Advertisement

பாடல் – 14
    
      அன்று இரவு பால்கனியில் அமர்ந்து விஷ்வா புத்தகம் படித்துக்கொண்டு இருக்க “இந்தாங்க பால்” என்றபடி அவன் முன் ஒரு கிளாஸை நீட்டினாள் இனியா.
     அதை தன் கைகளில் வாங்கி அங்கு இருந்த மேஜையில் வைத்தவன் “தல வலி எப்படி இருக்கு, இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திருக்கலாம் தான” என்க “இப்போ பரவா இல்ல, அதான் கொஞ்ச நேரம் காத்து வாங்கலம்னு வந்தேன்” என்றபடி அங்கு இருந்த ஊஞ்சலில் அமர்ந்தாள்.  
     அவள் அமர்ந்ததும் “இனியா, எனக்கு இந்த வீட்டுலயே ரொம்ப புடிச்ச இடம் எது தெரியுமா” என்று தன் கைகளில் இருந்த புத்தகத்தை மேஜையில் வைத்தபடி விஷ்வா கேட்க, இல்லை என்பதை போல தன் தலையை ஆட்டிய இனியா “நீங்களே சொல்லுங்க எனக்கு தெரியல” என்றாள்.
      “இதோ இந்த பால்கனி தான் எனக்கு ரொம்ப புடிச்ச இடம்” என்று சொன்ன விஷ்வா தொடர்ந்து “அப்படியே இந்த நைட் நேர காத்துல, நல்ல பாட்ட கேட்டுட்டே, புடிச்ச புக்க படிக்கரது எவ்வளோ நல்லா இருக்கு” என்று அவளிடம் கேட்க “ரொம்ப நல்லா இருக்கும், ஆனா இப்போ பாட்டு மிஸ் ஆகுதே” என்றாள் இனியா. 
     “அதான் நீ இருக்கைல” என்று விஷ்வா சொல்ல “நானா? நான் என்ன பண்ண முடியும்” என்று கேட்டாள் . “நீ  நல்லா பாடுவ தான எனக்கு ஒரு பாட்டு பாடி காட்டேன்” என்று அவன் கேட்க “என்ன இப்போ பாட்டா, இப்டி திடீர்னு கேட்டா நா எந்த பாட்டு பாட” என்று அவள் கேட்க “எனக்கு புடிச்ச பாட்டு எல்லாம் நா சொல்லுவேன் நீ அத பாடனும்” என்றான் விஷ்வா. 
    “சரி என்ன பாட்டுனு சொல்லுங்க” என்றபடி அவள் தன் கால்களை மடக்கி  தயாராக “கண்டிப்பா பாடுவ தான” என்று மீண்டும் ஒரு முறை கேட்டான் விஷ்வா “கண்டிப்பா பாடுவேன் நீங்க சொல்லுங்க” என்று அவள் பதிலளிக்க “சரி மொதல்ல நீ உனக்கு புடிச்ச பாட்டு எதாவது பாடு” என்று விஷ்வா சொன்னான். “எனக்கு புடிச்சதா” என்று கேட்டபடி யோசித்தவள் மனதில் ஒரு பாடல் தோன்ற அதையே பாட ஆரம்பித்தாள். 
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
உன் விழியால் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே
கடலோடு சேரும் வான் மழைத்தூளி போல்
உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்
உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்
      அவள் மனம் ஏனோ தங்கள் திருமணம் முடிந்த நாளில் இருந்து தன் மனதை புரிந்து தெரிந்து நடந்து கொள்ளும் விஷ்வாவையே பாடல் முதல் வரியில் இருந்து நினைவு படுத்த, அவள் பார்வை தானாக தன் கணவன் விஷ்வாவின் முகத்தில் படிந்து அதை ரசித்தது. 
    இங்கு தன் கண்களை மூடியபடி அவள் பாடலை ரசித்துக்கொண்டு  இருந்தவனுக்கோ பாவம், தன் காதல் மனைவி தன்னை முதல் முறை ஆசையாக பார்ப்பது கூட தெரியவில்லை.   
    பாடல் முடிந்ததும் அவன் கண்களை திறக்க அவள் தன் பார்வையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டாள். “உன்னோட வாய்ஸ் ரொம்ப ஸ்வீட் இனியா” என்று அவள் புறம் திரும்பியவன்  சொல்ல. “தாங்க்ஸ்” என்றவள் “அடுத்து எத பாட” என்று கேட்டாள். சிறிது நேரம் யோசித்தவன் “யமுனை ஆற்றிலே பாடு” என்க சரி என்றபடி தன் கண்களை மூடி பாட ஆரம்பித்தாள். 
யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட
     ஏனோ இவ்வரியை பாடும் பொழுது அவள் மனம் அஜீத்தை நினைவு படுத்த தன்னை அறியாமல் பாடுவதை நிறுத்தி விட்டாள். அவள் அவ்வாறு பாதியில் நிறுத்தியதும் அவள் புறம் திரும்பியவன் “என்னாச்சு ஏன் பாதில நிறுத்திட்ட” என்று கேட்க “அது ஒன்னும் இல்ல, அடுத்து வர்றது மறந்திருச்சு” என்று சமாளித்தவள் மனமோ அவனிடம் இன்னும் தன் கடந்த கால காதலை பற்றி கூறாததை நினைத்து குற்ற உணர்ச்சியில் தவித்தது.
     
     ” சரி சரி” என்றவன் “இப்போ கடைசியா ஒரே ஒரு பாட்டு மட்டும் பாடுவயா” என்று அவளிடம் கெஞ்சலாக கேட்க “என்ன பாட்டுன்னு சொல்லுங்க” என்றாள் இனியா
     “மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு பாடேன்” என்று அவன் கேட்க “என்…என்ன பாட்டு” என்று மீண்டும் அவனிடம் கேட்டாள். 
    “மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு” என்று மீண்டும் விஷ்வா சொல்ல  “அ..அது…அந்த பாட்டு எனக்கு தெரியாதே” என்றாள் இனியா ‘ அவள் மனமோ தன்னிடம் எப்பொழுதும் அப்பாடலை பாட சொல்லி கேட்பவனிடம் மீண்டும் சென்றது ‘
      “சும்மா சொல்லாத அது எவ்வளோ ஃபேமஸ் அத போய் தெரியாதுன்னு சொல்ற இத நா நம்பனுமா, எனக்கு தெரியாது இப்போ நீ அத பாடியே ஆகணும்” என்று பிடிவாதமாய் விஷ்வா சொல்ல, ஏற்கனவே அவன் நினைவில் இருந்தவள் “அதான் தெரியாதுன்னு சொல்றேன்ல அத்தோட விட வேண்டியது தான, ஏன்தான் என்ன இப்படி எல்லாத்துக்கும் கம்பெல் பண்றீங்களோ ச்சை” என்று அவள் சலித்துகொள்ள அதில் எரிச்சல் அடைந்த விஷ்வா  “என்ன கம்பெல் பண்றேன் உன்ன நானு, இப்போ வரைக்கும் நீ கேட்டு நா எதாச்சும் இல்லைனு சொல்லிருக்கெனா இல்லாட்டி அத பண்ணாத இத பண்ணாத அப்டின்னு எதாச்சும் உன்ன தடுத்திருக்கெனா? எனக்கும் சில ஆசைங்க இருக்கும் அதெல்லாம் பண்ண சொல்லி உன்ன நா கேட்டா அதுக்கு பேரு கம்பெல் பண்றதா. அப்போ கூட இப்டித்தான் ஒரு பேருக்காக என்கிட்ட நீ சண்ட போட்ட, எவ்வளோ ஆசையா அப்போ” என்று எதோ சொல்ல வந்தவன் அவளின் அதிர்ந்த முகத்தை பாத்ததும் தான் சொல்ல வந்ததை நிறுத்தி விட்டான். அதன் பிறகே தன்னையும் மீறி தான் அவளிடம் கத்தி விட்டதை உணர்ந்தவன் “சாரி” என்று மெல்ல அவள் முகத்தை பார்க்காமல் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான். 
     அவன் சென்ற பின்பும் அங்கேயே அமர்ந்திருந்த இனியாவுக்கோ  “அவர் சொல்றதிலயும் என்ன தப்பு இருக்கு, இப்போ வர நம்மல எவ்வளோ நல்லா பாத்துக்கராறு, ஆன நம்ம கொஞ்சம் கூட அவர புரிஞ்சிக்க முயற்சி பண்ணலயே, அவ்வளோ ஏன் அவர் கிட்ட இருந்து எவ்வளோ பெரிய உண்மைய மறைக்கறோம், இப்போ கூட அவர் கிட்ட உண்மைய சொல்லாத குற்ற உணர்ச்சில தான இந்த பிரச்சன வந்திச்சு” என்று எண்ணம் எழ “மொதல்ல இத பத்தி அவர் கிட்ட சொல்லனும்” என்று முடிவு எடுத்த படி உள்ளே எழுந்து சென்றாள் . 
    அவள் உள்ளே செல்ல அங்கு கட்டிலில் அமர்ந்து டைரி போல எதையோ தன் கைகளில் வைத்து படித்து கொண்டு இருந்த விஷ்வா அவளை பார்ததும் எதுவும் பேசாமல் அதை தன் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டு வந்து படுத்து விட்டான். 
     அவன் அவ்வாறு தன்னிடம் முகம் திருப்பியதும் இனியாவின் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க அதை துடைத்துக் கொண்டவள் அவனுக்கு மறுபக்கம் வந்து படுத்துவிட்டாள். 
     மறுநாள் காலை இனியா எழுந்தரிக்கும் பொழுது அவள் அருகில் விஷ்வா இல்லை. ‘சண்டே அதுமா இவ்வளோ காலைல எங்க போயிருப்பாரு’ என்ற எண்ணத்துடன் எழுந்தவள் தன் காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே வர அங்கு ஹாலில் இருந்த டேபிலில் ஒரு கப் காபியும் அதன் கீழ் ஒரு பேப்பரில் ‘sorry’ என்று எழுதி இருந்தது. 
     அதை பார்த்தவள் முகத்தில் தன் கணவனை நினைத்து ஒரு மென்மையான புன்னகை படற அந்த புன்னகையுடன் அவனை தேடியவள் கண்களில் சமையல் அறையில் எதோ செய்து கொண்டு இருந்த விஷ்வா தெரிந்தான். 
     அதற்குள் அவளை பார்த்து இருந்தவன் அவள் அருகில் வந்து “காலைல சாப்ட இட்லியும் சட்னியும் பண்ணிட்டேன் வா சாபட்லாம்” என்று அழைக்க” முந்தைய நாள் இரவு அவன் தன்னிடம் முகம் திருப்பியது அவள் நினைவில் வர, அவனிடம் எதுவும் பேசாமல் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள் இனியா. 
     அவள் அவ்வாறு பேசாமல் சென்றதும் ‘ நேத்து கொஞ்சம் ஓவரா பேசிட்டோம் போலயே, அடேய் விஷ்வா தேவையா உனக்கு இது, இப்போ போய் அவள மலை இறக்கு போ ‘ என்று நினைத்த படி அவள் அருகில் சென்றவன் “சாரி இனியா எதோ கோவத்துல பேசிட்டேன் இந்த ஒரு தடவ மட்டும் என்ன மன்னிச்சிடேன்” என்று கெஞ்சலாக கேட்க, அவன் அவ்வாறு மன்னிப்பு கேட்டதும் பதரியவள் “அய்யோ விஷ்வா எனக்கு கோவம் எல்லாம் இல்ல உங்க மேல, சொல்ல போனா நான்தா உங்க கிட்ட நேத்து அப்படி நடந்ததுக்கு சாரி கேட்க்கனும்” என்று சொல்ல “சரி விடு இப்படி மாத்தி மாத்தி சாரி கேட்டுட்டு இருந்தா அப்பறம் வாங்கி வச்ச ஐஸ் உருகிரும்” என்று சொன்னான் விஷ்வா. 
    அவன் அவ்வாறு சொல்லியதும் “என்ன ஐஸ் வாங்கி வச்சிருக்கீங்களா” என்று சிறு பிள்ளை போல ஆர்வத்துடன் கேட்டவள் அதை எடுக்க போக அவளை தடுத்தவன் “இன்னும் காலைல சாப்பாடு கூட சாப்பட்ல நீ, அத சாப்பிட்ட அப்பறம் இத சாப்பிடலாம்” என்றபடி அவளை பிடித்து அமர வைத்தவன் அவளோடு பேசியபடி தானும் சாப்பிட ஆரம்பிக்க, அவர்கள் தட்டில் இருந்து மறைந்துபோன உணவை போல அவர்களுக்கு நடுவில் இருந்த ஊடலும் மறைந்து போனது.
**********
      அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாக கழிய, அன்று தன் அலுவலகம் விட்டு மாலை வீடு வந்த விஷ்வா “இனியா நம்ம நாளைக்கு சாயந்தரம் ஊட்டி கிளம்பலாம், நைட் உங்க அத்த வீட்டுல தங்கிட்டு அப்படியே அடுத்த நாள் உன் காலேஜ் போய்ட்டு அங்கேயும் வேலைய முடிச்சிட்டு வரலாம்” என்று சொல்ல “நாளைக்கேவா, இருங்க நா அத்தைக்கு கூப்டு சொல்லிட்டு வரேன்” என்று சொன்னபடி தன் மொபைலை எடுத்துக்கொண்டு எழுந்தாள் இனியா. அவளை தடுத்தபடி “இல்ல நானே அவங்கள கூப்டுட்டேன், அவங்க கிட்ட பேசின அப்பறம் தான் அங்க லீவ் சொன்னேன்” என்று சொன்னான் அவள் கணவன். 
     “ஓஹ், அப்போ சரி” என்றவள் தொடர்ந்து “உங்களுக்கு எதுக்கு வீன் சிரமம் நா அப்பா கூட போயிருப்பேன்ல, ஒரு நாள் நீங்க ஃப்ரீயா இருக்கப்போ அத்த வீட்டுக்கு போயிருக்கலாம்” என்று சொல்ல “எப்டியோ ஒரு நாள் போறது தான, அடுத்த வாரத்துல இருந்து புது புராஜக்ட் வேற ஸ்டார்ட் ஆகுது கொஞ்ச நாள் எங்கேயும் போக முடியாது அதான் இப்போவே போய்ட்டு வரலாம்னு லீவ்க்கு சொல்லிட்டேன்” என்று சொல்ல “சரி சரி” என்றவள் “நீங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க” என்றபடி இரவு உணவை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
     சிறிது நேரத்தில் அங்கு வந்தவன் “உன்ன கேட்காம பிளான் பண்ணதுக்கு கோவம் எதுவும் இல்லயே” என்று கேட்க “அப்படி எல்லாம் எதுவும் இல்ல, ” என்றபடி இருவருக்குமான உணவை பரிமாற ஆரம்பித்தாள் இனியா.
     அங்கு சென்ற பின் தங்களுக்கு இடையில் வரப்போகும் விரிசலை பற்றி அறியாமல் இருவரும் சந்தோசமாக அங்கு சென்ற பின் பண்ண வேண்டியதை திட்டமிட்டுக்கொன்டு இருந்தார்கள்.

Advertisement