Advertisement

அத்தியாயம் 9
தியா ப்ரதீபனை முரடன் என்றே முத்திரை குத்தி இருக்க, அதன் பின் அவனை நெருங்கவோ பேசவோ முயற்சி எடுக்கவில்லை. ஆனால் பிரதீபன் அவளை மனதளவில் நெருங்க தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தான். மாலை வீட்டுக்கு வரும் பொழுது எந்தநாளும் அவன் கையில் பூ இருந்தது.
 ரிஷி அழைத்து “தேன்நிலவுக்கு எங்க போக போற” என்று கேட்க 
“இப்போவே போக ஐடியா இல்ல டா.. இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும்” என்று விட்டான். 
கயல், ரிஷி ஜோடியை போல என்ன பிரச்சினை வந்தாலும் ஒருத்தர ஒருத்தர் விட்டுக் கொடுக்காம, வாழனும் அதுக்கு தியா தன்னையும், தான் தியாவையும் நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான் பிரதீபன். 
தன்னிடம் பேசாமல் ஓடுபவளை எவ்வாறு வழிக்கு கொண்டு வருவதென்பதில் திட்டம் போட்டு வேலை பார்க்கலானான்.  முதல் கட்டமாக அவளை அழைத்துக் கொண்டு சினிமாவுக்கு சென்றான். 
பாட்டியின் முன் சொன்னால் தியாவால் மறுக்க முடியாது என்று நன்கறிந்தவனாக காலையில் சாப்பிடும் போதே! “மாலையில் ஒரு இடத்துக்கு போகணும் தயாராகி இரு”  என்று விட்டே கடைக்கு கிளம்பி இருந்தான். 
“எங்க போறேன்னு சொன்னா தானே! அதுக்கேத்தா மாதிரி டிரஸ் போடா முடியும். ஆம்புளைங்களுக்கு என்ன ஒரு டி ஷார்ட், ஜீன்ஸ் போட்டா போதும் எங்க வேணாலும் போகலாம்” அதற்கும் அவனை சாடியவள் அவன் வரும் நேரம் ஒரு ஷிபான் புடவையில் தயாராகி இருந்தாள். 
கையேடு கொண்டு வந்த பூவை அவனே வைத்து விட அவன் கை அவள் மேனி உரசும் பொழுதெல்லாம் சிலிர்த்தாள் அவள். அவளின் முகச் சிவப்பை ரசித்தவன் சீட்டியடித்தவாறே வண்டியை கிளப்ப 
“எங்கே போகிறோம்” என்ற கேள்வியை கேட்கத்தான் தியாவின் வாய் உதவவில்லை. பிரதீபன் இப்போ சொல்வான், இப்போ சொல்லிடுவான் என்று அவனையே நொடிக்கொருதரம் பார்க்க, அதைக் கண்டும் காணாமல் அவளின் தவிப்பை ஓரக்கண்ணால் ரசித்தவாறே அந்த பெரிய திரையரங்கத்தின் முன் வண்டியை நிறுத்தினான் பிரதீபன். 
“சினிமா பார்க்கத்தான் சப்ரைஸா கூட்டிட்டு வந்தானா?” கணவனை திரும்பிப் பார்த்தவளின் மனதில் அவனின் புன்னகை முகம்  பதிந்து போனது.  
அவளுக்கு ஹிந்தி புரியாததால் ஒரு கார்ட்டூன் திரைப் படத்தை பார்க்க அழைத்துச் வந்திருந்தான். குழந்தைகளின் ராஜ்ஜியம் என்பதால் குடும்பத்தாரோடு வந்தவர்களே அதிகம். ஓரிரண்டு ஜோடிகளில் கல்யாணமானவர்கள் இவர்கள் மாத்திரம் போலும்.  
குழந்தையாக மாறி ஸ்ரீராமோடு பார்ப்பவளுக்கு அந்த திரைப்படம் ரொம்பவே பிடிதித்திருக்க, தன்னையும் மறந்து படத்தில் மூழ்கியவள் சிரித்தவாறே ப்ரதீபனின் புறம் சாய்ந்து காட்ச்சிகளை விளக்க திரைப்படத்தை பார்க்காது அவளையே! பாத்திருந்தான் பிரதீபன். 
இடைவேளையின் போது அவளுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டே வாங்கி வந்தான் அவன். படம் முடிந்த பின் ஸ்ரீராமை அழைத்துக் கொண்டு வந்திருக்கலாம் என்று தியா குறைப்பட அடுத்தவாரம் வரும் போது கூட்டிட்டு வரலாம் என்று வாக்கும் கொடுத்தான். சில சமயம் ஸ்ரீராம் அவர்களோடு வந்தாலும் அவன் ப்ரதீபனின் மடியில் தான் அமர்ந்திருந்தான். 
வாரா வாரம் சினிமா சென்று, இரவு உணவையும் ஹோட்டலில் முடித்துக் கொண்டே வீடு திரும்புவார்கள் இருவரும். சாப்பிடும் போது அவளை பற்றி கேள்விகளை எழுப்பியவாறே அறிந்துக் கொண்டான். தியாவுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதிலில் இருந்து, அவள் பார்க்க ஆசைப் படும் இடங்கள் என எல்லாம் அறிந்துக் கொண்டவன் ஒவ்வொன்றாக நிறைவேற்ற எண்ணினான். இதுவே தொடர்க்கதையாக…
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை வெளியே அழைத்து சென்று அவளுக்கு பிடித்தவற்றை செய்து கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தான் பிரதீபன். நடக்கும் போது அவள் அனுமதியில்லாமலையே கைகோர்த்து நடக்க மறுப்பு தெரிவிக்காமல் அவளும் கூடவே நடந்தாள். நாளாக நாளாக அவர்களின் நெருக்கம் அதிகரிக்க அவன் கோர்த்திருந்த கையோ அவளின் இடைவளைவிலும். அவளோ அவன் நெஞ்சிலும் சாய்ந்து பயணித்தனர். 
தங்கு தடையின்று தியா, பிரதீபன் பேச்சு வார்த்தை நடைபெற “அங்கு செல்ல வேண்டும், இங்கு செல்ல வேண்டும் அழைத்து செல்” என்ற உரிமையான பேச்சும் அவளிடம் வெளிப்பட, அழைத்து செல்ல கூலியாக சில, பல முத்தங்களையும் பெற்றுக் கொண்டான் அந்த கள்வன். 
வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்ற முடிவோடு இருந்த ப்ரதீபனும் அன்று மாலை வீடு வரும் பொழுது, பூ மாத்திரமல்லாது பழங்களும், அல்வாவும் வாங்கி வந்திருக்க, அவன் கண் சிமிட்டி சிரித்ததிலையே புரிந்துக் கொண்டவளாக வெக்கிச் சிவந்தாள் தியா. 
அறைக்குள் நுழையும் போதே இதயம் தட தடக்க தான் எடுத்த முடிவை கணவனிடம் எவ்வாறு சொல்வது? சொன்னால் ஏற்றுக் கொள்வானா? என்ற அச்சம் மேலோங்க மெதுவாக அடியெடுத்து உள்ளே வந்தவள் கதவை சாத்த அந்த சத்தத்தில் லப்டோப்பில் வேலை செய்துக்க கொண்டிருந்தவன் தலை நிமிர்த்தி பார்க்க கையை பிசைந்துக் கொண்டிருந்தாள் அவனின் மனையாள். 
கடந்த இரண்டு மாதங்களாக அவள் நெருங்கிப் பழகியதும். தயக்கமின்றி அவள் பேசியதும் பொய்யோ என்பது போல் அவள் நின்றிருக்க, தயக்கம் சிறிதுமின்றி மனைவியை அணுகியவன் அவளின் கையை பிடித்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்த்தி 
“என்ன பிரச்சினை தியா? என் கிட்ட ஏதாவது சொல்லனுமா?” அவளின் வியர்வை பூத்திருந்த முகத்தை துடைத்தவாறே பிரதீபன் 
அவளின் தயக்கமும், பயமும் தூர ஓட கணவனை அதிசயமாக பார்த்திருந்தாள். “இவனுக்கு என் மேல் எவ்வளவு அன்பிருந்தால் ஒரு சின்ன அசைவையும் உடனே புரிந்துக் கொண்டு கேட்டிருப்பான்” என்று மனம் சொல்ல கணவனை காதல் பார்வை பார்த்தவாறே 
“ஒன்னு சொல்லணும் கோவிக்க மாட்டீங்களே!”
“ரெண்டு கூட சொல்லு கோவம் வராது. ஆனா நீ என் கிட்ட இப்படி பயந்து பயந்து பேசுறது தான் சரியில்ல. உனக்கு என் கிட்ட என்ன பயம். பாரு எவ்வளவோ வேர்த்திருக்கு” 
“ஐயோ அது இங்க வந்த நாள்ல இருந்து வேர்க்குது. ஊட்டி குளிர்ல வளர்ந்த உடம்பு இந்த ஊர் வெப்பநிலையை தாங்க கொஞ்சம் கஷ்டம் தான்” 
“ஹாஹாஹா சரி சொல்லு என்ன விஷயம்” தியா இயல்பு நிலைக்கு வரவே நல்ல கணவனாக அவளை பேச வைத்தான் 
“அது வந்து…. அது இன்னைக்கி வேணாம் ஒரு  ஐஞ்சி நாள் கழிச்சு வச்சிக்கலாமா?”
“எது?” அவள் சொல்ல வருவது புரிந்தாலும் புரியாதது போல் கேட்டு அவளை சீண்டினான். 
தான் சொன்னது கணவனுக்கு புரியவில்லை என்றதும் தியாவின் மனம் மீண்டும் அடிக்க ஆரம்பித்து அவனுக்கு எவ்வாறு புரிய வைப்பதென்று முகத்தில் யோசனை ரேகைகளை ஓட விட்டவாறே கணவனை ஏறிட அவனோ குறும்பாக சிரித்துக் கொண்டிருந்தான். 
“நான் என்ன சொன்னேன் னு புரிஞ்சிக் கிட்டு புரியாத மாதிரி நடிக்கிறீங்களா?” என்றவாறே அவனின் மார்பிலும், தோளிலும் அடிக்க அவளை இறுக அணைத்துக் கொண்டவன் 
“ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தேன் டி. ஏன் டி இப்படி பண்ணுற. என்ன காரணம் னு சொல்லு சரியான காரணம் சொன்னா மட்டும் தான் ஏத்துப்பேன்” அவளின் கூந்தல் வாசம் பிடித்தவாறே காதுமடல் உரச பேச 
தான் எடுத்த முடிவு தப்போ என்று ஒரு கணம் தோன்றினாலும், சொல்லி தான் பார்ப்போமே! “அது வந்து இன்னும் ஐஞ்சி நாள்ல என் பர்த்டே வருது அன்னைக்கி….” பாதியை சொல்லி மீதியை சொல்லாது உதடு கடித்தவாறே புருவம் சுருக்கினால் தியா. 
“வாவ் சூப்பர். பார்த்தே கிப்டா… இது கூட நல்லா இருக்கே! ஒரு மினி ஹனிமூன் கொண்டாடலாம். பர்த்டே கிப்ட்டா உனக்கு என்ன வேணும்” ஆசையாக அவள் முகம் நோக்க 
“எதுவானாலும் ஓகே” என்று கணவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொள்ள 
“ஹலோ ஹலோ ஐஞ்சி நாள் தள்ளி வச்சதுக்கு வேற ஏதாவது கொடுங்க மேடம்” என்றவன் அவளை இழுத்தணைத்து இதழ் சுவைக்க ஆரம்பித்தான்.  
இதுவரை ப்ரதீபனோ! ரிஷியோ பிறந்தநாளை கொண்டாடியதே இல்லை. இன்னும் ஐந்து நாட்களில் தியாவின் பிறந்தநாள் என்றிருக்க அதை எவ்வாறு கொண்டாடுவது என்று திட்டமிடலானான். வீட்டில் சிறிதாக ஒரு பார்ட்டி வைக்கலாம் என்று முதலில் யோசித்தவன் 
“பார்ட்டி முடிய மிட் நைட்டானா பர்த்டே கிப்ட் மறந்துட வேண்டியது தான்” அந்த எண்ணத்தை கை விட்டவன் ஒரு பெரிய ஹோட்டலில் நைட் டின்னரும் அதே ஹோட்டலில் ஹனிமூன் சூட்டும் பதிவு பண்ணி, மனைவிக்கு கொடுக்க வேண்டிய பரிசு என்ன என்பதையும் தீர்மானித்து அதை வடிவமைத்து நகையை செய்ய உத்தரவிட்டான். 
இவ்வளவு நாள் பொறுமையாக இருந்தவனுக்கு இந்த ஐந்து நாட்களை கடப்பது தான் பெரும் பாடாக இருந்தது. சின்ன சின்ன சில்மிஷங்களோடு பிறந்தநாளன்று தனக்கு கிடைக்க போகும் பரிசை பற்றி பேசி மனைவியை சிவக்க வைத்தான். 
இனி தன்வாழ்வில் சோகங்களும், துன்பங்களும் இல்லவே இல்லை என்று சந்தோசவானில் பிரதீபன் பறந்துக் கொண்டிருக்க, அவன் விதியோ அவனை பார்த்து கைகொட்டி சிரித்தது.
“ஹாப்பி பர்த்டே டி பொண்டாட்டி” தியா காலையில் கண்விழிக்கும் போதே அவளின் நெற்றியில் இதழ் பதித்து சொன்னவன் அவளை இறுக அணைத்து விட்டே  விடுவித்தான். 
“போய் குளிச்சிட்டு வா கோவிலுக்கு போலாம்” என்றவன் ஒரு பெட்டியை கையில் வைக்க அதை திறந்து பார்த்தவள் எக்கி கணவனின் கன்னத்தில் முத்த மிட்டு சிட்டாக பறந்து குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.
அவள் செய்கையில் புன்னகைத்தவன் தான் கொடுத்த புடவையில் அவள் எவ்வாறு இருப்பாள் என்ற கனவோடு அவளுக்காக காத்திருந்தான். 
கிளிப்பச்சை நிற சேலையில் குளித்து விட்டு தலையை துவட்டியவாறே வெளியே வந்தவளை இறுக அணைத்து முத்தமிட்டவன் மீண்டும் “ஹாப்பி பர்த்டே பொண்டாட்டி” என்றவாறு ஒரு நகைப்பு பெட்டியை கையில் வைக்க அதில் அந்த சேலைக்கு பொருத்தமாக சிவப்பு “ரூபி” மாணிக்க கற்கள் பதித்த மாலை, காதணி, வளையல், மோதிரம் என்று எல்லாம் இருக்க வாயை பிளந்தாள் தியா. 
“ரொம்ப அழகா இருக்கு. இந்த சேலைக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு. உங்க தேர்வு சூப்பரா இருக்கு” உற்சாகத்தில் ஏதேதோ சொல்ல 
“இல்லையா பின்ன உன்ன தேர்வு செஞ்சி இருக்கேனே! கண்ணடித்து சிரிக்க 
“வாங்க வாங்க கோவிலுக்கு போலாம்” தன் முகச் சிவப்பை மறைக்க அவனை அதட்டியவாறு முன்னே நடக்க அவள் பின்னே நடந்தான்  பிரதீபன். 
மும்பாயில் உள்ள பலம் பெரும் கோவிலுக்கு சென்று மும்பாதேவியை தரிசித்தவர்கள் வீடு வந்து காலை உணவையும் ஒன்றாகவே அமர்ந்து  ஒருவருக்குகொருவர் ஊட்டியவாறு ஒரே தட்டில் சாப்பிட்டனர். 
கணவன் சாப்பிட்ட தட்டில் சாப்பிட மாட்டேன் என்றவள் விரும்பியே! சாப்பிட ப்ரதீபனோ அவளை தன்னோடு அமர்த்தி ஊட்டி விடலானான். தியாவும் கதை பேசியவாறு அவனுக்கு ஊட்டி விட அதுவே நடை முறையாகியது. 
கடைக்கு செல்ல மனமே இல்லாது விடை பெற்றவன் அலை பேசியில் தொடர்பு கொண்டும், குறுந்செய்தி அனுப்பியும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டே இருக்க, கணவனின் காதலில் உருகி நின்றாள் தியா. 
மாலை நான்கு மணியளவில் டின்னருக்கு செல்ல என்ன ஆடை அணிவது என்ற குழப்பத்தினூடே நகத்தை கடித்தவாறு அலுமாரியை குடைந்துக் கொண்டிருக்க, வேலையாள் வந்து அவளுக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாகவும், அது அவளின் பெயரில் இருப்பதால் கையொப்பம் இட்ட பின்னே பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் அவளை அழைக்க, கீழே சென்றவளும் கையொப்பமிட்டு பார்சலை பெற்றுக் கொண்டு அறைக்கு வந்து திறக்க, அழகிய வேலைப்பாடுகளோடு கடல் நீல நிறத்தில் ஒரு கவுன். 
அலைபேசி குறுந்செய்தி வந்ததாக அலறவே! அதை இயக்கிப் பார்த்தவள் “கடல் தேவதையே! கபோர்ட்டில் ஒரு நகைப்பெட்டி இருக்கு, அழகா தயாராகி வரவும், நான் வந்து கிட்டே இருக்கேன்” என்றிருந்தது. 
“மணி அஞ்சு கூட ஆகல ஆறு மணிக்கு தானே வெளிய போறோம் னு சொன்னாரு” புன்னகைத்தவாறே ஆலுமாரியை திறந்து நகைப்பெட்டியை எடுக்க நீல நிற ஷர்பயா கற்களோடு வைரக் கற்கள் பதித்த வெள்ளைத் தங்கம் மின்னிக் கொண்டிருக்க, கையால் வருடிப் பார்த்தவள், தயாராகி வந்து கண்ணாடியில் தன்னை ஒரு தடவை பார்த்துக் கொள்ள பேரழகியாக தெரிந்தாள். 
இந்த வருட பிறந்தநாளோ! தன் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நாளாக போகின்றது, என்ற பூரிப்பில்லையே! கணவனுக்காக காத்திருந்தாள் தியா. அவளை வெகு நேரம் காக்க வைக்காது ப்ரதீபனும் வந்து சேர இரவு வீட்டுக்கு வராததால் பார்வதி பாட்டியை கயல் வீட்டில் விட்டு விட்டே வெளியே கிளம்பினார். இருவரினதும் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் பாட்டி. 
அந்த பலமாடிகளைக் கொண்ட ஹோட்டலினுள்  மனைவியுடன் நுழைந்தான் பிரதீபன். ஹோட்டலில் நுழைந்ததிலிருந்தே தியாவின் கையை பிடித்திருந்த பிரதீபன் மின்தூக்கியினுள் நுழைந்த உடன் தியாவின் இடையில் கைவைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டே காதலர்களுக்கென்றே அமைக்கப்பட்ட மெல்லிய இசையோடு, மெழுகுவர்த்திகள் ஏற்ப்பட்ட உணவகமுள்ள தளத்துக்கு செல்ல காற்றில் தவழ்ந்து வந்த இசையில் மயங்கி நின்றாள் தியா. 
அறையோ அழகிய மெழுகுவர்த்திகள் வெளிச்சத்தினால் மங்கலான ஒளியையே கொண்டிருக்க இருவரும் தங்களுக்காக பதிவு பண்ணிய மேசையில் சென்று அமர்ந்தனர். பணியாளரை அழைத்து தங்களுக்கான உணவை எடுத்து வரும் படி பணித்து விட்டு மனைவியை ஏறிட்டு 
“ஆர் யு ரெடி பொண்டாட்டி. இன்னும் கொஞ்சம் நேரம் தான். இதுக்கு மேலையும் வெயிட் பண்ண முடியாது” முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு சொல்ல 
“கொஞ்சம் நேரம் சும்மா இருக்கீங்களா” தியாவின் இயல்பு குரல் அதட்டினாலும் முகம் வெக்கத்தில் சிவக்க அந்த மெழுகுவர்த்தி ஒளியில் தேவதையாய் மிளிர்ந்தாள். 
“இன்னும் கொஞ்சம் நேரத்தில் சாப்பாடு வரும் பொண்டாட்டி. பசிக்குது. இதுக்கு மேலையும் வெயிட் பண்ண முடியாது னு நான் சொன்னா? நீ என்னென்னமோ சொல்லுற?” கண்ணடித்து சிரிக்க, 
“உங்கள… வீட்டுக்கு வாங்க வச்சிக்கிறேன்” பொய்யாய் முறைத்தாள் தியா. 
“நான் தான் இன்னைக்கி வீட்டுக்கு போக போறதில்லயே! என் பொண்டாட்டிக் கூட இந்த ஹோட்டல்ல ஒரு முக்கியமான வேலையா தங்க போறேன்”  மேலும் பேசி வம்பிழுக்க, உணவும் வரவே மேலும் மனைவியை சீண்டி சிவக்க வைத்துக் கொண்டிருந்தான் பிரதீபன். 
இவர்கள் வந்ததிலிருந்தே ப்ரதீபனை குரோதமாக பாத்திருந்த இரு விழிகள், ப்ரதீபனின் புன்னகை முகமும், ஒரு பெண்ணிடம் சிரிக்க சிரிக்க, பேசிக் கொண்டிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்த தனக்கு வேண்டப்பட்ட ப்ரதீபனின் கடையில் வேலைப் பார்க்கும் ஒருவரை அலைபேசியில் பிடித்து ப்ரதீபனுக்கு கல்யாணம் ஆன விஷயம் அறிந்து அவனின் சந்தோசத்தை எவ்வாறு குழைப்பதென்று யோசிக்க விதியோ சந்தர்ப்பத்தை தானாக அமைத்துக் கொடுத்தது. 
சாப்பிட்டு கொண்டிருந்த தியாவின் கையில் இருந்த கரண்டி தவறுதலாக மடியில் விழ கரண்டியில் இருந்த குழம்பு கவுனில் பட பதறி எழுந்துக் கொள்ள
“ஈஸி, ஈஸி” பிரதீபன்  அவளை அமரும் படி சொல்ல 
“இல்லங்க புதியது கறை பட்டிருச்சு, நான் போய் வாஷ் பண்ணிட்டு வரேன்”
“ரிலாக்ஸ் பொண்டாட்டி. முதல்ல நீ சாப்பிடு. அத பிறகு பாக்கலாம்” 
“இல்லங்க உடனே வாஷ் பண்ணலைனா போகாது. நீங்க சாப்பிட்டு கிட்டே இருங்க, நான் இப்போ வரேன்” என்றவள் வாஷ்ரூம் பக்கம் நகர அவளை பின் தொடர்ந்தது அந்த இருவிழிகளுக்கும் சொந்தக்காரி மதுரிகா. 
மனைவி வரும் வரை காத்திருந்த ப்ரதீபனோ பதினைந்து நிமிடங்களாகியும் அவளைக் காணாது வாஷ் ரூம் பக்கம் வர தியாவோ மின்தூக்கியில் நுழைந்து கீழ் தளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதைக் கண்டு 
“என்னாவாகிற்று இவளுக்கு” என்ற சிந்தனையினூடாகவே அடுத்த மின்தூக்கியில் நுழைந்து அவளை பின் தொடர அவளோ ஹோட்டல் வாசலில் இருந்த டாக்சியில் ஏறி வீட்டை நோக்கி பயணித்தாள். 
 

Advertisement