Advertisement

அத்தியாயம் 23
மலர்விழிக்கு எல்லா நியாபகங்களும் வந்த பின் தன் கையாலையே கீதாராணியை கொல்லும் வெறியில் இருந்தவள் உடனே இந்தியா வந்தாள். அவள் வந்த நேரம் வியாபார விஷயமாக கீதாராணி வெளிநாடு சென்றிருக, ரத்னவேலும் தேர்தல் வேளைகளில் ஈடுபட்டு கட்ச்சி ஆபிஸே கதியென்று இருந்தார். அன்னையின் நியாபகங்கள் அலைக்கழிக்கவே! அன்னையின் அறையில் அவள் பாவித்த பொருட்களோடு உரையாடிக் கொண்டிருந்தவள் கண்ணில் பழைய டயரி படவே அதில் அன்னை அவளின் குடும்பத்தை பற்றியும் ஊரை பற்றியும் எழுதி இருக்க இன்னும் டைரிகள் இருக்குமா என்று தேடலானாள். 
அந்த ஒரு டயரியை தவிர வேற எந்த ஒரு டயரியும் அவள் கைகளில் கிடைக்கவில்லை. அன்னை இறந்த பின் தந்தை அவைகளை எரித்திருப்பார் என்று தோன்றவே தனதறைக்கு வந்து பழைய பொருட்களை ஆராய அங்கே அன்னை அவளுக்கு கொடுத்த ஒரு பிறந்த நாள் பரிசு இன்னும் பிரிக்கப் படாமலே இருக்க அன்னை அன்று சொன்னது நியாகத்தில் வந்தது.
“மலர் இந்த உலகத்துல நான் இல்லனா மட்டும் இத நீ படி. அப்போ உனக்கு கண்டிப்பா இருபது வயசாவது ஆகி இருக்கணும். சரியா” 
பரிசை பத்திரமாக எடுத்து வைத்திருந்தவள் சிறு புன்னகையினூடாகவே அதை பிரிக்கலானாள். அது ஒரு டயரி அன்னையின் பழைய டயரியை போலவே இருக்க ஆவலாக அதை படிக்க ஆரம்பித்தாள் படிக்கப் படிக்க அவளின் இரத்தம் சூடாகியது. 
கடைசியாக அன்னை பழிவாங்கக் கூடாதென்று சொன்னது காயப்பட்ட மனதை வாள் கொண்டு அறுத்தாலும் சாதாரண பெண்ணாக அவள் கேட்டிருந்த நியாயமான ஆசையை ஒரு மகளாக நிறை வேற்ற வேண்டும் என்று எண்ணினாள். கூடவே ஏன் ரிஷியையே கல்யாணம் பண்ணி அன்னையின் ஆசையை நிறைவேற்றக் கூடாது என்றும் தோன்றியது. அத்தோடு ரத்னவேலின் மற்றும் கீதாராணியின் கறை படிந்த முகம் கண்ணில் தோன்ற உள்ளுக்குள் இனம் புரியாத பரவசம் இதமாக பரவியது. 
பழிவாங்க அவர்களின் உயிரைத்தான் பறிக்கக் கூடாது  என்று தான் அன்னை கூறினாள் என்று தன் மனதுக்கு உகந்தது போல் அர்த்தம் கற்பித்துக் கொண்டவள். மீண்டு அமெரிக்காவை அடைந்து அவர்களை வீழ்த்தவெனவே எப்.பி.ஐயில் இருக்கும் தனது நண்பனை நாடினாள். அங்கு உள்ள உயர் தொழில்நுட்ப உதவியால் தந்தை மற்றும் அத்தைக்கு ஒட்டுக் கேக்கும் உபகரணத்தை பொருத்திய உயர்ரக அலைபேசியை பரிசாக அனுப்பிவைத்தவள் தனது வேலையே அப்போதே ஆரம்பித்தாள். 
அன்னை இறந்த பொழுது விசாரிக்கவென வந்த நேர்மையான இன்ஸ்பெக்டரின் இரு மகன்களை கடத்தி அவரை அங்கே வர வழைத்து கொலையும் செய்திருக்க அவரின் இரு மகன்களின் பெயர்களும் யாதவ் மற்றும் மாதவ் என்று அறிந்துக் கொண்டவள் அப்பெயரையே தனக்காக வைத்துக் கொண்டாள்.
அடுத்த கட்டமாக ரிஷியை தேடும் வேட்டையில் இறங்க அவளுக்கு எந்த ஒரு சிரமமும் கொடுக்காமல் அவன் இறந்து விட்டான் என்ற செய்தி பத்திரிகையில் புகைப்படத்தோடு வெளி வரவே அதிர்ச்சியில் உறைந்தாள். எங்கே மீண்டும் மயங்கி விழுந்து எல்லாம் மறந்து போய் விடுமோ என்று அச்சம் கொண்டவள் உடனடியாக தன்னை மீட்டுக் கொண்டு தனியாக போராட வேண்டிய நிலையில் மருத்துவரை அணுகி அதற்காக முறையான சிகிச்சை பெறலானாள். 
 
ரிஷியும் கூட இருந்தால் தனக்கு பக்க பலமாக இருக்கும் அன்னையின் ஆசையும் நிறை வேறும் என்று மட்டும் நினைத்தவளுக்கு ரிஷியின் இரட்டையை மறந்தே போனாள். சென்னையில் கனியமுதனை முதன் முதலாக கண்டவள் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தோடன் அணுக அவனோ அவளிடம் பேசிய விதம் சிரிப்பை மூட்ட அவனிடம் நட்பு பாராட்ட நினைத்து நெருங்கினாள். 
“சரவணன் அண்ணன் பையன் எங்குறதால இந்த ஜென்மத்துல என் ஆசை நிறைவேறாது” என்று அன்னை டயரியில் குறிப்பிட்டிருந்தது நியாபகத்தில் வரவே அமுதனும் சரவணன் பையன்தான் என்று முணுமுணுத்தவள் ஏன் அவனை திருமணம் செய்ய கூடாது என்ற எண்ணம் தோன்றி முகத்தில் புன்னகை மலர்ந்தது. ஆனால் அமுதனோ அவளை துரத்தி அடிப்பதிலையும், அவளை பையன் என்று கிண்டல் செய்வதிலையும் குறியாக இருக்க மலர்விழி அவனை வேண்டுமென்றே சீண்டலானாள்.
நாளாக நாளாக அவலறியாமையே அவன் மேல் ஒரு ஈர்ப்பு தோன்ற ஒருநாளும் அவன் தன்னை ஏற்றுக்கொள்ள போவதுமில்லை. அவன் குடும்பமும் தன்னை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அவனிடம் உண்மையை கூறினால் கண்டிப்பாக உதவுவான். ஏன் கல்யாணம் கூட செய்ய சம்மதிப்பான். மனதால் வெறுக்கும் ஒருவனின் மகளை மணந்து பொய்யாய் ஒரு வாழ்க்கையை வாழ்வது இலகுவான காரியமல்ல. எங்கே இன்னும் அவனருகில் இருந்தால் தன் மனதை சொல்லி விடுவேனோ என்று அஞ்சியே அங்கிருந்து கிளம்பினாள். 
ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக அவளை கடத்தி, பயமுறுத்தி ரிஷியை கொன்றது தந்தையென்றும் கூறி… மும்பை அழைத்து சென்று ரிஷி உட்பட அனைவரையும் சந்தித்து இன்று அவளின் பழிவாங்கும் படலத்தில் அங்கமாக இருக்கின்றான். 
ரிஷியிடம் தந்தையை எங்கே எப்படி சந்தித்தாய்? என்ன பேசினாய்? என்று கேட்டதற்கு அவனது பதிலோ “நடந்தது நடந்து முடிந்தது நான் என் மனைவி பிள்ளையோடு நிம்மதியாக, சந்தோசமாக இருக்கிறேன்” என்று கூற அமுதவள்ளியின் டயரியை பற்றியோ! அன்னை எவ்வாறு இறந்தாள் என்பதை பற்றியோ அவனிடம் கூற மனம் வரவில்லை. 
அமுதனின் அருகில் இம்சிக்கும் மனதை கட்டுப்படுத்துவது பெரும் பாடாகிப் போக அவள் கற்ற கலைகள் முகத்திரையாக்கி முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாது இருக்க பழகிக் கொண்டாள்.
சில நேரம் அமுதனின் பார்வையும் பேச்சும் தன்னை ஊடுருவ அவனை நேர்பார்வை பார்த்து வைப்பதாலையே அவன் புன்னகைத்து தனது பார்வையை மாற்றிக் கொள்வான். அவன் மனதில் என்ன இருக்கின்றது என்று அறியாமல் தன் மனதை வெளிப்படுத்தவும் பயமாக இருந்தது. அப்படியே அவன் விரும்பினாலும் சரவணன் அவளை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா? என்ற கேள்வி மனதில் எழ கண்டிப்பாக மாட்டார் என்பதே அவள் மனதின் பதிலாக இருக்க அமுதனிடமிருந்து விலகியே இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்தாள்.
“மலர் நாம ஏற்பாடு பண்ண ஆள் டிவில பரபரப்பா பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்குறாரு” பிரதீபன் டிவியை ஆன் பண்ணியவாறே சொல்ல அமுதன் மற்றும் மலர்விழியின் பார்வை தொலைக்காட்ச்சியின் புறம் திரும்பியது. 
“இலவச மருத்துவ முகாம் என்ற பேர்ல ஏழைகளோட ப்ளட் சாம்பலை கலெக்ட் பண்ணி ஆரோக்கியமா இருக்குறவங்கள செலெக்ட் பண்ணி, கடத்தி கொலை செய்து அவங்களோட உறுப்புக்களை அதிக விலைக்கு இந்தியாவின் பெரிய பணக்காரர்களுக்கும், வெளிநாட்டுல உள்ளவர்களுக்கும் விக்கிறாங்க” ஒரு டாக்டர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்க 
தொகுப்பாளரோ “இதற்க்கு பின்னால யார் யாரெல்லாம் இருக்காங்க?”
சற்று நேரம் அமைதியாக இருந்த அந்த மருத்துவர் “தொழிலதிபர்  கீதாராணி தலைமையில் தான் இது நடக்குது” என்று விட பெரும் சலசலப்போடு காட்டுத் தீயாய் அந்த செய்தி பரவ ஆரம்பித்தது. 
“முதல் அடிய எடுத்து வச்சாச்சு… ஆமா எப்படி” மலர் சைகையாலையே கேள்வி எழுப்ப 
“கீதாராணி லேசு பட்டவ இல்ல தன் ஆஸ்பிடல்ஸ் எல்லாம்… எல்லா வசதிகளோடும் பக்காவா இருக்கணும் என்று மட்டுமல்ல டாக்டரெல்லாம் பெர்பெக்ட்டா செலெக்ட் செஞ்சி இருக்கா சம்பளம் கூட கைநிறைய…. அப்படி சொல்ல கூடாது கைல அள்ளினா கொட்டும் வீடு வரைக்கும் பொறுக்கிக் கிட்டே போக  வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு கொடுத்து வருஷத்துக்கு ஒருக்கா பாரின் ட்ரிப். அதுவும் குடும்பத்தோட. எவனும் காசுக்கு மடிய மாட்டேங்குறானுங்க” 
மலர்விழி ஆச்சரியமாக பார்க்க “அதற்காக ஒன்னும் உன் அத்த நேமையானவங்கனு சிலை வைக்க நினைக்காத அந்த ஆஸ்பிடல்  ஹோட்டல் ரூம் போல ஒரு நாள் தங்கினாவே பில் கட்ட கிட்னியை விக்க வேண்டி இருக்கும். புரியுதா?..” அமுதன் கிண்டலடிக்க 
பிரதீபன் புன்னகைத்தவாறே “பணக்காரங்க மட்டுமே வந்து போக கட்டப் பட்ட மருத்துவமனைகள்”
“அப்போ ஏழைகளுக்கான முகாம்…” மலர்விழி யோசனையாக கேக்க 
“இந்த டாக்டர் சொன்ன விஷயம் உண்மை ஆனா அது ஆஸ்பிடல்ல நடக்குறதில்ல”
“புரியல” 
“எந்த இல்லீகல் ஏக்டிவிடீசும் ஆஸ்பிடல்ல நடக்குறதில்ல அதுக்கு தனியா க்ளினிக் வச்சிருக்காங்க. இரண்டு முகம்னு சொன்னா சரியா அமுதா” பிரதீபன் சொல்ல அமுதன் தொடர்ந்தான் 
“ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி… கண்ணாடி.. மருந்து, மாத்திரனு ஒரு பக்கம் கொடுத்து அவங்க புள் ஹிஸ்டரியையே கலெக்ட் பண்ணி வச்சி இருக்காங்க. அத ஹாண்டல் பண்ண தனியா ஒரு குரூப். ஆஸ்பிடல்ல எந்த ரெகார்டும் இல்ல. அதே மாதிரி கன்ட்ராக்சன்ல வேலை செய்யும் வார்க்கர்ஸ் எல்லாமே இந்த ஸ்கீம்ல இருப்பாங்க. யாரு ஆர்கன் தேவைப்படுது அந்த ஆளு அன்னைக்கி வேலை செய்யும் பொழுது விழுந்து இறந்துடுவாரு”
“ஒஹ் மை காட்” மலர் அதிர்ச்சியடைய 
“இதுக்கே இப்படின்னா… இன்னும் இருக்கு” பிரதீபன் கைகளை தேய்த்தவாறே சொல்ல 
“போதும்… என்னால கேக்க முடியல” தலை வலிப்பது போல் இருக்க நெற்றியை தடவியவள் தொடர்ந்து “இந்த டாக்டர் எப்படி டிவில…”
“காசுக்கு பணியாதவன மிரட்டி சொல்ல வச்சோம்”
“அதான் எப்படி… அவன் குடும்பத்துல யாரையாச்சும் கடத்தினீங்களா??” இருவரையும் முறைத்தவாறே கேக்க 
“என்ன மலர் எங்களை பார்த்தா கிட்நபர்ஸ் மாதிரியா தெரியுது….?” அமுதன் வடிவேல் குரலில் சொல்ல 
“விளையாடாத அமுதா… குழந்தைங்கன்னா வேணாம் விட்டுடு” மலர்விழி கண்களை சுருக்கியவாறு  இறைஞ்சும் குரலில் அவனின்  கையை பிடிக்க அவளை காதலாக பார்த்தான் அமுதன்
தொண்டையை கனைத்து அவனை நடப்புக்கு கொண்டு வந்த பிரதீபன் “என்னதான் காசு கொடுத்தாலும் சில ஈனபுத்திக்காரங்க இருக்குறதால உன்  அத்தைய ஈஸியா வீழ்த்த முடிஞ்சது… அவன் நர்ஸுங்கள செக்ஸ் டார்ச்சர் பண்ணுறது வீடியோ எடுத்து மிரட்டினோம்” 
அன்று பஸ்ஸில் இரு பெண்பிள்ளைகளின் மேல் கை வைத்ததற்கு ஒருவனை பெல்டாலையே மலர் விளாசியது கண்ணில் வந்து போக புன்னகைத்தவாறே “உன் மைண்டுல என்ன ஓடுதுனு புரியுது… எங்க போய்ட போறான் பாத்துக்கலாம் விடு” அமுதன் புன்னகைக்க
அவனை முறைத்தவள் “அவனை ரெண்டு அடியாலும் அடிச்சிருக்கணும், முகத்தை பேர்த்து டீவி முன்னாடி உக்கார வச்சிருந்தா நான் சந்தோச பட்டிருப்பேன்” கோபம் அனல் பறக்க
“காரியம் கெட்டிருக்கும்.  முகத்துல காயத்தோடு போய் சொன்னா யாரோ சொல்ல சொன்னாங்கனு உன் அத்தையே சொல்லுவாங்க பரவால்லையா? இந்த பேட்டிக்கு பிறகு இந்த டாக்டருக்கு என்ன ஆனாலும் அது உன் அத்த மேல தான் விழும். எப்படி….” 
“அடுத்து என்ன பண்ண போறோம்”  கேள்வியோடு அமுதன் சொல்வதில் உண்மையிருக்க மௌனமானாள் மலர்விழி. 
“ஹாஸ்பிடலுக்கு ரைடு வந்தா எந்த ஆதாரமும் சிக்காது… சோ எல்லா ஆதாரத்தையும் கமிஷ்னர் ஆபிசுக்கு அனுப்பியாச்சு…இந்நேரம் போலீஸ் கீதாராணிய தேடி போய் கிட்டு இருப்பாங்க ” பிரதீபன் சாதாரணமாக சொல்ல
 
“இல்ல அப்பா  தலையிட்டு நடவடிக்கை எடுக்காம தடுப்பாரு” மலர்விழி தலையசைத்து மறுக்க 
“அது எப்படி முடியும் உன்னைத்தான் யாதவ்மாதவ் கடத்திட்டானே!” அமுதன் சிரிக்க அவனை புரியாது பார்த்தாள் மலர்விழி. 
“ஒரு மாசமா உன் அப்பா, அத்த பேசுறத ஒட்டு கேக்குற வேலைய மட்டும் உன் கிட்ட விட்டுட்டு நாங்க பார்த்த வேல இது தான் பாதியை சொல்லிட்டோம் ஹைலைட்டு இனி தான்” பிரதீபன் தலையசைக்க அமுதன் தொடர்ந்தான். 
“நேத்து நைட்டே உன்ன இந்த இடத்துக்கு வர சொன்னோம் வரும் போது உன் மொபைலை வீட்டுலயே விட்டுட்டு வர சொன்னேனே ஏன்? இப்போ புரியுதா?” டிவில நியூஸ் வர கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடியே யாதவமாதவ் உன் அப்பாக்கு போன் பண்ணி கீதாவை காப்பாத்தினா? மலர் செத்துடுவானு சொன்னான். உங்கப்பாக்கு யார்மேல பாசம் அதிகம்னு இன்னைக்கு தெரிஞ்சிடும்”
“ஒருவேளை அவர் அத்தைய காப்பாத்திட்டார்னா…”
“மாட்டாரு… உங்கப்பாவோட வீக்கனஸ் என்னனு தெரியுமா? மனசும் சரி உடம்பும் சரி ஒருத்தியோடதான்னு நினைக்குறவர். அந்த குணம் தான் உங்க அம்மாவை டாச்சர் பண்ண வச்சது. உன் உயிருக்கு ஆபத்துனு சொல்லல… உன் கற்புக்கு ஆபத்துனு சொல்லி இருக்கேன்” பிரதீபன் நெற்றியை சொறிந்தவாறே சொல்ல 
“கற்பு பறி போனா பொண்ணுங்க தற்கொலை பண்ணிப்பாங்கல்ல” அமுதன் உதடு பிதுக்க  
மலர்விழி வியப்பின் உச்சத்துக்கே சென்றாள். தான் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க இவர்கள் இருவரும் அதிரடியாக இறங்கி காரியத்தை ஒரே மாதத்தில் முடித்து விட்டார்கள் 
“இதுல இன்னொரு சிக்கல் இருக்கு ப்ளஸ் அண்ட் மைனஸ் னு கூட சொல்லலாம்” பிரதீபன் அமுதனை ஏறிட 
அவள்  வளர்ந்த அமெரிக்காவில் கைதிகளை கூட அடிக்க மாட்டார்கள். அப்படி பக்குவப பட்ட அவள் மனது சில விஷயங்களை ஏனோ செய்ய முடியவில்லை என்பதை விட தோன்றவில்லை என்பதே உண்மை. அன்னையின் இறப்புக்காக தான் பழிவாங்க நினைத்தால் தன்னையே திசை திருப்பி விட்டு இருவருமாக இவ்வளவையும் செய்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதற்கு பதிலாக எரிச்சலையே கொடுத்தது. 
தியா பூஞ்சை மனத்துடையவள் அவள் வளர்ந்த சூழ்நிலையும், வளர்ந்த விதமும் இதுபோன்ற விஷயங்களை ஜீரணிக்க முடியாதென்று அவலறியாமையையே அவளை மூவரும் ஒதுக்கியது நியாபகத்தில் வர, நான் பெண் என்பதால் என்னை ஒதுக்கினார்களா? ஏன் என்னால் செய்ய முடியாதென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்களா என்னவேனாலும் சொல்லு எனும் விதமாக நின்றிருந்தாள் மலர்விழி
“உன்ன கடத்திட்டதாக நம்பாம உன் அப்பா உன் மொபைலுக்கு கால் பண்ணி நீ வீட்டுல இருக்கியா? இல்லையா?  என்று  செக்  பண்ணலாம் பதில் வரலைனா ஒரு வேல ஆள் அனுப்பி பார்ப்பார். அப்படி பார்க்க கூடாது” பிரதீபன் 
“ஏன்”
“உன் அத்த உனக்கு போன் பண்ணா நீ பேசணும் வீட்டுல தான் இருக்கேனு சொல்லணும்”  அமுதன் 
“ஏன்”
“உன் அப்பா உதவலனு காண்டுல  கீதாராணி சண்டை போடும் போது உன்ன கடத்திட்டதா மினிஸ்டர் சொன்னா அது பொய்னு சொல்ல நீ வீட்டுல இருந்ததாக சாட்ச்சி இருக்கணும். அப்படி மட்டும் நடந்தா அண்ணன் தங்கைக்குள்ள நினச்சயமா பிளவு வரும்” 
“அத்தைக்கு உதவாம எனக்கு உதவினாலும் பிளவு வருமே” மலர் சொல்ல 
“வரும் ஆனா…. உன் மேல இருக்கும் பாசம் கண்ண மறைக்கும்” 
“இப்போ என்ன பண்ணுறது?” 
“உனக்கு உன் அத்த நம்பர்ல இருந்து போன் வந்தா மட்டும் என் மொபைலுக்கு வரும் படி வச்சிருக்கேன். பார்க்கலாம் லக்கு நம்ம கைலயா? இல்ல அந்த பக்கமா னு” அமுதன் பெருமூச்சு விட பிரதீபன் அவன் தோளில் தட்டினான். 
  ப்ரதீபனின் எண்ணமெல்லாம் அமுதன் மலர்விழியை காதலிக்கிறான் அமுதவள்ளியின் மரணத்துக்கு பழிவாங்க அமுதன் உதவினால் மலர்விழி அவன் காதலை புரிந்து ஏற்றுக் கொள்வாள்  அதனாலயே அவளை கவர குருவுக்கே திட்டம் போட்டுக் கொடுத்தான். அமுதனும் அதன் படி செய்ய ஆபரேஷன் சக்ஸஸ் பெர்சன்ட் டெட் என்பது போல் திட்டம் எல்லாம் சரியாக நடந்தேற மலர்விழியின் மனதில் காதலுக்கு பதிலாக கோபத்தைத்தான் விதைத்தான்.
டிவியில் ஒளிபரப்பான செய்தியை பார்த்து  செல்வம் அடித்துப் பிடித்து கீதாராணியை எச்சரிக்கை செய்ய உடனே அண்ணனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்தாள். பல தடவை அழைத்தும் அது அனைத்து வைக்கப் பட்டிருக்கின்றது என்று குரல் வரவே எரிச்சலாக வீட்டுக்கு அழைக்க ரத்னவேல் வீட்டில் இல்லை என்ற தகவலே வந்தது. 
“இப்போ என்ன மேடம் செய்றது? சார் எதுக்கு இப்படி பண்ணுறாரு?” செல்வம் பதட்டமாக 
“என்ன பிரச்சினைனு தெரியலையே” இவ்வளவு நாளும் எது செய்தாலும் அண்ணனுடன் ஆலோசனை செய்து பழக்கப் பட்டவளுக்கு சட்டென்று இதை எவ்வாறு கையாளுவதென்று புரியவில்லை. 
அவள் குழம்பி நின்ற கணம் செல்வத்தின் அலைபேசி அடித்தது 
“மேடம் யாரோ அன்னவுன் நம்பர்ல இருந்து கூப்பிடுறாங்க” பேசவா வேண்டாமா என்று அநுமதி வேண்டி நிற்க 
“ஒருவேளை அண்ணனாக கூட இருக்கும் செல்வம் பேசு” பதட்டத்துடன் சைகைசெய்தாள் கீதாராணி. 
“ஹலோ யாருங்க பேசுறது….”
“யாதவமாதவ் பேசுறேன்” 
“மேடம் யாதவமாதவ் மேடம்” குரலை தாழ்த்தி சொல்ல 
“என்னானு கேளு” செய்கையாலையே சொல்ல 
“யோவ் செல்வம் ஸ்பீக்கர்ல போடுயா உன் மேடம் பேசுற மூட்ல இருப்பாங்களோ என்னவோ?” மறுமுனை சத்தமாக சிரிக்க செல்வம் அவ்வாறே செய்தான். 
“என்ன கீதாராணி வெளிநாட்டுக்கு ஓட திட்டமா? இல்ல சரணடைய போறீயா?”
“டேய் யாருடா நீ…. என் பிஸ்னஸ் எல்லாம் முடக்கிட்டு வர உன்ன கண்டு பிடிச்சேன் நீ செத்த….” கோபத்தில் கர்ஜித்தாள் 
“கிழிச்ச…. என்ன உன் அண்ணன் போன் அட்டென்ட் பண்ணலயா? எப்படி பண்ணுவாரு? என் கிட்ட ஐம்பது கோடி வாங்கினாரே”  
அவன் சொல்வதை கிரகித்தவள் “பொய் சொல்லாத என் அண்ணன் அப்படி செய்ய மாட்டாரு” 
‘ஹாஹாஹா உன் கிட்ட காசு இல்லனு போன வாரம் சொன்னியே!… அதான் கை செலவுக்கு இருக்கட்டும்னு ஒரு ஐம்பது கோடி அனுப்பி வச்சேன் வாயெல்லாம் பல்லா வாங்கிக் கொண்டாரே!”
கீதாராணி அவன் சொல்வது உண்மையா பொய்யா என்று யோசிக்கும் போதே “உனக்கு இன்னொரு உண்மையை சொல்லவா அவர் ஒரே பொண்ண கல்யாணம் பண்ண போறது நான் தான்” ப்ரதீபனை பார்த்து கண்ணடித்த அமுதன் அலைபேசியை துண்டித்தான்.
ரத்னவேல் சொல்வதை கீதாராணி நம்பிவிட்டால்  என்ன செய்வது? போட்ட எல்லா திட்டமும் வீண்  என்று குழம்பி நின்ற பொழுதுதான் இவ்வாறு கீதாராணியிடம் பேசி அவளை இன்னும் ஏற்றி விட எண்ணினான் அமுதன் இதில் மலர் எதிர்பார்க்காதது அவன் கடைசியில் சொன்னது. 
ப்ரதீபனு உள்ளுக்குள் சிரித்தவாறு “அப்படிப்போடு” சத்தமாக சொல்ல இருவரையும் நன்றாக முறைத்தாள் மலர்

Advertisement