Advertisement

ஸ்ரீராமன் முகத்தில் ஈ ஆடாவில்லை. ஒழுங்கா தானே போயிட்டு இருந்துது!’ என்ற குழப்பத்துடன் தன் இருக்கையில் அமர்ந்தான்.

ஜெனிஷா ஓரகண்ணால் ராஜசேகரை பார்க்க அவன் குறுநகையுடன் இவளை தான் பார்த்துக் கொண்டிருக்கவும் கோபம் கூடியது.


பிருந்தா, “இருந்தாலும் நீ அவனுக்கு எல்டர் சிஸ்டர் னா கொஞ்சம் ஓவர் தான்டி”

“விடு.. ஏதோ பயபுள்ள ஆசைபடுது.. கூப்பிட்டுட்டு போகட்டும்”

சில நொடிகள் கழித்து பிருந்தா, “அது என்ன காரணம் மாலு?”

“எது?”

“ஏதோ காரணமா என்னை சிஸ்டர் னு கூப்பிடுறேன்னு சொன்னானே”

“ஏன்டி மோனி கூட சேர்ந்து நீயும் டியுப் லைட் ஆகிட்டியா?”

பிருந்தா மாலினியை முறைக்க, “என்னை ஏன் டியுப் லைட் னு சொல்ற மாலு?” என்ற கேள்வியுடன் மோகனா நந்தினியுடன் வந்தாள்.

பிருந்தா, “அதுவா.. நீ ப்ரைட் ஆ இருக்கல அதான் அப்படி சொல்றா”

“ஓ”

நந்தினி, “மோனி உன்னை ரெண்டு பேரும் கிண்டல் பண்றாங்க.. நீ என்ன………….”

மோகனா செல்ல சிணுங்களுடன், “மாலு”
மாலினி, “இல்லைடி செல்லம்.. சும்மா விளையாட்டுக்கு தான்”

மோகனா சிறு புன்னகையுடன், “ஹ்ம்ம்.. ஓகே” என்றாள்.

நந்தினி பிருந்தாவை சுட்டிக் காட்டி, “இவளை எதுக்கு மாலு டியுப் லைட் னு சொன்ன?”

“ஓ அதுவா…………” என்று ஆரம்பித்த மாலினி ராஜசேகர்-ஜெனிஷா காதல் விவாதம் மற்றும் ராஜசேகர் தங்களை சிஸ்டர் சொன்னது என்று அனைத்தையும் கூறி முடித்தாள்.

நந்தினி, “நாங்க வரதுக்குள்ள இவளோ நடந்துதா!!!”

பிருந்தா, “ஹ்ம்ம்.. ரெஸ்ட் ரூம் போனோமா வந்தோமா னு இருக்கணும் அங்கேயே குடித்தனம் நடத்தினா இப்படி தான் பல விஷயங்கள் நடக்கும்”
நந்தினி முறைத்தாள். 

மோகனா ஏதோ கேட்க வர பிருந்தா கை எடுத்து கும்பிட்டு, “தாயே உன் ஸ்பெஷல் டிக்சனரி மாலினி கிட்டயே உன் கேள்விகளை கேளு” என்றாள்.

மோகனா மீண்டும் செல்ல சிணுங்களுடன், “போ ஜில்லு” என்றாள்.

ராஜசேகரின் குறுநகையை கண்டு ஜெனிஷா கோபத்தின் உச்சத்தில் இருந்த அதே நேரத்தில் உள்ளே வந்த ஆஷாவை ராஜசேகர் அழைத்தான். 

ஆஷா அவன் அருகே சென்றதும் அவள் கையில் எதையோ கொடுத்து ஜெனிஷாவை பார்த்தபடியே ரகசிய குரலில் ஏதோ சொன்னான்.

ஆஷா இருக்கையில் அமர்ந்ததும் ஜெனிஷா கோபமாக, “நீ எதுக்குடி அங்க போன?”

“அவன் தானே கூப்பிட்டான்”

“அவன் கூப்பிட்டா போவியா?”

“…”

“அவனிடம் என்ன பேச்சு உனக்கு?”

“..”

“எதாச்சும் சொல்லு” என்று ஜெனிஷா கடுப்புடன் கூற அவளை தீர்க்கமாக பார்த்த ஆஷா, “ஏன் உனக்கு பொறாமையா இருக்கா?”

“எனக்கு என்ன பொறாமை?” என்று திரும்பி கொண்டவள் இரண்டே நொடியில் ஆஷா பக்கம் திரும்பி, “என்னடி குடுத்தான்?” என்று வினவினாள்.

ஆஷா கையை விரித்து காட்டினாள். அவள் கையில் ஒரு ஹால்ஸ் இருந்தது.

ஜெனிஷா, “இதை எதுக்கு குடுத்தான்?”

“இதை சாப்பிட்டால் கூல் ஆ இருக்குமாம்.. தேவைப் படுறவங்க யாருக்காவது குடு னு சொன்னான்”

ஜெனிஷா கோபமாக ஆஷா கையில் இருந்த ஹால்ஸ் எடுத்துக் கொண்டு ராஜசேகர் மேஜை மேல் வைத்துவிட்டு, “நான் உன்னிடம் கேட்டேனா?” என்றாள்.

ராஜசேகர் அமைதியாக, “நான் உனக்கு குடுக்கலையே”

“ஹே.. எனக்கு தெரியும்”

“என்ன தெரியும்?”

“நீ அதை எனக்கு தான் குடுத்த”

“அப்படியா! (ஆச்சரியமாக) அதை சாப்பிட்டால் கூல் ஆ இருக்கும்.. யாருக்காது தேவை பட்டால் குடு னு சொன்னேன்.. நீ என்ன டென்ஷன்னாவா இருக்க? ஏன்? என்ன ஆச்சு?” என்று சிறிது பரிதாபத்துடன் வினவினான்.

“யூ.. யூ..”

“ஹ்ம்ம்.. ஸ்டுபிட் இடியட் நான்-சென்ஸ்” என்று அவள் அப்பொழுது கூறியது போல் கூற,

ஜெனிஷா பல்லை கடித்துக் கொண்டு, “ஹேய்” என்று குரலை உயர்த்தி கூற, 
ஸ்ரீராமன் வழக்கம் போல், “எனி ப்ராப்ளம் ஜெனி?” 

ராஜசேகரை ஒன்றும் செய்யமுடியாத கடுப்பில் ஜெனிஷா ஸ்ரீராமனிடம், “நீ உன் வேலையை பார்த்துட்டு போடா” என்றாள்.

ஸ்ரீராமன், “என்னது டா வா?”

“அமாம் டா.. உனக்கு வேலையே கிடையாதா? எங்க என்ன பிரச்சனை வரும் னு வெயிட் பண்ணிட்டே இருப்பியா?”

“உனக்கு போய் ஹெல்ப் பண்ண வந்தேன் பாரு”

“நான் உன்னிடம் கேட்டேனா! சம்மன் இல்லாம ஆஜர் ஆகாத”

“இந்த டையலாகெல்லாம் கோர்ட் பக்கமே போகாத உன் அண்ணனிடம் சொல்லு”

“உனக்கு என்னடா தெரியும் என் அண்ணன் பத்தி?”

“உன் அண்ணன் பின்ன எப்படி இருப்பான்? வெட்டி சீன் பார்ட்டியா தான் இருப்பான்”

“நீ தான்டா வெட்டி சீன் பார்ட்டி, ஜொள்ளுவாயன், etc etc..”

“ஹேய்”

ராஜசேகர், “போதும் நிஷா.. பேசாம பிளேஸ்க்கு போ”

ஜெனிஷா ஸ்ரீராமனை முறைத்துக் கொண்டே, “இந்த ரப்பர் தலையனுக்கு பயந்து நான் பேசாம பிளேஸ்க்கு போகனுமா! முடியாது”

ராஜசேகர் குரலை உயர்த்தி, “நிஷா.. பிளேஸ்க்கு போ” என்று கூறவும் அவன் முகத்தை பார்த்த ஜெனிஷாவிற்கு சிறு அதிர்ச்சி ஏற்பட்டது. இதுவரை ராஜசேகரின் சிரித்த முகத்தை மட்டும் பார்த்தவளுக்கு இப்பொழுது இறுக்கமான சிறிது சினம் கொண்ட முகத்தை பார்த்ததும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த அதிர்ச்சியில் அவளது கால்கள் தானாக அவளது இடத்திற்கு அவளை அழைத்துச் சென்றது.
சிரித்துக் கொண்டிருந்த ஆஷாவை பார்த்து ஜெனிஷா, “எதுக்குடி சிரிக்கிற?”
“ஸ்ரீராமை நினைத்தால் சி(ரி)ப்பு..சி(ரி)ப்பா வருது.. அவன் உன்னிடம் பல்ப் வாங்கியது சூப்பர்.. இஞ்சி திண்ண குரங்காட்டம் அவன் முகம் மாறினது சூப்பர்.. சீன் பார்ட்டி, ஜொள்ளன் னு நீ திட்டினது இன்னும் சூப்பர்.. எல்லாத்தையும் விட அவனை ‘ரப்பர் தலையன்’ னு நீ சொன்னது தான் ஹை லைட்.. ஆனா……… ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்….”
ஆஷா பேச்சில் ஜெனிஷாவின் முகம் சிறிது மலர்ந்தது.
ஜெனிஷா, “என்னடி மிஸ்ஸிங்?”
“ஹ்ம்ம்.. இந்த சேகர் உன்னை பிளேஸ்க்கு அனுப்பாம இருந்திருந்தா அந்த ஸ்ரீராம் கண்டிப்பா உன் கையால் அடி வாங்கிருப்பான்.. ஹ்ம்ம்.. ஒருவேளை அப்படி நடந்துற கூடாது னு தான் உன்னை ஆப் பண்ணான் போல”  
ஜெனிஷா பல்லை கடித்துக் கொண்டு, “இந்த ராஜசேகர் என்னை என்ன ஆப் பண்றது?” என்று கூற, அவள் பக்கத்தில் வந்த ராஜசேகர், “நான் ஒரு நாளும் உன்னை அடக்க மாட்டேன்.. உனக்கு நல்லது தான்  செய்வேன்..”
“எனக்கு நல்லது செய்ய நீ யார்?”
“அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே! என் வாயால் திரும்ப திரும்ப கேட்கணும் னு ஆசையா?”
“ரொம்ப புத்திசாலிதனமா பேசுறதா நினைப்பா?”
“சர்ட்டேன்லி நாட்.. அம் டெல்லிங் தி பக்ட்(fact)”
“வாட் பக்ட்(fact)?”
“லுக் நிஷா.. நான் ஒரு நாளும் உன்னை அடக்க முயற்சிக்க மாட்டேன்.. என்னை பொறுத்தவரை நீ அடம் பிடிக்கும் சிறுமி  போல் தான்.. துணிச்சலும் அடமும் ஜாஸ்தினாலும் நல்லதை சொன்னால் கேட்டுக்குவ…………… வெயிட் வெயிட்.. இப்ப என்ன உனக்கு நல்லது செஞ்சுட்டேன் னு தானே கேட்க வர? (ஜெனிஷா எரிச்சலுடன் அமைதியானாள்)
நீ அவனை அடித்திருந்தால் பெரிய பிரச்சனையா போயிருக்கும்.. 
நம்பர் 1 அல்ரெடி ஒரு பிரச்சனை முடிந்த பாடில்லை.. ஸோ staffs இதை பெருசாக்கலாம்.. 
நம்பர் 2 அல்ரெடி பாய்ஸ் கேர்ள்ஸ் கமுனிகேஷன் சரி இல்லை.. இப்போ நீ அவனை அடித்தால் பாய்ஸ் கேர்ள்ஸ் சண்டை வரலாம்..
நம்பர் 3 அவன்லாம் ஒரு மனிஷன் னு மதிச்சு நீ அவனிடம் சண்டை போடணுமா?
இதெல்லாம் தேவையா?”
ஜெனிஷா பல்லை கடித்துக் கொண்டு, “எல்லாத்துக்கும் காரணம் நீ தான்”
ராஜசேகர் புன்னகையுடன், “நான் இல்லை நீ தான் காரணம்”
“வாட்?”
“எஸ் நீ தான் காரணம்”
“என்ன?”
“நீ என்னை வெறுக்கலை.. பட்………….”
“ஸ்டாப்.. அதுக்கும் இதுக்கும்………….”
ராஜசேகர் புன்னகையுடன், “உண்மையை ஒத்துகிட்டு இருந்தா.. உரிமையா ‘நீ எப்படி இன்னொரு பொண்ணு கூட சிரிச்சு பேசுவ?’ னு கேட்டிருப்ப..  இப்படி  பொறாமையினால் கோபம் கொண்டு  என்னை வெறுப்பேத்த கண்டவனுடன் சிரிச்சு பேசி…………………..”
“யாருடா கண்டவன்?” என்று ஸ்ரீராமன் கோபமாக கேட்க ராஜசேகர் அலட்டாமல் அமைதியாக, “நீ தான்” என்றான்.
“டேய்” என்று ஸ்ரீராமன் அடிக்க கை ஓங்க, ராஜசேகர் அவனது கையை தடுத்து அவனது முதுகிற்கு பின் கொண்டு சென்று முறுக்கியபடியே, “தம்பி என் பொறுமைக்கும் எல்லை உண்டு” என்றான்.
கையில் ஏற்பட்ட வலியை முகத்தில் காட்டாமல் ஸ்ரீராமன், “நீ மட்டும் யோக்கியமா? கிளாஸ்ஸில் இருக்கிற பொண்ணுங்க எல்லார் கிட்டயும் கடலை போடலை!”
“உன்னை மாதிரி தானே உன் நினைப்பும் இருக்கும்”
ஸ்ரீராமன் திமிரியபடியே, என்னடா.. பொண்ணுங்க முன்னாடி ரொம்ப சீன் போடுற..” என்று கூறியபடியே இடது கையால் அடிக்க வர ராஜசேகர் அந்த கையையும் தடுத்து அதே போல் முறுக்கினான்.
ஷங்கரும் சக்திவேலும், “சேகர்.. விடு” என்று தடுக்க பார்க்க, ராஜசேகர் பிடியை விடாமல், “ரொம்ப தான் டா சீன் போடுறான்” என்றான்.
ஜன்னல் வழியாக  சற்று தொலைவில் P.T மாஸ்டர் வருவதை பார்த்த மாலினி அவசரமாக ராஜசேகர் அருகே சென்று, “சேகர் அவனை விடு”
“சிஸ்டர்…………….”
“சேகர் நான் சொன்னா கேட்பியா மாட்டியா?”
“என்ன சிஸ்டர்!” என்று ராஜசேகர் சலிப்புடன் கூறி மனமே இல்லாமல் ஸ்ரீராமனின் கையை விடவும் P.T மாஸ்டர் இவர்கள் வகுப்பறையை நெருங்கவும் சரியாக இருந்தது.
ஜன்னல் வழியாகவே அவர், “என்னடா என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”
ஷங்கர், “நத்திங் சார்”
“பசங்க பொண்ணுங்க கூட்டமா என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”
ஸ்ரீராமன் ராஜசேகரை சுட்டிக் காட்டி, “இவன் தான் சார்.. பொண்ணுங்க கிட்ட பிரச்சனை பண்றான்.. என்ன னு கேட்டா அடிக்க வரான்”
வகுப்பில் இருந்த அனைவருக்குமே ஸ்ரீராமன் மேல் கோபம் எழுந்தது.
P.T மாஸ்டர் வகுப்பறையினுள்ளே வந்து ராஜசேகரிடம், “என்னடா?” என்று மிரட்ட மாலினி, “சார் அவன் எந்த பிரச்சனையும் பண்ணலை………..” 
P.T மாஸ்டர், “என்ன அவனுக்கு நீ சப்போர்ட்டா?” என்று ஒருமாதிரி குரலில் கேட்கவும்,
மாலினி, “சப்போர்ட் இல்லை சார்.. உண்மையை சொல்றேன்”
“இந்த கிளாஸ்ஸில் பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கு சமமான திமிர் இருக்குது”
“பதில் சொன்னா திமிரா சார்?”
P.T மாஸ்டர் மாலினியை முறைத்துவிட்டு ஸ்ரீராமனிடம், “என்னடா என்னவோ பிரச்சனை னு சொன்ன?”
“எஸ் சார்.. ஆனால் இவ கிட்ட பிரச்சனை பண்ணலை.. (ஜெனிஷாவை சுட்டிக் காட்டி) இவளிடம் தான்…………”
P.T மாஸ்டர் ஜெனிஷாவிடம், “என்ன பிரச்சனை பண்ணான்?”
ஜெனிஷா, “நத்திங் சார்”
P.T மாஸ்டர் ராஜசேகரை மேலும் கீழும் பார்த்தார், அந்த பார்வையில் ‘என்னடா பொண்ணுங்க சப்போர்ட் பலமோ’ என்ற அர்த்தம் இருந்தது.
ஜெனிஷா  ஸ்ரீராமனை பார்த்தபடி  ஏதோ சொல்ல வரவும் அவளை முந்திக் கொண்டு மாலினி அவசரமாக, “சார்.. இவளுடைய நோட்டை வாங்குன இவன் அதை தொலைச்சுட்டான்.. அதுக்கு இவ திட்டவும் ஸ்ரீராமன் இவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை னு தப்பா நினைச்சுகிட்டான்..”
P.T மாஸ்டர் சந்தேகமாக, “இதுக்கு எதுக்கு இத்தன பேர் இங்க நிக்குறீங்க?”
ஷங்கர், “இவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை னு தப்பா  நினைச்சு ஸ்ரீராம் ராஜசேகரை திட்ட ஆரம்பிச்சிட்டான்.. சண்டை வந்துற கூடாதே னு நாங்க இங்க வந்தோம்” என்றான். 
P.T மாஸ்டர் மாலினியை பார்க்க, அவள், “நான் இவ நோட்டை கேட்டப்ப தான் இவ அதை ராஜசேகரிடம் கேட்டாள்.. அப்போது தான்…………”
P.T மாஸ்டர், “ஓகே.. ஓகே.. நீங்க என்ன ஸ்கூல் பசங்களா? நோட்டை காணும் னு சண்டை போட்டுட்டு இருக்கீங்க” என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.
ராஜசேகர்   ஷங்கரிடம், “தேங்க்ஸ் ஷங்கர்”
ஷங்கர், “இதுக்குலாம் எதுக்கு டா” என்று புன்னகைத்தான். 
மாலினி ஸ்ரீராமனிடம், “நாலு வருஷம் ஒன்னா படிக்க போறோம்.. ஒற்றுமையா இருக்க வேண்டாமா?” என்று கேட்டவள் ‘நீ எல்லாம் மனுசனா’ என்று ஒரு பார்வையை பார்த்துவிட்டு இடத்திற்கு சென்றாள்.
ஆஷா ஸ்ரீராமனை பார்த்துக் கொண்டே, “ஜெனி P.T மாஸ்டர் கிட்ட ஏதோ சொல்ல வந்தியே! என்னது?” என்று வினவ,
ஜெனிஷா ஸ்ரீராமனை முறைத்துக் கொண்டே, “ஹ்ம்ம்.. இவன் தான் பிரச்சனை பண்ணான்.. இப்ப மாத்தி சொல்றான் னு சொல்ல வந்தேன் அந்த மாலினியால தப்பிச்சுட்டான்” என்று கடுப்புடன் கூறவும் ஸ்ரீராமன் மனதில் சிறு பயம் எழுந்து மறைந்தது, மனதினுள், ‘தப்பிச்சோம் டா.. சாமி’  என்று கூறிக்கொண்டு தன்  இருக்கையில் அமர்ந்தான்.
ஜெனிஷா ராஜசேகரிடம், “ஹலோ உன்னை காப்பாத்திட்டேன் னு கற்பனை கோட்டையை கட்டிடாதே” என்றாள். ராஜசேகர் வழக்கமான புன்னகையை உதிர்த்துவிட்டு தன் இடத்திற்கு சென்றான்.
ஆஷா, “ச.. இந்த ஸ்ரீராம் எப்படியாது தப்பிச்சிட்டே இருக்கானே.. என்னைக்கு செமத்தியா வாங்க போறான் னு தெரியலை”
ஜெனிஷா, “இதுலாம் வாங்குனாலும் திருந்தாத ஜென்மம்”
பிருந்தா, “எனக்கு உன் மேல் கோபம் மாலினி”
மாலினி ‘ஏன்?’ என்பது போல் பார்க்க பிருந்தா, “ஜெனிஷா P.T சார் கிட்ட ரப்பர் ஸ்டாம்ப் பத்தி தான் ஏதோ சொல்ல வந்தா.. நீ ட்ரக்கயே மாத்திட”
மாலினி பதில் சொல்லாமல் சிரிக்கவும் பிருந்தா, “எதுக்கு இப்போ சிரிக்கிற?”
“எங்கிருந்து டி ரப்பர் ஸ்டாம்ப் பெயரை பிடிச்ச”
“எல்லாம் நம்ம ப்ரதரோட ஆள் கிட்ட இருந்து தான்”
“ஓ.. அவ ரப்பர் தலையன் னு தானே சொன்னா”
“அவ சொன்னதையே இந்த பிருந்தா சொன்னா நல்லா இருக்காதே!”
மாலினி மீண்டும் சிரித்தாள்.
“சிரிச்சது போதும்.. ஏன் அப்படி பண்ணனு சொல்லு”
“ஏன்டி நான் படிக்க வரேனா என்குவரி அட்டென்ட் பண்ண வரேனா?”
பிருந்தா ‘என்ன’ என்பது போல் பார்க்க மாலினி, “ஜெனிஷா அந்த ரப்பர் ஸ்டாம்ப் மேல் புகார் குடுப்பா.. விசாரணை கமிஷன் ஸ்டார்ட்டாகும்.. நான் என்குவரிக்கு போகணும்.. தேவையா எனக்கு?”
“ஓ”
“அது மட்டுமில்லை.. ‘ஸ்ரீராம் என்ன பிரச்சனை பண்ணான்?’ னு P.T கேட்டா என்ன பதில் சொல்ல முடியும்?”
“நீ லேடி ஜமேஸ் பாண்டு னு அடிக்கடி ப்ரூவ் பண்றடி”
“பின்ன பிருந்தா ஒன்னு சொன்ன அது கரெக்ட்டா இருக்கும் னு ப்ரூவ் பண்ணவேண்டாமா?” என்று கூறி மாலினி புன்னகைத்தாள்.
மழை தொடரும்….

Advertisement