Advertisement

பாடல் – 13
      சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி அருகில் இருந்த சிவன் கோவிலுக்கு சென்றனர். தன் அருகில் கண் மூடி நின்று கொண்டு இருந்த இனியாவை பார்த்தவன் கடவுளிடம் திரும்பி “இன்னைக்காவது நா சொல்ல நினச்சத இனியா கிட்ட சொல்லிரனும், அதுக்கு நீ தான் கடவுளே ஹெல்ப் பண்ணனும்” என்று மனதிற்குள் வேண்டினான். 
     கடவுளை தரிசித்த பின் பிரகாரத்தை வலம் வந்தவர்கள் ஒரு இடத்தில் வந்து அமர “ஏன் இனியா நீ இதுக்கு முன்னாடி கோயம்புத்தூர் வந்திருக்க” என்று விஷ்வா கேட்க “ஓ, ஒரு தடவ வந்திருக்கேன்” என்றாள். 
     “நம்ம கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்தோமே அப்போவா” என்று அவன் கேட்க “இல்ல அதுக்கு முன்னாடியே, காலேஜ் படிக்கரப்போ ஒரு தடவ பாட்டு போட்டிக்கு இங்க வந்திருக்கேன்” என்றாள். “என்ன, நீ பாடுவியா, என்கிட்ட சொல்லவே இல்ல பாரு” என்று விஷ்வா ஆச்சர்யமாக கேட்க “அ..அது…அது உங்களுக்கு தெரியும்னு நினைச்சேன் அதான் சொல்லல” என்று அவள் சொல்ல “ஆனா எனக்கு தெரியாதே” என்றவன் “சரி நா கோர்ஸ் பத்தி மதியம் சொல்லிருந்தேன் இல்ல எதுல ஜாயின் பண்ண முடிவு பண்ணி இருக்க” என்று கேட்க, அப்பொழுதுதான் அதை பற்றிய நினைப்பே வந்தது அவளுக்கு. 
      ‘ அச்சோ இத எப்படி மறந்தோம் ‘ என்று நினைத்தவள் “அது வந்துங்க நீங்க கிளம்பின அப்பறம்…..அம்மா கூப்பிட்டாங்களா அவங்க கூட பேசிட்டு இருந்தேனா….” என்று இழுக்க “நா வர்ற வரைக்குமா பேசிட்டு இருந்த” என்று கேட்டான். 
     “இல்ல…அது கொஞ்சம் நேரம்தான் பேசினோம்…….அதுக்கு அப்பறம் படுதுட்டே யோசிசுட்டு இருந்தேனா…கொஞ்ச நேரத்துல எனக்கே தெரியாம அப்படியே தூங்கிட்டேன்” என்றாள். 
     “ஆக மொத்தம் மேடம் இன்னும் டிசைட் பண்ணல அப்படி தான” என்று அவன் கேட்க ‘ ஆம் ‘ என்பது போல தலையை மட்டும் அசைத்தாள். 
    “சரி விடு வீட்டுக்கு போன அப்பறம் ரெண்டு பேரும் சேர்ந்தே முடிவு பண்ணலாம்” என்று அவன் சொல்ல “ஏங்க நா ஒன்னு கேட்கவா” என்றாள். 
     
     “ம்ம்ம் கேளு” என்று அவன் சொல்ல “கோர்ஸ் வேண்டாம், நா எதாச்சும் வேலைக்கு போகவா” என்று தயங்கியபடி கேட்டாள். 
     “இத கேட்கவா இவ்வளோ தயக்கம் உனக்கு, நீ ug மட்டும் தான முடிசிருக்க அதான் இன்னும் கொஞ்சம் extra குவாலிஃபிகேஷன்க்கு உன்ன போக சொல்லறேன், அதுக்கு அப்பறம் உன்னால வீட்டையும் கவனிசுட்டு வேலைக்கும் போக முடியும்னு தோனுனா நீ தாராளமா போகலாம்,பட் இப்போதைக்கு நா சொன்னபடி பக்கத்துலயே எதாச்சும் கோர்ஸ் ஜாயின் பண்ணு, அத முடிச்ச அப்பறம் நீ வேலைக்கு போகரதுனா தாராளமா போகலாம்” என்றவன் “சரி வா இப்போ கிளம்பினாதான் டின்னர் முடிச்சிட்டு வீட்டுக்கு போக சரியா இருக்கும்” என்றபடி எழுந்தான். 
     அவனோடு சேர்ந்து எழுந்தவள் “ஏன் வேலைக்கு போய்ட்டே கிளாஸ்க்கும் போகலாமே” என்று வெளியே நடந்தபடி சொல்ல “போகலாம் தான், இருந்தாலும் நீ வேலைக்கு போயே ஆகனும்னு எதுவும் கட்டாயம் இல்லைல, அதான் சொன்னேன், மொதல்ல இந்த லைஃப்க்கு நீ அட்ஜஸ்ட்  ஆகு அப்பறம் பாக்கலாம்” என்றபடி அவன் தன் பைக்கை ஸ்டார்ட் செய்ய அதில் ஏறி அமர்ந்தாள் இனியா. 
     பின் அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்றவர்கள் வீடு திரும்ப வந்ததும் “இனியா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்று விஷ்வா சொல்லவும் அவள் மொபைல் அடிக்கவும் சரியாக இருந்தது. 
    இனியா தன் மொபைலை பார்க்க அதில் சம்யு காலிங் என்று அவள் படத்தோடு காட்டியது, அதை கட் செய்தவள் “சொல்லுங்க” என்க “இல்ல நீ பேசிட்டு வா, எதாச்சும் முக்கியமான கால்லா இருக்க போகுது” என்றவன் தங்கள் அறைக்குள்ளே சென்று விட்டான். 
     அவன் செல்லவும் மீண்டும் அவள் மொபைல்க்கு  சம்யுக்தா கால் செய்ய அதை அட்டெண்ட் செய்தவள் பால்கனி பக்கம் நடந்தவாறே “சொல்லு சம்யு எப்படி இருக்க” என்றாள் “நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க” என்று அவள் கேட்க “நானும் நல்லாதான் இருக்கேன், என்ன இந்நேரதுக்கு கூப்பிட்டிருக்க” என்றாள் இனியா.
     “அது ஒன்னும் இல்ல, ரெண்டு நாள் முன்னாடி நம்ம காலேஜ்ல இருந்து கூப்பிட்டு இருந்தாங்க, வந்து நம்ம ஃபைனல் சர்டிஃபிகேட் வாங்கிக்க சொல்லி” என்று சம்யுக்தா கூற “எனக்கு அப்படி எந்த காலும் வரலயே” என்றாள் இனியா. 
     “டி  நீ உன்னோட அந்த பழைய நம்பர் தான கொடுத்திருந்த, அதான் உனக்கு கால் வந்திருக்காது” என்று மறுமுனையில் இருந்த சம்யுக்தா சொல்ல, தன் தலையில் தட்டிக்கொண்ட இனியா “ஆமாம்ல அத மறந்துட்டேன் பாரு” என்றவள் “நீ எப்போ வாங்க போற” என்று கேட்க “நான் நாளைக்கு போறேன் இனி” என்றாள்.
     “நாளைக்கா? மொதல்லயே என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல நானும் உங்க கூடவே வந்திருப்பேன்” என்று இனியா சொல்ல “எனக்கும் உன்னோட பழைய நம்பர் கொடுத்தது ஞாபகம் இல்ல, உனக்கு தெரியும்னு நினைச்சிட்டு இருந்தேன், இப்போத்தான் நாளைக்கு போறத பத்தி பேசிட்டு இருக்கப்போ அந்த யோசனை வந்ததும் உன்ன கூப்பிட்டேன்” என்று சொன்ன சம்யுக்தா “சரி நா உன்ன நாளைக்கு கூப்பட்ரேன் இப்போ கொஞ்சம் வேலை இருக்கு” என்றபடி கால்லை கட் செய்தாள். 
     அவள் வைத்ததும் இனியா உள்ளே வர அங்கு சோஃபாவில் விஷ்வா அமர்ந்திருந்தான் “இவளை பார்த்ததும் என்ன இந்நேரத்தில கூப்பிட்டிருக்காங்க எதாவது பிரச்சனையா” என்று அவன் கேட்க “அதெல்லாம் இல்ல, எங்க காலேஜ்ல இருந்து சர்டிஃபிகேட் வாங்க சொல்லி கூப்பிட்டிருந்தாங்கலாம் அத சொல்லத்தான் கூப்டா” என்றவள் “நீங்க ஃப்ரீயா இருந்தா அடுத்த வாரம் என்ன ஊட்டிக்கு கூப்டுட்டு போறீங்களா” என்று கேட்க சிறிது நேரம் எதோ யோசித்தவன் “ஓ போகலாமே, உங்க அத்த வேற ஒரு நாள் நம்மள அவங்க வீட்டுக்கு வர சொல்லி சொன்னாங்கள்ள அப்படியே அங்கேயும் போய்ட்டு வந்தர்லாம்” என்று சொல்ல “ஆமா வந்ததும் நீங்க எதோ சொல்லனும் சொன்னீங்களே என்ன அது” என்று இனியா அவனை கேட்க “அது….அது ஒன்னும் இல்ல உங்க அத்த வீட்டுக்கு போறத பத்திதான் சொல்ல வந்தேன் அவ்வளோ தான்” என்றவன் தொடர்ந்து “சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீ போய் தூங்கு” என்றபடி தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
    சிறிது நேரம் கழித்து தங்கள் அறைக்கு வந்தவன் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த இனியாவை பார்த்து “நா உன்கிட்ட சொல்ல வந்த முக்கியமான விஷயம் என்னனு தெரியுமா,உன் மேல எனக்கு இருக்க லவ் பத்திதான், பட் ஏன் சொல்லலைனு கேட்க்கரயா, அதான் நம்ம ஊட்டிக்கு போறோம்ல அங்க நா உன்ன மொதல் மொதல்ல பாத்த இடத்தில வச்சு என் லவ்வ உன்கிட்ட சொல்லலாம்னு தான்” என்றவன் “சரி ஸ்வீட்டி குட் நைட்” என்றபடி படுத்து விட்டான்.
     அந்த வார கடைசியில் ஒரு நாள் மதிய உணவு முடித்து விட்டு இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க “நா உன்கிட்ட ஒன்னு கேட்கவா இனியா” என்று கேட்டான் விஷ்வா. “ம்ம் கேளுங்க” என்று இனியா சொல்ல “நீ ஏன் எல்லார் மாதிரி என்ன விஷ்வா சொல்லாம அஜித்னு கூப்ட கூடாது” என்று அவன் சொல்ல “என்..என்ன சொல்ல சொன்னீங்க” என்றாள் தான் சரியாகத்தான் கேட்டோமா என்ற எண்ணத்தில்.
      “நீ என்ன அஜித்னு சொல்லுன்னு சொன்னேன்” என்று அவன் மீண்டும் சொல்ல “இல்ல நா இப்போ மாதிரியே எப்போவும் கூப்படரேனே திடீர்னு அப்படி கூப்பட சொன்னா எப்படி” என்றாள்.
      “எப்படியும் இல்ல, எல்லார் மாதிரி நீயும் சொன்னா அப்பறம் உனக்கும் மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம், அதான் உன்ன அப்படி கூப்பிட சொன்னேன்” என்று அவன் சொல்ல “இல்ல, நா எப்போவும் போலயே உங்கள விஷ்வானு சொல்றேன்” என்றாள். 
     அவள் அவ்வாறு சொன்னதும் “அதுக்கு இல்ல இனியா” என்று அவன் எதோ சொல்ல ஆரம்பிக்கவும் “முடியாதுன்னு சொன்னா கேட்க மாட்டீங்களா நீங்க, எனக்கு அப்படி கூப்பிட புடிக்கலைனு சொன்னா அத்தோட விட்டரணும், அத விட்டுட்டு” என்று படபடவென பொறிந்தவள்  யோசனை சுமந்த அவன் முகத்தை பார்த்து அமைதியாகி விட்டாள். 
      அவள் தன் பேச்சை நிறுத்தியவுடன் “இதுக்கு போய் நீ ஏன் இவ்வளவு கோவ படற” என்று அவன் கேட்க “அது.. அது வந்து ஏற்கனவே காலைல இருந்து தல வலி, அப்பறம் நீங்களும் திரும்ப திரும்ப  அதவே பேசவும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் சாரி” என்றாள். 
     “சரி விடு, உனக்கு ஏன் அந்த பேரு பிடிக்கல,சொல்ல விருப்பம் இருந்தா சொல்லலாம்” என்று அவன் கேட்க “கண்டிப்பா ஒரு நாள் சொல்றேன், பட் இப்போ அத பத்தி கேட்க்காதீங்களேன்” என்றவள் “சரி நா போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கரேன்” என்ற படி உள்ளே சென்றாள்.
    தன்னிடம் பேசிவிட்டு சென்றவளயே பார்த்தவன் “என்னவோ என்கிட்ட இருந்து மறைக்கறீனு தெரியுது, ஆனா அது என்னனுதான் தெரியல” என்ற நினைப்புடன் தன் வேலையை பார்க்க எழுந்து சென்றான்.
     
    

Advertisement