Advertisement

வசந்தம் 1
அது ஒரு தனியார் அலுவலகம் காலை நேரம் எப்பொழுதும் போல பரபரப்பான இயங்கி கொண்டிருந்தது. தனது இடத்தில் அமர்ந்து தட்டச்சு செய்து கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி நேகா.
“ஹாய் நேகா” என்று வந்த ரமேஷை நிமிர்ந்து கூட பார்க்காமல் தன் வேலையில் கவனமாக இருந்தாள்.
மீண்டும் ஒரு முறை சத்தமாக அழைக்கவும் அவனை முறைத்தவள் “உங்களுக்கு என்ன வேண்டும்”
“என்ன செய்யுற” வேலை செய்பவளை அழைத்து இப்படி கேட்டால் அழுவதா, சிரிப்பதா என்று பல்லை கடித்தாள்.
இவரெல்லாம் எப்படி படித்து வேலைக்கு வந்தார் என நினைததவள் “இன்னும் பத்து நிமிடத்தில் இந்த கடிதத்தினை நிர்மலாவிடம் கொடுக்கணும்” என்றாள்.
“அப்படியா அவர்கள் வீட்டுக்கு போய் இருபது நிமிடங்கள் ஆச்சு” ரமேஷ்
“என்ன” என்றாள் நேகா
“நிஐமாதான்” என்று ரமேஷ் கூற
உடனே வேகமாக நிர்மலாவின் அறைக்கு சென்றவள் அவர் இல்லாது திரும்ப தனது கைபேசியில் இருந்து அழைத்தால் “நிர்மலா கடிதத்தை முடுச்சுட்டேன் “
“சாரி நேகா அவசரம் அதான் உங்கிட்ட சொல்ல முடியல, ரமேஷ்கிட்ட கொடுத்து விடுங்கள் அவரிடம் சொல்லி விட்டேன்” என்றாள் நிர்மலா.
தான் முடித்த கடிதத்தை ஒரு முறை சரிபார்த்து அவனிடம் கொடுத்தாள். இடைவேளை நேரம் என்பதால் தேநீர் அருந்த கிளம்பியவளோடு தானும் இணைந்து கொண்டான்
அவள் முகம் பார்த்தவன்” நீ கோபமா இருக்க ஒரு நகைச்சுவை சொல்லவா”
வேணம்னா விடவா போற என்று பார்த்தவளை சட்டை செய்யாமல் பேச ஆரம்பித்தான்.
கணவன் சொல்லுறான் “ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!”

அதுக்கு மனைவி என்ன சொன்னா தெரியுமா “ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?”
“அய்யோ முடியல இப்ப நான் சிரிக்கனும் அவ்வளவு தானே” என்றவள் ஈஈஈ என பல்லை காட்ட “அவ்வளவு கேவலமாவா இருந்தது என் காமெடி அடுத்த தடவை நல்ல நகைச்சுவையா சொல்றேன்”.
“ஜோக்ஸ் அபார்ட் நான் உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” ரமேஷ்
“சொல்லுங்க” நேகா
“its personal சோ வெளியே போய் பேசுவோமா?”
சற்று யோசித்தவள் “சரி இங்கு பக்கத்தில் ஒரு அம்மன் கோயில் இருக்கு”
“என்னது கோயில்லையா?” ரமேஷ்
“முழுசா சொல்ல விடமாட்டீங்கலா அது பக்கத்தில் இருக்க பூங்காவில் பேசலாம்” நேகா
அதன் பின் இருவரையும் வேலை இழுத்துக் கொள்ள அதில் மூழ்கி போயினர்.
மாலையில் அவன் பூங்காவில் அமர்ந்திருக்க நேகா அம்மனை வணங்கிவிட்டு வந்து அமர்ந்தாள்.
இருவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர்.
இவர்களை இரு ஜோடி கண்கள் பார்ப்பதை இருவருமே அறியவில்லை.
வசந்தம் வரும்…..
வசந்தம் 2
சென்னை செல்லும் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தாள் நம் கதையின் அடுத்த நாயகி கலைவாணி. தனது மகன் தூங்குவதை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தன் வாழ்க்கையை நினைத்து ஒரு விரக்தி புன்னகை பூத்தது.
உடன் பயணம் செய்த முதியவர் “என்னம்மா தூங்கலையா” என்றார்.
“இல்லம்மா பையன் தூங்குறான்” வாணி
“எம் பேரு மஞ்சளா நான் செங்கல்பட்டு வரை போகணும். நீ எங்கே போகணும் ?” மஞ்சுளா
“சென்னை மா” வாணி
“வயசாயிருச்சு எனக்கு தூக்கம் வராது நீ தூங்கு குழந்தை எழுந்த கூப்புடுறேன்”.
“சரிம்மா” என்றவள் அமர்ந்த நிலையிலேயே கண்களை மூடினால். முன் பதிவு செய்யாத பெட்டி வார நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. மூடிய விழிகளுக்குள் தனது கடந்த காலம் அலையென வந்தது.
அவளது குடும்பம் நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று கீழ் எதற்கும் ஆசைப்படும் ரகம் அல்ல என்றாலும் நிறைத்தது கேட்கும் முன்பே கிடைத்து விடும். அளவான குடும்பம் எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த நேரம் வாணி தனது இளங்கலை பட்டம் பெற்று வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.
இந்த ஆண்டு அவள் தங்கை கல்லூரிக்கு செல்ல விருக்கிறாள். தன் தந்தைக்கு தெரிந்தவர் மூலமாக வந்த வரன் தான்  செழியன். இரு சகோதரிகள் அவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. நல்ல உத்தியோகம் பொண்ணு நல்லா இருக்கும்.
தந்தையும் தனக்கு தெரிந்தவர் மூலமாக விசாரித்து ஆறு மாதங்களில் திருமணமும் முடிந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் வாணியும் தன் வருங்கால கணவனை நேசிக்க தயாரானாள். ஒரு பொருள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் மட்டுமே அதற்கு மதிப்பு அதுபோல் தான் அன்பும். தகுதியானவர்கள் மீது காட்டும் அன்பு போற்றப்படும் இல்லையேல் நேசித்த நெஞ்சத்தில் மாறாத ரணத்தை ஏற்படுத்திவிடும்.
“ஏம்மா மேல்மருவத்தூர் தாண்டி வண்டி வந்துருச்சு இனி நீ பாத்துக்க” என்றவர் தனது உடைமைகளை எடுத்து வைத்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.
அவர்கள் ஒரு ஆசிரமத்தில் தங்கி வேலை பார்ப்பதை பற்றி, தாங்கள் சென்று வந்த கோயில்கள் பற்றி கூறிக்கொண்டே வந்தார்.
“உங்களுக்கு குழந்தைகளின் இல்லையாமா” கேட்டவரை பார்த்து சிரித்த அம்முதியவர்.
“ஏன் இல்லாமல், நான்கு பசங்க இரண்டு பெண்கள் மொத்தம் ஆறு பேரு. எல்லாரும் நல்ல நிலையில் இருக்காங்க” மஞ்சுளா.
“அப்போ ஏன் ஆசிரமத்தில் இருக்கீங்க” என்றாள் வாணி.
“அவர்கள் படிக்கும் போது தெரியாத கௌரவம் அவர்கள் எல்லாரும் நல்ல நிலைக்கு வந்த பிறகு தெரிந்தது. அவங்க அப்பாவையும் என்னையும் பெத்தவங்கன்னு சொன்ன அவங்க ஸ்டேட்டஸ் கொறைஞ்சுருமா, அதான் எங்களால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வேண்டாம் அப்படிணு ஆசிரமத்திற்கு வந்துவிட்டோம். எங்கள மாதிரி இருக்குறவுங்களும் ஆதரவற்ற குழந்தைகளும் 100 பேர்கிட்ட அங்க  இருக்காங்க. நாங்க நிம்மதியா சந்தோஷமா இருக்கோம் இந்த வயசான காலத்தில் எங்களுக்கு வேற என்ன வேண்டும்” என்றவரை வியந்து பார்த்தாள்.
இந்த வயதில் பேரன், பேத்தி என சந்தோஷமாக இருக்க வேண்டியவர்கள் அவர்கள் நியாயமான ஆசைகள் மறுக்கப்பட்ட நிலையிலும் தைரியமாக இருக்கும் போது நாம் சோர்ந்து விடக்கூடாது. அவர் கையை பற்றவும் தன்னிலை மீண்டவள் “என்ன கேட்டீர்கள் மஞ்சுமா” என்றாள்.
“சென்னையில் எங்கம்மா தங்கி இருக்க” மஞ்சுளா.
“இனிமேல் தாங்கமா பார்க்கணும்” வாணி 
“உன் வீட்டுக்காரர் பக்கத்து பெட்டில இருக்காரா” அவர்கள் பயணம் செய்தது பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டி அதனால் அவர் கேட்க “இல்லம்மா நானும் என் பையனும் மட்டும்தான்” என்றாள் வாணி 
மஞ்சுளா என்ன நினைத்தாரோ வண்டி இன்னும் ஐந்து நிமிடத்தில் செங்கல்பட்டு இரயில் நிலையத்தை அடைந்துவிடும் நொடியில் முடிவெடுத்தவர் “நீயும் எங்களுடன் வாரியா” என்றார் 
“இல்லம்மா உங்களுக்கு எதற்கு கஷ்டம்” என்றவளை “நீ குழந்தையோட சென்னையில் தனியா வீடு எடுத்து தங்குவது பாதுகாப்பு கிடையாது அதோடு பையன வச்சுக்கிட்டு எப்படி வேலைக்கு போவ”
“எங்க போனாலும் எங்கள காப்பாற்றிக்க வேலைக்கு போகணும் தானேம்மா” வாணி 
அதை கேட்டு சிரித்தவர் “இதுதான் உன் பிரச்சினையா உனக்கு பெட்டில வரவு செலவு கணக்கு பார்க்க தெரியுமா”
“என்ன பெட்டிமா” வாணி 
“அதுதான்மா படிக்கிற பசங்க கையில் இருக்குமே” மஞ்சுளா 
“ஓ கணினியா,நல்லா தெரியும்” வாணி 
“அப்புறம் என்ன வா வா வண்டி நின்னுருச்சு அவர் வந்துருவாறு உன் பை எது நான் எடுத்துகிறேன் நீ பையனை தூக்கிக்கோ சரியா” அவளை எதுவும் பேச விடாது சென்றார்
“இது யார் பை மஞ்சு?” என கேட்டார் வேலாயுதம் 
“இந்த பொண்ணோடதுங்க” மஞ்சுளா 
“யாருமா இது”என்றவரிடம், “நம்ம கூடதான் வரபோறா இவ பேரு ஆங்… பேர கேட்கலீங்க” 
“எம் பேரு வாணிப்பா”
“சரிமா வாங்க ஆட்டோல போயிரலாம்” என்றவரை பெண்கள் இருவரும் தொடர்ந்தனர் 
தன் வசந்த காலத்தை நோக்கி வாணி முன்னே செல்ல அவள் மனமோ கடந்த காலத்தை நோக்கி பயணப்பட்டது.
வசந்தம் வரும்…..
வசந்தம் 3
ஒரு வாரம் சென்ற நிலையில் ரமேஷ் சென்னை சென்று திரும்பியிருந்தான். இடைவேளையில் தேநீர் அருந்தியவளின் அருகில் தனக்கும் ஒரு கோப்பையோடு அமர்ந்தவன் “என்ன முடிவு பண்ணிருக்க நேகா”
“வேலை பற்றிய விபரம் சொல்லுங்க அப்புறம் சொல்றேன்” நேகாவை பார்த்து “ரொம்ப புத்திசாலி நீங்கன்னுதான் பார்த்தேனே கைய புடிக்க வாறான் அவன அடிக்காம எனக்கென்னனு போற அன்றைக்கே அவன கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிச்சாச்சு”
“என்ன நீங்க தான் அடித்து விரட்டினீர்களா”
“நான் சும்மா ரெண்டு அடிதான் அடித்தேன் விரட்டல்லா இல்லை. அவன் சும்மா இருக்க முடியாம யார்டயோ ஹாய் கொடுத்து வாங்கி கட்டிருக்கான்” ரமேஷ் 
“இல்லையே அவன் கம்பெனிய விட்டு கிளம்பும் போது நான் ஒரு தடவை பேசுனதுக்கு எத்தனை பேர்கிட்ட அடி வாங்குறது” அப்படினு சொன்னான்” என்றாள் 
“அதை விடு நம்ம விஷயத்திற்கு வாணி நீ எனக்கு கீழ் தான் வேலை செய்யுவே ஆனால் அது இரண்டு மாதங்களுக்கு பின் அதுக்கு முன்னாடி நீ அங்கு சென்று பயிற்சி எடுத்து எடுத்துக்கோ. இப்போதைக்கு பாரிஜாதம் மேடமிடம் வேலை பாரு. அவங்களுக்கு வயசாயிருச்சு  வேலையை ராஜினாமா செய்துட்டாங்க அவுங்க இடத்துக்குத் தான் நீ போற.  அவுங்க கிளம்பும் போது எல்லாத்தையும் உன்னிடம் கொடுத்து விடுவார்கள் நீ கவனமா கற்றுக்கொள்ள வேண்டும் சரியா” ரமேஷ் 
“சரி ஆன இங்கு மூன்று மாதங்கள் ஒப்பந்த காலம் இருக்கே” நேகா 
“அது பிரச்சினை இல்லை நான் பார்த்துக்கிறேன் நீ என்னைக்கு கிளம்புறேனு மட்டும் சொல்லு” ரமேஷ் 
“இன்றைக்கே வேலையை ராஜினாமா செய்து விடுகிறேன் இந்த வார கடைசியில் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு தன் இடத்திற்க்கு சென்றாள்.
நேகா கூறியது போலவே வேலையை ராஜினாமா செய்து விட்டு தான் சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை மட்டும் எடுத்து வைத்தாள்.
நாட்கள் நகர்ந்து நேகா கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. ரமேஷ் அவளுக்கு ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பினான்.
“நேகா போய் இறங்கியதும் நான் அனுப்பின எண்ணுக்கு கூப்பிடு கதிரண்ணா வந்து கூட்டிட்டு போய் வீட்டில் விடுவார். உனக்கு வேற ஏதாவது வேணும்னா அன்னம்மா அக்காவ அழைத்துக்கெ கொள். நான் தினமும் உனக்கு பேசுறேன். பாத்துக்க”
நேகாவின் பயணம் இனிதே சென்னையை நோக்கி தொடங்கியது. இந்த பயணம் தான் அவள் தேடுதலுக்கான முடிவுப் பயணம் என்று அறியாமலே உறங்கினாள் நேகா.
வசந்தம் வரும்…..

Advertisement