Advertisement

வசந்தம் 11
கடிதத்தை படித்த நேகா “என்ன ரமேஷ் பெங்களூர்ல வேலை என போட்டு இருக்கு”
“ஆமா நேகா நாளைக்கு சேரணும்” ரமேஷ் 
“அப்போ நீங்க இங்கு இருக்க மாட்டீங்கலா உங்களுக்கு பதிலாக யார் வாரா” நேகா 
“வேலை ஒரு பிரச்சனை இல்லை ஆனால் வீட்டில நீ மட்டும் தான் இருக்கணும்” ரமேஷ் 
என்ன மாதிரி உணர்கிறாள் என்று நேகாவிற்கு தெரியவில்லை சிறிது நாட்களாக தன்னை யாரோ தொடர்வது போல ஒரு எண்ணம் ஏதோ தவறு நடக்க போகிறது என்று உள்ளுணர்வு எச்சரித்தது. ரமேஷ் வந்து விட்டால் சரியாகி விடும் என்று நினைத்திருக்க இங்கு நடப்பது தானாக நடக்கிறதா இல்லை வேறு யாரும் நடத்துகிறார்கலா ஒரே குழப்பமாக இருந்தது. 
ரமேஷ் முகத்தை பார்த்தவள் அவனை வருத்த விரும்பாமல் “என்ன ரமேஷ் நான் என்ன நடுகாட்டிலா இருக்க போறேன் உங்க வீட்டில் தானே, துணைக்கு அன்னம்மா மற்றும் கதிரண்ணா இருக்காங்க. ஒரு விஷயம் சொல்லவா சீக்கிரமே கதிரண்ணா அவங்க குடும்பத்தை இங்கு கூட்டிட்டு வாரேன்னு சொல்லி இருக்காங்க”
“அப்போ உனக்கு வருத்தம் இல்லை நீ சமாளிச்சுக்குவ தான” ரமேஷ் 
“ஒரு பிரச்சனையும் இல்லை என்ன உங்க கடி ஜோக்ஸா தான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்றவளை ஒரு முறை முறைத்தவன் “நீ மாறிட்ட நேகா ஆனால் இந்த மாற்றம் எனக்கு பிடிச்சுருக்கு” என கூறி அவள் தலையை பிடித்து ஆட்டினான். ரமேஷ் அருகில் பாதுகாப்பையும் தாய்மடி கிடைத்த நிம்மதியுடன் நேகா உணர்ந்தாள்.
சரியாக அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்த வெற்றிக்கு இதை பார்த்ததும் கோபம் ஏறியது அவன் மேலை நாட்டுக் கலாசாரங்களை பார்த்தவன் அவற்றை பார்க்கும் போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை இவையெல்லாம் சாதாரண விஷயம் ஆனால் வெற்றியின் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது ஏன் என்று அவனும் யோசிக்கவில்லை.
 “நீ கிளம்பீட்டிய”  வெற்றி 
“இன்னும் நேரம் இருக்கு வெற்றி” ரமேஷ்
“இல்லை நீ கிளம்பு நான் உன்னை கோயம்பேடுல விடறேன்” வெற்றி 
“என்னாச்சு உனக்கு நீ இன்னிக்கு செய்ற எதுவும் புரியல” என்ற ரமேஷிடம் 
வெற்றி நேகாவை பார்த்தான் அவள் என்ன உணர்ந்தவள் “நீங்க பேசிட்டு இருங்க நான் நீங்க சாப்பிட இட்லி ஊத்த அம்மாகிட்ட சொல்றேன்” என்று அவள் நகர்ந்ததும் “என்னடா அந்த பொண்ணு குடும்பத்தையே கூட்டிட்டு வந்துட்டியா” என்றான் வெற்றி.
“யாரடா கேட்குற” ரமேஷ் 
“இம்…. உன் புது பிரண்ட் நேகா” வெற்றி கூறிய விதத்தில் வாய்விட்டுச் சிரித்த ரமேஷ் “பார்ற வெற்றிக்கு பொறாமை எல்லாம் வருது” என்றான்.
“அப்படியெல்லாம் இல்லை” வெற்றி
“அன்னம்மாவத் தான் அம்மானு கூப்பிடு வா” ரமேஷ்
“ஓ… சரி இப்ப கேளு” வெற்றி
“வெளிநாட்டுக்கு செல்லும் முன் நீ என்ன சொன்ன இப்ப ஏன் பொங்களுர் போக சொல்ற” ரமேஷ்
“நீ சொல்றது உண்மைதான் உனக்கு தெரியும் பொங்களுர் நம்ம ரெண்டாவது கிளை இப்ப அங்க ஸ்ருதி பாத்துக்கிற” வெற்றி 
“தெரியும் வேலை நல்ல போகுதுன்னு சர் சொன்னார் “ ரமேஷ்
“வேலையில் பிரச்சினை இல்லை ஸ்ருதி யாரோ பின்னால் வர்ற மாதிரி இருக்குன்னு சொல்றாங்க அப்பாட்ட சொன்னா பயப்படுவார் அதான் நீ அங்க போனா கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பேன்” வெற்றி 
“போலீஸ் போலாம்டா” ரமேஷ் 
“சந்தேகத்துக்காக எல்லாம் போலீஸ் போகமுடியாது” வெற்றி 
“நான் என்ன 24 மணி நேரம் அவங்க கூடவா இருக்க போறேன்” ரமேஷ் 
“ஆமா” வெற்றி 
“என்ன? டேய், என்ன வச்சு காமெடி பண்றியா” ரமேஷ் 
“என்ன பார்த்தா காமெடி பண்றியா மாதிரி தெரியுதா” என்ற வெற்றியை பார்த்து இல்லை என்று குழப்பமாக தலையாட்டினான் ரமேஷ்.
“நீ அவளுக்கு பி.ஏ.வா போற நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கோ” வெற்றி 
“ஸ்ருதிகிட்ட சொல்லிட்டியா” ரமேஷ் 
“அதொல்லம் சொல்லிட்டேன்” வெற்றி 
“சரிடா போய் பார்த்துட்டு சொல்றேன்” ரமேஷ்
“சாப்பாடு ரெடி சாப்பிட வாங்க” என பொதுவாக கூறி சென்றாள் நேகா
“வாடா சாப்பிட”
“நீ சாப்பிடு எனக்கு இப்ப பசிக்கல”
“அட வாடா மணி பாரு 7 இனி என்னை ட்ராம் பண்ணீட்டு வீடு போக வேண்டும் ஆகிரும்” 
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.யாருக்குமே சாப்பாடு இறங்கவில்லை ஆளுக்கு ஒரு நினைவில் இருந்ததால் பெயருக்கு சாப்பிட்டு எழுந்தனர்.
பெங்களூரை நோக்கி ரமேஷின் பயணம் தொடங்கியது. நேகா தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குள் அடியில் எடுத்து வைத்தாள்.
வசந்தம் வரும்….
வசந்தம் 12
வீடு வந்தவனை எதிர் கொண்டார் கோகிலா “ஃபிரஸ் ஆகிட்டு வாட்டர் சிவா காபி எடுத்துட்டு வர்றேன்” என்ற அன்னையை பார்த்த சிவா “அம்மா ஒரு 2 நிமிடம் இங்கு உட்காருங்க” என தாயை அமர வைத்து மடியில் தலை வைத்தான்.
வெகுகாலத்திற்கு பிறகு மடி சாய்ந்த மகனின் தலையை வாஞ்சையாக வருடிக் கொடுத்தது அந்த தாயின் கரம். அத்தருணத்தை விட மனம் இல்லாமல் இருவரும் அமைதியாக இருந்தனர்.
சிறிது நேரத்தில் “உம்மா இப்பொல்லாம் நீங்கள் என்னை ப்ரியானு கூப்பிடுறதில்ல” என கேள்வி கேட்ட மகனை ஆராய்ச்சி பார்வை பார்த்த கோகிலா “நீதானடா பொண்ணு பேர் வச்சு கூப்பிட கூடாதுன்னு சொன்ன”
“நான் சும்மா தான்மா சொன்னே உங்களுக்கு எப்படி கூப்பிட தோணுதோ அப்படியே கூப்பிடுங்க” சிவா.
“சரிடா சிவான்னே கூப்பிடுறேன் எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு” என்ற தாயை முறைத்தவன் “நான் போய் ஃபிரஸ் ஆகிட்டு வாறேன்”என இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறும் மகனை கண்கள் கலங்க பார்த்தவர் “இறைவன் என் மகன் எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும்” என வேண்டிக் கொண்டார்.
சிற்றுண்டி, காபி முடித்து சிவா தன் அறைக்கு சென்றதை உறுதி செய்தவர் தன் கைப்பேசியை எடுத்து டயல் செய்தார். 
“சொல்லுங்கம்மா எப்படி இருக்கீங்க” என்றான் சிவாவின் உதவியாளரும், வலது கையுமான தேவா.
“அதொல்லம் நான் கூப்பிட்டதும் கேட்க கூடாது நீயா கூப்பிட்டு கேட்கணும்”
“என்னம்மா பண்றது பாஸ் விடுப்பு கொடுக்க மாட்டேன்றார்”
“அவனும் ஓய்வு எடுக்க மாட்டான் என்னையும் விட மாட்டான்  நல்ல நட்பு உங்களது”
“சொல்லுங்கம்மா என்ன கேட்கணும்”
“இன்றைக்கு சிவா யாரையாவது சந்தித்தானா”
“அலுவலகத்தில் இன்று புது ஒப்பந்தம் சம்மந்தமா 3 குழுவாக சந்திப்பு இருந்துச்சு”
“இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கல்யாணம் ஆன மாதிரி தான்”
“அம்மா….” என அலறி விட்டான் தேவா
“பின்ன என்னடா நான் என்ன கேட்குறேன் நீ என்ன சொல்ற, இனி உங்க கழுத்துல யாராவது தாலி கட்டினாதான் உண்டு”
“பரவாயில்லைம்மா எனக்கு கல்யாணம் நடந்த போதும் யாரு தாலி கட்டுமான என்ன ஒரு பிரச்சினையும் இல்லை”
“நல்ல வருவடா”
விளையாட்டு பேச்சை கைவிட்டவன் “இன்றைக்கு வேறெதுவும் இல்லை” என்றவன் சற்று யோசித்து “ஆங் , ஆசிரமம் போனார் மா” என்றான் 
அடுத்து எப்ப போறான் என தகவல் கேட்டு தெரிந்து கொண்டவர் தானும் வருவதாக கூறி குருபிரசாத் இடம் மட்டும் தெரிவிக்குமாறு கூறிவிட்டு வைத்தார்.
வாணி தன் வாழ்க்கையை ஆசிரமத்தின் நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டாள். எல்லாம் இருந்த போது கிடைக்காத நிம்மதியும், சந்தோஷமும் இவர்களோடு இருக்கும் போது கிடைப்பதாக உணர்ந்தாள்.
வினய் மஞ்சு தம்பதிகளோடு ஒட்டிக் கொண்டான் அதனால் வாணி அலுவலக வேலையை எந்த இடையூறும் இன்றி முழு கவனத்தோடு செய்தாள். அவளால் ஆன உதவிகளை அனைவருக்கும் செய்தாள் எந்த எண்ணங்களும் தன்னை அண்டாதவாறு முழுவதுமாக வேலைகளில் மூழ்கடித்துக் கொண்டாள்.
ஆசிரமத்தில் வளரும் ஆணோ பெண்ணே 14 வயதுக்கு மேல் பகுதி நேரமாக ஏதாவது ஒரு கைதொழில் கற்குமாறு வகை செய்திருந்தார். பெரும்பாலான பெண்கள் தையல் கலையை கற்பதில் ஆர்வமாக இருந்தனர். அதை பார்த்த சிவா விருப்பம் இருப்பவர்கள் இதே துறையில் மேலும் படிக்க உதவிகளும் செய்தான். ஒரு ரெடிமேட் யூனிட் சிறிய அளவில் ஆரம்பித்து அவர்களுக்கு வேலையும் வழங்கினான்.
மாதம் ஒருமுறை ஆசிரமத்தில் முழு நாளும் கழிப்பது வளமையாக கொண்டிருந்தான் சிவா. அன்று மட்டும் அனைவரும் இணைந்து தோட்ட வேலை சுற்றுப்புறத்தை தூய்மைபடுத்துவது போன்ற தங்களால் இயன்ற வேலையை பகிர்ந்து பார்ப்பார் வேலாயுதத்திற்கு அன்று விடுமுறை.
 ஞாயிறு அழகாக விடிந்தது தன் தாயிக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு ஆசிரமம் சென்றான். சிவா உள்ளே நுழையும் போதே ஆஜராகி இருந்தான் தேவா. 
அனைவரும் தோட்டத்தில் அவர்களால் முடிந்த வேலையை பார்ப்பார். அன்று மட்டும் வேலாயுதத்திற்கு ஓய்வு. பெரும்பாலான காய்கறி, கீரை இங்கே இருந்து தான் ஆசிரமத்திற்க்கு போகும். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே உழைப்பின் மகத்துவம் தெரிய வேண்டும் என ஒரு மரக்கன்றை அவர்கள் கையாலேயே நட வைத்து நீர் ஊற்றி பராமரிக்க பழக்கப்படுத்தப்பட்டனர்.
காலை 11.00 மணிக்குள் அனைவரும் தோட்ட வேலை, துப்புரவு வேலை என அனைத்தையும் முடித்திருந்தனர். மதிய உணவிற்கு அமரும் நேரம் கோகிலா வந்து சேர்ந்தார் .
“வாங்கம்மா, வர்றேன்னு சொல்லவே இல்லை” சிவா 
“அதெல்லாம் சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லியாச்சு நீ என்ன என்னை கூப்பிட்டியா உனக்கு சொல்ல” என்றார் கோகிலா
உணவு பரிமாறப்பட வாணி வினய்க்கு உணவு ஊட்ட வெளியில் சென்றாள். எல்லாரும் உணவு முடித்து வேலை செய்பவர்கள் அமர்ந்த நேரம் வாணி வினயோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.
சிவா அவர்களிடம் சென்றான் “நீங்க சாப்பிடல” திடீர் என கேட்ட குரலில் நிமிர்ந்தவள் “மஞ்சும்மா வந்தது சாப்பிடணும்” என்றாள்
“குட்டிய வேண்டும் என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்க போங்க”என்றவனிடம் “பரவாயில்லை” என கூறிவிட்டு வினயோடு விளையாடத் துவங்கினாள். 
அப்படியே விட்டு சென்றால் அது சிவா இல்லையே “குட்டி பையா எங்கிட்ட வரீங்கலா நான் சிண்ரில்லா  கதை சொல்றேன்” என அழைத்தான்.
“ஐ, கதை கதை. அம்மா வினய் கத” என தளிர் நடையில் சிவாவிடம் சென்றான். வாணி என்ன செய்ய என தெரியாமல் சில நிமிடங்கள் நின்றாள். சிவா வினயோடு குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு கதை கூற ஆரம்பித்தான். அவனை பார்த்திருந்தவளை நிமிர்ந்து பார்த்தவன் தன் தலையை போ எனும் விதமாக அதைத்தான் அதற்கு மேல் வாணி நிற்கவில்லை. 
அங்கு நடக்கும் அனைத்தையும் மௌனமாக பார்த்திருந்தார் கோகிலா முதலில் எதுவும் தோன்றவில்லை. நேரம் செல்ல செல்ல மகனின் பார்வையில் தெரிந்த வித்தியாசத்தை ஒரு தாயாக உணர்தவர் இது எப்படி சாத்தியம் என யோசிக்க ஆரம்பித்தார்.
மாலையில் குழந்தைகள் கண்ணை கட்டி விளையாட வினய் கைதட்டி பார்த்திருந்தான். சற்று நேரத்தில் வாணியை ஒரு குழந்தை தொட்டு விட்டு கண்ணை கட்டச் சொல்லி அடம்பிடித்தாள். குழந்தைக்காக அவர்களோடு சந்தோஷமாக விளையாடினாள்.
திடீர் என வினய் வாணி கையில் இருந்து “அப்பா” என இறங்கினான். அப்பா என்ற அழைப்பை கேட்டு அதிர்ந்தவள் வேகமாக கண் கட்டுமான அவிழ்த்து அவன் சென்ற திசையை நோக்கினாள்.
வசந்தம் வரும்….

Advertisement