Advertisement

அத்தியாயம் 16
மலர்விழி வந்ததிலிருந்து அவளை முறைத்துக் கொண்டிருந்த அமுதனோ அவள் ரிஷியை கட்டிப் பிடிக்கவும் கோபம் தலைக்கேற அவ்விடத்தை விட்டு வெளியே செல்லவும் முடியாமல் நிற்க, தந்தையின் நெஞ்சின் மீது சாய்ந்து கதறுபவளை ஆறுதல் படுத்த உள்மனம் கட்டளையிட்டாலும் அவள் மீதான கோபமோ! “எல்லாம் நடிப்பு” என்று சொல்ல வைக்க ஒரு ஓரமாக இருந்து வேடிக்கை பார்க்கலானான். 
யாரென்றே தெரியாவிட்டாலும் “மாமா” என்று சொல்லி அழும்  பெண்ணை எவ்வாறு தடுப்பது? புரியாது சரவணகுமரன் இருக்க சிவரஞ்சனியோ மலர்விழியை தேற்றலானாள். 
சிவரஞ்சினியை கண்டு அமுதன் சொன்ன அம்மா என்று புரிந்துக் கொண்டவள் இருவரின் காலிலும் விழ, அவளை ஆசிர்வாதம் பண்ணியவாறே ரிஷியிடம் யார் என்று கண்களாளேயே வினவினார் சரவணகுமரன். 
ரத்னவேலின் மகள் என்றால் இந்த சூழ்நிலை இவ்வாறே இருக்குமோ! என்ற யோசனையிலையே! அவருக்கு என்ன பதில் சொல்வதென்று ரிஷி இருக்க, அவனுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்காது மலர்விழியே! 
“நான் அமுதவல்லி பொண்ணு மாமா. உங்க காலேஜ் மேட்”  என்று சொல்ல 
“நீ அமுதவல்லி பொண்ணா… அப்படியே அம்மா மாதிரி இருக்க” சொன்னது சிவரஞ்சனி. 
அன்னையை போல் என்றதும் மலர்விழியின் முகம் பூரிப்பில் மிளிர, சிவரஞ்சனிக்கு அன்னையை தெரியுமா என்று ஏறிட்டாள் மலர்.
“என்னம்மா அப்படி பாக்குற நானும் அந்த காலேஜ் தான். இவங்களுக்கு ஜூனியர்” என்பதோடு நிறுத்திக் கொள்ள அமுதவல்லி கல்யாணம் பண்ணது ரத்னவேலை தானே என்று சந்தேகமாக சரவணகுமரன் யோசனையில் விழ 
“அப்பா என்னயெல்லாம் அறிமுகப் படுத்த மாட்டீங்களா?” என்றவாறு அவரின் தோளை பிடித்து இழுத்து சிந்தனையை  தடுத்தாள் அகல்யா. 
தியாவும், பார்வதி பாட்டியும் ஒரு புறம் இருக்க, மறு புறம் அமுதன் இருந்து இங்கே நடப்பவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அறிமுகப் படலத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அகல்யாவின் கண்களில் பாட்டியும், பேத்தியும் விழவே அவர்கள் பேசியாவையும் நியாபகத்தில் வந்து ப்ரதீபனின் காதில் அதை போட்டு விட ஓரக்கண்ணால் மனைவியை பார்த்தவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
ஸ்ரீராம் கயல்விழியின் புடவை முந்தியை இழுத்தவாறே “தூக்கு” எனும் விதமாக கையை நீட்ட குழந்தையை தூக்கியவள் வேண்டுமென்றே ரிஷியிடம் திணிக்காத குறையாக கொடுத்து 
“உங்க பையன கொஞ்சம் பார்த்துக்கோங்க சாப்பாடு ரெடியானு பார்த்து விட்டு வரேன்” என்றவள் நகராமல் அங்கேயே இருக்க 
மனைவியின் பொறாமை கலந்த கோபத்தை கண்டு கொண்டவன் உள்ளுக்குள் சிரித்தவாறே மனைவியின் தோள் மேல் கைபோட்டு தன்பக்கம் இழுத்து 
“மலர் மீட் மை டார்லிங் வைப் கயல்விழி” என்று மலருக்கு அறிமுகப் படுத்த 
கயல்விழியை மேலிருந்து கீழாக பார்த்தவள் “டேய் உனக்கு போய் இப்படி தேவதை மாதிரி பொண்டாட்டியா?  என்ன இருந்தாலும் என் லெவலுக்கு இல்ல” என்று கண்சிமிட்டி சிரிக்க மலர் தன்னை புகழ்ந்தாளா? இகழ்ந்தாளா?  என்ற குழப்பத்திலையே அவளை பார்த்திருந்தாள் கயல்விழி. 
“சரி, சரி கேக் வெட்டலாம்” அகல்யா கூச்சலிட அனைவரும் மேடையேற ரிஷி ஸ்ரீராமின் கையில் சிறு கத்தியை கொடுத்து கையை இறுக பிடித்துக் கொள்ள பிறந்தநாள் வாழ்த்துப் பாடலோடு கேக் வெட்டப்பட்டது. 
தனது பிஞ்சு விரல்களால் கேக்கை பிடித்து அன்னைக்கும், தந்தைக்கும் ஊட்டிய ஸ்ரீராம் அனைவருக்கும் ஊட்ட, அகல்யா அதை அழகாக புகைப்படமாக்கிக் கொண்டிருந்தாள். 
“டேய் அமுதா என்னடா? அங்கேயே நிக்குற? இங்க வா” ரிஷி அழைக்க 
அவனை முறைத்தவாறே “அதான் புதுசா உறவுன்னு சொல்லிக் கிட்டு வந்திருக்காளே! அவளையே கொஞ்சு” கடுப்பாக சொல்ல 
“டேய்.. நீ என் தம்பிடா… அவ என் மாமா பொண்ணு” என்றவாறே  அமுதனின் கையை பிடித்து மேடைக்கு இழுக்க இவர்களின் விளையாட்டை கண்டு சிரித்தவாறே இருந்த சரவணகுமரன் மாமா பொண்ணு என்றதில் மலர்விழி ரத்னவேலின் மகள் என்று அடையாளம் கண்டு கொண்டார்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையானதை பரிமாறிக் கொண்டு அமர்ந்து கதை பேசியவாறே உணவை உன்ன தியா  மட்டும் தனியாக ஸ்ரீராமுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். 
திலகாவும், பார்வதி பாட்டியும் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, ரிஷி, கயல் அகல்யா, மலர்விழி, பிரதீபன்  ஒரு புறமும், சிவரஞ்சனி சரவணகுமரன் ஒரு புறமும் அமுதன் தனியாகவும் அமர்ந்திருந்தனர்.
மனைவியை தேடிய ப்ரதீபனின் கண்கள் தியா தனியாக அமர்ந்திருக்கவும், அவளை சீண்டவென்றே அவளருகில் போய் அமர்ந்தவன் 
“என்னடா… ஸ்ரீ குட்டி தனியா இருக்க?  ரொம்ப பசிக்குது எனக்கும் கொஞ்சம் புவ்வா தரியா?” மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறே சொல்ல தனது பிஞ்சு விரலால் ப்ரதீபனுக்கு ஊட்டலானான் அவன். 
கணவன் வந்து அருகில் அமர்வான் என்று எதிர் பார்க்காத தியாவோ! உள்ளம் தடதடக்க, முகத்தில் பூக்கும் வியர்வையை துடைக்க முடியாமல் கைகளும் நடுங்க அமர்ந்திருக்க,  அவன் ஸ்ரீராமிடம் பேசவும், அவனுக்காகத்தான் வந்திருப்பான் என்று புரிந்துக் கொண்டு கணவனை அருகில் காண்பதே பெரிய விஷயம். ஏதாவது பேசப் போய் எழுந்து சென்று விடுவானோ என்று அமைதியாக அவனையே பார்த்திருந்தாள்.
குழந்தை கொடுத்ததை வாயினுள் போட்டவாறே “ஐயோ இது பத்துமா எனக்கு. கொஞ்சமா இருக்கே! இந்த சின்ன கையால தந்தா நா எப்போ சாப்பிட்டு முடிக்கிறது? எப்போ என் பசி அடங்குறது” வயிற்றை தடவியவாறே சொல்ல
 ஸ்ரீராமோ தியாவின் கையை பிடித்து ப்ரதீபனுக்கு ஊட்டி விட முனைய, குழந்தையின் செயலால் என்ன சொல்ல போறானோ என்று கணவனை திகைத்து  விழிக்கலானாள். 
மனைவியை பாராது ஸ்ரீராம் நீட்டிக்க கொண்டிருக்கும் கையை பிடித்தவன் வாயினுள் திணித்து உணவை வேகமாக முழுங்கி விட்டு அவளின் ஒவ்வொரு விரலையும் பிடித்து மெதுவாக சூப்பியவாறே விடுவிக்க அமுதம் உண்டதை போல் திருப்த்தியளித்தது அவன் முகம் என்றால், அவனை அதிர்ச்சியாக பார்த்திருந்தாள் தியா.
தியா கயல்விழியோடு பேசும் சீசீடிவி காட்ச்சிகளை பார்த்த பின் என்ன பேசினார்கள் என்று அறியாவிட்டாலும், தன்னை அவள் புரிந்துக் கொண்டாள் என்ற நிம்மதியோடு மலர்விழியோடு வந்தவனை சந்தேகப் படாமல் பொறாமை கொண்டு பேசியதும், அவளின் கோபப்ப பார்வையும் அவள் உள்ளத்தை அவனுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்க, இவ்வளவு நாட்களாக தன்னை பாடு படுத்தியவளே தன்னிடம் வந்து பேசட்டும் என்று காத்திருக்கலானான். 
ஆனால் அவளோ அவன் அருகில் வராது இருக்க “இவ சரிப்பட்டு வர மாட்டா எதுவானாலும் நாமளே இறங்கி அடிக்க வேண்டியது தான்” என்று சந்தர்ப்பம் பார்த்திருந்தவன் தியா ஸ்ரீராமோடு தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டு அங்கே விரைந்தான். 
மலர்விழியை பற்றி ரிஷியிடம் விசாரிப்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் பிரதீபன் இருக்க, மலர்விழியின் அலைபேசி வித்தியாசமான ஒலி எழுப்பவே திரையை நோக்க, கீதாராணி காலிங் டு ரத்னவேல் என்று வரவும் குழப்பமாகவே இயக்கி காதில் வைக்க, கீதாராணியும், மினிஸ்டர் ரத்னவேலும் பேசுவது தெளிவாக கேட்டது. அலைபேசியை அனைத்தவனுக்கு புரிந்தது அவர்களின் பேச்சை மலர்விழி ஒட்டுக் கேட்கின்றாள்  என்பதே! 
அவள் உண்மையாகவே அவர்களை பழிவாங்க துடிக்கின்றாளா? ஏன் என்ற காரணம் புரியாவிட்டாலும், அவள் பொய் கூறவில்லையென்று புரிய, அதை அவளிடமே கேட்டு தெளிவு பெற வேண்டும் என்று நினைக்க, குளியலறையிலிருந்து ஓடி வந்தவள் ப்ரதீபனின் கையிலிருந்த அலைபேசியை பிடுங்காத குறையாக எடுக்க, அவன் கேட்டதை கூறியவன் 
“அப்போ நீ பொய் சொல்லல, உன் அப்பாவை பழிவாங்க என்ன காரணம் னு நான் கேக்க மாட்டேன். அது உன் பெர்சனல். ஆனால் ரிஷியை காதலிச்சிட்டு அமுதனை எதுக்கு நெருங்க பார்த்த?” 
“லவ்வா? ரிஷியை நான் சின்ன வயசுல பார்த்ததோடு சரி லவ் எல்லாம் இல்ல. ரிஷி எவ்வளவு கொடுமைகளை அனுபவிச்சு இருப்பான்னு உனக்கு தெரியுமா? எல்லாத்தையும் என் கண்ணால பார்த்தவ நான். பெத்த பையன் மேல அப்படி என்ன வெறுப்பு?  சரவணன் மாமா மேல இருக்கும் வன்மம் தான் பத்து மாசம் சுமந்து பெத்த பையனையே! கொடும படுத்த வைச்சதுன்னா? என்ன பொம்பள அவ? அவளையெல்லாம் அத்தனு செல்லம் கொஞ்ச வேண்டிய கட்டாயத்துல இருக்குறத நினைக்கிறப்போ அருவருப்பா இருக்கு” கோபம் அனல் கக்க  மலர்விழி 
“அதுக்கு எதுக்கு உன் அப்பாவை பழிவாங்கணும் னு நினைக்கிற கீதாராணிய மட்டும்…” ப்ரதீபனின் பேச்சில் குறுக்கிட்டவள் 
“என் அப்பாவை பழிவாங்க எனக்கு வலுவான காரணம் இருக்கு. அவர் ரிஷிக்கு பண்ணதுக்கு அவனோட சேர்ந்து அவங்க முகத்துல கரிய பூசணும் னு தான் நினச்சேன். ஆனா அதுக்குள்ளே அவன் செத்துட்டான் என்றதும் என் வன்மம் கூடிருச்சு. இங்க அமுதனை பார்த்ததும் அவன் கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி உதவி கேக்க தோணல அதான் காதல் கல்யாணம் னு போனேன். ஒரு கட்டத்துல இது என்னோட யுத்தம் நான் தான் போராடனும், நான் மட்டும் தான் களமிறங்கணும், சரவணன் மாமா குடும்பம் எங்கயோ நிம்மதியா இருக்காங்க அது போதும், அமுதனை இதுல கூட்டு சேர்க்க வேணாம் னு தோணிருச்சு அதான் ஒதுங்கிப் போனேன். போனவளை கடத்திக் கிட்டு வந்து கொலை பண்ண பாத்திருக்கீறிங்க” கழுத்தை தடவியவாறே சொல்ல 
“உன் அப்பாவையும், அத்தையையும் கொல்லனும் னு நான் நினச்சியிருந்தா எப்பவோ செஞ்சிருப்பேன். சரவணன் மாமா ஒதுங்கிப் போ னு கேட்டுக் கிட்டதால அமைதியா இருக்கேன்” 
“சாவா? அதெல்லாம் அவங்களுக்கு சாதாரண தண்டனை காலம் பூரா துடிக்கிற மாதிரி தண்டனை கொடுக்கணும். ரிஷியை வேற கொன்னுட்டாங்க. இந்த ரெண்டு வருசமா அவங்க பேசுறத ஒட்டுக் கேட்டதுல சரவணன் மாமாவை தேடாம இருப்பாங்கன்னு நினைக்கிறியா? ரிஷி அவங்க கண் முன் வந்ததும் அவனை தீர்த்துக் கட்டிட்டு அவனை பத்தி விசாரிச்சு இருக்காங்க, மும்பை வரைக்கும் போய் விசாரிச்சும் சரவணன் மாமாவை கண்டு பிடிக்க முடியல.  அவங்க குன்னூரில் இருக்குறத கண்டு பிடிச்சப்போ நான் தான் அந்த டிடெக்டிவ் கிட்ட இவங்க நோக்கத்தை சொல்லி உண்மையை சொல்ல வேணாம் னு கேட்டுக் கிட்டேன். அவரும் நான் சொன்ன படி மாமா செத்துட்டதாக சொல்ல நம்பி அமைதியாக இருக்காங்க. இத்துணை வருசமா அவங்கள தேடாம  இருந்ததற்கு என்ன காரணம் னு தெரியல. அவங்க ரெண்டு பேரும் பண்ணதுக்கு தக்க தண்டனையை கொடுக்காம ஓயமாட்டேன். கூடவே இருந்து குழி பறிக்க நேரம் பார்த்துக் கிட்டு இருக்கேன்” 
“உனக்கு என் உதவி…” 
“வேணாம்… ரிஷி இறந்தப்போவே உன்ன பத்தியும் விசாரிச்சிருப்பாங்க. உனக்கும் இந்த குடும்பத்துக்கும் சம்பந்தமில்லைனதும் விட்டு இருப்பாங்க, ஏதாவது ஒரு இடத்துல உன்ன கண்டு கொண்டா ஆபத்து.” 
“அந்த ஆபத்து உனக்கிருக்காதா?” 
வெறுமையாக சிரித்தவள் “அது என்னமோ தெரியல என் மேல அப்படி பாசத்தை பொழியிறாங்க. என் மேல சந்தேகம் வராதபடி தான் நான் நடந்துக்கிறேன்.  ரிஷியை காப்பாத்த முடியலைன்னு மனசு உருத்திக் கிட்டே இருக்கு” கவலையான குரலில் சொல்ல 
“உனக்கு யாருமில்லன்னு ஏன் நினைக்கிற? ரெண்டு நாள்ல நான் மும்பை போறேன். உன் வேலையெல்லாம் முடிச்சுக்கிட்டு நீயும் என் கூட வர” 
“அங்க அமுதன் இருப்பான் ருத்ரதாண்டவம் ஆடப் போறான் நான் வரல” முறிக்கிக் கொள்ள 
“உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு. அண்ட் அமுதன் உன் மேல கோபப் பட்டத்துக்கு காரணம் அவன் உன்ன விரும்ப ஆரம்பிச்சுட்டான். நீ ரிஷியை காதலிக்கிறதாக நினைச்சிதான் காண்டாகிட்டான்” 
“யாரு அவனா? என்ன பொண்ணாவே மதிக்க மாட்டான். அவனாவது என்ன லவ் பண்ணுறதாவது. சும்மா காமடி பண்ணாத” 
“ஓகே ரெண்டு நாள்ல ஏர்போர்ட்ல சந்திக்கலாம்” என்றவன் நேராக தனதறைக்கு சென்று மனைவியை தரிசனம் பண்ண ஆரம்பித்தான். 
அப்பொழுதுதான்  தியா அவனுடைய புகைப்படத்தை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருப்பதை கவனித்தான். அவள் அழுது கரைவதை சீசீடிவியில் பார்த்திருக்கின்றான் அப்பொழுதெல்லாம் அவன் நெஞ்சமும் கணக்கும் ஆனால் இன்று மனைவி தன்னை தேடுகிறாள் என்று புரிய  மனம் நிறைய சந்தோசம் மட்டும் தான் இருந்தது. 
உடனே அவளை பார்க்க வேண்டும் என்று மனம் அடித்தாலும், எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு மலர்விழியோடு வந்திறங்கியவனை விழுங்கும் பார்வை பார்த்து வைத்தாலே ஒழிய அவனிடம் வந்து பேசாதது அவள் தன்னையும் மலர்விழியையும் சந்தேகப் படுகிறாளா என்று நினைக்கும் பொழுது அகல்யா சொன்னதில் அது கோபமல்ல பொறாமை என்று புரிய அவளை சீண்டவென கிளம்பியிருந்தான். 
தியாவிற்கு வார்த்தை வரவில்லை. பிரதீபன் கையை விட்டும் கையை கீழே  இறக்காது அப்படியே நீட்டிக்க கொண்டு அவனையே பார்த்திருந்தாள். என் கணவனா இது? என்ற ஆச்சரியப்பார்வை. என் கையால் சாப்பிட்டானா? அவளால் நம்ப முடியவில்லை. ஒரு கணம் இது கனவோ என்று கூட தோன்றியது. என்ன ஒரு அழகான கனவு. இதை களைய விடக் கூடாது ஒரு மனம் ஏங்க, இல்ல இது உண்மை என்றது மறு மனம். 
கணவன் என்னை மன்னித்து விட்டானா? ஏற்றுக் கொண்டானா? ஆயிரம் கேள்விகள் மனதில் தோன்ற கண்கள் மட்டும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ! ஸ்ரீராமை கொஞ்சிக் கொண்டிருந்தான். 
“தியா அடங்கு அவன் உன்னை மன்னிக்கவுமில்லை. நீ சொன்னதையெல்லாம் மறக்கவுமில்லை. ஸ்ரீராமுக்காக வந்தான் போய்விடுவான்” உள்மனம் கதற 
கையில் உணவை அள்ளியவள் “வாயை திறங்க இதை யாரு சாப்பிடுவார்களாம்? நான் வேற கைய நீட்டிக்கிட்டே நிக்குறேன். கை வேற வலிக்குது” பழையபடி அதட்டல் மகாராணியாக குரல் எழுப்ப 
கை வலிக்குது என்று சொல்லவும் உள்ளம் பதறினாலும் அவள் பொய் சொல்கிறாள் என்று கண்டு கொண்டான் பிரதீபன்.
“அதானே பார்த்தேன் அதட்டல் தியா ஈஸ் பேக். எங்கடா அழுது சீன போடுவாளோனு பயந்துட்டேன். நல்ல வேல” உள்ளுக்குள் மனைவியை ரசித்தாலும் அவள் தன்னிடம் பேச வேண்டியதை பேசாமல் இருக்கும் கோபம் நொடியில் தோன்ற முகத்தில் கடுமையை கொண்டு வந்தவன் அவள் கையை பிடித்தே சாப்பிட 
“இவரு முறைச்சிகிட்டே தான் பொறந்திருப்பாரு போல. மொறச்சி பார்த்தாலும் அழகாத்தான் இருக்காரு. அதெப்பெடி ஐயா என்ன பார்க்கவும் மாட்டாராம், பேசவும் மாட்டாராம். ஆனா என் கையால சாப்பிடுவாராம். கோபப்ப பட்டு கிட்டே ரோமன்ஸ் பண்ண இவரு கிட்ட கிளாஸ் எடுக்கணும்” மனதுக்குள் கொஞ்சிக் கொண்டவள் இரவில் கணவனோடு மனம் விட்டு பேச வேண்டும் என்ற முடிவில் இருந்தாள். 
இவர்களை பார்த்திருந்த பார்வதி பாட்டியின் நெஞ்சில் இருந்த சஞ்சலம் நீங்கியது.
“என்னங்க எதுக்கு இப்போ அந்த புள்ளய அப்படி வெறிச்சி பார்த்துக் கொண்டு நிக்குறீங்க?” உணவுத் தட்டோடு கணவனின் அருகில் வந்தமர்ந்த சிவரஞ்சனி சரவணகுமரன் மலர்விழியை ஆராய்ச்சி பார்வை பார்ப்பதைக் கண்டு புரியாது கேக்க 
“அவ அமுதவல்லி பொண்ணு மட்டுமல்ல மினிஸ்டர் ரத்னவேலின் பொண்ணும் கூட” மலர்விழியின் மேல் வைத்த பார்வையை அகற்றாது சொல்ல
“என்னங்க சொல்லுறீங்க? அமுதவல்லி உங்க நண்பன் சங்கரனை தானே காதலிச்சாங்க, அப்போ எப்படி… ” கேள்வியாக கணவனை ஏறிட
“ரத்னவேலின் மனைவியா அமுதவ பார்த்தப்போ எனக்கும் அதிர்ச்சிதான். பணத்துக்காக தான் அவ ரத்னவேலு கல்யாணம் பண்ணி இருப்பான்னு முடிவு பண்ணி அவளை வெறுப்பா பார்த்துட்டு வந்துட்டேன்.
கீதாவால நான் அனுபவிச்ச, அவமானமும், மனவேதனையும் என்ன வேற எதையையும் யோசிக்க விடல. உன்ன கல்யாணம் பண்ண பிறகு தான் காலேஜ் நண்பர்களையே சந்திக்க முடிஞ்சது. அப்பொழுதுதான் சங்கரனை பற்றி விசாரிச்சேன். அவன் காணாமல் போய்ட்டான்னு சொன்னாங்க. இந்த பொண்ணோட வயச பார்த்த சங்கரன் காணாம போன பிறகுதான் அமுதா ரத்னவேலு கல்யாணம் பண்ணி இருக்கணும் னு தோணுது. அன்னைக்கி கீதா மேல இருந்த வெறுப்புல அமுதா கூட சரியா பேசாம வந்துட்டதால அவ வாழ்க்கைல என்ன நடந்தது னு தெரியல. மலர் வேற ரத்னவேல் பொண்ணு னு சொல்லாம, அமுதவல்லி பொண்ணு னு சொல்லுறத பார்த்தா எதோ விஷயமிருக்கு னு தோணுது”
“அப்படி எதுவும் இருக்காதுங்க, ரத்னவேல் பொண்ணு னு சொன்னா… எங்க நாம அவளை ஏத்துக்க மாட்டோம்னு சொல்லாம இருந்திருப்பாளாக்கும். நீங்க சும்மா மனச போட்டு குழப்பிக்காதீங்க” சிவரஞ்சனி சமாதானப் படுத்த 
“இல்ல இந்த பொண்ணுக்கு எதுவுமே தெரியலைனாலும். சங்கரன் காணாமல் போனதுக்கு, அமுதா ரத்னவேலு கல்யாணம் பண்ணதுக்கும் எது தொடர்பு இருக்கும் னு தோணுது” 
தனது வாழ்க்கையில் நடந்தவைகளே தலைக்கு மேல் இருக்க இதில் நண்பனை பற்றி அறியாமல் இருந்தது சரவணகுமரனின் மேல் எந்த தவறுமில்லை என்றபோதிலும் அமுதவல்லியை சந்தித்த போது பேசாமல் வந்ததும், அன்று அமுதவல்லி தன்னை பார்த்த பார்வையும் கண்ணுக்குள் வர சற்று குழம்பித்தான் போனார் சரவணகுமரன்
இவர்கள் இருவரும் பேசியது அமுதனின் காதில் விழவே! மலர்விழி அன்னை பற்றி இதுவரை எதுவுமே கூறியதில்லை என்பது நியாபகத்தில் வந்தது. கூடவே அவளுக்கு அவள் அன்னை எழுதிய டயரியும் கண்ணுக்குள் வந்தது. மலர்விழியின் அன்னை இறக்காவிட்டால் அந்த டயரி மலர்விழியிடம் வந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றவே! அமுதவல்லி எவ்வாறு இறந்தார்? சங்கரன் என்ன ஆனார்? என்ற கேள்விகள் அமுதனின் மனத்தைக் குடைய பதிலை மலர்விழியிடம் கேட்கப் பிடிக்காமல் அவளையே வெறித்துப் பார்த்திருந்தான்.

Advertisement