Advertisement

மழை 29:
நந்தினி சொன்னது போல் பிருந்தாவினால் ஒரு தெளிவிற்கு வர முடியவில்லை. அவன் விரும்புகிறானா என்பதிலும் சரி தன் மனம் அவனை விரும்புகிறதா என்பதிலும் சரி அவளால் முடிவெடுக்க முடியவில்லை.
ஒரு நேரம் தன் மனம் அவனை விரும்புகிறதோ என்று தோன்றும் போது ‘அது எப்படி? எனக்கு அவனை கண்டாலே கோபம் தானே வருது!’ என்று தன்னை தானே கேட்டு குழம்பிக் கொண்டாள்.
ஒரு நேரம் அவள் மனம் அவனை விரும்பவில்லை என்று நினைக்கும் போது ‘ஆனால் அவன் கண் அடிக்கும் போது கோபம் வந்தாலும் ஏதோ சொல்ல தெரியாத உணர்வும் வருதே! அது ஏன்?’ என்று மேலும் குழம்பினாள்.
அதன் பிறகு அவன் விரும்புகிறானா என்று பலவாறு யோசித்து அதிகமாக குழம்பினான். 
நேரம் போனது தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு தீடிரென்று ஒன்று தோன்றவும் அவனை அழைத்தாள்.
அழைப்பை எடுத்தமும், “என்ன ஜில்ஸ் தூங்க முடியாம உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனா!”
“ஆமா இவரு பெரிய மன்மதன்.. இவரு அழகில் மயங்கி நாங்க கனவு கண்டுட்டு இருக்கிறோம்!”
வாய்விட்டு சிரித்தவன், “அப்போ இவ்ளோ நேரம் இதை தான் செய்துட்டு இருந்தியா?”
“நெனப்பு தான் பொழப்பை கெடுக்கும்”
“யார் நெனப்பு யார் பொழப்பை கெடுக்கும்?”
“டேய் கடுப்பை கிளப்பாம கேட்கிற கேள்விக்கு பதிலை சொல்லு”
“தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை கேள்வி”
“அப்போ இங்கிலீஷில் கேட்கிறேன்”
“எந்த மொழியிலும் பிடிக்காத வார்த்தை அது தான்”
“இருந்துட்டு போகட்டும்.. நீ ஏன் எனக்கு பாட்டு போட்ட!”
“திரும்ப முதலில் இருந்தா!”
“எல்லோரும் அவங்க ஆளுங்களுக்கு தானே பாட்டு போட்டாங்க.. நீ ஏன் போட்ட? ஐ மீன் எந்த அர்த்தத்தில் எனக்கு பாட்டு போட்ட?”
‘பயபுள்ள கரெக்ட்டா பாயிண்ட்டை பிடிக்குதே!’ என்று மனதினுள் சிறிது அலறியவன் அவளிடம் சொல்ல பதிலை தேட அவள், “என்ன டா?”
“என்ன கேட்ட? சரியா கேட்கலை.. சிக்னல் கொஞ்சம் வீக்கா இருக்குது”
“இருக்குமே!”
“நான் உனக்கு சிக்னல் வீக்கா இருக்குது னு சொன்னேன்” என்று அவன் இரு பொருள்பட கூறினான்.
அவள் எரிச்சலுடன் மீண்டும் அதே கேள்வியை கேட்கவும் அவன் இப்பொழுது அலட்டிக்கொள்ளாமல், “ஒரு மீனும் இல்லை” என்றான்.
“என்ன?”
“நீ ஐ மீன் னு சொன்னியே.. அதா…………..”
“டேய்.. ஒழுங்கா பதிலை சொல்லு”
“என்ன சொல்லணும்?”
“டேய் இப்படியே பேசிட்டு இருந்த உன் மண்டை உடைவது உறுதி”
“ஆமா நீ உடைக்க தான் என் மண்டையை வளர்த்து வச்சிருக்கிறேன்”
“நீ எந்த அர்த்தத்தில் பாட்டு போட்ட?” என்று அவள் பல்லை கடித்துக் கொண்டு வினவ,
‘எப்படி பேச்சை மாத்தினாலும் அதையே பிடிச்சுட்டு தொங்குறாளே!’ என்று மனதினுள் கூறியவன் அவளிடம் அலட்சிய குரலில், “உனக்கு பாட்டு போட யாரும் முன் வரலை.. நம்ம கிளாஸ்க்கே நாம் சண்டை போடுவது தெரியுமே அதான் என்னை போட சொன்னாங்க.. சரி.. நேயர் விருப்பம் னு பாட்டு போட்டேன்..”
“ஆமா நீ பசங்க சொல்ற எல்லாத்தையும் கேட்டுட்டு தான் மறு வேலை பார்ப்ப!”
“என்னை நல்ல புரிந்து வைத்திருக்கிற!” என்று அவன் ஒருமாதிரி குரலில் கூறவும் அவள் மேலும் கடுப்பானாள்.
‘ஏன் இப்படி பேசுற!’ என்று கேட்டால் அவன் ‘உனக்கு தான் அப்படி தோணுது’ என்று சொல்வான் என்று அறிந்தவள் அவனது குரலில் தெரிந்த பேதமையின் காரணம் அறிய முடியாமல் மேலும் கடுப்பானாள்.
அவளை இப்பவே அதிகம் சிந்திக்க விட கூடாது என்ற எண்ணத்தில் அவன், “எனக்கு ஒரு சந்தேகம்”
“என்ன?”
“யாருமே உனக்கு பாட்டு போட முன் வரலை.. அப்போ அவ்ளோ மொக்க பீஸா நீ?”
“மொக்க பீசுக்கு தான் ஏழாவது இடம் தந்தீங்களா? இல்லை உன் பின்னாடி பொண்ணுங்க கியூவில் இருக்காங்களா?”
‘கியூ எல்லாம் வேண்டாம் நீ என் பக்கத்தில் இருந்தால் போதும்’ என்று அவன் முணுமுணுக்க, அவள், “என்ன முணுமுணுப்பு? தைரியம் இருந்தால் நேரிடையா சொல்லு”
“என் தைரியத்தின் அளவு உனக்கு தெரியாதா?”
“ஏன் தெரியாம! அதை தான் இன்னைக்கு சாயுங்காலத்தில் இருந்து பார்க்கிறேனே!”
“சரி அதை விடு.. இப்போ நான் சொல்றதை கேளு”
“நீ சொல்றதை நான் ஏன் கேட்கணும்?”
“பிருந்தா இப்போ சொல்ல போறது விளையாட்டு இல்லை.. இந்த நேரத்தில் ஒரு பையனுக்கு நீ போன் பண்ணது தப்பு” என்று சிறிது குரலை உயர்த்தி சிறிது கடுமையான குரலில் கூறினான்.
மணியை பார்த்தவள் மணி 11 என்றதும் தன் தலையில் தட்டிக் கொண்டாள். அவனது குரலின் கடுமையிலும் தன் மேல் தவறு இருப்பதாலும் அவள் அமைதியாக இருந்தாள்.
அவன், “இன்னைக்கு ஏதோ குழப்பத்தில் கூப்டுட்ட.. ஆனா……………………”
“உன்னால் தான் டா எல்லாம்………………”
“எப்பொழுதுமே எது சொன்னாலும் சண்டை போடணும் இல்லை.. கொஞ்சம் யோசி………………”
“யோசி யோசி னு சொல்லி எல்லோரும் என் மண்டை காய வைக்கிறீங்க”
“ச்ச்.. ரிது நான் சொல்றேன்னு ஒத்துக்காம இருக்காத.. நீ இந்த நேரத்தில் போன் பண்ணது தப்பு.. நானா இருக்க போய் சரி.. உடனே அது என்ன நீ தனி னு சண்டைக்கு வராத..(அதை தான் அவள் கேட்க வந்தாள்.. அவன் கூறியதும் அமைதியாகிவிட்டாள்) நீ இப்போ என்ன மனநிலையில் இருக்கனு எனக்கு தெரியும் அதனால் நான் தப்பா எடுத்துக்கலை………………………………”
(அவனது செல்ல அழைப்பான ‘ரிது’-வை அவனும் உணரவில்லை அவளும் உணரவில்லை.. அவன் அவளுக்கு வைத்த பெயர் தான் என்றாலும் தற்போது அழைத்ததை அவனே உணரவில்லை)
“தப்பா எடுத்துக்க என்ன இருக்குது?”
அவன் சிறு கோபத்துடன், “பசங்க எப்படி யோசிப்பாங்கன்னு உனக்கு ரொம்ப தெரியுமோ! இந்த நேரத்தில் ஒரு பொண்ணு ஒரு பையனுக்கு போன் பண்ணா அவ அவனை விரும்புவதா தான் அர்த்தம் எடுப்பான்.. நானும் அப்படி நினைச்சுக்குவா?”
அவனது கோபத்திலும் கேள்வியிலும் அவள் வாயடைத்துப் போனாள். அவன் இவளிடம் கோபத்தை காட்டுவது இதுவே முதல் முறை. 
அவளது அமைதி அவனை தாக்கவும் மெல்லிய அக்கறையான குரலில், “நான் அப்படி எதுவும் நினைச்சுக்கலை.. பசங்க மென்டாலிட்டி பற்றி சொன்னேன் அவ்ளோ தான்.. அது மட்டுமில்லாம என்னுடன் வேற பசங்க இருந்து உன் அழைப்பை பார்த்து இருந்தால் என்ன நினைப்பானுங்க? அதான் சொல்றேன்.. புரியுதா?”
“ஹ்ம்ம்”
மேலும் இரண்டு நொடிகள் மௌனத்தில் கழிய அவள் மனநிலையை மாற்றும் முயற்சியுடன் அவன், “என்ன யோசனை? நான் நல்லவனா கெட்டவனா னா!” என்றவன் ஒரு நொடி இடைவெளி விட்டு சிரிப்புடன்,  “சந்தேகமே வேண்டாம்.. ரொம்ப கேட்டவன்” என்றதும்,
அவள், “போடா” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
தற்போது அவனுடன் பேசியதை பற்றி சிறிது நேரம் யோசித்தவள் ‘அவன் நல்லவன் தானோ! ஆனா நம்மை மட்டும் ஏன் எப்போதும் டென்ஷன் பண்றான்?’ என்று தன்னை தானே கேட்டுக் கொண்டவள், ‘ஒருவேளை மாலு சொன்னது போல் அவனுக்கு என்னை சீண்டுவதும் நான் பதில் சொல்வதும் பிடித்து இருக்குதோ! ஹ்ம்ம்.. அப்படி தான் இருக்கணும்..’ என்ற முடிவிற்கு வந்தவள் வேறு சில யோசனைக்கு பிறகு, ‘ஹ்ம்ம்.. நான் என்ன சொன்னாலும் சிரிச்சிட்டே தான் பதில் சொல்லுவான்.. ஆனா அன்னைக்கு அந்த பார்வதி ஏதோ சொன்னா னு கோபமா சண்டைக்கு போனானே! என்னிடம் மட்டும் ஏன் கோபம் வரலை அவனுக்கு?’ என்ற கேள்வி அவளுள் எழு, கூடவே, ‘இப்போ கோப பட்டானே! அப்போ எனக்கு ஏன் கஷ்டமா இருந்துது?’ என்ற கேள்வியும் எழுந்தது. அவனது கோபத்தில் அவள் மீது கொண்ட அக்கறையே அதிகமாக இருந்தது என்பதை ஆராய்ந்து இருந்தால் அவனது மனம் புரிந்து இருக்குமோ!
இப்படியே யோசித்துக் கொண்டிருந்தவள் தன் மனம் அவனை விரும்புதோ? என்று பலமாக தோன்றவும் நந்தினியை அழைத்தாள். மணியை பார்த்து தன் நெற்றியில் அடித்துக் கொண்டு அழைப்பை உடனே துண்டித்தாள். 
அதன் பிறகு, ‘இப்போ தானே அவன் சொன்னான்! இப்படி யோசிக்காம நந்தினியை கூப்பிடுறியே! இந்த நேரத்தில் அவனிடம் பேசியதை சொன்னா வெளக்குமாத்தால அடிக்காத குறையா திட்டுவா! நல்லவேளை தப்பிச்ச!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் இதழில் புன்னகையுடன் உறங்கிப் போனாள். 
சிவகுருவும் இவளுடன் பேசிய பின் மகிழ்ச்சியுடனே உறங்கினான்.
ஒருவாறு பிருந்தாவிற்கு பல்ப் எரிந்துவிட்டதோ! இவர்கள் தங்களை அறியாமலேயே காதலை யார் முதலில் சொல்வது என்ற கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆட தயாராகி கொண்டிருக்கிறார்கள்.. ஆட்டத்தின் முடிவில் இருவருக்குமே வெற்றி தான் என்றாலும் யார் அதை நிறைவடைய செய்கிறார்கள் என்று பார்ப்போம்!!!
டுத்த நாள் காலையில் பிருந்தாவை அழைக்க வந்த நந்தினி, “நேத்து எதுக்குடி ஒரு மணிக்கு போன் பண்ணியிருக்க?”
“என்னடி சொல்ற? நான் உனக்கு பண்ணலையே!” 
‘தூங்காம குழம்பிட்டே இருந்தியா?’ என்று அக்கறையுடன் கேட்க வந்த நந்தினி பிருந்தாவின் முகத்தில் தெரிந்த சிறு பதற்றத்தில், “உன் முழியே சரி இல்லையே!!”
“என் முழியே அப்படி தான்”
நந்தினி சந்தேகமாக பார்க்கவும் பிருந்தா, “என்னடி?”
“ஹ்ம்ம்” என்றபடி பிருந்தாவின் பையை பிடுங்கி அவளது கைபேசியை எடுத்து அழைப்புகளை ஆராய்ந்தவள் இவளை கடுமையாக முறைத்தாள்.
‘எதை பார்த்துட்டு இப்படி காளி அவதாரம் எடுக்கிறா!’ என்ற யோசனையுடன் சிறிது எட்டி பார்த்தவள் மனதினுள் ‘மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டியே பிருந்தா!’ என்று நொந்துக் கொண்டாள். 
இவள் சிவகுருவை அழைத்த நேரத்தையும் தன்னை அழைத்த நேரத்தையும் பார்த்துவிட்டு தான் நந்தினி காளியாக மாறியிருந்தாள்.
அப்பொழுது பிருந்தாவின் அன்னை வந்து, “எதையாவது ஒழுங்கா செய்றியா? இந்த சாப்பாட்டை பிடி” என்று வசை பாடியபடி உணவு டப்பாவை கொடுத்தார்.
பிருந்தா உணவு டப்பாவை உள்ளே வைத்ததும், நந்தினி கைபேசியை நீட்டியபடி அடக்கப்பட்ட கோபத்துடன், “வண்டியில் ஏறு” என்றாள்.
பிருந்தா அன்னையிடம், “எனக்கு தலை வலிக்குது மா.. நான் இன்னை லீவ் போட்டுறவா?”
அவளது அன்னை முறைத்த முறைப்பில் அவள் மனதினுள், ‘இந்த பக்கம் காளி அந்த பக்கம் பத்திர காளி.. நீ ரொம்ப பாவம்டி பிருந்தா’ என்று நொந்தபடி வண்டியில் ஏறி சிரித்தபடி, “பை மா” என்றாள்.
வண்டியை கிளப்பிய நந்தினி வீடு இருந்த தெருவை தாண்டியதும், “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்குதா?” என்று திட்ட ஆரம்பித்தாள்.
நடுவில் பிருந்தா, “நந்து கொஞ்சம் வண்டியை நிறுத்து”
“எதுக்கு?”
“அந்த மெடிகல் ஷாப்பில் காட்டன் வாங்கணும்”
“எதுக்கு?”
“காதில் இருந்து ரத்தமா வருதுடி”
“எல்லாமே விளையாட்டு தான்.. கொஞ்சமாவது சீரியஸ்னெஸ் புரியுதா? உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.. ஒன்னு சுய புத்தி வேணும் இல்லை சொல் புத்தியாவது வேணும்.. ரெண்டுமே இல்லை” என்று மீண்டும் திட்ட ஆரம்பித்தவள் கல்லூரி வந்த பிறகும் கூட நிறுத்துவதாக இல்லை.
அவர்கள் பின்னால் வந்த மாலினி, “என்னாச்சு நந்து?”
“இவளையே கேளு” என்று பிருந்தாவை முறைத்தபடி சொன்னவள் வகுப்பை நோக்கி சென்றாள்.
“ஷப்பா” என்று பெருமூச்சு விட்ட பிருந்தாவை பார்த்து மாலினி, “என்னடி பண்ண?”
நடந்ததை கூறிய பிருந்தா, “அவன் தப்பாவே எடுத்துக்கலைடி.. அவன் கூட கோபத்துடன் திட்டினாலும் ஒரே ஒரு முறை தான்டி திட்டினான்”
“எவன்?”
“அந்த குரங்கு தான்”
மாலினி சிரிக்கவும் அவள், “என்ன சிரிப்பு? உன் பார்வையே சரி இல்லையே!”
“இல்லை.. குரங்கில் இருந்து அவன் னு மரியாதை வந்திருச்சோ னு நினைத்தேன்.. அப்படி இல்லை னு புரிஞ்சுடுச்சு.. சரி அதை விடு.. இப்போ என்னிடம் சொன்னதை அவளிடம் சொல்லியிருக்க வேண்டியது தானே!”
“எதுக்கு! இன்னும் ஒரு வாரத்திற்கு வச்சு செய்யவா?”
“சரி அம்மையார் தெளிந்தீங்களா இல்லையா?”
“எங்க? அந்த குரங்கு தான் தெளிய வச்சு தெளிய வச்சு குழப்புதே”
“என்ன பண்றதா இருக்கிற?”
“இப்போதைக்கு எதையும் யோசிக்கிறதா இல்லை”
“அப்பறம்!”
“ஹ்ம்ம்.. விழுப்புரம்” என்றவள், “ஏன்டி நீயும் படுத்துற?”
“சரி சரி வா..” என்றபடி வகுப்பிற்கு சென்றனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் உள்ளே வந்த சிவகுரு நேராக பிருந்தாவிடம் சென்று புன்னகையுடன், “குட் மார்னிங் பிந்துஸ்” என்றான்.
அவனை நிதானமாக பார்த்தவள், “பேட் மார்னிங் குரங்கு” என்றாள்.
“தன்க் யூ” என்று புன்னகையுடன் கூறி நகர போனவன் பின் நின்று அவளை பார்த்து கண் சிமிட்டினான்.
அவள் கோபத்துடன், “டேய்!” என்று கத்த,
வாய்விட்டு சிரித்த சிவகுரு, “இப்போ தான் சாபிட்டது ஜீரணமாச்சு” என்றுவிட்டு தன் இடத்திற்கு சென்றான்.
பிருந்தா கைபேசியை எடுத்து, “உன் மண்டை நிச்சயம் என் கையால் உடைய தான் டா போகுது” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“நீ உடைக்கும் வரை என் கை என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா?” என்று அவன் பதில் அனுப்பினான்.
“பூ பறிச்சுட்டு இருக்குமா தேங்காய் பறிச்சிட்டு இருக்குமா னு இந்த வசனத்தை மாத்தவே மாட்டீங்களாடா!” என்று இவள் பதில் அனுப்ப,
அவனோ, “ஓ! சரி இது எப்படி இருக்குதுன்னு சொல்லு.. உன் கை என் மண்டையை உடைக்கும் முன் என் கை உன்னை அணைக்கும்” என்ற வாக்கியத்துடன் கண்ணடிக்கும் ஸ்மைலி பொம்மையையும் சேர்த்து அனுப்பி இருந்தான்.
அதை படித்ததும் இவள் கோபத்துடன் திரும்பி முறைக்க அவனோ உல்லாசமாக சிரித்தபடி மீண்டும் கண்சிமிட்டினான்.
இவள் கோபத்துடன் எழவும் மாலினி இவள் கையை பற்றி அமர செய்தாள்.
இவள் அவனை முறைத்தபடி பல்லை கடித்துக் கொண்டு, கையை விடு மாலு” என்றாள்.
அவளது நாடியை பிடித்து தன் புறம் திருப்பிய மாலினி, “வெளியே பி.டி. வராரு” என்றாள்.
“ச்ச்” என்று கோபத்துடன் மேஜையை குத்தினாள்.
ஆசிரியர் சென்றதும் மாலினி, “என்னடி ஆச்சு?”
“ஒன்னுமில்லை” என்றாள் பல்லை கடித்துக் கொண்டு.
மாலினி சிவகுருவை பார்க்க அவனோ பிருந்தாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மாலினி, “நீ பிருந்தாவை ரொம்ப படுத்துற னு தோணுது” என்ற குறுஞ்செய்தியை சிவகுருவிற்கு அனுப்பினாள்.
“அவள் மனதை அறிய எனக்கு வேறு வழி தெரியலை.. நீயும் நந்தினியும் அவளை பார்த்துப்பீங்க என்ற தைரியத்தில் தான் கொஞ்சம் அதிகமா படுத்துறேன்.. பார்த்துக்கோங்க” என்ற குறுஞ்செய்தியை அனுப்பியவன்,
“இப்போ நான் அவளுக்கு அனுப்பிய மெசேஜ் தான் இப்போ அவளது கோபத்திற்கு காரணம்.. அந்த மெசேஜை இதுவரை உன்னிடம் காட்டலை.. அப்படி அவள் காட்டவே இல்லை என்றால் அவள் மனதினுள் நான் நுழைந்துவிட்டேன் என்று தான் அர்த்தம்..” என்ற குருஞ்செய்தியை அடுத்து அனுப்பினான்.
  
மழை தொடரும்….

Advertisement