Advertisement

பாடல் – 12
     இதோ இருவரும் கோவையில் புது வீட்டில் குடியேறி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. விஷ்வா தன் ஆபீஸ் அருகிலேயே உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 2bhk ஃபிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தான்.  
     குடியேறிய அன்று பால் காய்ச்ச அவர்களோடு வந்த இருவர் பெற்றோரும் மாலை வரை இருந்து ஒரு அளவிற்கு வீட்டிற்க்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்து அதை ஒழுங்கு படுத்தி கொடுத்து விட்டு அன்று மாலை கிளம்பிவிட்டனர்.   
     அடுத்த இரண்டு நாட்களும் சனி ஞாயிறு என்பதால் கணவன் மனைவி இருவருமே கடைக்கு சென்று மீதம் உள்ள பொருட்களை வாங்கி வீட்டை செட் செய்து முடித்தனர். 
     அலுவலகம் அருகிலேயே இருந்ததால் காலை மெதுவாக கிளம்பும் விஷ்வா இரவும் விரைவாக திரும்பினான். இடையில் மதிய உணவுக்கும் அவன் வீட்டிற்க்கு வந்துவிட இனியாவோடு அவன் செலவழிக்கும் நேரமும் சற்று அதிகம் ஆனது, மேலும் அவளுடைய பள்ளி தோழியும் அவர்கள் பக்கத்து பிளாட்டில் இருக்க, வேலை முடித்த பின்பு அவள் தன் தோழியோடு நேரம் செலவிட தனிமையில் இருக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது இனியாவுக்கு,  அவள் மனதுக்கும் தேவை இல்லாத விஷயங்களை அசைபோட நேரம் இல்லாமல் போனது.
     அடுத்த ஒரு வாரம் அமைதியாக கழிய, அவர்கள் உறவிலும் எந்த வித மாற்றமும் இல்லாமல் சென்றது. அப்பொழுது ஒரு நாள் அருகில் இருந்த அவள் தோழி தன் உறவில் ஒரு திருமணம் ஒரு வாரம் ஊருக்கு சென்று விட, அவள் சென்ற பின் நேரத்தை கடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது இனியாவுக்கு. 
     என்னதான் மெதுவாக வேலை செய்தாலும், வீட்டில் இருவர் மட்டுமே இருப்பதால் அந்த வேலையும் சீக்கிரம் முடிந்துவிடும். 
     அவ்வாறு ஒரு நாள் தன் வேலையை முடித்துவிட்டு வந்த இனியா விஷ்வா மதிய உணவுக்கு வர சற்று நேரம் இருப்பதால் அவன் வரும் வரை நேரத்தை கடத்த எண்ணி தன் மொபைலில் இருந்த படங்களை பார்க்க ஆரம்பித்தாள். 
    ஒவ்வொரு படங்களாக படங்களாக பார்த்துக்கொண்டு வந்தவள் கண்கள்  அன்று அவர்கள் இருவரும் ஆற்றங்கரையில் எடுத்த படத்தில் நிலைத்து நின்றது. 
     அதில் தன் அருகில் அழகாக சிரித்துக்கொண்டு இருந்த விஷ்வாவை பார்த்ததும் “உங்கள ஏன் நான் முதல்லயே பாக்காம போனேன் விஷ்வா” என்று நினைத்து கொண்ட அவள் மனம் பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது.
~~~~~~~~
     இனியா தன் பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சை எழுதி இருந்த சமயம்.  அவள் தந்தைக்கு ஊட்டியில் வேலை மாற்றம் வர இவர்கள் குடும்பம் அங்கு இடம் பெயர்ந்தது. அங்குதான் விஜயாவின் வீடும் இருக்க அவர் வீட்டின் அருகிலேயே ஒரு வீட்டில் தங்கிக்கொண்டனர். மேலும் சம்யுவும் அப்பொழுதுதான் தன் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்திருக்க அவளையும் இனியாவையும் ஒரே கல்லூரியில் சேர்த்து விட்டனர். 
     இருவரும் சேர்ந்து பேருந்தில் கல்லூரிக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சென்று வந்துகொண்டு இருந்தனர். 
    இதற்கு இடையில் இனியா தன் கடைசி வருடத்தில் இருக்கும் பொழுது முருகேசனுக்கு மீண்டும் தன் சொந்த ஊரிலேயே வேலை மாற்றம் கிடைக்க, மீண்டும் இவர்கள் குடும்பம் அங்கு சென்றது. 
      இனியா தன் ஐந்தாம் செமஸ்டர் லீவில் இருந்த சமயம் அது. அவள் படிப்பு முடிய மேலும் நான்கு மாதங்கள் மட்டுமே இருந்ததால், அவள் விஜயாவின் வீட்டிலேயே இருந்து படிக்க போவதாய் முடிவானது. 
     செல்லும்பொழுது அவளுக்கு ஒரு மொபைல் பரிசளித்த முருகேசன் “இங்க பாரு பாப்பா எங்க கூட பேசத்தான் இப்போ நான் மொபைல் வாங்கி கொடுத்திருக்கேன், இதவே நோண்டிட்டு படிப்ப கோட்ட விட்டராத சரியா. அப்பறம் எல்லாருக்கும் இந்த நம்பர கொடுத்துட்டு இருக்காத, புது நம்பர்ல இருந்து யாராச்சும் கூப்பிட்டாலும் பேச்ச வழக்காம கட் பண்ணிடு” என்று  ஆயிரம் பத்திரங்கள் சொல்லி கிளம்பினார். 
     அவர் கூறியதற்கு எல்லாம் தலையை தலையை ஆட்டிய இனியாவுக்கு, புதிதாக தனக்கு மொபைல் கிடைத்த சந்தோசத்தில் அவர் சொல்லியது எதுவும் காதில் மட்டும் விழவில்லை. 
     மேலும் இரண்டு மாதம் அமைதியாக செல்ல, ஒரு நாள் பேருந்துக்கு காத்துக்கொண்டு இருக்கையில் இனியாவின் கைகளை மெதுவாக சுரண்டிய சம்யுக்தா “அங்க எதுக்கால பாரு டி, உன்னையே ஒருத்தன் பாத்துட்டு இருக்கான்” என்று அவள் காதில் மெதுவாக சொல்ல “அவன் வந்து சொன்னானா என்ன தான் பாக்கரேன்னு, சும்மா இரு டி சம்யு” என்று பதில் அழித்த இனியா “பஸ் வந்திருச்சு வா போகலாம்” என்றபடி அந்த பக்கம் பாக்க்காமலேயே சம்யுவை இழுத்து சென்றாள். 
     நாட்கள் அதன் போக்கில் செல்ல, வழக்கம் போல கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்துகொண்டு இருந்தனர் இருவரும். தினமும் காலை மற்றும் மாலை அவர்கள் பேருந்துக்கு காத்துக்கொண்டு இருக்கையில் அவர்களுக்கு எதிரே அவனும் தினமும் நின்று கொண்டு இருந்தான். இந்த இடைப்பட்ட நாளில் அவன் பெயர் அஜித் என்று அவர்களோடு பேருந்தில் நிற்கும் ஒரு பெண் சொல்லி தெரிந்து கொண்டாள் இனியா. 
     அன்று மாலை கல்லூரி முடித்து வந்து இருவரும் தங்கள் அறையில் படித்துக்கொண்டு இருக்கும் போது “டி இனியா இங்க கொஞ்சம் வாயேன்” என்று அவளை தான் அமர்ந்து படித்துக் கொண்டு இருந்த ஜன்னல் அருகில் அழைத்த சம்யு “அங்க கொஞ்சம் பாரேன்” என்று அவர்கள் வீட்டின் ஜன்னலின் வழியே தெரிந்த மளிகை கடையை காட்டினாள். 
     “அங்கு என்ன” என்றபடி இனியா எட்டி பார்க்க அங்கு அந்த கடையில் நின்று கொண்டு இருந்தான் அஜித். இவளை பார்த்ததும் அவன் மெல்ல தன் கையை அசைக்க அதை பார்த்ததும் அந்த ஜன்னலை வேகமாக சாத்திவிட்டு உள்ளே வந்துவிட்டனர் இருவரும். 
     “அச்சோ என்ன டி அவன் இங்கேயே வந்துட்டான் கம்முனு வீட்டுல இத சொல்லிறலாமா” என்று சம்யுக்தா கேட்க “அட சும்மா இரு அவன் என்ன பாக்க தான் வந்ததா சொன்னானா, வேற எதாச்சும் வேலையா கூட இந்த பக்கம் வந்திருக்கலாம் தான” என்றவள் தொடர்ந்து “நீ போய் இத அத்த கிட்ட சொன்ன அவங்க ஒடனே  இத என் அப்பா கிட்ட சொல்லிருவாங்க அப்பறம் வேற வெனயே வேண்டாம் போ” என்றவள் மெல்ல ஜன்னலை திறந்து அங்கு பார்க்க அவனை அங்கு காணவில்லை. “பாரு டி அவன் போயிட்டான், நான்தான் சொன்னேன்ல அவன் வேற எதாச்சும் வேலையா வந்திருப்பான்னு” என்று சம்யுவிடம் சொல்லிவிட்டு தன் இடத்திற்கு சென்று படிக்க ஆரம்பித்தாள்.
    ~~~~~~~~~~
    திடீரென்று காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க தன் பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்த இனியா நேரத்தை பார்க்க அது விஷ்வா மதிய உணவுக்கு வரும் நேரமாக இருந்தது. அதற்குள் மீண்டும் அவன் காலிங் பெல்லை அழுத்த வேகமாக சென்று கதவை திறந்தாள். 
    அவள் கதவை திறந்ததும்  உள்ளே வந்தவன் “ஏன் இவ்வளவு நேரம் கதவ திறக்க, தூங்கிட்டயா” என்று கேட்க “இல்லைங்க சும்மாதான் எதோ யோசனைல இருந்துட்டேன்” என்றவள் “நீங்க போய் ஃப்ரெஷ் பண்ணிட்டு வாங்க நா சாப்பாடு எடுத்து வைக்கரேன்”  சமையல் அறைக்குள் சென்றாள். 
    தங்கள் அறைக்குள் சென்றவன் சிறிது நேரத்தில் வெளியே வர அங்கு டைனிங் டேபிளில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள் இனியா. 
    அவன் வந்து அமர்ந்ததும் அவன் அருகில் அமர்ந்த இனியா அவனோடு சேர்த்து தனக்கும் உணவை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். 
     இங்கு வந்ததில் இருந்து இருவரும் ஒன்றாகவே சாப்பிடுவதை வழக்கம் ஆக்கி இருந்தார்கள். 
     “ஏன் இனியா வீட்டுல தனியாவே இருக்கறது உனக்கு  ரொம்ப போர் அடிக்குதா” என்று விஷ்வா கேட்க “அமாங்க, இவ்வளோ நாள் வீட்டுல அம்மா கூட இருப்பாங்க, இங்க வந்த அப்பறம் பக்கத்துல ஸ்ரீஜா இருப்பா வேலை முடிச்சதும் அவ கூட பேசிட்டு இருப்பேன் இப்போ அவளும் இல்லாம ரொம்ப போர்” என்று இனியா சொல்ல சிறிது நேரம் எதோ யோசித்தவன் “நீ வேணும்னா எதாச்சும் கோர்ஸ் ஜாயின் பன்றயா, உனக்கு நேரம் போன மாதிரியும் இருக்கும் புதுசா எதாவது கத்துகிட்ட மாதிரியும் இருக்கும்” என்று சொல்ல “இதுவும் நல்ல ஐடியா தான் ஒரு கொஞ்ச நாள் போனதும் சேர்ந்துக்கரேன்” என்று சொல்லியவள் எழுந்து கை கழுவ சென்றாள். 
    தானும் சாப்பிட்டு முடித்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு கிளம்பும் பொழுது “சரி நா  கிளம்பறேன், நா வர்றதுகுள்ள எதுல ஜாயின் பண்றதுன்னு யோசிச்சு வை” என்றபடி வெளியேறி விட்டான். 
    அவன் சென்ற சிறிது நேரத்தில் பத்மா அவளை அழைக்க சிறிது நேரம் அவரோடு பேசியவள் தூங்க சென்றாள்.
    மாலை போல எழுந்தவள் மீதம் இருந்த வேலைகளை முடிக்கவும் விஷ்வா வரவும் சரியாக இருந்தது. 
     “இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துட்டீங்க” என்று கேட்ட இனியாவிடம் “இல்ல இன்னைக்கு வேலையும் கம்மியாதான் இருந்துச்சு அப்பறம் நீ வேற வீட்டுல தனியா இருப்பில்ல அதான் உனக்கு கொஞ்ச நேரம் கம்பனி கொடுக்கலாம்னு சீக்கிரம் வந்துடேன்” என்றவன் “இங்க வந்த அப்பறம் நம்ம ரெண்டு பேரும் வெளிய எங்கேயும் போகலைல இன்னைக்கு வேணும்னா பக்கத்துல இருக்க கோவிலுக்கு போய்ட்டு அப்படியே டின்னர் வெளியே முடிச்சிட்டு வரலாமா” என்று அவளிடம் கேட்க “நானே உங்கள ஒரு நாள் கோவிலுக்கு கூட்டிட்டு போக சொல்லலாம்னு இருந்தேன் இருங்க கொஞ்ச நேரத்துல கிளம்பறேன்” என்றபடி அவன் கைகளில் காபி கப்பை கொடுத்தவள் கிளம்ப சென்றாள். 
 
     
     

Advertisement