Advertisement

மழை 27:
மாலினி இடத்தில் அமர்ந்ததும் செல்வராஜும் சிறு தோள் குலுக்கலுடன் தன் இடத்திற்கு சென்றான்.
அப்பொழுது இயந்திர மனிதன்(ரோபோ) குரலில், “பாஹ்ஹ யாருடா அந்த பொண்ணு!! பார்க்க பேய் மாதிரி இருக்குது!!” என்ற வசனம்(‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தில் வரும் வசனம்) பல ஏற்ற இறக்கத்துடன் ஒலித்து, அதை தொடர்ந்து, “ஆறுதல் பரிசு தாஆஆரிக்கா” என்று முடிந்தது.
தாரிக்கா கோபத்துடன் எழுந்து சுற்றி பார்த்து யாரென்று கண்டு பிடிக்க முடியாமல் கோபத்துடனும் எரிச்சலுடனும் அமர, 
“சிறுத்தை சிக்கும்டி சில்வண்டு சிக்காது” என்று கஞ்சா கருப்பு கூறும் வசனம் ஒலித்தது. 
தாரிக்கா கோபத்துடன் எழுந்து வெளியே செல்ல அவளது தோழிகளும் அவளை சமாதானம் செய்தபடி சென்றனர்.
தேநீர் இடைவேளை முடியவும் மாலினி, ஜெனிஷா, ராகேஷ் மற்றும் செல்வராஜ் பாடல் மற்றும் ஆடல் பயிற்சிக்காக வெளியே செல்ல, தாரிக்கா எரிச்சலுடனும் கோபத்துடனும் தன் இடத்தில் அமர, அவளது தோழிகள் ஆசுவாசமாக மூச்சை வெளியிட்டபடி அமர்ந்தனர்.
மாலை இறுதி வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்ப, பிருந்தா நந்தினியின் கையை பற்றி, “கொஞ்சம் வெயிட் பண்ணு”
“என்ன?”
பிருந்தா கண்ணசைவில் சிவகுருவை காண்பிக்கவும் நந்தினி அமைதியாக தன் இடத்தில் அமர்ந்து தனது குறிப்பேடையும் மாலினியின் குறிப்பேடையும் எடுத்து வைத்தாள்.
பிருந்தா புரியாமல் பார்க்கவும், “திடீர்ன்னு பி.டி சார் வந்தால் என்ன காரணம் சொல்லுவ?”
“பார்டா! நீ எப்போதிருந்து இப்படி யோசிக்க ஆரம்பித்த!”
“எல்லாம் உன்னுடன் இருக்கிறதால் மூளையில் அடித்த எச்சரிக்கை மணி தான்”
“பிறந்ததில் இருந்து என்னுடன் இருப்பதாக தான் எனக்கு ஞாபகம்”
நந்தினி முறைக்கவும் பிருந்தா சிரித்தாள்.
நந்தினி, “ஏய்! அவன் கிளம்பிட்டான்டி.. கூப்பிடு”
பிருந்தா அலட்டிக்கொள்ளாமல், “வருவான்..” என்று கூறினாள்.
நந்தினி, “இன்னைக்கு நீ ஒரு மார்க்கமா தான் டி இருக்கிற!”
“நான் அப்போவே அவனுக்கு மெசேஜ் அனுப்பிட்டேன்.. அதை அவன் படித்ததை பார்த்தேன்.. இது சும்மா ஸீன் போடுறான்..”
அதே நேரத்தில் வகுப்பின் வெளியே ராஜசேகர், “எதுக்கு டா இந்த ஸீன்?”
“அவ மனநிலையை பற்றி தெரிய தான்”
“தெரிந்ததா?”
‘இல்லை’ என்பது போல் உதட்டை பிதுக்க, ராஜசேகர் சிரித்தான்.
சிவகுரு, “சிரிக்காத டா.. நான் கிளம்பினா வந்து தடுப்பா.. ஏதாவது பேசுவா.. அவ குரலில் கோபமோ எரிச்சலோ தவிப்போ பதற்றமோ என்று ஏதாவது இருக்கும்.. அதை வைத்து அவ மனநிலையை கண்டு பிடிக்கலாம் பார்த்தா!!!!!!!!!!”
“ஹா ஹா ஹா.. தண்ணி காட்டுற உனக்கே பிருந்தா தண்ணி காடிட்டாளா!! இப்போ சொல்றேன் டா மச்சான்.. உனக்கு சரியான ஆள் பிருந்தா சிஸ்டர் தான்”
சிவகுரு சிரிப்புடன், “எவ்வளவோ பார்த்துட்டோம்! இதை பார்க்க மாட்டோமா!”
“மாட்டோமா இல்லை மச்சான் மாட்டேனா!”
“ரொம்ப முக்கியம்! சரி நீ ஏன் ஒரு நேரம் அவளை பிருந்தா னு சொல்ற ஒரு நேரம் சிஸ்டர் சொல்ற?”
“இந்த நேரத்தில் இந்த சந்தேகம் தேவையா! முதலில் போய் பேசு”
“ரெண்டு நிமிஷத்தில் ஒன்றும் வந்திராது.. அவ(ள்) வேணா டென்ஷன் ஆவா.. நீ சொல்லு”
“உனக்கு ரொம்ப தான் டா கொழுப்பு”
“அதை இப்போ தான் கண்டுபிடிச்சியா!”
“எனக்கு என்னவோ இன்னைக்கு உனக்கு நேரம் சரி இல்லை னு தான் தோணுது.. சிஸ்டர் தெளிவா இருபது போல் தான் தோணுது”
“ஹா ஹா ஹா.. அதுக்கு தானே லேட் பண்றேன்.. நீ சொல்லு”
“பெருசா ஒண்ணுமில்லை மச்சான்.. சிஸ்டர் னு கூப்பிட்டா ஆடோமெட்டிக்கா பன்மை வருது.. ஆனா உன் ஆள் முதல் நாளே பன்மையில் பேசக் கூடாது னு சொல்லிட்டா.. அதான் கலந்து வருது”
“அவ்ளோ தானா!”
“ஹம்.. அவ்ளோ தான்.. என்னிடம் பிளேட் போடாம போய் பேசுற வழியை பாரு”
“ஹ்ம்ம்.. நீ என் வேலையை பாரு!”
“என்ன டா?”
“அதான் வாட்ச்மேன் வேலை”
“நிஷா எனக்காக வெயிட் பண்ணுவா டா”
சிவகுரு பார்த்த பார்வையில், “சரி.. சரி.. இருக்கிறேன்” என்றதும் ‘அது’ என்பது போல் பார்த்துவிட்டு வகுப்பறைக்கு சென்றான்.
அவன் உள்ளே செல்லவும் நந்தினி சிறு ஆச்சரியத்துடன், “வந்துட்டான் டி” 
அவன் பிருந்தா அருகே வந்து முன் இருக்கையில் அமரவும் நந்தினி பதற்றத்துடன் எழ, அவன் சிறு புன்னகையுடன், “சேகர் வெளியே நிற்கிறான்..”
பதற்றம் குறைந்த நந்தினி பிருந்தாவை பார்க்க, அவள், ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்த, நந்தினியும் பார்வையால் ‘இருக்கவா போகவா?’ என்று வினவ பிருந்தா தோளை குலுக்கவும் நந்தினி முறைத்தாள். எப்பொழுதும் போல் இப்பொழுதும் நந்தினியின் முறைப்பை கண்டுக்கொள்ளாமல் தனது பார்வையை சிவகுரு பக்கம் திருப்பினாள்.
சிவகுரு மனதினுள், ‘ரொம்ப தெளிவா இருபது போல் தெரியுதே! அது நமக்கு ஆபத்தாச்சே! விடாத குரு.. ஏதாவது செய்து டென்ஷன் ஏத்திவிட்டு விஷயத்தை போட்டு வாங்கிடு’ என்று கூறிக் கொண்டான்.
நந்தினி தான் என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிப் போனாள்.
சிவகுரு நந்தினியை பார்த்து, “நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்கிறதுக்கு நீயும் இங்கே இருப்பது பெட்டர்”
நந்தினி அமர்ந்து புத்தகத்தில் தன் பார்வையை பதிக்கவும் சிவகுரு பிருந்தாவிடம், “அங்கே உட்காரலாம்.. ஜன்னல் வழியே பார்த்தால் சட்டென்று தெரிய மாட்டோம்”
என்று கூறி எழுந்துக்கொள்ளவும் அவள் அமைதியாக அவன் சொன்ன இடத்தில் அமர்ந்தாள்.
அவளது அமைதியில் அவன் சிறிது குழம்பித் தான் போனான்.
அவன் தான் ஆரம்பித்தான், “என்ன பேசணும்?”
“உனக்கு தெரியாதா?”
“எனக்கு எப்படி தெரியும்?”
அவள் அமைதியாக ஆழ்ந்து நோக்கவும், அவன் மனதினுள் அபாய மணி அடித்தாலும் வெளியே புன்னகையுடன், “பெண்கள் மனதை அறியும் மிஷின் என்னிடம் இல்லை.. என்னிடமென்ன! அதை இன்று வரை யாரும் கண்டு பிடிக்கவும் இல்லை”
“ஆண்கள் மனதை அறியும் மிஷின் இருக்கிறதா?”
“எங்கள் மனம் திறந்த புத்தகம் போன்றது”
“அப்படியா?”
“நிச்சயம்”
“அப்போ என்ன நினைத்து அந்த பாட்டை போட்ட?”
“அதான் எங்கள் மனம் திறந்த புத்தகம் சொனேனே! உனக்கு புரியலையா?”
“நான் கொஞ்சம் டியூப்-லைட் நீயே சொல்லிடு”
‘நாம போட்டு வாங்கலாம்னு பார்த்தா இவ நம்ம கிட்ட போட்டு வாங்குறாளே!’ என்று மனதினுள் சிறிது அலறியவன், “உனக்கு என்ன புரிந்தது னு சொல்லு.. அது சரியா தப்பா னு நான் சொல்றேன்”
அவள் முறைக்கவும் அவன் மனதினுள், ‘ஹை டென்ஷன் ஆறா.. இப்படியே கண்டின்யு பண்ணி எஸ் ஆகிடு!’ என்று குதுகலத்துடன் கூறிக் கொண்டான்.
அவள், “எனக்கு எதுவும் புரியலை”
“அவ்ளோ மக்கா நீ”
அவள் முறைப்புடன், “ஆமா.. நீயே சொல்லிடு”
‘ஆத்தி டென்ஷன் ஆனாலும் விடாம போட்டு வாங்குறாளே!’ என்று மீண்டும் அவன் மனம் அலறியது.
அவன் புன்னகையுடன், “அந்த பாட்டை திரும்ப கேட்டு பார்.. உனக்கே புரியும்”
“டேய்.. இப்போ சொல்ல போறியா இல்லையா?”
“அதான் சொன்னேனே!”
அவள் கடுப்புடன், “எதுக்கு டா அந்த பாட்டை போட்ட?”
“அதான்…………..”
“கொண்ணுடுவேன்.. உண்மையை சொல்லு டா பக்கி” என்று அவள் கோபத்துடன் வினவ, அவன் அலட்டிக் கொள்ளாமல், “உன் பெயர் அதில் வருவதால் அந்த பாட்டை போட்டேன்”
அவள் கோபத்துடனும் கடுப்புடனும், “நிஜமா?”
அவன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, “நிஜமா தான்.. ஏன் நீ என்ன நினைத்த?”
“குழந்தை பிள்ளை போல் நடிக்கிறதெல்லாம் என்னிடம் வேண்டாம்.. நீ ஒரு கேடி முள்ளமாரி முடிச்சவிக்கி எக்ஸட்ரா எக்ஸட்ரா னு எனக்கு தெரியும்”
“அடிபாவி.. இதுகெல்லாம் அர்த்தம் தெரியுமா?”
அவள் அலட்டிக்கொள்ளாமல், “நான் கேட்டதுக்கு உண்மையை சொல்லு”
“அதான் சொன்னேனே!”
“அது உண்மை இல்லை னு உனக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்”
அவன் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கி, “நீ நான் என்ன சொல்லணும் னு எதிர் பார்க்கிற?”  
‘நீ என்னை காதலிக்கிறாயா?’ என்று நேரிடையாக கேட்க முடியாமல் தவித்தவள் கோபத்துடன் அவனை பார்த்து சிறிது குரலை உயர்த்தி, “எதுக்கு டா என்னை பார்த்து கண்ணடிச்ச?”
“சும்மா தான்.. உனக்கு பிடிச்சு இருந்ததா?” என்று அவன் புன்னகையுடன் வினவ அவள் கோபத்துடன் மேஜையை ஓங்கி தட்ட,
சிறு பதற்றத்துடன், “இப்படியெல்லாம் தட்டாத” என்று கூறியவன் ஒரு நொடி தாமதித்து, “உன் கை வலிக்குமோ னு சொல்லலை.. டேபிள் உடஞ்சிறக் கூடாது பாரு” என்றான்.
அவள் கோபத்துடன் அவன் கழுத்தை நெரிப்பது போல் கையை கொண்டு செல்ல அவன் வாய்விட்டு சிரித்தான்.
அவள் எரிச்சலுடன் பல்லை கடித்து, “ஹ” என்று சிறிது கத்தினாள்.
அவன், “அவ்ளோ தானா! இதை அப்போவே எல்லார் முன்னாடியே கேட்டு இருக்கலாமே!”
அவள் முறைத்தாள்.
அவன் மென்னகையுடன், “நான் கிளம்பட்டுமா?”
“நீ விளையாட நான் தான் கிடைத்தேனா!”
“நான் என்ன விளையாடினேன்?”
“டேய் வேணாம்”
“என்ன வேணாம்?”
இரு கைகள் முஷ்டியையும் இறுக்கமாக மூடி கண்களையும் மூடி பல்லை கடித்தவள் இரண்டு நொடிகள் கழித்து கண்களை திறந்து மூச்சை இழுத்துவிட்டுவிட்டு, “நீ என்னை லவ் பண்றியா?”
“ஏன் இப்படி கேட்கிற?”
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”
“சந்தேகம் கேட்க கூடாதா?”
“பதில் சொல்லிட்டு கேளு”
“பதில் சொல்ல தானே சந்தேகம் கேட்கிறேன்”
அவனை முறைத்தவள், “பின்ன நீ பண்ணதுக்கு என்ன அர்த்தம்?”
“நான் தான் சொனேனே!”
“அது பொய்”
“எது பொய்?”
“நீ சொன்ன காரணம்”
“அப்படி நீயா நினைச்சுகிற”
“டேய்”
“உனக்கு ஏன் நான் பொய் சொல்றதா தோணுது? நீ என்னை லவ் பண்றியா?”
“என்னது!!!” என்று அவள் அதிர்ந்தாள்.
அவன் அலட்டிக் கொள்ளாமல், “எதுக்கு இவ்ளோ ஷாக்? நீ கேட்டதை தானே நானும் கேட்டேன்”
“அது.. அது..”
“எது.. எது?”
அவள் முறைப்புடன், “நான் கேட்டதற்கு காரணம் நீ நடந்துக் கொண்ட முறை”
“நான் கேட்டதுக்கும் நீ நடந்து கொள்கிற முறை தான் காரணம்”
“நான் என்ன பண்ணேன்?”
“நான் சொல்வதை ஏன் நம்ப மாட்டிக்கிற?”
“ஏன்னா அது பொய்”
“பொய் னு நீ யோசிப்பதால் பொய் னு உனக்கு தோணுது.. நான் உன்னை காதலிப்பதாக உனக்கு தோன்றுவதால் அதை ஒட்டியே நீ யோசிக்கிற.. அதான் இப்படி தோணுது.. நான் உன்னை காதலிக்கணும் னு நீ விரும்புறியா?”
“என்ன!”
“என்ன?”
“லூசு மாதிரி உளறாதே!”
‘அடிபாவி.. எவ்ளோ கஷ்டப்பட்டு உன் வாயை கிண்டுனா! இப்படி உளறுறேன்னு சொல்லிட்டியே!’ என்று மனதினுள் புலம்பியவன் வெளியே சிரித்தபடி, “அதை ஒரு லூசு சொல்லுதே!” என்றான்.
அவள் முறைக்கவும், அவன் அதே புன்னகையுடன், “இன்னைக்கு காரம் கொஞ்சம் கம்மியா தான் இருக்குது.. உண்மையாவே நீ என்னை லவ் பண்ண ஆரம்சிட்டியோ!” என்று சந்தேமாக கேட்பது போல் கேட்டு அவள் மனதை அறிய முயற்சித்தான்.
“நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும்”
“இதனால் தாங்கள் சொல்ல வருவது நீங்கள் என்னை லவ் பண்ணலை என்பதா?”
“ஆமா! போயும் போய் உன்னை லவ் பண்ணுவேனா?”
“தேங்க்ஸ்” என்று அவன் புன்னகையுடன் சிரம் தாழ்த்தி கூறவும் அவள் கடுமையாக முறைத்தாள். காரணம் புரியாமல் அவளுக்கு கோபமும் எரிச்சலும் கூடியது.
அவள் அவனை முறைத்துக் கொண்டே எழுந்து தன் இடத்திற்கு சென்று இவனை ஓரப்பார்வை பார்த்தபடி நந்தினியடம், “வாடி கிளம்பலாம்” என்றாள்.
அவன் அதே மென்னகையுடன் லேசாக கண்ணடிக்கவும் அவள் மனதின் எரிச்சல் சிறிது குறைவது போல் இருந்தது ஆனால் அவனது செய்கைக்கான உண்மை காரணம் அறிய முடியாத இயலாமையில் கோபம் கூடியது.
அவள் பையை எடுத்துக் கொண்டு அவனை முறைத்துவிட்டு நந்தினியுடன் கிளம்பினாள்.
அவள் வாயிலை அடையவும் அவன், “பிந்தூஸ்” என்று அழைத்தான்.
அவள் திரும்பி அவனை முறைக்கவும், அவன் சிரிப்புடன், “எனக்கு ஒரு சந்தேகம்”
அவள் பற்களை கடித்தபடி, “என்ன?”
“என்னையெல்லாம் லவ் பண்ண மாட்டேன் னு சொன்ன சரி.. அப்போ யாரை லவ் பண்ணுவ?”
“அது உனக்கு தேவை இல்லாதது?”
“அது எப்படி! நீ லவ் பண்ற தகுதி எனக்கு இல்லை னு சொல்றப்ப தகுதி உடைய ஆள் யாருன்னு நான் தெரிந்துக்கொள்ளலாமே”
அவள் முறைக்க அவன் புருவம் உயர்த்தினான்.
அவள், “உனக்கு தான் என்னை லவ் பண்ற எண்ணம் இல்லையே அப்பறம் என்ன?”
“நான் எப்போ அப்படி சொன்னேன்?”
“டேய் வேணாம்!!!”
அவன் சிரிக்கவும் அவள், “அப்போ என்னை லவ் பண்றியா?”
“லவ் பண்ற எண்ணம் இல்லை னு சொல்லலை என்றால் லவ் பண்றதா அர்த்தமா?”
அவன் அவளை தெளிவாக குழப்பவும் அவள் கோபத்துடன் முறைத்தபடி, “உன்னை தவிர நம்ம கிளாஸில் யாரை வேணாலும் லவ் பண்ணுவேன்”
அவன் நக்கலுடன், “அப்போ ஸ்ரீராமனை கூட லவ் பண்ணுவ?”
கோபத்தில் ‘ஆம்’ என்று சொல்லிவிடலாமா என்று ஒரு நொடி யோசித்தவள் அடுத்த நொடியே ‘சீ’ என்று தன்னை தானே திட்டிக் கொண்டவள் அவனை முறைத்துவிட்டு திரும்ப,
அவன், “என்ன பதிலை காணும்?” என்றான்.
அவள் கோபத்துடன் அவன் அருகே வந்து, “பதில் தானே வேணும்?”
“எஸ்” என்று கூறிய அடுத்த நொடி அவன் கன்னத்தில் அரைந்தவள் அடித்த வேகத்தில் வெளியே சென்றிருந்தாள்.
முதலில் அதிர்ந்தவன் அடுத்த நொடியே புன்னகையுடன் கன்னத்தில் கை வைத்தபடி, “ஜில்லு குட்டி உன் மனதில் நான் இருக்கிறேன்டி.. அதை நீ சீக்கிரம் உணருவ” என்று கூறிக் கொண்டான்.
பிருந்தாவும் நந்தினியும் சென்றதும் உள்ளே வந்த ராஜசேகர் கன்னத்தில் கைவைத்தபடி புன்னகையுடன் தனியுலகில் இருந்த நண்பனை பார்த்து குழம்பினான். 
சிவகுருவை உலுக்கியவன் அவன், “என்னடா?” என்று வினவியதும்,
“என்னாச்சு?”
சிவகுரு புன்னகைக்கவும், ராஜசேகர், “அவ கோபமா போனா.. இங்கே வந்து பார்த்தா நீ ஒரு தினுசா நின்னுட்டு இருக்கிற! என்ன தான் டா நடக்குது?”
“என் ஆளு என்னை அடிச்சிட்டா மச்சான்”
“அட பாவி ஏதோ கிஸ் கொடுத்தது போல் நின்னுட்டு இருந்த”
“விடுடா.. அடுத்து அது தானே நடக்க போகுது”
ராஜசேகர் மென்னைகையுடன் “நடந்தா சரி”
“நடக்கும்”
“இளிக்காத.. சகிக்கலை”
“இவ்ளோ நாள் நான் சகிச்சிக்கலை!”
“சகிச்சு தொலைக்கிறேன்.. சரி.. என்ன தான் சொல்றா?”
“என்னை தவிர வேற யாரை வேணாலும் லவ் பண்ணுவாளாம்”
“டேய்!!!!!!!!!!”
“ஹா ஹா ஹா.. ரொம்ப ஷாக் ஆகாத.. அவ மனதில் நான் இருக்கிறேன்”
“ரொம்ப தான் டா கான்பிடன்ஸ்.. எதை வைத்து சொல்ற?”
“அவ அப்படி சொன்னதும் எனக்கு கொஞ்சம் கோபம் வந்துரிச்சா உடனே நான் அப்போ ஸ்ரீராமனை கூட லவ் பண்ணுவியா னு கேட்டேன்”
“உனக்கு அறிவிருக்கா டா………………………..” என்று ஆரம்பித்து சில பல கெட்ட வார்த்தைகளில் திட்ட தன் காதை மூடிக் கொண்ட சிவகுரு ராஜசேகர் அமைதியானதும், “முடிச்சிட்டியா?” என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்.
ராஜசேகர், “வேணாம் டா.. என்னை கொலைகாரன் ஆக்கிடாத”
சிவகுரு மென்னகையுடன், “அதுக்கு தான் என்னை அடிச்சிட்டு போறா”
“அதுக்கு நீ அவ மனதில் இருக்கனும் என்று அவசியம் இல்லை ஸ்ரீராமன் மேல் உள்ள வெறுப்பு கூட காரணமா இருக்கலாம்”
“ஏன் டா!”
“கடுப்பை கிளப்பாம கிளம்பு”
“டேய் அவ மனசை புரிஞ்சுக்க தான்……………..”
“ஒன்னும் _________ வேணாம்.. கிளம்பு” என்று ராஜசேகர் கோபத்துடன் கூற சிவகுரு, ‘கொஞ்சம் அதிகமா தான் போய்ட்டோமோ!’ என்று மனதினுள் கூறிக் கொண்டு கிளம்பினான்.
மழை தொடரும்….

Advertisement