Advertisement

மது – 14

“இடியட் இடியட்…. வர்றேன்னு ஒருவார்த்தை சொல்றானா.. நான் பாரு இப்படி வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்..” என்று அவளது அலைபேசியையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மதுபாலா..

ரிஷி கிளம்பிவிட்டான் என்பது தெரியும்.. அவளே சொல்லியிருந்தாளே நானே வந்து அழைத்துக்கொள்கிறேன் என்று.. ஆனால் “ரீச்ட்…” என்று ஒரு வார்த்தை.. இல்லை ஒரே ஒரு மெசேஜ் எதுவுமே இதுவரைக்கும் ஒன்றும் சொல்லவில்லை..

ஒருவேளை கிளம்பவில்லையோ என்று தோன்ற, கல்யாணிக்கு அழைத்துக் கேட்டாள்..

“அவன் நேத்தே போயிட்டானே மது.. முகத்தை தூக்கிட்டு வர்றான்…” என்று கல்யாணி சொல்ல,

“சரியான மாடர்ன் துர்வாசர்..” என்றெண்ணிக் கொண்டாள்..

முதல் நாள் இரவு இருந்து அவளுக்கு உறக்கமேயில்லை.. ஒருவித படபடப்பு அவளுள்.. முதல் முறை என்னவோ ரிஷியை அவளே வீட்டிற்கு அழைத்துவிட்டாள், ஆனால் இப்போதோ அவனை எப்படி வரவேற்கவேண்டும், எப்போதும் போல் இருப்பதா, இல்லை ஸ்பெசலாய் எதுவும் செய்யவேண்டுமா அதெல்லாம் அவளுக்கு இன்னமும் தெளியும் பாடில்லை..

“ரிஷி… இவ்வளோ டென்சன் பண்ற நீ…” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள், கடிகாரம் பார்க்க, சரியாய் அவளின் வீட்டு காலிங் பெல்லும் அடிக்க,

‘ரிஷியோ…’ என்று துள்ளிய உள்ளத்தோடு, வேகமாய் சென்று கதவு திறக்க, அவனேதான்.. ரிஷியே தான்..

“ஹாய் மதுபி மேடம்….” என்று கைகளை விரித்து ஆட்டியவன் புன்னகையும் விரிய,

‘எப்படி வந்து நிக்கிறான் பாரு…’ என்று முறைத்தாலும், அவள் இதழ்கள் சிரிக்கவே செய்தது.

காதல் இதுவரைக்கும் இருவரும் உணர்ந்தார்களா தெரியாது.. ஆனால் ‘இவன் என்னோடு இருந்தால்’ என்று அவளும், ‘இவள் என் வாழ்வில் இருந்தால்’ என்று அவனும் பல பல கற்பனைகளை இதுவரை கண்டுவிட்டனர்..

மனதிற்கு பிடித்துவிட்டது, புரிதல் இனி அடுத்து தானே வந்துவிடும், இப்போதே கொஞ்சம் கொஞ்சம் ஓரளவு புரியத் தொடங்கியிருந்தது, இனி அவர்களுக்கான வாழ்வை வாழ்ந்து பார்க்கையில் தான் எதுவும்..

மதுபாலா கதவைத் திறந்தவள் அப்படியே நிற்க, ரிஷியோ “ஹலோ மதுபி.. என்ன இப்படியே நானும் நிற்கனுமா இல்லை அப்படியே கிளம்பி போயிடனுமா???” என,

“ஹா… என்ன என்ன கேட்ட?? எனக்கு காது சரியா கேட்கலை…” என்று லேசாய் காதைத் தேய்த்துக்கொண்டே கதவை இன்னும் திறந்து அவனுக்கு உள்ளே வழிவிட ,

“ஹ்ம்ம்… தட்ஸ் குட்…” என்றபடி உள்ளே வந்தவன், கையில் இருந்த பேக்கை கீழே போட்டுவிட்டு, தொப்பென்று சோபாவில் அமர,

“என்ன சார் கட்டவண்டில வந்தீங்களா…” என்றாள் மதுபாலாவும் அவன் எதிரே அமர்ந்தபடி.

“கிடைச்சிருந்தா அதுலகூட வந்திருப்பேன்.. பட் கிடைக்கல..”

“நீ பண்றதெல்லாம் ஒவ்வொன்னும் வித்தியாசமா பண்ற…” என்ற மதுபாலாவைப் பார்த்தவன்,

“நீ வித்தியாசமான பொண்ணு மதுபி.. அதுதான் உனக்கு எல்லாமே வித்தியாசமா தெரியுது…” என, 

“அடடா…  சரி வந்துட்டேன்னு பார்ஸ்ட் வீட்டுக்கு சொல்லு ரிஷி.. இப்போதான் ஆன்ட்டிக்கிட்ட பேசினேன்..” என்றவள் “டீ ஆர் காப்பி..??” என,

அவளைப் பார்த்தவன் “கம் ஹியர்…” என,

“என்ன ரிஷி..” என்றபடி மதுபாலா அப்படியே நிற்க, “இங்க வா மதுபி முதல்ல…” என்று ரிஷி அழைக்க,

“என்ன ரிஷி…” என்று மது அவனருகே வர,

“இப்படி உட்கார்…” என்று அவன் அருகே தட்டிக் காட்ட, “என்னது இதுலயா…” என்றவள் உட்காரவில்லை.

அவனே ஒற்றை இருக்கையில் தான் அமர்ந்திருந்தான், இதில் அவளும் எப்படி அதில் அமர என்றிருக்க, அவள் அப்படியே நிற்க,

“என்ன மதுபி…” என்றவன், அவளது கரங்களைப் பற்றி அவனே அவனை கொஞ்சம் ஒடுக்கி, தன்னருகே அமர்த்திக்கொள்ள,

“ரிஷி என்ன பண்ற நீ…” என்றவள், கொஞ்சம் சிரமப்பட்டே அமர,

“ஹ்ம்ம் என்கேஜ்மென்ட் முடிஞ்சு போறோமே.. நம்மள செமயா ரிசீவ் பண்ண போறான்னு பார்த்தா, ஹாயா கேட்கிற டீ ஆர் காப்பின்னு.. சரியான மக்கு மதுபி நீ…” என்றவன் அவளது தோள் மீது ஒற்றை கரத்தை போட்டு, அப்படியே இருக்கையில் பின்னே சாய்ந்துகொண்டான்.. கண்களையும் மூடிக்கொண்டான்..

மதுபாலாவிற்கு சுத்தமாய் என்ன செய்கிறான் இவன் என்று புரியவேயில்லை.. கண்கள் மூடி சாய்ந்திருக்கும் அவன் முகத்தை மட்டுமே பார்த்தாள்..

கல்யாணி சொன்னதுபோல் முகத்தை தூக்கி வரவில்லை, மாறாக அதில் ஒருவித தெளிவு, ஒருவித உற்சாகம் மட்டுமே தெரிந்தது.. மௌனமாய் கொஞ்ச நேரம் இருந்தவன், பின் கண்கள் திறக்க, வேகமாய் மதுபாலா தன் பார்வையை விலக்கிக்கொண்டாள்.

அவளுக்கு இப்படி அமர்ந்திருப்பது ஒருமாதிரி லஜ்ஜையாய் இருந்தது.. அவனைத் தொட்டு பேசியதே இல்லை என்று சொல்ல முடியாதுதான்.. ஆனால் அதெல்லாம் வேறு.. இது வேறுவிதமாய் இருக்க,

“ரிஷி பிரஷ் பண்ணிட்டு வா.. டீ போடுறேன்…” என்று மெல்ல நழுவப் போக,

“ம்ம்ச் இரேன்..” என்றவன் “பிரஷ் பண்ணாம கூட டீ குடிக்கலாம்…” என,

“அயே ச்சி… என்ன பழக்கம் இது…” என்று முகத்தை மதுபாலா சுருக்க, ரிஷி அப்படியே சிரித்துவிட்டான்..

“ஹே  என்ன சிரிப்பு..”

“இல்ல.. அப்படியே  நீ மினி கல்யாணிதான்…” என்றவன் இன்னும் சிரிக்க,

“ம்ம்ச் அப்படியெல்லாம் இல்ல.. நீ தான் அப்படியே ஆன்ட்டி மாதிரி.. சம் டைமஸ் ஆன்ட்டி அப்படியே நீ ரியாக்ட் பண்ற போலத்தான் செய்றாங்க..” என,

“ஹ்ம்ம் ஆனா எல்லாரும் சேர்ந்து என்னை டென்சன் பண்ணீட்டீங்க…” என்றவன் “ஓகே லீவ் இட்…” என்று எழப் போக,

“ரிஷி.. கோவமா…” என்று அவனது கரங்களை அவள் பற்றியிருக்க,

“நத்திங் மதுபி லீவ் இட்.. இனி அதெல்லாம் பேசி எதுமில்ல.. இங்க வந்தாச்சு.. இனி ஆக வேண்டியதைப் பார்க்கணும்.. நாளன்னைக்கு ஜாயின் பண்ணனும்.. செட்டாகாது.. தென் திங்க்ஸ் எல்லாம் வாங்கணும்…” என்றபடி ரிஷி எழுந்து நிற்க,

“கோவமான்னு கேட்டா பதில் சொல்லணும் ரிஷி.. நீ பேசுறப்போ நான் இப்படி எழுந்தா நீ என்ன செய்வ??” என்றவள் இன்னும் எழாமல் அப்படியே அமர்ந்திருக்க,

“ஹ்ம்ம் இந்த சிக்ஸ் மன்த்ஸ்.. நான் எவ்வளோ டென்சன்ல அங்க இருந்தேன் தெரியுமா மதுபி.. இங்க என்ன நடந்தது எனக்கு சுத்தமா தெரியாது.. பட் இங்க வரணும்னு ஒரு எண்ணம் வந்தப்புறம் அங்க எனக்கு எதுவுமே செட்டாகலை.. எல்லாரும் பேசினப்போ வா வா சொன்னீங்க..

அது அவ்வளோ ஈசியில்லன்னு எனக்கு நல்லாத் தெரியும்.. ஆனாலும் ட்ரை பண்ணேன்.. கிட்டத்தட்ட அங்க வாங்கின செலரில முக்காவாசி திருப்பி கட்டி ரிலீவ் ஆகி வந்திருக்கேன்.. இங்க ஜாயின் பண்றேன்னு சொன்னதுனால மட்டும் தான் அது.. அதுவுமே எய்ட் மன்த்ஸ்ல முடிக்கவேண்டிய ப்ராஜக்ட்ட பைவ் மன்த்ஸ்ல முடிச்சு கொடுத்துட்டு வந்தேன்.. மனி ப்ராப்ளம் இல்லை.. பட் மைன்ட்.. நீ பேசுறதெல்லாம் பேசுவ ஆனா நீ இங்க வந்தப்புறம் முடிவு சொல்றேன் சொல்வ..

இதுக்கு நடுவுல நம்மைப் பத்தி வீட்ல என்ன பேசுறது, எப்படி பேசுறது இதெல்லாம் ஒரு டென்சன்.. யாராவது ஒருத்தாராவது என்னன்னு சொல்லியிருந்தா நானும் கொஞ்சமே கொஞ்சம் ரிலாக்ஸா இருந்திருப்பேனே…. இங்க வந்தப்புறமோ எல்லாரும் கேசுவலா இருக்கீங்க…” என்று இத்தனை நாள் மனதில் அடைத்து வைத்தது எல்லாம் ரிஷி சொல்லிட,

மதுக்கு ‘ஐயோடா…’ என்றானது.. நிஜம்தானே..

ரிஷி அங்கிருந்து பேசுகையில் எல்லாம் உற்சாகமாய்தான் பேசுவான்.. இப்போது பேசியதில் ஒன்றைக்கூட அவன் மதுபாலாவிடம் அப்போது காட்டியதில்லை.. காட்டியிருந்தால் மட்டும் அவள் என்ன செய்வாள்.. இங்கே அவனது குடும்பத்திற்கும் அவனுக்கும் இடையில் அவளல்லவா மாட்டியிருந்தாள்..

இருந்தாலும் இங்கே அவளுக்கு தைரியம் சொல்லவென ஆட்கள் இருந்தனர்.. அங்கே ரிஷிக்கு யார் இருந்தார்கள்??

அப்படியே சூழல் மாறியல்லவா போனது.. இங்கே அவளுக்கு அவன் வீட்டினர் அனைவருமே இருந்தனர்.. அங்கேயோ அவன் யாருமேயில்லாது இருந்தான்.. யாருமில்லாமல் இருப்பது என்னவென்று அவளுக்கு நன்றாகவேத் தெரியுமே..

அதிலும் ரிஷி போல் ஒருவனுக்கு அது எத்தனை டென்சனைக் கொடுத்திருக்கும் என்பது இப்போதுதான் அவளுக்கு மிக மிக நன்றாகவே புரிய,

“சாரி ரிஷி…” என்றாள் அவளும் எழுந்து..

“ஹே.. மதுபி… லீவ் இட் சொன்னேன்ல.. இது நீ சாரி கேட்க சொல்லல… விட்ரு…” என்றவன், திரும்ப,

“ரிஷி…” என்றவள் இன்னும் அவன் கரத்தினை விடாது பற்றியிருக்க,  “பிரஷ் பண்ண போறேன் மதுபி…” என்று சிரித்தவனை, தலையை லேசாய் சரித்துப் பார்த்தவள்,

“உன்னை கொஞ்ச நேரம் முன்னாடித்தான் மாடர்ன் துர்வாசர்னு நினைச்சேன்…” என,

“என்னது…” என்று திரும்பக்கேட்டவன், அவள் சொன்னது புரிந்ததும் “ஹா ஹா…” என்று அவளைப் போல சத்தம் போட்டு சிரிக்க,

“ஹ்ம்ம்… எல்லாமே என்னாலதான..” என்று மதுபாலா சொல்ல,

“நோ நோ…” என்று மறுத்தவன், “நானுமே கொஞ்சம் பிரச்சனையான ஆளுன்னு இப்போதான் எனக்கு புரியுது…” என,

“பட் இனிமே இப்படியெல்லாம் நடக்காது ஓகே வா…” என்று மதுபாலா சொல்ல,

“இனி என்ன நடந்தாலும் அதை ஹேண்டில் பண்ற மைன்ட் செட்ல வந்துட்டேன் மதுபி…” என்றவன்,  அவளது இரு கரங்களை பற்றி தன்னருகே இழுத்து நிறுத்தி,

“பட் நீ மட்டும் என் கூட எப்பவுமே இருக்கனும்.. உன்னைப் பார்த்து.. உன்னை நினைச்சு நான் நிறைய நிறைய கத்துக்கிட்டேன்.. லைப்ல இப்படித்தான் சிலது இருக்கும்.. சிலது இருக்கணும்னு உணர்ந்துக்கிட்டேன்..” என்று உருக்கமாய் சொல்ல,

அவனது நெருக்கமும், அவனது அந்த பார்வையும், அவனது அங்க ஸ்பரிசமும் அவளுள் ஒரு இளக்கம் கொடுக்க, தானாகவே மதுபாலா அவனை இன்னும் ஒட்டி நிற்க, கையைப் பற்றியிருந்தவன் கரங்களோ லேசாய் அவளது இடையை வழைத்து அவனோடு சேர்த்து அணைத்துக்கொள்ள,

மதுபாலாவிற்கு தன்னுளே ஓடும் ஒரு அதிர்வையும், ஒரு திடுக்கிடலையும் நன்கு உணர முடிந்தாலும், அவனிடம் இருந்து விலகும் எண்ணமில்லை.. மாறாய் அவன் கரங்களுக்குள் தான் மிக மிக சுகமாய், பாதுகாப்பாய் இருப்பதாய் ஓர் உணர்வு தோன்ற,

அன்று அவன் சுவிஸ் கிளம்புகையில், கடைசியாய் அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டது நினைவு வர, லேசாய் மேலெழும்பி மதுபாலா அவன் கன்னத்தில் இதழ் பதிக்க,

‘வாவ்…’ என்று சொல்லாமல் கண்களை மட்டும் விரித்தவன்,

“நான் இன்னும் பிரஷ் பண்ணலையே…” என்று முகத்தை சுருக்க,

“சோ வாட்…!!!!” என்றாள் கொஞ்சம் கெத்தாய்..

“அட பார்ஸ்ட் கிஸ் டர்டி கிஸ்ஸா வேண்டாமே…” என,

“ச்சி போடா…” என்று அவனைப் பிடித்து தள்ளியவள், “அழுக்கு பையா…” என்று சொல்லியபடி கிட்சனுள் சென்றுவிட, மறுபடியும் ரிஷியின் பெரிய சிரிப்பு அந்த வீட்டை நிறைக்க,

மதுபாலாவின் இதயமோ தாறுமாறாய் துடித்தாலும், அவளது மனம் ஒருவித நிறைவில் இருந்தது..

அடுத்தடுத்து நேரம் ஓட, ரிஷி குளித்து முடித்து வருவதற்குள், கல்யாணியோடு இரண்டு முறை பேசிவிட்டாள் மதுபாலா..

“ரிஷி பஸ் விட்டு இறங்கவுமே போன் பண்ணிட்டான் மது…” என்றவர், “நம்ம கெஸ்ட் ஹவுசே இருக்கு.. ஆனா வேற வீடு பார்க்க போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கான்.. நீ கொஞ்சம் சொல்லேன்…” என,

“ஆன்ட்டி.. நோ நோ இதெல்லாம் நான் சொல்ல முடியாது.. ரிஷி விருப்பம் தான்.. உங்க புள்ள நீங்க சொல்லுங்க…” என்று கழண்டு கொண்டாள்..

மதுபாலா ஒரு விசயத்தில் மிக மிக தெளிவாய் இருந்தாள்.. எந்த காரணம் கொண்டும் ரிஷிக்கும் அவன் வீட்டினருக்கும் இடையில் அவள் நிற்க கூடாது என்பது..

எதுவாக இருந்தாலும் அவரவர்கள் நேராய் பேசிக்கொள்ளட்டும்..

அவளுக்கு ‘யப்பாடி..’ என்றிருந்தது அந்த கொஞ்ச நாட்களில்.. ரிஷியின் வீட்டினர் இங்கே இருக்க, அவனோ அலைப்பேசியில் பேசிக்கொண்டு இருக்க,

வீட்டினரோ ‘அவன வர சொல் வர சொல்..’ என்று இவளிடம் பொறுப்பைத் தள்ள,

அவனோ ‘நீ என் வாழ்வில் என்னோடு இருந்தால் தான் வருவேன்..’ என்றும் சொல்லிட, அப்போதே முடிவு செய்துவிட்டாள், இனி என்னவாகினும், அப்பா பிள்ளை, இல்லை அம்மா பிள்ளை பேசிக்கொள்ளட்டும் என்று..

ரிஷி திரும்ப வருகிறான் என்பது முடிவான பின்னே கல்யாணியிடம் கூட இதை சொல்லிவிட்டாள்.

“ஆன்ட்டி இனி நீங்களாச்சு உங்க மகனாச்சு..” என்று..

அப்போதெல்லாம் சிரித்த கல்யாணி, இப்போதோ அவனிடம் சொல்லேன் என, திண்ணமாய் மறுத்துவிட்டாள்.

“அட என்ன மதுபாலா நீ.. நமக்குன்னு சொந்தமா வீடிருக்கப்போ இவன் ஏன் தனியா தங்கணும்.. அங்க சமைக்க எல்லாம் ஆள் இருக்குத் தெரியுமா..” என்றவர் மகன் சிரமப்படக்கூடாது என்று நினைத்துக் கூற,

“ஆன்ட்டி.. இதை நீங்களே சொல்லிருக்கலாமே..” என,

“அது நான் கொஞ்சம் திட்டிட்டேன் அவனை.. அதான்.. நீயே பேசு மதுபாலா..” என்றவர் வைத்துவிட,

‘நல்ல அம்மா நல்ல பையன்..’ என்று சொல்லிக்கொண்டவள், ரிஷி வந்ததும் அவன் முன்னே டீயை நீட்ட,

“யார்க்கிட்ட பேசிட்டு இருந்த மதுபி…” என்றவன், ஒரு ஜன்னல் அருகே நின்று, அவளையும் தன்னருகே நிறுத்தி  வெளியே பார்த்துக்கொண்டே அவளிடம் கேட்க,

“ஆன்ட்டி தான்…” என்றவள், சுருக்கமாய் விசயத்தை கூற,

“ம்ம்ம்…” என்றவன் “நீ என்ன சொல்ற???” என,

“இதுல நான் என்ன சொல்ல இருக்கு.. இது முழுக்க முழுக்க உன்னோட முடிவு தான் ரிஷி.. நான் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல…” என்று தோளைக் குலுக்கினாள் மதுபாலா..

“இப்போதான் பழைய மதுபாலா திரும்ப வந்திருக்கா.. ஜஸ்ட் லைக் தட்னு இருக்க மதுபி… எனக்கு பிடிச்ச மதுபி.. என்னை இம்ப்ரெஸ் பண்ண மதுபி.. என்னடா இந்த பொண்ணு இப்படி இருக்கான்னு பார்க்க வைச்ச மதுபி…” என்று ரிஷி சொல்லிக்கொண்டே போக,

“ஆ….. போதும் போதும்.. நீ இப்படியெல்லாம் பேசினா ஐ டோனோ ஹவ் டூ ரியாக்ட்..” என்று பாவமாய் மதுபாலா திரும்பி நின்று முகத்தை வைக்க,

“அடிப்பாவி.. நீ எப்படி பேசினாலும் மசியமாட்டியா???” என்று ரிஷி கேட்க,

“ஹா ஹா… நீ என்னை பேசியா கரக்ட் பண்ண.. எல்லாமே தானா நடந்தது அவ்வளோதான்.. பட் சம்திங்க்ஸ் நீ சொல்லி கேட்க நல்லாருக்கு ரிஷி.. புதுசா இருக்கு.. ஐ லைக் தட்..” என்றவள்,

“சரி சரி.. ஆன்ட்டி சொன்ன விசயம் என்ன??” என்று திரும்ப ஆரம்பிக்க,

“அதானே பார்த்தேன்.. என் அம்மா உன்னை நல்லா ட்ரைன் பண்ணிட்டாங்க.. உன் இஷ்டம் உன் இஷ்டம் சொல்லி லாஸ்ட்ல நீங்க சொல்றத செய்ய வைப்பீங்க…” என,

“அட நான் ஒண்ணுமே சொல்லலைப்பா…” என்றவள் “என்னை கேட்டா நீ இங்கக்கூட இருன்னு சொல்வேன்…” என்றவள் லேசாய் சிரித்தபடி அவனை நிமிர்ந்து பார்க்க,

“அப்போ நீயே எங்க அப்பாக்கிட்ட இதை சொல்லிடு.. ரிஷி ஏன் அங்கிள் தனியா எங்கயும் இருக்கணும்.. என்கூட இருக்கட்டும்.. நானே அவனுக்கு சாப்பாடு எல்லாம் செஞ்சு கொடுத்திடுறேன்னு..” என்று சிரிக்காமல் சொன்னவனை முறைத்தவள்,

“போடா டேய்… நீ எங்க இருக்கணுமோ இரு..” என்றுவிட,

“இப்போ கொஞ்சம் இப்படி இறுக்கிக்கிறேன்…” என்றவன், காலையில் போல் அல்லாமல் இப்போது இன்னும் இறுக்கமாய் அவளைக் கட்டிக்கொள்ள, 

“நீ பிரஷ் பண்ணிட்ட தானே…” என்று மதுபாலா நக்கலடிக்க,

“அடிப்பாவி நீ மக்கு மதுபி இல்லை….. பட் நானும் ரொம்ப எல்லாம் துர்வாசர் இல்லை…” என்றவன், லேசாய் அவள் இதழ் தொட,

“தள்ளிப் போ.. டீ ஸ்மெல் தான் வருது…” என்று அவனைத் தள்ளியவள், தள்ளி நிற்க,

“நீ போட்டது தானே…” என்றவன் அவளை இன்னும் ஒட்டிக்கொண்டு நிற்க,

“போதும் ரிஷி.. என்கேஜ் ஆச்சுன்னா இப்படியெல்லாம் செய்யனுமா??” என்று மதுபாலா கூச்சத்தில் விலகிப் போக,

“நீ என்னை சுதல்ல விடுறன்னு மட்டும் நல்லா தெரியுது…” என்று சிரித்தவன், பிடிவாதமாகவே அவளுக்கு முத்தமொன்றை கொடுத்துவிட்டு விலக,

முகத்தை சுருக்கி லேசாய் முறைத்து நின்றாலும், உள்ளுக்குள்ளே ரசித்துக்கொண்டு தான் இருந்தாள் மதுபாலா..

“அப்படியே பிடிக்காத மாதிரியே நடிக்கிறது…” என்றவன், வெளியே கிளம்பத் தயாராக,

“சாப்பிட்டு போ ரிஷி…” என்றபடி மதுபாலா பின்னோடு வர,

“நோ மதுபி.. என் ஃபிரன்ட் மனோகர் சொல்லிருக்கேன்ல.. அவன் வெய்ட் பண்ணுவான்.. இன்னிக்கு குள்ள எப்படியும் ஒரு வீடு தேடி பிடிச்சாகணும்.. நாளைக்கு நம்ம ஷாப்பிங் பண்ண சரியா இருக்கும்….” என்று வேகமாய் ஒரு ப்ளான் சொன்னவன்,

“நான் நைட் தான் வருவேன்..” என்று சொல்லி, மீண்டும் அவள் கன்னங்களை தன் இதழ்களால் முகர்ந்துவிட்டு செல்ல, கதவருகே நின்றவள், சந்தோசமாய் கையசைக்க,

போன முறை அவன் வந்து சென்ற போது இருந்த மன நிலைக்கும், இப்போது இருக்கும் மகிழ்விற்கும் எத்தனை வித்தியாசம் என்பது அவளால் நன்கு உணர முடிந்தது..

ரிஷி மனோகரைப் பார்க்க போனவனோ, முதலில் அவனிடம் ஒரு மன்னிப்பை வேண்ட, “டேய் விட்ரா விட்ரா…” என்றவன்,

“உனக்கு தான் இங்கே வீடிருக்கே பின்ன ஏன் வீடு தேடுற…” என,

“கொஞ்சம் தனியா இருந்து பார்ப்போமே டா…” என்று சொல்ல,

“என்னவோ உன் அப்பா என்னை பிடிச்சு பேசாம இருந்தா சரி…” என்றபடி ஏற்கனவே தன் நண்பர்கள் மூலம் விசாரித்து வைத்திருந்த சில பல வீடுகளை கூட்டி சென்று காட்ட,

அதில் ரிஷி தன் அலுவலகத்திற்கு பக்கம் போல், ஒரு வீட்டை தேர்வு செய்து, ஹவுஸ் ஓனரிடம் பேசிவிட்டு, வெளிவர, சரியாய் ஸ்ரீநிவாஸ் அழைத்தான்..

“அண்ணா.. இப்போதான் வீடு பார்த்தேன்…” என்று ரிஷி பேச, அடுத்து ஸ்ரீநிவாஸ் என்ன சொன்னானோ,

“கன்னியாகுமரிக்கா..?? மதுபியா?? ஏன்??”  என்று நெற்றியை சுருக்கியவன்,

“இப்போதான் தான் வந்து கொஞ்சம் எல்லாம் செட் பண்ணனும்னு நினைச்சேன்.. அதுக்குள்ள ஏன் நீயும் அப்பாவும் இப்படி பண்றீங்க.. என்னால இதை நிச்சயமா மதுபிக்கிட்ட பேச முடியாது.. நீங்களும் யாரும் பேசக்கூடாது…” என்றவன் கோவமாய் அழைப்பைத் துண்டித்து விட்டான்..                                

  

  

                                                   

                                       

 

Advertisement