தின் புறம் கை காட்டியவளுக்கு “அங்க அங்க ” என்றதை தவிர அவளுக்கு வேறு வார்த்தைகள் வரவில்லை. 
    இவள் கை காட்டிய திசையை பார்த்தவர் கண்களில் தனது கண்களை தேய்த்துக் கொண்டு இருந்த அஜித் தெரிய இவனால் தான் எதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டார். முகம் முழுக்க வியர்வை துளித்திருக்க மிரண்ட பார்வையுடன் அங்கு நின்று கொண்டு இருந்தவளை பார்த்தவர் “உள்ள வந்து அந்த மரத்துக்கு கீழ உட்க்காறு மா ” என்றவாறு உள்ளே சென்று தனது கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்து சிறிது நேரம் பேசியவர், ஒரு டம்ளரில் சிறிது தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து அவளை பருகச்சொன்னார். 
     ஓரிரு நொடிகளில், தனது வண்டியோடு அங்கே காலேஜில் துப்புரவு வேலை செய்யும் ஒரு பெண் வந்து நிற்க, இவளிடம் திரும்பியவர் ” இப்போ நீ தனியா வீட்டுக்கு போறது சரி வராது, இவங்க உனக்கு தொனைக்கு வருவாங்க” என்று கூற, நன்றியுடன் அவரை பார்த்தவள் “ரொம்ப நன்றிங்க அண்ணா” என்று அதை வார்த்தைகளாலும் வெளிபடுத்த, “இதுக்கெல்லாம் எதுக்கு மா நன்றி” என்று சொல்லியவர் அப்பெண்ணிடம் திரும்பி “பாத்து பத்திரமா போ சுமதி” என்று கூற, இவளிடம் திரும்பிய சுமதி ” வா மா வந்து வண்டியில ஏறிக்கோ” என்று சொன்னார். பின்னர் இனியாவும் அவருடன் செல்ல, இவள் வீடு இருக்கும் இடம் கேட்டு கொண்டவர் போகும் வழியில் “இங்க பாரும்மா, இத சொல்றேன்னு எதுவும் தப்பா நினைசுக்காத” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தவர் “இன்னைக்கு மாதிரியே ஆபத்து வர்ற நேரம் எல்லாம் உதவிக்கு நம்ம பக்கத்துல ஆளுங்க இருப்பாங்கன்னு சொல்ல முடியாது, நம்ம பாதுகாப்ப நம்மதான் பாத்துக்கணும், நா உன்ன பாத்தப்போ நீ கைல வச்சிருந்த அந்த பாட்டில பார்த்தேன், இன்னைக்கு மாதிரியே எப்போவும் அது உனக்கு உதவி பண்ணுமானு கேட்டா அது சந்தேகம்தான், அதனால தற்காப்பு கலைகலையும் நம்ம கொஞ்சம் கத்து வச்சிக்கனும், அப்பறம் இந்த மாதிரி ஆபத்து வர்ற நேரத்துல நமக்கு உதவி பண்ணவே காவலன் ஆப் (app) இருக்கு,  அதையும் மறக்காம நீ ஏத்தி வச்சுக்கோ” என்றவர் சொன்னதை அமைதியாக கேட்டவள் மனதிலோ மூன்று மாதங்களுக்கு முன் தங்கள் கல்லூரியில் காவல் துறை அதிகாரிகள் வந்து காவலன் செயலியை மற்றும் அதன் பயன்களை பற்றி கூறியதும் அதற்கு தனது மனதில் ” நமக்கு அப்படி இவங்க சொல்லற மாதிரி என்ன ஆபத்து வர்ற போகுது” என்ற எண்ணத்துடன் அதை கவனிக்காமல் விட்டதும் நினைவில் தோன்றியது. 
       பின்னர் சிறிது நேரத்தில் இவர்கள் வீடு வந்துவிட, அவரை உள்ளே அழைத்தவளுக்கு தான் இன்னொரு நாள் வருவதாக சொல்லி விடைபெற்றார் சுமதி. 
       *****இன்று*****
     பழைய நியாபாகங்கள் போட்டி போட அதை மனதில் அசைபோட்டவாறே சிறிது நேரம் எதோ யோசித்தவள், இனி தனது மனதில் விஷ்வா மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அஜித் பற்றிய எண்ணங்களை அழித்து விட வேண்டும்  என்று ஒரு முடிவு எடுத்தவளாய் உறங்கி போனாள்.

Advertisement