Advertisement

வசந்தம் 4
திருமணம் முடிந்தது பிரச்சினை ஆரம்பமானது என்ன சீர் செய்திருக்கிறார்கள் நான் சொன்ன இடத்தில் முடித்திருந்தால் இந்த நேரம் fridge, வாஷிங் மெஷின் அப்படி எவ்வளவு கொடுத்து இருப்பார்கள் என்று மூத்தவள் புலம்ப நீ வேறடி நான் பார்த்த பொண்ணு இவள விட கலர் கொஞ்சம் கம்மி ஆனால் இவளுக்கு போட்டத விட பத்து சவரன் அதிகமா போடுறேனன் சொன்னாங்க அதுமட்டுமில்ல ஒரு பைக் ஒரு லட்சம் ரொக்கம் எல்லாம் தர்றேன்னு சொன்னாங்க. இவனால எல்லாம் போச்சு இவட்ட என்ன இருக்கு அப்படினு இப்படி ஒத்தக் காலில் நின்னு கட்டுறான்னு தெரியல.
இங்கு இவர்கள் புலம்பிக் கொண்டிருக்க அங்கு திருமணத்திற்கு பிறகான  மற்ற சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. மறுவீடு, எதிர்வீடு என முடித்துக் கொண்டு தங்கள் வேலையை தொடர்ந்தனர். செழியன் நடத்தையில் இருந்து எதையும் கண்டு கொள்ள முடியாத நிலை வாணிக்கு. 
காலையில் எழுந்து வீட்டில் அனைத்து வேலையும் முடித்து அலுவலகம் செல்ல வேண்டும். இதில் பாதி நாள் காலை உணவுக்கு நேரம் இருக்காது. இதில் ஆள் மாற்றி ஆள் நாத்தனார் வீட்டிற்கு வந்து விடுவர். அதுவும் வார இறுதியில் எல்லோரும் இங்கு தான் வாணியால் தன் பிறந்த வீடு செல்ல முடியவில்லை. கைபேசியில் மட்டுமே நலம் விசாரிப்பதோடு சரி. 
அவள் படும் கஷ்டம் அவள் கூறமலேயே உணர முடிந்தது அவள் தோழன் அகிலால்.
“என்ன ஆச்சு வாணி நீ சாப்பிடுறிய இல்லையா, கல்யாண முடிந்து ஒரு வருஷம் ஆச்சு. நீ முன்னையும் கலகலப்பு இல்லை என் றாலும் இப்ப ரொம்ப ஒடுங்கி போன மாதிரி இருக்கு” என்றவனை இமைனக்காது பார்த்தாள்.
“ரெண்டு பொண்ணுங்க கூட பிறந்தவன் உன் முகமே சொல்லுது ஏதோ பிரச்சனைனு,  நீ கவலைபட வேண்டாம் நான் எதுவும் கேட்க மாட்டேன். நான் சொல்ல போற விஷயம் வேற ஆறு மாதங்களுக்கு முன் நாம பண்ண புரஜெக்ட் நல்லா வந்திருக்கு. அதுல வேலை பார்த்த எல்லாரும் இப்ப சென்னை போய் மூன்று மாதங்கள் தங்கி வேலை பாக்கணும்” என்றான் அகில் 
“இல்ல அகில் நான் வரமுடியாத” வாணி 
“நீ இப்பவே பதில் சொல்ல தேவையில்லை யோசித்துச் சொல் இது உனக்கு ஒரு மாற்றமாக இருக்கும்” அகில் 
வாணி எதுவும் கூறவில்லை. வீட்டில் சூழ்நிலையும் ஒன்றும் சரியில்லை செழியனும் அவளுடன் பகிர்ந்து கொள்ளுவது இல்லை. இரு தினம் யோசித்தவள் இந்த பிரிவு ஒரு வேளை தன்னுடைய இடத்தை அவனுக்கு உணர்த்தும் என முடிவு செய்தாள்.
அன்று இரவு செழியன் வரவும் நேராக உறங்க சென்றவனிடம் “உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” 
“நான் தூங்கணும்” என்றான் செழியன் வார்த்தையில் மருந்துக்கு பாசம், காதல் எதுவும் இல்லை.
“இல்லை ஆபீஸ் விஷயம் அதுதான் ஒரு ஐந்து நிமிடம்” வாணி 
“சரி சீக்கிரமாக சொல்” செழியன் 
“புராஜெக்ட் விஷயமா மூணு மாதம் சென்னை போக சொல்லிருக்காங்க” வாணி 
“சரி போ” அவ்வளவு தான் என்பது போல் எடுத்துவிட்டான் 
என்ன செய்ய என்ன சொல்ல என்று தெரியவில்லை விரும்பி மணந்ததாக தந்தை கூறினார் இவரிடம் அப்படி எதுவும் தெரியவில்லை ஒரு வேளை இந்த பிரிவு தம் உறவை வலுப்படுத்தஉதவும் என எண்ணினாள் வாணி. 
அவள் சென்னை செல்லும் நாளும் விடிந்தது அழகாக, மாலையில் இரயில் என்பதால் அன்று அலுவலகம் செல்ல வேண்டியதில்லை.
தனியாக வந்த தோழியை பார்க்க கஷ்டமாக இருந்தது அகிலனுக்கு. கல்லூரி கால நட்பு இவர்களுடையது அவள் அமைதியே அகிலை வாணியுடன் பேச வைத்தது. அனைவரிடமும் ஒரு அடி தள்ளி நின்று பேசுபவள் அகிலனின் கண்ணியம் கண்டே அவனுடன் நட்பு பாராட்டினால். அதற்கும் வேட்டு வைத்தார்கள் வாணியின் நாத்தனார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் குறை கூறுவதால் எதற்கும் வாய்ப்பளிக்க கூடாது என்று அகில் உடன் ஆன நட்பை குறைத்துக் கொண்டாள். 
இன்றைய நண்பர்கள் போல கூட்டமாக வெளியே சுத்தாவிட்டாலும் தனது நலம் விரும்பி அகில் என்பதற்காகவே அவனை யாரும் எதுவும் சொல்ல வாய்ப்பளிக்க வாணி விரும்பவில்லை.
இரயில் சென்னையை நோக்கி நகர்ந்தது அனைவரும் உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் சலசலத்து விட்டு தங்கள் இடத்தில் உறங்க சென்றனர்.
நல்ல உறக்கத்தில் இருந்தவளை யாரோ அழைப்பது போல் இருக்க கண் திறந்தவளை “வாணிமா நம்ம இடம் வந்துருச்சு தம்பிய எங்கிட்ட குடு நீ இறங்கியதும் தூக்கிக்கோ சரியா” என்ற மஞ்சுளாவை பார்த்தது தான் அவளுக்கு தான் இருக்கும் இடம் புரிந்தது.
வேகமாக இறங்கியவள் தன் மகனை வாங்கி கொண்டாள். அந்த விடிந்தும் விடியாத காலை பொழுதில் தான் இருக்க போகும் இடத்தை சுற்றி பார்த்தால் இனி இதுதான் நம் வீடு என்ற எண்ணத்தை மனதில் ஆழ பதிந்தபடி.
அவளை வரவேற்ற அழகிய தோட்டத்தை போல இனி அவள் வாழ்வும் வண்ண மயம் ஆகப்போகிறது என்பதை அறியாமலே முன்னேறினாள் தன் வசந்தத்தை நோக்கி.
வசந்தம் வரும்…..
வசந்தம் 5
அதிகாலையில் தாம்பரம் வந்து இறங்கினாள் நேகா. இரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த நேகாவை நோக்கி ஒரு ஆஜானுபாக மனிதர் கை அசைத்தவாறு வந்தார். 
“வாங்கம்மா நான்தான் கதிர் தம்பி சொல்லி இருக்குமே” என்றார் கதிர் என்கிற கதிரேசன்.
நேகாவின் தயங்கம் கண்டு ரமேஷுக்கு அழைத்தார் “தம்பி கதிர் பேசுறேன் நல்ல இருக்கிங்கலா”
“நல்ல இருக்கேன்ணா, நேகா வந்தாச்சா” ரமேஷ் 
“வந்தாச்சு தம்பி நீங்க பேசிடுங்க” என்று கைபேசியை நேகாவிடம் தந்தார் கதிர்.
“சொல்லுங்க ரமேஷ்” நேகா 
“கதிர் அண்ணா நல்ல மனிதர் நம்பிக்கைக்கு உரியவர்கள் அவரும் அவர் தங்கையும் நீயே போக போக தெரிந்து கொள்ளவாய்” ரமேஷ் 
“சரி நான் வீட்டுக்கு போய்ட்டு கூப்பிடுறேன்” என்றாள் நேகா பேசிய பின் கதிரோடு ரமேஷ் வீடு சென்றாள்
ரமேஷ் வீடு நன்றாக பராமரிக்கப்பட்டு இருந்தது கார் உள்ளே நுழைந்தது ஒரு ஐம்பது வயது மதிக்கதக்க பெண்மணி வெளியே வந்தார். 
காரில் இருந்து இறங்கியதும் “வா அன்னம் இவுங்க தான் தம்பி சொன்ன பாப்பா பேரு நேகா” என்றார் கதிர் 
“வாம்மா ஹூட்டர் போட்டு வச்சுருக்கேன் குளிச்சுட்டு வாங்க அதுக்குள்ள காபி போட்டு கொண்டு வாறேன்” என்று அவளது பகுதிக்கு அழைத்துச் சென்றார் அன்னம்
“சரிங்கம்மா” என்ற நேகா தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள். அரை மணி நேரம் கழித்து வந்த போது சூடான சொற்கள் காபி தயாராக இருந்தது.
“காலை சாப்பாடு என்ன செய்யட்டும்” அன்னம் 
“என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்கம்மா” சற்று நேரத்திலேயே அன்னத்தை நேகாவிற்கு பிடித்துப் போய்விட்டது. அவர் முகத்தில் தெரியும் அமைதியும் அவள் முகம் பார்த்து செய்யும் பாங்கும் நேகாவை ஈர்த்தது.
“நீங்க என்ன சாப்பிடுவீங்கலோ அதையே எனக்கு தாங்க தனியா எதுவும் செய்ய வேண்டாம்” நேகா 
அதற்கு அழகாக சிரித்தார் அன்னம் அவர் சிரிப்பில் என்ன உணர்ந்தால் நேகா “ஏன்மா சிரிக்கிறீங்க”
“நான் செய்து கொடுத்த பிறகு சாப்பிட மாட்டேன்னு சொல்லக் கூடாது” அன்னம் 
அவரிடம் பேசுவது நேகாவிற்கு இயல்பாக வந்தது “அப்படி என்ன சாப்பிடுவீங்க”ஞ
“காலையில் எழுந்தது சத்து மாவு கூல் ஒரு டம்ளர்” அதற்கே நேகா முகம் அஷ்டகோணலாய் போனது 
“அப்புறம் கம்பு அல்லது கேழ்வரகு புட்டு காலை ஒன்பது மணிக்கு நண்பகல் கட்டாயம் ஒரு கீரை, ஒரு காய் உடன் ஒரு குழம்பு, ரசம்,  தயிர் அல்லது மோர். இரவுக்கு இட்லி அல்லது தோசை ஒரு சட்னி, ஏதாவது ஒரு பழம், ஒரு டம்ளர் பால். இது தான் தினசரி மெனு ரமேஷ் தம்பி இங்கு இருந்தா” என்றார் அன்னம் 
“இவ்வளவு வேணாம்மா நம்ம மூன்று பேர் தானே காலையில் நீங்க எப்போதும் போல சமையல் செய்ங்க மதியம், இரவு இரண்டு வேளைக்கு நான் ஒரேதா நான் செய்றேன்” நேகா 
“எதுக்குமா நீ என்ன வேண்டும் என்று சொல் நான் செய்து தருகிறேன்” என்ற அன்னத்தை பார்த்து சிரித்தாள் நேகா.
இவ்வாறு பேசியவாறு காலை உணவு அருந்தியவள் சிறிது நேரம் ஓய்வெடுக்க தன் அறைக்கு சென்றாள்
நேகாவிற்கு வீடும் மனிதர்களும் இந்த நான்கு நாட்களில் பழக்கமாகினர். அவளுக்கு என்று சில வட்டத்தை அவள் உருவாக்கி கொண்டாள். மறுநாள் காலை புதிய வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நினைவே அவளுக்கு சற்று படபடப்பை கொடுத்தது. அதே நினைவோடு உறங்கியவளுக்கு கனவுகள் வந்து பயமுறுத்த தன்னை யாரோ தொடர்வது போலவும் இரு கரங்கள் தன்னை சிறை செய்வது போலவும்  ஒன்றோடு ஒன்று தொடர்பின்றி வர கண் விழித்து நேரம் பார்த்தாள். அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்பார்களே நேகா நம்மை மீறி எதுவும் நடக்காது. தன்னை தானே தேற்றிக் கொண்டு சுறுசுறுப்பாக வேலைக்கு செல்ல தயாரானாள்.
வாழ்க்கையானது ஒவ்வொரு நாளும் மனிதனுக்கு ஒவ்வொரு பாடத்தை கற்று தருகிறது. அதை நாம் சரியாக கற்று கொண்டால் எதிர்காலத்தில் வரும் பெரிய பிரச்சினைகளை எளிதாக கடந்து விடலாம். நேகா கற்று கொள்ள போவது என்ன யார் அறிவார் பொறுத்திருந்து பார்ப்போம் .
வசந்தம் வரும்…..
வசந்தம் 6
அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதர்க்கு என்று ஒதுக்கப்பட்டு இருந்த வரிசையான குடியிருப்புக்கு அழைத்து சென்றார். 
“இதுதான் நம்ம வீடு” என்றனர் மஞ்சுளா வேலாயுதம் தம்பதியர்.
அது ஒரு சின்ன அறை கழிப்பறை, குளியலறைகளுடன் இருந்தது. அவர்கள் உடைமைகள் தவிர ஒரு குடம், தட்டு, செம்புடன் இருந்தது.
“என்னம்மா அப்படி பார்க்குற எங்களுக்கு மூன்று வேளை உணவும் ஆசிரமத்தில் தான் தூங்க மட்டும்தான் இங்கு வருவோம். சில நேரம் அங்கயே தூங்கிருவோம்” என்றார் மஞ்சுளா 
“இரு பாய விரிக்கிறேன் தம்பிய படுக்க வைச்சுட்டு கை, கால் கழுவிட்டு வா நான் அதுக்குள்ள அவர பால் கொண்டு வரச் சொல்றேன்” மஞ்சுளா 
“சரிங்கம்மா” என்றவள் அவர் சொன்னது போல் செய்தாள் 
சற்று நேரத்தில் கைகளில் இரண்டு டம்ளர்களோடு வந்தார் மஞ்சுளா “குளிச்சிட்டிய நல்லதுடா இந்த டீய குடுச்சுட்டு குழந்தை எழுந்ததும் பால குடு. நானும் குளிச்சுட்டு வாறேன்” என்று சென்றார் அம்முதியவர் அவரின் சுறுசுறுப்பை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை வாணியால்.
தரையில் அமர்ந்தவளின் கண்கள் தாமாக மூடியது. மூடிய விழிக்குள் அவளின் கடந்த காலம் வலம் வந்தது.
சென்னை வாழ்க்கை நன்றாக இருந்தது வாணிக்கு ஆரம்பத்தில் ஒதுங்கி இருந்தவளை ஒருவாரு கூட்டில் இருந்து வெளியே கொண்டு வந்தார்கள் அவளின் நண்பிகள். நான்கு பெண்கள் ஐந்து ஆண்கள் கொண்டது அவர்கள் குழு. கம்பெனிக்கு சொந்தமான கெஸ்ட் அவுஸில் தங்கி இருந்தனர். அனைத்து வேலைக்கும் ஆள்கள் இருந்ததால் கால நேரம் பார்க்காமல் வேலையில் மூழ்கி போயினர். 
ஞாயிற்றுக்கிழமைகளில் எங்காவது செல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் அந்த வாரம் பெசன்ட் நகர் சென்றனர். மாதா ஆலயம், முருகன் கோயில் மற்றும் அஷ்டலஷ்மி கோயில் என அனைத்தும் பார்த்துவிட்டு இறுதியாக பீச்சில் அமர்ந்தனர். சற்று நேரத்தில் அனைவரும் அலையில் விளையாட வாணி மட்டும் அவர்களை வேடிக்கை பார்த்து அமர்ந்து இருந்தாள்.
இருட்ட தொடங்கிததும் அனைவரும் கிளம்பினர் எழும் போதே சற்று தடுமாறியவளின் கைபற்றி நிலைபடுத்தினர் ஸ்வாதியும், கன்யாவும்.
“பார்த்து வாணி மணல் அது தான் தடுக்கும் போல மெதுவாக வா” என்று தாங்கள் வந்த வண்டியை நோக்கி நடக்க துவங்கினர்.
இப்போது எல்லாம் காலை நேரங்களில் எழும் போதும் இப்படித்தான் இருக்கிறது செய்யும் வேலையும் மனதில் பதியவில்லை என்ற யோசனையில் நடந்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
அவளை பார்த்துக் கொண்டே வந்த அகில் வாணி கீழே விழும் முன் தாங்கி பிடித்துக்கொண்டான்.
“ஸ்வாதி தண்ணீர் வைத்து வாணி கண்ணை துடைத்து விடு, விஜய் பக்கத்தில் மருத்துவமனை எங்கிருக்குனு கேளு” என்றான்.
அனைவரும் மருத்துவமனை  வாயிலில் இருக்க வாணி, அகில் மற்றும் ஸ்வாதி மூவர் மட்டும் உள்ளே சென்றனர். அகில் இருந்த பதட்டத்தில் எதையும் கவனிக்கவில்லை. 
நர்ஸ் வந்தவர் ”பேசன்ட் மட்டும் வாங்க” என வாணி மருத்துவர் அறைக்குள் சென்றாள் 
அவளிடம் சில கேள்விகள் கேட்ட டாக்டர் நர்ஸை அழைத்து சில பரிசோதனைக்காக எழுதி கொடுத்தார்.
“பயப்பட ஒண்ணும் இல்லை வாணி போங்க” என்றார் மருத்துவர்.
அனைத்து பரிசோதனை முடித்து வந்தவள் அமரச் சொல்லிவிட்டு “கீதா இவங்க கூட வந்தவங்கல வரச் செல்லுங்க”
“சரிங்க டாக்டர்” கீதா 
“எக்ஸ்கீயுஸ் மீ மேம்” என அனுமதி பெற்று உள்ளே நுழைந்தவனை ஒரு நொடி ஆழ்ந்து நோக்கியவள் அவன் பார்ப்பதை உணர்ந்து தன் பார்வையை மாற்றிக் கொண்டு “வாங்க உட்காருங்க”
“வாணிக்கு என்ன ஆச்சு டாக்டர் ஒரு பத்து நாளாகவே சோர்வுடன்  இருக்காங்க” அகில் 
“உங்க பேர்” டாக்டர் 
“அகிலன் ஃபிரம் திருச்சி டாக்டர்” அகில் 
“இங்கு வேலை பாக்குறீங்கல” டாக்டர் 
“இல்லை திருச்சியில் வேலை பார்க்கிறோம் மூன்று மாதங்கள் கம்பெனியில் இருந்து சென்னை அனுப்பினாங்க” அகில் 
“நீங்க பேசன்ட்க்கு என்ன வேணும்” டாக்டர் 
“பிரண்டு என்னாச்சு டாக்டர் எதுவும் பெரிய பிரச்சினையா” அகில் 
“அப்படியெல்லாம் இல்லை அவங்களுக்கு குடிக்க எதாவது வாங்கி குடுங்க டயர்டா இருக்காங்க அரைமணி நேரத்தில் ரிப்போர்ட் வந்து விடும் “ டாக்டர் 
“சரிங்க வா வாணி “ என்று அழைத்து சென்றவன் டாக்டர் கூறியது போல அரைமணி நேரத்தில் அழைத்து வந்தான்.
உள்ளே நுழைந்தவர்களை பார்த்து “வாங்க வாணி வாழ்த்துக்கள் நீங்க அம்மாவாக போறீங்க” என்றார் 
வாணி சந்தோஷ மிகுதியால் வார்த்தைகள் இன்றி அமைதியாக இருக்க “நன்றி டாக்டர் மருந்து எதுவும் கொடுக்கணுமா சாப்பாடு என்ன எல்லாம் கொடுக்கணும்” என்று வரிசையாக கேள்வி கேட்ட அகிலை கைபேசியில் நீட்டி நிறுத்தியவள் “மெதுவா அகில் சத்தான உணவு கொடுங்க வீக்கா இருக்காங்க பழங்கள், காய்கறி நிறைய சேர்க்கனும்” டாக்டர் 
“சரிங்க டாக்டர்” என்று கிளம்பியவர்களுக்கு சந்தோஷம்.
வாணி முகம் கொள்ளா சந்தோஷத்தோடு இருந்தாள். வீடு வந்ததும் வாணிக்கு தனிமை கொடுத்து அனைவரும் தங்கள் அறைக்கு சென்றுவிட்டனர். 
செழியனிடம் விஷயத்தை சொல்ல அவனது கைபேசிக்கு முயன்றாள் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. செழியனிடம் கூறாமல் வேறு யாரிடமும் கூற விரும்பவில்லை. 
ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாணியால் செழியனிடம் கூற முடியவில்லை. எப்போது அழைத்தாலும் வேலை இருப்பதாக சொல்லி வைத்து விடுவான். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை கேட்கும் எண்ணம் அவனிடம் சிறிதும் இல்லை.  அதை அறியாத வாணி அவனுக்கு என்ன பிரச்சனையோ என்று தன் கணவனுக்காக வருந்தினாள்.
சென்னையில் அவர்கள் வந்த வேலை முடிந்து விட்டதால் இன்னும் இரு தினங்களில் கிளம்புவதாக இருந்தது நேரில் சென்று சொல்லிக் கொள்ளலாம் என விட்டு விட்டாள். 
தான் தாயாக போகும் செய்தியை அவனிடம் எப்படி சொல்வது, கேட்ட உடன் அவன் என்ன செய்வான் போன்ற இனிய நினைவுகளுடன் உறங்கிப்போனாள்.
யாரோ அழும் குரல் கேட்டு கண் விழித்தவள் எதிரில் அவளது ஒன்றரை வயது மகன் சிணிங்கிக் கொண்டு இருந்தான். “என்னடி தங்கம் பசி  வந்துருச்சா என்னோட செல்லத்துக்கு வாங்க அம்மாட்ட” என்று தன் மகனை தூக்கி அவனது அழுகையை நிறுத்தி முகம் கழுவி பாலை அருந்தச் செய்தாள்
தனது பசி தீர்ந்ததும் பொம்மையை வைத்து விளையாட துவங்கினார் வினய். கடவுளே இனிமேலாவது எங்கள் வாழ்க்கை நிம்மதியானதா  சந்தோஷம் நிறைத்ததா இருக்கணும் என வேண்டிக்கொண்டாள் .
வாணியின் வேண்டுதலுக்கு கடவுளின் பதில் என்ன பொறுத்திருந்து பார்ப்போம்.
வசந்தம் வரும்…..

Advertisement