Advertisement

மது – 4

“என்னது வீட்ட விட்டு வந்துட்டியா??” என்று மதுபாலா அதிர்ந்து கேட்க,

“ம்ம்…” என்று தலையை ஆட்டினான் ரிஷி..

இன்னுமே அவளுக்கு அந்த அதிர்ச்சி நீங்கவில்லை.. இருவருக்குமே அப்போதைக்கு உறக்கம் வராது போக,  மதுபாலா கூடாரத்தில் இருந்து வெளிவந்திட, ஏற்கனவே அங்கே ரிஷி வெளியில் அமர்ந்திருக்க,

இருவருமே “தூங்கல…” என்று ஒரே கேள்வியை எழுப்ப, அடுத்த நொடி இருவர் முகத்திலும் ஒரு புன்னகை..

மதுபாலா ரிஷிக்கு எதிர்த்தார் போல் வந்து அமர, இருவருக்கும் நடுவே லேசாய் நெருப்பு எரிந்து கொண்டு இருக்க, அதையும் தாண்டி அந்த இரவு நேரத்தின் ஜில்லிப்பை இருவருமே உணரத்தான் செய்தனர்..

மதுபாலா தன் கைகள் இரண்டையும் தேய்த்து, கொஞ்சம் அனல் படும்படி கையை வைத்து வைத்து எடுத்துக்கொண்டு இருக்க, கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்த ரிஷி,

“இப்போ மட்டும் சைலேந்திரன் சார் நம்மளை பார்க்கணும்… அவ்வளோதான்…” என்று சொல்லி கொஞ்சம் பலமாய் சிரிக்க, அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,

“ஹ்ம்ம் உன்கிட்ட என்ன சொன்னார் எனக்குத் தெரியாது.. ஐம் நாட் சப்போர்டிங் ஹிம்.. அவருக்கு பொறுப்பு ஜாஸ்தில்ல.. அதுதான்..” என்று சொல்ல,

“இருக்கட்டும்.. நம்மளும் தப்பா எதுவும் பண்ணிடலையே.. சும்மா நின்னு பேசினா தப்பா??” என்றவனுக்கு இப்போதும் அந்த கோபம் அப்படியேதான் இருந்தது..

“அவரோட கடமை அவர் அப்படி சொல்லிருப்பார்.. சோ…” என்று பேசும்போதே,

“என்ன சோ… கண்டிப்பா சொல்றேன்.. இந்த கேம்ப் டீம்ல இருந்து அட்லீஸ்ட் ஒரு ரியல் லைப் பேர் ஆவது செட் ஆவாங்க…” என்று அடித்து சொல்பவன் போல் சொல்ல,

மதுபாலா “ஹா ஹா ரிஷி…” என்று சிரித்தேவிட்டாள்.

‘என்ன சிரிப்பு…’ என்று ரிஷி பார்க்க, “ரிஷி… இதை மட்டும் நீ சைலேந்தர் கிட்ட சொல்லேன் அவ்வளோதான் மனுசர் இனிமே கேம்ப் போடவே மாட்டார்…” என்று சிரித்தவள்,

“ஏன் அப்படி சொல்ற??” என்று கேட்க,

“எனக்கு தோணிச்சு அவ்வளோதான்….” என்றவன் பின் அமைதியாகிவிட,

“ஹ்ம்ம் அப்புறம் ரிஷி உன்ன பத்தி சொல்லு…” என்று மதுபாலா கேட்க,

“இந்த கேள்வி நீ எல்லார் கிட்டயும் கேட்பியா??” என்று வேகமாய் கேட்டுவிட்டான் ரிஷி..

அவனை ஒருநொடி வெட்டும் பார்வை பார்த்தவள், “எனக்கு யாரைப் பத்தி தெரியனும்னு தோணுதோ அவங்களைத் தான் கேட்பேன்.. எல்லாரையும் கேட்டு நான் என்ன செய்ய போறேன்..” என்று மதுபாலா சொல்ல, 

“ஓ அப்போ என்னைப் பத்தி தெரிஞ்சு நீ என்ன செய்ய போற..??” என்று ரிஷி கேட்கையில் அவள் சொன்ன சொல்லப் போகிறாளோ என்று ஆவல் எட்டிப் பார்த்தது.

அவனைப் பார்த்து இரண்டு புருவங்களையும் உயர்த்தி நீ பெரிய ஆள் தான் என்பதுபோல் பார்த்தவள் “இப்போ கேம்ப் வந்திருக்க டீம் எனக்கு டூ இயர்ஸா தெரியும்.. அவங்களுக்கு என்னோட நேம் தவிர வேறெதுவும் தெரியாது.. ஆனா நீ…” என்று ஒருநொடி பேச்சை நிறுத்தி அவனைப் பார்த்தவள்,

“என்னை பர்ஸ்ட் டைம் பார்க்கிறப்போவே ஒரு கேள்வியோடத்தான் பார்த்த.. சோ நானும் உன்னை பத்தி தெரிஞ்சுக்க கேள்வி கேட்டேன்… ”  என்றாள்.

முதல் முறையாய் அவள் அவளுடைய இயல்பை மீறி கொஞ்சம் இலகுவாய் பேசுகிறாளோ என்று ரிஷிக்குத் தோன்ற, அவளை இமைக்காமல் பார்த்துகொண்டு இருந்தான்..

“ஆரம்பிச்சுட்டியா??? அதென்ன இப்படி ஒரு பார்வை..? யூ க்னோ என்னை யாரும் ஒன் செக்கன்ட் மேல பார்த்தா எனக்கு சுத்தமா பிடிக்காது.. அந்த ஒன் செக்கன்ட் கூட நான் நின்னு பேசினா மட்டும் தான்…”

“ஓகே நின்னு பேசினா ஒன் செக்கன்ட்.. ஆனா இப்படி எதிர்ல உட்கார்ந்து பேசினா???” என்று ரிஷி அவள் மேல் இன்னும் பார்வையை ஓட்டிவிட்டு கேட்க,

அவன் கேட்ட விதத்தில் உள்ளூர மறுபடியும் ‘இவன் என்னிடம் உரிமை எடுத்துக் கொள்கிறானோ’ என்று அவளுக்குத் தோன்றியது..

கண்களை சுருக்கி, “நீ பேச்சு வளக்குற…” என்றவள், “சொல்லு என்ன தெரியனும் உனக்கு??” என,

“என்ன தெரியனும்… நீ என்னவோ நார்மல் கிடையாது அப்படிங்கிற போல சைலேந்திரன் சார் பேசினார்.. அதான் அப்படி என்ன ஸ்பெசல்னு பார்த்தேன்.. தட்ஸ் ஆல்…” என்று அவ்வளவுதான் என்பதுபோல் ரிஷி பேச்சை முடிக்க,

“ஓஹோ…” என்றவள்,

“எதாவது ஸ்பெஷலா தெரிஞ்சதா???” என்று சிரித்தபடி கேட்க,

“எங்க??? அதான் அதுக்குள்ள அவர் வந்திடுறாரே…” என்று ரிஷி சொல்லும் போதே அவனுக்கும் சிரிப்பு வந்திட, அவளுமே கூட சேர்ந்து தான் சிரித்தாள்.

என்னவோ மதுபாலாவிற்கு ரிஷி தான் வித்தியாசமாய் பட்டான்.. வந்திருப்பவர்கள் எல்லாருமே சந்தோசமாய் இருந்தாலும் இவன் முகத்தில் அவ்வப்போது வந்து போகும் யோசனை, எதோ ஒரு சிந்தனை செய்து அவனே தலையை குலுக்கிக்கொள்வது,  ஏதாவது ஒன்றென்றால் அவளிடமே கூட கோவமாய் பேசுவது, அனைவரோடு இணைந்தும் இருக்கிறான் அப்படியில்லை என்று தோன்றவும் செய்கிறான் என்று அவன் தான் அவளுக்கு புரியாத புதிராய் பட்டான்.

ஆகவேதான் மதுபாலா தன்னையும் மீறி அவனிடம் பேச்சு வளர்ப்பது.. அவளாக இப்படி யாரிடமும் சென்றெல்லாம் பேசியதேயில்லை.. அப்படியான அவசியமும் இல்லை. சைலேந்திரன் கூட இந்த டீம் வருகிறது என்றால் கேம்ப் தேதி சொல்வார். அவளுக்கு அது தோதாக இருக்கிறது என்றால் கிளம்புவாள்..

மற்றபடி இது முடிந்து வீட்டிற்கு என்று சென்றுவிட்டால் இங்கே வந்திருப்பவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. ஆனால் எதுவோ ஒன்று அவளுக்கு ரிஷியைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று தூண்ட,

இதோ இந்த அர்த்த ராத்திரி வேளையில், அத்வான காட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்..

ரிஷி தன்னைப் பற்றி கூற, அவன் கடைசியாய் வீட்டை விட்டு வந்துவிட்டேன் என்று சொன்னதுமே அவளுக்கு அதிர்ச்சி தான்.

அவனைப் பார்த்தாலே வசதியில் வளர்ந்தவன் என்று நன்கு தெரியும், இப்போது அவன் அவனது குடும்பத்தை பற்றியும் சொல்ல, நல்ல பின்புலம் என்று எண்ணும் வேளையில் அவன் அதெல்லாம் விட்டுவந்துவிட்டேன் என்று சொல்லவும் அவளுக்கு நிஜமாகவே அதிர்ச்சியாகத் தான் இருந்தது..

“ஏன் ஏன் ரிஷி??? எதுக்காக???” என்று படபடவென கேட்டவளை பார்த்து,

“இப்போ ஏன் இவ்வளோ ஷாக்??” என்றான் வெகு வெகு நிதானமாய்.

“பின்ன?? நீ என்ன டீனேஜ் பையனா?? வீட்ல ஸ்ட்ரிக்ட் பண்றாங்கன்னு வீட்டை விட்டு வர… ஓ ஹாட்…” என்று இமைகளை படபடவென அடித்து தலையில் கை வைக்க,

“ம்ம் நீ உங்க வீட்டு பத்தி சொல்லு…” என்ற அவனது கேள்வி அவளை கொஞ்சம் அமைதிகொள்ள வைத்தது..

முன்னொரு காலத்தில் இப்படியான கேள்விகளை அவள் நிறைய தாண்டி தவிர்த்து வந்திருக்கிறாள் தான். ஆனால் அவள் அம்மாவின் மறைவுக்கு பின் யாரும் இப்படி அவளோடு அமர்ந்து அவளைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்றெல்லாம் அக்கறையாய் கேட்டதுமில்லை என்பதால்

பல வருடங்கள் கழித்து அவள் முன் மீண்டும் அதே பழைய கேள்வி வந்து அமர்கையில், அதுவும் இத்தனை நேரம் ரிஷியின் குடும்பம் பற்றி தெரிந்தபிறகு இக்கேள்வி வரவும்,

இதுநாள் வரைக்கும் இல்லாத ஒரு தயக்கம் இப்போது மதுபாலாவிடம்.. கண்டிப்பாய் அவள் அம்மா அவளை தவறான முறையை பெற்றெடுக்கவில்லை என்பது அவளுக்கு நிச்சயமாகத் தெரியும்..

இருந்தாலும் அந்த ‘அப்பா’ என்ற உறவின் அடையாளமே அவள் கண்டதில்லை எனும்போது இப்போது ரிஷியிடம் சொல்லி அவன் அவளை மட்டமாய் நினைத்தால் என்ன செய்ய என்ற தோன்றிய அடுத்த நொடி,

‘அவன் உன்னை எப்படி நினைச்சா உனக்கென்ன?? நாளைக்கு இந்நேரம் அவன் எங்கயோ நீ எங்கயோ…’ என்று அவளது மனசாட்சி சொல்ல,

‘அதானே….’ என்று வேகமாய் தன்னை மீட்டவள், முன்னை விட மிடுக்காய் அவளைப் பற்றி சொன்னாள்..

அவள் சொல்ல சொல்ல கேட்டவனுக்கோ, கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்துகொண்டே போனது..

‘எப்படி இப்படி யாருமே இல்லாமல் இருக்க முடியும்??’ என்று தோன்ற, அதனை ரிஷி அப்படியே கேட்க,

“அட.. நீ கூட இப்போ யாருமே வேணாம்னு தானே வந்திருக்க…” என்று பதிலுக்குத் திருப்பினாள்..

“அதில்ல மதுபி… எல்லாரும் இருந்து யாரும் வேணாம்னு வர்றது வேற.. ஆனா யாருமே இல்லாம இருக்கிறது… நீ.. நீ லோன்லியா ஃபீல் பண்ணலையா???” என்றான் வேகமாய்..

“ஏன் லோன்லியா ஃபீல் பண்ணனும்.. என் லைப்ல நான் மட்டும்தான் அது நல்லா தெரிஞ்சபிறகு ஏன் ஃபீல் பண்ணனும்???” என,

“இல்ல அப்படியில்ல… அது.. உனக்கு இப்போவர தோணலையா சம்திங் உனக்கே உனக்குன்னு யாராவது வேணும்னு…” என்று அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் அவன் திணற,

அவனைப் பார்த்து போதும் போதும் என்று கைகளை உயர்த்தியவள், “ஏன் அப்படி தோணனும்??? சி.. எனக்கு வேணுங்கற எல்லாமே என்னால பண்ணிக்க முடியும்.. வாட் எவர் இட் இஸ்.. பட் அதுக்காக இஷ்டபடி கண்டபடி சுத்துற டைப் நானில்லை..

என் அம்மா என்னை தனியா விட்டு போறப்போ.. என்னை இப்படி விட்டு போறோம்ன்னு அவங்களுக்கு வருத்தமிருந்ததா தெரியாது.. பட் இப்பவும் எனக்கு நம்பிக்கை இருக்கு.. என் அம்மா என்னை சுத்தி இங்கதான் எங்கயோ இருக்காங்கனு.. நம்ம இல்லைன்னதும் நம்ம பொண்ணு இஷ்டத்துக்கு இருக்கான்னு அவங்க இப்போ கூட நினைச்சிட கூடாது…” என்றவளை நிஜமாய் ரிஷி ஆச்சர்யமாய் தான் பார்த்தான்..

கண்டிப்பாய் இவள் ஸ்பெஷல் தான் என்று தோன்றியது.. வீட்டில் ஆட்கள் இருக்கையிலேயே இக்காலத்து பிள்ளைகள் எத்தனையோ திருட்டுத்தனங்கள் செய்கிறது.. அப்படியிருக்க, யாருமே இல்லை என்றாலும் இத்தனை வசதி இருந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன் என்ற எண்ணத்தில் இருப்பவள் கண்டிப்பாய் ஸ்பெஷல் தான்.

ரிஷிக்கு பேச்சே வரவில்லை.. அமைதியாய் இருந்தான். என்னவோ அவனுக்கு மனதில் ஒரு பாரம் வந்தது போல் இருந்தது.. பேசாமல் இருக்க,

மதுபாலா விரித்து விட்டிருந்த கூந்தலை ஸ்டைலாய் கோதிவிட்டவள், “போதும் போதும் ரொம்ப எல்லாம் ஃபீல் பண்ணாத… டைம் ஆச்சு போய் தூங்கு… நாளைக்கு இதே டைம் நீ எங்கயோ நான் எங்கயோ சோ டோன்ட் திங் எனி திங்…” என்றபடி எழுந்து அவளது கூடாரம் நோக்கி சென்றவளுக்கு மனம் இப்போது ரொம்ப ரொம்ப லேசாய் இருப்பது போல் இருந்தது..

ஆனால் ரிஷிக்கோ இப்போது சுத்தமாய் தூக்கமே வராது போல் இருக்க, ‘மதுபி எப்படி இப்படி இருக்கா??? எப்படி முடியுது?? லேசா ஒரு தலைவலின்னு வந்தா கூட இவளுக்கு யாரையும் தேட தோணாதா?? எனக்கெல்லாம் காய்ச்சல் வந்தா..’ என்று நினைக்கையிலேயே அவனது மனம் அவன் வீட்டை நோக்கி ஓட,

“நோ நோ ரிஷி.. வேணாம்… அவங்க யாரும் வேணாம்னு தான் வந்திருக்க.. இந்த முடிவுல நீ தெளிவா இரு போதும்… மதுபி சொன்னது போல நாளைக்கு இந்நேரம் நீ எங்கயோ அவ எங்கயோ…” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவனும் அவனது கூடாரம் நோக்கி சென்றான்..

மறுநாளைய பொழுதுகள் சீக்கிரம் சென்றது போல் இருந்தது.. அருகே இருக்கும் மற்ற இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு, சிறு சிறு விளையாட்டுகள் அங்கே விளையாடி மதிய உணவும் அங்கேயே முடித்து அனைவரும் கிளம்பி சென்னை வந்து சேர்க்கையில் மாலை ஆகிவிட்டது..

இமயா அலுவலகம் வந்து  அனைவரும் மீண்டும் அங்கே கொடுத்த படிவத்தில் கையெழுத்து போட்டு, கொஞ்சம் பேசி அளவளாவி அனைவரும் கிளம்பத் தொடங்கிவிட்டனர்..

ரிஷிக்கோ பெரும் யோசனை எங்கே செல்வது என்று.. இல்லை கிளம்பி வேறு ஏதாவது ஊருக்கு சென்றுவிட்டு விசா கிடைத்ததும் கிளம்பிவிடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கயிலேயே அவனது அலைபேசி அலற,

யோசனையாய் எடுத்துப் பார்த்தவனுக்கு அப்பாடி என்றிருந்தது.. காரணம் அழைத்தது சுவிஸில் உள்ள அவனது நண்பன்..

“ஹாய் டியூட்…” என்று ரிஷி ஆரம்பிக்க,

அவனை கடந்து சென்ற மதுபாலா, திரும்பிப் பார்த்து கையசைத்துவிட்டு நடக்க, ரிஷியோ நண்பனோடு பேசும் மும்முரத்தில் அவளுக்கு சரியாய் விடை கூட அளிக்காது, வேகமாய் ஒரு கையசைப்பை கொடுத்துவிட்டு அவனோடு பேசத் தொடங்க, மதுபாலா ஒரு நொடி நின்று அவனைப் பார்த்துவிட்டு பின் நடந்துபோனாள். 

வந்திருந்தவர்கள் அனைவரும் கிளம்பியிருக்க, ரிஷி மட்டும் வராண்டாவில் நின்று பேசிக்கொண்டு இருந்தான்..

“வாவ் சூப்பர் டா.. கம்பனி விஸாவே கிடைச்சிடுச்சா.. சூப்பர்… எனக்கு அபிசியல் மெயில் மட்டும் அனுப்பிடேன்…” என்றவனிடம், பதிலுக்கு அவன் நண்பன் என்ன சொன்னானோ,

“தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் மச்சி… ஐம் கம்மிங்… ப்ரைடே மீட் பண்ணலாம்…” என்று சொல்லி மகிழ்வாய் அலைபேசியை வைத்துவிட்டு நிமிர,

எதிரே சைலேந்திரன் வந்துகொண்டு இருந்தார்.. என்னவோ ரிஷிக்கு இப்போது அவர்மீது இருந்த கோவமெல்லாம் காணாமல் போனதுபோல் இருக்க,

“ஹாய் சார்.. சூப்பர் கேம்ப்.. நல்லா என்ஜாய் பண்ணேன்…” என்று சொல்லி அவரிடம் கரம் குழுக்க

“சந்தோசம் ரிஷி.. எல்லாரும் கிளம்பிட்டாங்க.. நீங்க கிளம்பலையா??” என்றவருக்கு,

“இதோ கிளம்பிட்டேன்.. ஒரு கால் வரவும் அப்படியே நின்னுட்டேன்..” என்றவன்,

“பை சார்…” என்று சொல்லி கிளம்ப, சைலேந்திரனும் ஒரு புன்னகையோடு விடை கொடுத்தார்..

ஆனால் வெளியே வந்த ரிஷிக்கோ மீண்டும் அதே கேள்வி எங்கே போவது என்று.. ஒரு மூன்று நாட்கள் அவன் வீட்டு ஆட்கள் கண்ணிலேயே படாது இருந்திட வேண்டும்.. என்று நினைத்துகொண்டு மெல்ல சாலையில் இறங்கி நடந்தவனை வேகமாய் வந்து உரசிக்கொண்டு நின்றது மதுபாலாவின் பிஎம்டபிள்யூ..

அவன் வீட்டினரோ என்று அதிர்ந்து பார்க்க, மதுபாலாவின் கார் என்றதும் “மதுபி…” என்றபடி கார் ஜன்னல் கண்ணாடியைப் பார்க்க

அதே நேரம் ஜன்னல் கண்ணாடியை இறக்கியவள், “என்ன இப்படி மெதுவா நடந்து போயிட்டு இருக்க???” என்று கிண்டலாய் கேட்டாள்..

“ஏன் சொல்லமாட்ட…” என்றவன் பின் பிகு எல்லாம் செய்யாமல் “எங்க போறதுன்னு தெரியலை… அதான்…” என்று இழுக்க,

“ம்ம்…” என்று யோசித்தவள் “சரி கார்ல ஏறு அப்புறம் பேசிக்கலாம்…” என்றுசொல்ல,

“நிஜமாவா சொல்ற…” என்பது போல் ரிஷி பார்க்க,

“கம்மான் ரிஷி.. ஏறு.. பேசிக்கலாம்..” என்றவள், என்ன நினைத்தாளோ இறங்கி,

“உனக்கு நான் டிரைவர் வேலையெல்லாம் பார்க்க முடியாது.. சோ நீயே டிரைவ் பண்ணு..” என்று சொல்லியபடி மறுப்பக்கம் கதவு திறந்து அமர்ந்துவிட,

‘என்னடா இது…’ என்று நம்ப முடியாமலேயே ரிஷி அவளது காரில் ஏறினான்..

அடுத்து ஐந்து நிமிடம் இருவருமே பேசிக்கொள்ளவில்லை.. அவள் எங்கே போகிறாள், தான் எங்கே போகவேண்டும் இதெல்லாம் அவனுக்குத் தெரியாது.. ஆனால் என்னவோ மதுபாலாவின் காரில் ஏறியதும் அவனையும் அறியாது ஒரு நிம்மதி அவன் மனதில் சூழ, திரும்பி திரும்பி அவளைப் பார்த்துக்கொண்டே தான் வண்டியோட்டினான்..

“என் முகத்துல எதுவும் வழி தெரியுதா என்ன??” என்று அவனைப் பார்த்தவள்,

“சரி டிசைட் பண்ணிட்டியா?? எங்க போகணும்னு…” என்று கேட்க,

“ம்ம்ஹும்…” என்று அவன் தலை இல்லை என்று ஆடியது.

“நான் சொன்னா தப்பா நினைக்க மாட்டியே…” என்று மதுபாலா ஆரம்பிக்கும் போதே,

“மதுபி ப்ளீஸ்.. என்னை எங்க வீட்டுக்கு போன்னு மட்டும் சொல்லாத…” என்று ரிஷி வேகமாய் முடிக்க,

“அவசரம் அவசரம்… உனக்கு.. நான் ஏன் அப்படி சொல்லணும்.. அது உன்னோட விருப்பம்.. பட் உன்னை என் வீட்டுக்கு இன்வைட் பண்றது என்னோட விருப்பம் தானே…” என,

“என்ன?? என்ன சொன்ன??” என்று திரும்பக் கேட்டான் ரிஷி..

“அஹா… இதெல்லாம் மட்டும் சட்டுன்னு புரியாதே…” என்று சிரித்தவள், “என் கூட என் வீட்டுக்கு வா.. ஐ திங் அது உனக்கு சேப் தான்.. சோ த்ரீ டேஸ் அங்க இரு.. எனக்கு நோ பிராப்ளம்…” என்று சொல்ல,

‘இவ புரிஞ்சு பேசுறாளா?? புரியாம பேசுராளா??’ என்று ரிஷி அவளைப் பார்க்க,

“ஓ.. நீ அந்த மாதிரி டைப்பா.. ஐ மீன் ஒரு பொண்ணும் பையனும் தனியா இருந்தா உடனே அவங்க…” என்று அவள் சொல்லி முடிக்கும்போதே,

“ஏய் சி சி… என்ன பேச்சு இது… நான் ஒண்ணும் அப்படியெல்லாம் அலையற டைப் இல்லை.. அடுத்தவங்களையும் அப்படி திங் பண்ற ஆளுமில்லை…” என்று முகத்தை ரிஷி சுருக்க,

“தென் வாட்.. எனக்கு என் மேல டன் டன்னா நம்பிக்கை இருக்கு.. உனக்கு உன்மேல நம்பிக்கை இருந்தா வா.. இல்லையா இப்படியே இறங்கி போ…” என்று சாலையை காட்ட,

“ம்ம் உன் வீட்டுக்கு வழி சொல்லு…” என்று முகத்தை சுருக்கி சொன்னவனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் மதுபாலா..

அவளுக்கே தெரியவில்லை அவள் ஏன் இப்படி சிரிக்கிறாள் என்று.. அவளைப் பொருத்தமட்டில் அழுவதும் இப்படி வயிறு வலிக்க சிரிப்பதும் என்பதெல்லாம் எப்போதோ முடிந்து போன ஒன்று..

ஆனால் இப்போது ரிஷியை பார்த்தபடி அடிக்கடி சத்தம் போட்டே சிரிக்கிறாள்.. அவளுக்கு அது கொஞ்சம் ஆச்சர்யம்தான்  ஆனால் ரிஷிக்கு இதெல்லாம் தெரியாதே ஆக,

“ஏன் இப்படி சத்தம் போட்டு சிரிக்கிற???” என,

“ஏன் ஏன் சத்தம் போட்டு சிரிச்சா தப்பா???” என்றாள் சிரித்து சிரித்து கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி.

“ஹ்ம்ம் தப்பில்ல.. ஆனா ரீசன் வேணுமில்ல.. எங்க வீட்ல என் அண்ணி ஒருநாள் சத்தமா சிரிச்சதுக்கு வீடே சேர்ந்து அவங்களை ஒருவழி பண்ணிட்டாங்க…” என

“ஓ.. அதுனால தான் நீ உன் வழியைப் பார்த்து கிளம்பி வந்துட்டியா??” என்றவளின் கேள்வியிலும் பார்வையிலும் ஆயிரம் ஆர்த்தங்கள்..    

அர்த்தங்கள் அவரவர்க்கு ஆயிரம் இருக்கும்.. அவையெல்லாம் அர்த்தமாய் இருப்பது வரை நல்லது. அனர்த்தமாய் மாறுகையில் அல்லவா மனம் பதைக்கும்..             

        

           

Advertisement