Advertisement

அத்தியாயம் 2
உடன் பிறப்பாக பழகிய கயல்விழியிடம் மறுத்து பேச முடியாமல் தான் ப்ரதீபனை மிரட்டினாள் தியா. அவளின் ஒரே எதிர்பார்ப்பு பார்வதி பாட்டி என்றாகிப் போக அவர் ஊட்டியை விட்டு வர சம்மதித்தது அவளுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியையும் கொடுத்தது. அவளுடைய பூக்கள், வீடு, கடை எல்லாவற்றையும் விட்டு விட்டு தொலை தூரத்துக்கு செல்ல வேண்டும் எனும் போதே கலயாணம் கசந்தது. 
திவ்யாவின் பாடசாலை வாழ்க்கையிலும் சொல்லும் படி பெரிதாக நண்பர்கள் இல்லை. காதல் என்ற உணர்வை பெரிதாக அறிந்திருக்கவுமில்லை. கல்யாணம் என்றால் ஏதோ வயது வந்த உடன் வீட்டை விட்டு துரத்துவதாகவே எண்ணி இருந்தவளுக்கு ஒரு ஆணுடன் தான் இனி தன் வாழ்க்கை முழுக்க பயணிக்க வேண்டி இருக்கும் என்ற பதட்டம் மேலோங்கி சினிமாவில் வரும் சில முதலிரவு காட்ச்சிகளை பாத்திருந்தவளுக்கு ஒரு குழந்தையை சுமக்க ஆணே காரணம் என்ற அளவுக்கு அறிந்து வைத்திருந்தாள். 
பார்வதி பாட்டி பார்க்கும் டிவி சீரியல்களில் வரும் கொடுமைக்கார கணவன் மனைவியை அடிப்பதை பார்த்து திருமணத்தில் வெறுப்பும் மனதில் முளைத்திருக்க, அச்சத்தை வெளியே சொல்லாது ஒரே உறவான பாட்டியை விட்டு போனால் அவளுக்கு ஏதாவது ஆனாலும், பாட்டிக்கு ஏதாவது ஆனாலும் யாருமில்லை என்றிருக்க, விழி வந்த பின் அச்சமே மேலோங்கி இருந்தது. சொந்த பந்தம் அருகில் இருந்தால் எதுவும் நடந்து விடாது என்று எண்ணியே கல்யாணத்துக்கு நிபந்தனைகளோடு சம்மதித்திருந்தாள். பிரதீபன் அன்று பேசியவைகள் மறந்து போனாலும் அவன் பேசிய விதம் கண்ணுக்குள் இருக்க,  மூர்க்கத்தனமாக நடந்து கொள்வானோ என்ற அச்சம் மனதில் எழ இதயம் படபடக்க ஆரம்பித்தது. 
முதலிரவு அறைக்கு தியாவை அனுப்ப அவளை அலங்கரிக்க இருந்தது கயலும், அகல்யாவும் மாத்திரமே! அகல்யா அது, இது என்று மாற்றி மாற்றி கூந்தலை அலங்காரம் செய்ய தியாவின் தலை வலிக்க ஆரம்பித்தது. 
“ஒரு புடவைய கட்டி தலையை நானே பின்னிக்க மாட்டேனே நா. விடு அகல் தல வலிக்குது” அவளை சிசிடுசிடுத்தவாறே கூந்தலை பின்ன அகல்யாவின் முகம் சுருங்கியது. 
பெண்களுக்கு இயல்பிலேயே இருக்கும் பதட்டம் என்று உணர்ந்து கொண்ட கயல்விழி “அகல் நீ போய் பால் எடுத்துட்டு வா” என்று அவளை அனுப்பி வைத்தவள் “தியா நீ டென்ஷன் ஆகுற அளவுக்கு ஒன்னும் இல்ல. பதட்ட படாம இரு. அண்ணா ரொம்ப நல்லவர்” 
“ஆமா, ஆமா உன் அண்ணன் இல்ல  நீ அப்படித்தான் சர்ட்டிபிகேட் கொடுப்ப” சிரித்தவாறே தியா சொன்னாலும் மனதினில் “எல்லா ஆம்பளைங்களும் அண்ணனா நல்லவங்கதான். புருஷனா ரொம்ப கெட்டவங்க” சொல்லிக் கொண்டாள். 
பதின் வயது வகுப்புத் தோழிகள் ஆண் பெண் கூடல் குறித்து சாடை, மாடையாக பேசுவது காதில் விழுந்திருந்தாலும் அப்பேச்சுக்களில் ஆர்வம் காட்ட மாட்டாள். அகல்யாவோ சின்னப் பெண் கயலோ அவ்வாறு பேசுபவளுமல்ல. கேலி கிண்டல் இல்லாமலையே அலங்காரத்தை முடித்துக் கொண்டவள் வீட்டு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கிய பின் பால் செம்பை கையில் கொடுத்த கயல் தியாவை ப்ரதீபனின் அறைக்கு அனுப்பி வைத்தாள். 
இதயம் பந்தயக் குதிரை போல் வேகமெடுக்க, முகத்தில் முத்து, முத்தாக வியர்வை துளிகள் பூக்க மெல்ல அடியெடுத்து வைத்து மாடிப்படிகளில் ஏறலானாள்.    
பிரதீபன் வாங்கி இருந்த பங்களா ரிஷியின் பங்களாவோடு ஒரு தடுப்பு சுவரோடு இருந்தமையால் அந்த சுவரை இடித்து இரண்டு வீட்டையும் ஒன்றாக்கி எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போக வழி வகுத்தார்கள் நண்பர்கள் இருவரும். 
மாடியில் உள்ள ப்ரதீபனின் அறையில் முதலிரவுக்காக பூ அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அவனை நேரங்காலத்தோடு அறையினுள் அனுப்பி இருந்தான் ரிஷி. அமுதன் வழக்கம் போல் கிண்டல் செய்தாலும் ப்ரதீபனின் முகத்தில் புன்னகையில்லை.
அறையினுள் வந்தவனின் கண்களில் பூ அலங்காரம் கண்ணில் பட “இவ்வளவு நாளும் பெண்களை ஒதுக்கியும், ஒதுங்கியும் இருந்து விட்டேன். சட்டென்று ஒருத்தி மனைவியாக வாழ் நாள் முழுக்க என் கூடவே! உடனே ஏற்றுக் கொள்ள முடியுமா? படுக்கையை வேறு பகிர வேண்டி இருக்கும். அவள் மனதில் என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ! ஒதுங்கவும் முடியாமல் ஒதுக்கவும் முடியாமல் தடுமாறினான் பிரதீபன். 
பூவின் வாசம் போதாதென்று ரூம் ஸ்பிரேயை வேறு அடித்து இருக்க வாசனையாலையே ப்ரதீபனின் தலை வலிக்க ஆரம்பித்தது. ஒரு தம் அடித்தால் தேவலாம் என்று தோன்ற பால்கனி பக்கம் நகர்ந்தவன் சிகரெட்டை பற்றவைத்து ஊத ஆரம்பித்தான். 
எவ்வளவுதான் மெதுவாக ஏறினாலும் அறைவாசல் வந்து விட “உள்ளே செல்வோமா? இப்படியே கீழே போய் விடுவோமா? கீழே போனால் என்ன ஏது என்று கேப்பாங்களே!” ஏறெண்ணியவள் மெதுவாக கதவை திறந்து உள்ளே செல்ல அறையின் ஏசிக் காற்றும் ஜில்லென்று அவளின் மேனியை தழுவ, அறையின் நறுமணமும் மனதை சமன் படுத்த கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள் தியா. 
அறையில் பிரதீபன் இல்லாததே நிம்மதி பரவ, பால் செம்பையும் மேசை மீது வைத்தவள் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டாள்.
அவன் அறையில் தான் இருக்கிறான் என்று கயல் சொன்னது நியாபகம் வரவே! “எங்கையாவது மறைஞ்சு நின்னு நா என்ன பண்ணுறேன்னு நோட்டம் விடுறாரோ!” என்ற எண்ணம் தோன்ற சுற்றும் முற்றி பார்க்க பால்கனி கதவு வழியாக புகை வெளியேறுவது தெரிந்தது. 
நெற்றி சுருக்கி யோசித்தவாறு மெதுவாக நடந்து எட்டிப் பார்த்தவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது. அங்கே பிரதீபன் புகையை இழுத்து வானை நோக்கி ஸ்டைலாக ஊதிக் கொண்டிருந்தான். 
“என்ன காரியம் பண்ணி கிட்டு இருக்கீங்க” இடுப்பில் கை வைத்து கணவனை முறைத்தவாறே தியா.
திடுமென கேட்ட குரலில் திடுக்கிட்டவன் “அவளின் கோபம் புரியாமல் “என்ன என்று” பாத்திருக்க அவனின் கையில் இருந்த சிகரெட்டை பிடுங்கி தூர எறிந்தவள்
“எவ்வளவு நாளா இந்த பழக்கம்? விழி என்னமோ என் அண்ணன் நல்லவன், வல்லவன் னு பீத்திக்கிறா. கெட்ட பழக்கம் எல்லாம் கத்து வச்சிருக்கிறீங்களே! அவளுக்கு தெரியுமா? தெரியாதா? நீங்க சிகரெட் குடிச்சு கேன்சர் வந்து சாகுங்க, பக்கத்துல இருக்குற என்ன எதுக்கு கொல்லுறீங்க” படபடவென்று என்றும் போல் பேசினாள் தியா. 
“மனையாளோடு இயல்பாக பேச முடியுமா? முடியாதா? என்ற பதட்டத்தை போக்கவே புகைக்க ஆரம்பித்தவனுக்கு அதனாலயே அவள் மிரட்டிக் கொண்டிருக்க “நிறுத்தி ரொம்ப நாளாகுது. இன்னைக்கி கொஞ்சம் டென்ஷன் அதான்” அவனும் சாதாரணமாக பதிலளிக்க 
“தம் மட்டுமா? தண்ணியுமா?” புருவம் சுருக்கியவள் மிரட்டும் தொனியில் கேக்க அவளின் சுருங்கிய புருவங்களை நீவி விட பரபரத்த கைகை மறுகையால் பிடித்துக் கொண்டவன். 
“வருஷத்துக்கு ஒருக்கா” அது அவன் பிறந்த நாளன்று என்பது நியாபகத்தில் வரவே தலையை உலுக்க 
“அதென்ன கணக்கு வருஷத்துக்கு ஒருக்கா, நா டைலியும் குடிப்பேன்!” அவனை மிதப்பான பார்வை பார்க்க அவன் முகம் காட்டிய பாவனையில் “தண்ணிங்க தண்ணி ஜில்லுனு பிரிஜ்ஜில் இருக்குமே” என்று கலகலவென்று சிரிக்கலானாள். 
“அவள் டெய்லியும் குடிப்பேன்” என்றதில் வியப்பாக பார்த்தவன் அவள் சாதாரண தண்ணி என்றதும் அவன் உதடுகளிலும் புன்னகை மலர்ந்தது. 
“ஐயோ நா ஒருத்தி முதல்ல உள்ள வாங்க, பால் ஆறிட போகுது” அவள் பேச்சு முழுக்க மிரட்டும் தொனியே இருக்க, அது அவனுக்கு பிடித்திருந்தது. அவள் சொல்வதெல்லாம் செய்யும் மனநிலைக்கு தள்ளப்பட்டான் பிரதீபன்.
தியா படபடவென பேசும் ரகம் பிரதீபன் புகைப்பதை கண்டே அவளின் இயல்பான குணம் தலைத்தூக்க  அவனை மிரட்டிக் கொண்டிருக்க, இன்று தங்களது முதலிரவு என்பதையும் அவன் தன் கணவன் என்பதையும் ஒரு நொடி மறந்தாள். 
“இந்த பக்கம் நில்லுங்க” என்றவள் அவன் காலில் விழ
“ஏய் என்ன பண்ணுற. முதல்ல எழுந்திரு” அவளை தொட்டுத்தூக்க தயங்கியவாறே அகல முறைப்பட 
“நகராதீங்க, முதல்ல என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க” 
“சரி. சரி எழுந்திரு” என்றவன் “இனிமேல் இப்படி பண்ணாத” என்றவன் கட்டிலில் அமர
“பாட்டி சொன்னதை செய்யலைன்னா திட்டுவாங்க” என்றவாறே பாலை கிளாசில் ஊற்றிக் கொடுத்தவள்  டிரஸ்ஸிங் டேபிளின் மேல் சாய்ந்துக் கொள்ள
“நீ சாப்பிடு” கிளாஸை  கையில் வாங்காமல் 
“சாம்பிரதாயமாக. பாதி சாப்பிட்டுட்டு கொடுங்க” வாயை மூடி புன்னகைக்க அவளின் கன்னங்கள் உப்பி கன்னக்குழி தெளிவாக தெரிந்தது. அமைதியாக கிளாஸை கையில் வாங்கி அவளின் கன்னக்குழியை பார்த்தவாறே பருகியவன் 
“பாட்டி வேறென்ன சொன்னாங்க” சாதாரணமாகத்தான்  கேட்டான் அந்த ஒரு கேள்வியில் தான் எங்கு இருக்கின்றோம் என்று உணர பதில் சொல்ல நா தந்தியடிக்க அவனையே கண்விரித்து பார்த்து எச்சில் கூட்டி விழுங்கலானாள்
“என்னாச்சு இவளுக்கு, நல்லா தானே பேசி கிட்டு இருந்தா? என்ன கேட்டுட்டேன்னு இப்படி பாக்குறா?” பாதியருந்திய பால் கிளாஸை அவள் புறம் நீட்ட அதை வாங்காமல் 
“எனக்கு தூக்கம் வருது” தலை கவிழ்ந்தவாறே தியா 
எழுந்து அவளருகில் நின்றவாறே “சரி தூங்கு. முதல்ல இந்த பால சாப்பிடு. அப்பொறம்  சாத்திர சம்பிரதாயத்தை மீறிட்டதா பாட்டி திட்ட போறாங்க”  என்றவனுக்கு அவளின் செய்கைகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் தர சிரிப்பு எட்டி பார்த்தது.  
பாலை மட மடவென அருந்தி முடித்தவள் எங்கே தூங்குவதென்று சுற்றி, முற்றி பார்க்க 
“என்ன தேடுற?” 
“எங்க தூங்குறதென்று…”  
“நீ கட்டில்ல படுத்துக்க எனக்கு கொஞ்சம் வேல இருக்கு” என்றவன் அறையோடு ஒட்டியிருந்த ஆபீஸ் அறையினுள் நுழைந்துக் கொண்டான்.   
ஆபீஸ் அறையினுள் நுழைந்து கதவை சாத்தி விட்டு அதன் மேலே சாய்ந்த  ப்ரதீபனுக்கு எதிலிருந்தோ தப்பி வந்த உணர்வுதான். என்றுமே இல்லாதவாறு இதயத்தில் தோன்றும் உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாமல் நெஞ்சை நீவி விட்டவன் இப்போதைக்கு தூக்கம் வராது என்று புரியவே உடற்பயிற்சி அறையினுள் நுழைந்து தன்னை சமன் படுத்தலானான். 
அவ்வளவு நேரமும் ப்ரதீபனின் அருகாமையில் அவஸ்தையாக உணர்ந்த தியா அவன் தலை மறந்ததும் மூச்சை நன்றாக இழுத்து விட்டு கட்டிலில் விழ அதற்க்கு மேல் சிந்திக்க முடியாமல் தூங்கியும் போனாள்.  
இங்கே ரிஷியின் அறையில் ரிஷி ஸ்ரீராமுக்கு கதை சொல்லியவாறே தூங்க வைத்துக்கொண்டிருக்க, அறையினுள் நுழைந்தாள் கயல். 
“இன்னும் தூங்கலையா?” 
“கத சொன்னா ஆயிரம் கேள்வி கேக்குறான். எங்க தூங்க” நொந்து போய் ரிஷி.
தனக்குள் நகைத்தவள்  அறையின் வெளிச்சத்தை குறைத்து விட்டு ஸ்ரீராமை அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுக்க அடுத்த கணம் கண்ணயர்ந்திருந்தான் அவன். 
மனைவியை அணைத்துக் கொண்டு “நா தூங்க வச்சா மட்டும் தூங்கலை நீ வந்த உடனே தூங்கிட்டான்” 
“லைட்ட போட்டு வச்சிருந்தா தூங்க மாட்டான் கேள்வி தான் கேப்பான். சரி தூங்குங்க. ரொம்ப டயடா இருக்கு” என்றவள் கண்மூடிக் கொள்ள 
“எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு” என்றவன் அவளின் கால் மாட்டில் அமர்ந்து கால்களை பிடித்து விட  
“என்னங்க பண்ணுறீங்க?” என்றவாறே எழுந்தமர்ந்து கணவனை  தடுக்கலானாள் விழி. 
அந்த இருட்டிலும் அவளின் மெட்டி பளபளக்க “உன் காலுக்கு மெட்டி அழகா இருக்கில்ல” என்று தடவி கொடுக்க கயலின் மேனி சிலிர்த்தது. 
அன்று நடந்த தாலி பெருக்கும் நிகழிச்சியின் போது தாலியை கட்டி முடித்தவன் குங்குமத்தை வகுட்டில் விரல் கொண்டு வைக்க என்றுமே இல்லாத நிம்மதியும், சந்தோசம் நெஞ்சம் நிறைக்க அவனுக்கும் சிலிர்த்தது. 
உடனே எழுந்து மனைவியை தூக்க இளசுகள் எல்லாம் கோரஸாக ஓ.. போட எதையுமே கண்டு  கொள்ளாமல் மனைவியை கதிரையில் அமர்த்தி மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் பாதத்தை தனது தொடையின் மீது வைத்து சட்டை பாக்கட்டி வைத்திருந்த மெட்டியை எடுத்து அணிவித்திருந்தான். 
அவனின் இச்செயலை கண்டு முதலில்  திகைத்த கயல் உள்ளம் குளிர காதலாக கணவனையே பாத்திருக்க, அடுத்து அவன் காலை முத்த மிட வெக்கிச் சிவந்தாள். 
“அண்ணா அண்ணிக்கு மெட்டியெல்லாம் வாங்கி இருக்கீங்க. இந்த தங்கச்சிக்கு ஒண்ணுமில்லையா?” அகல்யா பொய்யாய் முறைக்க 
“உனக்கில்லாமலையா?” என்றவன் ஒரு ஜோடி கொலுசை கையில் கொடுத்து  “நானே போட்டும் விடணுமா?” கண்ணடித்தான். 
“அன்னைக்கி நீங்க எல்லாருக்கும் கிப்ட் கொடுத்தீங்களே! சூப்பரா இருந்திச்சு. எல்லார் முகத்திலையும் அப்படி ஒரு சந்தோசம்” கயல் அன்றைய நாளின் நினைவுகளில் முகம் மலர 
“எத்துணை கிப்ட் கொடுத்தாலும் அகல்யாவுக்கு கொடுத்த கிப்ட் தான் எனக்கு பிரயோஜனமா இருக்கு” என்றவன் மனைவியை அணைத்துக்கொள்ள அவளோ அவனை புரியாது பாத்திருந்தாள்.
“என்ன புரியலையா? அவ சொல்லாம கொள்ளாம ஆஜராக்குறா. என் பொண்டாட்டிய ரொமான்ஸ் பண்ணவே முடியல இப்போ கொலுசு போட்டிருக்கால்ல அவ வரும் போதே நான் உஷாராகிடுவேனே” 
“தேறிட்டீங்க”  என்றவள் கணவனை கன்னத்தில் முத்தம் வைக்க 
“இதெல்லாம் பத்தாது வார் பேபி” என்றவன் அதிகாரத்தை தன் வசமாகிக் கொண்டான்.  
வெகுநேரம் கழித்து உடற்பயிர்ச்சி அறையில் இருந்து வெளியே வந்த பிரதீபன் அறையினுள் நுழைய தியா நன்றாக தூங்கி இருந்தாள். ஆபரணங்களை கூட கலையாமல் அவள் படுத்திருப்பது அவனுக்கே அசௌகரியமாக இருந்தது. “அதுக்காக கழற்றி விடவா முடியும்” என்று மனதில் தோன்ற தலையை உலுக்கிக் கொண்டான். 
எங்கே தூங்குவது என்ற குழப்பமெல்லாம் அவனுக்கு இல்லை. கயலுக்காக தான் கல்யாணம் பண்ணினது. அது மறுக்க முடியாத உண்மை. அதற்க்காக கட்டின மனைவியை ஒதுக்கி வைப்பதினாலையோ, ஒதுங்கி போவதினாலையோ! பிரச்சினைக்கு தீர்வாகாது.  கடைசி வரைக்கும் தியா கூட வாழ்ந்தாகணும். 
கயல், திலகா என்று அமைதியான பெண்களோடு இருந்து அகல்யா போல் ஒரு வாலோடு ஒன்றிவிட்ட பின்  தியாவை ஏற்றுக் கொள்ளும் நல்ல மனநிலையில் இருந்தான். அகல்யாவும் அவனை “அண்ணா” என்றே அழைக்க 
“கயலுக்கு தான் டி அவன் அண்ணன் உனக்கு மாமா இல்ல அத்தான்னு கூப்டு” சிவரஞ்சனி கடிய 
“அண்ணா தான் வாயில வருது நா என்ன பண்ண” அகல்யாவும் அன்னையை முறைத்தவாறே சொல்ல 
‘அவளுக்கு எப்படி கூப்பிட பிடிக்குமோ அப்படியே கூப்பிடட்டும் அத்த” பிரதீபன் புன்னகைத்தான். 
அமுதனோடு அவள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போக ரிஷியும் அவர்களோடு சேர பிரதீபன் கடைசியாகத்தான் சேர்ந்தான். 
அகல்யாவை புரிந்து கொண்டவனுக்கு தியாவை ஓரளவுக்கு புரிந்த கொள்ள முடிந்தது. அதனாலயே பார்வதி பாட்டியை அவர்களோடு தங்குமாறு கேட்டுக் கொண்டான். 
கட்டிலில் ஒரு ஓரத்தில் கால்களை குறுக்கி தூங்கும் மனைவியை பார்த்தவன் புன்னகைத்தவாறே மறுபுறம் வந்து முதுகுக்கு ஒரு தலகணையை கொடுத்து அமர்ந்து  லப்டப்பை ஒன் பண்ணில் நெட்டில் புது மனைவியை பற்றி தேடலானான். 
“இனி இதுதான் உன் வாழ்க்கை அவள் உன் மனைவி. இந்த அறை அவளுக்கும் சொந்தமானது. இன்றிலுருந்து உன் துயரம் துடைக்க போகும் அவளை அறிய முற்படு, புரிந்து நடந்து கொள்ள முற்படு. அன்பாக பேச கற்றுக்கொள். அவள் செய்யும் செயல்களை கவனி. அவள் செய்யும் பிழைகளை மன்னித்து மறந்துட்டு. மொத்தமாக அவளை காதல் செய்” 
“ஒன்னும் புரியல” என்றவன் அதை அனைத்து விட்டு உறங்கலானான்.  
 

Advertisement