Advertisement

மழை 34:
மதிய இடைவேளை முடிந்து முதல் வகுப்பு நடந்துக் கொண்டிருந்தது.
கணித ஆசிரியர் ஜிண்டா என்ற ரத்னவேல் பாண்டியன் ஒரு கணக்கிற்கு விடை காண போராடிக் கொண்டிருக்க உண்ட மயக்கத்தில் சிலர் உறங்கிக் கொண்டிருக்க, அதில் நம்ம சிவகுருவும் ஒருவன்.
விடை காண முடியாத எரிச்சலுடன் திரும்பிய ஜிண்டாவின் கண்ணில் சிவகுரு தென்பட அவர் கோபத்துடன் சுண்ணத்துண்டை அவன் மீது எறிந்தார்.
“எவன் டா அந்த நாதாரி” என்ற வசை மொழியுடன் கண் விழித்தவனை “ஹே யூ கெட் அப்” என்ற ஜிண்டாவின் குரல் வரவேற்றது. 
(அவனது கூற்று அவரை எட்டவில்லை போல)
அவன் எழுந்து நின்றதும் அவர், “வாட் யூ தின்க் இன் மைண்டு? ஹொவ் யூ ஸ்லீப்?”
“நோ சார்”
“வாட் நோ?”
“ஐ நோ ஸ்லீப்”
“ஐ சா யூ ஸ்லீப்”
“யூ ஸா மீ க்ளோஸ் ஐஸ் பட் ஐ நோ ஸ்லீப் சார்”
அவனது ஆங்கிலத்தில் அவர் அவனை முறைத்தபடி பல்லை கடித்துக் கொண்டு, “டோன்ட் லை” என்றார்.
அவனோ அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, “மீ நோ லை சார்.. ரில்லி(ரியலி என்ற ஆங்கில வார்த்தையை ஜிண்டா இப்படி தான் சொல்வார்) மீ நோ ஸ்லீப் சார்.. ஐ க்ளோஸ் ஐஸ் அண்ட் தின்க் சம் ஸ்டெப்ஸ்.. யூ பார் மிஸ்டேக் மீ சார்”
அப்பொழுது ஸ்ரீராமனும் செல்வராஜும் வந்தனர். ஸ்ரீராமன், “எக்ஸ்கியூஸ் மீ சார்” என்றான்.
சிவகுருவின் மீது இருந்த கோபம் அவர்கள் மேல் திரும்ப அவர் கோபத்துடன், “வென் பெல் ரிங்? வென் யூ கம்? வாட் யூ தின்க்? யூ கோ வேர்? வொய் லேட்?” என்று கேள்விகளை அடுக்க,
செல்வராஜ் கடுப்புடன் அவரை பார்க்க, ஸ்ரீராமன் பவ்வியமான குரலில், “சேர்மன் சார் கால்டு அஸ் சார்”
“சேர்மன் சார் கால்டு! வாட் யூ டூ?”
“நத்திங் சார்”
“டோன்ட் லை..”
“நோ சார்………..” என்று ஸ்ரீராமன் ஆரம்பிக்க அவரோ எரிச்சலுடன், “திஸ் கிளாஸ் ஆல் லை”  என்றவர், “நோ ரீசன் வொய் சேர்மன் காள் யூ?” என்றார் ஸ்ரீராமனை பார்த்து.
“ஸ்மால் பைட்”
“வாட் பைட்?” என்றபோது வகுப்பு முடிவதற்கான மணி அடிக்கவும் செல்வராஜ் ஜிண்டாவிடம் அனுமதி கேளாமல் உள்ளே சென்று இடத்தில் அமர்ந்தான்.
அவர் கோபத்துடன், “ஹே யூ! ஹொவ் யூ கோ இன்?”
செல்வராஜ் நக்கல் குரலில், “காலால தான் வந்தேன்” என்றான்.
அவர் முறைக்க, ஸ்ரீராமன் இன்னும் பவ்வியமான குரலில், “சார்.. மே ஐ கம் இன்?” என்று வினவினான்.
“ஹ்ம்ம்.. கோ இன்..” என்றவர் செல்வராஜ் மற்றும் சிவகுருவை முறைத்துவிட்டு வெளியே சென்றார். 
ராகேஷ் செல்வராஜிடம், “என்னாச்சு?”
செல்வராஜ், “அந்த ஆளுக்கு போய் எதுக்கு டா இவ்ளோ பில்டப்?”
“யாரு?”
“சேர்மன் தான்”
“ஏன்?”
“பின்ன என்னடா! இந்த …………(ஸ்ரீராமனை திட்டினான்) பார்த்து ‘சண்டியர் னு நினைப்பா’ னு கேட்கிறாரு..”
சிவகுரு, “அதானே! உன்னை சொன்னாலாவது பொருந்தும்”
செல்வராஜ் அதை கண்டுகொள்ளாமல், “இவன்லாம் அவ்ளோ வொர்த்தே இல்லை”
சிவகுரு மென்னகையுடன், “அவன் செகண்ட் டைம் அவரை பார்க்கிறதால் கேட்டிருப்பார்” என்றான்.
ராகேஷ், “அதை விடு.. நீ என்ன சொன்ன? அவர் என்ன கேட்டார்?”
செல்வராஜ், “பெருசா ஒன்னுமில்லை.. என்ன சண்டை னு கேட்டார்.. நான் அவன் என்னோட சாப்பாட்டை தட்டி விட்டுட்டான் னு சண்டை போட்டேன் னு சொன்னேன்”
சிவகுரு, “இவ்ளோ மொக்கையான காரணத்தை நம்பினாரா?”
செல்வராஜ், “நான் தான் சொன்னேனே அந்தாளு பெரிய பருப்பெல்லாம் இல்லை”
ராஜசேகர், “பெரம்படி வாங்கி இருந்தா தெரியும்டி”
செல்வராஜ் தோளை குலுக்க, ராகேஷ், “கேள்வியே கேட்காம நம்பிட்டாரா?”
செல்வராஜ், “லேசர் பார்வை பார்க்கிறதா நினைச்சுட்டு கேவலமா ஒரு பார்வை பார்த்தார்.. நான்.. ‘எனக்கு சாப்பாடு விஷயத்தில் சட்டுன்னு கோபம் வந்திரும்.. கோபத்தில் இவன் சட்டையை பிடிச்சுட்டேன்.. பொண்ணுங்க முன்னாடி அப்படி பண்ணதும் இமேஜ் டேமேஜ் ஆகிருச்சுன்னு இவன் கோபத்தில் என் சட்டையை பிடிச்சான்.. அப்பறம் பிரெண்ட்ஸ் சண்டை வராம தடுத்துட்டாங்க’ னு சொன்னேன்”  
ராகேஷ், “அவன் என்ன சொன்னான்?”
செல்வராஜ், “நீ ஏன் டா இப்படி விசாரணை கமிட்டி வச்சு உசுர வாங்குற” என்றான் கடுப்புடன்.
ராகேஷ், “வாதீஸ் யாரும் எங்களை கேட்டா நாங்களும் இதையே சொல்லணுமே அதான்.. சரி விடு.. ஆனா இனி இப்படி சண்டை போட்டு மாட்டிக்காத”
செல்வராஜ் முறைக்க, ராகேஷ் சிறு பெருமூச்சை வெளியிட்டான்.
செல்வராஜ், “நான் இப்படி தான் னு தெரியும் தானே!”
“ஹ்ம்ம்.. நானும் இப்படி தான் உன்னை சொல்வேன் னு உனக்கு தெரியும் தானே!”
“அப்போ என் பதிலும் உனக்கு தெரியும்.. ஸோ விடு”
“ஏன் டா இப்படி! கொஞ்ச நாளைக்கு கொஞ்சமே கொஞ்சம் அடக்கி வாசி னு தானே சொல்றேன்”
“அது அவன் நடந்துக்கிறதை பொருத்து” 
ராகேஷ், “டேய்” என்றபோது ஆசிரியர் உள்ளே வரவும் அவர்கள் பேச்சு தற்காலிகமாக நின்றது.
இவர்கள் பேசிய அதே நேரத்தில் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீராமனிடம், “என்னாச்சு டா?”
“அதை அவனிடம் கேளு”
“ஏன் நீ சொல்ல மாட்டியா?”
“எல்லோரும் அவனை தானே தூக்கி வச்சு கொண்டாடுறீங்க”
“நீ அப்படி நினைக்கிறதால் உனக்கு அப்படி தோணுது”
“தோணலை.. அது தான் நிஜம்”
“எதை வச்சு இப்படி சொல்ற?”
“அவன் என்ன பண்ணலும் எல்லோரும் என்னை தானே திட்டுறீங்க? இல்லை கேவலமா பார்க்கிறதோ பேசுறதோ என்னை தானே!”
“நீ ஏன் அப்படி பேசுற?”
“பார்த்தியா இப்ப கூட என்னை தான் சொல்ற”
“அவன் தப்பா பேசினா அவனையும் தான் சொல்றேன்”
“நான் அப்படி என்ன தப்பா கேட்டேன்? அவன் நடந்துகிட்டது அப்படி தானே இருந்துது! எனக்கும் மாலினிக்கும் நடுவில் வர அவன் யாரு?”
“ஸ்ரீராம்” என்று கிருஷ்ணமூர்த்தியின் குரல் கண்டிப்புடன் வரவும்,
அவன், “பார்த்தியா அவனை சொன்னதும் நீ கோபப்படுற?”
“உன்னை திட்டினா அவனை சப்போர்ட் பண்றதா அர்த்தமா?”
“என்னை எதுக்கு திட்டுற?”
“நீ தப்பா பேசாத”
“அவன் பேசினா சரி.. நான்…….”
“டேய் நான் செல்வாவை இப்போ சொல்லவே இல்லை.. உன் பேச்சை மட்டும் தான் சொல்றேன்.. நீ தேவை இல்லாம மாலினியை இழுக்காத”
ஸ்ரீராமன் சந்தேகமாக பார்க்கவும் கிருஷ்ணமூர்த்தி, “உன் புத்தி இருக்குதே! எனக்கு மாலினி நல்ல தோழி.. செல்வாவும் நீ நினைப்பது போல் இல்லை.. அது என்ன! உனக்கும் மாலினிக்கும் நடுவில் னு சொல்ற! இது தான் தப்பு னு சொல்றேன்.. உண்மையிலேயே உனக்கும் அவளுக்கும் நடுவில் எதுவும் இல்லை..”
“டேய்……..”
“சும்மா சும்மா துள்ளாத.. உண்மையை தானே சொல்றேன்.. இது தான் உண்மை னு உனக்கும் தெரியும்.. முதல்ல ஒரு பொண்ண உரிமை கொண்டாடுறதை நிறுத்து.. ஒரு பொண்ணோட பெயரை டேமேஜ் பண்ணாத.. மாலினி னு இல்லை.. இதை நான் பொதுவா தான் சொல்றேன்.. உன் அக்காவை இப்படி ஒருத்தன் பேசினா உனக்கு எப்படி இருக்கும்?”
ஸ்ரீராமன் அமைதியாக இருக்கவும் கிருஷ்ணமூர்த்தி, “என்ன பதிலை காணும்?”
ஸ்ரீராமனுக்கு தன் தவறு புரிந்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் மனமின்றி, “விட்டா நீ எல்லா பொண்ணுங்களையும் அக்கா தங்கச்சி போல பார்க்க சொல்லுவ”
“அப்படி சொல்லலை.. கடலை போடுறது வேற ஒரு பொண்ணை உன் ஆளு னு தப்பா ப்ரோஜெக்ட் பண்றது வேற..”
“நான் ஒன்னும்…………….”
“நீ யாரு! எப்படி பட்டவன் னு எல்லோருக்குமே தெரியும்.. சரி இதை விடு.. சேர்மன் என்ன கேட்டார்? நீ என்ன சொன்ன?”
“நான் ஒன்னும் சொல்லலை.. அந்த நாதாரி தான் என்னை கோர்த்து விட்டான்” என்று கூறி செல்வராஜ் பேசியதை கூறினான்.
“நீ என்ன சொன்ன?”
“நான் அமைதியா திட்டு வாங்கிட்டு வந்தேன்”
“ஹ்ம்ம்.. அடுத்து சார் யாராச்சும் கூப்பிட்டு போட்டு வாங்க பார்த்தா உன்னை அறியாம உளறிடாத”
ஸ்ரீராமன் முறைப்புடன், “அவனையே………………..”
“உன்னை என் நண்பனா நினைப்பதால் தான் உன்னிடம் இதை சொல்றேன்.. அவனிடம் சொல்வியா னு கேட்காத.. அவன் சொன்னா கேட்கிற ஆளா? நீ எடுத்து சொன்னா கேட்டுக்குவ என்ற நம்பிக்கையில் சொல்றேன்” என்று கூற ஸ்ரீராமன் உள்ளுக்குள் உண்மையாகவே சிறிது உருகினான் தான். முதல் முறையாக தன்னை நண்பனாக மதித்து பேசும் ஆள் என்ற நினைப்பில் கிருஷ்ணமூர்த்தி மீது அவனையும் அறியாமல் நட்பு என்ற பிணைப்பு ஏற்பட்டது.
ஸ்ரீராமன் அமைதியாக இருக்கவும் கிருஷ்ணமூர்த்தி, “என்ன டா அமைதியா இருக்கிற?”
“தேங்க்ஸ் டா” என்றான் சிறிது நெகிழ்ந்த குரலில்.
கிருஷ்ணமூர்த்தி மென்னகையுடன் அவன் கையை தட்டிக் கொடுத்து, “நீ நல்லவன் தான் டா.. என்ன! சில நேரம் கொஞ்சம் சுயநலமா யோசிப்ப, கொஞ்சம் ஸீன் போடுவ அதுவும் பொண்ணுங்க கிட்ட அதிகமா..” என்றவன் புன்னகையுடன், “கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து உன் கரெக்டரை செதுக்கினா ரொம்ப நல்லவன் ஆகிடுவ..”
“நான் இப்படியே இருந்தா பேச மாட்டியா?”
“உன்னை அப்படியே ஏத்துக்கிறது தான் நட்பு ஆனா நல்ல நட்புக்கு அழகு நண்பன் தவறை சுட்டிக்காட்டி திருத்துவது.. நான் பெரிய பருப்பு! பெர்பெக்ட் அப்படிலாம் சொல்லலை.. என்னிடம் இருக்கும் தவறை நீ சொல்லு.. நான் திருத்திக்கிறேன்” என்றவன் புன்னகையுடன், “பிரெண்ட்ஸ்” என்றபடி கையை நீட்டினான்.
இருவரும் கைகுழுக்கியதும் புழா கையை நீட்ட ஸ்ரீராமன் ஆச்சரியத்துடன் கையை குழுக்கினான்.
புழா மென்னகையுடன், “நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் தானே!”
ஸ்ரீராமன், “அப்போ கிருஷ்ணா என்னிடம் பேசுறதை நிறுத்திட்டா நீயும் பேச மாட்டியா?”
புழா, “அவன் கோபம் நியாயமானதா இருந்தா பேச மாட்டேன்.. இல்லை அவனுக்கு எடுத்து சொல்வேன்”
“நீ இவ்ளோ பேசுவியா?”
“தேவைனா பேசுவேன்”
கிருஷ்ணமூர்த்தி, “சார் எல்லாரும் உன்னை தான் டார்கெட் பண்றாங்க.. ஜாக்கிரதையா நடந்துக்கோ”
“என்னை ஏன்டா டார்கெட் பண்றாங்க?”
“ஏன்னா நீ தான் லூஸ் டாக் விடுற.. அதை வச்சு நமக்குள்ள சண்டை ஏற்படுத்த பார்க்கிறாங்க.. பார்த்து நடந்துக்கோ.. ஏற்கனவே நீ லூஸ் டாக் விட்டதால் தான் பிரச்சனை.. பசங்க நமக்குள் எவ்ளோ வேணா கருத்து வேறுபாடோ சண்டையோ இருக்கலாம் ஆனா அது நமக்குள் மட்டுமே இருக்கனும்……….” என்று சொல்லிக் கொண்டிருந்த போது ஆசிரியர் உள்ளே வரவும் பேச்சு நின்றது.
ஆசிரியர் வருவதற்கு முன் பிருந்தா மாலினியிடம், “என்னடி தோட்டக்காரன் பாசப் பயிரை எதிரி நாட்டில் நட்டுட்டு இருக்கிறான்!”
மாலினி முறைக்கவும் பிருந்தா, “வர வர நீ நந்தினி வெர்சன் டூ வா மாறிட்டு வர.. நல்லதுக்கில்லை”
நந்தினி, “யாருக்கு நல்லதில்லை? உனக்கு தானே!”
“இதுக்கு மட்டும் கரெக்ட்டா ஆஜர் ஆகிருவியே!” என்று நந்தினியிடம் கூறியவள் மாலினியிடம், “இப்போ எதுக்கு டி என்னை பார்த்து முறைச்ச?”
“தோட்டக்காரன் னு சொல்லாத னு எத்தனை முறை சொல்றேன்”
“அப்போ நீயே ஒரு நல்ல பெயரா சொல்லு”
“அதை அப்பறம் யோசிப்போம்.. அதுவரை அவனை ஒழுங்கா பெயர் சொல்லியே கூப்பிடுற”
“ட்ரை பண்றேன்”
மாலினி முறைப்பை தொடரவும் பிருந்தா, “மூர்த்தி னே சொல்றேன்.. மலை இறங்குடி மாரியாத்தா” என்றாள்.
மாலினி லேசான புன்னகையுடன், “சரி.. அது என்ன எதிரி நாடு?”
இப்பொழுது பிருந்தா முறைப்புடன், “ஏன் னு உனக்கு தெரியாதா?”
“அவனும் நம்ம கிளாஸ் தானே டி”
“ஆனா அவன் அப்படியா நடந்துக்கிறான்?”
“அப்போ தாரிக்காவையும் அப்படி தான் சொல்லுவியா?”
“அது.. ப்ச்.. என்னவோ இவனை கண்டா எரிச்சலா தான் வருது.. ஆனா நீ எப்படி தான் இப்படி இருக்கிறியோ? அதுவும் உன்னை அவன் உரிமையா பேசியும் உனக்கு எப்படி கோபமோ எரிச்சலோ வரலை?”
“வரலை னு யாரு சொன்னா?”
“நீ ஒரு வித்யாசமான டிஸைன் டி”
மாலினி மென்னகையுடன், “எனக்கும் அவன் மேல கோபமும் எரிச்சலும் இருக்குது தான் ஆனா வெறுப்பு இல்லை.. எதிரி னு சொல்ற அளவிற்கு அவன் கேட்டவன் இல்லை.. அவன் அன்னைக்கு சொன்னதை வைத்து பார்த்தா.. அவன் வேணும் னு யாரையும் போட்டு கொடுக்கலை.. அவனையும் அறியாமயும் கொஞ்சம் செல்பிஷ்……………”
“உனக்கே ஓவரா இல்லை? கொஞ்சம் செல்பிஷ் ஆ!”
“சரி.. அவன் செல்பிஷ்ஷா யோசிக்கிறான் தான்.. பட் எனக்கு என்ன தோணுது னா ஒருவேளை அவனுடன் யாரும் நட்புடன் பழகி இருந்தால் அவன் அப்படி யோசிக்காமல்.. நாம, நம்ம கிளாஸ், நம்ம பிரெண்ட்ஸ் னு யோசித்து இருப்பானோ னு தோணுச்சு”
“..”
“என்னடி அமைதியா இருக்கிற?”
“நான் தான் நீ வித்யாசமான டிஸைன் னு சொல்லிட்டேனே!” என்றவள், “அவன் உன்னிடம் உண்மையை சொல்லியிருப்பான் னு எப்படி சொல்ற? அவன் ஒரு பொய் பாக்டரி”
“அவன் பொய் சொல்லுவான் தான் ஆனா என்னிடம் நல்ல பெயர் வாங்கணும் னு அவனுக்கு ஒரு எண்ணம் எப்போதும் உண்டு அதனால் ஸீன் போடுற நேரம் தவிர மத்த நேரம் என்னிடம் உண்மையை தான் பேசுவான்” என்றபோது தான் ஆசிரியர் வரவும் இவர்கள் பேச்சும் நின்றது.
மாலினியின் எண்ணம் தான் கிருஷ்ணமூர்த்திக்கும்.. அதனால் தான் ஸ்ரீராமனிடம் நட்பாக பேசினான். இவர்கள் எண்ணம் போல் ஸ்ரீராமன் மாறுவானா பார்க்கலாம்…………….  
  
மழை தொடரும்….

Advertisement