Advertisement

மது – 12

“திஸ் இஸ் நாட் ஃபேர் மதுபி…” என்று அவளது கரங்களை விடாது இறுகப் பற்றியிருந்தான் ரிஷி..

அவர்களின் நிச்சயம் முடிந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கும் மேலாகியிருந்தது.. வந்திருந்த நெருங்கிய உறவினர்கள் எல்லாம் உண்டுவிட்டு இவர்களை வாழ்த்திவிட்டு கிளம்பியிருந்தார்கள்.

மதுபாலாவும் அடுத்து அப்படியே கிளம்பி நிற்க, அவளை கொண்டு போய் விடவென்று ஸ்ரீநிவாஸ், மைதிலி தயாராய் இருந்தனர். ஆனால் ரிஷிநித்யன் தான் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு இருந்தான்.

நிச்சயம் நடக்கையில், ரிஷியின் பக்கத்து ஆட்களில் ஒருசிலர் “பொண்ணு எந்தப்பக்கம்.. யாருமில்லையா???” என்று அரசல் புரசலாய் விசாரிக்க,

சாம்பசிவமோ பெருமையாகவே மதுபாலா கன்னியாகுமரியில் இன்னார் வீட்டுப் பெண் என்று சொல்ல, அது மதுபாலாவிற்கு கொஞ்சம் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சைலேந்திரன் மட்டுமே அவள் பக்கம் என்பதற்கு வந்திருந்தார்..

“நீங்க எப்படி அங்க போய் சம்பந்தம் பேசினீங்க??? ஆச்சர்யமா இருக்கே.. பொண்ணுக்கு நாளைக்கு பின்ன எதுவும் செய்யனும்னா யார் செய்வா??” என்று வந்திருந்தவர்கள் வாய் மெல்லத் துவங்க,

“எங்களுக்கு பிடிச்சு போச்சு.. அதைவிட என்ன வேணும்.. ஏன் நான் செய்ய மாட்டேனா??? இதோ மைதிலி அப்பா அம்மா வெளிநாட்டு டூர் போயிட்டாங்க நான் தானே அவளைப் பார்த்துக்கிறேன்…” என்று கல்யாணி பேசிட,

அனைத்தையும் மௌனமாகவே மதுபாலா பார்த்துகொண்டு இருக்க, “மதுபி என்ன சைலெண்டாகிட்ட??” என்று ரிஷி கேட்க,

“எவ்வளோ கேசுவலா சொல்லிட்டாங்க..” என்றாள் விழிகளை விரித்து..

“நீ என்ன நினைக்கிற மதுபி என் அப்பா அண்ணன் எல்லாம் நீ சொன்னதை மட்டும் கேட்டு எல்லாம் பண்றாங்கன்னா???” என்று ரிஷி கேட்க,

“இல்.. அப்போ.. ஆனா ரிஷி….” என்று மதுபாலா குழம்ப,

“இப்போ எதுவும் பேசவேணாம். எல்லாரும் கிளம்பட்டும்…” என்று ரிஷி சொல்லிட,

சைலேந்திரன் வந்தவரோ, மதுபாலாவின் அருகே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தவர்,

“மது.. ரிஷி நல்ல செலக்சன்… நல்ல ஃபேமிலியும் கூட.. ஓபன் மைண்டா பாரு.. நீ ஜட்ஜ்மென்டல் இல்லைன்னு எனக்கும் தெரியும்.. ஆனா சொல்லவேண்டியது இப்போ என் கடமை.. சில விஷயங்கள் உன்னால ஏத்துக்க முடியலைன்னாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் தப்பில்லை.. ஃபேமிலின்னு வந்திட்டா நமக்கான பொறுப்புகள் நிறைய வந்திடும்..” என்று சொல்ல,

“ம்ம்…” என்று அமைதியாய் தலையை மட்டும் ஆட்டினாள்.

“நீ எதை திங் பண்றன்னு நல்லா தெரியுது.. அவங்களுக்கு உன்னை பத்தி உன் ஃபேமிலி பத்தி உனக்கு தெரிஞ்சதை விட, நல்லா தெரியும்.. எஸ்.. எல்லாமே விசாரிச்சு தான் பண்றாங்க…” என,

“நான்தான் முன்னாடியே சொன்னேனே எல்லாம்…” என்றாள் மதுபாலா.

“உனக்கே முழுசா தெரியாதே.. பின்ன என்ன சொல்லிருப்ப…??” என்று சைலேந்திரன் சொல்லும் போதே,

கல்யாணி “இப்போ எதுவும் பேசவேணாம்.. மது எதுவா இருந்தாலும் எல்லாரும் போகவும் என்கிட்ட கேளு நான் சொல்றேன்…” என்றிட அதற்குமேல் யாரும் எதுவும் பேசவில்லை என்றாலும்,

மதுபாலாவின் மனதிலோ ‘என்னை பற்றி விசாரித்தார்களா?? ஆனால் நான் என்னைப் பற்றி சொன்னதை விட யார் சொல்லியிருக்க போகிறார்கள்.. யாருமேயில்லை என்று தெரிந்தபின்னே யாரைப் பற்றி விசாரித்தார்கள்…’ என்று ஒரு எண்ணம் எழுந்துகொண்டே இருக்க,

எப்போதடா எல்லாரும் கிளம்புவர் என்றாகிவிட்டது அவளுக்கு.. ரிஷி அவளது முகத்தை வைத்தே ஓரளவு அவளது எண்ணத்தை யூகித்து,

“மதுபி.. எதுவும் திங் பண்ணாத.. நீ கன்பியூஸ் ஆக அவசியமே இல்லை.. எதுவா இருந்தாலும்.. என்னவா இருந்தாலும் நான் இருக்கேன்…” என்று அவள் கரங்களை இருக்கமாய் பற்றிட,

அவனைப் பார்த்து சோம்பலாய் ஒரு புன்னகை சிந்தியவள் “ம்ம் ஓகே…” என்று தோள்களை குலுக்கி, மற்றொரு கரத்தால்,   பழக்க தோசத்தில் விரித்து விட்ட கேசத்தை கோதிவிட, கைகள் சென்றிட,

“ஏய்…” என்று வேகமாய் ரிஷி அவளது இன்னொரு கரத்தையும் பிடித்து நிறுத்த,

அப்போது தான் அவள் பட்டுசேலை கட்டி, இடைக்கு கீழ் வரை ஜடை பின்னி சரம் சரமாய் பூ வைத்திருப்பது நினைவில் வர  “ஸ்.. மறந்தே போயிட்டேன்…” என்று ஒருமுறை முகத்தை சுளித்தவள், பின் ஒரு சிரிப்பினூடே அமர்ந்திருந்தாள்.

“மதுபி  யூ ஆர் டிப்ரன்ட் ஐ க்னோ.. பட் இந்த கெட்டப்ல ஆளே அடிச்சுத் தூக்குற….” என்று ரிஷி அவளருகே சொல்ல,

ஸ்ரீநிவாஸ் அங்க வந்தவன் “ரிஷி கொஞ்சம் பேசாம இரு.. எல்லாரும் பார்க்கிறாங்கடா…” என,

‘ஷ்.. இவனொருத்தன்.. ரூல்ஸ் பேசிட்டு எப்பவுமே…’ என்றெண்ணி அவனை முறைக்க, ஸ்ரீநிவாஸ் அப்படியே விறைப்பாகவே நிற்க

‘இவனெல்லாம் என்ன கல்யாணம் பண்ணி…’ என்று ரிஷி அவனுக்குள்ளேயே நினைத்துக்கொண்டான்.

மதுபாலா.. அவளது திருமணம் பற்றிய எண்ணங்கள் அவளுக்கு இதுநாள் வரைக்கும் இருந்ததில்லை. அதற்காக எதன்மீதும் பற்றில்லை என்றில்லை ஆனால் அத்தனை பிடித்தமாகவும் எதுவும் இருந்ததாய் அவளுக்குத் தெரியவில்லை..

அவளது அம்மா இருந்தவரையில் மதுபாலாவின் திருமணம் பற்றியெல்லாம் அவர் பேசியதேயில்லை.. சரியாய் இருக்கவேண்டும், நமது எண்ணங்கள் சரியாய் இருந்திடவேண்டும் என்பது மட்டுமே அவர் அடிக்கடி சொல்லும் விசயம்..

அவர் இல்லையென்றான பின்னே, மதுபாலாவிற்கு வாழ்வு முற்றிலும் மாறிவிட்டது.. தனிமையை விரும்பியே ஏற்றுக்கொண்டாள்.. எதிர்காலம் பற்றி  எண்ணங்கள் இல்லை என்று சொல்லிட முடியாது.. ஆனாலும் அதன்பேரில் ஓர் அலுப்பு இருந்தது நிஜம்..

ஆனால் நினைத்தே பார்க்காத ஒரு நேரத்தில் ரிஷி வந்தான்.. பின் அவனது குடும்பம் வந்தது.. இன்றோ அவர்களின் குடும்பத்தில் அவளும் ஒருத்தி என்று நிச்சயம் செய்துகொண்டார்கள்.

யாரை கேட்டு எதுவும் நடக்கவில்லை.. யார் சொல்லியும் எதுவும் நிற்கவில்லை.. இதுதான் நடக்கவேண்டும் என்றிருக்கையில் அதன்படி அதுவே அனைத்தும் நடந்தேறியது..

ரிஷிக்கே இன்னமும் ஆச்சர்யம் தான் எப்படி தன் வீட்டில் மதுபாலாவை ஏற்றுக்கொண்டார்கள் என்று.. முதலில் அவன் வீட்டை விட்டு போனதை பற்றிகூட இப்போது வரைக்கும் இன்னமும் ஒருவார்த்தை பேசவில்லை.. அவன் பேசும்போதெல்லாம்

“கிளம்பி வா…” என்றுமட்டுமே சொன்னார்கள்.. வந்தபின்னோ உடனே நிச்சயம் என்றார்கள்..

எல்லாம் சரிதான் ஆனாலும் அவனுக்குமே மனதில் ஒருவித குழப்பம், ஒருவித யோசனை, இருந்துகொண்டே இருந்தது.. என்ன இருந்தாலும் இந்த நாள் ஸ்பெஷல் இல்லையா.. அதற்காகவே வேறெதையும் நினைக்காது மனதில் சந்தோசத்தை மட்டும் நிறுத்திக்கொண்டான். மதுபாலாவிடமும் அதையே சொல்ல, அவளுமே சிரித்த முகமாய் தான் எல்லாரிடமும் பேசினாள்.

கல்யாணியும் மைதிலியும் ஒருவர் மாற்றி ஒருவர் மதுபாலா அருகிலேயே இருக்க, வந்திருந்த உறவினர்களை யாரும் தனியாக அவளோடு பேசிட இவர்கள் இருவரும் விடவில்லை.

எதற்கு தேவையில்லாத பேச்சு, அடுத்து பல கேள்விகள் பிறக்கும்.. என்ன இருந்தாலும், எப்படி இருந்தாலும், மதுபாலா யாராக இருந்தாலும், அவள் அவர்கள் வீட்டிற்கு மருமகளாய் வரப்போகிறவள்.. ஆக அவளது கௌரவம் காப்பது எங்களது கடமை என்று பொறுப்பாய் அனைத்தையும் செய்தனர்…

ஒருவழியாய் அவர்களின் நிச்சயம் முடிந்து வந்திருந்தவர்கள் வாழ்த்தி விடைப்பெற, சைலேந்திரனும் அவரது நண்பர் ஒருவரை காணப் போகிறேன் என்று கிளம்பிவிட்டார்..

ரிஷி என்னவோ மதுபாலாவோடு பேசிக்கொண்டு இருக்க, கல்யாணியோ “மது நீ எத்தனை மணிக்கு கிளம்பனும்…” என்றார்.

“என்னது மதுபி கிளம்பனுமா??” என்று ரிஷி பார்க்க,

“ஆமா ரிஷி…” என்றவளோ “இப்போ கொஞ்ச நேரத்துல கிளம்பினா கூட சரியா இருக்கும் ஆன்ட்டி…” என,

“சரிம்மா..” என்றவர் “மைதிலி போ எல்லாம் எடுத்து வை.. நீயும் ஸ்ரீனியும் தானே கூட போகணும்..” என்று மைதிலியிடம் சொல்ல,

“அதெல்லாம் வேணாம் ஆன்ட்டி.. நானே போயிப்பேன்..” என்று மதுபாலா மறுத்தாள்..

“அதெல்லாம் வேணாம் மதுபாலா.. ஸ்ரீனியும் மைதிலியும் உன்னோட வரட்டும்.. தனியா இனிமே எங்கயும் போகவேணாம்…” என்று சாம்பசிவம் சொல்ல, மறுப்பேச்சே கேட்காமல் சரி என்று தலையை வேகமாய் ஆட்டினாள் மதுபாலா..

அவளுக்கு இதெல்லாம் புதிதாய் இருந்தாலும் மனதிற்கு பிடித்தமாய் இருந்தது.. ஆனால் ரிஷியோ முகத்தை தூக்கி நின்றிருந்தான்..

“உன்கிட்ட பேசணும் மேல வா…” என,

“இரு ரிஷி…” என்று மதுபாலா நிற்க, 

சாம்பசிவம் “மதுபாலா…” என்று அழைத்தவர், அவள் பார்த்ததும், அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்து எல்லாம் சொன்னார்..

மதுவின் அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள் என்று அவளுக்கு இப்போது வரைக்கும் தெரியாது.. அவள் யாரிடமும் கேட்டதுமில்லை.. மதுபாலாவின் அம்மாவும் சொன்னதுமில்லை. இது தான் விஷயம் என்று தெரிந்ததும் என்றுமே பார்த்து பேசியிறாத, அத்தனை ஏன் இத்தனை நாள் நினைத்துக் கூட பார்த்திறாத அந்த அப்பாவின் மீது அவளுக்கு சிறு கோபமும் கூட எட்டிப்பார்க்க,

இப்போது நினைத்தாலும் அவளது அம்மாவை நினைத்து பெருமையாகவே இருந்தது.. நீயும் வேண்டாம் உன் பணமும் வேண்டாம் என்றல்லவா வந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டாள்..

மதுபாலா எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, “மது.. உன்னை கேட்காம நாங்க விசாரிச்சோம்னு நினைக்காத.. இது இப்போ இல்லை.. நாங்க உன் வீட்ல இருக்கப்போவே அப்போவே விசாரிச்சது…” என்று கல்யாணி சொல்ல,

“அப்.. அப்போ ஏன் என்கிட்டே சொல்லலை…” என்றாள் வேகமாய்..

“சொல்லக்கூடாதுன்னு இல்லை மதுபாலா.. நீயே அதெல்லாம் பெருசா நினைக்கலை.. இப்போவும் சொன்னதுக்கு காரணம்.. இனிமேலும் நீ எதுவும் தெரியாம இருக்கக்கூடாதுன்னு தான்…”   என்றார் சாம்பசிவம்..

மதுபாலாக்கு கல்யாணியோடு இயல்பாய் பொருந்த முடிந்த அளவு, சாம்பசிவத்தோடு சரளமாய் பேச வந்திடவில்லை.. அவருமே ஒரு எல்லையில் தான் நிற்பார்.. ஆனால் ஒன்றுமட்டும் அவளுக்குப் புரிந்தது மைதிலியோடு எப்படி இருக்கிறாரோ அப்படியே அவளிடமும் பேசுகிறார்..

மைதிலியும் சொல்லியிருந்தாள், “மாமா எப்போ எப்படின்னு சொல்ல முடியாது மது.. ஆக நம்ம கொஞ்சம் தள்ளி நிக்கிறதே நல்லது..” என்று..

சரி அதை தான் அவரும் எதிர்பார்க்கிறார் என்றால் அப்படியே இருந்திடலாம் என்று மதுபாலா இலகுவாய் அதை எடுத்துகொள்ள, ரிஷி அவன் குடும்பத்தைப் பற்றி சொன்ன விஷயங்கள் எல்லாம் அவளுக்கு ஒன்றும் பெரிதாகவே தெரியவில்லை..

அவளுக்கு அத்தை மாமா என்றெல்லாம் இன்னும் சொல்ல வரவில்லை.. கல்யாணி கூட அவ்வபோது சொல்லிவிட்டார் “என்ன இப்படியே சொல்ற..” என்று, பதிலுக்கு ஒரு சிரிப்பை மட்டும் கொடுத்துவிட்டாள், ஆனால் அங்கிள் ஆன்ட்டி என்று அழைப்பதை மட்டும் அவளால் விட முடியாவில்லை..

ஸ்ரீநிவாஸ் அண்ணன்.. மைதிலி அக்கா..

“அடிப்பாவி இப்படி எங்கள அண்ணன் தங்கச்சியா மாத்திட்டியே…” என்று மைதிலி கூட சிரித்தாள்.

“எனக்கு இப்படித்தான் க்கா கூப்பிட வருது..” என்றவளுக்கு மனதில் ஒரு தயக்கம்..

எதையும் அப்படியே உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை ரிஷி அங்கே இல்லாமல் இருந்தது கூட காரணமாய் இருக்கலாம்..

ரிஷி வீட்டினரிடம் சரியென்று சொல்லிவிட்டு, அவனிடம் “எதுவென்றாலும் நீ இங்கே வந்த பிறகு தான்..” என்று சொன்னாலும் கூட, அவளால் ரிஷி இல்லாமல் ஒன்றும் முடியவில்லை தான்..

காரணம் கல்யாணி.. பேச்சுக்கு பேச்சு அவரின் பேச்சில் ரிஷி இருப்பான்.. ரிஷியைப் பற்றி அவளாய் தெரிந்துகொண்டதை விட, கல்யாணி மூலமாய் அறிந்துகொண்டது தான் நிறைய.

ஒருநாள் பொறுக்காமல் கேட்டேவிட்டாள் “நீங்களாவது அவன்கிட்ட கொஞ்சம் பேசியிருக்கலாமே ஆன்ட்டி…” என்று..

அவரும் தான் என்ன சொல்லிட முடியும்.. ஆனாலும் சொன்னார் “ரிஷி மட்டும் இங்க வந்திடட்டும் மதுபாலா.. அவனுக்கு என்ன பிடிக்குமோ அப்படி இருக்கட்டும்.. நாங்க யாரும் எதுவும் சொல்லவே மாட்டோம்..” என்று,

அதைகேட்டு மதுபாலா சத்தமாய் சிரிக்க, அவரோ ஏன் சிரிக்கிறாய் என்று பார்க்க,

“நீங்க சொல்றது வச்சா குடும்பி, எடுத்தா மொட்டைன்னு இருக்கு ஆன்ட்டி.. கண்டிப்பா அவனோட லைப்ல உங்களுக்கான இம்பாக்ட் இருக்கணும்.. அவனுமே அதை எதிர்பார்ப்பான்.. இங்க இருந்த நாள்ல அவன் ஒவ்வொரு விஷயத்துலயும் உங்களை எல்லாம் தேடினான்… கண்டிப்பா அவனுக்குள்ள நீங்க எல்லாருமே இருக்கீங்க….” என,

“ஹ்ம்ம் எது எப்படியோ இனிமேல் என் பசங்க வாழ்க்கை இனிமேல் நல்லபடியா இருக்கணும்…” என்றவர் அடுத்து வந்த நாட்களில் ஒவ்வொரு செயலிலும் அவரது மன விருப்பத்தை காட்டியும் வந்தார்..

ரிஷிக்கு வீட்டிற்கு வந்ததுமே அவன் பேச நினைத்தது மைதிலியோடு தான்.. என்னவோ அவள் தற்கொலை முயற்சி செய்ததன் காரணம் அவனும்தானோ என்று இருந்தது.. ஒருவேளை அவனிருந்திருந்தால் இதெல்லாம் நடந்தேயிருக்காதோ என்றும் கூட இருந்தது..

ஆனால் அவன் கும்பகோணத்திலேயே இருந்திருந்தால் மதுபாலா அவன் வாழ்வில் வந்தேயிருக்க மாட்டாளே..

ஆனால் இப்படி நிச்சயம் முடிந்ததும் உடனே கொஞ்ச நேரத்திலேயே கிளம்புகிறேன் என்று சொன்னால் அவன் என்ன செய்யமுடியும்..

“இரு இரு…” என்றான், அவன் வீட்டினரோ அது முறையில்லை என்றனர்,

“தனியா பேசணும் வா…” என்றான், அவளோ மற்றவர்களோடு பேசிக்கொண்டு இருக்க,

“மதுபி இப்போ நீ வர்றியா இல்லையா???” என்று முகத்தை தூக்கியவன், வேகமாய் மாடிக்குச் சென்றுவிட்டான்..

இது அவனது வீடு.. அவனது பெற்றோர்… அவனது குடும்பத்தினர்.. அவன் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம்.. ஆனால் மதுபாலா அப்படி இருக்க முடியாதே… ரிஷியோடு அவளுக்கும் பேசவேண்டும் தான்.. ஆனால் இப்படி அவன் பின்னேயே போவதும் கொஞ்சம் தயக்கமாய் இருக்க,

“அத்தை கிட்ட சொல்லிட்டு போய் பேசிட்டு வா மது… நாங்க வெய்ட் பண்றோம்…” என்று மைதிலி சொல்ல,

“இல்லக்கா.. அது…” என்று மதுபாலாவிற்கு தன் தயக்கத்தை வெளிப்படுத்த கூட அத்தனை தயக்கமாய் இருந்தது..

இப்படியான உணர்வுகள் எல்லாம் அவளுக்கு எங்கிருந்து வந்தது என்பது அவளுக்கே ஆச்சர்யம் தான்..

“அட மது என்ன இப்படி தயங்கிட்டு நிக்கிற போ.. அவனும் என்ன செய்வான்…” என்று மைதிலி சொல்கையிலேயே  ஸ்ரீநிவாஸ் அழைத்திட, “போய் சீக்கிரம் பேசிட்டு வா…” என்றுவிட்டு அவள் நகர்ந்திட,

மதுபாலாவோ கல்யாணியைத் தேடிக்கொண்டு போனாள்..

“என்ன மது கிளம்பியாச்சா..??”

“இல்ல ஆன்ட்டி அது… ரிஷி.. பேசணும் சொன்னான்…”

“ஓ.. அதுக்கென்ன தாராளமா பேசிட்டு வா..” என்றவர் “ஆனா கொஞ்சம் சீக்கிரம் அவர் பார்த்தா எதுவும் சொல்லிடப்போறார்…” என,

“ம்ம் சரி..”என்று வேகமாய் ரிஷியிடம் போக, அவனோ அப்போதும் முகத்தை உர்ரென்று தான் வைத்திருந்தான்..

“ரிஷி…” என்று இவள் போக,

“இந்த கொஞ்ச நாள்ல நீ ரொம்ப மாறிட்ட மதுபி…” என்று எடுத்ததுமே அவன் குற்றம் சொல்ல,

“நானா??…” என்று புருவம் உயர்தியவளைப் பார்த்து,

“கண்டிப்பா நீ தான்.. உங்கிட்ட எப்பவும் தயக்கம் இருக்காது.. உனக்கு என்ன தோணுதோ அது சரின்னா கண்டிப்பா செய்வ.. ஆனா இப்போ ஒவ்வொண்ணுக்கும் அம்மா முகத்தைப் பார்க்கிற..” என,

மதுபாலா சிரித்தவள், “நீ இன்னும் மாறவேயில்ல ரிஷி…” என,

“ம்ம்ச் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…” என்றான் சிடுசிடுப்பாய்..

“இப்போ உனக்கு ஏன் இத்தனை கோபம் ரிஷி.. இந்திய வர்றபோ நீ கொஞ்சமாவது மாறி வந்திருப்பன்னு நினைச்சேன்…”

“ஏன் ஏன் நீ இந்த ரிஷியை தானே லவ் பண்ற??” என்று அவளை நெருங்க, அவளோ அசராமல் நின்றவள்,

“பார்ஸ்ட் ஒன்திங் நல்லா புரிஞ்சுக்கோ ரிஷி நமக்குள்ள இருக்கிறது லவ்வா?? கண்டிப்பா சொல்லு.. எனக்கு உன்னை பார்த்தோ இல்லை உனக்கு என்னைப் பார்த்தோ எப்போவாது ஏஞ்சல்ஸ் பாட்டு பாடுறது எல்லாம் கேட்டுச்சா??” என,

“மதுபி.. என்னை டென்சன் பண்ணாத… லவ்வோ.. ட்ரஸ்டோ… எதுவா இருந்தாலும் சரி.. என் லைப்ல நீ மட்டும் தான்.. அதேபோல்தான் உனக்கும் இனிமே நோ சாய்ஸ்…” என்று பல்லைக் கடித்தான்..

“ஹா ஹா நான் சாய்ஸ் கேட்டேனா ரிஷி…”

“கேட்டுத்தான் பாரேன்…” என்றவன் இன்னும் முறுக்க

“சரி நீ இப்படியே முறுக்கு சுட்டுட்டே இரு.. நான் கிளம்புறேன்..” என்றவள் நகரப் போக,

“திஸ் இஸ் நாட் ஃபேர் மதுபி…” என்று அவளது கரங்களை விடாது இறுகப் பற்ற,

“மேரேஜ் முன்னாடி நான் இங்க தங்க கூடாது ரிஷி…” என்றவள், “உனக்கு ஏன் இவ்வளோ பிடிவாதம்…??” என,

“அப்போ இத்தனை நாள் இங்க வந்து ஸ்டே பண்ணிருக்க இப்போ நான் வந்ததும் போற… சோ உனக்கு என்னைப் பத்தி எந்த அக்கறையும் இல்லை.. என் ஃபேமிலி என்ன சொல்றாங்களோ அதை தான் செய்வ…” என்று அவன் விடாது பேச,

அவளுக்கோ ஒருநிலையில் பொறுமை போக “நீ சென்னை தானே வருவ.. அங்க வா பேசிக்கலாம்…” என,

“ரிஷி நீ இன்னிக்குதான் வந்திருக்க.. சோ டோன்ட் கிரியேட் எனி சீன்.. இங்க உனக்கு அங்கிள் ஆன்ட்டி கிட்ட பேசவே நிறைய விஷயங்கள் இருக்கு… நமக்கான டைம் நிறைய இருக்கு ரிஷி.. நீ சென்னை வா பார்த்துப்போம்…” என்றவள் கிளம்பிவிட, 

ரிஷி அடுத்து கீழே வரவேயில்லை.. மேலிருந்தே பார்த்துகொண்டு இருந்தான்.. மதுபாலாவின் கார் கிளம்பி வெளியே செல்வதை.. அவனுக்கு என்னவோ உள்ளுக்குள்ளே ஒரே கோபமாய் இருந்தது.. அவன் நினைத்து வந்தது வேறு.. நடப்பது வேறாய் இருந்தது..

 

            

                                  

       

               

Advertisement