Advertisement

மழை 31:
சிவகுரு, “நம்ப முடியவில்லை! நம்ப முடியவில்லை! வில்லை..வில்லை!” என்று ராகம் போட்டு இழுத்து பாட,
“எதை டா நம்ப முடியவில்லை?” என்று கேட்டபடி ராகேஷ் வந்தான்.
சிவகுரு செல்வராஜை சுட்டி காட்ட, ராஜேஷ், “ஹ்ம்ம்.. உலக அதிசயம் தான்.. எப்படி நடந்தது?”
சிவகுரு மாலினியை சுட்டிக்காட்ட இப்பொழுது அதே பாட்டை ராகேஷ் பாடினான்.
செல்வராஜ், “டேய் ஓவரா பண்ணாதீங்க டா” என்று கறாராக கூற,
சிவகுரு சிரிப்புடன், “சிங்கம் பக் டூ பார்ம்” என்றான்.
ராஜசேகர், “சிஸ்டர்.. எதுவும் பிரச்சனையா?”
சிவகுரு, “டேய்! எல்லாம் ஒழுங்கா தானே போயிட்டு இருக்குது”
“நீ சும்மா இருடா.. சிஸ்டர் சொல்லுங்க”
சிவகுருவும் ராகேஷும் ‘என்ன?’ என்பது போல் பார்க்க, மாலினி சுருக்கமாக நடந்ததை கூறி, “நீ எப்படி கண்டு பிடிச்ச?” என்று வினவினாள்.
“எதை சிஸ்டர்?”
“என்ன பிரச்சனைனு கேட்டியே!”
“நீங்க செல்வாவுக்கு தேங்க்ஸ் சொன்னீங்க.. அவனும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணதாக சொன்னான்.. அதான்”
“ஓ” என்று மாலினி கூற, 
சிவகுரு, “நீ சரியான அலர்ட் ஆறுமுகம் தான் டா” என்று கூற,
ராஜசேகர், “அக்கா தங்கை கூட பிறந்தவன் எல்லோருமே அலர்ட் ஆறுமுகம் தான் டா”
“பார் டா!”
ராகேஷ், “சரி.. ரிசல்ட் என்னாச்சு மாலினி?” என்றும்,
“சிஸ்டர் சண்டையை தடுத்தது யாரு?” என்று ராஜசேகரும் ஒன்றாக வினவினர்.
மாலினி ராகேஷிடம், “இன்னும் ரிசல்ட் சொல்லலை.. இப்போ சொல்ற நேரம் தான்” என்றவள், ராஜசேகரை பார்த்து, “தெரியலை ப்ரோ” என்றாள்.
செல்வராஜ், “அவன் மட்டும் பெரிய பருப்பு மாதிரி நடுவில் வராம இருந்து இருந்தா அந்த பசங்க பல்லை உடைத்து இருப்பேன்” என்று சிறு கோபத்துடன் கூற,
ராகேஷ், “ரெண்டு காலேஜ் நடுவே பிரச்சனை ஆரம்பித்து பெரிய பிரச்சனையா கூட மாறி இருக்கும்.. நல்லவேளை அவன் நடுவில் வந்தான்” என்றும்,
சிவகுரு, “நீ ஏன்டா இப்படி பொங்குற! ஒரு உரையில் ரெண்டு கத்தி இருக்க கூடாதுன்னா”
“அவனை பார்த்து நான் ஏன் பொங்க போறேன்! அவன் பெரிய ஆளா!” என்று செல்வராஜ் அப்பொழுதும் பொங்கத் தான் செய்தான்.
ராகேஷ், “சரி அதை விடுங்க டா” என்று கூறிவிட்டு ராஜசேகரை பார்த்து, “நீங்க இங்கே இருங்க நாங்க அங்க போறோம்” என்றான்.
ராஜசேகர், “ஹ்ம்ம்.. அங்கே முடிஞ்சுருச்சா?”
“இல்லை.. இன்னும் நாலு பேர் ஆட வேண்டியது இருந்தது.. செல்வாவை காணும் னு வந்தேன்”
அப்பொழுது மேடையில் வெற்றியாளர்கள் பெயரை சொல்ல தயாராக, ராஜசேகர் மற்றும் சிவகுருவிற்கு போலி அடையாள அட்டை வாங்கி கொடுத்த இவர்கள் கல்லூரி இறுதி ஆண்டு மாணவன் வந்து, “டேய் ராக்கி செல்வாவை கூப்பிட வந்துட்டு வெட்டி கதை பேசிட்டு நிற்கிற! வாங்க டா சீக்கிரம்.. சோலோ டான்ஸ் முடிய போகுது.. அடுத்து க்ரூப் டான்ஸ் தான்” என்றான்.    
ராகேஷ் மற்றும் செல்வராஜ் கிளம்ப ஆயுத்தமாக ராஜசேகர், “பாஸ்.. சோலோ டான்ஸ் ரிசல்ட் இப்போ சொல்லிடுவாங்களா?”
“இல்லை டா.. க்ரூப் டான்ஸ் முடிந்ததும் தான் சொல்றதா சொன்னான்க”
“சரி பாஸ்” என்றான்.
அவர்கள் கிளம்பியதும் இவர்கள் கவனம் அறிவிப்பிற்கு சென்றது.
மாலினி தான் முதல் பரிசு பெற்றிருந்தாள். ராஜசேகரும் சிவகுருவும் “ஹே! ஓ!” என்று கூச்சலிட, பலத்த கரகோசத்தின் நடுவே மேடை ஏறி பரிசை பெற்றாள் மாலினி.
மாலினி கீழே இறங்கி வந்ததும் அவள் முன் வந்து நின்ற ஒரு பெண் புன்னகையுடன் கையை நீட்டி, “ஹாய்.. நான் யாழினி.. இந்த காலேஜ் தான்.. சூப்பரா பாடுனீங்க” என்றாள்.
புன்னகையுடன் கை குலுக்கிய மாலினி, “தெரியும்.. இப்போ தர்ட் ப்ரைஸ் வாங்குனீங்களே.. தேங்க்ஸ்.. நீங்களும் சூப்பரா பாடுனீங்க”
“தேங்க்ஸ்”
“நான் பஸ்ட் இயர் தான்.. ஒருமையிலேயே பேசுங்க”
‘ஆனா அண்ணியை ஒருமையில் பேச முடியாதே!’ என்று அவள் முணுமுணுக்க,
மாலினி, “என்ன?” என்றாள்.
யாழினி சிறிது அசடு வழிந்தபடி, “தெரியும்.. பரவாயில்லை னு சொன்னேன்”
மாலினி சிறு யோசனையுடன் பார்க்க, அதை புரிந்துக் கொண்ட யாழினி, ‘அண்ணா உன் ஆளு உன்னை போல ஷார்ப்பா இருக்கிறாங்க’ என்று மனதினுள் கூறிக்கொண்டவள் வெளியே புன்னகையுடன், “நான் உங்களோட தீவிர பேன் ஆகிட்டேன்.. ஒரு ஆட்டோகிராப் ப்ளீஸ்” என்றபடி சிறிய ‘ஆடோக்ராப் புக்’ ஒன்றை நீட்டினாள்.
மாலினி சிறு ஆச்சரியத்துடன் கண்களை விரிக்க, யாழினி மனதினுள், ‘எப்பா! என்ன கண்ணு டா! டேய் அண்ணா இதில் தான் விழுந்தியா!’ என்று கூறிக் கொண்டாள்.
யாழினி புன்னகையுடன், “வொய் திஸ் ஷாக் ரியாக்சன்?”
“உங்களுக்கே இது ஓவரா தெரியலை?”
“எது?”
“இப்படி ஆட்டோக்ராப் கேட்பது”
“உங்களோட ஒரே பாட்டில் உங்களோட தீவிர விசிறி ஆகிட்டேன்..” என்றவள் புன்னகையுடன், “பயப்படாதீங்க உங்க கையெழுத்தை வச்சு உங்க சொத்தை ஆட்டையை போட்டிர மாட்டேன்” என்று கூறி கண் சிமிட்டினாள்.
மாலினி புன்னகையுடன், “உங்க சிரிப்பு உங்க மனசை போல அழகா இருக்குது”
“இஸ் இட்! தன்க் யூ ஆனா நான் அழகில்லை னு சொல்றீங்களோ!”
“அப்படியில்லை.. நீங்க பார்க்கிறதுக்கும் அழகா இருக்கிறீங்க ஆனா என்னை பொறுத்தவரை புற அழகை விட அக அழகு தான் ரொம்ப அழகானது.. நிரந்திரமானதும் கூட”
“பார் டா! இந்த வயசில் தத்துவம் பேசுறீங்க!”
“தத்துவம் னு இல்லை இது என் கருத்து அவ்ளோ தான்”
“ஹ்ம்ம்.. உங்க கருத்தும் எண்ணமும் உங்களை போல் அழகா இருக்குது”
மாலினி மென்னகைக்கவும் யாழினி, “என் மனசு அழகு னு எதை வச்சு சொன்னீங்க?”
“வயசு வித்யாசம் பார்க்காம போட்டி பொறாமை இல்லாம இயல்பா என்னை பாராட்டுறீங்களே” என்றதும் யாழினி மனதினுள் சிறு குற்ற உணர்ச்சி எழுந்தது.
யாழினி மனதினுள், ‘எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத என் அண்ணன் மனம் உன் பக்கம் திரும்பாம இருந்திருந்தால் நான் இப்படி பொறாமை இன்றி பேசுவேனா தெரியலையே!’ என்று கூறிக்கொண்டு மாலினியிடம், “அப்படியெல்லாம் இல்லை” என்றாள்.
அப்பொழுது, “சிஸ்டர்” என்றபடி ராஜசேகர் வந்தான்.
திரும்பி பார்த்த மாலினி, “சிவா எங்கே?”
“அவன் டான்ஸ் நடக்கிற இடத்திற்கு போயிருக்கான்.. நாமளும் அங்கே போகலாமா?”
“ஹ்ம்ம் போகலாம்” என்றவள் யாழினி பக்கம் திரும்பி, “ஓகே பை யாழினிக்கா” என்றாள்.
யாழினி நெஞ்சில் கை வைத்தபடி, “என்னது அக்கா வா?”
ராஜசேகர், “ஏங்க! பசங்க கொடுக்கிற ஜெர்க் நீங்க கொடுக்குறீங்க!”
அவனை முறைத்த யாழினி மாலினியிடம், “நோ அக்கா” என்றாள். 
மாலினி, “நீங்க சீனியர் தானே”
“மூணு வயசு தானே பெரியவ.. இந்த அக்கா பொக்கா லாம் வேணாம்.. யாழினி னே கூப்பிடுங்க”
“இந்த ‘ங்க’ வ விட மாட்டீங்களா?”
“அது” என்று யாழினி சொல்வதறியாது சிறிது திணறி பின், “அதை விடுங்க.. நான் கேட்ட ஆட்டோகிராப் போட்டு தாங்க” என்றாள்.
“நீங்க நிஜமா தான் கேட்கிறீங்களா?”
யாழினி இடுப்பில் கைவைத்து செல்லமாக முறைத்தபடி, “என்னை பார்த்தா எப்படி தெரியுது?” என்று மிரட்ட,
“யாழ்” என்றபடி அந்த புதியவன் வந்தான்.
யாழினி அவனை அறிமுகம் செய்ய வாய் திறக்கும் முன் ராஜசேகர், “ஹாய் வெற்றி சார்.. எப்படி இருக்கிறீங்க?” என்றான்.
அப்பொழுது தான் இவனை பார்த்த அந்த புதியவன், “சேகர் ரைட்? கிருஷ்ணா பிரெண்ட்” என்றபடி கை குலுக்கினான்.
“எஸ் சார்.. பெயரை கூட ஞாபகம் வச்சு இருக்கிறீங்களே!” என்றான்.
[என்ன தோழமைகளே! இப்போ தெரியுதா அந்த புதியவன் யாரென்று! மாலினியை சீனியர் கிருஷ்ணன் கடத்த முயற்சித்தபோது நம்ம கிருஷ்ணமூர்த்தி காப்பாற்றியதோடு ஒரு காவல் அதிகாரியின் உதவியுடன் அந்த பசங்களை மிரட்டினானே! நியாபகம் வருதா???? அந்த காவல் அதிகாரி வெற்றிவேல் தான் இந்த புதியவன்]
வெற்றிவேல், “நல்லா இருக்கிறேன்.. நீங்க எப்படி இருக்கிறீங்க? அந்த பசங்க அப்பறம் ஏதும் பிரச்சனை பண்ணலையே?”
“இல்லை சார்” என்றவன் மாலினி பக்கம் திரும்பி, “சிஸ்டர்.. சார் ACP வெற்றிவேல்.. அன்னைக்கு சீனியர் கிருஷ்ணனை மிரட்டியவர்” என்றதும் 
ஒரு நொடி கண்களை ஆச்சரியம் மற்றும் சிறு மகிழ்ச்சியுடன் விரித்த மாலினி, வெற்றிவேல் பக்கம் திரும்பி புன்னகையுடன், “தன்க் யூ சார்” என்றாள்.
அரை நொடி புருவ சுளிப்புடன் பார்த்த வெற்றிவேல் பின் மென்னகையுடன், “ஓ நீங்க தானா அந்த பெண்.. அதான் உங்க பெயர் பெமிலியரா இருந்தது போல! தேங்க்ஸ்-யெல்லாம் வேணாம்.. அது என் டியூட்டி.. அப்பறம் அந்த பசங்க எதுவும் பிரச்சனை பண்ணலையே?”
“இல்லை.. அவன் இயல்பில் கெட்டவன் இல்லை.. ஸோ என்னிடம் சாரி சொல்லிட்டு ஏதும் ஹெல்ப் வேணும்னா கேட்க சொல்லிட்டு போய்ட்டான்.. அப்பறம்.. அது டியூட்டி என்றாலும் நீங்க அன்னைக்கு அன்-அஃபிஷியலா தானே உதவி செய்தீங்க.. ஸோ என் தேங்க்ஸ் ஏத்துக்கணும்”
அவன் அதே மென்னகையுடன், “ஓகே.. உங்கள் தேங்க்ஸ் ஏற்றுக்கொள்ளப்படுகிறது”
மாலினி ராஜசேகரிடம், “கொஞ்ச நேரத்திற்கு முன் சண்டையை தடுத்ததும் சார் தான்” என்றாள்.
ராஜசேகர், “ஓ.. தேங்க்ஸ் சார்” என்றான்.
வெற்றிவேல், “போதும்.. மாத்தி மாத்தி தேங்க்ஸ் சொல்லிட்டு இருக்கிறீங்க” என்றான்.
அப்பொழுது யாழினி, “ஹலோ ஹலோ.. நானும் இங்கே தான் இருக்கிறேன்” என்றாள்.
ராஜசேகர், “நாங்க மட்டும் நீங்க பாரின் போயிருக்கிறதாவா சொன்னோம்?”
யாழினி முறைப்புடன், “நீ நான்-சின்க்-லேயே போயிட்டு இருக்கிற” என்றவள் மாலினியை பார்த்து, “இந்த வளர்ந்து கெட்டவன் தான் என்னோட அண்ணன்” என்றாள்.
மென்னகையுடன், “தெரியும்” என்ற மாலினி, “இவனை ஒருமையில் பேசுறீங்க என்னை மட்டும் மரியாதையா பேசுறீங்க!” என்றாள்.
யாழினி அரை நொடி தமையனை நோக்கிவிட்டு, “அதை விடுங்க.. இவ்ளோ நேரம் இவன் தங்கை னு தான் என்னுடன் பேசிட்டு இருந்தீங்களா?” என்று வினவினாள் எதிர்பார்ப்பு தந்த குறுகுறுப்புடன்.
மாலினி, “இல்லையே”
“அப்பறம்?”
“சார் தங்கை பெயர் யாழினினு தெரியும் ஆனால் அந்த யாழினி நீங்க தான் னு இப்போ தான் தெரியும்”
“புரியலையே”
“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி உங்க கிளாஸ்மேட்ஸ் ரெண்டு பேர் சின்னதா கலாட்டா பண்ணாங்க.. அப்போ சார் தான் வந்து அவங்களை தடுத்தார்”
“அது தெரியும்.. என்னிடம் அந்த பசங்க யாருன்னு கேட்டுட்டு தான் உங்க கிட்ட வந்தான்”
“அப்போ உங்க கிளாஸ்மேட்ஸ் அண்ட் என்னோட கிளாஸ்மேட் சாரை யாருன்னு கேட்டப்போ உங்க கிளாஸ்மேட்ஸ் கிட்ட ‘உங்க கிளாஸ்மேட் யாழினியோட அண்ணா’ னு சொன்னாங்க”
“ஓ” என்று யாழினி இழுக்க, ராஜசேகர், “விளக்கம் போதுமாங்க! இப்பவாது நாங்க கிளம்பலாமா?”
யாழினி அவனை முறைக்க, வெற்றிவேல், “நீங்க கிளம்புங்க சேகர்” என்றான். 
ராஜசேகர், “ஓகே சார்” என்றும்,
மாலினி, “பை சார்.. பை யாழினி” என்று கூறியபடி கிளம்ப எத்தனிக்க,
யாழினி, “ஆட்டோகிராப்” என்றாள்.
மாலினி, “நான் அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்லைங்க” என்று புன்னகையுடன் கூறி கிளம்பினாள்.
அவர்கள் சென்றதும் வெற்றிவேல் தங்கையை கூர்பார்வையுடன் நோக்க அவளோ, “என்ன லுக்கு! இந்த பார்வையையுடன் நான் தான் உன்னை பார்க்கணும்”
“ஏனோ!”
“நீ விடா கண்டன் டா”
“என்ன தான் சொல்ல வர?”
“இந்த மஞ்ச காட்டு மைனா உன் மனதை கொத்தலை!”
“ஏய்! என்ன பேச்சு இது?”
“நடிக்காத டா.. உன்னை எனக்கு தெரியாதா? மாலினி பாடினப்ப நீ உன்னை மறந்து பார்த்துட்டு இருந்த”
“அது அந்த பொண்ணு வாய்ஸ் அப்படி”
“ஓ! முன்னாடி என்னை பசங்க கிண்டல் பண்ணதா சொன்னப்ப.. காலேஜ் லைப்பில் இதெல்லாம் சகஜம்.. நீயே தைரியமா சமாளிக்கணும், வரம்பு மீறினா என்னிடம் சொல்லு னு சொன்னவன் இன்னைக்கு என்ன சார் பண்ணீங்க?”
“அந்த பையன் பார்வை சரியில்லை அதான் போனேன்”
“சரி நீ போகவும் தான் அவங்க காலேஜ் பையன் வந்துட்டானே.. நீ திரும்பி வந்திருக்க வேண்டியது தானே! ஏன் சார் அழைப்பே இல்லாம தடையம் பதிச்சிட்டு வந்தீங்க?”
“அவன்க அடிதடியில் இறங்குவது போல் இருந்துது.. அதான் போனேன்.. நீ தேவை இல்லாம யோசிக்கிற!”
“யாரு நானா?”
“ஆமா”
“அப்போ உன் மனசில் எந்த நினைப்பும் இல்லை”
“யாழ்”
“கேட்ட கேள்விக்கு பதில்”
“உன் கேள்வியே சரி இல்லை.. தப்பும் கூட”
“ஒரு பொண்ணு கிட்ட நீ இவ்ளோ நேரம் நின்னு பேசுறதை இன்னைக்கு தான் நான் பார்க்கிறேன் அதுவும் சின்ன ஸமைலோட”
“யாழ்…………..”
“சும்மா என் பெயரை ஏலம் விடாத.. அவங்க தேங்க்ஸ் சொன்ன விதமும் நீ அதை ஏத்துக்கொண்ட விதத்தையும் பார்த்தபோ எனக்கு காக்க காக்க படத்தில் ஜோ சூர்யா கிட்ட தேங்க்ஸ் சொன்ன ஸீன் தான் நியாபகம் வந்துச்சு.. நீயும் அன்புசெல்வன்.IPS கரெக்டருக்கு செட் ஆவ.. அவங்களும் ‘ஒரு ஊரில் அழகே உருவாய்’ பாட்டுக்கு வொர்த்தான ஆள் தான்.. உங்க ரெண்டு……………………..”
“ஏய்! அவ வயசென்ன என் வயசென்ன.. இப்படி பேசுறதை நிறுத்து” என்று அவன் சிறு கண்டிப்புடன் கூற,
அவளோ, “உன்னை நீயே ஏமாற்றிக்காத டா” என்று சிறு ஆதங்கத்துடன் கூற,
ஆதுரத்துடன் தங்கை தோளை பற்றியவன், “அப்படியெல்லாம் இல்லை டா.. ஓகே.. ஒத்துக்கிறேன்.. எனக்கு அவளை பிடித்திருக்கிறது ஆனா நீ நினைப்பது போல் இல்லை.. அவ இப்போ தான் பஸ்ட் இயர் படிக்கிறா.. சின்ன பொண்ணு..”
“உனக்கும் அவளுக்கும் ஏழு வயசு தான் வித்யாசம்”
“காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு”
யாழினி முறைப்புடன், “இப்போ எதுக்கு இதை சொல்ற?”
“உனக்கு உன் அண்ணன் பெருசு.. இந்த வயசு வித்யாசம் பெருசில்லை ஆனா இந்த காலத்தில் இந்த வயசு வித்யாசம் அதிகம் தான்.. ஆனா இந்த சிந்தனையே தேவையில்லாதது.. ஏன்னா என் மனசில் அப்படி எந்த எண்ணமும் இல்லை.. ஸோ தேவையில்லாதை யோசிக்காம உன் வேலையை மட்டும் பாரு.. அம்மா கிட்ட எதையும் உளறி வைக்காத”
அவள் பதில் கூறாமல் அவனையே பார்க்கவும் அவன், “என்ன?”
“என்ன?”
“உன் பார்வைக்கு என்ன அர்த்தம்?”
“ஏன் உனக்கு தெரியாதா?”
“அது தப்புன்னு தானே சொல்றேன்”
“உன்னை எனக்கு தெரியும்………………….”
“யாழ்”
“சரி விடு.. நான் எதுவும் சொல்லலை.. ஆனா ஒன்னு”
“என்ன?”
“இப்போ உன் மனசில் விழுந்த விதை மரமா.. இல்லை.. சின்ன செடியா வளர்ந்தா கூட நீயே மாலினியை விட மாட்ட.. அதனால் நான் அமைதியா இருந்து நடப்பதை பார்க்கிறேன்”
வெற்றிவேல் அதற்கு சிறு தோள் குலுக்கலை பதிலாக தந்தான்.
அவள், “உனக்கு மாலினியை முன்னாடியே தெரியுமா?”
“இப்போ தானே மாலினியை பற்றி பேச மாட்டேன் சொன்ன?”
“மாலினியை உன்னுடன் ஜோடி சேர்த்து பேச மாட்டேன் னு தான் சொன்னேன்.. மாலினி பற்றி பேச மாட்டேன் னு சொல்லலை”
“..”
“என்ன லுக்? கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு”
“இன்னைக்கு தான் பஸ்ட் டைம் பார்க்கிறேன்.. சேகர் சொல்லி தான் மாலினிக்கு தான் நான் ஹெல்ப் பண்ணேன் னு தெரியும்”
“ஓ.. என்ன ஹெல்ப் பண்ண?”
“வீட்டுக்கு போய் சொல்றேன்.. இங்கே வேண்டாம்” என்று அவன் கூற இப்பொழுது அவள் தோளை குலுக்கினாள். 
  
மழை தொடரும்….

Advertisement