Advertisement

அத்தியாயம் 29
அமுதன் மணமேடையில் அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருந்தான். அவன் கண்களோ முன்னாடி இருக்கையில் கால் மேல் கால் போட்டு கையை கட்டிக்கொண்டு அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மலர்விழியின் மேலையே இருந்தது.
மலர்விழி அமுதனை மறுக்க பிரதான காரணம் தன் குடும்பத்தால் சரவணனின் குடும்பன் அடைந்த துன்பம்தான். அதனால் மாத்திரம் தான் அமுதனை விட்டு விலகுவதில் குறியாக இருந்தாள். 
அமுதனின் பிடிவாதமும், ஈகோவும் அவளை புரிந்து கொள்ளாது கண்டபடி பேசி அவளை காயப்படுத்த தான் அமேரிக்கா செல்வதாக கோபத்தில் சொல்லி விட்டாள். 
தன்னிடம் வந்து பேசுவான், சமாதானப் படுத்துவான் என்று மலர்விழி காத்திருக்க அப்படி எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தான் அமுதன். 
ஒருவேளை அவன் மனதில் தான் இல்லையோ! ப்ரதீபனும் அமுதனும் பேச்சு வாக்கில் பல தடவை சொல்லி இருந்தாலும் அமுதன் மனம் திறந்து கூற வேண்டும் என்று மலர்விழி  எதிர்பார்ப்பதில் என்ன தவறு? 
மலர்விழி முதலில் மனம் திறக்க வேண்டும் என்று அமுதனும், அமுதன் முதலில் சொல்ல வேண்டும் என்று மலர்விழியும் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்க வீட்டாரின் சம்மதம் கூட மலர்விழியை அசைக்கவில்லை. 
அமுதனின் கல்யாண ஏற்பாடுகள் கூட தன்னை கோபப்படுத்தும் நோக்கத்தோடு செய்து கொண்டிருக்கின்றான் என்றும் அவன் எந்த எல்லை வரை செல்வான் என்று பார்க்க அமைதி காத்தவளுக்கு பேரதிர்ச்சியாக அவனின் திருமண அழைப்பிதழ்  இருந்தது. 
மணமகனின் பெயர் கணியமுதன் என்றும் மணமகள் ஸ்ரீநிதி என்றும் தெளிவாக பொறிக்கப் பட்டிருப்பதைக் கண்டு மனதளவில் உடைந்தே போனாள் மலர்விழி. 
தனக்கும் அவனுக்குமான கல்யாண ஏற்பாட்டைத்தான் செய்கிறான் கண்டிப்பாக கல்யாண பத்திரிகையில் கூட இன்னொரு பெண்ணின் பெயரின் அருகில் தன் பெயரை சேர்த்து எழுத மாட்டான் என்ற அவளின் நம்பிக்கையில் எண்ணையை ஊற்றி கொளுத்தி விட்டு கல்யாணத்துக்கு சமூகமளிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வேறு. 
அதன் பின்னே மலர்விழி அமேரிக்கா செல்வதாக தீவிரமான முடிவையெடுத்து “நீ யாரை கல்யாணம் செய்து கொண்டாலும் எனக்கு கவலையில்லை” எனும் விதமாக முன்வரிசையில் அமர்ந்திருந்தாள்.
“பாக்குறத பாரு முண்டக்கண்ணி அப்படியே முழிய நோண்டிப்புடனும். என்னயாடி வேணாம்னு சொல்லுற தாலி கட்டுற கடைசி நிமிஷம் வரைக்கும் தாண்டி உனக்கு டைம் நீயா வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லல… சொல்லுவ டி…”  மந்திரம் ஓதும் சத்தத்தில் தான் பேசுவது கேட்காது என்று அமுதன் பேச 
“உக்காந்திருக்கும் திணுசப் பார்த்தா சொல்லமாட்டா போல இருக்கு அமுதா.. கல்யாணத்த நிறுத்திடலாமா” பிரதீபன் அவன் காதில் முணுமுணுக்க 
“இதுக்குதான் என் பக்கத்துலயே உக்காந்து இருக்கியா? எந்திருச்சு ஓடிடு… போ.. போய் வேல இருந்தா பாரு. அங்க பாரு. என் அண்ணனை பொறுப்பா வந்தவர்கள வரவேற்று உக்கார வைக்கிறான். நீ போய் ஜூஸ் பரிமாறு” அமுதன் தெனாவட்டாக சொல்ல
“போடா டேய் உனக்கெல்லாம் பொண்ணு கிடைக்கிறதே அபூர்வம். தாலிய கட்டி குடும்பம் நடத்துற வழிய பாருடா” பதிலுக்கு அமுதனை வெறுப்பேத்தியவாறே மேடையை விட்டு இறங்கினான் பிரதீபன்.
அமுதனையே பார்த்திருந்த மலர்விழியின் கண்களோ “தாலி கட்டிடுவியா நீ?” என்ற கேள்வி தேங்கி இருக்க
“எந்திரிச்சு வாடி உன் கழுத்துல கட்டுறேன்” எனும் விதமாக அவளை பாத்திருந்தான் அமுதன்.  
கல்யாண மண்டபம் சரவணனின் சொந்தங்கள், சிவாவின் சொந்தங்கள், ரிஷி, ப்ரதீபனின் தொழில் முறை உறவுகள், அமுதனின் நண்பர்கள் மற்றும் பெண் வீட்டார்கள் என்று நிரம்பி வழிய யார் பெண் வீட்டார்கள்? யார் மாப்பிளை வீட்டார்கள் என்று அறியாமளையே வரவேற்றுக் கொண்டிருந்தார் சரவணகுமரன். 
முகூர்த்த நேரம் நெருங்குவதால் அனைவரும் மேடையை நோக்கி நகர
“ஏன் திலகா என் பையன் அந்த நிதி பொண்ணு கழுத்துல தாலி காட்டுவானா?” நடந்தவாறே சிவரஞ்சனி திலகாவின் பக்கம் திரும்பி கேட்க
“அவனை நம்ப முடியாது சிவா அண்ணி… சரியான பிடிவாதக்காரன் மலரே கல்யாணத்த நிறுத்தினா தான் உண்டு” 
“என்னங்க… என்னங்க… நீங்க சொல்லுங்க உங்க பையன் தாலி காட்டுவானா மாட்டானா? பந்தயம் வச்சிக்கலாமா?” 
“என்ன சிவா இளமை திரும்புதோ! காலேஜ்ல இருந்த சிவா மாதிரியே துறுதுறுனு ஆகிட்ட. எங்கடி இருந்த இவ்வளவு நாளா? ஒருவேளை கீதா செத்த பிறகுதான் தைரியம் வந்திருச்சோ” சரவணகுமரன் சிவரஞ்சனையை வாரியவாறு கேள்விக்கு மழுப்பி பதில் சொல்ல ஏகத்துக்கும் முறைக்கலானாள் சிவா.  
“என்னங்க உங்க தம்பி பண்ணுறது நல்லா இல்ல சொல்லிட்டேன். விரும்பின பொண்ணு கிட்ட போய் பேசாம அப்படி என்ன ஈகோ வேண்டி கிடக்கு?” கயல் ரிஷியிடம் பொரும புன்னகை முகமாக மனைவியை பார்த்த ரிஷி மௌனம் காத்தான். 
வாந்தியெடுத்தே சோர்ந்து போய் அமர்ந்திருந்த தியாவின் அருகில் பார்வதி பாட்டி அமர்ந்து அடிக்கடி அவளுக்கு ஜூஸ் கொடுத்துக் கொண்டு அவளை கவனிக்கும் பணியில் இருக்க ப்ரதீபனால் நிம்மதியாக கல்யாண வேலைகளில் ஈடு பட முடிந்தது.
அடிக்கடி மனைவியின் மீது கண்ணை வைத்திருந்தாலும் “ஜூஸ் வேணுமா? சாப்பிட ஏதாவது வேணுமா?” என்று கொஞ்சிக் கொள்ள 
அவளோ “நடக்காத கல்யாணத்துக்கு எதுக்கு ஓடியாடி  இம்புட்டு வேல பார்க்கணும்” என்று கணவனை கடிவதோடு மட்டுமன்றி அமுதனையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.
அய்யர் பெண்ணை அழைத்து வரும் படி சொல்ல பெண்ணின் தோழிகளும் மாப்பிள்ளையின் தோழர்களும் என ஒரு பட்டாளமே மணமேடைக்கு ஏற மணப்பெண் மணமேடைக்கு அழைத்து வருவதை மாத்திரம் தான் கண்டார்கள். மணப்பெண் அமர வைக்கப் பட்டாளா? தாலி யார் கட்டினான்? கீழே அமர்ந்திருந்தவர்களுக்கு தெரியவில்லை. 
கெட்டி மேல சத்தம் முழங்க அமுதன் தாலி கட்டினானா? இல்லையா? என்று கூட காண முடியாமல் உடைந்த மனதாக வெளியேறிய மலர்விழி வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியை எடுக்குமாறு ஓட்டுனரை பணித்தாள். 
எதிர்பார்த்த எல்லாம் கனவாய் போய் விட்டது இனி யாருக்காக காத்திருக்க வேண்டும்? யாரிடமும் சொல்லிக் கொள்ளவும் தோன்றவில்லை. அவர்கள் பார்க்கும் அனுதாபப் பார்வையை சந்திக்கும் திறன் இல்லை. 
இமை தாண்டும் கண்ணீரை ஆழமாக மூச்சு விட்டு உள்ளிழுத்தவள் இமைத்தட்டி சரி செய்தவாறு கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொள்ள 
“மேடம் ஏர்போர்ட் போகணுமா? இல்ல ஏதாவது மலை உச்சி? ஆழமான கிணறு? இப்படி ஏதாவது இடத்துக்கு போகணுமா? தூக்க மாத்திரை, பிளேடு இது மாதிரி ஏதாவது வாங்கி வரணுமா?” ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த அமுதன் வண்டியை எடுக்காது நக்கலடிக்க 
தான் ஏமாற்றப் பட்டதாகவும், காதலில் படு தோல்வியடைந்ததாகவும் நினைத்து சோகக் கடலில் ஆழ்ந்திருந்த மலர்விழிக்கு முதலில் ஓட்டுநர் என்ன உளறுகிறார் என்று தோன்ற கோபமாக பார்த்தவள் அங்கே அமுதனைக் கண்டு அவன் தலை முடியை பிடித்திழுக்க ஆரம்பித்தாள். 
“மலர் நான் ரிஷி மா….” அவளிடமிருந்து தப்பிக்க பொய் கூற 
“டேய் என் கிட்டயேவா… உன் நக்கல் பேச்சே உன்ன காட்டி கொடுத்துடும். உன் முழிய பாத்தே கண்டு பிடிச்சிடுவேன்” அடிகளையும் பரிசாக வழங்க ஆரம்பித்தாள். 
அமுதன் முன் இருக்கையில் இருந்தமையால் அவனால் மலர்விழியை சமாளிப்பது கடினமாக இருக்க பின்  இருக்கைக்கு தாவியவன் இறுக அணைத்து முத்தமிட ஆரம்பிக்க திமிறி விலக முயன்ற மலர்விழி அடங்கிப் போனாள்.
சில நிமிடங்கள் நீண்ட முத்தத்தில் மனதில் உள்ள பாரங்கள் கரைவதை உணர்ந்தவள் அமுதனை விட்டு விலக   
“ஏன் டி…” 
“ஏற்கனவே பண்ண தப்பைத்தான் பண்ணுற அமுதா. உனக்கு கல்யாணம் ஆகிருச்சு… முதல்ல வண்டியிலிருந்து இறங்கு” உள்ளே போன குரலில் மலர் சொல்ல 
“இன்னும் அரை மணித்தியாலத்தில் உனக்கும் எனக்கும் கல்யாணம் இப்படி சண்டை போட்டு கிட்டா கல்யாணம் பண்ண போறோம்” அவளின் கைகளை பிடித்துக் கொண்டு சொல்ல 
“நீதான் யாருக்கோ தாலி கட்டினியே” 
“நீ பாத்தியா” 
“இல்ல” மலர்விழியின் தலை தானாக ஆட 
“பார்க்க முடியாதபடி செட்டப் பண்ணாதே நான் தானே” 
“அப்போ அந்த பொண்ணு, கெட்டி மேளம்…”
“அந்த பொண்ணுக்கு கல்யாணமாச்சு, என் பிரெண்டு கணியமுதன் தான் மாப்புள… சரி வா எல்லாரும் நமக்காக காத்துக்கிட்டு இருக்காங்க” 
“நீ கூப்பிட உடனே நான் வந்துடுவேனா? முடியாது போடா…” 
“அடம்பிடிக்காத பபா… பாஸ்ட் நைட்டுல உன் கால்ல நான் விழுறேன் இப்போ வா தாலிய கட்டுறேன்”   அமுதன் கிண்டலுக்காக சொல்ல அதை பிடித்துக் கொண்டாள் மலர்விழி 
“அதென்ன தனியா இருக்கும் பொழுது கால்ல விழுற பழக்கம் எல்லார் முன்நிலையிலும் விழுற” 
“ஐயோ என் மானம் போகும் டி… வேணும்னா கால்ல முத்தம் வைக்கிறேன்” அவன் குறும்பாக சொல்ல 
அவன் நோக்கம் புரியாமல் எல்லார் முன்னிலையிலும் என்றதும் சரி என்றாள் மலர்விழி.
அதன் பின் அகல்யாவும், மலர்விழியும் மலர்விழியை அழைத்து செல்ல அமுதன் மீண்டும் மேடையேறினான்.
“இவன் தொல்லை தாங்க முடியல டா.. ரிஷி” பிரதீபன் சொல்ல ரிஷிக்கும் அமுதன் செய்த்தவைகளும், பேசியவைகளும் நியாபகத்தில் வந்தது. 
 
“டேய் அமுதா மலர் கிட்ட போய் பேசுடா… என்ன விளையாட்டு இது?” ரிஷி அமுதனை கடிய 
வீட்டார் அனைவரும் பேசியும் மலர்விழி மறுக்கவே ரிஷி பேச மனம் திறந்தாள் மலர்விழி. அமுதன் தன்னை புரிந்து கொள்ளவில்லையென்றும், அவன் மனதில் தான் இல்லாததால் தான் வந்து பேச வில்லையென்று மலர்விழி சொல்ல 
அமுதன் அவளை விரும்புவதாக கூறிய ரிஷி “அவனுக்கு சட்டுனு கோபம் வரும் கோபத்துல வார்த்தையை விட்டுடுவான். அப்பொறம் எப்படி பேசுவதென்று முழிப்பான் நீ நேர்ல போய் நில்லு அவனே பேசுவான்” 
ரிஷியிடம் மறுத்து பேசாதவள் “திட்டையும் வாங்கி கிட்டு நான் போய் அவன் முன்னாடி நிற்கணுமா? முடியாது” என பிடிவாதம் பிடிக்கலானாள். 
மலர்விழி வராததால் அமுதனை ஏவியவாறு இருந்தான் ரிஷி.
“எல்லாரும் போய் அவ கிட்ட பேசியும் என்ன வேணான்னு சொன்னா இல்ல அனுபவிக்கட்டும்” அமுதன் முறுக்கிக் கொள்ள 
“நீ பேசின பேச்சுக்கு அவ உன்ன அடிக்காம விட்டதே பெருசு போய் பேசுடா… ” பிரதீபன் சொல்ல 
“அட இருங்கடா… என்னதான் செய்யுறானு பார்க்கலாம். எப்படியும் என் கூட பிறக்காதவன் கல்யாணம் நடக்கட்டும் அப்பொறம் சமாதானப் படுத்துறேன்”
“உனக்கு அடி காண்போரும்” பிரதீபன் சிரிக்க 
“நாளைக்கு புள்ள குட்டிக்கு சொல்ல த்ரில்லா கல்யாணக் கதை இருக்க வேணாமா?” அமுதன் காலரை தூக்கி விட 
“ஆமாடா நீ உன் பொண்டாடி கிட்ட அடி வாங்கின கதையையும் சேர்த்து சொல்லு” ரிஷி அமுதனின் முதுகில் அடித்தவாறே சொல்ல 
“எல்லா ஏற்பாடும் பக்காவா நடக்குது வீட்டு பொம்பளைங்க தான் குழம்பி நிக்குறாங்க” பிரதீபன் சொல்லி சிரிக்க கல்யாண ஏற்பாடுகள் துரிதமாக ஆரம்பமானது.
“ஓஹ்… ஒஹ்.. அப்போ அண்ணன் தம்பி எல்லாரும் சேர்ந்து தான் பிளான் பண்ணி இருக்கீங்க. நான் கேட்ட உடனே கம்முனு இருந்தீங்க” கயல் பொய்யாய் முறைக்க 
“உன் கிட்ட பொய் சொல்ல முடியுமாடி வார் பேபி அதான் ஐயா அமைதியின் சின்னமா இருந்துட்டேன்” ரிஷி கண்சிமிட்டி சிரிக்க கயலும் குறும்பாக சிரித்தாள். 
“என்ன உன் பையன் என்ன விளையாடுறானா? பத்திரிக்கையடிச்சு, ஊரைக்கூட்டி, சொந்த பந்தங்களை அழைச்சி, மனமேடைல உக்காந்து மந்திரம் ஓதி பொண்ணு உக்காரும் நேரத்துல ஆள் மாறாட்டம் செய்வானாம் அத நாம ஒத்துக்கணுமாம். என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் மனசுல” சரவணன் சிவாவை பிடிப்பிடியென பிடித்துக் கொள்ள 
“ஆ… மனசுல மலர்விழியாத்தான் நினைச்சுகிட்டு இருக்கான். இங்க இருந்து கிட்டு என் உசுர வாங்குறத விட்டுட்டு போய் உங்க பையன் கிட்டயே நேரடியா கேளுங்க பாப்போம்” 
“என்ன? என்ன? கோர்த்து விட பாக்குறியா?”
“அதானே! எல்லா சத்தமும் இங்கதான் பசங்க கிட்ட பம்முறீங்க?”
“பம்முன்றேனா? அது பாசம் டி”
“அப்படியே மாரி மழையா பொழியிறீங்க. என் மேலையும் உங்க பாச மழையை பொழிங்க. இப்போ கிளம்புங்க காத்து வரட்டும்” 
“வர வர உனக்கு வாய் கொழுப்பு அதிகமாய்க்கிட்டே போகுதுடி…”
“ஆ… ஆ… போங்க…போங்க..” 
“என்ன அண்ணி இப்படி துரத்துறீங்க” திலகா அதிசயமாக பார்க்க  
“நீ வேற திலகா… அப்பா பசங்க எல்லாம் கூட்டு களவாணிங்க… எங்க நான் கண்டு பிடிச்சுடுவேனாம். அதான் என்ன சத்தம் போடுற மாதிரி நடிக்கிறாரு” சிவா சிரிக்க
“ஆமா அத்த நம்ம சொந்தகாரங்க எல்லாம் இருக்காங்களே கல்யாணம் அமுதனோட நண்பன் கணியமுதனுக்குனு சொன்னா ஒத்துப்பாங்களா? இவரு வேற மேடைல அமர்ந்து மந்திரமெல்லாம் ஓதி…” தியா யோசனையாக கேக்க 
“அவன் காலேஜ் தோழன் தான் பா அந்த பையன். யாருமில்லாதவன், ஒரே பேர் வேறயா.. லீவு விட்டா எங்க கூடத்தான் இருப்பான். வேல கிடைச்சதும் அமேரிக்கா போய்ட்டான். அவன் எங்க சொந்தகார பொண்ண காதலிக்கிறது எனக்கே தெரியல. நம்ம பய எல்லார் கிட்டயும் பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி, இந்த விசயத்த தனக்கு சாதகமா பயன் படுத்தி மலர்விழி மடக்க பாக்குறான். என்னதான் நடக்க போகுதோ!. நம்ம சொந்தபந்தம் எல்லாருக்கும் தெரிஞ்ச பையன். பொண்ணு வீடும் என் அம்மா வழி சொந்தம். இன்னும் அரை மணித்தியாலத்தில் நம்ம அமுதன் கல்யாணம் நடக்கும். இவன் அவசரக்க் குடுக்கையா மேடைல அமர்ந்துட்டான்னு சொல்லி வச்சிருக்கேன். பொண்ண பார்த்து அதிர்ச்சில ஆள் மாறி போனது அப்போ தான் தெரிஞ்ச மாதிரி சொல்லி சமாளிச்சிட்டேன்”
“ஐயோ மலர் வேற முன்னாடியே அமர்ந்து இருந்தாலே. எல்லாரும் அவளை கண்டிருப்பங்களே!”
“மணமேடையை தான் பாத்திருப்பாங்க, மலர் பக்கத்துல விஷயம் தெரிஞ்ச ஸ்ரீநிதி தோழிங்களைத்தான் உக்கார வச்சேன்” திலகா சொல்ல 
“எல்லாம் திட்டம் போட்டு செஞ்சு இருக்கீங்க நம்மள கூட்டு சேர்களை இல்ல” தியா சோகமாக சொல்ல 
“அடியேய் நீ இன்னும் வளரனும் டி…. மலர் புள்ள கல்யாணம் வேணாம்னு சொன்னதும் அதிரடியா கல்யாணம் பண்ணுடா ராசானு நான் தான் ஏத்தி விட்டேன்” பார்வதி பாட்டி நகைக்க 
“அப்போ எனக்கு மட்டும் தான் தெரியாதா?” 
“உங்களுக்கு மட்டுமில்ல அண்ணி எனக்கும், மலர் அண்ணிக்கும் தான்” சோகமாக அகல்யா சொல்ல 
“நீதான் மலருக்கு நியூஸ் வாசிச்சு கிட்டு இருக்க, வீட்டுல யாராவது தும்மினாலும் உடனே அவளுக்கு செய்தி போயிடுது உன் கிட்ட சொல்லி இருந்தா அவ்வளவுதான்” தியா அகல்யாவை வார 
“உங்க கிட்ட ஏன் சொல்லலையாம்”  அகல்யா முறிக்கிக் கொள்ள 
“அவ புள்ளத்தாச்சிடி இந்த மாதிரி சதா டென்ஷனான விஷயங்களில் இன்வோலாகாம இருக்கிறதுதான் நல்லது” திலகா சொல்ல கழுத்தை நொடித்தாள் அகல்யா. 
“பக்கத்து அறையில மலர அண்ணியை கயல் அண்ணி தயார் பண்ணி கிட்டு இருக்கா வாங்க போலாம். அத சொல்லத்தான் வந்தேன் இங்க மா நாட்டுல மாட்டிகிட்டேன்” அகல்யா சொல்ல  
“உன் வாயால நீ பொழச்சிக்குவாடி” பார்வதி பாட்டி நெட்டி முறிக்க அவர் காலில் விழுந்தாள் அகல்யா.
“என்னடி பட்டுன்னு கால்ல விழுற யாரையாவது லவ்வு கிவ்வு பண்ணுறேன்னு குண்ட தூக்கி போட போறியா” சிவரஞ்சனி நெஞ்சில் கை வைத்தவாறே  கேட்க 
திருதிருவென முழித்தவள் “ஒருத்தன் என்றால் பரவால்லயே அத்த… ரெண்டு பேர் இருக்காங்களே! அதுல யாருன்னு எனக்கே கன்பியூஸ்ஸா இருக்கு நீ வேணும்மா செலெக்ட் பண்ணுறியா” அத்தைக்கே ஷாக் கொடுக்க 
அதிர்ச்சியாக வேண்டிய சிவரஞ்சனி அகல்யாவை முறைத்துக் கொண்டிருக்க திலகாவோ  “என்னடி சொல்லுற? ஐயோ கயல் வேற இல்லையே என் பிபி மாத்திரை எங்க இருக்கோ” 
“ஐயோ அண்ணி ஏதாவது சினிமா நடிகரையும், கிரிக்கட் ஆடுறவனையும் சொல்லுறா… இவ சொல்லுறதெல்லாம் சீரியஸ்ஸா எடுத்துக்கிட்டு… வாங்க போய் கல்யாணத்த ஜமாய்க்கலாம்” சிவா முன்னால் நடக்க அனைவரும் சிரித்தவாறே பின் தொடர்ந்தனர். 
தனக்குத்தான் கல்யாணம் என்ற எண்ணத்தில் மலர்விழி பட்டுடுத்தி வந்திருந்தாலும் அவளுக்காக அமுதன் வாங்கி வைத்திருந்த கல்யாணப்பட்டை கண்டதும் முகம் மென்மையை தத்தெடுக்க புன்னகை பூசிக்கொண்டது. இளம் பச்சை நிற பட்டும் அதில் தங்க வேலை பாடுகளும், அதற்கேர்த்தவாறு அணிகலன்களும் அவளுக்கு பொருத்தமாகவே தேர்வு செய்திருந்தான் அமுதன். 
தங்கத் தாமரை போல் மேடைக்கு வருபவளை கண் இமைக்காமல் அமுதன் ரசித்து பார்த்திருக்க ப்ரதீபனும், ரிஷியும் அவனை ஓட்டிக்கி கொண்டிருந்தனர். 
“போங்கடா நீங்க பண்ணாததையா நான் பண்ண போறேன்” எனும் விதமாக அவர்களை கண்டு கொள்ளாது தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க மலர்விழி அருகில் அமர்ந்ததும் 
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே
என்ற பாடல் வரிகளை முணுமுக்க ஆரம்பிக்க வெக்கிச் சிவந்தாள் மலர்விழி.  
“ஆ ஹா… என் பொண்டாட்டி முதன் முதலா வெக்கப்படுறாடா யாராச்சும் போட்டோ எடுங்களேண்டா….” சத்தமாக சொல்லி அவளை வார மேடையில் அமர்ந்திருக்கிறோம் என்றும் பாராமல் அமுதனின் தலையில் கொட்டு வைத்தாள் மலர்விழி.
“உன் வாழ்க்கை முழுவதும் அடி, உதை தான் தம்பி.. அதுக்கு ஒன்னும் குறைச்சல் இருக்காது. வெல்கம் டூ பாமிலி லைப்” ரிஷி சிரிக்க கயல் அவனை முறைக்க 
“பிரதீபன் அண்ணா…. நீங்க ஏன் அமைதியா இருக்கிறீங்க அண்ணி தான் பக்கத்துல இல்லையே” அகல்யா சொல்ல 
“அம்மா தாயே…. உன் போன் ஒன்ல இருக்குறத நான் பார்த்துட்டேன். இந்த கோர்த்து விடுற வேலையெல்லாம் என் கிட்ட வச்சிக்காதா…. நீ என்ன கேட்டாலும் செய்றேன்” 
“அந்த பயம் இருக்கணும்”  அகல்யா வீடியோ எடுப்பதை நிறுத்தி விட்டு அர்ச்சதையை கையில் அள்ளிக் கொண்டாள். 
மந்திரம் ஓதப்படட, கெட்டி மேளம் கொட்ட.  கூடியிருந்தவர்கள் அச்சத்தை தூவ, மலர்விழியின் சங்கு கழுத்தில் மங்கலானான் பூட்டி தன் சரி பாதியாக்கிக் கொண்டான் அமுதன்

Advertisement