Advertisement

மழை 26:
மதிய உணவு இடைவேளையில் சிவகுரு தன் இடத்தில் எழுந்து நின்றபடி கையை தட்டி அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பிவிட்டு, “இப்போ பசங்க கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்” என்று சூப்பர் ஸ்டார் போல் கூறிவிட்டு அமர்ந்தான்.
ஒரு மாணவன் எழுந்து தனது கைபேசியை இயக்கினான்.
“லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி  
பார்த்தா பளபளக்குற பாலா வழிய வைக்கிற
கீத்தா கிழியவைக்கிற கிருக்கேத்தி” என்ற பாடல்(‘சரவணன் இருக்க பயம் ஏன்’ திரைப்படம்) ஒலித்தது.
அதித்தி என்ற மாணவி அந்த மாணவனை முறைக்க அவனோ புன்னகையுடன், பத்தாவது இடத்தில் சந்தானலட்சுமி என்ற அதித்திஎன்றதும் பேனா ஒன்று அவன் மேல் வந்து விழுந்தது. 
அதித்தி அருகில் அமர்ந்திருந்த மாணவி, “உன் பேரு சந்தானலட்சுமி ஆ! இத்தனை நாள் சொல்லவே இல்ல பார்த்தியா!”
அதித்தி முறைக்கவும் அந்த மாணவி, “இவனுக்கு எப்படி டி தெரிந்தது?”
“தெரியாது.. ஆனா தனியா சிக்குனான் செத்தான்” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினாள்.
அடுத்து ஒரு மாணவன் எழுந்து,
“அடி என்னை விட்டு நீயும்
எங்கே போகின்றாய் பெண்ணே!
இப்போ என்னை தேடி நீயும் ஓடி
வாடி வாடி வாடி வாடி
வாடி புள்ள வாடி.. வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி.. வாடி புள்ள வாடி” என்ற பாடலை ஒலிக்கவிட்டு உருக்கத்துடன் தானும் சேர்ந்து பாடினான் ‘பிரேக்-அப்’ செய்த தன் காதலியை பார்த்து. அந்த மாணவி மனதினுள் சிறு சலனம் எழுந்தாலும் இவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அவன், ஒன்பதாவது இடத்தில் ஆர்த்திஎன்று கூறிவிட்டு சோகத்துடன் தன் இருக்கையில் அமர்ந்தான். 
அவன் அருகில் இருந்த மாணவன், “விடு மச்சி.. திரிஷா இல்லனா நயன்தாரா” என்று கூற,
இவனோ, “ச்ச்.. இவளை உண்மையா காதலிக்கிறேன் டா”
“உண்மையா காதலிக்கிறவன் அவ பிரெண்ட்டுக்கே ரூட் விட்டுருக்க கூடாது”
“அவ இவ பிரெண்ட் னு எனக்கு தெரியாதே”
“அப்போ அனுபவி”
“டேய்.. அது சும்மா……………”
“விடு டா.. பொறுத்தார் பூமி ஆள்வர்”
“பூமிலாம் ஆள வேணாம்.. என் ஆர்த்தி மனசை ஆள்ந்தால் போதும்”
“நீ ஒரு மார்க்கமா தான் டா இருக்கிற”
அதே நேரத்தில் நந்தினி, “காலேஜ் திறந்த ரெண்டு மாசத்தில் லவ் வரதே ஓவர் இதில் பிரேக்-அப் வேற!”
பிருந்தா, “உன்னையெல்லாம் மியூசியத்தில் கொண்டு போய் தான் வைக்கணும்”
நந்தினி முறைப்புடன் தனது வசைகளை தொடங்க பிருந்தா வாய் மேல் ஒற்றை விரலை வைத்து, “ஷ்.. என்னை அப்பறம் திட்டு.. இப்போ கவனிக்க விடு” என்றாள். மாலினி எப்பொழுதும் போல் இவர்களின் சண்டையை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்து அனீஸ் எழுந்து,
“மலரே…
என்னுயிரில் விடரும் பனிமலரே..
மலரே நின்னை காணாதிருந்நாள்
மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே” என்ற பாடலை(பிரேமம் என்ற மலையாள திரைப்பட பாடல்) ஒலிக்க விட்டான்.
பிறகு, எட்டாம் ஸ்தானத்தில் பார்வதி குட்டி” என்று (மலையாளத்தில்) கூறினான். அந்த மாணவி ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டுவது போல் செய்ய இவனோ அவார்ட் கிடைத்தது போல் சிரித்துவிட்டு அமர்ந்தான்.
அடுத்து சிவகுரு எழவும் பிருந்தாவினுள் அவளையும் அறியாமல் ஒரு படபடப்பு வந்தது. 
அவளது மனசாட்சி, “எதுக்கு இந்த டென்ஷன்”
“அவன் என்னை பற்றி தான் பாடுவான்”
“அது எப்படி உறுதியா சொல்ற?”
“எனக்கு தெரியும்”
“எல்லோரும் அவங்க ஆளு னு யாரை பிக்ஸ் பண்றான்களோ அவங்களை பார்த்து தான் பாடுறான்க.. அப்போ நீ அவன் ஆளா!” என்று அவளது மனசாட்சி கேள்வி எழுப்ப அவள் அதிர்வுடன் அவனை பார்த்தாள்.
அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது பார்வையில் அவனையும் அறியாமல் அவன் கண்களில் காதல் வெளியேற புன்னகையுடன் சிறு கண்சிமிட்டளுடன் பாடலை ஒலிக்க விட்டான். அவளது கண்ணில் தெரிந்த அதிர்வை அவனும் உணரவில்லை அவன் கண்ணில் தெரிந்த காதலை அவளும் உணரவில்லை.
“பறவைகள் செய்யுதே
பட்டாம்பூச்சி செய்யுதே
நதிகள் செய்யுதே
மரங்கள் செய்யுதே
யாதும் செய்யுதே
நீயும் செய்ய வா
காதல்……
ஜில்லென்று ஒரு காதல்
ஜில்லென்று ஒரு காதல்
ஜில்லென்று ஒரு காதல்
ஜில்லென்று ஒரு காதல்” என்ற பாடல் [‘ஜில்லென்று ஒரு காதல்’ திரைப்பட தலைப்பு பாடல் (டைட்டில் சாங்)]  ஒலிக்கவும் அவளது அதிர்ச்சி மேலும் கூடியது. இப்பொழுது அவள் கண்களில் தெரிந்த அதிர்ச்சியை பார்த்த சிவகுரு சட்டென்று தோன்றிய எண்ணத்தில், “ஜில்ஸ் ஜில்லு என்று அழைக்கப்பட்டாலும் என்னிடம் தீப்பொறியாய் சண்டைக்கோழியாய் சண்டை போடும் பிருந்தா ஏழாவது இடத்தில்” என்று புன்னகையுடன் கூறிவிட்டு அமர்ந்தான். 
எப்போழுதும் சண்டைக்கோழியாய் சீறி பாயும் பிருந்தா தற்போது குழப்பத்துடன் அமைதியாக திரும்பிக் கொண்டாள். மாலினி முகத்தில் மென்னகை அரும்பியது. தோழிகளை பார்த்த நந்தினிக்கு எதுவோ புரிவது போல் இருக்க அவளும் அமைதியாக இருந்தாள்.
ராஜசேகர், “ஒருவழியா உன் காதலை சொல்லிட்ட போல!”
சிவகுரு, “அவளை கிண்டல் பண்ணி தான் பாட்டு போடணும் நினைத்தேன் மச்சான் ஆனா கடைசி நேரத்தில் ஏதோ ஒரு உந்துதலில் இந்த பாட்டை போட்டுட்டேன்”
“விடு.. பார்த்துக்கலாம்”
“கொஞ்சம் டென்ஷனா இருக்குது மச்சான்”
“பார் டா!”
“எனக்கே ஆச்சரியமா தான் இருக்குது ஆனா டென்ஷனா தான் இருக்குது மச்சான்”
“எனக்கு என்னவோ பாஸிடிவ் ரிசல்ட் தான் வரும் தோணுது”
“தேங்க்ஸ் மச்சான் ஆனா எனக்கு சந்தேகமா தான் இருக்குது”
“ஏன் டா?”
“அவள் என்னை லவ் பண்றதில்.. இல்லை இனி பண்ண போறதிலோ சந்தேகம் இல்லை ஆனா ஒத்துக்கணுமே!”
“யானைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானா!”
“இங்கே யானைக்கு அடி சறுக்கலை மச்சான்.. யானையால் எறும்புக்கு அடி சறுக்குது”
“ஹா ஹா ஹா..” என்று வாய்விட்டு சிரித்தவன், “எனக்கு ஒரு டவுட் மச்சான்”
“என்ன”
“நீ இப்போ சொன்ன உதாரணத்திற்கு கல்யாணத்திற்கு…………………….” என்று ராஜசேகர் முடிப்பதற்குள் சிவகுரு அவசரமாக, “அதுக்குள்ள அவ மெலிஞ்சிருவா”
“விவரம் தான்”
“விடு விடு.. இப்போ அடுத்த பாட்டை கவனிப்போம்” என்றான்.
அடுத்து ஒருவன் எழுந்து,
“வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்
அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரகொடி ஆளுகெல்லாம் கும்மாளம்” என்ற பாடலை(‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம்) ஒலிக்கவிட்டுவிட்டு, ஆறாவது இடத்தில் மாளவிகாஎன்றான்.
அடுத்து எழுந்த வினோத்,
“எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து
எத்தன பிறவிகள் எடுத்தாலும்
உன்ன தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்” என்ற பாடலை (‘மேயாத மான்’ திரைப்படம்) ஒலிக்க விட்டான்.
பாடல் ஆரம்பித்ததும் ஜெனிஷா, “ஆஷ் பிப்த் பிளேஸ் நீ தான்”
“என்னடி சொல்ற!!!!!”
“அவன் உன்னை தான் பார்க்கிறான்”
“நான் கிடைச்சா கெத்தா! அவன் கிடைச்சா என் வாழ்க்கை டெத்!”
“ஏன்டி பார்க்க நல்லா தானே இருக்கிறான்.. படிப்பு கூட ஓகே தானே”
“வேணாம் டி” என்று ஆஷா சொல்லிக் கொண்டிருந்த போது வினோத், ஐந்தாவது இடத்தில்  ஆஷாஎன்றான்.
ஆஷா ஜெனிஷாவை முறைக்க, அவள், “நான் சொல்லியா அவன் சொன்னான்?”
“அவனை முறைக்க முடியாதே அதான் உன்னை முறைக்கிறேன்”
“ஏன்?”
“நான் முறைச்சா ஏதோ லவ் லுக் விட்டது போல் அந்த லூசு ஸீன் போடும்”
ஜெனிஷா சிரிக்க ஆஷா கடுப்புடன், “சிரிக்காத டி” என்றாள். 
அப்பொழுது செல்வராஜ் திடீரென்று கீழே விழுந்தான். அவன் கோபத்துடன் எழவும்,
“குங்குமப்பூவே.. கொஞ்சும் புறாவே
குங்குமப்பூவே.. கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னை கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே” என்ற பாடல்(1959யில் வெளிவந்த மரகதம் திரைப்பட பாடல்)  ஒலித்தது.
செல்வராஜ் தன்னை கீழே தள்ளிவிட்ட மாணவனையும் பாடலை ஒலிக்க விட்ட வினோத்தையும் முறைத்துவிட்டு தன் இடத்தில் அமர்ந்தான். 
செல்வராஜை தள்ளிவிட்ட மாணவன், “அனௌன்ஸ் பண்ணு செல்வா”
“நான் தான் முடியாது.. எனக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லைன்னு சொன்னேனே”
“இல்லை மச்சி.. அந்த பொண்ணுக்கு உன் மேல ஒரு கண்ணு……………”
“பல கண்ணே இருந்தாலும் எனகொன்னும் இல்லை”
“சரி டா.. இப்போ அனௌன்ஸ் மட்டும் பண்ணு”
செல்வராஜிடம் பதில் இல்லை ஆனால் அவன் அமர்ந்திருந்த தோரணையே அவன் அறிவிக்க போறதில்லை என்பதை உறுதி செய்ய வினோத் தனுக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவன் ஒருவனுக்கு சிமிக்கை செய்ய அவனோ ‘முடியாது’ என்பது போல் சிறிது அலற வினோத் ‘செய்’ என்று மிரட்ட ஒரு வழியாக அந்த மாணவன் செல்வராஜ் குரலில், “குங்குமப்பூ என்றழைக்கப்படும் பிரியா நான்காவது இடத்தில்” என்று அமர்ந்தபடியே கூறினான்.
செல்வராஜை சில பல நேரங்களில் எதிர்க்க முடியாத கோபத்தில் வினோத்தால் செய்யப்பட சிறு சதி இது. மாணவர்கள் இறுதியாக பேசி எடுத்த முடிவின் படி பிரியா பற்றி பாட போவதாக சொன்ன மாணவன் வேறு.
செல்வராஜ் தன்னை போல் பேசியவனை கடுமையாக முறைத்தான். செல்வராஜிற்கு மட்டும் நெற்றிக்கண் இருந்திருந்தால் இந்நேரம் அந்த மாணவன் பஸ்பம் ஆகியிருப்பான். 
பிரியா செல்வராஜை மையலுடன் பார்க்க அவனோ சிறிதும் பெண்கள் பக்கம் திரும்பவில்லை.
செல்வராஜ் வினோத்தை அடிக்க எழ, அவனோ அவசரமாக முன் இருக்கையில் சென்று அமர்ந்தான். வினோத்தை அடிக்க கிளம்பிய செல்வராஜை ராகேஷும் சிவகுருவும் படாத பாடுபட்டு அடக்கினர்.
மாலினி, “என்ன ஜில்ஸ் அமைதியா இருக்கிற?”
பிருந்தா, “என்னை அப்படி கூப்பிடாதே!”
“எப்போதும் இப்படி தானே கூப்பிடுவேன்”
“இனி வேண்டாம்” என்றவளின் குரலில் கோபம் எரிச்சல் குழப்பம் தவிப்பு என்று அணைத்து உணர்வுகளும் கலந்து இருந்தது.
மாலினி அவள் கையை தன் கரத்தினால் அழுத்தி, “என்னாச்சு டா?”
“உனக்கு புரியலைன்னு சொல்றியா?”
“அவனை விடு.. உன் மனநிலை என்ன?”
“எனக்கே புரியலை”
“என்ன புரியலை?”
“அவன் காதலை சொன்னானா இல்லை இதுவும் கிண்டல் தானா? அப்படி கிண்டல் என்றால் எப்படி என் உணர்வுகளுடன் விளையாடலாம் என்ற கோபம்.. ஒருவேளை நூற்றுக்கு ஒரு பெர்சென்ட்டா காதல் என்றால் இது எப்படி நடந்தது? ஏன்? இல்லை காதல் னு சொல்லி என்னை சீண்டி பார்க்க நினைக்கிறானா? எரிச்சலும் குழப்பமுமா இருக்குது”
“நீ அவனிடம் பேசு”
“என்னன்னு?”
“இப்போ என்னிடம் சொன்னதை சொல்லு”
“பதில் சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பான்” என்று அவள் எரிச்சலுடன் கூற,
மாலினி, “பேசி பார்க்காம நீயா ஏன் முடிவு பண்ற?”
“அவனை பற்றி எனக்கு தெரியாதா?”
“அப்போ அவன் மனசும் உனக்கு தெரியுமா?”
“என்னடி சொல்ற? அவன் என்னை லவ் பண்றானா? உனக்கு தெரியுமா? எப்படி தெரியும்? அவன் சொன்னானா?”
“அவன் என்னிடம் எதுவும் சொல்லலை.. உன் குழப்பத்தை அவனிடம் நேரிடையா கேட்டு தெரிந்துக்கோ”
பிருந்தா திரும்பி பார்க்க, அந்த நேரத்தில் சிவகுரு செல்வராஜை அடக்குவதில் போராடிக் கொண்டிருந்தான்.
பிருந்தாவும் மாலினியும் பேசிய நேரத்தில் ஆஷா, “இந்த செல்வாவை புரிஞ்சுக்கவே முடியலை”
ஜெனிஷா, “ஏன்?”
“அவனுக்கு இருப்பது திமிரா ஆணவமா! நல்லவனா கெட்டவனா?”
“ஏன்?”
“பின்ன அவன் நடந்துக்கிறது அப்படி தானே இருக்குது.. நீ சொன்னேன்னு தான் இவனுக்கு முதலிடம் கொடுக்க ஓகே சொன்னேன் ஆனா எனக்கு என்னவோ அதில் உடன்பாடு இல்லை”
“பார்க்க நல்லா தானே இருக்கிறான்?”
“அப்போ ரப்பர் வாயனை ஏன் பத்தாவது இடத்தில் சொன்ன?”
“ஏன் னு உனக்கு தெரியாதா?”
“அதை போல் தான் இவனும்..”
“நிச்சயம் இல்லை.. இவனுக்கு முன் கோபம் அதிகம்.. கொஞ்சம் தெனாவெட்டு உண்டு.. மற்றபடி கெட்டவன் இல்லை”
“கொஞ்சம் இல்லை டி தெனாவெட்டு ரொம்பவே அதிகம்.. இவன் பொண்ணுங்களை மதிக்கிறானா னு எனக்கு சந்தேகம் தான்”
“அந்த சீனியர்ஸ் பிரச்சனை எதனால் தெரியுமா?”
“எதனால்?”
“சீனியர் ஒருத்தன் தனியா மாட்டின ப்ரியாவிடம் எதோ தப்பா பேசியிருக்கான், அந்த பக்கம் போன இவன் சீனியரை திட்டியிருக்கான்.. அப்போ ராக்கியும் சில சீனியர்ஸ் அங்கே வர சண்டை ஆரம்சிருச்சு பெருசா போயிருச்சு.. சண்டை ஆரம்பிக்கவும் ராக்கி ப்ரியாவை அனுப்பி வச்சிட்டான்.. ஏற்கனவே அவளுக்கு இவனை பிடிக்குமா இல்லை இந்த இன்சிடென்ட் அப்பறம் பிடிக்குமா தெரியலை ஆனா அவளுக்கு இவன் மேல கண்ணு.. அது நிச்சயம்..”
“பார் டா!! இது தான் பாறைக்குள் ஈரம் என்பதா!”
“அது கல்லுக்குள் ஈரம்”
“இவன் பாறை தான்.. ஆனா நான் மோதல் பின் காதல் என்பது போல் இவன் மாலினி கிட்ட விழுவான் நினைத்தேன்.. ஆனா வேற வித மோதலால் பிரியா மேல் காதல்”
“இங்கே தான் பல்பு எரியுது.. அந்த பக்கம் இல்லை”
“அப்போ இப்போ…………”
“இது உன் ஆள் பண்ண சதி போல் தெரியுது”
“என்னடி சொன்ன!!!!” என்று ஆஷா ஜெனிஷாவை அடிக்க தொடங்கினாள்.
அப்பொழுது வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும் வகுப்பினுள் சலசலப்பு அடங்கியது.     
 
அடுத்து மதிய தேநீர் இடைவேளையில் சக மாணவர்களின் அறிவுரையில் தனது தவறை உணர்ந்த வினோத் செல்வராஜிடம் மன்னிப்பு கேட்க அவனோ வினோத்தை முறைத்துவிட்டு மாணவிகள் இருக்கை அருகே சென்றான்.
பிரியா அவனை ஆவலுடன் பார்க்க இவனோ கடுமையான குரலில், “தேவையில்லாத எண்ணம் எதையும் வளர்த்துக்காதே அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
ஆஷா, “நீ சொன்னது போல் கொஞ்சம் நல்லவன் தான் போல”
ஜெனிஷா, “திடீர் முடிவிற்கு காரணம் என்னவோ!”
“ப்ரியாவிடம் உண்மையை சொல்லியது.. அது கூட சுருக்கமா நாகரிகமா சொல்லிட்டான்.. காதல் என்று அவள் சொல்லாத போதும் அவள் அப்படி ஆசையை வளர்த்துக்க கூடாதுன்னு ஆரம்பத்திலேயே தடுக்க நினைத்தது.. அதையும் காதல் என்ற வார்த்தையை யூஸ் பண்ணாம சொன்னது சூப்பர்”
“அவனுக்கு ஃபன்ஸ் க்ளப் ஆரம்ச்சிருவ போல! ஆன எனக்கு ஒரு டவுட்.. நீ எப்போ இருந்துடி இவ்ளோ அறிவாளி ஆன!!”
“நீ உன் ஆளுடன் நேரம் கழிக்க ஆரம்பித்ததும் என்னை விட்டு கொஞ்சம் விலகி போனத்தில், மேகம் விலக வெளி வரும் சூரியன் போல் என் அறிவு வெளியே வருது”
“பார் டா! மறுபடியும்!!!!” 
செல்வராஜ் பேசியதை கேட்ட பிறகு தான் வினோத்திற்கு தன் தவறின் வீரியம் முழுமையாக புரிந்தது. அவன் ப்ரியாவிடம் சென்று, “சாரி ப்ரியா.. அவனுக்கு எதுவும் தெரியாது.. நான் தான் இப்படி பண்ணிட்டேன்.. அவனை கீழே தள்ளிவிட்டு அவன் எழவும் பாட்டு போட்டது நான் தான்.. அப்பறம் உன் பெயரை அனௌன்ஸ் பண்ணியது செல்வா இல்லை.. ப்ரான்சிஸ் தான் அவன் குரலில் பேசினான்”
பிரியா, “தேங்க்ஸ்”
“எதுக்கு?”
“சொல்லணும் தோனுச்சு” என்றுவிட்டு அவள் திரும்பிக்கொள்ள வினோத் முழித்தான்.
ஒரு மாணவன், “சரிப்பா ஆட்டத்தை முடிங்க” என்று கூற, மற்றொரு மாணவன், “அதானே!” என்று கூறவும் வினோத் தன் இடத்தில் அமர்ந்தான்.
அப்பொழுது எழுந்த சக்திவேல், 
“யாரு எவரு.. இத வச்சிருந்தா தெரியுமா..
பேர நான் சொன்னா.. 
லிஸ்ட் ரொம்ப நீளுமா..
மைசூரு நிஜாமும்..
மந்திரி பல பேர்களும்..
பாதுகாத்த போக்கிஷமடா..
சொப்பன சுந்தரி..
உன்ன யாரு வச்சிருக்கா..
சொப்பன சுந்தரி..
உன்ன யாரு வச்சிருக்கா..” என்ற பாடலை (சென்னை-28(II) திரைப்படம்) ஒலிக்கவிட்டு, மூன்றாவது இடத்தில் சொப்பன சுந்தரி சொப்னா
அந்த மாணவி, “உனக்கு வேற பாட்டு கிடைக்கலையா பக்கி” என்று திட்ட, சக்திவேல், “ஈஈஈ” என்று இளித்துவிட்டு அமர்ந்தான்.
அடுத்து ராஜசேகர் எழுந்ததும் ஒருசில மாணவிகள் ‘ஜெனிஷா’ என்று கத்த தொடங்கினர்.
அவன் தன்னவளை பார்த்தபடியே பாடலை ஒலிக்கவிட்டு அதனுடன் சேர்ந்து பாடினான். அவன் தனக்கு வேண்டிய வரிகள் மட்டும் வருமாறு செய்திருந்தான். அந்த பாடல்(கோலிசோடா – 2 திரைப்பட பாடல்) இதோ..
“ஆத்தோர பேரழகி
எங்க நீ வந்தழகி
உன்ன பாக்குறேன் உள்ள உணருறேன்..
நான் காதல…
மீசையை நீ தான் முறுக்கியே திரிய வச்ச
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி” என்ற பாடல் முடியவும் அவன் ஜெனிஷாவை பார்த்தபடி, “என் பெட்டர் ஹாஃப் ஜெனிஷா இரண்டாவது இடத்தில்” என்று கூறி கண்சிமிட்ட இவளும் காதலுடன் கண்சிமிட்ட சில மாணவ மாணவிகள் ‘ஓ’ என்று மெலிதாக கத்தினர்.
‘பெட்டெர் ஹாஃப்-ஆ பிட்டர் ஹாஃப்-ஆ’ என்று ஒரு மாணவன் கிண்டலாக குரல் கொடுக்க, சிலர் சிரித்தனர் ஆனால் அதை இவர்கள் கண்டுகொள்ளவில்லை.
அடுத்து முகம் முழுவதும் சிரிப்புடன் எழுந்த ஸ்ரீராமன்,
“ஹாய் மாலினி..
ஐ அம் ஸ்ரீராமன்.. (இந்த இடத்தில் அவன் பெயர் வருவது போல் செய்து இருந்தான்)
நான் இதை சொல்லியே ஆகணும்..
நீ அவ்வளவு அழகு..
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு…..
இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க.. (சட்டென்று அவள் அருகே வந்தவன் ஒரு காலை மட்டும் மண்டியிட செய்தபடி நின்றான்)
அம் இன் லவ் வித் யூ.. (இரு கைகளை விரித்து கூறினான்)
முன்தினம் பார்த்தேனே.. (எழுந்து நின்றான்)
பார்த்ததும் தோற்றேனே.. (லேசாக தலையை குனிந்தான்)
சல்லடைக் கண்ணாக.. (இதயத்தில் கைவைத்து காட்டினான்) 
நெஞ்சமும் புன்னானதே..” என்றதுடன் பாடல் நிற்க, 
அவன், புன்னகையுடன், “என்………..”
மாலினி, “நோ” என்று கூறியபடி வலது கை ஆள்காட்டி விரலை ஆட்ட, அவன் புன்னகையுடன், “ஓகே.. முதல் இடத்தில் பியூட்டி குவின் மாலினிஎன்றான்.
அவனது இந்த சேட்டையில் ஒரு சில கைதட்டல்கள் கூட கிடைக்க, அவன் புன்னகையுடன் சிறிது சிரம் தாழ்த்தி, “தன்க் யூ” என்று கூறி இடத்தில் அமர்ந்தான்.
அவன் மாலினியை மையலுடன் பார்க்க, அவள் முறைப்புடன் ஆள்காட்டி விரலை ஆட்டி, “கொண்ணுடுவேன்” என்று மிரட்டினாள். அவன் சிரிக்கவும் எழுந்து அவன் அருகே சென்றவள், “இந்த கைதட்டல், பசங்க ஏத்தி விடுறது வைத்து தேவையில்லாத கற்பனைக்கு போகாதே.. எனக்கு அப்படி ஒரு எண்ணம் சிறிதும் கிடையாது.. நான் காதல் திருமணம் செய்வதாவும் இல்லை” என்று கூறி திரும்ப, அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி செல்வராஜ் நின்றுக் கொண்டிருந்தான்.
எதிர்பாராத விதத்தில் செல்வராஜை அருகில் பார்த்ததில் ஒரு நொடி சிறிது அதிர்ந்தவள் பின் சிறு தோள் குலுக்கலுடன் தன் இடத்தில் அமர்ந்தாள். 
மழை தொடரும்….

Advertisement