Advertisement

மது – 10

மனித வாழ்வு மிக மிக விசித்திரமானது.. அடுத்தநொடி என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.. ஆனால் ஒருவித நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தான் நம்மை நம் வாழ்வில் அடுத்த நொடி பயணம் செய்ய காரணியாய் இருக்கிறது..

மதுபாலாவிற்கு, அவள் மீதும் அவள் வாழ்வின் மீதும் நம்பிக்கை மலை அளவு இருந்தாலும், எதிர்பார்ப்பு என்பது இத்தனை நாட்களில் இல்லை என்பதாகவே பட்டது.. ரிஷியைப் பார்க்கும் வரைக்கும்..

அவனைப் பார்த்து.. அவனோடு பேசி.. அவனோடு இதே வீட்டில் மூன்று நாட்கள் கழித்து பின் அவன் கிளம்பி செல்கையில் என்று ஒவ்வொரு தருணத்திலும் அவனால் சின்ன சின்ன மாற்றங்கள் அவள் மனதில்.

அதிலும் அவன் சென்ற பிறகோ, இத்தனை நாள் உணராத தனிமை வந்து அவளை சூழ்ந்துகொள்ள, ரிஷியோடு இருந்திட வேண்டும் என்ற எண்ணமே பேயாட்டம் போட, அவளை அவளால் சமாதானம் செய்திடவே முடியவில்லை..

உறவுகளே வேண்டாம் என்று வந்தவன் அவன்.. உறவுகளே இல்லாது வாழ்பவள் இவள்.. இருவருக்கும் இடையே உறவொன்று உயிர்பூக்க, அதை உணருமுன்னமே அவன் கடல் கடந்து சென்றிட, அவனது உறவுகள் எல்லாம் இப்போது இவள் வீட்டில் இவளை உறவு கொண்டாடுகின்றனர்..

இரண்டு நாட்களாகிவிட்டது கல்யாணியும், மைதிலியும் அங்கே தங்கி. ரிஷிநித்யனும் அடுத்து அழைக்கவில்லை.. அவன் வீட்டினருக்கும் அழைக்கவில்லை. ஆக கல்யாணி வர மறுத்துவிட்டார்..

சாம்பசிவமும், ஸ்ரீநிவாஸும் எத்தனை சொல்லியும் கேட்கவில்லை.. அவர்கள் வேலைகளை விட்டுவிட்டு எத்தனை நாளைக்கு இங்கே இருந்திட முடியும்.. மைதிலிக்கு இன்னும் இரண்டு கவுன்சிலிங் பாக்கி இருக்கும் நிலையில், என்ன செய்வது என்று யோசிக்க,

“இப்போ என்ன நீங்க போய் வேலையை பாருங்க.. நாங்க இங்க இருந்துக்கிறோம். ரிஷி பேசினா தெரிஞ்ச மாதிரியும் இருந்தது.. மைதிலியை நாங்களே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு வர்றோம் அவ்வளோதானே.. என்ன மதுபாலா உனக்கு இங்க எல்லா இடமும் தெரியும்தான…” என்று கல்யாணி அவளையும் பேச்சில் இழுக்க,

அவளோ ஆம் என்று சொல்ல முடியாது இல்லையென்றும் சொல்ல முடியாது பொத்தாம் பொதுவாய் தலையை ஆட்டினாள்.. அவளுக்கு கல்யாணி பேசுவதெல்லாம் அப்படியே ரிஷி பேசுவது போலவே இருந்தது..

“என் பையனை இங்க வர வச்சிடேன்…” என்று கல்யாணி கேட்டபோது, அவளால் ஒன்றுமே பேசிட முடியவில்லை..

எப்படியானாலும் ரிஷி வருவான் தான்.. ஆனால் அதற்கு அவன் போடும் கண்டிசன் ஒன்று இருக்கிறதே என்று யோசிக்கையில், ‘அதென்ன உனக்கு பிடிக்காத விஷயமா?? அவனை உனக்கும் பிடிக்கும்தான…’ என்று அவளது மனம் எடுத்துரைக்க,

‘பிடிக்கும் ஆனா…’ என்று அவளது இழுவையில், அவள் மனமே ஓங்கி அவள் மண்டையில் குட்டியது..

முதல்நாள் கல்யாணியும், மைதிலியும் மதுபாலா வீட்டில் இருந்துகொள்ள, சாம்பசிவமும் ஸ்ரீநிவாஸும் அங்கிருந்து கிளம்பி முதலில் பார்க்க போனது சைலேந்திரனைத் தான். அவர்களுக்கு மதுபாலாவைப் பற்றி முழுதாய் தெரியவேண்டி இருந்தது.

வெளியே எதுவும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் ரிஷி கிளம்பிப் போனதும், அடுத்து அவன் மதுபாலாவோடு பேசியதும் அவர்களுள்ளும் ஒரு தாக்கம் கொடுத்திருந்தது..

காரணம் ரிஷியின் பிடிவாதம் அவர்கள் அறிந்ததே..

சைலேந்திரனுக்கு எப்படியும் இவர்கள் வருவார்கள் என்று தெரியுமென்பதால் அவரும் அதற்கு தயாராகவே இருந்தார்.

“மதுபாலா பத்தி கேட்க வருவீங்கன்னு முன்னாடியே நினைச்சேன்…” என,

“நாங்க எங்க பையனுக்காக தான் வந்தோம்…” என்றார் சாம்பசிவம்..

“ஹ்ம்ம்  சரி என்ன கேட்கணுமோ கேளுங்க…”

“மதுபாலாவோட ஃபுல் டீடெயில்ஸ் வேணும்…” என்று ஸ்ரீநிவாஸ் சொல்ல,

“ம்ம்…” என்று தலையை அசைத்த சைலேந்திரன், “என் நேடிவ் கன்னியாகுமரி. மதுபாலாவோட அம்மாவும் அங்கதான். மதுவும் அவங்கம்மாவும் இங்க வர்றப்போ அவளுக்கு வயசு பத்து.. மதுவோட அம்மா வழி பாட்டி குடும்பம் ரொம்ப பெருசு.. வசதியும் கூட.. அதோட சொத்துக்கள் தான் இப்போ இங்க மதுக்கிட்ட இருக்கு.. எல்லாத்தையும் மதுவோட அம்மா இங்க வர்றப்போவே மாத்திட்டு வந்துட்டாங்க. இப்போ அவங்க குடும்பத்துல வேற யாருமில்ல மதுவைத் தவிர..” என்று சைலேந்திரன் சொல்ல,

“ஓ.. அப்.. அப்போ மதுபாலாவோட அப்பா???” என்றார் சாம்பசிவம்.

“ஹ்ம்ம் இதை நீங்க மதுக்கிட்ட கேட்டிருந்தா அவளே சொல்லிருப்பா.. மது இதுவரைக்கும் அவளோட அப்பாவ பார்த்ததில்லை.. அப்பா யாருன்னு தெரியும் ஆனா உரிமை கொண்டாடினதில்லை… மது பிறந்தப்போவே மதுவோட அம்மாவும் அவங்க அப்பாவும் பிரிஞ்சிட்டாங்க.. அடுத்து அவளோட பாட்டி இறக்கவும், மதுவோட அம்மா அங்கிருந்த எல்லாத்தையும் சேல்ஸ் பண்ணிட்டு இங்க வந்து செட்டில் ஆகிட்டாங்க..

என்ன காரணம்னு தெரியாது.. சொந்தங்கள் யாரையும் மதுவோட அம்மா விரும்பலை.. இங்க வந்த கொஞ்ச நாள்லயே மதுவோட அப்பா இறந்துட்டார்னு தகவல் கிடைச்சது.. அதுக்கூட உடனேயில்லை.. நான் ஒரு விசேசத்துக்கு கன்னியாகுமரி போயிருந்தப்போ தான் தெரிஞ்சது..” என்றவரிடம்,

மேலும் மதுவின் அம்மாவழி குடும்பத்தையும், அப்பாவின் பெயர் என்னவென்று கேட்டு அவர்கள் குடும்பத்தையும் பற்றி சாம்பசிவம் விசாரிக்க,

“ஒருவேளை மது கல்யாணம் பண்ண விரும்பினா அப்போ இதைப்பத்தி பேசுங்கன்னு மதுவோட அம்மா என்கிட்டே சொல்லிருந்தாங்க.. இப்போ அதுக்கான நேரம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்..” என்ற சைலேந்திரன், அவர்கள் கேட்ட விபரங்களை கூற, ஸ்ரீநிவாஸ் அமைதியாகவே இருந்தான்..

“அப்போ இப்போ யாருமே மதுபாலாவோட ரிலேடிவ்ஸ்னு இல்லையா??”

“இல்ல சார்.. மே பீ தூரத்து உறவுகள் இருக்கலாம்.. ஆனா அவங்களுக்கு மதுபாலான்னு ஒருத்தி இருக்கிறது நியாபகம் இருக்குமான்னு தெரியலை.. ஆனா சும்மா சொல்லக்கூடாது மதுவும் சரி அவங்கம்மாவும் சரி.. ஜென்டில் வுமன்ஸ்.. அவங்கம்மா போனப்போ கூட மது அழல.. சந்தோசமா தான் அடக்கம் பண்ணி எல்லா காரியமும் அவளே பண்ணா…

அவளோட லைப்ல நான் எப்பவுமே ரொம்பன்னு இல்லை எப்பவுமே தலையிட்டது இல்லை.. பிகாஸ் ஷி க்னோ வாட் டு டூ அண்ட் ஹவ் டு லிவ்…” என்று சைலேந்திரன் சொல்ல,

“ம்ம் அது பார்த்தாலே தெரியுது..” என்ற சாம்பசிவம், “ஸ்ரீனி உனக்கு கன்னியாகுமரில யாரையும் தெரியுமா???” என்று விசாரிக்க,

அவனோ கொஞ்சம் யோசித்தவன் “ஹ்ம்ம் லா காலேஜ் மேட் ஒருத்தன் கன்னியாகுமரி.. ஆனா அவன் காண்டாக்ட் இல்லையே…” என்று யோசிக்கையில், “ஒன் டே டைம் குடுங்கப்பா நான் விசாரிச்சு சொல்லிடுறேன்…” என,

“ம்ம்..” என்றவர் “ஓகே சைலேந்திரன் நாங்க கிளம்புறோம்..” என்று கிளம்ப,

“மது நல்ல பொண்ணு சார்.. ரிஷியும் தான்.. ரெண்டுபேருக்கும் நல்ல பொருத்தமா இருக்கும்.. வேண்டாம் சொல்லிடாதீங்க…” என்றபடி சைலேந்திரனும் வெளியே வர,

சாம்பசிவம் பதிலே சொல்லாமல் “அடுத்துப் பாப்போம்…” என்று மட்டும் சொல்லி மகனோடு மீண்டும் மதுபாலா வீடு செல்ல, அங்கேயே மைதிலி ஒரு அறையில் உறங்கியபடி இருக்க,

ஹாலில் அமர்ந்து கல்யாணியும், மதுபாலாவும் பேசியபடி இருக்க, ஸ்ரீநிவாஸ் தான் “கால் எதுவும் வந்ததா??” என்று கேட்க,

“இல்ல ஸ்ரீனி.. ஆனா எப்படியும் பண்ணுவான்…” எனும்போதே, ஸ்ரீநிவாஸ் மைதிலியைத் தேட,

“அக்கா உள்ள தூங்குறாங்க…” என்று மதுபாலா சொல்ல,

“ம்ம்…” என்றவன் அப்படியே நிற்க, “சரி அவன் கால் பண்ணா நம்பர் வாங்கு மதுபாலா.. அவனோட அட்ரெஸ் மறக்காம வாங்கு.. அப்போ நாங்க கிளம்புறோம்..” என்ற சாம்பசிவம்,

“மைதிலியை கூட்டிட்டு வா ஸ்ரீனி..” என,

கல்யாணியோ “இல்ல.. நானும் மைதிலியும் இங்க இருக்கோம்.. ரிஷி எப்படியும் அடுத்து பேசிடுவான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு..” என்று கல்யாணி சொல்லவும், மதுபாலா திடுக்கிட்டுத் தான் பார்த்தாள்..

சாம்பசிவம் மனைவியை முறைக்க, அவரோ தன் கூற்றில் பிடிவாதமாய் நின்றார்..

“அம்மா.. அங்க அப்படியே எல்லாம் இருக்கு. போட்டது போட்டபடி வந்து ஒரு மாசம் ஆகப்போகுது..” என்று ஸ்ரீநிவாஸ் சொல்ல,

கல்யாணியோ அதை இதை சொல்லி, மைதிலியை மருத்துவமனை அழைத்து போகவேண்டும் என்றெல்லாம் சொல்லி எப்படியோ அவரும் மைதிலியும் இங்கே தங்குவதாய் முடிவாய் சொல்லிட, அதுவும் மதுபாலாவையும் பேச்சில் இழுத்துக்கொள்ள, அவளுக்கோ அனைத்திற்கும் தலையை ஆட்டும் நிலை..

“ம்ம் சரி நாலு நாள் தான்.. அதுக்குமேல இங்க இருக்க கூடாது…” என்று சாம்பசிவம் சொல்ல,

“அதுக்கென்ன ரிஷி நாளைக்கே போன் பண்ணிட்டா நாளைக்கே கூட கிளம்பிடுவோம்..” என்ற கல்யாணி,

“மதுபாலா நீ போய் இவங்களுக்கு சாப்பிட எடுத்து வை.. எதுவும் சாப்பிடாம தான் வந்திருப்பாங்க.. அடுத்து ட்ராவல் பண்ணணும்ல…” என்று அவளை அனுப்பியவர்,

“நல்லா சமைச்சிருக்கா.. சாப்பிட்டு கிளம்புங்க…” என்று மெதுவாகவே சொல்ல, அப்பாவும் மகனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

இந்த பெண்களை எந்தவகையிலும் இவர்கள் இப்படித்தான் என்று எடை போட்டுவிட முடியாது.. எந்த நேரத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் அவர்களுக்கு ஏற்படும் என்று யாராலும் கணித்து சொல்ல முடியாது. கல்யாணிக்கு இப்போது ரிஷியின் வாழ்வு மட்டுமே பிரதானமாய் இருக்க மற்றது எதுவும் அவருக்கு பெரிதில்லை.

ஆக அதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்யவேண்டும் என்று அவர் உறுதியாய் இருக்க, ஆண்களோ இன்னுமே கூட எந்த ஒரு முடிவிற்கும் வரமுடியாத சூழல்.

இருவரும் அமைதியாக இருக்க, மதுபாலா வந்து சாப்பிட வாருங்கள் என்று அழைக்க, “நீ போ மது.. நான் போட்டுக்கிறேன்…” என்றவர் அவளை அனுப்பிவிட்டு, உள்ளே டைனிங் ஹால் செல்ல, மதுபாலா ஒருநொடி நின்று பார்த்துவிட்டு பின் தன்னறை புகுந்துகொண்டாள்..

அவளுக்கோ யாரோ ஒருவர் வீட்டில் இருப்பது போன்ற உணர்வா, இல்லை இது என் வீடுதானா என்ற சந்தேகம் போகவேயில்லை.. ஒவ்வொன்றும் புத்தியில் பதிய நேரம் பிடித்தது..

அதிலும் ரிஷி.. அழைப்பானா மாட்டானா என்றிருக்க?? அவனோ அங்கே சுவிஸில் அவனது அறையில் இருந்தவன் அலைபேசியோடு போராடிக்கொண்டு இருந்தான் என்ன முயன்றும் மதுபாலாவின் வீட்டிற்கு  லைன் கிடைக்கவேயில்லை..   

“ஓ.. காட் என்ன இது.. ச்சே…” என்று ஏக கடுப்பாய் இருக்க,  “மதுபி.. ஐ மிஸ் யூ…” என்று சொல்லிக்கொண்டவனுக்கு, அவள் சொன்னதெல்லாம் நினைவில் வந்து, வீட்டினரோடு பேசுவோமா என்றும் தோன்ற,

அடுத்த நொடி அவனே அவனுக்கு “நோ…” என்று சொல்லிக்கொண்டான்..

“நோ இப்போ பேசினா என்னை கிளம்பிதான் வர சொல்வாங்க.. வாட் எவர் அவங்களும் கொஞ்சம் மாறனும்.. நானும் கொஞ்சம் செட்டில் ஆகணும்.. மது ஓகே சொல்லட்டும் அவளையும் சேர்த்து வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்..” என்று சொல்லிக்கொண்டவன், தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்க,  கொஞ்ச நேரத்தில் அவன் வீட்டின் காலிங் பெல் ஒலி எழுப்பியது.

வேறு யார் எல்லாம் அவனின் ஒரேயொரு சுவிஸ் நண்பன் தான்..

“ஹாய் டா…” என்றபடி கதவு திறந்தவனை முறைத்தபடி வந்தான் அவன்.

“என்னடா முறைச்சிட்டே வர??”

“பின்ன முறைக்காம. டைம் பாரு.. ஆபீஸுக்கு போகணும்னு எண்ணமில்லையா… தெரியாத்தனமா உன்னை எடுத்தேன் பாரு.. என்னை சொல்லணும்டா…”

“சாரி சாரி.. ஒரு டென் மினிட்ஸ் குளிச்சிட்டு வந்திடுறேன்…” என்று ரிஷி நகரப்போக,

“அதெல்லாம் வேணாம்.. ட்ரெஸ் மாத்திட்டு பெர்பியும் போட்டு வா.. எவனுக்கும் தெரியாது..” என்று சொல்ல,

“ச்சி ச்சி.. நீ இப்படித்தான் டெய்லி வர்றியா.. தள்ளிபோ சாத்தானே…” என்று ரிஷி அவனைப் பிடித்து தள்ள,

“ஏய் ஏய் போதும்டா.. டைம் இல்ல சீக்கிரம் ரெடியாகு…” என்றவன் “கீழ வெய்ட் பண்றேன்.. வந்து சேறு..” என்றுவிட்டு செல்ல,

ரிஷி சொன்னது போலவே பத்தே நிமிடத்தில் தயாராகி வர, அலுவலகம் செல்லும் வழியிலும் கூட மதுபாலாவின் வீட்டு எண்ணுக்கு அழைப்புவிடுக்க, அதுவோ நன்றாய் சதி செய்தது.

இப்படியே இரண்டு நாட்கள் கழிந்திட, அங்கேயோ கல்யாணி, மதுபாலா மைதிலி நன்றாய் பொருந்திவிட்டனர். மைதிலிக்கு மதுபாலாவோடு பேசுவதே பெரிய ரிலாக்ஸாக இருக்க, அது அவளது முகத்திலும் தெரிய, அவ்வபோது கல்யாணி இதெல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்..

அன்றும் அப்படித்தான் பேசியபடி இருக்க, மைதிலி எதுவோ சொல்ல மதுபாலா கொஞ்சம் சத்தமாய் சிரித்துவிட்டாள்,. அடுத்த நொடி மைதிலி கல்யாணி முகம் பார்க்க,

“அச்சோ…” என்று மதுபாலாவும் அவரைப் பார்க்க,

“ம்ம் பொண்ணுங்க இப்படி சிரிச்சிட்டு இருந்தாதான் வீடு நல்லாருக்கும்னு என் அம்மா சொல்வாங்க.. ஆனா நானுமே கல்யாணம் பண்ணிட்டு வந்து எங்க மாமியார் சொன்னதை கேட்டு… ம்ம்ச் மொத்தமா இப்போ நான் நானாவே இல்லை..” என்றவர் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்துவிட்டு,

“அப்போ அதெல்லாம் பெருசா தெரியலை.. ஏன்னா எங்களை எல்லாம் அப்போ சொல்லி வளர்த்ததே புருசனுக்கு அனுசரிச்சு போகணும்..மாமனார் மாமியார் சொல்றதை கேட்டு அவங்க வீட்டு பழக்க வழக்கமெல்லாம் நல்லபடியா கத்துக்கிட்டு நல்ல மருமக நல்ல மனைவின்னு பேறேடுக்கணும்னு தான்…

இன்னிக்கும் கூட பல இடங்கள்ள அப்படித்தான் பொண்ணுங்களுக்கு சொல்லி கொடுக்கிறாங்க.. அது தப்பில்ல.. ஆனா எல்லா சூழ்நிலையிலையும் அது ஒத்து வராதுன்னு எனக்கு இப்போதான் புரிஞ்சது.. ரிஷி அப்பா அவரை நான் புரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடியே பசங்க பிறந்துட்டாங்க.. அதுக்கப்புறம் பசங்களை வளர்க்கணும்.. அதுவும் இப்படித்தான் வளர்க்கணும்னு ஒரு வரைமுறை.. எனக்கும் அது ஆரம்பத்துல இருந்த பழகினதுனால அதெல்லாம் தப்பா சரியான்னு கூட என்னால யோசிக்க முடியலை.. நேரமில்லைன்னு தான் சொல்லணும்..

கலக்டர் பொண்டாட்டி இப்படித்தான் இருக்கணும்னு என்னை கல்யாணம் பண்ண முதல் நாளே ரிஷி அப்பா சொல்லிட்டார். ஆனா அதுபோலவே ஒரு அம்மாவ இருக்க முடியாதே.. அதெல்லாம் இப்போதான் புரிஞ்சது.. ரிஷி கிளம்பி போனது.. மைதிலி இப்படி பண்ணது… வாழ்கைய கொஞ்சம் வேற கண்ணோட்டத்தில பார்க்கணும்னு இப்போதான் எனக்குமே புரிஞ்சது…” என்று கல்யாணி அமைதியாய் தெளிவாய் பேச, அங்கே பலத்த அமைதி தான் நிலவியது..

இன்று இருக்கும் பலவாரியான வீட்டில் இருக்கும் அம்மாக்கள் இப்படித்தான்… கணவனுக்காக, கணவன் குடும்பத்திற்காக. பிள்ளைகளுக்காக என்று பார்த்து பார்த்து ஒருநிலையில் தனக்கு எது பிடிக்கும் என்பதுகூட மறந்துவிடுகிறார்கள்.. இதேது கொஞ்சம் வசதி மேல்தட்டு என்றால் நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு லிஸ்ட் முன்னமே தயாராகி விடுகிறது.. ஆக அதற்கேற்ப பெண்கள் இன்றும் கூட தங்களை மாற்றிக்கொண்டு வாழும் நிலைதான்.. 

மைதிலி அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவள் “சாரி அத்தை.. நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இப்படி பண்ணிட்டேன்..” என, மதுபாலா அமைதியாய் இருவரையும் பார்த்திருந்தாள்.

“அந்த ஸ்ட்ரஸ்க்கு காரணம் நாங்கதானே மைதிலி.. நானாவது கொஞ்சம் புரிஞ்சி நடந்திருக்கணும்..”

“ஹ்ம்ம் இனிமே எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் சரியாகும் அத்தை.. ரிஷி இங்க வரட்டும்.. மது, நம்ம எல்லாம் சேர்ந்து கண்டிப்பா நல்லபடியா சந்தோசமா இருப்போம்..” என்று மைதிலி சொல்ல, மதுபாலா வேகமாய் தலையை குனிந்து கொண்டாள்..

இதெல்லாம் போகிற போக்கில் பேசும் விஷயங்கள் இல்லவே.. என்னதான் ரிஷி அன்று அப்படி சொன்னாலும் அதனைப் பற்றிய தெளிவான பேச்சு இன்னும் அவர்களுள் இல்லைதானே.. அதெல்லாம் தாண்டி இதெல்லாம் போனில் மட்டும் பேசும் விசயமா என்ன?? என்னதான் ரிஷி கேட்டாலும், அவனது வீட்டினர் இதை ஒருமாதிறி ஏற்றுகொண்டாலும், மதுபாலா இன்னுமே முடிவெடுக்காத சூழல் தான்..

“என்ன மது அமைதியா இருக்க??” என்று கல்யாணி வினவ,

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை ஆன்ட்டி.. நானாவே இருந்துட்டேனா சடன் டிசிசன் எதுவும் எடுக்க முடியலை..” என,

“உன்னை யார் சடனா முடிவெடுக்க சொன்னா.. இப்போ எங்க கூட எல்லாம் ஓரளவு செட்டாகு.. அப்புறம் ரிஷி வந்ததும் ரெண்டு பெரும் மனசு விட்டு பேசுங்க அவ்வளோதான் சிம்பிள்…” என்ற கல்யாணியைப் பார்த்தவள்,

“ரிஷி அப்படியே உங்களைப் போல ஆன்ட்டி.. அவனும் இப்படித்தான் எல்லாத்தையும் ஈசியா சொல்லிடுவான்…” என,

“ஹா ஹா..” என்று கல்யாணி சிரிக்க,

“நீங்க கேசரில என்னவோ…” என்று யோசித்தவள் “ஹா ஜாதிக்காய் பவ்டர் ஆட் பண்ணுவீங்கலாமே…” என்று கேட்க,

“ஓ.. அதெல்லாம் சொல்லிட்டானா.. லேசா லாஸ்ட் ல கொஞ்சமா தூவி விடுவேன்.. வாசமா இருக்கும்…” என்று கல்யாணி சொல்லும் போதே தொலைபேசி சப்தமிட,

வேகமாய் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு மூவருமே அங்கே விரைய, “எடுத்து பேசு ரிஷியாதான் இருக்கும்..” என்று கல்யாணி சொல்ல, மதுபாலா வேகமாய் எழுந்து வந்தவள், கொஞ்சம் தயக்கமாகவே போனை எடுக்க,

“ஹலோ மதுபி…” என்ற ரிஷியின் குரல் அவளுள் சின்னதாய் நடுக்கம் கொடுக்க,

“ரி.. ரிஷி…” என்றவள் அப்படியே இருக்க,

“யப்பா… உன்கிட்ட பேசுறதுக்குள்ள.. இதுக்கு நான் இந்தியாவே வந்திடலாம் போல மதுபி.. இட்ஸ் ரியல்லி டூ கஷ்டம்..” என,

“அப்.. அப்போ இந்தியா வந்திடேன்…” என்றாள் வேகமாய்..

“அது முடியாதே.. இப்போதான் ஜாப் சேர்ந்திருக்கேன்.. சட்டுன்னு வர முடியாது.. பட் அப்படியே வரணும்னாலும் அது உன் கைல தான் இருக்கு…” என,

அதற்குள் மைதிலி வேகமாய் ஒரு பேப்பர் பேனாவை எடுத்துக்கொண்டு வர, மதுபாலா உடனே “சரி சுவிஸ்ல நீ எங்கிருக்க,, அட்ரெஸ் போன் நம்பர் எல்லாம் சொல்லு…” என,

“ம்ம்ம்ஹும்.. நீ என்ன முடிவு பண்ணிருக்க சொல்லு.. ஐ வில் டெல்…” என்று அடுத்த பிடிவாதத்திற்கு தயாராய் நின்றான் ரிஷிநித்யன்..

“ம்ம்ச் ரிஷி என்ன பேச்சிது.. இதெல்லாம் போன்ல பேசி டிசைட் பண்ற திங்க்ஸ் இல்லை..” எனும்போதே,

“ஐ க்னோ.. பட் எனக்கும் வேற வழியில்ல.. உன்னளவுக்கு நான் மெச்சூரிட்டின்னு நான் சொல்லிக்க மாட்டேன்.. ஆனா எனக்கும் இங்க வந்தப்பிறகு தான் லைப் பத்தின தாட்ஸ் கொஞ்சம் மாறியிருக்கு.. ஆனா.. எது எப்படி இருந்தாலும் என் லைப்ல நீ இருக்கணும் மதுபி.. ஐ நீட் யூவர் மாரல் சப்போர்ட் அண்ட் சோல் புல் லவ்…” என, சட்டென்று மதுபாலாவின் கண்கள் கலங்கிவிட்டது..

இதற்கு அவள் என்ன பதில் சொல்வாள்… என்ன சொல்லிட முடியும்.. அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும், அவனது குடும்பம் கொடுக்கும் ஒவ்வொரு அனுபவமும் மதுபாலாவை இதிலிருந்து விலக வைக்குமா என்ன??

அவளுக்கும் தான் அது தோன்றுமா என்ன??

“மது.. மதுபி.. பேசேன் ப்ளீஸ்.. இங்க எப்போ லைன் கட்டாகும் தெரியாது. ப்ளீஸ் டாக் வித் மீ…” என,

“ஹ்ம்ம் நீ இந்தியா வா ரிஷி.. பேசலாம்…” என்றாள் கண்களைத் துடைத்து..

“ஹேய் இப்போ எதுக்கு அழற…” என்று ரிஷி கேட்க,

“ரிஷி ப்ளீஸ்… நீ இங்க வா எதுன்னாலும் பேசிக்கலாம்.. தென் உன் வீட்டுக்கு பேசு.. இல்லைன்னா எனக்கு கால் பண்ணாத..” என,

“ம்ம்.. உன்னோட டிசிசன் தெரியாம நான் யார்கிட்டயும் பேசுறதா இல்லை மதுபி..” என்றவன் பேச்சில் கோவம் துளிர்க்க, அழைப்பைத் துண்டித்தவள், கல்யாணியைக் கட்டிக்கொண்டு அழவே தொடங்கிவிட்டாள்..

                      

    

    

Advertisement