Advertisement

உன் நினைவு – 24

என்னவென்று சொல்வேன்

என்னவன் கூறிய வார்த்தைகளை…

அழுதால் கரையுமோ

அவன் தந்த காயம்…..

பேதை நெஞ்சம் துடிக்கிறதே

பெண்ணவள் என்ன செய்வாள்???

அவளவன் தந்த கண்ணீர் பரிசை

யாரிடம் காட்டுவாள் புன்னகையோடு….   

சிவபாண்டியனும் காமாட்சியும் வேகமாக அவர்களிடம் சென்று “ வசந்தி எங்களை மன்னிச்சிடு மா “ என்று பேச ஆரம்பிக்கவும் வசந்தி அமைதியாக “ முதலில் நாங்க போய் எங்க மகளை பார்த்துவிட்டு வற்றோம்..” என்று கூறி சென்று விட்டார்..

சிவா அவனை கடந்து செல்லும் பொழுது “ நீங்களா அத்தான் இப்படி நடந்து கொண்டது “ என்பது போல பார்த்து சென்றான்…

தன் அப்பாவாது எதாவது கூறுவார் என்று அவரை கண்டான் கதிரவன் ஆனால் சிவபாண்டியனோ நிலைகுலைந்து அமர்ந்து இருந்தார்.. தன் மகன் என்றால் அவருக்கு எப்பொழுதுமே ஒரு பெருமை தான் கர்வம் தான்.. ஆனால் இன்று அனைத்தையும் கதிரவன கெடுத்துவிட்டான்…

 “ இப்படி செஞ்சுட்டியே கதிரவா “ என்று குற்றம் சுமத்துவது போல இருந்தது அவரின் பார்வை..

தந்தையின் பார்வையை தாங்காது தன் நண்பனை பார்த்தான் அழகேசனோ “ நான் என் தங்கச்சிக்கு அண்ணனா மட்டும் தான் இருக்க நினைக்கிறேன் “ என்று முகத்தில் அடித்த மாதிரி கூறிவிட்டான்..

இத்தனை சொந்தங்கள் இருந்தும் கதிரவன் தனித்து நின்றான்… தன் குடும்பத்தால் தன் நண்பனால் தான் ஒதுக்கப்டுவதை தாளமாட்டாமல் கைகளால் முகத்தை மூடி குலுங்கி அழுதான்..

“ இப்படித்தானே நான் பேசியதை கேட்டு என் மதியும் துடிச்சு போயிருப்பா … அய்யோ “ என்று கதறி துடித்தான்.. அனைவரும் செய்வது அறியாது அவனை கண்டபடி நின்றனர்..

இதற்கு இடையில் பொன்மலர் தன் அம்மாவை அழைத்து கொண்டு தனியே சென்றாள் “ இங்கு பாருமா.. இனிமே என்னை அத்தானுக்கு கட்டி வைக்கணும் ஒரு என்னத்தை விட்ரு.. உசுருக்கு உசுரா காதலிச்சவளையே இப்படி ஆஸ்பத்திரியில வந்து படுக்க வச்சிட்டாரு.. நான் எல்லாம் எம்மாத்திரம் அவருக்கு.. வசதியான வாழ்கை இல்லைனாலும் பரவாயில்ல மா எனக்கு நிம்மதி தான் முக்கியம் “ என்று உறுதியாக கூறிவிட்டாள்..

மல்லிகாவும் தன் மகளின் கூற்றில் உள்ள நிஜத்தை புரிந்து கொண்டார்.. இது ஒரு புறம் இருக்க அழகேசன் மீனாட்சியின் பெற்றோகளிடம் பேசினான்.. மேலும் ஒரு மாதம் திருமணத்தை தள்ளி வைப்பதாக முடிவு செய்தனர்.. ஆனால் வெளியே யாரிடமும் கூறவில்லை.. சூழ்நிலை சிறிது சரியாகவும் சொல்லிலாம் என்று அமைதியாக இருந்தனர்..

இரண்டு நாட்கள் சென்றுவிட்டன…..

கதிரவன் தான் பேசியது தவறு என்றும் அதை தான் நன்றாக உணர்ந்து விட்டேன் என்றும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டான்… வசந்தியும் சண்முகநாதனும் “ இதில்  நாங்கள் சொல்ல எதுவுமே இல்லை.. எப்பொழுதும் வசுமதி முடிவு தான் எங்கள் முடிவு.. அவள் மனசுக்கு எது சரின்னு படுதோ அது தான் எங்களுக்கும் சரி… மத்தபடி மன்னிப்பு எல்லாம் எங்கள் கிட்ட கேட்கவேண்டியது இல்லை கதிரவா” என்று கூறிவிட்டனர்..

காமாட்சி தான் பயந்து தவித்தார் எங்கே தன் மகன் செய்த வேஷத்தால் மீண்டும் இரு குடும்பமும் பிரிந்து விடுமோ என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்தார்…  அவரது குழப்பமான முகத்தை கண்ட வசுமதி அனைவரையும் அழைத்து

“ ஏன் எல்லாரும் இப்படி இடிந்து போன மாதிரி இருக்கீங்க.. எல்லாரும் பழையபடி பேசி நல்லா இருக்கவேண்டியது தானே… எனக்காக யாரும் யார் கூடையும் பேசாமல்  இருக்க வேண்டாம்  ப்ளீஸ் அது என்னை மிகவும் கஷ்டபடுத்தும்.. நான் நிஜமாவே கொஞ்சமாவது நிம்மதியா இருக்கணும்னு நினைச்சிங்கனா எல்லாரும் பழையமாதிரி இருங்க ப்ளீஸ்..” என்று கூறவும் தான் அனைவருக்கும் ஒரு நிம்மதி வந்தது..

இவள் இப்படி கூறியபின் தான் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் வீட்டிற்கு செல்லவும் மாறி மாறி வந்து அவளுடன் துணை இருப்பதும் என்று கொஞ்சம் சகஜமான நிலைமைக்கு மாறியது..

ஆனால் கதிரவனோ நொடி பொழுது கூட வீட்டிற்கு செல்லவில்லை.. அவனை யாரும் வா என்று அழைக்கவும் இல்லை.. ஏன் வரவில்லை என்று கேட்கவும் இல்லை.. இரண்டு நாட்களும் ஹாஸ்பிடலில் தான் இருந்தான்.. கிட்டத்தட்ட வசுமதியின் பார்வைக்காக தவமிருந்தான் எனலாம்..

அவளோ அனைவருடனும் சிரித்து பேசினாள்… எல்லோரிடமும் நன்றாக பழகினாள்.. ஆனால் கதிரவன் என்று ஒருவன் அங்கு இருக்கிறான் என்பதையே அவள் கண்டு கொள்ளவில்லை… அவளின் அறைக்குள்ளே அனைவரும் வரும்பொழுது அவனும் வருவான்.. அவளது முகத்தை இப்பொழுதாவது என்னிடம் பேசுவாளா என்பது போல அவளோடு பார்த்து கொண்டு நிற்பான்.. ஆனால் வசுமதியோ அவனை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை..

அன்னபூரணியிடம் முழு பிரச்சனையும் கூறவில்லை.. “ அத்தானுக்கும் அக்காக்கும் சண்டை  அத்தான் கோவமாய் பேசிட்டாரு.. அதான் அக்கா ஊருக்கு கிளம்புறா.. இன்னும் கொஞ்ச நாள்ல அவளை சமாதானம் செய்து கூட்டி வறோம் “ என்று சிவா தான் எப்படியோ சமாளித்தான்..

இரண்டு நாட்களில் கதிரவன் மிகவும் மாறிவிட்டான்.. அவனது அம்மா அவனிடம் பேசவில்லை.. அப்பா ஒரு இரு வார்த்தை மட்டுமே கடமைக்கு பேசினார்.. நண்பனோ முகத்தை கூட பார்க்கவில்லை… தன்னை சுற்றி இத்தனை சொந்தம் இருந்தும் கதிரவன் தனிமையாய் உணர்ந்தான்..

வசுமதி இதை எல்லாம் கவனித்தும் கண்டுகொல்லாமல் தான் இருந்தாள்.. அனைவரும் இருந்தும் அவன் தனியே நிற்பது அவளுக்கு மிகுந்த வேதனையை தந்தது.. அழகேசனையும் சிவாவையும் தனியே அழைத்து பேசினாள்..

“ சிவா நீ உன் அத்தான் கூட பேசுனியா ?? ” என்றாள்  மெதுவாக..

“ இப்போ எதற்கு இந்த கேள்வி கேக்குறா ?? கொஞ்சமா பேசினேன் என்று  சொன்னால்  திட்டுவாளோ ??? “ என்று எண்ணிய சிவா பொதுவாக தலையை ஆட்டினான்..

“ இப்படி தலையை ஆட்டினா என்னடா அர்த்தம்… நீ பேசினாலும் நான் ஒன்றும் உன்னை கோவிச்சுக்க மாட்டேன்.. என்ன டா முழிக்கிற… எனக்கும் அவருக்கும் தானே பிரச்சனை.. நீ ஏன் இப்படி ஒதுங்கி இருக்க அத்தை பேசாமல்  இருக்கிறதே அவருக்கு கஷ்டமா இருக்கும் டா சிவா.. நீ எப்பொழுதும் போல அவரிடம் பழகு “ என்று அவனிடம் பேசியவள் அவனது பதிலுக்கு காத்திராமல் அழகேசனிடம் திரும்பினாள்..

“என்ன அண்ணா.. இவ்வளோ தான் உங்கள் பிரிண்ட்ஷிப்பா?? “ என்றாள் மொட்டையாக.

“ என்ன வசும்மா ?? என்ன சொல்லுற ??” என்று பதறினான் அழகேசன்..

“ பின்ன உங்க பிரின்ட் ஏதோ கோவத்தில் என்னை தப்பா பேசிட்டாரு.. அது எனக்கும் அவருக்கும் இருக்க பிரச்சனை.. இதனால உங்கள் இரண்டு பேருக்கும் இத்தனை வருஷம்  இருக்க நட்பு கெட நான் விரும்பலை.. அண்ணா பொறுங்க ப்ளீஸ் நான் கொஞ்சம் பேசுறதை கேளுங்க னா… இனிமே நான் அவருகூட பேச போவதே இல்லை.. சும்மாவே இப்ப யாரும் அவர்கூட முகம் குடுத்து கூட பேசுவது இல்லை.. நீங்களும் அவரை ஒதுக்கினால் என்ன அண்ணா பண்ணுவாரு ??? ” என்றாள் அவனை பார்த்து.. இவளின் இந்த கேள்வியில சிவா அழகு இருவருமே திகைத்து விட்டனர்..

“ இல்லை வசும்மா …… அது …”

“ இல்லை சொல்லை எல்லாம் என்னிடம் வேண்டாம்  ப்ளீஸ் எனக்காக… நீங்க என்னை நிஜமாவே உங்கள் தங்கச்சியா நினைச்சா நீங்க பழைய மாதிரி அவர்  கூட இருக்கனும்… அவருக்கு துணையா எப்பயுமே இருப்பேன் என்று எனக்கு சத்தியம் பண்ணி குடுங்க அண்ணா “ என்று கூறி வம்படியாக அவனிடம் சத்தியமும் வாங்கினாள்..

இவர்கள் இருவருக்கும் புரிந்து விட்டது.. இன்னும் கதிரவன் வசுமதிக்கு இடையில் காதல் அப்படியே இருக்கிறது.. ஆனால் அவன் கோப வார்த்தைகள் தந்த காயத்தினால் தான் வசுமதி பிரிந்து செல்கிறாள்.. காலம் அனைத்தையும் மாற்றும்.. இவர்களுக்குள் இருக்கும் விரிசல் மறைந்து மீண்டும் காதல் துளிர்க்கும் என்று எண்ணிக்கொண்டனர்..

இதை அறிந்த பெரியவர்களுக்கும் இதுவே தோன்றியது… இருவற்குள்ளும் நல்ல சுமுகமான சூழ்நிலை வரும் வரை அனைவரும் காத்திருப்போம் என்று முடிவு செய்தனர்…காமாட்சி இப்பொழுதான் மனம் சிறிது சமன் பட்டது..

அழகேசன் சிவா மீண்டும் தன்னிடம் பழைய மாதிரி வந்து பேசவும் சற்று திடம் பெற்றான் கதிரவன்.. ஆனால் அவனுக்கு தெரியாது வசுமதி கூறிய பின் தான் அனைவரும் தன்னிடம் சிறிதாவது பேசுகின்றனர் என்று…. நண்பனை கட்டிக்கொண்டு ஒரு மூச்சு புலம்பி தீர்த்தான்.. அழகேசனுக்கே அவனை பார்க்க பரிதாபமாக இருந்தது… எப்படி கம்பீரமாக தன் புல்லட்டில் உலா வருவான்… இப்படி புலம்பி தவிக்கிறானே என்று வருந்தினான்..

என்ன சொல்லி ஆறுதல் கூறுவது.. எதை சொல்லி சமாதனம் செய்வது.. என்ன சொல்லி இவன் மனதை தேற்றுவது என்று அவனுக்கு தெரியவில்லை.. காதலின் வலியை அவனும் அனுபவித்தவன் தானே… எது பேசினாலும் அவனது மனம் ஆறாது என்று அழகேசன் புரிந்துகொண்டான்..

மேலும் மருத்துவமனையிலே மூன்று நாட்கள் சென்று விட்டன.. 

அத்தனை பேரும் எத்தனை முறை கூறியும் வசுமதி அங்கே வீட்டிற்கு வர மறுத்துவிட்டாள்.. கதிரவனுக்கு மனம் வலித்தது.. எல்லாம் தன்னால் வந்த வினை என்று துடித்தான்.. வசுமதி கதிரவனை ஏறெடுத்தும் கூட பார்கவில்லை..

“ என்னை பார்க்க பிடிக்கவில்லை  என்றால் நான் வீட்டுக்கு வரவில்லை.. தயவு செய்து நீ வீட்டுக்கு வா மதி.. ப்ளீஸ்.. நான் உன் கண் முன்னாடி கூட வரமாட்டேன்.. ப்ளீஸ் மதி… நான் பண்ணது எல்லாம் தப்பு தான் மதி.. ப்ளீஸ் மதி… நான் பேசுனது மிகவும் தப்பு தான் மதி.. அதுக்காக நீ வீட்டுக்கு வரலைன்னு சொல்லாத மதி ..  “ என்று கெஞ்சினான்..

ஆனால் வசுமதிக்கோ இவன் பேசிய எதுவும் காதுகளில் விலாத மாதிரி இருந்தாள். சிவாவிடம் வீட்டிற்கு சென்று அவளது பொருட்களை எல்லாம் ஒன்று விடாமல் எடுத்து வர கூறினாள்…. சிவாவும் கதிரவனை வம்படியாக இழுத்துக்கொண்டு வீடு சென்றான்.. அங்கே வசுமதியின் அறையில் நுழையவும் கதிரவனுக்கு ஹோ !!!! என்று வந்தது… அய்யோ என்று சத்தமாக கத்தி அழவேண்டும் போல இருந்தது.. அடக்கிகொண்டான்..

வசுமதியின் ஒவ்வொரு பொருட்களையும் எடுத்து பார்த்தான். ஆசையாக தடவி பார்த்தான்… அவளை துளைத்துவிட்டு அவளது பொருட்களை வைத்து என்ன செய்வான் பாவம்..

அங்கே அலமாரியில் ஒரு அழகிய மர பெட்டி இருந்தது.. அதை கண்ட சிவா  “அத்தான் இது சுமதியோடது  இல்லை..” என்று அவனிடம் குடுத்தான்..

என்ன இருக்கிறது என்று அந்த பெட்டியை திறந்து பார்த்த கதிரவன் திகைத்து விட்டான்.. அந்த பெட்டியில் இருந்த அனைத்தும் கதிரவன் சம்பந்தப்பட்ட பொருட்கள்.. காதலின் சின்னமாக கதிரவனின் நியாபகமாக வசுமதி அவனுக்கு தெரியாமல் எடுத்து வைத்து இருந்தாள்.. சிவாவுக்கு இதை பார்த்த பின் தன் அக்காவின் காதலின் ஆழம் புரிந்தது..

கதிரவன் தூக்கிபோட்ட பேனா.. அவனது சட்டையின் பிய்ந்து போன பட்டன்.. அவனது ஜாக்கிங் ஷூவின் லேஸ்… அவனது கூலிங் கிளாஸ்.. என்று நிறைய பொருட்கள் இருந்தன.. இதை எல்லாம் காண காண கதிரவனுக்கு எப்படி பட்ட ஒருத்தியை தன் வார்தைகளால் காயப்படுத்தி விட்டோம்.. எத்தனை அழமான காதலை கேவலமான வார்த்தைகளால் அசிங்கப்படுத்தி விட்டோம் என்று மிகுந்த வேதனை அடைந்தான்.. தன் வேதனையை சிவாவிடமும் கூறினான்..

“ டேய் சிவா.. ஒரு நிமிஷம் முன் கோவத்தில் நான் உன் அக்கா மனசை கொன்னுட்டேன் டா.. டேய் சென்னைக்கு போனாலும் அவளை நீ நல்லா பார்த்துக்கோ டா.. தினமும் எனக்கு போன் பண்ணி சொல்லு டா அவள் எப்படி இருக்கான்னு.. ப்ளீஸ் டா சிவா. “ என்று துடித்தான்..

சிவாவிற்கும் கதிரவனை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் அவனுக்கு என்ன சொல்லி கதிரவனை சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.. “ எல்லாம் சரி ஆகிவிடும் அத்தான்… “ என்று மாட்டும் கூறி வசுமதியின் பெட்டியை தூக்கி கொண்டு சென்றான்..

அவள் இல்லாத அவளின் அறை இந்த அறையில் தானே முதல் முதலில் தங்கள் காதலை பகிர்ந்து கொண்டனர். எத்தனை மகிழ்ச்சியான நினைவுகளை தாங்கி அனைத்திற்கும் சாட்சியாக இருந்தது இந்த அறை.. ஆனால் இன்று அவள் இல்லை.. அவளது நினைவுகளையும் அவளது வாசத்தையும் மட்டுமே தாங்கி நிற்கிறது..

அங்கே இருந்த கண்ணாடியில் தன்னை பார்தான் கதிரவன்.. அவனது முகத்தை காண அவனுக்கே பிடிக்கவில்’லை.. அங்கு இருந்த சுவரில் ஓங்கி குத்தினான்..

அவள் ஊருக்கு செல்ல போகிறாள் என்ற எண்ணமே அவனை வேரோடு சாய்த்து விட்டது..

“ இருவரும் என்ன என்ன பேசி வைத்து இருந்தோம்.. நானே அவளை கொண்டு போய்  விட்டு விட்டு எங்கள் காதலை அத்தை மாமா விடம் சொல்ல எவ்வளோ ஆசையாய்  இருந்தாள்.. எல்லாவற்றையும் நானே மட்டி மாதிரி முட்டாள் மாதிரி கெடுத்துவிட்டேன்… “ என்று தன்னை தானே திட்டிகொண்டான்..    

வசுமதி அன்று ஊருக்கு கிளம்புவதாக இருந்தது… யார் என்ன கூறினாலும் அதற்கு தக்க ஒரு பதில் குடுத்து ஊருக்கு செல்வதில் உறுதியாக இருந்தாள்.. வசுமதியின் இந்த பிடிவாதம் கதிரவனுக்கு முற்றிலும் புதிது.. கதிரவன் ஒருபுறம் இப்படி தான் செய்த தவறை எண்ணியும் வசுமதியை பிரிய போகும் வலியை எண்ணியும் மருகினான்..

ஆனால் வசுமதியோ துளி கூட தன் வருத்தத்தையும் வேதனையையும் முகத்தில் காட்டவில்லை.. அவள் புரிந்து கொண்டால் தன் மன கஷ்டத்தை வெளிபடுத்தினால் இங்கு இருக்கும் அத்தனை பேரும் வருந்துவர்.. இதனால் மீண்டும் இரு குடும்பங்களுக்கு நடுவிலும் விரிசல் ஏற்படும்.. அதலால் தன்னுடையை அணைத்து உணர்வுகளையும் மனதின் ஆழத்தில் பூட்டி வைத்தாள்..

அனைவரிடமும் நன்றாக பேசினாள்… ஆனால் அந்த பேச்சில் முதலில் இருந்த துள்ளல் இல்லை.. சிரித்தால் தான்.. ஆனால் அந்த சிரிப்பில் மலர்ச்சி இல்லை.. கண்ணிலும் முகத்திலும் அவளை அறியது ஒரு வெறுமை குடிகொண்டது..

என்னத்தான் அவள் இப்படி தன் மனதை வெளிபடுதாமல் இருந்தாலும் இத்தனை அனுபவம் வாய்ந்தவர்கள் அங்கு இருக்கும் பொழுது அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்..          

சில நேரம் அவளை அப்படியே தூக்கி சென்று விடலாமா என்று கூட யோசிப்பான்…வசுமதியோடு அனைவரும் கிளம்பினர்.. அன்னபூரணி தானும் வந்து தன் மகள் மற்றும் பேரன் பேத்தியோடு இருக்க விரும்புவதாக கூறிவிட்டார்..

காமாட்சியும் சிவபாண்டியனும் தாங்களும் அங்கு வருவதாக கூறினர். எங்கு மீண்டும் இந்த உறவுகள் அனைத்தும் பிரிந்து விடுமோ என்று பயந்த அனைவருக்கும் வசுமதியின் பாசமும் அன்பும் மெய்சிலிரிக்க வைத்தன.. வசந்திக்கு மகளை நினைத்து ஒரு புறம் வருத்தம் இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் கழித்து தன் பிறந்த குடும்பம் தன் வீட்டிற்கு வருவதை எண்ணி மகிழ்ந்தார்..

வசுமதி தன் அம்மாவிடம் கூறிவிட்டாள் “ இங்க பாரு மா எனக்காக நீ பார்க்காத.. இத்தனை வருஷம் கழித்து நம்ம சேர்ந்து இருக்கோம்.. என்னை காரணமா கவைத்து  நீங்க மறுபடியும் பிரிந்துவிட கூடாது.. அம்மாச்சியை பார்த்தியா இப்பவே எவ்வளோ வருத்தமா இருக்குன்னு… பாவம் மா அது.. நீ எப்பவும் போல அவர்கள் கூட பேசு பழகு.. “ என்று கூறவும் தான் வசந்திக்கு சற்று மனபாரம் குறைந்தது..

சண்முகநாதன் தான் வசுமதியிடம் கேட்டார் “ சுமதி மா உனக்கு நிஜமாகவே மனதில் எந்த வருத்தமும் இல்லையா டா.. அப்பா கிட்ட எதுனாலும் சொல்லு டா “ என்றார் அன்பாக..

வசுமதி அவரை பார்த்து மெல்ல நகைத்தபடி “ அப்பா எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணுவிங்களா ??? ”                     

“ என்னடா ஹெல்ப் என்று  கேட்கிற எனக்கு இது பண்ணுங்கபா என்று உரிமையாய்  கேளு டா உனக்கு என்ன செய்யனும் ?? ”

“ இல்ல…. அங்க நம்ம வீட்டுக்கு போகவும் எனக்கு வேற எதாவது ஒரு கம்பெனில வேலை வாங்கி தர்றீங்களா பா ?? ”

“ ஏன் டா வேற கம்பெனி ??? நம்ம கம்பெனிக்கே வா.. அங்க உனக்கில்லாத வேலையா ?? ”

“ ம்ம்ஹும்.. நம்ம கம்பெனி வேண்டாம் பா.. எனக்கு முழுதாய் வேற சூழ்நிலையில்  இருக்கவேண்டும் போல இருக்கு பா அதான் ப்ளீஸ் டாடி…” என்றல் கெஞ்சலாக.. தன் மகள் தன்னிடம் இப்படி எல்லாம் கெஞ்சியது இல்லை… ப்ளீஸ் சொன்னதும் இல்லை.. காதல் எப்படி அவளை மாற்றி விட்டது என்று எண்ணினார் சண்முகநாதன்..

“ சரி டா  எல்லாமே உன் இஷ்டம்  “ என்று கூறி சென்று விட்டார்.. அனைவரும் ஊருக்கு கிளம்பும் வேலையில் இருந்தனர்..

கதிரவனை யாரும் வா என்றும் வருகிறாயா என்றும் கேட்க கூடவில்லை.. அழகேசனும் அனைவருடனும் முதலில் கிளம்பினான்.. ஆனால் வசுமதி தான் வேண்டாம் என்று கூறி விட்டாள்..

“ ஏன் வசும்மா நான் உங்க வீட்டுக்கு வருவது உனக்கு பிடிக்கவில்லையா ?? ” என்று பாவமாக கேட்டான் அழகு..

“ அட என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க ??? எனக்கு என் அண்ணன் வீட்டுக்கு வருவது பிடிக்காமல் இருக்குமா ?? ஆனால்  அண்ணியோட வருவது இன்னும் சந்தோசமாக இருக்கும் “ என்றல் மெல்ல சிரித்தபடி..

“ அதற்கென்னமா கல்யாணம் முடிந்து வந்துவிட்டால்   சரிதானே ஆனால்  இப்ப ஏன் வரவேண்டாம் சொல்கிற ?? ”

“ நீங்க வந்துட்டா அத்தான் கூட யார் இருப்பார்கலாம்??. அவ்வளோ பெரிய வீட்டில் அவர் மட்டும் எப்படி தனியாய் இருக்க முடியும் ?? ” என்று கேட்டாளே ஒரு கேள்வி… அவன் இதற்கு மேல் எந்த பதிலும் கூறவில்லை..

“ அம்மா தாயே இனிமே இந்த பேச்சுக்கே நான் வரமாட்டேன்” என்பது போல கை எடுத்து கும்பிட்டு விட்டான்..

அனைவரும் கிளம்பி கொண்டு இருக்கும் நேரம் வசுமதி மட்டும் அறையில் இருந்தால்.. மெத்தையில் கால் தொங்க போட்டு அமர்ந்து இருந்தாள்.. அவள் மனம் என்ன யோசிக்கிறது என்பது அவளுக்கே புரியவில்லை.. புயலென உள்ளே வந்தான் கதிரவன்..

அவன் உள்ளே வந்ததை கண்ட வசுமதி திகைத்து நோக்கினாள்.. இத்தனை நாளில் இவன் இப்படி வந்தது இல்லை… அவனுக்கோ அவள் செல்வதை தாங்க முடியவில்லை… ஒரு நிமிடம் கூட அவள் பிரிவதை பொறுக்க முடியவில்லை..

“ மதி ப்ளீஸ் டி இப்படி ஊருக்கு போகாதே, உனக்கு என் மேல் தான கோவம். அதற்கு  ஏன் டி வீவீட்டிற்கு  வரமேட்டேன் என்று  சொல்ற.. டி ஒரு தடவ வந்துவிட்டு போ மதி..” என்று கெஞ்சினான்..

அவளுக்கு தான் அவன் கெஞ்சுவதோ சாரி கேட்பதோ பிடிக்காதே.. அவனது முகமும் குரலும் கண்ணீரும் அவளது மனதை சிறிது அசைத்தாலும் அன்று அவன் பேசிய வார்த்தைகள் மீண்டும் அவள் காதுகளில் ஒலித்தன..

ஒரு நொடி அவள் முகம் இளகியது போல் தோன்றியதோ என்று ஆவலாக பார்த்தவன் அவளது கோப முகத்தையே கண்டான்..

“ டி நீ இப்படி அமைதியாய் இருக்காத.. என்னை திட்டனுமா திட்டு அடிக்கனுமா அடி.. ஆனால் இப்படி எதுவுமே பேசமால் இருந்தா என்ன டி அர்த்தம்.. நான் பண்ணது தப்பு தான்.. அதற்கு எந்த காரணமும் இல்லை டி மதி.. ஒரு நிமிச கோவத்தில் என்ன ஏது என்று கூட கேட்காமல்  நான் மிகவும் பேசிட்டேன் டி…”

“ அய்யோ உனக்கு சாரி சொன்னா கூட பிடிக்காதே.. ஏன் டி நீ இப்படி இவ்வளோ என்னை லவ் பண்ண ??? அப்படி நான் என்ன பெருசா போயிட்டேன் உனக்கு “ என்று அவளது கால்களை கட்டிகொண்டு அவளது மடியில் தலைவைத்து அழுதான்..

காதல் கொண்ட மனம் அவனது கண்ணீரை உணரவும் கரைந்துவிட்டது.. அவளே உணரும்முன் அவளது கைகள் அவனது தலையை வருடியது..  ஆனால் அது எல்லாம் சிறிது நேரம் தான்..

அவளது கை படவும் ஆவலோடு பார்த்த கதிரவன் முகத்தை காணவும் மீண்டும் தன் மனதை மாற்றிகொண்டாள்.. “ அவனோ ப்ளீஸ் டி ஏதாவது பேசு டி “ என்றான்

“ இங்க பாருங்க.. இப்பவும் நான் உங்களை மட்டும் தான் காதலிக்கிறேன்.. வேறு யாரையும் என்னால்  காதலிக்கவும் முடியாது.. ஆனால்  அதாற்காக எல்லாம் உங்களிடம் பழைய மாதிரி உறவு கொண்டாட முடியாது.. நீங்க இரு என்று  சொன்னா இருக்கவும் போ என்று சொன்னால் போகவும் நான் ஒன்றும் நீங்க கீ குடுத்தா ஆடும் பொம்மை கிடையாது..”

“ பொறுங்க நான் பேசிக்கிறேன்.. பேசு பேசு என்று  சொன்னிங்களே.. இனிமே இது தான் நான் உங்களிடம் கடைசியாக  பேசுவது.. என் காதல் எனக்கு மட்டும் தான் இனிமேல் சொந்தம் அதில் உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.. இனி எந்த விதத்துலயும் நான் உங்கள் லைப்ல வரமாட்டேன்…”

“  இனிமே நீங்க நிம்மதியா மிகவும் ப்ரீயா இருக்கலாம்.. வசுமதி என்று ஒருத்தி உங்கள் வாழ்கையில் இனிமே இல்லை.. இப்படி ஒருத்திஇருந்தால் என்பதையே  மறந்துவிடுங்கள்.. நீங்க என்னை உங்கள் மனதில் நினைத்து பார்கிறதை கூட நான் விரும்பவில்லை “ என்று கூறி அவனது பதிலை கூட கேட்காமல் எதிர்பார்க்காமல் வேகமாக நடந்து சென்று காரில் அமர்ந்து விட்டாள்..

“ மதி ,மதி.. ஒரு நிமிஷம் “ என்று அவனும் பின்னாடியே வந்தவன் அனைவரும் இருப்பதை கண்டு  செய்வது அறியாது நின்று விட்டான்..

அவள் தன்னை விட்டு செல்கிறாள் என்பதை தவிர அவனால் வேறெதுவும் உணர முடியவில்லை.. அவளையே கண்ட வண்ணம் நின்று விட்டான்.. அவளும் காரில் அமர்ந்து கண்ணாடி வழியே அவனை தான் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்..

மனதிற்குள் “ இப்படி செய்து விட்டீர்களே அத்தான்… இனி நான் என்ன செய்யபோகிறேன்.. உங்களை பார்க்காமல் எப்படி இருக்க போகிறேன்..” என்று மருகினாள்..

கார் நகர்ந்தது… இருவரின் பார்வையும் விலகியது… வசுமதி கண்களை மூடிக்கொண்டாள்.. முதல் முறை இந்த ஊருக்கு வரும் பொழுது அவள் “ வாழ்ந்தால் இப்படி பட்ட ஒரு ஊரில் வாழ வேண்டும் “ என்று நினைத்தது நினைவு வந்தது.. கண்களில் நீரும் வழிந்தது…

கதிரவன் தனித்து நின்று இருந்தான்… “ இனிமேல் என்ன செய்யபோகிறேன்.. அய்யோ அவளை பாக்காமல் பேசாமால் எப்படி இருக்க போகிறேன்… மதி ப்ளீஸ் டி என்னிடமே வந்திவி\டு..  ” என்று மானசீகமாக அவளோடு பேசினான்.

மீண்டும் காதலை யாசித்தான்..

                உன் நினைவு – 25

 

நிழலாக நீ இருந்தாய்…

உணராமல் நான் இருந்தேன்…

இமையாக நீ இருந்தாய்…

காணாமல் நான் இருந்தேன்…

இப்பொழுது

உணர்ந்து தவிக்கிறேன்..

வந்து விட டி சகி..

நான் வாழ வரம்

கொட டி சகி……  

 

ஆயிற்று ஒரு மாதத்திற்கும் மேலே வசுமதி போடியில் இருந்து சென்னை சென்று…  வசுமதியை அவளது வீட்டில் விட்டு வர என்று சென்னை சென்ற காமாட்சி, அன்னபூரணி, சிவபாண்டியன் அனைவரும் அங்கேயே ஒரு வரம் தங்கி விட்டு தான் வீடு வந்து சேர்ந்தனர்..

கதிரவனோ நடந்ததை எண்ணி எண்ணி மருகினான்.. வசுமதியோ மருகி மருகி உருகினாள்…. 

இந்த ஒரு வாரமும் கதிரவனுக்கு துணையாக உற்ற நண்பனாக தன் தங்கைக்கு செய்து குடுத்த சத்தியத்தை மதிப்பவனாக நடந்து கொண்டான் அழகேசன்.. ஆனால் கதிரவனோ இந்த உலகத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல இருந்தான்..

ஒவ்வொரு செயலை செய்ய வைப்பதற்கும் அவனை யாராவது தார்குச்சி வைத்து தூண்ட வேண்டியது இருந்தது..  ஒரு ஒரு நொடியும் அவனுக்கு யுகமாக தெரிந்தது.. ஏதோ கடைமைக்கு தன் வேலைகளை செய்தான் அவ்வளவே.. முன்பு அவனிடம் இருந்த கம்பீரம், தைரியம், குறும்புதனம் எதுவுமே இல்லை..

அழகேசனுக்கு அவனை இப்படி பார்க்கவே மிக கஷ்டமாக இருந்தது.. காமாட்சிக்கு போன் செய்து வர சொன்னான்.. இதற்கு இடையில் மேலும் ஒரு மாதம் தங்கள் கல்யாணத்தை தள்ளி வைத்து இருப்பதாக கூறவும் முதலில் அனைவரும் வருத்தப்பட்டனர்.. கோவப்பட்டு அவனை திட்டினர். பின் அவன் எடுத்த முடிவு சரியே என்பதை உணர்ந்து கொண்டனர்..

கதிரவனோ வீடிற்கு வந்தால் வசுமதியின் அறையிலேயே முடங்கி கொண்டான்.. அந்த வெற்று அறையில் அவனுக்கு என்ன இருந்ததோ தெரியவில்லை.. அங்கு போடப்பட்ட கட்டிலில் படுத்து மேலே விட்டதை பார்த்து யோசனையில் ஆழ்ந்து விடுவான்..

காமாட்சிக்கு இது எல்லாம் பார்க்க பார்க்க பெற்ற வயிறு துடித்தது… பின்னே எத்தனை ஆசையாய் அவனை பெற்று வளர்த்தார்.. இன்று தன் மகன் இப்படி வாழ்கையை வெறுத்து  இப்படி எதிலும் பற்றில்லாமல் இருப்பதை காண காண அவருக்கு வேதனை கூடியது..    

“ இவன் மட்டும் வசுமதியிடம் அப்படி பேசாமல்  இருந்திருந்தால்  இந்நேரம் எவ்வளோ சந்தோசமாய் இருக்கும் எல்லாருக்கும்.. ஆனால் இப்படி எல்லாத்தையும் கெடுத்து இவனும் இவ்வளோ துடிக்கிறானே ” என்று வருந்தினார்..

இதை தன் கணவரிடமும் கூறினார் ” கதிரவனை பார்க்கவே மிகவும் கஷ்டமா இருக்குங்க.. எப்படி இருந்தவன் இப்ப பாருங்க எப்படி இருக்கான் என்று என்னால்  இதை எல்லாம் பார்க்க முடியலைங்க..” என்று கதறினார்..

” இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நாம யோசித்து  கூட பார்க்கவில்லை காமாட்சி.. நீயும் அவனிடம்  பேசாமல் இருக்க.. அதுவே அவனை இன்னும் கஷ்டபடுத்தும்.. தப்ப உணர்ந்து தவிக்கின்றான்.. அவனை மன்னிக்க முடியலை என்றாலும் நடந்ததை மறந்து அவனுக்கு ஆறுதல் சொல் காமாட்சி ” என்றார் ஒரு தகப்பனாய்..

கணவரின் வார்த்தையில் இருக்கும் உண்மையை புரிந்து கொண்டார் காமாட்சி. மெல்ல படி ஏறி கதிரவன் அறைக்கு சென்றார்.. ஆனால் அங்கு அவன் இல்லை..

“ எங்கே ரூமில் இல்லாமல் போயிவிட்டான் “ என்று யோசித்தபடி வெளிய வந்த காமாட்சி வசுமதி அறையில் கதிரவன் இருப்பதை கண்டு அங்கே சென்றார்..

அங்கு இருந்த கட்டிலில் சாய்ந்து அமர்ந்து தன் போனில் இருக்கும் வசுமதியின் போட்டோவை பார்த்து கொண்டு இருந்தான்… அவனது முகத்தில் நிம்மதி மகிழ்ச்சி துளி கூட இல்லை.. கதிரவனை இப்படி ஒரு கோலத்தில் பார்க்கவா அவனை சீராட்டி பாராட்டி வளர்த்தார்..

தன் அம்மா அங்கு வந்து நிற்பதோ அவனை பார்ப்பதோ எதுவும் அவன் உணரும் நிலையில் இல்லை… அவனது மனம் முழுதும் வசுமதி நிறைந்து இருந்தாள்… அவனது எண்ணம் முழுவதும் அவளது வாசம் மட்டுமே நிறைந்து இருந்தது..

 “ அத்தான் அத்தான் என்று என்னையவே சுற்றி சுற்றி வருவாளே.. எத்தனை ஆசைபட்டாள்.. எத்தனை கனவு கண்டாள்..” என்று எண்ணியவன் தங்கள் காதல் நினைவுகளில் மூழ்கினான்..

ஒருநாள் கதிரவன் கேட்டான் “ மதி கல்யாணாத்திற்கு பிறகு நீ எப்படி இருக்க ஆசை படுற ??? “

அவளோ சிரித்தபடி அவன் மீது சாய்ந்து கொண்டு “ எனக்கா அத்தான்… நிறைய ஆசை இருக்கு அத்தான்… “

“ அப்படியா எங்க சொல்லு பார்க்கலாம் ….”

“ முதலில் இந்த நார்த் இந்தியன்ஸ் எல்லாம் வைப்பார்களே உச்சியில நிறைய குங்குமம் அது மாதிரி வைக்கவேண்டும்”

“ ம்ம்ம்ம் “

“ [பிறகு  முத்து வைத்த  மெட்டி போடணும்.. “

“ இது எதற்கு மதி ?? ”

“ அப்பதான அத்தான் நான் நடந்து வரும்போதே உங்களுக்கு கேட்கும்.. ”

“ ஒ !! நீ அப்படி வரியா… சரி சரி.. அப்புறோம் “

“ ம்ம் அப்புறோம் நல்ல லாங் செயினில் தாலி போட்டுக்க வேண்டும்.. இரண்டு பக்கம் காசு வைத்து, தென் அழகா சேலை கட்டிக்கணும்… இப்படியே உங்கள் கூடவே இருக்க வேண்டும்.. கலர் கலரா கண்ணாடி வளையல் சேலைக்கு எத்த மாதிரி வாங்கி போட்டுக்க வேண்டும்.. நீங்க வெளிய போயிட்டு வரும்போது நான் ஒளிஞ்சுக்குவேன் என்னை நீங்க கண்டு பிடிக்க வேண்டும்.. இப்படி நிறைய இருக்கு அத்தான்.. ”       

“ அடி மதி இவ்வளோ இருக்கா உனக்கு… ஹம் இது எல்லாம் அத்தைக்கு முன்னாடியே தெரிந்து இருந்தால் உனக்கு எப்பயோ டும் டும் டும் முடிந்து இருக்கும்..” என்று கூறி அவளிடம் நாலு அடிகளையும் வாங்கி கொண்டான்..

“ ச்சு போங்க அத்தான் எப்ப பார்த்தாலும் உங்களுக்கு கிண்டல் தான்.. உங்களுக்கு தெரியுமா நான் கல்யாணம் என்று  யோசித்ததே உங்களை பார்த்த பின்னாடி தான்.. என்னை பொருத்தவரைக்கும் கல்யாணம் எனக்கு இந்த கதிர் கூட நடந்தால் மட்டும் தான்.. என்னோட இத்தனை ஆசைகளும் உங்களை மையமா வைத்து தான்… “ என்று கூறியவளை தன் நெஞ்சோடு இறுக்கி கொண்டான்..

இதை எல்லாம் நினைக்க நினைக்க மனதில் சொல்ல முடியாத வேதனையை உணர்ந்தான்.. “ மதி இத்தனை பேசிட்டு எப்படி டி என்னை விட்டு போக முடிந்தது.. நான் பண்ணது தப்பு தான் டி மதி… நீங்க சாரி கேட்டால் கூட எனக்கு பிடிக்கலை சொன்னயே… என்னை மன்னிக்க மாட்டியா மதி “ என்று அவளது போட்டோவை பார்த்து பித்து பிடித்தவன் போல அமர்ந்து இருந்தான்..

காமாட்சி அவனருகில் வந்து “ கதிரவா “ என்று அவனது முடியை கோதி விட்டார்..

திடுக்கிட்டு திரும்பினான் கதிரவன்.. இத்தனை நாள் தன்னோடு பேசாத அவ்வளோ ஏன் தன் முகத்தை கூட பார்க்காத அம்மா இன்று தன் அருகில் வந்து தன்னை தொட்டு அவன் பெயர் சொல்லி அழைக்கவும் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. ஆனால் அதெல்லாம் ஒரு நொடி தான்…

தப்பு செய்த பிள்ளை போல தன் அம்மாவின் முகத்தை காண முடியாது தலை குனிந்து கொண்டான்..

“ என்ன சாமி??  ஏன் டா இப்படி இடிந்து போய்விட்ட ?? போ போயி உன் ரூமில படு கதிரவா.. எல்லாம் சரியா போகும் “ என்றார் ஆறுதலாக.. அவ்வளோ தான் இத்தனை நேரம் அமைதியாக இருந்தவன் தன் தாயை கட்டிக்கொண்டு அவரது வயிற்றில் முகம் புதைத்து கொண்டான் சிறுபிள்ளை போல.. அவன் சிறு பிள்ளையை இருக்கும் போதும் இப்படி தான் செய்வான்..

“ அம்மா என்னால முடியலமா… என்னால இதை தாங்கவே முடியலை மா.. வசுமதி எப்படிமா இதை தாங்குவாள்.. நான் ஒரு நிமிஷம் கோவத்துக்கு என் புத்தியை விலை குடுத்துவிட்டேன் மா.. என் மதியை நானே இப்படி பேசிவிட்டேன் மா..  எனக்கு எதுவுமே பிடிக்கவில்லைமா.. நான் என்ன செய்வேன் அவள் இனிமேல் என்ன செய்வா  அம்மா அம்மா… நீங்க அங்க  தானே இருந்தீங்க மதி நல்லா இருக்காளா மா ???”

“ என்னை பற்றி பேசினாளா மா ?? ”

“ என்னை பற்றி கேட்டாளா மா … அவள் என்னை மன்னிக்கவே மாட்டாளா மா ?? ” என்று துடித்து தவித்தான்..

என்ன சொல்லி துடிக்கும் மகனுக்கு ஆறுதல் கூறுவார்.. வசுமதி வந்துவிடுவாள் என்று கூறுவாரா இல்லை இது எல்லாம் நீ செய்த தப்புக்கு தண்டனை என்று மகனுக்கு கூறுவாரா ?? என்ன சொல்லி அவரால் அவனை சமாதானம் செய்ய முடியும்..

வார்த்தைகள் அற்று துடிக்கும் தன் மகனை செய்வது அறியாது பார்த்தபடி அவன் தலை தடவியபடி நின்று இருந்தார்.. பின்னே “ எல்லாம் சரியா போயிடும் கதிரவா.. நீ எதற்கும்  கலங்காதே “ என்றார் ஆறுதலாக..

அவரது வார்த்தைகளை கேட்ட கதிரவன் தலை நிமிர்ந்து பார்த்து “ அம்மா .. தேங்க்ஸ் மா.. நீ வந்து பேசினது எனக்கு எவ்வளோ நிம்மதியா இருக்கு தெரியுமா மா ?? அம்மா இன்னும் உனக்கு கோவமா மா?? ப்ளீஸ் மா நீயாவது என்னை மன்னிக்க மாட்டியா ?? கோவம் என்றால் திட்டுமா பேசாமால்  மட்டும்   இருக்காத மா “ என்றான் சிறு குழந்தை போல..

காமாட்சியின் தாயுள்ளம் உருகி விட்டது “ கதிரவா.. அம்மா கோவத்தில்  பேசிவிட்டேன் டா.. நீ எதுவும் மனதில் வைக்காதே உனக்கு நான் இருக்கிறேன் டா “ என்று ஆறுதல் கூறி அவனை தூங்க வைத்த பின்னர் கீழிறங்கி சென்றார்..

இப்படி கதிரவன் ஒரு புறம் வேதானையின் பிடியில் இருக்க அங்கே அவளின் மதி சென்னையில் இந்தியாவை விட்டே போகும் முடிவிற்கு வந்துவிட்டாள்..

வசுமதியை வீட்டில் விட்டு வர என்று போடியில் இருந்து மொத்த குடும்பமும் சென்னை சென்று அங்கு தங்கி இருக்கும் பொழுது கூட அவள் பெரிதாக தனிமையை உணரவில்லை.. தன் அப்பாவிடம் கூறி வேலைக்கு ஏற்பாடு செய்ய சொன்னாள்..

ஆனால் வசந்தியோ “ அதெல்லாம் ஒன்றும் இப்ப வேண்டாம்.  கொஞ்ச நாள் வீட்டில் இரு.. இப்ப நீ வேலைக்கு போய் ஒன்றும் அக போவது இல்லை.. வீட்டில் இருந்து ரெஸ்ட் எடு உடம்பு மிகவும் மெலிவா இருக்க “ என்று தன் மகளை வீட்டில் நிறுத்தி விட்டார்..

அவருக்கு கவலை வீட்டில் இருக்கும் பொழுதே வசுமதி எதையோ பரிகுடுத்தது மாதிரி இருக்கிறாள்.. எதை எங்கே வைத்தால் என்று எதுவும் அவளுக்கு தெரியவில்லை.. எதிலும் பற்றில்லாமல் பிடிப்பில்லாமல் வெறித்து வெறித்து பார்த்தபடி இருக்கும் மகளை வேலைக்கு வெளியே அனுப்ப பயந்து கொண்டு தான் வீட்டில் இருத்திக்கொண்டார்..

அவளுக்குமே இந்த ஓய்வு தேவையாக தான் இருந்தது.. சிவாவும் ராமும் தான் அவளை எங்காவது வெளியே அழைத்து சென்றனர்.. முன் என்றாள் வெளியே கிளம்புவது என்றால் வசுமதி கண்ணாடி விட்டு நகரவே அறை மணி நேரமாகும்.. இப்பொழுது அவளின் அறை விட்டு கூட வெளி வருவது இல்லை..

ஐந்து முறை அழைத்தாள் ஐந்தாவது முறை சலிப்புடன் “ என்னமா ?? ” என்று கேட்டுக்கொண்டு வருவாள்..

சல சல என்று பேசும் மகள் இன்று எது கேட்டாலும் “ ம்ம்.. சரி “ என்று ஒரு இரு வார்த்தை மட்டுமே பேசுவதை காண தாய் மனம் துடித்தது.. ஆனாலும் அவளிடம் வெளியே தன் வருத்தத்தை காட்டவில்லை.. யாருக்கு தான் பெற்ற பிள்ளைகள் இப்படி இருந்தால் மனம் பொறுக்கும்.

இரவு நேரத்தில் சிவாவிடமும் சன்முகனாதனிடமும் கூறி மனதை தேற்றி கொள்வார்..

வசுமதியோ தன் அறையே கெதி என்று இருந்தால்.. எந்த பாட்டு கேட்டாலும் அவளுக்கு கதிரவன் நியாபகம் வரும்.. அவளை அவளே கண்ணாடி பார்த்தால் கூட அவன் அவளது அழகை வர்ணித்தது நினைவு வந்து அவளை துன்புறுத்தும்.. அம்மாவின் கட்டயாத்திற்காக உண்பாள்..

 தம்பியின் மனம் நோக கூடாது என்று அவனோடு பேசுவாள்.. அவ்வளோதான்.. இதுவே அதிகம் என்பது போல அமைதியாக இருந்துவிடுவாள்..

அவளுக்கு பிடித்தது எல்லாம் தன் அறையில் படுத்துக்கொண்டு தன் லேப்டோபில் அழகேசன் நிச்சயம் அன்று சிவா கதிரவனையும் வசுமதியையும் எடுத்த போட்டோகளை பார்த்தபடி இருப்பது தான்.. இது மட்டும் தான் அவளுக்கு நிம்மதி தரும்.. மனம் சற்றே அமைதி பெரும்.. அவளோ போட்டோவில் இருக்கும் கதிரவனிடம் பேசுவாள்…

“ ஏன் அத்தான் இப்படி பண்ணிட்டீங்க… நீங்க என்னை காதலிக்கறீங்க என்று  எனக்கு தெரியும் அத்தான்.. ஆனால் நீங்க பேசின பேச்சு என்னை எவ்வளோ பாதிப்பு அடைய வைத்திருக்கு தெரியுமா ?? நீங்களா அத்தான் என்னிடம் இப்படி நடந்துகிட்டீங்க.. என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை  ”

“ எனக்கு தெரியும் அத்தான் நீங்களும் மிகவும் வருத்தப்பட்டுகிட்டு தான் இருப்பீங்க என்று ஆனால்  நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க..”

“ எவ்வளோ ஆசை பட்டிங்க கதிர் நீங்க?? நாம எப்படி எல்லாம் வாழ எவ்வளோ கற்பனை இருந்தது உங்களுக்கு “ என்று முன்னே நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்தாள்..

பண்ணை வீடு கட்டிக்கொண்டு இருக்கும் சமயம்.. இருவரும் தோப்பில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.. அப்பொழுது வசுமதி தான் ஆரம்பித்தாள் “ ஏன் அத்தான் பொதுவா இப்படி தோப்புக்குள்ளே கட்டுகிற வீடு எல்லாம் அளவா தான இருக்கும் நீங்க மட்டும் ஏன் இவ்வளோ பெரிதாய்  கட்ட சொன்னிங்க ?? ”

அவளது கேள்விய கேட்ட கதிரவன் குறும்பாக சிரித்தபடி “ அதுவா மதி.. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து பிள்ளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும்  அதான் அத்தனை பேருக்கும் இங்கு இடம் வேண்டுமே“ என்றான் அவளை பார்த்து கண்ணடித்து..

அவனை செல்லமாக ஒரு அடி அடித்து “ என்ன பத்து குழந்தையா ??? போதுமா சாமி உங்களுக்கு.. அது என்ன ஆறு கம்மியா சொல்லுறீங்க.. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ் என்று  தான எல்லாம் சொல்லுவாங்க…?? என்ன அத்தான் கஞ்சுஸ் மாதிரி பத்து போதும் சொல்றீங்க ? என்று அவனையே திருப்பிவிட்டாள்..

“ அடி பாவி மதி… உனக்கு வர வர வாய் ஜாஸ்தியாய் போகிறது கல்யாணத்துக்கு பின்னாடி தெரியும் இந்த கதிரவன் எப்படி பட்ட ஆளு என்று  “  என்று கூறி சிரித்தான்..

அவனது சிரிப்பொலி இப்பொழுது கூட அவளுக்கு கேட்பது போல இருந்தது.. லேப்டோபில் தெரியும் போட்டோகளையே வெறித்து பார்த்தபடி அமர்ந்து இருந்த மகளை காண பொறுக்கவில்லை வசந்திக்கு..

அன்றும் அப்படித்தான் வசுமதியை அழைத்துக்கொண்டு சிவா வெளியே சென்று இருந்தான்..  வசந்தி வேகமாக தன் அண்ணிக்கு போன் செய்தார்..

“ ஹலோ அண்ணி.. எப்படி இருக்கீங்க ?? அண்ணா அம்மா எல்லாம் எப்படி இருகாங்க?

காமாட்சி “ இங்கு எல்லாரும் நல்லா தான் இருக்கோம் வசந்தி.. கதிரவன் தான் எதிலும் பிடி இல்லாமல் இருக்கான்.. அவனை பார்க்க தான் சங்கட்டமாக இருக்கு..”

“ நானும் அது பற்றி தான் பேச கூப்பிட்டேன் அண்ணி.. இங்க வசுவும் இப்படி தான் இருக்கா.. ரூம் குள்ளேயே அடைந்து கிடக்காள்.. அவளாய் எதாவது நினைத்து சிரிக்கிறா இல்லை அழுகிறாள்.. அண்ணி எனக்கு மிகவும் பயமாய்  இருக்கு அதான் உங்களுக்கு போன் பண்ணேன்”

“நானும் இதை பற்றி உன்கிட்ட பேசத்தான் இருந்தேன் வசந்தி நீயே கூப்பிட்டுட்ட.. எனக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.. ஆனால்  இவங்க இரண்டு பேரையும் இப்படியே விட்டா ரெண்டும் உருப்படாமல்  போயிவிடும் வசந்தி.. இனிமேலும் நம்ம அமைதியாய்  இருந்து என்ன பலனும் இல்லை..”

“ஆமா அண்ணி நாம தான் எதாவது செய்ய வேண்டும்…. ஆனால் என்ன செய்வது ?? அதுதான் ஒன்றும் புரியல…”

“ ஹ்ம்ம் யோசிக்கலாம்… சரி நீங்க எல்லாம் அழகு கல்யாணத்துக்கு வரீங்க தானே ?? ”

“ நாங்கள் எல்லாம் கிளம்பி தான் இருக்கோம் அண்ணி.. வசு இன்னும் எதுவும் சொல்லவில்லை.. அவள் மனதில் என்ன இருக்கு எட்ன்று சொல்லவும் மாட்டேங்கிறா.. என்ன பேசினாலும் ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு போயிடுறா.. எனக்கு ஈரகுலையே நடுங்குது அண்ணி..  ”

“ நீ எதற்கும் கலங்காத வசந்தி.. நாங்க எல்லாம் இருக்கோம்… இங்க கதிரவனோ எப்ப வீட்டுக்கு வறான் போகிரானே தெரியவில்லை ..ஆளே மிகவும் மாறி போயிவிட்டான்.. இரண்டு பேரு மனசுலையும் காதல் இருக்கு.. ஆனால்  எதுவோ தடுக்குது.. ஒருமுறை  இரண்டு பேரும் பார்த்துகிட்டா எல்லாம் சரியாய் போயிடும்.”

“ நீங்க சொல்வது எல்லாம் சரி அண்ணி.. ஆனால் இவள்தான் ஊருக்கே வரமேட்டேன் என்று இருக்காளே பிடிவாதமா… “

“ ஹ்ம்ம் நீ நிம்மதியா இரு வசந்தி நான் அழகு கிட்ட பேசிட்டு எதாவது பண்ண முடியுமா  பார்க்கிறேன்.. ஆனால் இதை பற்றி நீ வசும்மா கிட்ட பேசாதே.. நீ கொஞ்சம் கண்டிப்பா பேசுவது மாதிரி பேசு.. அவளும் ஒரு வேகத்தில் மனதில் இருக்கிறதை எல்லாம் கொட்டுவா ”

“ ம் சரி அண்ணி நீங்க சொல்ற மாதிரியே பேசுகிறேன் “ என்று போனை வைத்தார்.. இப்பொழுதுதான் அவருக்கு கொஞ்சம் மனம் சமன் பட்டது..

இப்படி பெரியவர்கள் தங்கள் பொறுப்பை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டு இருக்க, சிவாவோ தினமும் வசுமதி பற்றி கதிரவனுக்கு தகவல் சொல்ல வேண்டும் இல்லை என்றால் கதிரவனின் புலம்பலை அவனால் தாங்க முடியாது..

ஆனால் கதிரவனும் விடுவதாய் இல்லை.. தினமும் குறுந்தகவல் அனுப்புவான் வசுமதிக்கு.. காலை வணக்கம் ஆரம்பித்து இரவு வணக்கம் வரை இடை விடாது பண்ணுவான்.. என்ன மதி எப்படி இருக்குற ?? சாப்பிட்டியா ??? நல்லா  இருக்கியா??   ஐ மிஸ் யு … ஐ லவ் யு… என்று அவன் அனுப்பிக்கொண்டே இருப்பான்.

ஆனால் இவளிடம் இருந்து பதில் வராது.. ஆனாலும் விடாமல் தொடர்ந்து மெசேஜ் செய்வான்.. இதுவே வசுமதிக்கும் பழக்கம் ஆகி விட்டது.. தினமும் காலை கண் விழிக்கும் பொழுதே கதிரவனிடம் இருந்து எதாவது வந்து இருகிறதா என்று பார்ப்பாள்..

அதே போல தினமும் அவளுக்கு கால் செய்வான் இவள் எடுக்க மாட்டாள். எடுத்து பேசமாட்டாள் என்று தெரியும், இருந்தும் அவன் அதை விடுவதாய் இல்லை.. அவன் கால் செய்யும் பொழுது போனை கட் செய்யவும் மாட்டாள்.. அதையே பார்த்தபடி அமர்ந்து இருப்பாள்..

போனில் தெரியும் அவன் முகம் கண்டு அமர்ந்து இருப்பாள்.. வசந்தி கூட திட்டினார் ஒரு நாள் ” அது ஏன் சுமதி போன் அடித்துகிட்டே இருக்கு எடுத்து பேசு இல்லை கட் செய்  ரெண்டும் இல்லாமல் இப்படி சிலை மாதிரி இருந்தா என்ன அர்த்தம் ?? ”

“ பேசவும் இஷ்டமில்லை, கட் பண்ணவும் இஷ்டமில்லை என்று அர்த்தம் “ என்று பதில் கூறி சென்று விடுவாள்..

வசந்தி ஒன்று புரிந்து கொண்டார் “ வசுமதிக்கு மனதில் இன்னும் காதல் அப்படியே இருக்கிறது.. ஆனால் கோவமும், என் அத்தான் என்னை இப்படி பேசிவிட்டானே  என்ற வருத்தம் தான் அவள் காதலை மறைக்கிறது.. ரெண்டும் ஒரு தடவ பார்த்து பேசினா எல்லாம் சரியாய் போகும் “ என்று எண்ணினார்..

அப்படித்தான் அன்று சிவாவும் வசுமதியும் ஹாலில் அமர்ந்து இருந்தனர்.. கதிரவன் போன் செய்தான்.. இவள் எடுக்கவும் இல்லை கட் செய்யவும் இல்லை.. சிவா அவளை முறைதான்.. “ அக்கா ஒன்று எடுத்து பேசு இல்லை  கட் செய்  இல்லை இனிமேல்  எனக்கு கால் பண்ணாதீங்க என்று சொல்.. இப்படி எதுவுமே இல்லாமல்  இப்படி இருந்தா என்ன அர்த்தம்?? ”

“ பேசவும் இஷ்டமில்லை, கட் செய்யவும் இஷ்டமில்லை என்று அர்த்தம் “ என்று வசுமதி பதில் கூறும்முன் வசந்தி பதில் கூறினார்.. அவருக்கு ஒரு முறைப்பையே பதிலாக தந்தாள் நம் நாயகி..

சிவாவோ “ நீ இப்படியே பண்ணிட்டு இரு ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன்னை நிஜமாகவே  வெறுத்திட போறாரு.. நீ எந்த ரெஸ்போன்ஸ் பண்ணாமல் இருந்தா அது தான் நடக்கும் “ என்று அவளுக்கு ஒரு அதிர்ச்சி குடுத்து விட்டு தன் அறைக்கு சென்று கதிரவனுக்கு அழைத்தான்

“ ஹலோ அத்தான்…. நீங்க செய்வது கொஞ்சம் கூட சரி இல்லை “ என்றான் எடுத்த எடுப்பிலேயே..

“ என்ன சிவா சொல்ற.. நான் ஏற்கனவே ஒரு தப்பு பண்ணிவிட்டு இப்ப தவித்துக்கொண்டு  இருக்கேன்… நீ ஏன் டா இப்படி பேசுற ?? ” என்றான் கதிரவன் பரிதாபமாக..

“ அடடா என்ன அத்தான் முதலில் இந்த தேவதாஸ் மாதிரி அலைவதை விடுங்கள்.. நீங்க இதே ரூட்டில் போனால் அக்கா உங்களை திரும்பி கூட பார்க்கமாட்டாள் ..”

“ டேய் என்னடா சொல்ற….??? ஏன் டா நீ வேறு என்னை படுத்துகிற.. “

“ ஆமாமா உங்களுக்கு ஹெல்ப் பண்ண போன் செய்தேன் பாருங்க என்னை சொல்ல வேண்டும்.. அத்தான்.. போங்கள் நான் எதுவும் பேசவில்லை.. நீங்களாச்சு உங்கள் மதி ஆச்சு… உங்கள் டம்மி காதல் ஆச்சு… “

“ இந்த பொடியன் எல்லாம் நாட்டாமை பண்ணுகிற அளவிற்கு என்னை பண்ணிட்டியே மதி” என்று எண்ணியவன்  “ டேய் டேய் நில் டா… சரி சரி உன்னை நான் எதுவும் சொல்லவில்லை. நீ என்ன சொல்ல வந்த அதை சொல்…” என்றான் கதிரவன் வேகமாக.. அவனுக்கு எப்படியாவது மதி அவனோடு பேசவேண்டும்..                     

“ ஹ்ம்ம் அப்படி வாங்க வழிக்கு…” என்று ஆரம்பித்த சிவா

“ நீங்க டெய்லி அக்காக்கு மெசேஜ், கால் பண்ணுறீங்களா ??? ”

“ ஆமா டா இதை கேட்கவா இவ்வளோ பேசின?? ”

“ மூச்.. அத்தான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க…” என்றான் சிவா மிரட்டலாக..

“ அட ஆமா டா… வேறு என்ன தான் செய்வது எத்தனை மெசேஜ் பண்ணாலும் ரிப்ளை இல்லை.. கால் செய்தால்  எடுப்பதும் இல்லை  நான் என்ன தான் டா பண்ண ?? ” என்று மீண்டும் புலம்பினான் கதிரவன்..

“ ஐயோ அத்தான்.. முதலில் இந்த அழுமூஞ்சி கதிரவனில்  இருந்து அடாவடி கதிரவனாய் மாறுங்க.. அப்ப தான் சுமதி மறுபடியும் உங்களிடம்  பேசுவாள்..” என்றான் சிவா சலிப்புடன்..

கதிரவனுக்கோ எதுவோ புரிந்த மாதிரியும் இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது.. “ என்ன டா சிவா சொல்கிறாய்  ?? ”

“ இங்க பாருங்க அத்தான் நல்ல கேளுங்கள் நான் ஒரு தரம் தான் சொல்லவேன்.. முதலில் நீங்க இப்படி அவளிடம் கெஞ்சிக்கிட்டு இருப்பதை விடுங்கள்.. பிறகு தினமும் இப்படி மெசேஜ் போன் செய்வதை எல்லாம்  விடுங்கள்.. ஒரு இரண்டு நாளைக்கு அமைதியாக  இருங்க.. பின்ன பாருங்க என்ன நடக்கிறது என்று  ”

இதை கேட்டு திடுகிட்ட கதிரவன் “ டேய் நீ சேர்த்து வைக்க வழிசொல்வாய் என்று   பார்த்தால் ஒரேடியா பிரித்து விடுவாய் போல?? நான் இவ்வளோ பணிந்து போகும்போதே உன் அக்கா என்னை மதிக்கவில்லை.. இதில் நீ சொன்ன மாதிரி செய்தால்  அவ்வளோ தான் ..”

“ அட போங்க அத்தான்.. நீங்க இத்தனை நாள் அவளுக்கு மெசேஜ் பண்ணி போன் பண்ணி பழக்கி விட்டுடீங்க.. ஆனால்  ஒரு இரண்டு நாள் அமைதியாக இருந்தால்  அவள் உங்களிடம் இருந்து எதுவும் வரவில்லை என்று எதிர்பாப்பாள்… அதற்கு  பிறகு  உங்களை பற்றி யோசிக்க ஆரம்பிப்பாள் அத்தான்… ” என்றான் சிவா..

“ இதை இப்படி நான் யோசிக்கவே இல்லை டா.. இதற்கு தான் இப்படி ஒரு மச்சினன் வேண்டும்  சொல்வது… சரி டா நான் என்ன பண்ணணுமோ பண்ணுகிறேன்.. நீ அங்கு  என்ன நடக்குது என்று  சொல்.. தேங்க்ஸ் டா சிவா..” என்று போனை வைத்தான்..

“ ஆல் தி பெஸ்ட் அத்தான் “ என்று கூறி சிவாவும் போனை வைத்து ஒரு பெரு மூச்சு விட்டான்..

இப்படி சென்னையில் சிவா ஒரு புறம் கதிரவனுக்கு உதவ போடியில் அழகேசன் தன் உதவி கரம் நீட்டினான்.. அதிகாலை காமாட்சி தான் கதிரவனை முடுக்கி விட்டார்… “ கதிரவா போ.. தோட்டத்தை சுத்தி ஓடிவிட்டு வா…” என்று வம்படியாய் அனுப்பி வைத்தார்..

முதலில் வசுமதி இருக்கும் பொழுது அவளும் அவனும் தான் காலை ஜாக்கிங் செல்வர்.. தோட்டத்தில் இருக்கும் ரோஜா செடிகளை எல்லாம் பார்க்கும் பொழுது அவளது நினைப்பு இன்னும் அதிகமாக வந்து தன்னை வேதனை செய்கிறது என்று அவன் அந்த பக்கம் செல்வதே இல்லை..

இன்று தன் அம்மா காட்டாய படுத்தி அனுப்பவும் வேறு வழி இல்லாமல் சென்றான் கதிரவன்.. தோட்டத்தை சுற்றி ஓடும் பொது அவனது மனதில் அவளின்  நினைவு ஓடியது…

“ அவளுக்கு ரோஸ் என்றால் அவ்வளோ பிடிக்குமே.. பூ எப்பொழுதும் செடியில இருந்தால் தான் அழகு அத்தான் என்று கூறி சிரிப்பாளே.. ஒரு ஒரு செடிக்கும் ஒரு கதை வேறு சொல்லுவாள்.. குட்டச்சி.. எப்படி தான் வாய் ஓயாமல் பேசுகிறாலோ??  ஆனால்  இப்ப மிகவும் அமைதியா மாறிட்டாவிட்டாள் என்று அத்தை சொன்னார்களே… எல்லாம் என்னால் தான்..” என்று என்னும் போதே அவனது வேகம் குறைந்தது..

அதே நேரம் அங்கு வந்த அழகு தன் நண்பனின் முகத்தை வைத்தே கண்டுபிடித்து விட்டான் எதையோ எண்ணி கலங்கி நிற்கிறான் என்று.. அவனை மாற்றும் பொருட்டு “ டேய் கதிரவா இன்னும் மெதுவா கூட ஓடு டா.. பார்த்து பார்த்து மெல்ல.. பூமிக்கு வலிக்க போகிறது”  என்று கிண்டல் செய்தான்..

ஆனால் அதை எல்லாம் கேட்டு ரசிக்கும் நிலையில் நம் நாயகன் இல்லையே.. “ ச்சு ஏன் டா நீ வேற…. ” என்றான் கவலையுடன்…

“ஆமா டா நான் வேற தான்.. சாரி தெரியாமல் உன் மோன நிலையை கெடுத்துவிட்டேன்.  நான் வரேன் “ என்று முன்னே ஓட ஆரம்பித்தான் அழகேசன்.. அவனது இந்த சிறு முக சுளிப்பதை தாங்கதவனாய் கதிரவன் ஓடி பிடித்தான்

 “ டேய் என்ன அழகு இப்ப நான் என்ன சொல்லிவிட்டேன் என்று  இப்படி முகத்தை  திருப்பிகிட்டு வர..”

“ ஹா !!! உன் முகத்தை பார்க்க சகிக்கவில்லை என்று தான் என் முகத்தை திருப்பிகிட்டு வந்தேன் “ என்றான் மறுபடியும் நக்கலாக..

ஆனால் கதிரவனோ “ ஏன் டா உனக்கு கூட என்னை பார்க்க பிடிக்கவில்லையா ?? ” என்றான் பாவமாக..

“ டேய் டேய் முதலில் இந்த இதயம் முரளி ரேஞ்சுக்கு உருகுவதை நிறுத்து.. நீ கோவத்தில் ஒரு தப்பு பண்ணிட்டே அது உங்கள் இரண்டு பேரையுமே காயபடுத்திவிட்டது  எல்லாம் சரி தான்.. ஆனால்  அனைத்திற்கும் அடுத்த ஸ்டேப் என்று  ஒன்று  இருக்கு.. அதை விட்டு இப்படி செடி கொடி கூட எல்லாம் பேசிகிட்டு இருந்தா வசுமதி உன்னை திரும்பி கூட பார்க்காது..” என்றான் அழகு

“ டேய் என்ன மாப்பிள்ள நீயும் இதையே சொல்கிற சிவாவும் இப்படி தான் சொன்னான்… அவள் பேசினால் தானே டா நான் எதுவும் பண்ண முடியும்.. உன் கல்யாணத்திற்கு கூட வரமாட்டால் போல டா.. அத்தை அம்மா கிட்ட சொன்னார்கலாம்.. ” என்றான் கதிரவன் ஏக்கமாக..

“ டேய் கதிரவா அந்த கவலை உனக்கு வேண்டாம். என் தங்கச்சி என் கல்யாணத்திற்கு வருவாள்.. அதற்கு  நான் பொறுப்பு.. நீ சிவா சொன்ன மாதிரி முயற்சி செய்து பாரு..” என்றான் அழகேசன்..

இப்படி அனைவரும் எப்படியாவது வசுமதியை போடிக்கு அழைத்து வர வேண்டும், இருவரையும் மீண்டும் இணைத்துவிட வேண்டும் என்று முழு முயற்ச்சியில் இறங்கினர்..

 

Advertisement