Advertisement

பாடல் – 11
    அன்று ஞாயிற்றக்கிழமை இனியா மற்றும் விஷ்வா மறுவீடு முடிந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் நாள். 
    திருமணத்திற்கு பிறகு இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகளையும் அழைத்து சிறிய விருந்தும் அன்றே வைத்து விட முடிவு எடுத்திருந்தனர் இனியாவின் பெற்றோர். அதன்பால் இரு குடும்பத்தாரின் நெருங்கிய சொந்தங்களும் அன்று அங்கு வந்திருந்தனர்.  
   ஆண்கள் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க பெண்கள் உள்ளே சமையல் வேலையை கவனித்துக்கொண்டு இருந்தனர்.
    அப்பொழுது காய்களை வெட்டி விட்டார்களா என்று பார்க்க வெளியே டைனிங் ரூம் வந்த பத்மா அங்கு தன் பெண்களுடன் சேர்ந்து காய் அறிந்துகொண்டு இருந்த சுசித்ராவை பார்த்து  “அச்சோ நீ ஏன் சுசி இதெல்லாம் பண்ணிட்டு இருக்க, இந்த வேலை எல்லாம் நாங்க பாத்துக்கறோம் நீ போய் முதல்ல உன் பொண்ண கவனி போ உன்ன காணோம்னு அழுக போற” என்று சொல்லியபடி சுசித்ராவின் கைகளில் இருந்த கத்தியை வாங்கினார். 
    “நானும் கூட ஹெல்ப் செஞ்சா வேலை சீக்கரம் முடியும் தான அத்த, அப்பறம் தீப்திய அவரு வச்சுட்டு இருக்காரு கூட அம்மாவும் இருக்காங்க அதனால அழுக மாட்டா,  நா இப்போ வெளிய போனாலும் சும்மாதான் இருக்கணும் அதனால இங்கயாச்சும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன், காவியா அந்த மொளகாய எடு அறியலாம்” என்று மீண்டும் அவர் கைகளில் இருந்த கத்தியை வாங்கிய சுசித்ரா தன் பெரியம்மா மகளுடன் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்த காவியாவிடம் சொல்ல,அந்நேரம் அங்கு வந்த விஜயா  இனியாவிடம் “இனியா, இலை வாங்கிட்டு வர போன உங்க அப்பா வந்துட்டாரானு பாத்துட்டு வா போ” என்று அவளை அனுப்பினார்.   
   அவர் சொன்னதும் வெளியே சென்ற இனியா அங்கு தன் வண்டியை விட்டு இறங்கிக்கொண்டு இருந்த தன் தந்தையை கண்டு மீண்டும் டைனிங் ஹால் உள்ளே வந்தவள் அங்கு இருந்த படியே சமையல் அறை பக்கம் எட்டி பார்த்து ” அப்பா இப்போதான் வந்தாரு அத்த” என்று சொன்னாள்”.
   “அட, அத உள்ள வந்து சொல்றதுக்கு என்ன” என்று அங்கு இருந்தபடியே அவள் பெரியம்மா குரல் கொடுக்க “என்ன பெரியம்மா நீங்க அவ உள்ள வர மாட்டானு  தெரிஞ்சும் இப்படி சொல்றீங்க” என்று காவியா சொல்ல “ஆமா இவ இன்னுமா அப்படியே இருக்கா, நான் கூட கொஞ்ச நாள்தான் இப்படி இருப்பான்னு நினச்செண்,ஏண்டி பொண்ணு இப்போ இங்க வர மாட்டேன்னு சொல்ற சரி, நாளைக்கு அங்க போனாலும் இப்படித்தான் இருப்பயா, என்ன பத்மா இது” என்று இனியாவிடம் ஆரம்பித்து பத்மாவிடம் கேள்வியை முடிக்க “நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன் கா ஏன் திட்டி கூட பாத்தாச்சு, கொஞ்சம் கூட இந்த விஷயத்துல அவ கேட்க்கரதா இல்ல” என்று பத்மா அவருக்கு பதிலளித்தார்.  
   இவர்கள் பேசியதை கவனித்துக்கொண்டு இருந்த சுசித்ரா ஒன்றும் புரியாமல் “ஏன் உள்ள போக மாட்டா” என்று காவியா விடம் கேட்டார்.
    “அது ஒன்னும் இல்ல அக்கா அவளுக்கு நான் வெஜ் புடிக்காது அதான்” என்றபடி தீபக்கோடு கைகளில் இலையை கொண்டு வந்த விஷ்வா “இந்த காவியா இந்த இலையை கொண்டு போய் உள்ள கொடுத்திரு” என்று காவியாவின் கைகளில் அதை கொடுத்துவிட்டு “நானும் மாமாவும் வெளியதான் இருக்கோம் எதாச்சும் வேணும்னா கூப்பிடுங்க” என்று இனியா மற்றும் சிசுத்ராவை பார்த்து சொல்லி விட்டு வெளியேறி விட்டான். 
   அவன் அவ்வாறு சொல்லியதும் “அட நா சாப்ட மாட்டேன்னு இவரு கிட்ட எப்போ சொன்னேன்” என்று யோசித்த இனியா “ப்ச், எப்போவாச்சும் பேச்சு வாக்கில சொல்லிருப்போம்” என்று எண்ணியபடி தன் வேலையை கவனிக்க சென்றாள். 
   அவள் அங்கு வந்து அமர்ந்ததும் “நீ ஆரம்பத்துல இருந்து அசைவம் சாப்பிட மாட்டியா இனியா ” என்று சுசித்ரா கேட்க “இல்ல அண்ணி இப்போ  ஒரு வருஷமா தான் சாப்டரது இல்ல” என்று கைகளில் இருந்த வெங்காயத்தை உறித்தபடி  சொன்னாள். 
   “விஷ்வாவும் ஆரம்பத்துல இருந்தே இத சாப்பட மாட்டான், ஏன் டா சாப்படலைனு கேட்டா, நமக்கு தேவையான சத்து காய் கறிலயே கிடைக்கறப்போ தேவை இல்லாம எதுக்கு ஒரு உயிர நம்ம கொல்லனும்னு ஓலருவான் ” என்று பேசியபடி தன் வேலையை கவனிக்க “அச்சோ அண்ணி காவியாவும் இத தான் சொல்லி என்னையும் சாப்பிட விட மாட்டா ” என்று அவரிடம் காவியா சொல்ல ” நல்ல ஜோடி போங்க” என்று சொல்லிய சுசித்ரா “சரி இங்க வேலை முடிஞ்சுபோச்சு புள்ளைங்கள இத எல்லாம் கொண்டு போய் உள்ள கொடுத்துட்டு வாங்க, நீ வா இனியா” என்றபடி அங்கு இருந்து எழுந்து சென்றார்.
    அவர் விஷ்வாவை பற்றி சொன்னதும் “ஸ்வீடி நமக்காக, நம்ம சாப்பிட காய்கறி, பழங்கள் இருக்கப்போ நம்ம ஏன் தேவையில்லாம நம்மள மாதிரி ஒரு உயிர சாப்படனும்” என்று அஜித் ஒருநாள் அவளிடம் சொல்லியது நினைவு வர யாரும் அறியாமல் தன் கண்களில் எட்டி பார்த்த கண்ணீரை துடைத்தவள் ‘ ச்ச இப்போல்லாம் ஏன் அவன் நியபகம் அதிகம் வருது’ என்ற எண்ணத்துடன் அங்கு இருந்து எழுந்துசென்றாள்.
    பின்னர் விரைவாக சமையல் வேலை முடிய, மதியம் விருந்து முடிந்து சிறிது நேரத்தில் வந்திருந்த விருந்தினர் கிளம்பி விட்டனர். மாலை போல கிளம்பிய விஜயா, இனியா மற்றும் விஷ்வாவை அழைத்து “கண்டிப்பா ரெண்டு பேரும் அங்க ஊட்டிக்கு விருந்துக்கு வந்து ஒரு ரெண்டு நாள் தங்கிட்டு போகனும்” என்று சொல்லி அவரும் கிளம்பி விட்டார். 
   சிறிது நேரம் கழித்து பத்மாவிடம் வந்த சுலோச்சனா  “அண்ணி அஞ்சு மணிக்கு நல்ல நேரம் வருது அப்போ நாங்க இனியாவ கூட்டீட்டு கிளம்பறோம்” என்று சொல்ல “அஞ்சு மணிக்கேவா, இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்பறம் போகலாமே” என்று உள்ளே போன குரலில் கேட்டாள் காவியா. “இல்ல காவியா ஆறு மணிக்கு மேல வீட்டு பொண்ண வெளிய அனுப்ப கூடாது அதனால் அப்போவே கிளம்பரது தான் சரியா இருக்கும்” என்று அவளிடம் சொன்ன பத்மா “இனியா இங்க கொஞ்சம் வா” என்று அவளை அழைத்தார். 
    “சொல்லுங்க அம்மா ” என்றபடி வந்தவளிடம் “அஞ்சு மணிக்கு நீங்க கிளம்பனும் டா, போய் எடுத்துட்டு போக வேண்டியது எல்லாம் சரியா இருக்கானு ஒரு தடவ பாத்துக்கோ” என்று சொல்லியவர் “காவியா நீயும் அவ கூட போய் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு” என்று தன் இளைய மகளையும் அவளோடு அனுப்பினார். 
   அவர் சொன்னதும் அங்கு அறைக்கு வந்த இருவரும் அனைத்தும் சரியாக உள்ளதா என்று பார்த்துக்கொண்டு இருக்க “நாளைக்கு இருந்து நீ வீட்டுல ஜாலியா இருப்ப தான காவியா என்னோட தொல்ல இல்லாம” என்று திடீரென இனியா கேட்டாள். அவள் அவ்வாறு சொன்னதும் அவளை பார்த்த காவியா “ஏன் கா இப்படி சொல்லற” என்று கேட்க “இல்ல டி இனிமேல் உன்ன இது பண்ணாத அது பண்ணாதனு சொல்ல நா இருக்க மாட்டேன், உனக்கு பிடிச்சத நீ பண்ணலாம்” என்று இனியா கூற அவளை அணைத்து கொண்ட காவியா “போ க்கா நீ இல்லாட்டி  எனக்கு நிம்மதினு நான் சொன்னேனா, ஒரு 6 மாசம் நீ அத்த வீட்டுல இருந்தப்போவே எனக்கு இங்க இவ்வளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா நான்தான் உன்ன ரொம்ப மிஸ் பண்ண போறேன்” என்று அழுதாள். அவள் அழுவதை பார்த்த இனியா அதை தாங்காமல் அவளை சமாதான படுத்திக்கொண்டு இருக்க அங்கு வந்த பத்மா “இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும், வெளிய ஆளுங்கள வச்சுட்டு நம்ம இப்படி உள்ள இருந்தா என்ன சொல்லுவாங்க”  என்றபடி இனியா விடம் திரும்பி “எல்லாம் சரியா இருக்கா” என்று கேட்க “இருக்கு மா ” என்றாள் அவள். 
    “சரி அப்போ பேக் எடுத்துட்டு வந்து வெளிய வச்சிரு” என்ற பத்மா அவள் கன்னங்களை பிடித்தபடி “இங்க பாரு இனியா உன் புகுந்த வீட்டுக்காரங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க கொஞ்சம் அவங்கள அனுசரிக்கும் போ” என்று சொல்லியவர்  அங்கு இருந்து வெளியேறி விட்டார். 
    பின் சிறிது நேரத்தில் இனியாவோடு கிளம்பிய விஷ்வா குடும்பத்தினர்  அடுத்த அறை மணி நேரத்தில் தங்கள் வீட்டை அடைந்தனர். “விஷ்வா உன்னோட ரூம்க்கு இனியாவ கூட்டிட்டு போ அவ பேக் அங்க வைக்கட்டும்” என்று அவன் அம்மா சொல்ல சரி என்று சொல்லிவிட்டு அவளை தனது அறைக்கு அழைத்து சென்றான். 
    அவன் அறைக்கு சென்றதும் அதை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்த இனியா விடம் “எல்லாத்தையும் அன்பேக் பண்ணிராத கொஞ்ச நாள்ல கோயம்புத்தூர் போறப்போ மறுபடியும் பேக் பண்ணனும்” என்று அவன் சொல்ல “அது வரைக்கும் நீங்க எப்படி வேலைக்கு போய்ட்டு வருவீங்க இங்க இருந்து ரொம்ப தூரம்” என்று இனியா கேட்க “டிரெயின் ல போய்டுவேன் எப்போவும், மார்னிங் கொஞ்சம் சீக்காரம் கிளம்பும்” என்று சொன்னவன் “சரி நீ சீக்கரம் அங்க வெளிய வந்திரு அக்காவும் மாமாவும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க என்றபடி அங்கு இருந்து வெளியேறினான்.
   பின் அவளும் வெளியே வர சிறிது நேரம் அங்கு இருந்து பேசிக்கொண்டு இருந்த சுசித்ராவின் குடும்பம் இரவு உணவை முடித்துவிட்டு கிளம்பிவிட  காலை முதல் வேலை செய்தது அலுப்பாக இருக்க இவர்களும் சீக்கிரம் உறங்க சென்றனர்.
     அடுத்த நாள் முதல் விஷ்வா விடுப்பு முடிந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். வழக்கம் போல அவன் டிரெயினில் சென்று வர காலை நேரமாக செல்பவன் திரும்ப இரவாகு விடும். அவன் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் இருவரும் பேசிக்கொள்ளும் நேரமும் குறைந்து விட்டது. 
    அது மட்டும் இல்லாமல் திருமணத்துக்கு முன் தனக்கு இருந்த காதலை பற்றி அவனிடம் இன்னும் சொல்லாமல் இருப்பது இனியாவுக்கு ஒருவித குற்ற உணர்வை கொடுக்க அவனிடம் இருந்து இன்னும் தள்ளி இருக்க ஆரம்பித்தாள். 
    ஆனால் பாவம் இப்பொழுதே அவனிடம் தன் கடந்த கால காதலை பற்றி சொல்லி இருந்தால் பின்னாளில் இருவருக்குள்ளும் வரும் ஒரு பெரிய பிரச்சனையை தடுத்திருக்கலாம் என்பதை அறியவில்லை இனியா. 

Advertisement