Advertisement

மழை 33:
மதிய இடைவேளையில் சிவகுரு வாங்கிய ‘வெஜ் ரோலை’ சக்திவேல் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஜெனிஷா அவனை பார்த்து கிண்டலாக சிரித்தாள்.
அதை கவனித்த சக்திவேல் ராஜசேகரிடம், “உனக்கும் ஜெனிக்கும் சண்டையா?”
“இல்லையே ஏன் கேட்கிற?”
“இல்ல பட்சி என்னை பார்த்து சிரிக்குதே! அதா…ன்…..” என்று அவனது குரல் சுருதி இறங்கி நின்றது ராஜசேகரின் கடுமையான முறைப்பில்.
அனீஸ், “உன்னை பார்த்து சிரிச்சா னு எந்த அர்த்தத்தில் நீ சொல்ற!”
சக்திவேல், “என்ன டா?”
“இல்ல.. அன்னைக்கு ZZZ VVV கூட ப்ரேக்-அப் ஆனதும் உன்னை பார்த்து சிரிச்சா னு சொன்னியே! ஸோ ஜெனி அதை மாதிரி னு சொல்ல வரியா?” என்று அவன் முடிக்கவும் சக்திவேல் ராஜசேகரிடமிருந்து குத்து வாங்கினான்.
‘இந்த பக்கி நம்மை போட்டு கொடுக்குது னு தெரியாம வாயை கொடுத்து மூக்கை புண்ணாக்கிட்டயே சக்தி’ என்று மனதினுள் புலம்பினான்.
மூக்கை தொட்டு பார்த்தவன் அது ‘வின் வின்’ என்று வலிக்கவும் ராஜசேகரை பாவமாக பார்த்து, “ஏன் டா!” என்றான்.
ராஜசேகர் கோபத்துடன், “அவன் சொன்னது போல் நீ யோசிக்கலை னு சொல்றியா?” 
“அது.. அது.. அப்படியில்லை”
“பின்ன எப்படி?”
“சரி விடு டா.. தெரியாம சொல்லிட்டேன்.. இனி அப்படி நினைக்கக் கூட மாட்டேன்”
“ஏன் நினைச்சு தான் பாரேன்”
“ஏன் டா! அதான் மாட்டேன் னு சொல்றேனே! கையை இறக்கு டா.. நெஞ்சு பகீர்னு ஆகுதுல” என்று அழாத குறையாக கெஞ்சி ராஜசேகரை மலை இறக்கினான்.
சக்திவேல் அனீஷை முறைக்க, அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் நடிகர் சந்தானம் ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் கூறியது போல் “மச்சி நீ இப்போ ‘யா.. இட்ஸ் மீ டுடே’ னு சொல்லணும்” என்றான். 
சக்திவேல் முகத்தை சுருக்கி முறைக்க முயற்சித்து மூக்கு வலி எடுக்கவும் ‘ஷ்’ என்றபடி மூக்கை பிடித்தான்.
சிவகுரு மென்னகையுடன், “விட்றா(விடு டா).. அடி உதையெல்லாம் உனக்கென்ன புதுசா”
“எல்லாம் என் நேரம் டா! கூடவே ஒரு சகுனியை வச்சிருக்கிறேன்”
“இப்போ ஏதும் சொன்னியா டா நண்பா?” என்று அனீஸ் வினவ சக்திவேல், “ஹ்ம்ம்.. சுரைக்காய்க்கு உப்பில்லை னு சொன்னேன்”
“ஓ” என்றான் அனீஸ்.
சில நொடிகள் கழித்து சக்திவேல் சிவகுருவின் காதில், “என்ன காரணமா இருக்கும் டா?” என்றான்.
“என்ன டா?”
“ஜெனி சிரிச்ச காரணம்”
அவனை மேலும் கீழும் பார்த்த சிவகுரு, “நீ சேகரோட இடி தாங்கியா மாறப்போரடா”
“ஏன் டா!!!!!!!!!!!!!!!!!!”
அப்பொழுது ராஜசேகர், “என்ன டா?” என்று வினவ, சக்திவேல், “ஒன்னுமில்லை டா.. ஒன்னுமே இல்லை” என்று அலறினான்.
“உன் அலறலே என்னவோ இருக்குது னு சொல்லுதே”
அனீஸ் ஏதோ சொல்லப் போக அவன் வாயை மூடிய சக்திவேல், “நீ ஆணியே புடுங்க வேணாம்.. மூடிட்டு இரு” என்றான்.
அப்பொழுது இவர்கள் அருகே வந்த ஜெனிஷா சிரிப்புடன், “நான் ஏன் சிரிச்சேன் னு தெரியனுமா?”
முதலில் ‘ஆமா’ என்பது போல் தலையை ஆட்டியவன் ராஜசேகரை பார்த்ததும் ‘இல்லை’ என்று வேகமாக தலையை ஆட்டினான்.
ஜெனிஷா சிரிப்புடன், “நீ சாப்பிட்ட ‘வெஜ் ரோலை’ குரு பிருந்தாவுக்கு வாங்கிட்டு வந்தான்.. அப்பறம் XXX YYYக்கு கொடுத்தது.. அதை அவ சாப்பிட்டா அவன் லவ்வ அக்செப்ட் பண்ணதா அர்த்தம் னு சொன்னான்.. ஸோ இப்போ எனக்கு என்ன டவுட் னா.. அந்த ‘வெஜ் ரோலை’ சாப்பிட்ட நீ யாரோட லவ்வர்? XXX லவ்வரா இல்லை குருவோட லவ்வரா?”
‘நை’ என்று சக்திவேல் முழிக்க,
அனீஸ், “ஹே! அவனா நீ” என்று கூற,
சக்திவேல், “ஒரு ‘வெஜ் ரோல்’ திண்ணது குத்தமா டா! அதுக்கு இவ்ளோ பேச்சும் அடியும் வாங்கனுமா!” என்று மீண்டும் அழாத குறையாக அலறினான்.
ஆஷா ஜெனிஷாவை அழைக்கவும் அவள் தன்னவனை பார்த்து மென்னகையுடன் கண்ணடித்துவிட்டே தனது இடத்திற்கு சென்றாள்.
ஜெனிஷா, “என்ன ஆஷ்?”
“அஸைன்மென்ட் எழுதனுமே!”
“ச்ச்.. பேசாம நீ எழுதும் போது கார்பன் காப்பி எடுத்திரு”
“அட பாவி”
“மேக்ஸ் தானே.. எப்படி போட்டாலும் யார் போட்டாலும் ஒரே ஸ்டெப்ஸ் தானே வரும்.. அப்பறம் என்ன!”
“ஹன்ட் ரைடிங் வச்சு கண்டுபிடிச்சிட்டா?”
“பெருசா என்ன! ‘ஷீ ரைட் யூ கிவ்.. ஷீ யூ P.A? வொய் யூ நோ ரைட்?’ னு ஜிண்டா கேட்டா நான் பதில் சொல்லிகிறேன்” என்றாள்.
 
“என்னாச்சு டா?” என்றபடி கிருஷ்ணமூர்த்தி புழாவுடன் வந்தான்.
அனீஸ் உற்சாகத்துடன் நடந்ததை கூற, கிருஷ்ணமூர்த்தி நமட்டு சிரிப்புடன், “சக்தி நம்ம சைக்கோவோட லவ்வர் டா”
அனீஸ், “அந்த மனுஷனுக்கு கல்யாணம் ஆகிருச்சே! அப்போ கள்ள காதலா நல்ல காதலா?” என்றவன் ஹஸ்கி குரலில், “மச்சி கள்ள காதல் தானே!” என்றான் சக்திவேலை பார்த்து.
சக்திவேல், “டேய் உன்ன கொல்ல போறேன்” என்று கத்தியபடி பாய, அனீஸ் ஓட இவன் துரத்த, அனைவரும் சிரித்தனர்.
அப்பொழுது வேகமாக ஓடி வந்த ஷங்கர், “கேன்டினில் செல்வாவுக்கும் ஸ்ரீராமனுக்கும் சண்டை.. சீக்கிரம் வாங்க டா” என்றதும் பசங்க பரபரப்பாக ஓட, அந்த பரபரப்பிலும் ஷங்கர் மாலினியிடம், “மோனி கிளாஸ்ஸில் தனியா இருக்கிறா.. பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு தான் சென்றான்.
மாலினி நந்தினி மற்றும் பிருந்தா மோகனாவை பார்க்க அவளது வகுப்பிற்கு சென்றனர்.
இவர்கள் சென்ற நேரம் ஆர்லி உருக்கமான குரலில், “என்னோட பேச மாட்டியா மோனி?” என்று கேட்க,
மோகனா படபடப்பை மறைக்க முயற்சித்தபடி, “ஆமா பேச மாட்டேன்.. மாலுவும் ஷங்கரும் உன்னுடன் பேச கூடாது னு சொல்லியிருக்காங்க”
“இப்போ பேசுறியே! அப்படியே பேசு”
“இது.. இது.. ஹ்ம்.. பேசமாட்டேன் னு சொல்லத் தான் பேசினேன்.. இனி பேசமாட்டேன்.. நீயும் பேசாத” என்றபடி திரும்பிக் கொண்டவள் மனதினுள், ‘ஷங்கி சீக்கிரம் வா’ என்று சொல்லிக் கொண்டாள்.
ஆர்லி விடாமல் அவள் முன் வந்து நின்று, “மோனி” என்று போலி பாசத்துடன் அழைத்தாள்.
அவளை தவிர்க்க முடியாமல் மோகனா தவித்தாள். இவ்வளவு நேரம் அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த மாலினி, “மோனி” என்று அழைக்கவும் தாயை கண்ட கன்றுக்குட்டியை போல் “மாலு” என்றபடி மாலினியிடம் ஓடினாள்.
இவ்வளவு நேரம் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்ட மோகனா மாலினியை கட்டிக் கொண்டாள். மோகனாவின் உடலில் தென்பட்ட சிறு நடுக்கத்தில் இருந்தே அவளது மனநிலையை கண்டுக் கொண்ட மாலினி அவளை திசை திருப்பும் பொருட்டு, “நீ ஏன் கீழ வரலை? நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்று சிறு கோபம் போல,
மோகனா, “ஷங்கி ரெஸ்ட்ரூம் போனான்.. அவன் வந்ததும் வரலாம் நினைச்சேன்”
பிருந்தா புன்னகையுடன், “ஷங்கி! கலக்குறியே மோனி” என்றாள்.
மோகனா குதுகலத்துடன், “நல்லா இருக்குதா? ஷங்கி தான் சொன்னான்.. எல்லோரும் கூப்பிடுறது போல் இல்லாம நான் ஸ்பெஷலா கூப்பிடனும் னு”
“ஓ!” என்று ராகம் இழுத்த பிருந்தா, “நீ ஏன் ஸ்பெஷலா கூப்பிடனும் னு கேட்கலையா?”
“கேட்டேனே!”
“அதான பார்த்தேன்.. என்ன சொன்னான் உன் ஷங்கி?”
“ஏய்! நான் மட்டும் தான் ஷங்கி னு கூப்பிடுவேன்” என்று மெல்லிய கோபத்துடன் கூற,
பிருந்தா, “பார் டா! நீ நடத்து மா” என்றவள் மனதினுள், ‘இதையெல்லாம் நீ புரிந்து செய்றியானே எனக்கு புரியலையே! அதை கேட்டா பதிலுக்கு என்னை பத்து கேள்வி கேட்டு திணறடிப்ப! எனக்கு தேவையா! நீயாச்சு உன் ஷங்கி.. ச ஷங்கராச்சு’ என்றாள்.
மோகனா, “என்ன நடத்தனும்?”
‘மனசுக்குள்ள நினைச்சு முடிக்கலை ஆரம்பிச்சிட்டியா!’ என்று மீண்டும் மனதினுள் கூறிக் கொண்ட பிருந்தா மோகனாவிடம், “ஒன்னுமில்லை.. நீ ஷங்கர் சொன்னதை சொல்லு”
“அதுவா! மாலு மாதிரி அவன் என்னோட ஸ்பெஷல் பிரெண்ட் இல்லையா அதான் ஸ்பெஷலா கூப்பிடனும் சொன்னான்”
“சரி அவன் உன்னை எப்படி கூப்பிடுறான்?”
“அது..” என்று அவள் தயங்கி நிறுத்த,
பிருந்தா, “என்ன?”
“அதை யாரிடமும் சொல்லக் கூடாது னு சொன்னான்.. சாரி ஜில்லு” என்றாள் மெல்லிய குரலில் சிறு குற்றஉணர்ச்சியுடன்.
பிருந்தா சிறு ஆச்சரியத்துடன் பார்க்க, அவளோ சிறு தவிப்புடன் ‘என்ன பண்ண?’ என்பது போல் மாலினியை பார்த்தாள்.
மாலினி மென்னகையுடன், “விடு டா.. நாங்க தப்பா நினைக்க மாட்டோம்”
“இல்ல.. உன் கிட்ட சொல்றேன் ஆனா தனியா”
பிருந்தா இடுப்பில் கைவைத்தபடி செல்லமாக முறைக்க, அவள் நிஜமாக கோபம் கொண்டதாக நினைத்த மோகனா, “சாரி ஜில்லு… மாலு கிட்ட நான் எதையும் மறைச்சது இல்லை.. அதான்” என்றபடி சிறிது கண்கலங்க,
பிருந்தா, “ஏய்! நான் சும்மா விளையாட்டுக்கு முறைச்சேன்.. இதுக்கு போய் கலங்கலாமா?” என்று கூற,
மாலினி மோகனாவை அரவணைத்தபடி, “மோனி.. ஜில்ஸ் உன்னோட விளையாடுறா” என்றாள்.
பிருந்தா கூறியதில் சிறிது தெளிந்தவள் மாலினியின் கூற்றில் முழுவதும் தெளிந்து புன்னகைத்தாள்.
இவர்களை ஆர்லி குரோதத்துடன் முறைத்துக் கொண்டிருந்தாள். அதை ஓரப்பார்வையில் கவனித்த மாலினி கண்டு கொள்ளவில்லை.
மோகனா, “நந்து நீ ஏன் அமைதியாவே இருக்கிற?”
“நீ பேசுறதை கேட்டுட்டு இருக்கிறேன்”
“சில நேரம் ஷங்கி கூட இப்படி தான் சொல்லுவான்” என்றாள். அவளது கூற்றில் இருந்தே ஷங்கர் அவளுள் நீக்கமற கலந்து விட்டான் என்பதை தோழிகள் உணர்ந்துக் கொண்டனர். அதை இவள் எப்பொழுது உணர்வளோ என்றும் நினைத்துக் கொண்டனர்.
பிருந்தா, “இருந்தாலும் ஷங்கர் எப்படி கூப்பிடுவான் னு நீ சொல்லலை”
“ஜில்லு” என்று அவள் சிணுங்க,
பிருந்தா, “நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லு டா” என்று கெஞ்சினாள்.
சிறிது யோசித்த மோகனா, “ப்ராமிஸ்?” என்று கேள்வியாய் கேட்டபடி கையை நீட்டினாள்.
பிருந்தாவும், காட் ப்ராமிஸ்” என்றாள் மோகனாவிற்கு ஏற்றார் போல்.
மோகனா சொல்லப் போக மாலினி, “மோனி.. இப்படி சொன்னா உடனே நம்பிடுவியா?” என்றாள். 
“ஹ.. அது” என்று மோகனா திணற, பிருந்தா ‘வடை போச்சே!’ என்பது போல் முறைப்புடன் மாலினியை பார்த்தாள்.
மாலினி, “என்ன மோனி?”
“அது.. ஷங்கி இப்படி பேசினா என்ன பண்ணும் னு சொல்லலையே!”
“ஷங்கர் சொல்றதை கேட்டு நட ஆனா சிலது நீயாவே யோசித்து நடக்கணும்”
திருதிருவென்று ,முழித்த மோகனா, “இப்போ நான் என்ன பண்ண மாலு?”
“இப்போ தானே சொன்னேன்.. நீயா யோசி னு”
“ஹ்ம்ம்” என்று அவள் உதட்டை பிதுக்க, மாலினி அமைதியாக அவளைப் பார்த்தாள். [நல்ல வேளை இப்பொழுது ஷங்கர் இங்கே இல்லை.. அவனது செல்லம் உதட்டை பிதுக்கிய அழகில் மயங்கி தன்னை கட்டுபடுத்த திண்டாடி போயிருப்பான்.]
சிறிது யோசித்த மோகனா, “ஜில்லு பொய் சொல்ல மாட்டா” என்று கூற,
நந்தினி ‘யாரு நீயா!’ என்பது போல் பிருந்தாவை பார்க்க அவள் ‘ஈ’ என்று சிரிக்க இவள் ‘தூ’ என்பது போல் செய்கை செய்தாள்.
மோகனா, “வேற யாரும் இப்படி சொன்னா நம்பி சொல்ல மாட்டேன்.. உன்னை ஷங்கியை நந்துவை ஜில்லுவை நம்புவேன்”
“அப்படி சொல்லுடி என் செல்லக்குட்டி” என்றபடி அவளிற்கு திருஷ்டி களித்தாள் பிருந்தா.
மோகனா மகிழ்ச்சியுடன் பிருந்தாவை பார்த்துவிட்டு மாலினியை பார்த்தாள்.
மாலினி மென்னகையுடன், “ஹ்ம்ம்.. நீ சொன்னது சரி தான்.. சரியா யோசிக்கிற.. குட்.. இனி எந்த ஒரு விஷயமா இருந்தாலும் இப்படியே தெளிவா யோசித்துச் செய்”
“ஹ்ம்ம்” என்று பெரும் மகிழ்ச்சியுடன் புன்னகை முகமாக வேகமாக தலையை ஆட்டினாள்.
பிருந்தா, “இப்பவாது விஷயத்திற்கு வா மா” என்றாள்.
மோகனா சிரிப்புடன், “ஷங்கி என்னை மோனி பேபி னு கூப்பிடுவான்” என்றவள் குதூகலத்துடன் மாலினியிடம், “நல்லா இருக்குதா மாலு?”
மாலினி புன்னகையுடன், “சூப்பரா இருக்குது டா” என்றாள்.
பிருந்தா, “சரியா தான் சொல்லியிருக்கிறான்.. நீ ஒரு பேபி தான்”
மோகனா, “ஏய்! என்ன அபப்டி கூப்பிடாத”
“ஏன் ஷங்கர் மட்டும் தான் அப்படி கூப்பிடனுமா?”
“ஆமா?” என்று மோகனா திடமாக கூற,
பிருந்தா சிறு அதிர்ச்சியுடன், “என்னது?”
மோகனா, “ஆமா.. அப்படி தான்” என்று கூற பிருந்தா அப்படியே சிறு அதிர்ச்சியுடன் தான் நின்றிருந்தாள் மோகனாவின் தெளிவை கண்டு.
மாலினி மென்னகையுடன், “அப்படி ஷங்கர் சொன்னானா?”
மோகனா பழையபடி குதூகல குரலில் தலையை ஆட்டியபடி, “ஹ்ம்ம்.. வேற யாரையும் என்னை அப்படி கூப்பிடக் கூடாது னு சொல்லணும் னு சொன்னான்” என்றாள்.
இப்பொழுது தெளிந்திருந்த பிருந்தா, “நீ உடனே ஏன் னு கேட்டு இருப்பியே?”
“ஹ்ம்ம்”
“அதுக்கு என்ன சொன்னான்?”
“அவனுக்கு மட்டும் தான் நான் பேபி னு சொன்னான்”
“பார் டா!” என்று பிருந்தா கூற, மாலினி பிருந்தாவிற்கு மட்டும் கேட்கும் குரலில், “சிவா காலையில் இதை சொன்னான்னு தானே இதையே சொல்லிட்டு இருக்கிற?”
‘அப்படியும் இருக்குமோ!’ என்று மனதினுள் நினைத்த பிருந்தா வெளியே முறைத்தாள்.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கல்லூரி உணவகத்தில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம் வாங்க…………………………
ஷங்கர், ராஜசேகர், சிவகுரு, கிருஷ்ணமூர்த்தி, புழா, சக்திவேல் மற்றும் அனீஸ் உணவகத்திற்கு சென்றபோது ராகேஷ் வினோத்துடன் சேர்ந்து கஷ்டப்பட்டு செல்வாவை இழுத்து பிடித்து கட்டுபடுத்திக் கொண்டிருக்க, ஸ்ரீராமனை IT துறையை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவர் இழுத்துச் சென்றனர்.
சிவகுரு, “என்ன பிரச்சனை?” என்று வினவ,
“எல்லாம் அந்த ……………………..” என்று கெட்ட வார்த்தையில் திட்டியபடி செல்வராஜ் எகிறினான்.
கிருஷ்ணமூர்த்தி, “டென்ஷன் ஆகாத செல்வா.. தண்ணியை கொஞ்சம் குடி” என்றபடி நீரை எடுத்து கொடுத்தவன்  ‘என்னாச்சு?’ என்று பார்வையால் ராகேஷிடம் வினவினான்.
தண்ணீரை குடித்து தன்னை சமன் செய்த செல்வராஜ் சிவகுருவை பார்த்து, “எப்படி டா என்னை பார்த்து அப்படி கேட்கலாம்.. அவனை போல தானே அவன் நினைப்பும் இருக்கும்” என்று மீண்டும் பொரிய ஆரம்பித்தான்.
அப்பொழுது அங்கே ‘ஸ்பை ஸ்குவார்டை’ சேர்ந்த ஒருவர் வந்து செல்வராஜிடம் சேர்மேன் அழைத்ததாக கூறினார். 
ராகேஷ் அவசரமாக செல்வராஜ் காதில், “ஸ்ரீராம் வாயை திறக்கும் முன் அவனை பாதிக்காத வேற ஏதாவது ரீசன் சொல்லிடு” என்று சொல்லி அனுப்பினான்.
அவன் சென்றதும் இவர்களிடம் பதற்றம் வந்து ஒட்டிக் கொண்டது. அழைத்தது ஏதேனும் ஆசிரியர் என்றாலோ HOD என்றாலோ பிரின்சிபால் என்றாலோ பதற்றமடைந்திருக்க மாட்டார்கள் தான், சேர்மேன் எனவும் ராகேஷிடம் கூட முதல் முறையாக பதற்றம் வந்தது. அந்த பதற்றம் நண்பன் செல்வாவை நினைத்து. செல்வராஜ் ஸ்ரீராமன் இருவருமே எப்பொழுது எப்படி பேசுவார்கள் என்பது தெரியாதே! செல்வராஜ் முன் கோபத்தில் வார்த்தையை விடுவான் என்றால் ஸ்ரீராமனோ தான் தப்பிக்க வார்த்தையை விடுவான்.
ராஜசேகர், “என்ன தான் நடந்தது?”
ராகேஷ் அலுப்புடன், “நானே இவனை கஷ்டப்பட்டு அடக்கி வாசிக்க வச்சா அந்த தவளை வாயன் சும்மா இருக்காம இவன் கிட்ட வந்து ‘நீ மாலினிக்கு ரூட் விடுறியா?’ னு கேட்குது பக்கி”
சிவகுரு, “எனக்கும் கூட அந்த டவுட் இருக்குது”
கிருஷ்ணமூர்த்தி, “இல்ல குரு.. நிச்சயம் செல்வா அப்படி இல்லை டா”
சிவகுரு, “எனக்கும் தெரியும்.. நான் சொல்றது.. செல்வா மனசில் மாலினி இருக்கிறாளோ னு டவுட்”
ராஜசேகர், “எதை வச்சு சொல்ற?”  
சிவகுரு, “நேத்து நடந்தது.. ACP நல்லது தானே பண்ணார்.. இவன் எகிறினான்.. இவனை விட அவர் என்ன பண்றது என்ற எண்ணம்.. பொண்ணுங்க கிட்டயே பேசாதவன் மாலினி கிட்ட நேத்து ACP கிட்ட அதாவது முன்ன பின்ன தெரியாதவன் கிட்ட பேசாதங்கிற போல் சொல்லியிருக்கிறான்.. இன்னொன்னு.. காலேஜ் முதல் நாள் ஆடிட்டோரியத்தில் வச்சு அந்த செம்பு நக்கி மாலினியை பார்த்த போது இவன் எச்சரித்தான்.. இன்னைக்கு காலையில் கூட மாலினிக்கு தன்னை பிடிக்கும்கிறது போல் செம்பு நக்கி பேசியதை கண்டிக்கும் விதத்தில் ‘ரொம்ப துள்ற’ னு மிரட்டினான்.. எல்லாத்தை சேர்த்து ஸ்லைட்டா டவுட்”
மற்றவர்கள் இப்படியும் இருக்குமோ என்று யோசிக்க, ராகேஷ், “அப்படியெல்லாம் இல்லை டா.. நேத்தே நான் அவனிடம் கேட்டேன்.. என்னடா காத்து அந்தபக்கம் வீசுறது போல தெரியுது னு.. அவன் ‘அட போடா! நீயுமா! எனக்கு வேற வேலை இல்லை பாரு! நாங்கலாம் எப்போதுமே முரட்டு சிங்கிள்.. கெத்து சிங்கிள் தான் டா’ னு சொன்னான்.. நான் விடாம ‘அறிவுரையெல்லாம் அள்ளி விட்டேன் னு சொல்ற?’ னு கேட்டேன்.. அவன் ‘அவளும் என்னை போல கெத்து சிங்கிள் தான் னு தோனுச்சு.. ஏதோ சொல்லணும் தோனுச்சு சொன்னேன்.. அவ்ளோ தான்.. அவ கிட்ட திரும்ப ஒழுங்கா பேசுவேனா னு கூட தெரியலை.. இதெல்லாம் ஒரு மேட்டரா டா!’ னு அசால்ட்டா சொல்றான்” என்றவன், “இப்போ இதுவா பிரச்சனை? அங்க போய் எதை உளறி வைக்க போறான்களோ! இருக்கிற பிரச்சனை போதாது னு இது வேற” என்றான்.
வினோத், “என்னைக்காவது செல்வா கிட்ட வாங்கி கட்ட போறான்”
சிவகுரு, “நீ ஏன் சலம்புற! உன்னால முடியாததை அவன் செய்றான்னா”
“நான் என்ன பண்ணேன்?”
“அடங்கு டா.. உன்னை பத்தி தெரியாதா! என்ன இருந்தாலும் எப்படியாவது செம்பு நக்கி மாலினி கிட்ட பேசிடுறான்.. உன்னால அது முடியலை.. ஆனாலும் அவனை ஒரு விஷயத்தில் பாராட்டனும் டா.. மனம் தளராத வேதாளம் தான் அவன்” என்றான். 
[அப்பாடி ஒருவழியா எல்லா கரெக்டரையும் ஒரே மழையில் கொண்டு வந்தாச்சு……….. ஆத்தி இந்த தாரிக்கா குரூப்பை மறந்துட்டேனே!!! சரி பரவா இல்லை விடு…. அப்படியே ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்……………………….]
  
மழை தொடரும்….

Advertisement