Advertisement

அத்தியாயம் 13
அடுத்து நாம பாக்க போறது மும்பையில் பெருகி வரும் எச்.ஐ.வியும் விபச்சாரமும். மும்பை…… சனத்தொகையில் இரண்டாவது இடத்தை பிடித்து வேடிக்கை, காளியாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் விளங்கும் நகரம். அது மட்டுமா?  அரசு  அனுமதி பெற்று சிவப்பு விளக்கு பகுதியும் சிறப்பாக நடைபெறும் நகரம். பெண்களை பலவந்தமாக பாலியலில் ஈடுபடுத்துவது போய் இன்று கல்லூரி மாணவிகளும், வேலைக்கு செல்லும் இளம் பெண்களும் பகுதி நேர வேலையாக விபச்சாரத்தில் ஈடுபடுவதாக அதிர்ச்சியான புள்ளிவிபரங்கள் கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் படித்து பட்டம் பெற்று பொறுப்பான வேலையில் இருக்கும் பெண் ஒருவர் விபச்சாரத்தை தொழிலாக கொண்டதால் எச்.ஐ.வியால் பாதிக்கப் பட்ட உண்மை சம்பவத்தைத்தான் இன்று நாம் உங்களுக்கு சொல்ல போகிறோம். 
தொலைக்காட்ச்சியில் பரப்பான நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்க, இன்று சமூகவலைத்தளத்தில் இந்த செய்தியே! பிராதான செய்தியாக வந்து கொண்டிருந்தது. எந்த அலைவரிசையை திருப்பினாலும் இதே செய்தி ஓட வேறு வழியில்லாது பார்வதி பாட்டி தமிழில் ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த அந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். 
ஸ்ரீராமை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு கயலோடு பேசியவாறே உள்ளேவந்த தியா பாட்டியின் அருகில் அமர்ந்துக்கொள்ள இருவரின் பார்வையும் தொலைக்காட்ச்சியில் நிலைத்தது. 
இதோ இந்த பெண்ணின் பெயர் மதுரிகா, பிரபல நகைக் கடையொன்றில் உதவியாளராக  ஐந்து வருடங்களுக்கு முன் பணிபுரியும் போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைதாகி சிறையில் இருந்து வந்தபின் முழுநேர தொழிலாக விபச்சாரம் செய்து கொண்டிருந்தவர் சமீபகாலமாக மருத்துவமைக்கு வந்து செல்வதை கண்டு கொண்டு அவரை பின் தொடர்ந்ததில் அப்பட்டமான உண்மைகள் வெளிவந்துள்ளன. 
தொலைக்காட்ச்சியில் மதுரிகாவின் பெரியதொரு புகைப்படத்தை பிரசுரித்தவாறே ஒளிபரப்ப
 “நல்லா படிச்சு, நல்ல வேலைல இருக்குறப்போ எதுக்கு இந்த ஈனப் பொழப்பு” பாட்டி கண்டமேனிக்கு திட்ட ஆரம்பிக்க 
“அழகா இருக்குற திமிரு, உடம்புல கொழுப்பு கூடிப் போச்சு. அதான் கடவுள் வச்சிட்டான் ஆப்பு” கயல் கருவ
“இவளுங்க கூட போற ஆம்பிளைகளை சொல்லணும்” மனதில் அனல் பறக்க தியா மொழிந்தவாறே தொலைக்காட்ச்சியில் கவனமானாள். 
தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு அஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரிகா என்ற இவருக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்றியுள்ளதாக மருத்துவர் கூறிய போது அமைதியாக, நோயாளிகளுக்கு தொந்தரவில்லாமல் இருக்க வேண்டிய மருத்துவமனையில் இவர் நடந்துக்க கொண்ட விதத்தை பாருங்க….
மருத்துவமனையின் சீசீடிவி காட்ச்சிகள் சில ஒளிபரப்பு செய்யப்பட அதில் மதுரிகா மருத்துவமனை பொருட்களை உடைத்தவாறு கத்துவது தெரிந்தது. 
“இது…. மதுரிகா இல்ல” ரிஷியின் குரல் பின்னால் கேட்கவே மூவரும் திரும்ப “இவ என் பி. ஏ வாக வேல பாத்தவ. என்ன பிரச்சினை” யோசனையாக தொலைக்காட்ச்சியை ஏறிட்டவாறே கயலின் அருகில் அமர்ந்துக் கொண்டான். 
பணக்காரர்களை மட்டுமே சந்தோசப் படுத்தும் இவரின் நிலையைக் கண்டு நகரத்தில் உள்ள பெரும்புள்ளிகள் ரகசியமாக எச்.ஐ.வி. பரிசோதனை செய்து வருவதாக நம்பத்தகருந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  
தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்த செய்தியை ரிஷிக்கு சொல்லியவாறே எழுந்துக் கொண்ட பார்வதி பாட்டி “நான் போய் சாப்பிட்டுட்டு மாத்துர போடுறேன்” என்றவாறே நகர 
தியாவின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் வேர்விட்டு கிளை பரப்பி தொண்டையை இறுக்கியது. “மதுரிகா ரிஷியின் பி.ஏ என்றால்? அவளை பற்றி தொலைக்காட்ச்சியில் வந்த செய்தியின் படி அவளுக்கும் ரிஷி, மற்றும் ப்ரதீபனுக்கும் இடையில் என்ன மாதிரியான உறவு இருந்திருக்கும்?” யோசிக்கும் பொழுதே நெஞ்சடைத்துக் கொண்டு வர கனத்த மனதை சமன் படுத்த வாயால் மூச்சை இழுத்து விட்டவள் கணவனை மதுரிகாவோடு சேர்த்து வைத்து பார்க்கவே அருவருக்க  ரிஷியிடம் எவ்வாறு கேட்பது? என்னவென்று கேட்பது? கேட்ட உடனே சொல்வானா? மனதில் தோன்றிய எல்லாவற்றையும் கோர்த்து என்ன கேட்பதென்று புரியாமல்  தவிக்கலானாள். 
ஆனால் ரிஷியோ பழைய வாழ்க்கையின் ஞாபகங்களில் சிக்குண்டு கயலின் இடது கையை இறுகப்பற்றியவாறே மன்னிக்க வேண்டி ஒரு பார்வை வீசியவாறே 
“நீ மட்டும் என் வாழ்க்கைல வரலைனா? இந்த மாதிரி ஒரு நிலைமைதான் வந்திருக்கும்” தொலைக்காட்ச்சியில் பெரிதாக எச்,ஐ.வி என்று மின்னிக் கொண்டிருப்பதைக் காட்டியவாறே சொல்ல தியா முற்றிலும் உடைத்துப் போனாள். 
“நானும் என் அம்மாவால ரொம்ப பாதிக்கப்பட்டேன். ப்ரதீபனும் அவனை பெத்தவங்களால பாதிக்கப்பட்டான். ரெண்டு பேருக்குமே பொம்பளைங்கள பிடிக்காது, அவன் பொண்ணுங்க என்றாலே எறிஞ்சி விழுவான். மதுரிகா வேலைக்கு சேர்ந்த புதுசில் அவளுக்கு பிரதீபன் மேல் ஒரு கண்ணு. பார்க்க அழகாகவும் இருக்கா, தப்பான பெண்ணாகவும் தெரியல னு தோணின உடனே!  நானே இந்த மதுரிகாவை அவன் கூட வேல பார்க்க அனுப்பி அவன் மனச மாத்த முயற்சி செஞ்சேன். அவன் அடிச்ச அடில தெறிச்சு  ஓடிட்டா. ஆனா நான் பண்ண கூடாததெல்லாம்…” 
ரிஷியை மேலும் பேசவிடாது அவனின் வாயை தன் கைகொண்டு  மூடிய கயல் “எத்தனை தடவ சொல்லி இருக்கேன் உங்க இறந்தகாலத்தை பற்றி  பேசக் கூடாதென்று”
கயலின் கையை விடுவித்து தன்நெஞ்சோடு இறுக்கிக் கொண்டவன் “மறந்துட்டதாக நினைச்சாலும் ஏதோ ஒரு வழில துரத்திக்  கொண்டே இருக்கு” நெஞ்சம் கணக்க இறுகிய குரலில் ரிஷியின் வார்த்தைகள் வெளியே வர இப்படியே விட்டால் அதையே பேசி தன்னையே வருத்திக்கொள்வான் என்று கயலுக்கு புரிய  
“போதும் முதல்ல எந்திரிங்க வாங்க வீட்டுக்கு போலாம்” அதிர்ச்சியாக உறைந்திருந்த தியாவை கவனிக்காது கயல் ரிஷியை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்கு சென்றாள். 
ரிஷி மதுரிகாவோடு தனக்கிருந்த தொடர்ப்பை கூறியபோது ஏற்பட்ட அதிர்ச்சியை விட ப்ரதீபனின் குழந்தைப்பருவத்தில் பெற்றோர்களால் பாதிக்கப்பட்டான் என்றது தியாவை பெரிதும் உலுக்கியது. 
யாரோ? எவளோ! சொன்னதை கேட்டு கணவனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுமில்லாது, காதலோடு எதிர்பார்த்திருந்த இரவையும் சீர்குலைத்து சந்தோசமாக வாழவேண்டிய வாழ்க்கையையும் தன் கையாலையே அழித்துக் கொண்டதுமில்லாது. எரிந்துக் கொண்டிருந்த கணவனின் மனதை அன்பால் ஆறுதல் படுத்தாமல் மேலும் ரணப்படுத்தி  தன்னிடமிருந்து எவ்வளவு தூரம் விலக்கி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலக்கி வைக்க நினைக்க மாறாக அவனை விலகி ஓடவைத்து தன் வாழ்க்கையையே கேள்விக்கு குறியில் நிறுத்திய தன்னை என்னவென்று சொல்வது. 
அவள் கணவனை சந்தேகப்படவில்லை அவன் பேசியதை தவறாக புரிந்துக் கொண்டதன் விலைவாளையே சந்தேகம் என்ற தீ அவள் மனதை நிறைத்தது. அன்றிரவு தான் கேட்டதை முதலில் கணவனிடம் சொல்லியிருந்தால், அவன் சொல்ல வருவதை புரிந்துக் கொண்டிருந்தால் இந்த பிரிவே வந்திருக்காது என்று முதன் முதலாக தியாக்கு தோன்றியது. 
கணவன் தான் தப்பானவன். அவனின் தப்பான எண்ணத்தால் தான் விலகி நிற்கிறான் என்று தான் நினைத்துக் கொண்டிருக்க, அவன் தான் தன்னை விலக்கி வைத்திருக்கிறான் என்று தெள்ளத்தெளிவாக புரிந்தது. 
“கல்யாணம் கயலுக்காக பண்ணினான் என்று சொல்லும் பொது நெஞ்சம் எரிந்ததே! அதற்கு அர்த்தம் என்ன?” ஆழ்மனம் கேள்வி எழுப்ப, 
கயலுக்காக கல்யாணம் பண்ணினவன் தான் உனக்காக பார்த்துப் பார்த்து எல்லாம் செய்தானா? ஆண் என்ற அகந்தையில் உன்னிடம் திமிராக நடந்துக் கொள்ளாமல் பொறுமையாக உன்னையடைய காத்திருந்தானே! அன்னையால் பாதிக்கப்பட்டவன், பெண்களை வெறுத்தவன் உன் அன்புக்குக்காக மட்டும் கார்த்திருந்தானே! அவன் அன்புக்கு நல்லா கைம்மாறு செஞ்சிட்ட” மறு மனம் தூற்ற,
தியாவுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது தன் கணவன் தன் மனதில் நுழைந்து பலநாட்கள் ஆகின்றான். அதை புரிந்துக்கொள்ளாமல் திரையிட்டு வாழ்ந்த்து கொண்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டு இருந்தாள் என்று.  
இனிமேலும் தாமதிக்க முடியாது. இப்பொழுதே கணவனோடு பேசவேண்டும், இப்பொழுதே அவன் அணைப்பில் இருக்கவேண்டும் என்று மனம் ஏங்க நொடிநேரமும் தாமதிக்காது கணவனுக்கு அழைக்கலானாள். ஆனால் அவனின் அலைபேசிதான் வேலை நிறுத்தம் செய்திருந்தது.  
தனக்கு வந்த மின்னஞ்சலை படித்து உதடு வளைத்து கேலிப் புன்னகையை உதிர்த்த பிரதீபன் அலைபேசியை உயிர்ப்பிக்க மனைவியிடமிருந்து வந்திருந்த தொடர்ப்புகளைக் கண்டு வீட்டின் சீசீடிவிக் காட்ச்சிகளை ஒளிபரப்பி மனைவியை பார்த்தவாறே அலைபேசி தொடர்ப்பை ஏற்படுத்தியவன் 
“நான் சொன்னதுக்கு மேலாக செஞ்சி இருக்கீங்க டாக்டர். உங்க வங்கி கணக்க பாருங்க” குரலில் திமிரு தெறிக்க பிரதீபன்
“சார் அதெல்லாம் நீங்க சரியா செய்வீங்க, என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு….” 
“அவ பொண்ணு உருவத்தில் இருக்கும் விஷம். தேவைப்பட்டா அவளுக்கு எச்.ஐ.வி வைரஸ ஏற்றவும் தயங்க மாட்டேன்” பிரதீபன் கோபமாக பேச 
“அதற்கு அவசியமே இல்ல. அந்த பொண்ணுக்கு இரத்த புற்றுநோய். லாஸ்ட் ஸ்டேஜ். நாட்களை எண்ணிக் கிட்டு தான் இருக்கா. அந்த சிம்டம்ஸ வைரஸால் வந்தது னு சொன்னதும் நம்பிட்டா”
பதில் எதுவும் சொல்லாது அலைபேசியை துண்டித்த பிரதீபன் மனைவியின் மீதிருந்த பார்வையை நீக்காது காபியை அருந்தலானான். 
“என்னடா… கட்டின பொண்டாட்டியையே இப்படி சைட் அடிக்கிற? டெக்னோலஜி வளர்ந்ததுல பிரைவசி என்பதே இல்லாம போச்சு”   அறைக்கதவை மூடிவிட்டு வந்த அமுதன் ப்ரதீபனருகில் கதிரையை போட்டு அமர 
“அவ இன்னும் கொஞ்சம் நேரத்துல கண்ணு முழிப்பா” 
“மலர எதுக்கு கடத்தினை?” அமுதன் புரியாது ப்ரதீபனை ஏறிட 
“அத அவகிட்ட கேக்கும் போது தெரிஞ்சிக்க” புன்னகைத்தான் பிரதீபன். 
பரதீபனை நன்கு அறிந்த அமுதனோ! “சொல்லும் போது னு சொல்லாம எதுக்கு கேட்க்கும் பொது னு சொல்லுறான். என்ன காரணமா இருக்கும்” என்று தனக்குள் புலம்பலானான்.
மெதுவாக கண்விழித்த மலர்விழி “என்ன இவ்வளவு இருட்டா இருக்கு? மின்விசை மாற்றுக் குமிழை  போட கையை நீட்ட கையை அசைக்க முடியாமல், தலையும் கனமாக வலிக்க, அவளின் தலைக்கு நேராக, தலைக்கு மிக அருகில் வெளிச்சம் வர தலையை தூக்கிப் கண்களை சுருக்கியவாறே பார்த்தாள். அங்கே குறைந்த வெளிச்சத்தில் ஒரு மின்குமிழ் எரிந்துக் கொண்டிருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிய நேற்றிரவு நடந்தவைகளும் தெளிவாக நியாயகத்தில் வரவே! தான் எங்கே இருக்கின்றோம் என்று சுற்றும் முற்றும் பார்க்க அவ்வறையே இருளில் மூழ்கி இருந்தது. 
“தன்னை யார் கடத்தி இருப்பார்கள்? எதற்க்காக? பணத்துக்காகவா? இருக்காது. பணத்துக்காக மினிஸ்டர் பொண்ண கடத்தும் அளவுக்கு இந்த சிட்டில எவனுக்கு தில்லு இருக்கு? அதுவும் இந்த மாதிரி ஆள் கடத்தல் எல்லாம் எங்கப்பா பண்ணுறது” நினைக்கும் பொழுதே சிரிப்பு வர புன்னகைத்தாள். 
“கடத்தினவன் எங்கப்பாவால பாதிக்கப்பட்டு இருந்தால்? என்ன கடத்தி டாச்சேர் பண்ண வாய்ப்பிருக்கு, பணம் கேக்க மாட்டான். பொண்ணு ஏங்குறதால ரேப் அளவுக்கு போவானோ? 
“என் கண்ணுக்கு நீ பொண்ணாவே தெரியல” அமுதனின் குரல் மண்டைக்குள் ஒலிக்க ஏனோ! முதன் முறையாக பெண்களுக்கே உரிய எச்சரிக்கை உணர்வும் அச்சமும் தோன்றி வியர்வையும் ஆறாக பெருகியது. 
“ஹே மலர் வெய்ட் உங்கப்பா என்ன தியாகியா? அவரை பழிவாங்க உன்ன கடத்த? அவரால பாதிக்க பட்ட ஒருத்தன் கடத்தினான் என்றால்? கண்டிப்பா அவன் நல்லவனாக தான் இருப்பான்” மனம் உண்மையை ஆராய்ச்சி செய்து கூற 
“அப்போ அவனால பெருசா ஆபத்து வராது. யாரா இருக்கும்?” மலர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்க, அவள் கண்விழித்ததிலிருந்து அவளுக்கு இருபது அடி தூரத்தில் கதிரையில் அமர்ந்தவாறு மலரையே பாத்திருந்தான் பிரதீபன்.
அந்த கும்மிருட்டில் அவன் அமர்ந்திருப்பது மலர்விழிக்கு தெரியவில்லை. ஆனால் அவளின் தலைக்கு மேலாக எரிந்துக் கொண்டிருந்த மின்குமிழின் வெளிச்சத்தில் அவளின் முகத்தில் வந்து போன பாவனைகளை படிக்க முயன்ற பிரதீபன் ஒரு சிகரெட்டை வாயில் வைத்து பத்த வைக்க 
அந்த சத்தத்தில் விழித்த மலர் தனக்கு முன்னால் ஒருவன் இருப்பதைக்  கண்டு அந்த சின்ன தீப் பொறியில் அவன் யாரென்று பார்க்க முனைய அதற்குள் தீ அணைக்கப் பட்ட பின்னும் இருளில் தெரியாத அவனை சளைக்காமல் பார்த்திருந்தாள்.   
சிகரெட்டை பற்ற வைத்தாலும் அந்த பழக்கத்தை விட்டொழித்த பிரதீபன் அதை கையிலையே வைத்திருந்தான். அவன் அதை பற்ற வைத்ததே மலர்விழியின் கவனத்தை தன் மேல் திருப்ப. அதன் படி அவள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாது இருளையே வெறித்திருக்க  
“எதுக்கு கடத்தின? என்ன என்ன செய்ய போற? அப்பா காசு கொடுப்பாரு” இதுல ஏதாவது சொல்லுவானு பார்த்தா அமைதியா இருக்கா. ரொம்ப அழுத்தக்காரிதான்” ப்ரதீபனும் அமைதியாகவே அவளை பார்த்திருந்தான். 
நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்தியாலத்தை நெருங்கிக் கொண்டிருக்க ப்ரதீபனின் சிகரெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் துறந்திருந்த நிலையில் இருவருக்கிடையில் நிலவிய மௌனம் மட்டும் அப்படியே இருந்தது.   
ஆண்களின் பொறுமையை கண்டிராத, ஆராய்ச்சி செய்யாதவர்கள் பொதுவாக பெண்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்பார்கள். இங்கு பொறுமையிழந்து முதலில் பேசியது  மலர் தான். 
“மினிஸ்டர் பொண்ணுன்னு தெரிஞ்சி கடத்தினியா? தெரியாம கடத்தினியா?” 
“தெரிஞ்சே தான்” 
“அப்போ என் அப்பா மேல காண்டுல என்ன கடத்தி இருக்க?” 
“செம காண்டுல இருக்கேன்”
“நீ எந்த வகைல பாதிக்கப் பட்ட?” 
“என் உயிர் நண்பனை கொல்ல பார்த்தான்”
“ஆனா… ரீசெண்டா அவர் எந்த கொலையோ! கொலை முயற்சியோ பண்ணலையே!” தந்தையை கண்காணிக்கும் அவள் அறியாததா? 
“ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடி….” 
ப்ரதீபனின் பேச்சில் குறுக்கிட்டு “ஓஹ்… நண்பனுக்காக பழிவாங்க காத்திருந்து என்ன கடத்தி இருக்க, என்ன கொன்னு எங்க அப்பாவுக்கு பார்சல்ல  அனுப்பி வைக்காம எதுக்கு பேச்சு வார்த்த  நடத்திக் கிட்டு இருக்க” கொஞ்சமாலும் கோபமோ அச்சமோ இல்லாமல் மலரின் இயல்பான குணம் வெளிவர 
“நீயா இருந்தா கொலைதான் பண்ணுவியா? நீ என்ன பண்ணுவ னு தெரிஞ்சிக்கத்தான் கடத்தினேன்” தனது புத்தி சாதூர்யத்தை நிரூபித்தான் பிரதீபன். 
“கொலைதான் பண்ணனும்னா… எப்பயோ ரெண்டு கொலை பண்ணி இருப்பேன்” குரலில் கோபம் எட்டிப் பார்க்க மொழிந்தவள் நொடியில் சுதாரித்து  “வேறு விதமா வச்சி செய்வேன்” 
மலர்விழியை கடத்திய நோக்கமே அவள் அமுதனின் பின்னால் அலைவது ஏன் என்று அறிவதற்க்கே! அதனாலயே சட்டென்று அடுத்த கேர்ள்விக்குத் தாவினான் பிரதீபன்.
“ம்ம்.. உன் அத்தைக்கு ரெண்டு பசங்களாமே! அவனுங்க எங்க இருக்கானுங்க” 
அத்தை மகன்களை கேட்டதில் கொஞ்சம் கலவரமடைந்த மலர் முடிந்த மட்டில் அமுதனுக்கு தன்னால் எந்த ஆபத்தும் வரக் கூடாதென்று “எனக்குத் தெரியாது” பட்டென்று சொல்ல 
   மலர் ஏன் அமுதனின் பின்னால் சுற்றினாள் என்று அறிந்தே ஆகவேண்டும் என்ற உந்துதலில் ப்ரதீபனும் விடாது 
“இத நான் நம்பணுமா?”
“ஐஞ்சி வருசத்துக்கு முன்னாடியே ஒருத்தன் ஆக்சிடண்ட்டுல இறந்துட்டான். மத்தவன் எங்க இருக்கான்னு எனக்கு தெரியாது” 
“ம்… எங்க இருக்கான்னு தெரியாதாம் ஆனா செத்துட்டது மட்டும் தெரியுமாம்”
“பத்திரிக்கைல நியூஸ் வந்திருச்சு, அப்போ நான் அமெரிக்கால இருந்தேன்” தனக்கு தெரிந்த உண்மையை மலர் கூற 
“அவனை போட்டதே உங்கப்பன் தான்” அவள் பொய் சொல்கிறாளா என்று அறிய முற்பட்டான் பிரதீபன். 
“என்ன சொல்லுற? ரிஷி தான் சின்ன வயசுலயே வீட்டை விட்டு ஓடிட்டானே! அவனை தேடவே இல்லையே! அப்போ எப்படி…. நீ சொல்லுறத நான் நம்ப ஏதாவது ஆதாரம் இருக்கா?” 
“இல்ல. ஆனா அவன் கடைசியா உங்கப்பாவை மீட் பண்ணி இருக்கான். கோபமாக பேசியும் இருக்கான். அதற்கு பிறகுதான்…” வாக்கியத்தை முடிக்காது நிறுத்த 
“முட்டாள். அவனை காப்பாத்தி வெளியே அனுப்பினதே நான் தான். நிம்மதியான வாழ்க்கையை வாழாம” மலர்விழியின் குரலில் கோபம் கனன்றாலும் கண்கள் சிவந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது.  
ப்ரதீபனுக்கு இது முற்றிலும் புதிய செய்தியாக இருக்க மலர் சொல்வது உண்மையா என்று ரிஷியிடம் கேட்டு தெரிஞ்சிக்கலாமென்று மனம் சொல்ல மலர்விழி தனக்குள் புலம்புவதைக் கவனிக்கலானான். 
“நான் இந்தியா வந்தது ரிஷியை தேடித் கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணி எங்க அப்பா முகத்துல கரிய பூசணும் னு நினச்சேன். ஆனா அவன் செத்துட்டான்னு நியூஸ் பார்த்ததும் என்ன பண்ணுறதுன்னு ஒன்னும் புரியல. அவனை எங்கப்பா தான் கொன்னுட்டாரு னு தெரிஞ்சிருந்தா….. ” தன்னை கடத்தினவர்களின் முன் பலகீனமடையாக் கூடாதென்று மேலும் பேசாது சுதாரித்த மலர்விழி அமைதியாக 
அவள் ரிஷியை கல்யாணம் செய்ய காத்திருந்தாள் என்று சொன்னது ப்ரதீபனின் பின்னால்  அமைதியாக அமர்ந்திருந்த அமுதனுக்கு அதிர்ச்சியோடு கோபம் வர சோபாவை விட்டு எழுந்து அவள் புறம் நடந்தவாறே
“அப்போ… நீ ரிஷியை தான் காதலிச்சு இருக்க, அவன் செத்துட்டான் என்றதும் உங்கப்பாவை பழிவாங்க என்ன பயன் படுத்திக்க பாத்திருக்க, நான் ஒதுங்கிப் போனதால விட்டு விலகிட்ட. இல்ல விலகின மாதிரி நடிச்சியா?  இதுவே நான் உன்ன விரும்பி இருந்தா? எங்க அப்பாக்கு உன் அத்த பண்ணத தான் பண்ணி இருப்ப” என்றவாறே மலர்விழியின் கழுத்தை அமுதன் இறுக்க தான் செய்தவர்களுக்கு இப்படி ஒரு அர்த்தம்  உண்டா என்று அவனை அதிர்ச்சியாக பார்த்திருந்தாள் மலர்.  
  

Advertisement