Advertisement

செல்லப்பாண்டியன் தம்பதியர் இதுவும் விதியின் சதியா அல்லது மாசுபட்டோர் தீட்டிய சதித்திட்டமா என்று கலங்கி கண்ணீர் வடித்தனர். எப்படி பார்க்கிலும் நம் பிள்ளையின் படிப்பு பாழாகி அவச்சொல்லும் கேட்டு புண்படும்படியாயிற்றே. எல்லாம் உன் அண்ணனால் வந்த வினை தானே. நம் பிள்ளை கல்லூரி சென்று வருவதைப் பார்த்து பெருமிதம் கொண்டேனே. தெளிந்த நன்னீரோடையாய் சென்று கொண்டிருந்த நம் வாழ்வில் நீரின் சுழியால் அவதிப்பட வைத்தது அவர்தானே என்று நொந்து நொம்பலமான நிலையில் கடுஞ்சொல் கூறியறிதாவர் தம் வேதனையை மனைவி மீது சுடு சொற்களாய் அள்ளி வீசவே கணவன் பேச்சுக்கு மறு பேச்சு பேசியறியாத அந்ம அம்மா அண்ணன் எதுவும் செய்திருக்காவிட்டாலும் நம் தலைவிதி இப்படி அமைந்திருக்கும்பொழுது வேறு வடிவத்தில் ஏதாவது துன்பம் வந்துதான் இருக்கும். அண்ணனை ஒன்றும் குறைகூற வேண்டாம் எனக் கடிந்து சொல்ல இருவரும் மனம் கசந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதை நிறுத்தினார். நாட்களும் மாதங்களும் உருண்டோடியது.

               மன சஞ்சலத்துடனும், பதைபதைப்புடனும் ஆறுமாதத்தைக் கடந்துவிட்ட செல்லப்பாண்டியன், நாம் பெண்ணைப் பெற்றவர்கள் பணிந்துதான் போக வேண்டும். தனது மைத்துனர் தணிக்காசலத்தை அழைத்துக் கொண்டு மணமகன் ராஜ்குமார் இல்லம் தேடி சென்றார்.

               இவர்களைக் கண்டதுமே ராஜ்குமாரின் தந்தை தனபாலன் முகத்தை ஏழு முழத்திற்கு தூக்கி வைத்துக் கொண்டு யார் நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும். வேண்டாத விருந்தாளியாய் வரவேற்றார்.

               மானங்கெட்டு ரோசம் கெட்டு தன்மானம், கௌரவம் வீழந்தது தெரிந்தும் எங்களைத் தெரியவில்லையா? திருமணம் பேசி முடித்தோமே மறந்துவிட்டீர்களா?

               மறக்கவில்லை, மறக்கவும், மறைத்ததை மன்னிக்கவும் நினைக்கிறேன். முடிந்துபோனது முடிந்ததாகவே இருக்கட்டும். இனி அந்தத் திருமணம் நடைபெற வாய்ப்பே இல்லை. நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். நடை தவறிய பெண்ணை எங்கள் தலையில் கட்ட நினைத்தீர்கள். நாங்கள் செய்த புண்ணியம் எங்கள் மகனின் வாழ்வு பிழைத்தது.

               என்ன சொன்னீர்கள், என் பெண் நடை தவறியவளா? பண்பு கெட்டவளா? நீங்கள் தானே சும்மா கிடந்தச் சங்கை ஊதிக் கெடுத்தானாம். ஆண்பிள்ளை என்பதால் பெண் கேட்டு வந்தீர்கள். என் மகன் உங்கள் மகளை மிகவும் விரும்புகிறான். அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டும். படிக்க வேண்டும் என்ற உங்கள் மகளின் ஆசையை பிறகு பார்க்கலாம் என்று கூறி என் மகளின் வாழ்வைப் பாழ்படுத்தி விட்டு மேல் குதிரையா ஏறுகிறீர்கள். ஐயோ என் மகளே செல்லமே உன் நிலை இப்படியாகும் என்று கனவிலும் நினைக்கவில்லையே.

               என்ன பெரிதாய் கலங்குகிறீர்கள். நீங்கள் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உங்கள் மகளின் தவறான உறவை எங்களிடம் கூறவாச் சொல்லாதீர்கள். வயதாகவில்லை என்று கம்ப்ளெய்ண்ட் கொடுத்து திருமணத்தை நிறுத்திய அந்தப் பையனுக்கும் உங்கள் மகளுக்கும் தவறான உறவு இருந்ததாமே. அவன் காலேஜ் முடிந்து தினமும் உங்கள் வீடு வரை வந்து தன் காதலியை விட்டுச் செல்வானாமே. இதையெல்லாம் அறிந்ததால்தானே ஊருணி பால் சுறந்தாலும் கூரையை பிய்க்கிற மாடு உதவாது என்று உங்கள் மகளைக் கழித்துவிட்டோம். இனியாவது நல்லதனமாய் இருக்கச் சொல்லுங்கள். போங்கள், வெளியே போங்கள்.

               போகிறோம், உன் வீட்டில் இருக்கவாப் போகிறோம். செய்வார் வினை செய்வார்க்கு என் பிள்ளை மேல் பழி சுமத்திய நீயெல்லாம் நல்லார்க்க மாட்டாய், இறைவன் இட்டவழி நடக்கட்டும், கலங்கித் தவித்து வீடு வந்து சேர்ந்தனர்.

               செய்தியறிந்ததும் வடிவுக்கரசியும் கண்ணீர் விட்டுக் கதறினாள். மகளை மடியினில் படுக்கவைத்து குலுங்க, குலுங்க அழுத அகளைத் தட்டிக்கொடுத்து துயர் களையத் தூங்க வைத்தாள்.

               அப்பா என்று அழைத்துநின்ற மகளை ஏறெடுத்துப் பார்த்து என்ன என்பதாய் தலையசைத்துக் கேட்டார். புள்ளிமானாய்த் துள்ளித் திரிந்த என் அழகு மகள், அருமை மகள் எங்கே சென்றாள். கன்னம் ஒட்டி காய்ந்த கருவாடாய் காட்சிதரும் இது என் மகளா? மனதுள் பேசிக்கொண்டார்.

               அப்பா கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. என் விதி இப்படி அமைந்திருக்கிறது. எனக்கு செவிலியர் படிப்பு படிக்க ஆசையாய் உள்ளது. பிறர்க்கு சேவை செய்வதில் என் மனத்துயரை மறக்கலாம் என்றிருக்கிறேன். அதற்கான அப்ளிகேஷன் வாங்கி நிரப்பி என்னை செவிலியர் பள்ளியில் சேர்த்துவிடுங்கள். இந்தக் குடும்பச் சூழல் மறந்து விடுதியில் தங்கி படிக்கிறேன் என்றாள்.

               செவிலியர் படிப்பில் ஈடுபட்டு கவலை மறந்து, நல்ல துடிப்புடன் பழைய நிலைமைக்கு மாறி வந்தாள். மூன்றாண்டு படிப்பு முடித்து தனியார் மருத்துவமனை ஒன்றில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றினாள்.

               பிரகாஷ் பிரியாவின் திருமணத்தை நிறுத்தியதைப் பெரிய வீர சாதனையாகக் கருதி, முயன்று படித்து ஒரு கம்பெனியில் வேலையும் பெற்றான்.

               பிரியாவின் திருமணம் நின்றுவிட்டதால் அவள் குடும்பமே அனலிலிட்ட புழுவாகத் துடிப்பது அவன் அறியான்.

               அவன் எண்ணமெல்லாம் பிரியாவின் திருமணம் நின்றுவிட்டது. இனி அவள் நமக்குத்தான். தன், காலில் தான் நிற்கத் துவங்கவும் தாய் தந்தை சம்மதத்துடன் மணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது தான்.

               பிரகாஷ் தனது உள்ளக்கிடக்கையை பெற்றோரிடம் எடுத்துச் சொல்லி பெண் கேட்டு வாருங்கள் என்றான்.

               ஏண்டா, மடையா உனக்கு அறிவிருக்கா அந்த பேதைப் பெண்ணின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டாயே. நீ மனிதனா உன் சுயநலம் மட்டுமே முன் நிறுத்தி அந்தக் குடும்பத்தையே கதறி கலங்க வைத்துவிட்டாயே, ஒரு நாள் ஒரு தடவையாவது நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை விரும்புகிறாயா என்னை உனக்குப் பிடிக்குமா, கேட்டிருக்கியா, நீ எங்களை பெண் கேட்டு வரச்சொல்கிறாயா?

               மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள், நீ மிதித்து துன்புறுத்தியவர்களின் தலைவாசலை நோக்கி எங்களை அனுப்புகிறேன் என்கிறாயே. அவர்கள் எங்களை, அவமதித்து, மிதித்து, திருப்பி அனுப்ப மாட்டார்கள் என்பதற்கு உத்ரவாதம் உள்ளதா?

               நீ செய்த தவறை நீயே ஒப்புக்கொண்டு அவர்கள் மனதைப் புண்படுத்தாது நிகழ்வுகளனைத்தும் என் அறியாமையால் நடந்ததுதான், என்னை மன்னித்து, மறந்து நல்வாழ்வுக்குத் துணைபுரியுங்கள் என்று மன்றாடிக் கேட்டு வா. பின்னர் யோசிப்போம் என்றார் சதாசிவம்.

               பிரியாவைக் காணச் செல்கிறோம்னு மகிழ்ச்சி தாண்டவமாடினாலும், தந்தையின் பேச்சு பாரங்கல்லாய் நெஞ்சை அழுத்தியது. மனம் ஏனோ உன்மத்தம் பிடித்தது போல் பேதலித்து தவித்தது.

               அன்று ஞாயிறு விடுமுறை பிரியாவின் குடும்பம் நண்பகல் உணவிற்குப் பின் வெகுநாட்கள் கழிந்து டிவியின் முன் அமர்ந்து நிகழ்ச்சிகளை விமர்சித்தது.

               பிரியா பிரியா என்ற குரலுடன் கதவு தட்டும் ஓசை கேட்கவும் ஓடிவந்து கதவைத் திறந்த பிரியா பிரகாஷைக் காணவும் மலைத்து நின்றாள்.

               ப்ரியாம்மா யாரது, பிரியா விலகி நிற்க பிரகாஷ் பாய்ந்து வந்து செல்லப்பாண்டியன் கால்களில் விழுந்து வணங்கினான். ஐயா என்னை மன்னித்துவிடுங்கள். நான் பாவி. என்ன செய்கிறோம். இதன் விளைவு என்னாகும் என்பதறியாது, என் முட்டாள்தனத்தால் அந்தக் காரியம் செய்துவிட்டேன், எண்ணித் துணிக கருமம் என்பதை மறந்து, பிரியா மேலுள்ள பிரேமையால், பாசத்தால், பிரியா எனக்கு வேண்டும் என்ற ஆவலால் அப்படிச் செய்துவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும்.

               மன்னிப்பா, உனக்கா அடேய் பாவிச் சண்டாளா என் குடும்பத்தைச் சூறாவளிக் காற்றில் வேரோடு சாய்ந்த மரம் போல, வாழலாம் என்ற நம்பிக்கைத் தூணைச் சுக்குநூறாக நொறுக்கிவிட்டாயே. போய் விடு. என்னை கொலைகாரனாக்கி விடாதே. ஓடிவிடு எல்லாம் தான் முடிந்துவிட்டதே, இனி உனக்கு என்ன வேண்டும். ஊசலாடிக் கொண்டிருக்கிற உயிரைத் தாங்கி நிற்கிறோம். எங்கள் உயிரைக் குடித்தால்தான் போவியா போடா.

               அப்பா அவரை ஒன்றும் சொல்லாதீர்கள். என் முட்டாள்தனத்தினால் வந்த வினைதான். அவர் உயிருக்குயிராக உண்மையாக என்னை நேசித்திருக்கிறார். ஆனால், நான் அறிவிலி. பருவ வயதில் ஒருவர் தினம் நம் வீடு வரை வந்து சென்றிருக்கிறான். ஏன், எதற்காக என்று சிந்திக்கத் தெரியவில்லை. பார்வைக்குப் பார்வை பாந்தமாய் பார்க்கத் தெரியவில்லை. உணர்ச்சிகளற்ற உதவாக்கரையாய் இருந்திருக்கிறேன். நான் ஒரு பார்வை பார்த்து பாசமாய் நேசம் கொண்டிருந்தால் இந்நிலை வந்திருக்குமா? அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களின் பசப்பு மொழிகளுக்கு செவி சாய்த்திருப்பேனா? எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறிவிட்டிருந்தால் நீங்கள் என் ஆசையை மறுத்திருக்க மாட்டீர்கள். இவர் செய்த நற்செயலால்தான் வயது குறை என்ற காரணத்தோடு திருமணம் நின்று விட்டது.

               அந்த மாப்பிள்ளையோடு திருமணம் நடந்திருந்தால் என் வயிற்றில் கருவைச் சுமந்து கொண்டு வீட்டில் வாழா வெட்டியாயிரு என்று கொண்டு விட்டிருப்பார்கள். திருமணம் வேண்டாம் என்று கூறுவதற்கு அந்தப் பசப்பு புத்திகாரர்களுக்கு குசுகுசு மந்திரம் ஓதிய பதர்கள் இருந்த பட்சத்தில் திருமணம் நடந்திருந்தாலும் அவளுக்கு கள்ளத்தொடர்பு இருக்கு. அவளை விலக்கிவிடுங்கள் என்று கூறுவதற்கு ஆட்கள் இருக்கமாட்டார்களா? அப்படி நடந்திருந்தால் நானும், நம் குடும்பமும் எத்தகைய அவமானத்தைச் சுமந்திருப்போம். வெளியில் தலைகாட்ட முடியாதளவு தலைகுனிவு ஏற்பட்டிருக்குமே. அதையெல்லாம் எண்ணிப் பார்த்து அவரை ஏசாது, பேசாது அனுப்பி வையுங்கள்.

               எங்களால் தான் எங்களுக்கு தளர்வு. உண்மைக்காதலை வெளிப்படுத்த, அனுபவிக்கத் தெரியாமல் அவமானத்தைத் தழுவிக் கொண்டோம்.

               பிரகாஷ் நீங்கள் போங்கள், உங்கள் தாய், தந்தையர் சொற்படி நடங்கள். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. யாதலால் எக்காரணம் கொண்டும் எந் தந்தையின் சொல் தவறமாட்டேன். அவரது அன்பையும், பாசத்தையும் இழக்க மாட்டேன்.

               பிரியா என்னம்மா சொல்கிறாய். ஏதோதோ பேசுகிறாய். இவனை இந்த அற்பனை உன்னுடன் சேர்த்து நினைப்பதற்கே என்மனம் இடம் தரவில்லை. இவன் வேண்டாம், நீ என்ன சொன்னாலும் சரி. இவனால்தான். இவனது செயல்களால்தான் நமக்கு இந்த நிலை.

               பிரியா பணிபுரியும் மருத்துவமனை, அதன் பெயர், ஊர் பேச்சினிடையே அறிந்த பிரகாஷ். பிரியா பணிமுடிந்து வெளியில் வரும் வேலையை வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தான். ஹலோ மலர்ப்பொதி நான் இங்கிருக்கிறேன். கடைக்கண் பார்வை ஒன்று தந்தால் என்ன? மனதுக்குள் வந்துவிட்டாயா, இரு இன்று ஒரு வழி பண்ணுகிறேன். எண்ணியபடி மலர்ப்பொதியா அது எங்கிருக்கிறது. காணவில்லையே தேடுகிறேன். எங்கே உங்கள் மலர்ப்பொதி தெரியவில்லையே. என்ன விளையாடுகிறாயா? நீ தான் எந்தன் மலர்ப்பொதி. நானா உங்கள் கண்ணுக்கு நான் பொதியலாகத் தெரிகிறேனா அன்றி புதையலாகத் தெரிகிறேனா, சாதாரண மானிடப்பெண் என்றல்லவா நினைத்தேன்.

               நீ நினைப்பாய் உனக்கென்ன அன்று என் கரங்களில் மலர்ப்பொதியாய் விழுந்தாயோ அன்றிலிருந்து உன் மலர் மேனிபட்ட இடம் புல்லரித்து புளகாங்கிதம் அடைகிறது. அந்த நிகழ்வை நினைத்தவுடன் என் உடலெங்கும் மின்சாரம் பாய்வது போல் கிண்ணென்ற உணர்வு உண்டாகிறது. எனக்கு வேண்டும் பிரியா, உன்னால் மட்டுமே என்ன சிரிக்க வைக்கமுடியும், அவன் கண் சிமிட்டல் இவள் உடல் முழுக்க பரவசம் பாய்ச்சியது. ஸெல்லின் கிண்கிணி ஓசையில் துயில் கலைந்து எழுந்தாள் ப்ரியா. ஸெல்லை அடுத்துக் காதுக்குக் கொடுக்க ஹலோ மலர்ப்பொதி குட்மார்னிங் செல்லக்குட்டி எழுந்திட்டியா ம்… எழுந்தாச்சு. எழுந்தாச்சு இப்ப என்ன அவசரம் நான் பேசுவது அப்பாவுக்குத் தெரிந்தால் என்னவாகும். என்னைத் திட்டித் தீர்த்துவிடுவார். அவ்வளவுதானே. நான் என் அன்புக்கிளிக்காக ஏச்சையும், பேச்சையும் கூட ரசித்திடுவேன். ஐயோ என்ன சொல்வது, நான் வீட்டில் இருக்கும் நேரங்களில் பேச வேண்டாமே. நான் வீட்டிலேயா அடைந்து கிடக்கிறேன். வெளியில் இருக்கும் தருணங்கள்ல பேசிக் கொள்ளலாமே.

               ஏன் சொல்ல மாட்டாய், வெளியே ஊர் சுற்றிக்கொண்டா இருக்கிறாய். எனது பணி எப்படிப்பட்டது. சிறிது கவனம் பிசகினாலும் உயிர்க்கு பாதுகாப்பு இல்லை. நான் யார் உயிருடனும் விளையாட மாட்டேன்பா. நீ எப்பொழுது ஓய்வாயிருக்கிறாயென்று கனவா காணமுடியும். அல்லது மனக்குறி சொல்லுமா? காலையிலேயே அமுத கானம் கேட்டு இன்றைய பொழுதைத் துவங்கலாமேன்றுதான். சரி வைத்து விடுங்கள். யாரோ வருகிறார்கள், செல்லக்குட்டிக்கு அன்பு முத்தம்.

               அன்று அறியாத காதல் உணர்வை, அமிர்தத்தை இன்று அறிகிறோம். காதல் பயிர் வளர்க்க நினைக்கிறோம். ஆனால், அப்பா வீடு வரை வந்துவிட்டானே. அவனை குடிமுழுக வேண்டும். பிரியாவிற்கு சீக்கிரத்தில் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என அவசரப்படுகிறது எண்ண ஓட்டத்திலேயே பேருந்து பயணம் நடந்து மருத்துவமனைக்குள் நுழைந்தாள். கவலை என்னும் சட்டையைக் கழற்றி வாசலிலேயே போட்டுவிட்டு, மாலையில் செல்லும்பொழுது அணிந்து கொள்ளலாம். இப்பொழுது திருப்தியான மனதுடன் வணக்கம் சொல்லி, வணக்கம் பெற்று வந்து, கையெழுத்திட்டாள். எல்லாம் மறந்து தொடர்ந்து பணியில் ஈடுபட்டாள்.

               செல்லப்பாண்டியனால் நிலைகொண்டிருக்க முடியாமல் தவித்தபடியே திருமணத் தரகர், திருமணத்தகவல் நிலையம், ஜோதிடர் என விசாரித்து துரத்திப் பிடித்தார். ஒவ்வொரு மாதமும், வீடு மாலையில் விழாக்கோலம் பூண்டது. சுவீற், காரம், காப்பியென அமர்க்களப்படுத்தி அலங்காரம் பண்ணி பொம்மை போல் காட்சிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ப்ரியா. டிபன் முடிந்தவுடன் பொண்ணைப் பிடிச்சிருக்கு. வீட்டிற்குப் போய் கலந்து பேசிக்கிட்டு போன் பண்ணுகிறோம் என்று தவறாமல் கூறிச்சென்றனர். ஒன்பது பேர் வந்து சென்றும் தகவல் ஒன்றும் வந்து சேரவில்லை.

               பிரியா பணியில் இருக்கும்பொழுது வசந்தகுமார் உடல்நலக் குறைவால், தன் தாயுடன் மருத்துவமனை வந்தான், அவனுக்கு வயது முப்பத்து மூன்று. அவன் வயதில் அவனது அண்ணனுக்குத் திருமணமாகி திவ்வாச் செல்லத்திற்கு எட்டு வயது நிறைவடைந்திருந்தது. வசந்தகுமார் சற்று குள்ளமாகவும், பார்ப்பதற்குச் சற்று சுமாரான தோற்றத்தில் இருந்தான். திருமணச் சந்தையில் பல பெண்களால் நிராகரிக்கப்பட்ட அவன் நமக்கென ஒரு வாழ்க்கை அமையுமா அல்லது துறவியாகத் தான் வாழவேண்டுமா என்ற கவலையில் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டான்.

               டாக்டர் சாரதா தேவிக்கு வசந்தகுமாரின் அம்மா சரஸ்வதி தூரத்து சொந்தத்தில் மதனியாவாள். மதனி அதோ வசந்தகுமாருக்கு ஊசியைச் செலுத்திக் கொண்டிருக்கிறாளே அந்த நர்ஸை நன்றாகப் பாருங்கள். பார்த்துவிட்டேன். விசேசம் ஒன்றும் தெரியவில்லையே என்னை ஏன் பார்க்கச் சொன்னீர்கள்.

               டாக்டர் சாரதாதேவி சொல்லிய அனைத்துச் செய்திகளையும் உள்வாங்கிய சரஸ்வதி அம்மாள் தனது மூத்தமகன் மருமகள் பேத்தி இளைய மகன் என குடும்ப சகிதமாக செல்லப்பாண்டியன் வீட்டுக்குப் படையெடுத்தாள்.

               அப்பொழுதுதான் டுட்டி முடிந்து வந்து பிரஷ்அப் பண்ணிக்கொண்டு நைட்டியுடன் அம்மா காபி என்று கேட்டுக்கொண்டே வந்த பிரியா அவர்களைக் கண்டு பின் வாங்கினாள்.

               செல்லப்பாண்டியன் கடையிலிருந்து வீட்டுக்கு வந்து வந்திருந்தவர்களை வரவேற்று உபசரித்தபடியே பிரியா ரெடியாகி வாம்மா என்றார்.

               இதோ கூட்டி வர்றேங்க பிரியா ட்ரேயில் இருக்கும் காப்பியையும், பண்டங்களையும் எடுத்து வா. சரியம்மா.

               ஏங்க பெண் பார்க்கும் படலமெல்லாம் வேண்டாம். நாங்கள் ஏற்கனவே பெண்ணைப் பார்த்து விட்டோம்.

Advertisement