Advertisement

அத்தியாயம் 27
கைது  செய்யப்பட்ட ரத்னவேல் உடனடியாக சென்னைக்கு அனுப்பப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்க கீதாராணியின் உடல்நிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு பின்னே விமானம் மூலம் சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். 
 
உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர் குழு கூறி இருந்த பொழுதும் கீதாராணி பயணம் செய்யும் நிலைமையில் இல்லாதபடியால் அவளை கைது செய்ய முடியாமல் கமிஷ்னர் திணற, விமானம் மூலம் அழைத்து செல்ல முடியுமா என்று மலர்விழி மருத்துவரை அணுகி கேட்டு அவள் செய்த ஏற்பார்ட்டின் பேரிலையே கீதாராணி சென்னையிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு போலீஸ் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப் பட்டாள். 
மருந்தின் வீரியமும், வலியின் தாக்கமும் கீதாராணி சுயநினைவில்லாமலையே இருக்க, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட அறிய முடியாமல் ஆழ்ந்த உறக்கத்திலையே இருந்தாள். 
ரத்னவேலுக்கெதிரான பல ஆதாரங்கள் சிக்கியும் வாய் திறக்க மறுத்த அவரை பதினைந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
மலர்விழி தந்தையையும், அத்தையையும் மனதால் வெறுத்தாலும் அவர்கள் தண்டனையை பெற்று திருந்துவார்கள் என்று நெஞ்சோரத்தில் பேராசைக் கொண்டு தினமும் அவர்களை சந்திக்க காவல் நிலையம், மருத்துவமனை என அலைந்துக் கொண்டிருந்தாள். 
ரத்னவேலை சந்திப்பவள் அன்னையின் நியாபங்களை தூண்டி அன்பாக பேசினாள். செய்த குற்றங்களுக்கு தண்டனையை ஏற்றுக் கொள்ளுமாறு பணித்தாள். 
கீதாவால் உணவை உண்ண முடியாததால் நீர் ஆகாரம் தான் வழங்கப் பட்டது. ஊட்டி விட்டது மட்டுமல்லாது சிந்தும் பொழுதெல்லாம் மலர்விழி துடைத்தும் விட அவளை புரிந்துக் கொள்ள முடியாமல் அவளுடன் செல்லும் அமுதன் அவளின் கரிசனமான செய்கைகள் அவனை எரிச்சலூட்ட வார்த்தையாலும், முகசுளிப்பாலும் அதை காட்ட ஆரம்பித்தான். 
அன்றும் மலர்விழி கீதாவின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அமுதன் கதவருகில் கைகளை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். 
அவன் எண்ணமெல்லாம் அலை பாய்ந்துக் கொண்டிருக்க  “இவள் எந்த ரகம்? பழி வாங்க வேண்டும் என்று துடித்தாள், செத்து ஒழியட்டும் என்று விட்டு விடாமல் எதற்கு இவ்வளவு கருணை?. படுத்திருப்பது என்னை பத்து மாசம் சுமந்து பெற்ற அன்னை ஆனாலும் என் மனதில் “ஐயோ பாவம்” என்ற எண்ணம் தோன்ற வில்லையே! இதுவே வேறு யாராவதாக இருந்திருந்தால் தோன்றி இருக்குமோ? ஒருவேளை மலருக்கு அமுதவள்ளி அத்தையின் குணமோ!”  
“அப்போ உனக்கு கண்டிப்பா உன் அம்மா குணம் தான்” அவன் மனசாட்ச்சி அவனை கேலி செய்ய, புயலென உள்ளே நுழைந்தான் ரிஷி. 
கயலை அழைத்துக் கொண்டு இலங்கை சென்ற ரிஷி நேற்று முன் தினம் தான் மும்பை வந்திருந்தான். தொழிலையும் தந்தையின் பொறுப்பில் விட்டு விட்டு    இயலின் குழந்தைக்கு தாய்மாமன் ஸ்தானத்தில் இருந்து அத்தனை சட்ங்குகளையும் தானே முன் நின்று செய்து முடித்தவன் ஸ்ரீராமுக்கு செய்ய முடியாமல் போன அனைத்தையும் அந்த பிஞ்சுக்குக்கு செய்து அழகு பார்த்து விட்டே ஊர் திரும்பி இருந்தான். 
மனம் நிறைந்த சந்தோசம் நிலைக்க விடாமல் சென்னையிலிருந்து வந்த செய்திகள் அவனை நொடிநேரம் தாமதிக்காமல், எதையும் யோசிக்க விடாமல் குடும்பத்தோடு சென்னைக்கு இழுத்து வந்திருந்தது. 
சென்னை வந்தவன் முதலில் வீட்டுக்கு சென்று ப்ரதீபனை அடிக்காத குறையாக வசைபாட ஆரம்பித்தான். தன்னிடம் எதையையுமே மறைக்காத உயிர் நண்பன், இவ்வளவு பெரிய காரியத்தை தன் கூடப் பிறந்தவனோடு சேர்ந்து பண்ணியதுமில்லாது அதை தன்னிடமே மறைத்தது அவன் மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. 
“டேய் ஒருத்தன அழிக்கணும் என்று நான் முடி வெடுத்திருந்தா அத எப்படி செய்வேன்னு உனக்கு தெரியாதா? என்ன கொல்ல பார்த்தும் நான் ஒதுங்கிப் போனதுக்கு காரணம் என் குடும்பம் எதுக்கு நீ இப்படி பண்ண?” ரிஷி எகிற 
அதில் நன்றாக என்னை ஊற்றலானாள் தியா “நல்லா கேளுங்கண்ணா “பழி வாங்க போறேன். பணியாரம் விற்க போறேன்னு என்ன இங்க தனியா விட்டுட்டு பெங்களூருக்கு போய்ட்டாரு” மூக்கை சிந்த ப்ரதீபனும், பார்வதி பாட்டியும் ஒன்று சேர்ந்து அவளை முறைக்க ரிஷி மாத்திரமல்லாது திலகாவும் திட்ட ஆரம்பித்தாள். 
“ஏன் பா உனக்கு இந்த வேண்டாத வேல என் அண்ணனே! அவங்க சகவாசம் வேணான்னு ஒதுங்கித்தானே இருக்கான். அதுங்க கால சுத்தின பாம்பு. அந்த புள்ள மலர கூட்டிக் கிட்டு வரும் போதே நினச்சேன் இப்படி ஏதாவது நடக்கப் போகுதுனு நான் நினைச்ச மாதிரியே நடக்குது. இன்னும் என்னவெல்லாம் இருக்கோ. எங்க குடும்பத்துக்கு அந்த குடும்பத்துக்கிட்ட இருந்து விடுவுகாலமே இல்ல போல இருக்கே”
ப்ரதீபனின் வீடோ வாசலோடு மாடிப் படிக்கட்டும் வலது புறத்தில் சாப்பாட்டறையும் சமையல்கட்டும் அமைந்திருக்க சுவர்களா பிரிக்கப் படாததால் யார் எங்கே இருந்தாலும் அனைவரும் தெரியும் படி இருந்தனர். 
வாசல் சோபாவில் அமர்ந்து சரவணனும் அகல்யாவும் எதையோ கொறித்துக் கொண்டிருக்க, எதிர் சோபாவில் தான் தியா அமர்ந்திருந்தாள். 
அவர்களுக்கு பக்க வாட்டில் ரிஷி ப்ரதீபனை வெளுத்து வாங்க, பார்வதி பாட்டி படியில் அமர்ந்து வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவிக் கொண்டிருக்க, திலகாவும், சிவரஞ்சனியும் சாப்பாட்டு மேசையில் தாங்கள் கொண்டு வந்த அனைத்தையும் கடை பரப்பிக் கொண்டிருக்க, ஸ்ரீராம் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான். 
 கயல், சிவரஞ்சனி, அகல்யா, சரவணகுமரன் அனைவரும் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க ஸ்ரீராம் தான் சண்டையை விலக்கும் விதமாக நடுவில் வந்து மாமனின் காலைக் கட்டிக்க கொண்டு தூக்குமாறு சொல்ல 
 அவனோடு விளையாட குட்டி பாப்பா வரப்போவதாகவும், பெண் குழந்தைதான் பிறக்கும் என்றும் கூறி, தியா குழந்தை உண்டான  விஷயத்தை மெதுவாக போட்டுடைத்தான் பிரதீபன். 
“டேய்…. ஏன் ட…. இத முதல்லயே சொல்ல கூடாதா…” ரிஷி அவனை இழுத்து அணைத்துக் கொள்ள 
“முதல்ல சொன்னா திட்டி இருக்க மாட்ட. நீ இப்படி திட்டியே ரொம்ப நாளாச்சு அதான் பேசாம இருந்தேன்” மேலும் நண்பனை இறுக்கிக் கொண்டான் பிரதீபன்.
அதன் பின் அனைத்தையும் மறந்து தியாவின் நலன் முன் நிற்க, அவளின் உடல் நிலையும், உணவு முறை என அனைத்தையும் அலசி கடைசியில் என்ன என்ன சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிடக் கூடாது என்று ஒவ்வொருவராக பட்டியலிட 
குழந்தை உண்டானதில் இருந்து உப்பும், மிளகாய் பொடி, மிளகுப் பொடி, சக்கரை, வினிகர்  சேர்த்து மாங்காய், கொய்யா, நெல்லிக்காய், ஆப்பிள் என்று கலந்து சாப்பிட்டவள் இனி அந்த பிக்கள் கலவையை கண்ணில் கூட காட்ட மாட்டார்கள் என்று, தனக்கு விருப்பமான பட்டியல் பறி போகும் பரிதாபம் தியாவின் கண்ணில் தெரிய கணவனை பரிதாபமாக பார்த்தாள்.      
பாட்டில் பாட்டிலாக செய்து படுக்கையறையில் மறைத்து வைத்திருப்பதை அறிந்தவன்  “அடிப்பாவி அதான் இப்போவே பாட்டி காதுல போட வேணாம்னு சொன்னியாயா?” கண்ணாளையே கேக்க  அவனை பாவமாக பார்த்து வைத்தாள் ப்ரதீபனின்  மனையாள். 
“ஏன் வார் பேபி ஸ்ரீ வயித்துல இருக்கும் போது உன்னால எல்லாம் சாப்பிட முடிஞ்சதா? வாந்தி வந்ததா? ரொம்ப முடியாம போச்சா?” 
கொஞ்சம் நேரத்துக்கு முன் கர்ஜித்துக் கொண்டிருந்தவனா என்று சந்தேகப் படுமளவுக்கு ரிஷியின் குரல் கர கரத்து ஒலிக்க, நான்கு வருடம் கழித்துத்தான் கயலை சந்தித்தான் ரிஷி. அன்றிலிருந்து  பல மாதங்கள் கடந்தும் ஸ்ரீராம் பிறக்கும் பொழுது தான் அருகில் இருக்கவில்லை என்று புலம்பித் தள்ளுபவன் அவள் வித விதமாக வாந்தி எடுத்ததை சொன்னால் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வான் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. 
“யாரு நானா? எனக்கென்ன? சிங்க குட்டியல்ல பெத்து வச்சிருக்கேன். எந்த தொல்லையும் பண்ணல. சமத்தா சத்தான ஆகாரம் சாப்பிட்டு நா சொல்லுற படி கேட்டு கிட்டு இருந்தான்” எங்கே கண்டு பிடித்து விடுவானோ என்று முகத்தை மிகவும் சாதாரணமாக வைத்துக் கொண்டு கயல் சொல்லி முடிக்கும் பொழுது பார்வதி பாட்டி நமட்டு சிரிப்பு சிரிக்க, தியா திரு திருவென முழிக்கலானாள். 
எங்கே தியா மறுத்து ஏதாவது சொல்லி விடுவாளோ! மீண்டும் நண்பன் முகம் சுணங்குவானோ ரிஷியை பார்த்தவாறே பிரதீபன் “பேபி டால் உனக்கும் வாந்தி வரல்ல இல்ல. தல மட்டும் தானே சுத்துது. வலது புறமா சுத்துதா? இல்ல இடது புறமா சுத்துதா?” என்றவாறே அவள் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டவன் கையை பிடிக்க 
சாப்பிடும் அனைத்தையும் வாந்தி எடுப்பவளை பார்த்து வாந்தி வரவில்லை என்று சொல்பவனை முறைக்க முடியாமல் தோற்றவள் “என்ன இது எல்லார் முன்னாடியும் கைய பிடிக்கிறீங்க கைய எடுங்க” வெக்கம் கலந்த குரலில் மிரட்டலானாள் தியா. 
“என்ன டி புள்ளயே கொடுத்திருக்கேன். அதுக்கே வெக்கப்படாம எல்லார் கிட்டயும் சொல்லி சந்தோச பட்டியே கைய புடிச்சா மட்டும் என்னவாம்” அவளின் காதுக்குள் கிசு கிசுக்க 
“உங்க கிட்ட மனுஷன் பேசுவானா?” அவனை முறைத்தவாறே எழுந்து சென்றவள் சிவரஞ்சனியின் மடியில் தலை வைத்துப் படுத்துக்க கொண்டாள்.   
“போடி போ… உன்ன மாதிரி ராட்சசி கூட குடும்பம் நடுத்துறேனே என்ன சொல்லணும்” சத்தமாகவே சொல்ல 
“என்ன அங்க சத்தம்” திலகாவும், சிவரஞ்சனியும் ஒரே நேரத்தில் கேட்க, 
“அகல்யா கிட்ட பேசினேன்….” உடனே சரண்டர் ஆனான் பிரதீபன்.  
“உன்கண்ணன் என்னமா பம்முறான் பாரேன்” காயலிடம் ரிஷி சொல்லி சிரிக்க 
“அம்மா எங்க உங்க அருமை மகன் அமுதனை காணோம்” குறும்பாக பேசி சிரிக்க வைப்பவனா இவ்வளவையும் செய்தான் நம்ப முடியாமல் வந்தவர் கணவன் எதுவும் கேளாமல் சாப்பிடுவதில் குறியாக இருக்க சிவரஞ்சனி சரவணனை முறைக்க அவரோ அகல்யாவோடு இலங்கையிலிருந்து கொண்டு வந்திருந்த தோசிகளை ருசிப்பதில் பிசியாக இருந்தார். 
 
அப்பொழுதுதான் ரிஷிக்கும் அவன் இங்கு இல்லை என்று புரிய ப்ரதீபனை ஏறிட “மலரோடு ஆஸ்பிடல் போய் இருக்கான்.  அதான் அவங்க அங்க….” உன் அம்மா என்று சொல்வதா… கீதாராணி என்று பேர் சொல்வதா பிரதீபன் குழம்ப 
“எந்த ஆஸ்பிடல்?” வண்டி சாவியை கையில் எடுத்தவாறே ரிஷி வினவ அவன் பின்னாலையே நடந்தவாறு பதில் சொன்னான் பிரதீபன். 
அடுத்து அரைமணித்தியாலத்தில் ப்ரதீபனின் வண்டி மருத்துவமனையில் இருக்க வண்டியிலிருந்து ரிஷி இறங்க கூடவே பிரதீபன், கயல் இறங்கினாள். 
ரிஷி சாவியை எடுக்கும் பொழுதே அவன் கோபத்தை உணர்ந்த கயல் அவள் அமுதன் மேல் கோபப் படுகிறானா, கீதாராணியின் மேல் கோபப்படுகிறானா என்று புரியாமல் எதுவானாலும் கணவனின் அருகில் தான் இருக்க வேண்டும் என்று வண்டியில் ஏறி இருந்தாள். 
   
ரிஷிக்கு அமுதனின் மேல் கோபம் இருந்தது. அது இவ்வளவு பெரிய விஷயத்தை தன்னிடம் மறைத்து விட்டான் என்ற கோபம். மலர் கூட தன்னிடம் கூற வில்லை என்ற கோபம் இருந்தாலும் அவள் அதை பற்றி தான் எதோ பேச வந்திருப்பாள் அவன் தன் குடும்பம், தன் வாழ்க்கையென்று சந்தோசமாக இருப்பதாக சொன்னதும் சொல்லாமல் ஒதுங்கி இருப்பாள் என்று புரிந்துக் கொண்டான். 
கீதாராணி சாதாரண அறையில் இருந்ததால் கதவை வேகமாக திறந்துக் கொண்டு ரிஷி உள்ளே நுழையவும் தூக்கம் களைந்து மெதுவாக கண்விழித்துப் பார்த்தாள் கீதா. 
முத்தை பாதி மறைக்கும் அளவுக்கு கட்டுப் போட்டிருக்க உடம்பிலும் பல இடங்களில் கட்டு போட்டு வெள்ளை த்துணியால் மூடி வைத்திருக்க, ஒரு ஈஜிப்த்து மம்மி போல் இருந்தாள் கீதா. 
ரிஷியை கண்டு மலர் எழுந்துக்க கொள்ள அந்த கதிரையில் அமர்ந்துக் கொண்ட ரிஷி கீதாவின் வலது கையை பற்றிக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தான். 
அவனுக்கு கீதா செய்த கொடுமைகள் கொஞ்சமா? நஞ்சமா? பெற்ற பிள்ளை தப்பு செய்தால் அன்னை அடித்து திருத்தலாம். இங்கே அன்னையே தப்பானவளாக இருந்து பிஞ்சுக் குழந்தை, தான் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை என்ற பாசம்  சிறிது கூட இல்லாது ஒரு வேலைக்காரனை விட கேவலமாக, மோசமாக நடத்திக், கொடுமைப படுத்திய தாய்க்காக ரிஷி கண்ணீர் வடிப்பதா? ஏன்? அனைவரும் அவனை புரியாது பாத்திருந்தனர். 
“ஏன் மா நீ நல்லவளா இல்லாம போன? அப்படி என்ன உனக்கு அப்பா மேல கோபம்? அவர் மேல உள்ள கோபத்தை எல்லாம் எதுக்கு என் மேல காட்டின? உண்மையிலயே உனக்கு அப்பா மேல கோபம் இல்லமா… உனக்கு உன் அண்ணா மேல பாசம் அதிகம் அதான் நீ இப்படி ஆகிட்டா. சில நேரம் உன் கண்ணுல பாசம் தெரியும் அப்படி தெரியும் போதுதான் அதிகமா என்ன டோசர் பண்ணுவ. நீ நினைச்சி இருந்தா என் மேல பாசத்தை பொழிஞ்சி அப்பாக்கு எதிரா என்ன திருப்பி விட்டிருக்கலாமே!  உனக்காக நானும் அவரை பழிவாங்க கிளம்பி இருப்பேனே! ஏன் பண்ணல?  பாசத்துக்கு அடிமையான இன்னொரு  கீதா வேணாம்னு நினைச்சியா? 
உன் கிட்ட இருந்து தப்பிச்சு போன பிறகு நல்லாத்தான் வாழ்ந்தேன். ஆனா உன்ன பழிவாங்கணும்னு நினைக்கல. அதுவும் என் வாழ்க்கைல என் கயல் வந்த பிறகு சந்தோஷம்னா என்னனு அனுபவிச்சு வாழ்ந்தேன்” சொல்லியவன் கயலை இழுத்து தன் அருகில் நிறுத்திக் காட்டி “எப்படி இருக்கா என் பொண்டாட்டி. இதோ என் பையன் உன் பேரன்” என்றவன் அலைபேசியில் இருந்த ஸ்ரீராமின் வித விதமான புகைப்படங்களை காட்டலானான். 
கண்ணில் நீர் வழிய தொண்டையடைக்க பேசிக் கொண்டிருப்பவனை காணக் காண கயலுக்கும் அழுகை முட்டிக்கு கொண்டு வர அவளின் கண்களும் கலங்கி சிவப்பேறி இருந்தது. 
அன்னை இருந்து பாசம் கிடைக்காமல் போன வேதனை தான் ரிஷியின் மனதில் ஆழமான காயமாக இன்றுவரை ஆறாது இருக்க கயலின் காதலாலும் சிவா, திலகாவின் பாசத்தாலும் அது ரணமாக அவனை குத்திக் கிழித்துக் கொண்டிருந்ததைத்தான் வார்த்திகளாக்கிக் கொண்டிருந்தான். 
ரிஷி சொகுசாக வாழ்வதாக நினைத்து தான் ஒரு நாள் ஆள் மாறாட்டம் செய்து சென்று வாங்கிய அடிக்கே ஆஸ்பிடலில் பல நாள் படுத்து கிடந்ததை நினைத்துப் பார்த்த அமுதன் கீதாராணியிடன் ரிஷி எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து இருந்திருப்பான் இருந்தும் அவன் பாசத்துக்காக ஏங்குகிறான் என்றால் உண்மையிலையிலையே அவனுக்கு இளகிய மனசுதான் எனக்குத்தான் அந்தம்மா கல் மனசு என்று எண்ணலானான். 
ரிஷியி தோளில் கைவைத்த மலர்விழி “போதும் ரிஷி அன்பான மனைவி, அழகான குழந்தைனு சந்தோசமா தானே இருக்க இவங்கள நினைச்சி எதுக்கு வருத்தப் படுற? நாம என்ன சொன்னாலும் இவங்க திருந்த மாட்டாங்க? முதல்ல கண்ண துடை” 
“சாரி மலர் அத்தைக்கு நடந்தது எனக்கு தெரியல” 
அவன் மேலும் பேசும் முன் “எல்லாம் இவங்க கண்மண் தெரியாத கோபமும், வன்மமும், வெறுப்பாலையும் வந்தது. நடக்கனுன்னு இருக்கிறதுதான் நடக்கும் நாம ஒன்னும் பண்ண முடியாது ரிஷி. இவங்க சட்டப்படி தண்டனை அனுபவிக்கணும்னுதான் கூடவே இருந்து ஆதாரங்களை சேகரிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா அவங்க பிஸினசை அழிக்க முற்பட்டேன். இவங்களுக்கு இப்படி ஆகணும்னு நினைக்கல” மலர் வேதனையாக சொல்ல 
“பண்ண பாவம் கொஞ்சமா? நஞ்சமா? நமக்கு மட்டுமா பண்ணாங்க ஊருக்கே பண்ணாங்களே!  கடவுள் இருக்கான் மலர். அவன் விடுவானா? அதான் சரியான டைம் பார்த்து அவன் தண்டனையை கொடுத்தான். உன் அப்பனா விட்டுட்டானே!” கிண்டலும் கேலியும் கலந்து சோகமான குரலில் அமுதன் சொல்ல அவனை முறைத்தாள் மலர். 
“டாக்டர் என்ன சொல்லுறாங்க? அம்மாக்கு சரியாகுமா?” ரிஷி தயக்கமே இல்லாமல் கீதாவை “அம்மா” என்று அழைக்க முகத்தை சுளித்தான் அமுதன். ரிஷிக்கு கீதாவை அம்மா என்று அழைக்க எந்த தயக்கமும் இல்லை அதற்கு காரணமும் கீதா தான். அவனை கொடுமை படுத்திய போதும் “அம்மா” என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்பது அவள் உத்தரவாக இருந்தது.
“காயம் ஆற மாசக்கணக்காகும். ஆறினாலும் தோல் சுருங்கித்தான் இருக்கும். பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி கொஞ்சம் சரி பண்ணலாம். பெருசா ஒன்னும் பண்ண முடியாது. அதுவரைக்கும் கமிஷ்னர் பொறுமையா இருக்கமாட்டார். இன்னும் ஒரு வாரத்துல அத்த எழுந்து நடக்க ஆரம்பிச்சதும் அரட்ஸ் பண்ணி செல்லுல அடைப்பாரு” மலர் சொல்ல சொல்ல கீதாராணியின் முகம் இறுகியது.  
அடுத்து வந்த இரண்டாம் நாள் பிரதீபன் தியா உட்பட அனைவரும் மும்பை சென்றிருக்க அமுதன் மாத்திரம் சென்னையில் மலரோடு இருந்தான். 
அவன் எவ்வளவு சொல்லியும் கேளாது மலர் கீதாராணிக்கு சேவகம் செய்வதால் அவளை அவள் போக்கிலையே விட்டு விட்டவன் தன் சூப்பர்மார்க்கட் வேளைகளில் கவனம் செலுத்த அவளை தொடர்ப்புகொள்ள கூட முனையவில்லை. அவளிடமிருந்து வரும் அலைபேசி அழைப்புகளை கூட ஏற்கப் பிடிக்காமல் வெறித்துப் பார்த்திருந்தான். 
பத்து நாட்கள் கடந்த நிலையில் மலர்விழியிடமிருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க ஏற்காமல் ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தவன் இரண்டு நிமிடங்கள் அலைபேசி ஓய்வெடுக்கவும் அவனும் ஓவ்வெடுக்கலானான். 
“எதுக்கு விடாம போன் பண்ணா? மனசு ஒரு மாதிரி அடிக்குது என்ன பிரச்சினை?. ஒன்னும் இருக்காது. வேகமா ஓடினதால இருக்கும்” தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தவன் மீண்டும் போன் அடிக்க அலைபேசியை ஆவலாக கையில் எடுத்தான். 
ரிஷி அழைக்கவே அலைபேசியை இயக்கி காதில் வைக்க 
“டேய் அம்மா தற்கொலை பண்ணி கிட்டாங்களாம். மலர் போன் பண்ணா… சீக்கிரம் ஆஸ்பிடல் போ நான் வந்து கிட்டே இருக்கேன்” 
கீதாராணிய போன்ற ஒருத்தி தற்கொலை செய்து கொள்வதா? ரிஷி சொன்ன விஷயம் அமுதனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது

Advertisement