Advertisement

அத்தியாயம் 14
தூங்கும் மலர்விழியையே பார்த்திருந்தான் பிரதீபன். அமுதனின் விரல் அடையாளம்  கூட அவளின் கழுத்தில் நீலமும், ஊதாவும் கலந்த நிறத்தில் பதிந்திருந்தது. அமுதனுக்கு எவ்வளவு கோபமிருந்திருந்தால் அவ்வளவு அழுத்தமாக மலர்விழியின் கழுத்தை நெறித்திருப்பான். மலர்விழியும் திமிராமல் அவனையே வெறித்து பார்த்திருந்தது இன்னும் ப்ரதீபனின் கண்களுக்குள் வந்து போக அவனுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது அது மலர்விழி அமுதனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள் என்பதே! 
ரிஷிக்கு வந்த ஆபத்தை ப்ரதீபனால் தடுக்க முடியாமல் போனது இன்னும் அவன் மனதில் ஆறாத ரணமாக இருக்க, அமுதனை சென்னைக்கு அனுப்பிய போது அவனின் பாதுகாப்பை பலப் படுத்தி இருந்த போதிலும் ரிஷியை போலவே இருப்பதால் அமுதனை ஆபத்து தேடி வரும் என்று அறிந்திருந்தவன் மலர்விழி அமுதனை கல்யாணம் பண்ண நினைத்தது தந்தையின் முகத்தில் கரியை பூசவென்று சொன்ன கதையை நம்பவில்லை. 
பதவியும், செல்வமும் குவிந்து கிடக்கும் தந்தையின் முகத்தில் கரியை பூச வேண்டிய அவசியம் தான் என்ன? அதுவும் அமுதனை கல்யாணம் செய்து. அவள் தந்தையை பற்றி சொன்னது உண்மையோ பொய்யோ! அமுதனை தெரியும் என்று அவள் சொல்ல நினைக்கவே இல்லை. அப்படியாயின் அவனை அவள் காப்பாற்ற நினைக்கின்றாளா? அவனுக்கு ஆபத்து வரக் கூடாதென்று நினைக்கின்றாளா? 
அமுதனின் வீட்டில் வைத்து முதன் முதலாக மலர்விழியை சந்தித்த பொழுது திமிராக பேசினாலும் அவளின் கண்களில் கள்ளத்தனம் இல்லை என்று கண்டு கொண்டான் பிரதீபன். 
ஆனால் கடத்தினவனிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் அவளுக்கு இல்லையே! ரிஷி இறந்து விட்டான் என்று நினைத்து அமுதனை காப்பாற்ற வேண்டியே அவள் உண்மையை கூறினாள் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அதை புரிந்துக் கொள்ளாத அமுதன் தான் அவளுடைய கழுத்தை நெறித்தான் என்றால் அவள் அசையாமல் நின்றதுக்கு காரணம் ரிஷியின் இறப்புக்கு தன் தந்தை தான் காரணம் என்பதனாலையா? அப்படியென்றால் அவள் ரிஷியை காதலித்தாளா? குழப்பமான மனநிலையிலையிலையே! அமர்ந்திருந்த பிரதீபன், அவனின் அலைபேசி சிணுங்கவே! யார் என்று பார்க்க திரையில் ரிஷி என்று மின்னிக் கொண்டிருந்தது. 
தனதறையில் அனல் பறக்கும் கோப மூச்சுக்கலை இழுத்து விட்டவாறே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் அமுதன்.
“என்ன திமிறிருந்தா ரிஷியை காதலிச்சிட்டு என்னையும் காதலிப்பதாக நடிப்பா? அவ உடம்புல ஓடுறது சாக்கடை என்பத்துல எந்த சந்தேகமும் இல்ல. அப்படியே அவ அத்த புத்தி. அவளை அங்கேயே கழுத்த நெருச்சி கொன்னிருக்கணும். பிரதீபன் என்ன தடுத்ததுல மிஸ்ஸாகிருச்சு” 
மலர்விழியின் சீண்டலையும், தீண்டலையும் உள்ளுக்குள் ரசித்தாலும் அவள் கண்களில் தனக்கான காதல் கொஞ்சமேனும் இல்லையென்பதை அறிந்திருந்தவனோ! அவள் நடிக்கின்றாள் என்று அறிந்தும் அவளை விட்டு விலக நினைத்தானே ஒழிய அவளுக்கு தீங்கிழைக்கவோ! அவளை வேதனைக்குள்ளாக்கவோ நினைக்கவில்லை. 
ஆனால் அவளோ! கொஞ்சமேனும் இரக்கமில்லாமல் ரிஷியை காதலித்து அவன் இறந்துவிட்டான் என்றெண்ணி  தன்னையும் காதலிப்பதாக சொல்லி தன் வாழ்க்கையில் விளையாட நினைத்ததை அவனால் மன்னிக்கவே முடியவில்லை. பிரதீபன் மட்டும் தக்க சமயத்தில் அவனை அறைந்து சுயநினைவுக்கு கொண்டு வராமல் இருந்தால் மலர்விழி என்ற ஒருத்தி உலகத்தை விட்டே சென்றிருப்பாள்.
மலர்விழி மினிஸ்டர் ரத்னவேலின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக அவளை பிடிக்காமல் போக மனதில் இரும்புத்திரையிட்டு அவளை துரத்தியடிப்பதிலையே! குறியாக இருந்தான் அமுதன். ஆனால் காற்றும் நுழைய முடியாத இருட்டு அறைக்குள்ளேயும் காதல் நுழைந்து விடும் என்பதால் அவனையறியாமலே! மலர்விழி அவனின் மனதில் புகுந்திருக்க, ஏமாற்றத்தின் வலியும், வேதனையும் தான் இந்த அதீத கோபம் என்று உணராமல் இருந்தான்.  
சதா கிண்டலும் கேலியாக இருக்கும் அமுதனுக்குள் இருந்த மொத்த கோபமும் ஒன்றாக சேர்ந்து அவனை வேறொன்றும் யோசிக்க விடாது மலர்விழியை திட்டி தீர்ப்பதிலையே இருக்க அவனின் அலைபேசி அடிக்கவே அவ்வளவு நேரமும் அவனை ஆட்கொண்ட மொத்த கோபமும் ஒரே நொடியில் கரைந்து உருகியது போல் புன்னகைத்தவாறே அலைபேசியை இயக்கி காதில் வைக்க 
“ஹாய் சித்து” கொஞ்சும் மொழியில் மறுமுனையில் ஸ்ரீராம். 
“ஹாய் டா குட்டி” 
எந்நாளும் ஸ்ரீராமுடன் ஐந்து நிமிடமாவது பேசிவிடுவான் அமுதன். அவன் அழைக்கா விடின் ரிஷியின் அல்லது கயலின் அலைபேசியிலிருந்து வரும் அழைப்பு அந்த வீட்டு பெரிய மனிசனின் அழைப்பென்று அலைபேசி அடிக்கும் பொழுதே அறிந்திருப்பவன் அலைபேசியில் “அண்ணி” என்று வரவே அழைப்பது ஸ்ரீராமென்று தெரியவும் உற்சாகமாக பேசலானான். 
 
“போ சித்து உன் பேச்சு கா… போன் பண்ணாம அப்படி என்ன வேல உனக்கு. என்ன வெயிட் பண்ண வைக்காதான்னு எத்துணை நாள் சொல்லுறது” இடுப்பில் கைவைத்து ரிஷியை போலவே பேசிக் கொண்டிருந்தவனை பார்த்திருந்த திலகா கைகளால் திருஷ்டிகளித்தவாறே கயலிடம் ஸ்ரீராம்  ரிஷி மாதிரியே இருக்கான் என்று சொல்ல 
தலையசைத்து மறுத்த கயலோ! “இல்லை என்ன மாதிரி” என்று சொல்ல 
“உன்ன மாதிரி ஒரு பொண்ண பெத்துக்க, ரொம்ப நாள் தள்ளி போடாதே!” என்றவாறே திலகா உள்ளே செல்ல கயலின் முகமோ செவ்வானம் போல் சிவந்தது. 
“என்ன வார் பேபி நான் பக்கத்துல இல்லாமலையே! இப்படி சிவந்து போய் இருக்க?” என்றவாறே அவளருகில் அமர்ந்துக் கொண்டான் ரிஷி.
ரிஷி ப்ரதீபனோடு பேசிவிட்டு வரும் பொழுது திலகா சொன்னது அவன் காதிலும் விழுந்த படியால் மனைவி தன் முகம் பார்க்க தவிர்த்து  மேலும் சிவந்தவாறே பதில் சொல்லாது அமைதியாகவே நிற்க அவளின் காதின் அருகே மெல்ல குனிந்து 
“ஸ்ரீராமுக்கு அடுத்த வருடம் பர்த்டே கிப்ட்டா ஒரு தங்கச்சி பாபாவை கொடுத்துடலாமா? நான் ரெடி. நீ ரெடியா? என்ன சொல்லுற? கொடுத்துடலாமா?” 
அன்னை சொன்னதில் பெண்குழந்தையை பற்றிய ஆசை கண்ணில் மின்ன நின்றவள் கணவன் தன் அருகில் அமரமுன் பேசியதை கவனிக்கவில்லை. காதருகில் அவன் குரல் கேட்கவே 
“இந்த வருஷமே கொடுத்திருக்கலாம்.  நீங்க டூ லேட் பா…” கணவனின் குறும்புப் பேச்சில் சீண்டப்பட்டு அவனை வார 
“ஸ்ரீராம் சின்ன பையன் இன்னும் கொஞ்சம் நாளாகட்டும் னு சொன்னது தப்பா போச்சே… இதெல்லாம் முதல்லயே சொல்லவேணாமா?” 
“என்ன என் குத்தம் போல பேசுறீங்க?” கணவனை பொய்யாக முறைக்க
அவளை தன்னருகில் இழுத்து சேர்த்தணைத்தவாறே “என் குத்தம் தான் வார் பேபி… இவ்வளவு பேசுற உன் வாய சும்மா விட்டது என் தப்புதான்” என்றவாறே அவளின் இதழ் நோக்கி குனிய 
“என்ன பண்ணுறீங்க ஸ்ரீராம் இருக்கான்” கயல் அவனை விட்டு விலக முயற்சிக்க அந்நேரம் அமுதனோடு அலைபேசியில் பேசியவாறே, அவர்களின் நடுவில் வந்தமர்ந்தார் ஸ்ரீராம். 
“எனக்கு வில்லன் வெளிய இல்ல டா…” ரிஷி ஸ்ரீராமின் தலையை தடவியவாறே அவனை தூக்கி இடது பக்கமாக மடியில் இருத்திக் கொண்டு மனைவியை ஒட்டி அமர்ந்து கொண்டான்.
“தள்ளி உக்காருங்க” கயல் தலையால் செய்கை செய்ய அவளைக் கண்டுக்காமல் அவளின் இடையில் கை போட்டவன் ஸ்ரீராம் தங்களை கவனிக்கிறானா என்று பார்க்க அவனோ அவனின் சித்துவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.  
ஸ்ரீராம் கவனிக்காதவாறு விலக முயற்சிக்கும் மனைவியின் கன்னத்தில் முத்தமிட கொலுசுச் சத்தம்  கேட்கவே! நிமிர படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் அகல்யாவை கண்டு 
“வில்லங்கம் தாவி வருது. இனி என் பொண்டாட்டிய கண்ணுளையும் காட்ட மாட்டா” பெருமூச்சுவிட்டவாறே சொல்ல வந்தவளோ ரிஷியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல 
“மாட்டினீங்களா?” என்ற பார்வையை வீசியவாறு சிரித்துக் கொண்டிருந்தாள் கயல்.  
ஸ்ரீராமோ சித்தப்பாவை திட்டிக் கொண்டிருக்க அவனும் பலவாறு பேசி தாஜா பண்ணிக்க கொண்டிருந்தான்.
“சாரிடா.. கொஞ்சம் பிசி” அமுதன் ஸ்ரீராமிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதை மலர்விழி மட்டும் பார்த்திருந்தால் ஆச்சரியத்தில் அவளின் கண்கள் சாசர் போல் விரிந்திருக்கும். 
“போன குடுடா உன் சித்து கிட்ட நானும் கொஞ்சம் பேசுறேன்” கயல்விழி அலைபேசியை ஸ்ரீராமிடம் வாங்க முயற்சிற்ப்பது அமுதனின் காதில் விழுந்தது. 
“போ…மா… நீ அப்புறம் பேசு” என்றவன் ஏதேதோ அமுதனுடன் பேசி விட்டே அன்னையிடம் அலைபேசியை கொடுத்தான். 
“என்ன கொழந்தனாரே! ரொம்ப பிசியோ? என் அண்ணன் வேற வீட்டு பக்கமே வரக் காணோம்? இன்னும் மூணு நாள்ல ஸ்ரீயோட பொறந்த நாள் வருது.  வீட்டாளுங்க மட்டும் இருக்க, வீட்டுல ஒரு சின்ன பார்ட்டி வைக்கலாம் னு உங்க அண்ணன் ஆசைப்படுறாரு. நேரங்காலத்தோட வந்து சேருங்க” மிரட்டலாகவே கயல் உத்தரவிட 
“நாளைக்கே வரேன் அண்ணி…” போலியாக பம்மினான் அமுதன். 
அமுதனின் பேச்சிலையே அவனுடன் நட்பு பாராட்டும் கயல் அவனை அடக்க “அண்ணி” என்ற அதிகாரத்தை பாவிப்பதும் போலியாக பம்முவதும் அவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. அகல்யாவை அடக்குபவன் கயலையும் அத்தை மகள் என்று அடக்க ரிஷி முறைத்தானோ இல்லையோ சிவரஞ்சனி முறைத்துப் பார்க்க அன்றிலிருந்து “அண்ணி” என்று மரியாதையாக அழைக்க அதையே பற்றிக் கொண்டு கயலும் அதிகாரம் பண்ண ஆரம்பித்தாள்.  
“என்னடா கோபமாக இருப்பன்னு பார்த்தா சிரிச்சுக்  கிட்டு இருக்க?” என்றவாறே அமுதனின் அறையினுள்ளே நுழைந்தான் பிரதீபன். 
அவனை முறைத்தவன் “ஸ்ரீயோட பர்த்டே வருது அடுத்த பிளைட்டுலையே நான் மும்பை போறேன். நீ அவளை என்ன பண்ணுவியோ பண்ணிக்க. அவ மட்டும் மறுக்கா என் கண்ணுல பட்டா கொன்னுடுவேன்” ஒரு விரல் கொண்டு மிரட்டியவாறே மும்பை செல்ல ஆயத்தமானான் அமுதன். 
இப்பொழுது அமுதன் இருக்கும் மனநிலைக்கு அவன் இங்கு இருப்பதை விட மும்பையில் வீட்டாரோடு இருப்பதே மேல் என்று எண்ணிய ப்ரதீபனும் 
“அட அதற்குள் நியூஸ் வந்திருச்சா? இப்போ தான் ரிஷியும் போன் பண்ணி சொன்னான். அத சொல்லத்தான் வந்தேன். ஓகே டா… நீ கிளம்பு இங்க இருக்குற வேலையெல்லாம் முடிச்சிட்டு நானும் ரெண்டு நாள்ல வரேன்” என்றவன் அமுதனின் பதிலையும் எதிர்பார்க்காது அறையை விட்டு வெளியேறினான்.
மலர்விழி கண்விழிக்கும் நேரம் பிரதீபன் அவள் அருகில் ஒரு கதிரையை போட்டு அமர்ந்து லப்டோப்பில் வீட்டின் சீசீடிவியில் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான். 
எழுந்தமர்ந்த மலர்விழியோ  இருமவும் முடியாமல், பேசவும் முடியாமல் தொண்டை வலிக்கவே அவ்வறையை நோட்டமிட பிரதீபன் கண்ணில் படவே அமுதன் எங்கே என்று பார்க்க அவளின் அசைவில் தலையை நிமிர்த்தி பார்த்த பிரதீபன் கிளாசில் வெது வெதுப்பான நீரை ஊற்றி அவளின் கையை பற்றி கொடுத்து 
“குடி தொண்டை வலிக்கு இதமாக இருக்கும், அமுதன் மும்பை கிளம்பி போய்ட்டான். இப்போ எதுவும் பேசாத வலி அதிகமாகி குரல் பாதிக்கும். ரெண்டு நாள்ல சரியாகிடும்” அவளை பேச விடாது சொல்ல வேண்டியதை சொல்ல புன்னகைக்க முயற்சி செய்த மலர்விழி வலியால் முகம் சுளித்தவாறே அவளின் அலைபேசியை வேண்டி நிற்க அதை அவள் கையில் கொடுத்தவன் அதிகம் பேசாதே என்றவாறே அறையை விட்டு வெளியேறி தன் வேலையில் மூழ்கினான்.  
மணியை பார்த்தவள் தான் கடத்தப் பட்டு பதினெட்டு மணி நேரமாகியும் யாரும் அவளை அழைத்து பேசாததால் வியப்பாக அலைபேசியை பார்க்க அதில் அவள் அனுப்பியது போல் அவளின் பி.ஏ விற்கு ஒரு குறுந்செய்தி அனுப்பப் பட்டிருக்கவே! அதை வாசிக்க தான் ஒரு வேலையாக வெளியூர் போவதாகவும் நாளை வருவதாகவும் சொல்லப்பட்டிருந்ததைக் கண்டு 
“எல்லாம் பக்காவே பிளான் பண்ணி இருக்கானுங்க. இவனுங்க சொல்லிட்டு கடத்தியிருந்தா எல்லா வேலையும் முடிச்சிட்டே வந்திருப்பேன்” மனதில் இருவரையும் சாடியவாறே நிலுவையில் இருந்த வேலைகளை செய்யுமாறு உத்தரவை பிறப்பித்து விட்டு தலை சாய்ந்து கண்களை மூடிக் கொள்ள 
அமுதன் பேசியவைகள் நியாபகத்தில் வரவே தான் சுயநலமாக அவனை பழிதீர்க்க பயன் படுத்திக்கொள்ள  பார்த்தேன் என்று அவன் சொன்னது பொய்யில்லை. மாமன்மகன் என்று அவனை பிடிக்கும். அளவுக்கடந்த அக்கறையும், பாசமும்  இருக்கு என்பது உண்மை. காதல் எல்லாம் இல்லை. அவன் சொன்னது போல் குடும்ப ரெத்தம் தன் உடம்பில் ஓடுவதாலையே! அப்படியொரு சிந்தனை தனக்குள் வந்ததோ என்று எண்ணலானாள். 
உண்மையை சொன்னால் அவன் நம்ப மாட்டான் என்பது வேறு விஷயம். அவனிடம் உண்மையை கூறி உதவி கேட்க பிடிக்காமல் தான் அவனை சீண்டியது என்பதையும். அத்த மகன் என்ற  உறவால் வந்த நேசம் அவனை சீண்டிச் சீண்டியே! காதலாக மாறி அவன் நலனை மட்டுமே நாடியதால் தான் அவனை விட்டு விலகி இருக்க முடிவெடுத்தாள் என்பதை மலர்விழியும் உணரவில்லை.
அமுதன் மலர்விழியின் மேல் கொண்ட அதீத வெறுப்பும், மலர்விழி அமுதனின் மேல் கொண்ட அக்கறை கலந்த நேசமும் மெல்லிய காதலாக அவர்கள் மனதில் பூத்ததை இருவரும் உணரும் காலம் என்று வருமோ?  
ரிஷி அழைத்து ஸ்ரீராமின் பிறந்தநாள் வருவதாக கூறி “நேரங்காலத்தோட வாடா.. இப்போ எல்லாம் உன்ன பார்க்கவே முடியல” என்று குறைகூற 
“வரேன், வரேன்” என்று வாய் கூறினாலும் மனமோ “தியாவின் அருகில் தடுமாறும் மனதை அடக்க முடியாமல் தானே வீட்டுக்கு வராமல் இருக்கிறேன்” என்றது.
பெண்களையே பிடிக்காமல் இருந்த தனக்கு அன்பு காட்ட ஒரு அம்மா, பாசம் காட்ட தங்கை என்று இரு உறவுகள் கிடைத்த பின் மனைவி என்பவளை ஏற்றுக் கொண்ட மனம் எக்கணம் அவள் மீது காதல் கொண்டதென்று ப்ரதீபனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. 
ரிஷி, கயல் ஜோடியை போல் தானும் மனைவி, மக்கள் என்று சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைத்தானே ஒழிய தியாவின் மீது காதலால் உருகி கசியவில்லை. ஆனால் அவளோடான வாழ்க்கையை ஒரு புரிதலுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. 
அதன் படி அவளுக்காக பார்த்துப் பார்த்து எல்லாவற்றையும் செய்ய அவளும் தன்னை புரிந்துக் கொண்டாள் என்று வாழ்க்கையை தொடங்க நினைக்க அவளோ! அவன் மீது சிறிதளவும் நம்பிக்கை வைக்காமல் பேசியது அவனை பெரிதும் காயப்  படுத்தியது. 
அவளை விட்டு விலகி இருக்க முடிவெடுத்தவனால் அவளை பாராது இருக்க முடியவில்லை. அதனாலயே! கள்ளத்தனமாக சீசீடிவி காட்ச்சிகளில் மனைவியை ரசிக்க ஆரம்பித்து அதுவே வழமையானது. 
மனதில் இருப்பவைகளை அவளின் நிழலிடம் கொட்டித்தீர்த்து மனதை ஆற்றிக் கொண்டவன், கொஞ்சம் கொஞ்சமாக தான் தியா எனும் ஆள்சுழலிக்குள் மாட்டிக் கொண்டதை உணர்ந்த பொழுது  அவள் மீது பூத்திருந்த காதலையும் உணர்ந்துக் கொண்டான். 
ஆனால் அது அவனுக்கு சந்தோசத்தை கொடுப்பதற்கு பதிலாக வேதனையையே! கொடுத்தது. மனைவியை எக்கேடு கெட்டும் போ என்று விட்டுவிடுபவனல்ல பிரதீபன். அவனுள் பூத்த காதலால் அவள் தந்த ஏமாற்றமும், வேதனையும் அவளையே காயப் படுத்தி விடுமோ! என்றுதான் அஞ்சலானான். அதனாலயே வீட்டுக்கு செல்லாம் வெளிவேலையென்று அலைந்து கொண்டிருக்கின்றான்.
இங்கு தியாவின் நிலையோ இன்னும் மோசமாக இருந்தது. கணவனை நம்பாமல், அவனை புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் பொழுது கோபமாக அவனை திட்டிடவேணும் நினைக்கும் மனது அவன் மேல் எந்த தப்பும் இல்லையென்று அறிந்தபின் அவனின் சிந்தனையை தவிர வேறு எதுவும் தோன்றவே இல்லை. 
அவனின் புன்னகை முகமும், பேச்சும் அவள் மீதான அக்கறையும் அன்பும் கண்ணுக்குள் வந்து சதா இம்சிக்க உடனே அவனை பார்க்கவேண்டும் அவனோடு பேச வேண்டும் என்று அலையும் மனதை கட்டுப்படுத்த வழி தெரியாமல்  தவிக்கலானாள். 
அவனை அலைபேசியில் தொடர்ப்பு கொள்ளவும் முடியவில்லை. தன்னை முழுவதுமாக வெறுத்து விட்டானோ? என்று நினைக்கும் பொழுது கண்ணீர் பெருக்கெடுக்க, அவனிடம் பேசவே முடியாமல் போய் விடுமோ? அவனை பார்க்கவே முடியாமல் போய் விடுமோ? என்று உள்ளுக்குள் அச்சம் தோன்றி உடல்நடுங்க ஆரம்பிக்க பாட்டியிடம் தப்பிக்கவென ஷவருக்கடியில் அலுத்து தீர்த்தவள் காய்ச்சலில் விழுந்தாள்.
தனக்குள் பூத்த மெல்லிய காதல் மனைவிக்குள்ளும் மொட்டுவிட ஆரம்பித்ததென்று அறியாத ப்ரதீபனும், கணவன் தன் மீது கொண்ட காதலால் தான் விலகி ஓடிக் கொண்டிருக்கின்றான் என்று அறியாத தியாவும் சந்தித்து, மனம் விட்டுப் பேசி, தங்கள் காதலை பரிமாறிக் கொள்ளும் நாள் என்று வருமோ?
ஸ்ரீராமின் பிறந்தநாள் விழா வீட்டில் ஆரம்பமாக கணவன் இன்னும் வந்து சேரவில்லையே! தன்னால் பார்ட்டிக்கு வராமல் இருப்பானோ என்று  எண்ணிக் கொண்டிருக்கையில் ஒரு வண்டி உள்ளே வருவதைக் கண்டு கணவன் தான் வருகின்றான் என்று வண்டியின் பக்கம் நகர பின் இருக்கையிலிருந்து பிரதீபன் இறங்கவே முகம் மலர்ந்தவள் அவனோடு ஒரு பெண்ணும் இருப்பதைக் கண்டு யோசனைக்குள்ளானாள் தியா. 

Advertisement