Advertisement

அத்தியாயம் 10
காசு, பணம் இருந்தால் தான் வாழ்க்கையை அனுபவித்து வாழலாம். அதை சம்பாதிக்க எவ்வழியிலும் செல்லும் ரகம் தான் மதுரிகா. அந்த எண்ணத்தோடுதான் ரிஷியின் பி.ஏ வாக பணிபுரிய ஆரம்பித்தாள். ரிஷியை விட ப்ரதீபனின் அழகும், கம்பீரமும் அவளைக் கவர ப்ரதீபனை பற்றி விசாரித்ததில் கிடைத்த தகவல்களோ அவளுக்கு பாதகமாகவே இருந்தது. 
அவன் பெண்களை ஏறிட்டும் பார்க்க மாட்டான், சின்ன தவறு நேர்ந்தாலும், குதறி எடுத்து விடுவான், குடி பழக்கமும் அவனுக்கு இல்லை என்றிருக்க அவனை போல் ஒருவனை கணவனாக அடைவது எதோ தனக்கு கிடைக்கும் வரம் என்று கருதி அவனை அடைய முடிவு செய்து அவன் வரும் வழியில் எதிர் புறம் நடந்தவள் அவன் அருகில் வரும் பொழுது உயர் குதிகால் காலணி பிசறியது போல் சாய அவனோ அவளை தாங்காது விலகியதால் கீழே விழுந்தது மாத்திரமல்லாது, காலும் பிசகி விட்டது. 
பிரதீபன் அவளை தொடாதது கூட அவன் மேல் நல்லெண்ணத்தை வளர்த்திருக்க அடுத்த திட்டமாக அவனோடு ஒருவரை சந்திக்க சென்ற இடத்தில் மயங்கி விழ செய்வதறியாது அவளை தூக்கிக் கொண்டு டாக்டரிடம் சென்றவன் மருந்தும் வாங்கி கொடுத்து அவள் தங்கி இருக்கும் ஹாஸ்டல் வாசலிலையே இறக்கி விட  தன் திட்டப் படி தான் எல்லாம் நடக்கின்றது என்ற இறுமாப்பில் இரண்டு நாள் கழித்து அதையே காரணம் காட்டி அவனுக்கு நன்றி சொல்ல ப்ரதீபனின் கையை பிடிக்க அவனோ அவளின் கன்னம் சிவக்க அறைந்திருந்தான். 
ப்ரதீபனை அடைவது சிரமம் என்று தன் பார்வையை ரிஷியின் புறம் திருப்ப மது, மாது என்று தன் வாழ்வை பிளேபாயாக ரிஷி வாழ்ந்துக் கொண்டிருக்க, அவனிடம் தாராளமாக பழக கல்யாணம் பண்ணும் எண்ணம் சிறிதும் இல்லாமல் ரிஷியும் தனக்கு தேவை எனும் போது மாத்திரம்  தன் தேவையை தீர்த்துக் கொண்டு மதுரிகாவை ஒதுக்கியே வைக்க, அவனை கல்யாணம் செய்ய வேண்டும் அல்லது அவனிடமிருந்து கணிசமான பணம் கறக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியாமல் அவனோடு இருக்கும் பொழுதை வீடியோ எடுத்து மிரட்ட, மதுரிகாவின் திட்டத்தை உடைத்து  வெளியேற்றினான் ரிஷி. 
ரிஷி பெண்களோடு பழகுவது பிரதீபன் அறிந்திருந்த படியால் அவனுக்கு பெண்களால் எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாதென்று ரிஷி அறியாமளையே அவனை சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்த மதுரிகா ரிஷியிடம் நடந்து கொண்ட விதம் உடனே தெரியவர அவளை பழிவாங்க சந்தர்ப்பம் பாத்திருந்தவன் அவள் ஒருவனோடு ஹோட்டல் அறையில் தங்கும் நேரம் பார்த்து போலீசில் மாட்டி விட்டு டிவி, பத்திரிக்கையென்று அவளின் மானத்தையும் காற்றில் பறக்க விட்டான். 
அவள் கைதாகி வெளியே வரும் பொழுது அவளை கேவலமாக பாத்திருந்த ப்ரதீபனை கண்டு அவளின் மானம் பறிபோக பிரதீபன் தான் காரணம் என்று அவனின் பார்வையிலையே புரிந்துக் கொண்டவள் வன்மத்தோடு அவனை பார்த்து விட்டே அகன்றாள். 
ஜெயிலில் இருந்த காலத்தில் அடியும், உதையும் என நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டு வெளியே வந்தவளுக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. அவள் ஜெயிலுக்கு போனதையும், போன காரணத்தையும் அறிந்து சிலர் கட்டிலுக்கு மட்டும் அழைக்க பிழைப்புக்காக அவர்களோடு சென்றவள் இன்று முழுவேலையாக அதையே செய்ய அப்படி ஒருவனோடு இந்த ஹோட்டலுக்கு வந்த போதுதான் ப்ரதீபனை கண்டாள். 
ப்ரதீபனையோ ரிஷியையோ அவளால் ஒருகாலமும் நெருங்க முடியாது என்று நன்கறிந்திருந்தவள், அவர்களை நெருங்க முயற்சித்தால் கண்டிப்பாக சேதாரம் பலமாக இருக்கும் என்றறிந்து அவர்களை விட்டு விலகியே இருக்க காலப் போக்கில் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருக்க பழகிக் கொண்டாள். 
இன்று பிரதீபன் சிரித்து பேசி ஒரு பெண்ணோடு கொஞ்சிக் கொண்டிருப்பதைக் காணக் காண தான் ஜெயிலுக்கு செல்ல பிரதீபன் தான் காரணம் அவன் சந்தோசம் நிலைக்கக் கூடாதென்று என்ன செய்யலாம் என யோசித்தவள் தனக்கு தெரிந்தவரிடம் கேட்டு அவனோடு அமர்ந்திருக்கும் பெண் அவனுடைய மனைவி என்று அறிந்து அவனை தன்னால் அடைய முடியாத குரோதமும் தலைத்தூக்க தியாவை பின் தொடர்ந்தாள். 
பாம்பும் சாகனும் அடிக்கும் தடியும் உடையக் கூடாது. ப்ரதீபனின் சந்தோஷமும் அழியனும் தானும் மாட்டிக் கொள்ள கூடாது என்பதில் கவனமாக முகத்தில் விழும் படி முடியை போட்டுக் கொண்டு அலைபேசியை காதில் வைத்தவாறே குளியலறை வாசலில் கதவை சற்று திறந்து வைத்து தியாவுக்கு கேட்க்கும் படி
“ஆமாம் டி அந்த கே.வி. ஜுவேல்ஸ் ஓனர் மிஸ்டர் பிரதீபன் தான். இந்த தடவ கிளி மாதிரி ஒரு பொண்ண தள்ளி கிட்டு வந்திருக்கான். எத்தன பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ணி இருப்பானுங்க, இந்த பொண்ணுங்களும் காசுக்காக அவனுங்க பின்னாடியே அலையுதுங்க. நல்லா செலவு பண்ணி, ராணி மாதிரி உணர வச்சி, கடைசில கர்ப்ப சூறையாடிட்டு அம்போன்னு விட்டுடுவாங்க. அப்படி கழட்டி விட்ட ஒரு பொண்ணு கற்பமானதும் அந்த பொண்ணையே ரிஷி வரதன் கல்யாணம் பண்ணி கிட்டான்னு பேச்சு. எந்த புத்துல எந்த பாம்பிருக்கோ? யாருக்கு தெரியும். ஒரு பொண்ண அடையானும் நா இவனுங்க எந்த எல்லைக்குமே போவானுங்க. நியாயம் கேட்டு போனா வீடியோ எடுத்து வச்சி மிரட்டுறானுங்களாம். நல்ல வேல எனக்கு வேல கிடைச்சப்போவே இவனுங்கள பத்தி உண்மைய தெரிஞ்சி கிட்டு வந்துட்டேன். பாவம் இந்த பொண்ணு நல்ல கடல் நீல நிறத்துல ட்ரெஸ் பண்ணி தேவதை மாதிரி இருக்கா, இவன பத்தி தெரிஞ்சி வந்தாளா? தெரியாம ஏமாந்து வந்தாளா?  கடவுள் தான் காப்பாத்தணும்” எதேர்ச்சையாக சொல்வது போல் சொல்லவேண்டியதை சொன்னவள் தான் நினைத்தது நடக்குமா? என்ற பதட்டமும் வர தியாவை திரும்பியும் பாராமல்  அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். 
தன் கணவனின் பெயரையும், கடையின் பெயரையும் மதுரிகா சொல்லவும், தனக்கு விரிக்கும் வலையென்று அறியாத தியாவும் அவள் என்ன சொல்ல போகிறாள் என்று காதைத் தீட்ட அவள் சொன்ன செய்தியில் கோவம் கணக்க கழுவிக் கொண்டிருந்த கவுனையும் உதறி விட்டு மதுரிகா பக்கம் திரும்ப ரிஷியை பற்றி சொன்னதில் ஆணி அடித்தால் போல் திகைத்து நின்றாள். 
விழி அவள் பாட்டியின் உயிரை காத்து, தன் உயிரை காத்து தனக்கு வாழ்க்கை தந்த விழி. குழந்தை உண்டானதிலிருந்து, கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரை மறைத்து, முகத்தில் தோன்றும் கவலை ரேகைகளை மறைக்க முடியாமல் தவித்த விழி. கணவன் அருகில் இல்லாமல் கணவனை பற்றி கேட்ட பொழுதெல்லாம் மழுப்பி பதில் சொன்ன விழி. அக்கணம் தியாவின் மனதில் மதுரிகா சொன்னது உண்மையே என்று பதிய உடனே விழியிடம் கேட்டு உறுதி படுத்திக்க கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கணவனையும் மறந்து வீடு நோக்கி பயணித்தாள். 
தியாவின் நெஞ்சமோ இருதலைக் கொல்லியாக தவித்துக் கொண்டிருந்தது. ரிஷிக்கு ஆக்சிடன் நடந்த விஷயம் தெரியும் அதனால் தான் அவன் விழியை தேடி வராமல் இருந்தான் என்று நினைக்க, மதுரிகா பேசியதில் குழம்பியவள் ரிஷி, கயல் அந்நியோன்யத்தைக் நினைத்து கண்டிப்பாக அப்படி ஏதும் இருக்காது, என்று மனம் சொல்ல மூளையோ கயல்விழி கணவனை பிரிந்து வந்ததன் காரணம் தேட சொல்லி தூண்டியது. அதை காயலிடமே கேட்பது தான் சரி என்று முடிவு செய்தவள் எல்லாவற்றையும் மறந்து அவளை தேடித் சென்றாள்.
வாஷ்ரூம் சென்ற தியா வரும் வரை அவளுக்கு கொடுக்க போகும் பிறந்த நாள் பரிசில் கடைசியாக கொடுக்க வேண்டிய பரிசாக தங்க கொலுசை கையிலெடுத்து பார்த்த பிரதீபன் அதை அவள் காலுக்கு அணிவிக்கும் தருணம் அவள் முகம் வியப்பில் விரிவதை கற்பனையில் கண்டு அகமகிழ்ந்தவன், அவள் வரும் முன் அதை கோட் உள் பாக்கெட்டில் மறைத்து வைத்து காத்திருந்தான். அவள் வராது போகவே அவளை தேடித் செல்ல அவள் டாக்சியில் ஏறியதும் என்ன எதோ என்று பயந்தவன் தானும் அவளை பின் தொடர்ந்தான். 
  தியா டாக்சியிலிருந்து இறங்கும் போது ப்ரதீபனும் வந்து சேர அவள் தங்களது வீட்டுக்கு செல்லாது ரிஷியின் வீட்டுப் பக்கம் நடப்பதைக் கண்டு தியாவின் கையை பிடித்து நிறுத்தினான் பிரதீபன். 
“என்னாச்சு தியா ஏன் சொல்லாம கொள்ளாம வந்துட்ட? பாட்டிக்கு ஏதாவது னு போன் வந்ததா? இல்லையே உன் போன மேசைல வச்சிட்டு தானே வாஷ் ரூம் போன” மனைவியின் திடீர் செக்கையை புரிந்துக் கொள்ள முடியாத குழப்பத்தில் பிரதீபன் பேச 
தனக்கு இருந்த குழப்பத்தில் கணவனையே மறந்து விட்டுட்டு வந்தேட்டேனே என்ற குற்ற உணர்ச்சி எட்டி பார்த்தாலும், 
“நான் உடனே விழி கிட்ட ஓரு முக்கியமான விஷயம் பேசணும். வழி விடுங்க” அவனை சுற்றிக் கொண்டு செல்ல முற்பட 
அவளின் முகத்தில் இருந்த குழப்பரேகைகளை கண்டு தாம்பத்திய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க போகும் நேரத்தில் கயலிடம் தன் மனைவி அதை பற்றித்தான் எதோ கேட்க போகின்றாள் என்று தவறாக நினைத்த பிரதீபன் 
“மணி என்னனு பாத்தியா? அம்மு தூங்கி இருப்பா? இப்போ போய் அவளை டிஸ்டப் பண்ணலாமா? என்ன டவுட்னாலும் என்ன கேளு, எல்லாம் கிளியர் பண்ணி தரேன்” என்றவன் அவளை அணைத்து கழுத்து வளைவில் முத்தம் வைக்க 
அவன் சொன்னதை தப்பார்த்தம் கொண்டு வார்த்தையை விட்டாள் தியா. 
“ஆமா ஆமா ஆயக்கலையில் பி.எச்.டி செஞ்சவராச்சே! உங்களுக்கு தெரியாததா?” சொல்லியவாறே அவனை தன்னிடமிருந்து பிரிக்க முயற்சி செய்ய  
“ஏய் என்னடி ஒரு மாதிரி பேசுற” தியாவின் குரலில் இருந்த வேறு பாட்டை உணர்ந்து பிரதீபன் அவளை ஏறிட அவளின் கண்களில் இருந்த வெறுப்பும், கோபமும் அவனின் புருவம் சுருக்க 
“என்ன பிரச்சுனை?” கொஞ்சம் அதட்டலாகவே ஒலித்தது அவன் குரல். 
“உங்க நண்பன் விழிய ஏமாத்தி தான் கல்யாணம் பண்ணாரா?” 
ரிஷி அண்ணா என்ற அழைப்பு  இன்று உங்க நண்பன் என்று மாறி  கேட்ட விஷயம் அவ்வாறிருக்க,  யோசனையாக அவளை பார்த்த பிரதீபன் மௌனம் காத்தான். ரிஷியின் கடந்த கால வாழ்க்கையை பற்றி கயல் தியாவிடம் சொல்லி இருப்பாள் என்று நினைத்திருக்க, அவளிடம் விஷயம் பகிரப்படவில்லை என்று புரிந்துக் கொண்டவனுக்கு கயலின் மேல் மேலும் அன்பு பெருகியது. 
வீட்டுக்கு வெளியே பேச வேண்டிய விஷயம் இல்லை என்பதால் தியா திமிரத் திமிர அவளை வீட்டுக்குள் இழுத்து வந்து அறையினுள் தள்ளி கதவை சாத்தியவன் 
“இந்த விசயத்த உன் கிட்ட யார் சொன்னா?” கர்ஜனைக் குரலில் 
“இப்போ நீங்க நடந்துக் கொள்ளுறதுலயே! புரியுது உங்க ரெண்டு பேரோட நடத்தையை. யார் சொன்னா என்ன, விஷயம் உண்மை தானே!”
“அது உண்மையாக இருந்தாலும் அத பத்தி ரிஷியும், கயலும் தான் பேசி முடிவெடுக்க வேணும், நீயோ நானோ தலையிட முடியாது. ஆனா அவங்க ரெண்டு பேரும் புரிஞ்சிக்க கிட்டு சந்தோசமா தான் வாழுறாங்க. வீணா இத பத்தி பேசப் போய் அவ மனச கஷ்டப்படுத்தாத” 
ரிஷி தான் திருந்திட்டானே இப்போ என்ன பிரச்சினை என்று உனக்கு என்று தியாவை உறுத்து விழித்தான் பிரதீபன். 
ரிஷி, கயல் அந்நியோன்யத்தை கண்டிருந்தாலும், ஏதோ கட்டாயத்தின் பெயரில் ஸ்ரீராமுக்காக கயல் ரிஷியோடு வாழ்வதாக எண்ணினாள் தியா. “அவ எப்படி அப்படி ஒரு கேடு கெட்டவனோடு…” தியா முடிக்க முன் 
“ஏய்….” என்று கையை ஓங்கி இருந்தான் பிரதீபன் “இன்னொரு வார்த்த ரிஷியை பத்தி பேசின நான் பொல்லாதவனாகிடுவேன்” 
அவனின் வெறிகொண்ட முகத்தை கண்டு உள்ளுக்குள் நடுங்கினாலும் அவனின் மிரட்டலுக்கு தான் அஞ்சவில்லையென்று 
“நான் எதுக்கு அவரை பத்தி பேச போறேன். பொண்ணுங்கள ஏமாத்தி, அவங்கள அனுபவிச்சி கைகழுவுவதுதானே உங்க வேல, நீங்க சொல்லுங்க எத்துணை நாளா திட்டம் போட்டீங்க?”
“என்ன சொல்லுற புரியல” மனைவியின் பேச்சு செல்லும் பாதை புரியாது பிரதீபன் 
“நான் இந்த கல்யாணத்த நிறுத்த சொல்லியும் பண்ணிக் கிட்டீங்களே! நல்லா தெரிஞ்ச பொண்ணா, அம்மா, அப்பா இல்ல, வயசான பாட்டி மட்டும் தானே! கேக்க ஆளில்ல. நாம் எப்படி வேணாலும் இருக்கலாம் னு என்ன கல்யாணம் பண்ணி கிட்டீங்களா?” 
“என்ன பேசுற நீ? புரிஞ்சி தான் பேசுறியா?” கோபம் கணக்க பிரதீபன் 
“நீங்களும் உங்க நண்பனும் பொண்ணுங்களோட கூத்தடிக்கிறது தெரியாம இருக்கணும் னு பொண்டாட்டிய மதிக்கிறதா, காதலிக்கிறதா ரொம்ப நல்லா நடிக்கிறீங்க, மூணு மாசமா என்னமா திட்டம் போட்டீங்க? இன்னைக்கி தான் க்ளைமேக்ஸ் ஆனா பாருங்க நீங்க நினைச்சது தான் நடக்கல” 
கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று அறியாமலே தியாவின் வார்த்தைகள் எல்லை கடக்க, தூங்கிக் கொண்டிருந்த ப்ரதீபனின் மறுமுகம் விழித்துக் கொண்டது. 
“ஆமாம் டி நாங்க பொண்ணுங்களோட கூத்தடிப்போம், அது எங்க இஷ்டம். நமக்கு கல்யாணம் ஆகி மூணு மாசத்துக்கு மேலாகுதே!  எப்போவாச்சும் குடிச்சிட்டு வந்தேனா? இல்ல நடு இரவுல வீடு வந்திருக்கேனா? வெளிய தங்கி இருக்கேனா? இல்ல உன்ன என் இஷ்டத்துக்கு நடத்தினேனா?” 
கோபத்தில் இருந்த தியாவோ கணவன் சொல்ல வருவதை புரிந்துக் கொள்ளாது அவன் வாக்கு மூலம் கொடுத்ததாகவே நினைத்து 
“எனக்கு உங்க கூட வாழ முடியாது, டிவோர்ஸ் வேணும், நான் நாளைக்கே ஊட்டிக்கு போறேன்” என்று தன் முடிவை சொல்ல அவளின் கழுத்தை இறுக்கி இருந்தான் பிரதீபன். 
“என்ன நீ கேட்ட உடனே நான் உனக்கு டிவோர்ஸ் தரணுமா? இப்போ சொல்லுறேன் கேட்டுக்க உன்ன நான் கல்யாணம் பண்ணது என் அம்முகாக, அவளுக்காக நீ என் கூட இருந்தே ஆகணும், மீறி போகணும் னு நினைச்சே கொன்னுடுவேன்” அவன் பிடி இறுகியத்தில் தியா இரும அவளை கட்டிலில் தள்ளி விட்டவன் கதவையும் சாத்தி விட்டு  வீட்டை விட்டு கிளம்பினான். அந்த நள்ளிரவில் வண்டியை செலுத்தியவனின் மூளையோ கொதித்துக் கொண்டிருக்க வண்டியும் அதி வேகமாக சென்று கொண்டிருந்தது. 
“அவ எப்படி அப்படி என்னை பற்றி தரைகுறைவாக நினைக்கலாம்? கணவன் என்ற போதும் உரிமையை எடுத்துக் கொள்ளாமல், அவ மனச புரிஞ்சி நடந்துக்கணும் னு தானே முயற்சி செஞ்சேன். அவ கேட்டு கிட்டதால தானே ஐஞ்சி நாள் பொறுமை காத்தேன். பொறுக்கின்னு சொல்லுறா? பொறுக்கி மாதிரி நடந்திருந்தா தெரியும் அவளுக்கு. ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து பாத்து பண்ணேன். கொஞ்சமாச்சும் புரிஞ்சிக்காம பேசுறா” வண்டியிலையே சுற்றியவன் கோபம் கொஞ்சம் அடங்க வீட்டுக்கு போக பிடிக்காமல் ஹோட்டலில் பதிவு செய்த அறைக்கு திரும்பினான். 
எப்படியெல்லாம்  கழிய வேண்டிய இரவு, கனவுகளை சுமந்து காத்திருந்த இரவு, அடங்கா ஆசைகளை   அடக்கி ஆவலோடு எதிர்பார்த்த இரவு, காலையில் இருந்தே மனைவியை சப்ரைஸுக்கு மேல் சப்ரைஸ் கொடுத்து சந்தோச மழையில் நனைய வைக்க எல்லாவற்றுக்கும் சேர்த்து இரவில் மொத்தமாக அவனை துன்பக் கடலில் மூழ்க வைத்திருந்தாள் அவனின் மனையாள். 
தியாவுமே ப்ரதீபனிடம் அவ்வாறு பேச நினைத்திருக்க வில்லை. கயலிடம் விளக்கம் கேட்டிருந்தால், அவள் சொல்லும் விதத்தில் சொன்னால், புரிந்துக் கொண்டிருப்பாள். தியா ரிஷியை தரக்குறைவாக பேச அதை பிடிக்காமல் பிரதீபன் பேச இறுதியில் வீணான பேச்சால் தங்களது நிம்மதியையும், சந்தோஷத்தையும் இழந்து நின்றனர்.   
தியா பொறுமையாக யோசித்திருந்தாலே உண்மை புரிந்திருக்கும். ஆனால் அவளோ பிரதீபன் அவளது கூற்றை உண்மை படுத்துவது போல சொன்னதை மாத்திரம் பிடித்துக் கொண்டு பிடிவாதம் பிடித்தாள்.  
அடுத்த நாள் காலை இருவருக்கும் இருவிதமாக விடிந்தது. எந்நாளும் கணவனின் அணைப்பில் துயில் கலைபவள் இன்று அவனின் அணைப்பும், மெல்லிய சுவாச மூச்சும் இல்லாமல் கண்விழிக்க எதையோ இழந்தது போல் உணரலானாள்.  
ஹோட்டல் அறையில் கண் விழித்த பிரதீபன் தியா தன்னை நம்பவும் இல்லை, முழுமனதாக தன்னை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இந்த கல்யாணத்தையே பாரமாக நினைக்கின்றாள் என்று தீர்மானித்து சில, பல திட்டங்களோடு வீடு சென்றான். 
வீட்டுக்கு வர பார்வதி பாட்டி இன்னும் வீட்டுக்கு வந்திருக்க வில்லை. தியா தோட்டத்தில் இருப்பதாக வேலையாள் சொல்ல, தனதறைக்கு சென்றவன் குளித்து உடைமாற்றி வர பாட்டியும் உள்ளே வந்து கொண்டிருந்தார். 
“நீங்க ரெண்டு பேரும் காலையிலையே வந்துட்டீங்களா?”
அவரின் கேள்விக்கு பதில் அளிக்காது அலைபேசியில் மூழ்கி இருந்தவன் வேலையாள் வந்து அவனை சந்திக்க ஆட்கள் வந்திருப்பதாக சொல்ல அவர்களை காரியால அறையில் சந்தித்தவன் பார்வதி பாட்டியிடம் அவர்களை அறிமுகப் படுத்தி வைத்தான். 
அவர்களோ சமையலுக்கும், வீட்டு வேலைகளுக்கும், தோட்ட வேலைக்கும் என்று வந்தவர்கள். பாட்டி மறுத்து பேச முற்பட 
“இனி இவர்கள் எல்லாம் பார்த்துக் கொள்வார்கள்” என்று மாத்திரம் சொன்னவன் மனைவியை பற்றி விசாரிக்காமலையே கிளம்பினான். 
அவனின் முகத்தை பார்த்து பாட்டியாலும் ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. மனைவியை வேலை வாங்க பிடிக்காது இந்த ஏற்பாட்டை செய்திருப்பான் என்று அவர் எண்ணிக் கொண்டார். 
அதன் பின் பிரதீபன் தியாவை எவ்வளவு தவிர்க்க முடியுமோ! அவ்வளவு தவிர்க்கலானான். வீடு வர இரவானது, அடிக்கடி சென்னை சென்று அங்கே உள்ள கடை வேலைகளை பார்க்க வேண்டும் என்று ஓரிரண்டு நாள் அமுதனோடு தங்கி விட்டே வந்தான். அப்பொழுதுதான் மலர்விழி அமுதனின் வாழ்க்கையில் நுழைய முற்படுவதைக் கண்டு கொண்டான்.

Advertisement