Advertisement

 வசந்தம் 9
அன்று அலுவலகமே பரபரப்பாக இருந்தது காரணம் இன்று தன் மகனிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டு ஓய்வு பெற போகிறார் அவர்களின் எம்.டி. வரப்போகும் இளம் எம்.டி அவர்களை வரவேற்கத்தான் இந்த பரபரப்பு.
நேகா வேறு மாதிரியான சந்தோஷத்தில் இருந்தாள். அது என்ன என்றால் இன்றில் இருந்து ரமேஷின் கீழ் அவள் வேலை செய்ய போகிறாள். அவள் மனதின் சந்தோஷம் முகத்தில் ஒரு தனி அழகை கொடுத்தது.
“ஹாய் நேகா” என்ற ரமேஷை பார்த்தவள் “குட்மார்னிங் பாஸ்” என்றாள் 
“என்ன நான் உனக்கு பாஸா” ரமேஷ் 
“ஆமா” நேகா 
“அப்போ இப்ப வரப் போறாறே அவரு” ரமேஷ் 
“அவர் உங்களுக்கு பாஸ்” நேகா 
“ஓ… ஓகோ… நீங்க அப்படி வரீங்க. சரி சரி, வாங்க நாம இப்ப போய் புது பஸுக்கு குள்ளா போடுவோம்” ரமேஷ் 
“என்ன” நேகா 
“அதாம்மா ஐஸ் வைப்போம்” ரமேஷ் 
அவனை முறைத்தவள் “நம்ம வேலையை ஒழுங்கா செய்தாலே போதும், போலாமா” என்று முன்னே நடக்க “ஏய் குட்டிமா” என்ற அவன் அழைப்பில் ஒரு நிமிடம் தேங்கியவள் பின் நடக்க வேகமாக வந்து அவளோடு இணைந்து கொண்டான்.
“நேகாவோட கோபம் போக நான் ஒரு காமெடி சொல்லவா, அடம் பிடிக்கிற ஊர் எது?” ரமேஷ் 
அவள் வாய் திறக்காமல் இருக்கவும் “நானே சொல்றேன், சண்டிகர். அடுத்து ஒண்ணு பூனைக்கு பிடித்த ஸ்கூல் எது?.”
அவள் அப்படியே நின்றுவிட்டாள் “எதுக்கு இவ்வளவு கோபம் பதில் தெரியலைனா நான் சொல்ல போறேன் அது எலி’மென்ரி ஸ்கூல்” என்றவனை அடிக்க நேகா துரத்த விரைந்து வாசல் நோக்கி ஓடினான் ரமேஷ்.
சரியாக அதே நேரம் காரை விட்டு இறங்கினான் வெற்றி. முதலில் வந்த தன் நண்பனை பார்த்து மலர்ந்த அவன் முகம் பின்னோடு ஓடி வந்தவளை பார்த்ததும் கோபம் குடி கொண்டது. தன்னை வரவேற்க வந்த  அனைவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன். அவர்களுடன் இணைந்து தொழிலாளர்கள் கூடி இருக்கும் அரங்கத்திற்கு சென்றான்.
முதலில் பேசிய மகாதேவன் “உங்கள் புதிய எம்.டி. மிஸ்டர் வெற்றி அவர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது  தான் லண்டனில் MBA படித்தது மட்டும் இன்றி ஓர் ஆண்டு தொழில் பயிற்சியும் முடித்து விட்டு தாயகம் திரும்பி உள்ளார். இனி உங்களின் நிறை குறைகளை இவரிடம் தெரிவிக்கலாம். பழக இனிமையானவன் தவறு பொறுக்காதவன். எனக்கு அளித்த ஒத்துழைப்பை என் மகனுக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.” என தன் உரையை முடித்துக் கொண்டார்.
அடுத்து வந்த வெற்றி “அனைவருக்கும் வணக்கம் உண்மையான உழைப்புக்கு என்றும் மதிப்பளிப்பவன் நான். உங்களுக்கு என்ன உதவி தேவை என்றாலும் என்னுடைய எண் அறிவிப்பு பலகையில் இருக்கும் நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அது எந்த நேரம் என்றாலும் சரி எந்த தயக்கமும் வேண்டாம். நன்றி.” என்று முடித்தான்.
தொழிலாளர்கள் சார்பில் அவர்கள் தலைவர் மாலை அணிவித்து மலர் செண்டு  வழங்கினார். அனைவரும் தங்கள் வாழ்த்தையும் மகிழ்ச்சியும் பகிர்ந்து கொண்டனர். அனைவரிடமும் இன்முகமாக பேசினான் வெற்றி அவ்வப்போது ரமேஷை பார்ப்பதையும் தொடர்ந்தான். 
ரமேஷ் நேகாவிடம் ஒரு பூங்கொத்தை கையில் கொடுத்து வெற்றிக்கு கொடுக்க சொன்னான். “இது எதுக்கு ரமேஷ் நான் சும்மா வாழ்த்துக்கள் சொல்றேன்” நேகா.
“நான் சொல்றத நீ செய் நான் தானே உன்னோட பாஸ்” ரமேஷ் 
“சரி ஆங்… ஒரு ஐடியா” நேகா 
“என்ன அது” ரமேஷ் 
“நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே கொடுப்போம்” சற்று யோசித்தவன் சரி என்று தலையாட்ட இருவரும் வெற்றியை தேடினர்.
அங்கு வந்த உதவியாளர் அன்பு “என்ன சார் வேணும்” என்றார்.
“வெற்றி எங்க அன்பு” ரமேஷ் 
“ஐயா அப்போதே அவர் அறைக்கு சென்றுவிட்டார்” அன்பு 
“சரி நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்” என்ற ரமேஷ் நேகாவை அழைத்துக் கொண்டு வெற்றியின் அறைக்கு சென்றான்.
“எக்ஸ்கீயுஸ் மீ சார்” ரமேஷ் 
“யா கம் இன்” வெற்றி 
உள்ளே சென்றவர்கள் மரியாதை நிமித்தம் மகாதேவன் இடம் ஒரிரு வார்த்தை பேசி விட்டு வெற்றி இடம் வாழ்த்துக்கள் கூறி மலர் கொத்தை கொடுத்தனர். இன்முகமாக வாங்கிக் கொண்டவன் ஒரு நொடி நேகாவை ஆழ்ந்து நோக்கியவன் அவளை அனுப்பி விட்டு ரமேஷை அமரச் சொன்னான். தன் தந்தையிடன் பார்வையிலேயே அனுமதி பெற்றவன் ரமேஷ் கையில் ஒரு உறையை வைத்தான்.
தன் வேலை நியமன கடிதம் என்பதை அறிந்த ரமேஷ் “தாங்ஸ்” கூறி பெற்றுக் கொண்டான். அதனை பிரித்துப் பார்க்க வெற்றி கூறவும் உறையை பிரித்துப் படித்தவன் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி.
“என்ன வெற்றி இது, நான் இதை எதிர் பார்க்கல” என்றவனிடம் “எஸ் ரமேஷ் யு ஹேவ் டு டூ இட்” என்றான் வெற்றி 
“ஆனால் ஏன்” ரமேஷ் 
“யு ஆர் தி ரைட் பெர்சன் டு டூ” வெற்றி 
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” ரமேஷ் 
“சரி மாலை வரை எடுத்துக்க பட் யு பெஸ்ட் பி தேர் டுமாரோ மார்னிங்” வெற்றி 
எழுந்து சென்றவன் ஒரு நிமிடம் நின்று இன்று நேகாவுக்கு லீவு கிடைக்குமா”
ஏதோ கேட்க வந்த வெற்றி “சரி” என்றான்
நேகாவின் இடத்திற்க்கு சென்றவன் “கிளம்புவோமா”
“எங்க” நேகா 
“வீட்டுக்கு போகலாம் நேகா அங்க போயி பேசிக்கலாம்” ரமேஷ் 
“சரி சொல்லிட்டு வர்றேன்” நேகா 
“நானே சொல்லிட்டேன் வா போகலாம்” ரமேஷ் 
அவனை உற்று பார்த்த நேகா சற்றும் யோசிக்காமல் அவன் நெற்றியில் கை வைத்தால் “என்ன பண்ற நேகா” 
“உடம்பு சரியில்லையா”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை உங்கிட்ட பேசணும்” எனவும் இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்.
ரமேஷ் நெற்றியில் நேகா கை வைத்த நேரம் ஒவ்வொரு பகுதியாக சிசி டீவியில் பார்த்து வந்த வெற்றி இதை பார்த்ததும் கோபமாக இருக்கையை விட்டு எழுந்தான். வெற்றி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே இருந்த மகாதேவன் அவனின் திடீர் கோபத்தை பார்த்து “வாட் ஹாப்பன் வெற்றி எனி பிராப்ளம்”
“நோ டாட் நத்திங்” என்ற வெற்றி கிளம்பி செல்லும் இருவரையும் பார்த்தவன் என்ன தோன்றியதோ  நுழைவு வாயில் சிசி டீவியை பார்த்தான்.
ரமேஷ் பைக்கில் நேகா அமர்ந்து செல்வதை பார்த்தவனுக்கு தன் முடிவு சரியே என்று தோன்றியது.
வீட்டிற்க்கு வந்தவர்களை பார்த்ததும் “என்னாச்சு தம்பி” என்று வந்த அன்னம்மாவிடம் “ஒண்ணும் இல்லம்மா உங்க கையால ரெண்டு பேருக்கும் ஸ்டிராங் காபி குடுங்க” ரமேஷ் 
காபி குடித்துவிட்டு அமர்ந்த நேகா கையில் தன் வேலை நியமன கடிதத்தை கொடுத்தான் ரமேஷ். அதை படித்த நேகாவிற்கு அத்தனை அதிர்ச்சி.
அப்படி என்ன அந்த கடிதத்தில் இருந்தது  என்பதை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
வசந்தம் வரும்…..
வசந்தம் 10
அலுவலகம் சென்று குருபிரசாத்திற்க்கு காத்திருந்த சிவா தன் உதவியாளர் ராம்குமாருக்கு அழைத்து தான் வர வேண்டிய நேரம் இன்றைய அலுவல் தான் சந்திக்க வேண்டிய நபர்கள் குறித்து கேட்டு கொண்டான்.
அவனுக்கு காபி கொண்டு வந்த மஞ்சுளாவை பார்த்ததும் பேசி முடித்து கைபேசியை வைத்தவன் “என்ன மஞ்சும்மா தரிசனம் எல்லாம் எப்படி இருந்தது எனக்கு என்ன வாங்கீட்டு வந்தீங்க”
“நல்லா இருந்தது தம்பி எங்களுக்கு எல்லாமே நீங்க தான் செய்றீங்க உங்களுக்கு நான் வாங்கி தர” என்றவரை “அப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது”என்றான் சிவா.
சிவா முப்பதை கடந்த இளைஞன் நல்ல உடற்பயிற்சி செய்து உரமேறிய தேகம் கருத்த கலையான முகம் யார் சொன்னார்கள் உதட்டிற்கு அருகில் இருக்கும் மச்சம் பெண்களுக்கு மட்டுமே அழகு என்று இதோ கருத்த மீசைக்கு அடியில் இருக்கும் உதட்டோடு சேர்ந்து சிரிக்கும் மச்சம் அவன் சிரிப்பிற்க்கு தனி கவர்ச்சியை சேர்த்தது.
“இருப்பா காபி ஆறிருச்சு நான் வேற கொண்டு வாரேன்” என சென்ற மஞ்சுளா திரும்பி வந்தவர் “இந்தா தம்பி பழனி போனோல அங்க வாங்கிட்டு வந்தேன் அம்மா கிட்ட கொடுத்துருங்க” என்றவர் சிவாவை கை நீட்ட சொல்லி வாங்கி வந்த கயிற்றில் ஒன்றை அவன் கையில் கட்டினார் “சீக்கிரம் ஒரு மகாலட்சுமி உன்னை தேடி வருவாள்” என்று மஞ்சுளா சொல்லி முடிக்கவும் வாணி வரவும் சரியாக இருந்தது “அம்மா கோமதி அக்கா கொடுக்க சொன்னாங்க” என காபியை கொடுத்து விட்டு சென்றாள். செல்லும் அவளையே பார்த்து இருந்தான் அங்கு ஒருவர் இருப்பதை அவள் உணர்ந்ததாகவே தெரியவில்லை ஏதோ கேட்க வந்த சிவா “வாப்பா சிவா ரொம்ப நேரம் ஆச்சா” என்ற குருபிரசாத் குரலில் அவரிடம் திரும்பினான். மஞ்சுளா விடை பெற அவர்கள் இருவரும் மற்ற வேலைகளை பார்த்தனர்.
ஒரு மணி நேரம் சென்ற பின் “சரிங்க அங்கிள் இந்த ஞாயிறு அம்மா வர்றேனாங்க அன்று பார்க்கலாம்” என்று விடைபெற்றான். இப்போது அவள் எங்கும் தென்படவில்லை என்ன பண்ற சிவா இது நல்லதில்லை என அவன் மனம் கூற ஏய் நான் என்ன பண்ணே சும்மா பார்த்தேன். 
எது கொஞ்ச நேரம் முன்ன அவள் முகத்தை முறைச்சு பார்த்தியே, நான் ஒண்ணும் முறைச்சு பார்க்கல. அப்படி வா வழிக்கு நல்லா மாட்டுனியா என்ன தப்பு பண்ணே மாட்ட. நீ எப்பவும் பொண்ணுங்கல பார்த்தா முறைக்க தானே செய்வ. 
எல்லாரையும் முறைக்க நான் என்ன லூசா, இதுவே உனக்கு இப்பத்தான் தெரியுமா. வேணா நீ ரொம்ப பேசுற அப்புறம் என்ன அழகான பொண்ணு வந்து பேசுனா கடலை போடுவானா அதை விட்டு எனக்கு அவங்க யாரையும் பிடிக்கல. அப்ப இந்த பொண்ண பிடிச்சுருக்கா நான் எப்ப அப்படி சொன்னேன். மனம் அவனை என்ன கேட்டிருக்குமோ அதற்குள் அலுவலகம் வர இவற்றை பின் தள்ளி தன்னை அலுவலில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டான்.
ஆசிரமத்தில் வாணியின் வேலை உறுதியாக வினய் தூங்கும் நேரத்தில் அலுவலக அறையிலும் ஏனைய நேரம் சமையல் அறையிலும் அல்லது தோட்டத்திலும் கழிந்தது. அவ்வப்போது வந்து செல்லும் பழைய நினைவுகளை தவிர்த்து பார்த்தாள் வாணியின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக செல்ல தொடங்கியது.
வசந்தத்தின் வாசல் வரை வந்து விட்ட வாணியை வசந்தம் தன்னுடன் இருத்திக் கொள்ளுமா இல்லை விலகி செல்லுமா அடுத்து வரும் பதிவுகளில் பாப்போம். 
நன்றி

Advertisement