Advertisement

மழை 38:
தேர்வு முடிவுகள் வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. மாணவர்கள் பெற்றோர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி தெளிந்திருந்தனர்.
அன்று காலையில் ஸ்ரீராமன் வகுப்பினுள் நுழையவும், ‘Gentle Man’ திரைப்படத்தில் வரும் காட்சி ஒன்று ஒலிதம்(audio) வடிவில் ஒலிபெற்றது.. 
அந்த காட்சி இதோ:
கௌண்டமணி, “டேய் மண்டையா! இனிமே நீ இங்லீஷ் பேசுன! ஒரே அப்புல உன்ன மஸாஜ் பண்ணிடுவேன்”
செந்தில், “அண்ணே குறைச்சு பேசாதீங்க.. நானும் எஜுகெட் பாமிலி தான்”
கௌண்டமணி, “என்னது எச்சகலை பாமிலி ஆ! நீ எத்தனாவது டா படிச்சு இருக்க?”
செந்தில், “நா(ன்) ஏழாவது பாஸ் (அண்)ணே”
கௌண்டமணி, “அடேய் வண்டுருட்டான் தலையா! நான் SSLC டா”
செந்தில், “நீங்க SSLC பெயில் (அண்)ணே.. நா ஏழாவது பாஸ் (அண்)ணே” 
கௌண்டமணி, “அடேய் ….. நான் SSLC டா”
செந்தில், “நா ஏழாவது பாஸ்ங்க.. நீங்க SSLC பெயில்ங்க.. பாஸ் பெருசா! பெயில் பெருசா?”
கௌண்டமணி, “அய்யோ ராமா! என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோடலாம் கூட்டு சேர வைக்கிற?”
என்று அந்த ஒலிதம் முடிந்தது. 
கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீராமன் செய்த அலப்பறையின் பிரதிபலிப்பே இந்த ஒலிதம். (தேர்வு முடிவுகள் வந்த அன்று ஸ்ரீராமன் வரவில்லையே) 
ஸ்ரீராமன் ஒலி வந்த இடத்தை பார்க்க, மாணவிகள் பக்கமிருந்த கடைசி இருக்கையில் தனியாக இருந்த கைபேசியில் இருந்து தான் அந்த ஒலித்தம் கேட்டது. யார் செய்தார்கள் என்பதை தற்போது கண்டறிய முடியாது என்பது ஒரு பக்கம் இருக்க கண்டு பிடித்தாலும் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் சிறு தோள் குலுக்கலுடன் தன் இடத்தில் அமர்ந்தான். முன்பு போல் இப்போதெல்லாம் கோபம் கொண்டு துள்ளுவது இல்லை, அதற்கு பதில் ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பது போல் நடந்து கொள்வான். அல்லது எருமை மாட்டின் மீது பெய்த மழை போல் கண்டுகொள்ளாமல் இருந்துக் கொள்வான். 
அவன் அமர்ந்ததும், “நோ சூடு.. நோ சொரணை.. நோ பாதர்(bother)” என்ற நித்தியானந்தாவின் ஒலித்தம் ஒலித்தது.
வகுப்பில் இருந்தவர்கள் சன்னமாக சிரிக்க, அதை அவன் கண்டு கொள்ளவே இல்லை.
மாலினி மென்னகையுடன் பிருந்தாவிடம், “உன் ஆளு வேலை தான்” என்று கூற,
அவளும் மென்னகையுடன், “கடைசியா கேட்ட நித்தியானந்தா ஆடியோ தான் அவன் போட்டது.. கௌண்டமணி செந்தில் காமெடி போட்டது யாரு னு தெரியலை.. ஏன்னா இந்த வண்டுருட்டான் மண்டையன் விஷயத்தில் எல்லா பசங்களுமே தீயா வேலை செய்வான்க”
“ஹ்ம்ம்”
“எப்படி தான் கரெக்ட்டா பிடிச்சு போடுறான்களோ?”
“நீ வேற! மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தோத்துருவாங்க இவன்ககிட்ட”
“ஹ்ம்ம்”
வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும் அவர்களின் பேச்சு திசை மாறி ஆசிரியர் வந்ததும் நின்றது.
காலை தேநீர் இடைவேளையில் இவர்கள் இருப்பிடத்திற்கு வந்த ஜெனிஷா, “காலையில் கேட்ட பெல் காமெடி எப்படி இருந்துது?”
பிருந்தா, “பெல்லா?”
ஆஷா, “கௌண்டமணியை தான் பெல் னு சொல்றா”
மாலினியும் பிருந்தாவும் ஆச்சரியம் கலந்த சிறு அதிர்ச்சியுடன் பார்க்க, அவர்கள் மனநிலையில் இருந்தாலும் நந்தினி அமைதியாக இருந்தாள்.
ஜெனிஷா, “ஏன் பசங்க மட்டும் தான் போடணுமா?” என்று கேட்டு கண்சிமிட்ட,
மாலினி ஒரு தினுசாக தலையை ஆட்ட, 
பிருந்தா, “சூப்பர் ஜெனி” என்றபடி ஜெனிஷாவுடன் கை தட்டினாள்.
ஜெனிஷா நந்தினியை பார்த்து, “அது எப்படி க்ரப்(CRAB) எப்போதும் எக்ஸ்ப்ரஷன் இல்லாம இருக்க முடியுது?”
ஆஷா, “அதானே! பின்னாடி மடம் எதுவும் ஆரம்பிக்க போறியா?”
ஜெனிஷா, “இப்பலாம் சாமியார்கள் தான் அந்த விஷயத்தில் ஹ..ஹ..ஹன்” என்று தலை சரித்தபடி கூறி கண்சிமிட்ட,  
ஆஷாவும் பிருந்தாவும் சத்தமாக சிரிக்க, 
மாலினி மென்னகையுடன், “சரியான எக்ஸ்சாம்பிள் ஜெனி” என்றாள்.
ஜெனிஷா நந்தினியை பார்த்தபடி சுவாரசிய குரலில், “எப்படி சொல்ற?”
மாலினியும் நந்தினியை பார்த்தபடி, “பார்க்க தான் ஒன்னும் தெரியாதது போல் இருக்கும் ஆனா………” என்று இழுக்க, நந்தினி அவளை முறைக்க,
ஜெனிஷா மென்னகையுடன், “ஆனா எல்லாம் தெரிந்து தெரியாதது போல் இருப்பா சாமியார்கள் போல” என்று முடித்தாள்.
நந்தினி இருவரையும் முறைத்தபடி, “நான் மடம் ஆரம்பிக்க போறேன் என்றோ சாமியார் ஆக போறேன்னோ உங்களிடம் சொன்னேனா?”
ஜெனிஷா, “மேடம் அவளோட ஆள் கிட்ட மட்டும் தான் இந்த மாதிரி பார்வை பேச்சு கூட வச்சுப்பாங்க போல” என்று கிண்டலாக கூற,
நந்தினி அலட்டிக் கொள்ளாமல், “ஆமா” என்று கூற,
மற்றவர்கள், “பார் டா!” என்றனர். 
ஜெனிஷா பிருந்தாவை பார்த்து, “பெல் காமெடி போட்டது உன் ஆளு னு தானே நினைத்த?”
பிருந்தா, “என் ஆளா? எனக்கு தெரிந்து அப்படி யாரும் இல்லையே”
ஜெனிஷா, “ஹேஹேஹே!”
“என்ன?” என்று பிருந்தா மிடக்காக வினவ,
ஜெனிஷா, “யாருக்காக நீங்க டயட் இருந்து மாலினி சைஸ்க்கு மாற பார்க்குறீங்க னு எங்களுக்கும் தெரியும் மேடம்”
“ஹே.. அப்படியெல்லாம் எதுவும் இல்லை” என்றபோது அவளையும் மீறி அவள் முகத்தில் சிறு வெக்கம் பூத்தது.
ஜெனிஷா, “உலக வரலாற்றில் முதல் முறையாக பிருந்தா வெக்கப்படுறா” என்று கூற, 
பிருந்தா, “ஏய்!” என்றபடி ஜெனிஷாவை அடிக்க,
மாலினி, “உனக்கு தான் முதல் முறை.. நாங்கலாம் பல முறை பார்த்துட்டோம்”
ஜெனிஷா, “அப்டிங்கிற!”
மாலினி, “ஆமாங்கிறேன்”
பிருந்தா, “நல்லா தானே போய்கிட்டு இருந்துது! காத்தை ஏன் என் பக்கம் திருப்புறீங்க?” என்று கூற,
ஜெனிஷா கையில் இருந்த கைபேசியை காட்டினாள். அதில் பிருந்தா வெக்கப்பட்டு பேசியது படமாக இருந்தது.
மாலினி, “செம!” என்று கூற,
ஜெனிஷா, “இதை உன் ஆளுக்கு அனுப்பிடவா ஜில்ஸ்?” என்றாள்.
தன் புகைப்படத்தை ரசித்துக் கொண்டிருந்த பிருந்தா திடுக்கிட்டு, “ஏய் அப்படி எதுவும் செய்திடாத.. முதல்ல அதை டெலிட் பண்ணு” என்றபடி கைபேசியை பிடுங்க பார்க்க ஜெனிஷா பின்னால் நகர்ந்தாள்.
இருவரும் வகுப்பினுள் மாணவிகள் இருக்கும் பக்கம் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,
“என்னதிது? சென்ஸ் இல்லை? இப்படி ஓடிப்பிடித்து விளையாடிட்டு இருக்கிறீங்க?” என்ற வெட்டுக்கிளியின்(PT சார்) குரலில் இருவரும் ஓட்டத்தை நிறுத்தி திரும்பி பார்த்தனர்.
வெட்டுக்கிளி, “என்ன?”
முகத்தை அப்பாவியாக வைத்தபடி ஜெனிஷா, “ஒரு பொண்ணும் பையனும் ஓடிப்பிடித்து விளையாடினா தானே சார் தப்பு?” என்று வினவினாள்.
‘உடம்பு பூரா விஷமமும் விஷமும் தான்’ என்று முணுமுணுத்தவர் முறைப்புடன், “சிட் இன் யுவர் ப்ளேசஸ்” என்றுவிட்டு வெளியேறினார்.
மதிய உணவு இடைவேளையில் ஜெனிஷா தான் கௌண்டமணி செந்திலின் ஒலிதம் போட்டது என்பதை அறிந்த ஸ்ரீராமனால் அதை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. பசங்களில் யாராவது செய்திருந்தால் சாதாரணமாக கடந்திருப்பான். ஆனால் ஒரு பெண் அதுவும் ஜெனிஷா என்றதும் அவனுள் சிறு கோபம் எழுந்தது. 
அவன் ராஜசேகரிடம் சென்று சிறு கோபத்துடன், “சேகர் உன் ஆளை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லு” என்றான்.
ராஜசேகரோ, “அடக்கி வாசிக்கிறதை பத்தி நீ சொல்றியா?” என்றுவிட்டு சென்றான்.
ஸ்ரீராமன் கோபத்துடன் குதிக்க,
“நீ ஏன் இதை செய்தது பொண்ணு னு பிரிச்சு பார்க்கிற? செய்தது நம்ம கிளாஸ்மேட்.. எல்லோரையும் கிண்டல் செய்வது போல் உன்னையும் செய்திருக்கா னு நினைச்சுக்கோ” என்று கிருஷ்ணமூர்த்தியும் புழாவும் ஏதேதோ சொல்லி அவனை அடக்கினர் 
அதன் பிறகு அன்றைய நாள் எப்பொழுதும் போல் கழிந்தது.
நாட்கள் மெல்ல கடக்க சில நாட்களாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது. அதாவது உள்நாட்டு(வகுப்பினுள் மாணவர்கள் இடையே) சிறு சிறு சண்டைகள் நடந்தாலும் விசாரணை என்று ஆசிரியர்களிடம் எதுவும் செல்லவில்லை.
இரண்டாவது அரையாண்டு தேர்விற்காக என்று குறிப்பிட்ட கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் கட்டச் சொல்ல, அது சற்று அதிகமாக இருக்கவும் ராகேஷ் தலைமையில் போராட்டாம் தொடங்கியது.
அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களிடமும் பேசிய ராகேஷ் அன்று காலையில் அனைவரும் வந்ததும் வகுப்பினை விட்டு வெளியே வந்து நின்றுக் கொண்டு தர்ணா 
செய்யுமாறு கூறியிருந்தான்.
அவ்வாறே போராட்டம் தொடங்கியது ஆனால் CSE மற்றும் IT பிரிவினரை தவிர மற்றவர்கள் ஆசிரியர் வந்து கூறியதும் வகுப்பினுள் சென்றுவிட்டனர்.
கல்லூரி நிர்வாக மேலாரர் வந்து  பேசியதும் IT பிரிவை சேர்ந்த மாணவி ஒருத்தி உள்ளே செல்லவும் மற்றவர்கள் வேறு வழி இன்றி உள்ளே சென்றனர்.
ஆனால் CSE மாணவர்கள் உள்ளே செல்ல மறுத்தனர்.  ஆசிரியர்கள் HOD பிரின்சிபால் மேலாளர் என்று அனைவரும் பேசிப்பார்த்தனர் ஆனால் மாணவர்கள் அசையவில்லை. தாரிக்கா குழு கூட அசையவில்லை.
இறுதியாக சேர்மேன் வந்து கட்டணத்தை குறைப்பதை பற்றி பரிசிலிப்பதாக கூறிய பிறகே உள்ளே சென்றனர்.
வகுப்பின் உள்ளே சென்றதும் மாணவர்கள் “ஹே” என்று கூச்சலிட்டு தங்கள் வெற்றியை கொண்டாடினர்.
ஆனால் அதே கட்டணத்தை நிர்வாகம் அவர்களை கட்ட வைத்தது வேறு விஷயம். அனைத்து பிரிவினரும் கட்டியதால் வேறு வழி இன்றி இவர்களும் கட்டினர். இருப்பினும் இவர்களின் போராட்டம் கல்லூரி முழுவதும் பேசப்பட்டு ஆசிரியர்கள் பிரின்சிபால் மேலாளர் என்று அனைவரும் சேர்மேனிடம் திட்டு வாங்கியது தனிக் கதை.
அதன் விளைவாக இவர்களது இன்டர்னல் மதிப்பெண்ணில் ஆசிரியர்கள் கை வைத்தனர். எப்பொழுதும் போல் அதை இவர்கள் பொருட்படுத்தவில்லை.
முதலாம் ஆண்டின் முடிவில் CSE வகுப்பிற்கு “RDX” என்ற பட்டப்பெயர் கிடைத்தது.
குறிப்பு:- இன்னும் சில புதிய அறிமுகங்களுடன் இவர்களின் இரண்டாம் ஆண்டு லூட்டிகளை இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்……….. 
 
மழை தொடரும்….

Advertisement