Advertisement

வசந்தம் 7
நேகா வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் எப்படி சென்றது என்று தெரியவில்லை. சுகுணாவிடம் இருந்து தன் வேலையை திறம்பட கற்றுக் கொண்டாள். அவளது விவேகமும், ஆர்வமும் சுகுணாவிற்குவிட்டது. 
வார நாட்களில் வேலை விடுமுறை நாட்களில் தனது புதிய நண்பர்களுடன் அரட்டை,  பார்க், பீச் என்று சுற்றி வந்தாள். எங்கு சென்றாலும் யாரோ தன்னை தொடர்வது போல் ஒரு எண்ணம் வருவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
அன்றும் வழக்கம் போல தனது இரண்டு சக்கர வாகனத்தில் அலுவலகம் வந்து இறங்கினாள். தன் உள்ளுணர்வு ஏதோ சொல்ல சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை. ‘என்னடா இது’ என தனக்குத் தானே கேட்டுக் கொண்டு தன் இடம் சென்றாள்.
சிறிது நேரத்தில் சுகுணாவிடம் இருந்து அழைப்பு வர குறிப்பேடு பேனா சகிதம் அவர் அறைக்கு சென்றாள்.
“எக்ஸ்கீயுஸ் மேம்” நேகா 
“யா கம் இன் நேகா” என்றார் சுகுணா. உள்ளே இன்னும் ஒருவர் இருக்க தயங்க அவர் பார்வையில் உள்ள சென்றாள்.
“முதலில் இந்த தயக்கம் இருக்கக்கூடாது வான்னு சொன்ன பிறகு ஏன் யோசிக்க. சரி மீட் மிஸ்டர் ரமேஷ் யுவர் நியூ பாஸ்” என்று அவர் கூறிய பிறகு தான் ரமேஷை பார்த்தவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
“நீங்க வர்றதா சொல்லவே இல்லை” என்றவள் சட்டேன்று தவறு செய்த குழந்தை  போல சுகுணாவை காண அவர் அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார்.
“நீ சிரிக்க கூட செய்வியா நேகா” என அவர் கேட்கவும் மின்னல் போல ஒரு வெட்கம் அவள் முகத்தில்.
இங்கு ஒருத்தி உன்னையே உயிராக நினைத்து வாழ நீ போன இடத்தில் ஒருத்திய தேடிப் பிடித்து பக்கத்திலேயே கூட்டி வந்து விட்டாயா. உன்ன பார்த்ததும் அவ முகத்தில் வானவில் போல பல வர்ணம் வந்து போகுது. இனிமே அவளை நீ பார்க்க நான் விட்டா தானே.
சுகுணாவிடம் விடைபெற்று இருவரும் வெளியே வந்தனர். “அப்புறம் எப்படி இருக்கு வேலை” ரமேஷ் 
“நல்ல இருக்கு எம்.டி சாரும் ரொம்ப நல்ல மனிதர்” நேகா 
“என்ன நீ சார பாத்தியா” ரமேஷ் 
“இது என்ன கேள்வி வந்த இரண்டு நாளிலேயே சார பார்த்து விட்டேன்” நேகா 
“நீ யாரச் சொல்றே” ரமேஷ் 
“மகாதேவன் சார்” நேகா 
“ஓ.. அதான பார்த்தேன்” பேசிக் கொண்டே இருவரும் கேண்டீன் வந்திருந்தனர். இருவருக்குமாக தேநீர் மற்றும் வடையோடு வந்தான் ரமேஷ்.
“நேற்று நான் பேசும் போது கூட நீங்க வர்றதா சொல்லவே இல்லை” நேகா 
“சும்மா ஒரு சர்ப்பிரைஸ் குடுக்கலாம் தான் எப்புடி” ரமேஷ் 
சூப்பர் என தன் விரல்களால் அபிநயம் பிடித்தால் நேகா. “ இங்கு வந்த பிறகு உங்கிட்ட நிறைய மாற்றம் தெரியுது” என்றான் ரமேஷ் 
“அதுக்கு என் நண்பர்கள் தான் காரணம் இன்றைக்கு சாயங்காலம் பார்ப்போமா” குதூகலத்துடன் கேட்டவளிடம் சரி என தலையாட்டினான் ரமேஷ் 
“நான் கிளம்புறேன் மாலை பார்ப்போம் பை” என்று செல்பவளை கனிவோடு பார்த்திருந்தான்.
என்னடா எந்த கோட்டையை முற்றுகையிட இந்த யோசனை” என்று வந்து அமர்ந்தவன் நம் கதையின் ஒரு நாயகன் வெற்றி. ஆறடிக்கும் சற்று குறைவான உயரம் கருப்பு என்றாலும் கொஞ்சம் பொலிவுடன் கூடிய கலையான முகம் எப்போதும் கடுமை குடியிருக்கும் முகத்தில் தன் நண்பனை பார்த்த மகிழ்ச்சி சிறிய கீற்றாய்.
“எப்ப வந்த வெற்றி” என்றான் ரமேஷ்.
“நீதான் முன்னாடி பின்னாடி யார் இருக்க அப்படினு தெரியாத அளவுக்கு வேற உலகத்திலே இருந்துயே” வெற்றி 
“என்ன சொல்ல வர்ற” ரமேஷ் 
“நீ யோசிச்சுக்கிட்டு இருந்தத சொல்றேன்” வெற்றி 
“ஓ” என்ற ரமேஷிடம் “ஏன் நீ என்ன நினைத்தாய்” வெற்றி 
“ஐயா சாமி நான் ஒண்ணுமே நினைக்கல” ரமேஷ் 
“சரி ரமேஷ் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டுமே” வெற்றி 
“சொல்லு” ரமேஷ் 
“இப்ப வேண்டாம் மாலை பார்ப்போம்” வெற்றி 
“சாயங்காலமா எனக்கு வேறு வேலை இருக்கு” ரமேஷ் 
“எந்த வேலையா இருந்தாலும் சீக்கிரம் முடிச்சுகோ மாலை ஐந்து மணி நானே வந்து கூட்டிட்டு போறேன் பை” வெற்றி 
இனி ஒண்ணும் பண்ண முடியாது நேகாகிட்ட சொல்லி கொள்ளலாம் என நினைத்தவாரே வீட்டிற்க்கு கிளம்பினான் ரமேஷ்.
தன்னால் நேகா படப்போகும் துன்பம் பற்றி அறியாமலே அவளுக்கு நன்மை செய்வதாக நினைத்து அடுத்த அடுத்த முடிவுகளை ரமேஷ் எடுத்து சில  சிக்கல்களை ஏற்படுத்தினான். நேகா அவற்றை எப்படி கையாலா போகிறாள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வசந்தம் வரும்…..
வசந்தம் 8
ஆசிரமம் வந்து இரு தினங்கள் சென்றிருந்தது அங்கு இருப்பவர்கள் அனைவரிடமும் அறிமுகமாகி இருந்தனர் வாணியும் வினயும். இன்னும் வாணி பார்க்காமல் இருப்பது தலைமை பொறுப்பில் இருக்கும் குருபிரசாத்தை மட்டும் தான்.
“வாணி கிளம்பிட்டீயா, டேய் குட்டிப் பையா மம்மு சாப்டீங்கலா, பாட்டிட்ட வாங்க” என்று தன் மகனை மஞ்சுளா கொஞ்சி பார்க்கையில் கடந்த காலத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை. குரங்கை நினைக்காமல் மருந்து குடிக்க வேண்டும் என்ற கதையாக மறக்க வேண்டும் என்று நினைக்கும் போது தான் அதிகம் நினைவு வருகிறது.
நீண்ட பெருமூச்சை விட்டவள் “கிளம்பிட்டேன் மஞ்சும்மா, இன்னைக்கு சார் வந்திருவார்ல”
“வந்துட்டாரும்மா, காலையில் நீ பார்க்கல” மஞ்சுளா 
“அப்படியா இல்லையேமா” வாணி 
“நீ தோட்டத்தில் இருந்தியே அப்போதுதான் நடை பயிற்சி போய்ட்டு வந்தாங்க” மஞ்சுளா 
“இங்கேயே நடக்க மாட்டாங்கலா தோட்டம் பெருசா தானேம்மா இருக்கு” என்றவளிடம் “இல்லாத ஐயா எப்போதும் பக்கத்தில் இருக்க மைதானத்துக்கு போவாங்க நம்ம பசங்க கொஞ்சம் பேருக்கு அங்கு விளையாட்டுபயிற்சி எல்லாம் கொடுப்பாங்க அப்படியே அதையும் பார்த்துட்டு வருவாங்க” என்றார் மஞ்சுளா 
“ஓ…”
“முதல்ல பசங்க எல்லாரும் பள்ளிகூடம் கிளம்பிட்டாங்கலான்னு போய் பார்ப்போம்” என இருவரும் பேசிய படி நடந்தனர்.
“அம்மா நீங்க தம்பி கூட இருங்க நான் போய் பார்த்துட்டு வர்றேன” வாணி 
“ எல்லா அறையிலும் லைட் மின்விசிறி அமந்து இருக்கான்னு பார்த்து வா வாணி” மஞ்சுளா 
“சரிங்கம்மா” வாணி 
வேலையை முடித்து வந்தவள் அவரை அழைத்துக் கொண்டு சமையல் அறை சென்றனர். கோமதி அனைத்து பாத்திரங்களையும் விளக்கும் இடத்தில் போட்டு விட்டு சமையல் மற்றும் சாப்பாட்டு அறையை துடைப்பதற்காக தயாரானாள்.
“ஐயா வர இன்னும் நேரம் இருக்கு வாணி நான் அதுக்குள்ள பாத்திரங்களையும் கழுவி வைச்சுட்டு வந்திர்றேன்” என்பவரிடம் குழந்தையை கொடுத்து விட்டு தானே வேலையை முடித்தாள் .
வாணி வேலையை முடிக்கவும் குருபிரசாத் வரவும் சரியாக இருந்தது. இருவருமாக குழந்தையோடு அலுவலக அறை நோக்கி சென்றனர்.
“ஐயா வணக்கங்க”
“வாங்க மஞ்சுளா எங்க வேதாசலம், பயணம் நல்ல இருந்ததா”
“நல்லா இருந்ததுங்க அவரு தோட்டத்தில் இருக்காங்க”
“வாங்க உட்காருங்க நீயும் வந்து உட்காருமா”
இருவரும் உட்காரவும் ஒரு நிமிடம் இருவர் முகத்தையும் ஆழ்ந்து பார்த்தவர். “சொல்லுங்க மஞ்சுளா என்ன விஷயம்” என்றார் நேரடியாக.
“இது வாணி நம்ம அலுவலகத்தில் கணக்கு பாக்க ஆள் தேடிரேங்க் தானே அதுதான் கூட்டிட்டு வந்தேன்”
“உங்களுக்கு உறவா ஏன்னா நான் வெளியே போகும் போது இங்கு பணச்செலவு எல்லாம் பார்த்துக்கணும் அதுக்கு ரொம்ப நம்பிக்கையான ஆள்தான் வேணும்” பேச்சு மஞ்சுளாவிடம் என்றாலும் அவரது பார்வை வாணி இடமே இருந்தது.  அதை வாணியும் உணர்ந்தே இருந்தாள் ஆயினும் அவளது பார்வை மாறவில்லை.
அவளது நிமிர்வும் நேர்கொண்ட பார்வையும் குருபிரசாத்திற்க்கு பிடித்தது. வாணியின் படிப்பு முன் அனுபவம் என்று கேட்டு தெரிந்து கொண்டவர் இறுதியில் “உனக்கு வேலை கொடுப்பதில் பிரச்சனை ஒன்று இருந்து உன்னை சார்ந்த யாராவது வந்து நீ போய்ட்ட அதான் யோசிக்கிறேன்”
“என்னை தேடி யாரும் வர மாட்டாங்க நீங்க அனுமதிச்சா நான் மஞ்சும்மா கூட இருந்துக்கிறேன் ஐயா” வாணி 
“சரிமா நான் மட்டும் தனித்து முடிவு செய்ய முடியாது நான் வேறும் பொறுப்பாளர் தான் டிரஸ்டி இடம் பேசிட்டு சொல்றேன் உன்னோட விண்ணப்பத்தை என்னோட மின்னஞ்சலுக்கு அனுப்புமா” குருபிரசாத்.
“சரிங்க ஐயா” வாணி 
“மஞ்சுளா எல்லா இடமும் சுத்தமாக இருக்க பாத்துருங்க வேலுகிட்டையும் சொல்லிருங்க” என்று சொல்லிக் கொண்டே வளாகத்தை சுற்றி வர சென்றவர் “சிவா வந்துட்டா அலுவலக அறையில் இருக்க சொல்லுங்க” என்றார் 
“சரிங்க” மஞ்சளா 
“இப்ப நான் என்ன செய்யம்மா” வாணி 
“ஏன்டா இது என்ன கேள்வி” மஞ்சுளா 
“இல்லை டிரஸ்டி வேண்டாம் சொல்லிட்டா” வாணி 
“அப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்க, அப்படி சொன்னாலும் வேலை தானே இல்லாமல் போகும் நீ எப்பவும் எங்க பொண்ணா எங்க கூட இருக்கலாம் ஐயா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க” என்றவர் “நீ பையனுடன் இரு நான் எல்லாருக்கும் சொல்லிட்டு ஐயா சொன்ன வேலையும் பார்த்துட்டு வந்திர்றேன்” 
தாயும் மகனும் தங்கள் உலகத்திலே விளையாடிக் கொண்டிருந்தனர். வினய் தன் அன்னையிடம் “மா..மா.. ஆனை” என கேட்க இப்ப யானைக்கு எங்க போறது என யோசிப்பது போல் நிற்க வினயும் தன் தாயை போல ஒரு கையை இடுப்பில் வைத்து ஒரு விரலால் தன் நாடியில் தட்டி யோசிப்பது போல் செய்ய அந்த அழகில் மயங்கியது வாணி மட்டுமல்ல அப்போதுதான் ஆசிரமத்தின் உள் தன் காரில் வந்திறங்கிய நம் கதையின் மற்றும் ஒரு நாயகன் சிவாவும் தான்.
வினயை கொஞ்சியவள் தானே யானை ஏற்றி அவனை மகிழ்வித்தால் யாரோ தன்னை அழைப்பது போல் இருக்க வினயை இறக்கிவிட்டு பார்த்தாள். குழந்தை ஒன்று இவளை நோக்கி ஓடி வந்தது .
தான் வந்த வேலையை பார்க்க சிவா நகரும் “ ப்ரியா…” என்ற அழைப்பில் சட்டேன்று நின்று வாணியை பார்த்தான் சிவா என்கிற சிவப்பிரியா. 
கீழே விழுந்த குழந்தையை தூக்கியவள் “என்னடா ப்ரியா மெதுவாக வரக்கூடாது”
“இல்ல வாணிம்மா வீட்டுப்பாட நோட்ட அறையில் விட்டுட்டேன் அதை எடுக்க வந்தேன்” என்ற ப்ரியாவை அழைத்துக் கொண்டு சென்றாள் வாணி.
இவர்களை பார்த்தவன் முகத்தில் சிறிய புன்னகை அப்போது தெரியாது இவளால் மட்டுமே தன் புன்னகை விடாமல் இருக்கும் என்றும் இவனால் மட்டுமே அவள் வாழ்வில் வசந்தம் வீசுமென்றும் இருவருமே அறியார்.

Advertisement