Advertisement

மழை 30:
சிவகுரு குறுஞ்செய்தி அனுப்பிய பிறகு அன்று பிருந்தாவை சீண்டவில்லை. அவளது மனதை அறியும் பொருட்டு தனது வாலை அன்று மட்டும் சுருட்டிக் கொண்டான் போல.. 
சிவகுருவின் கணிப்பு சரியே.. பிருந்தா சிவகுரு தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக  கூட யாரிடமும் கூறவில்லை. முதலில் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தவள் மெல்ல இயல்பிற்கு திரும்பினாள். அதன் பிறகு சிவகுரு இவளை கண்டுக்கொள்ளவில்லை என்றதும் முதலில் ‘நல்லதா போச்சு’ என்று நினைத்தவள் நேரம் செல்ல செல்ல ஏதோ குறைவது போல் உணர்ந்தாள். அதை என்னவென்று புரிந்துக்கொள்ள முடியாமல் ‘இந்த குரங்கு பேசினாலும் இம்சையா இருக்குது.. அமைதியா இருந்தாலும் இம்சை தான்’ என்று அதற்கும் அவனைத் தான் திட்டினாள். இந்த குழப்பத்தில் அவன் அனுப்பிய குருஞ்செய்தியின் மறைபொருளை அறியத் தவறினாள்.  
சிவகுரு கூறியதை மாலினி நந்தினியிடம் கூறினாள். இருவரும் பிருந்தா மனம் திறக்க காத்திருக்க தொடங்கினர்.
சிவகுரு அன்று மாலை ராஜசேகருக்கு விருந்து வைத்து கொண்டாடினான். நண்பனின் மகிழ்ச்சியில் பங்கெடுத்தாலும் ராஜசேகர், “இன்னும் லவ்வே சொல்லலை.. கொஞ்சம் அடக்கி வாசி மச்சான்” என்றான். 
சிவகுரு பதில் கூறாமல் புன்னகைத்தான்.
அடுத்த நாளும் மதியம் வரை அமைதியாக செல்ல, பிருந்தா மனதினுள், ‘என்னாச்சு இந்த குரங்கு ரொம்ப அமைதியா இருக்குது?’ என்று மனதினுள் நினைத்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
மதிய இடைவேளையில் பிருந்தா தனியாக வந்துக் கொண்டிருந்த போது சிவகுரு, “மௌனம் சம்மதம் னு எடுத்துக்கவா?”
அவள் புரியாமல் பார்க்கவும் அவன், “என்ன?”
“என்ன?”
“என் மெசேஜ்க்கு பதில் அனுபலை.. அதான் மௌனம் சம்மதம் னு எடுத்துக்கவா?”
“என்ன பதில் அனுப்பனும்? எதுக்கு சம்மதம்? என்ன டா லூசு மாதிரி ஒளறிட்டு(உளறிட்டு) இருக்கிற?”
அவளது கண்களை கூர்ந்து பார்த்தவன் அவள் உண்மையிலேயே அப்படி கேட்பது புரியவும் ‘அட என் செல்லமே! நீ டியூப் லைட் கூட இல்லை சரியான வாழைமட்டை.. உன்னை வச்சுகிட்டு!’ என்று மனதினுள் புலம்பியவன் அவளிடம், “கடைசியா நான் அனுப்பிய மெசேஜ்க்கு திட்டி பதில் எதுவும் வரலையே அதான் அதில் சொன்னது போல் செய்ய உனக்கு சம்மதமா னு கேட்டேன்”
அப்பொழுது தான் அவன் அனுப்பிய குறுஞ்செய்தி நினைவிற்கு வரவும் ஒரு நொடி பல்லை கடித்தவள் அடுத்த நொடியே அலட்சிய பாவனையுடன், “நீ என்ன அனுப்பின னு கூட ஞாபகம் இல்லை…………..”
“நிஜமாவாவாவா!!!!!!” என்று அவன் இழுத்து வினவ,
அவள் அதே அலட்சியத்துடன், “எனக்கு வேற வேலை இல்லை பாரு!” என்றபடி நகர போக,
அவனோ, “ஆனா எனக்கு வேறு வேலை இல்லை ஸோ நான் உனக்கு ஞாபகப் படுத்துறேன்.. நான் என்ன அனுபினேனா……………………..”
“எனக்கு ஒரு ஆணியும் தேவை இல்லை” என்று அவள் கோபத்துடன் கூற,
அவன் புன்னகையுடன், “ஸோ உனக்கு ஞாபகம் வந்திருச்சு”
“எது?”
அவன் வாய்விட்டு சிரித்தபடி, “உன் கோபமே சொல்லுதே”
“என்னனு?”
“உனக்கு அந்த அமேசெஜ் ஞாபகம் வந்திருச்சுன்னு”
“ச்ச்.. எரிச்சலை கிளப்பாத.. காலையில் இருந்து அமைதியா தானே இருந்த! நானும் நிம்மதியா இருந்தேன்”
அவன் உதட்டோர புன்னகையுடன், “உண்மையை சொல்லு.. என் அமைதியில் நிம்மதியாவா இருந்த? உனக்குள் ஏதோ மிஸ் பண்ற பீல் வரலை?”
அவனது உதட்டோர புன்னகையை தன் மனம் ரசிப்பதை உணர்ந்து திடுக்கிட்டவள் அவன் தன் மனதை சரியாக கூறியதில் மேலும் திடுக்கிட்டாள்.
அதே வசீகர உதட்டோர புன்னகையுடன் அவன் புருவம் உயர்த்த, அவள் சட்டென்று சுதாரித்து, “உன்னை பார்த்தாலே ரெண்டே பீல் தான் வருது.. கோபமும் எரிச்சலும்”
“அப்படியா!” என்று அவன் தலை சரித்து வினவ,
அவள் முறைப்புடன், “ஆமா”  என்று கூறி நகர்ந்து படிகளில் ஏற,
அவள் பின்னாடி விரைந்தவன், “உன்னை நான் அறிவேன்… என்னை அன்றி யார் அறிவார்” என்று உல்லாசமாக பாடியபடி அவளை கடந்து சென்றான்.
அன்று மதியம் முழுவதும் ‘லேப்’ என்றதால் அதன் பிறகு இவளை சீண்டும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்பதை விட அவன் சீண்ட நினைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. பின்ன! அந்த ஜகஜாலகில்லாடி நினைத்தால் வாய்ப்பை அமைத்துக்கொள்ள முடியாதா என்ன!
பிருந்தா வெளியே அமைதியாக இருப்பது போல் தெரிந்தாலும் அவளுள் பெரும் போராட்டமே நடந்துக் கொண்டிருந்தது. போராட்டத்தின் முடிவில் அவளது மனம் அவளுக்கு ஓரளவு புரிந்ததோடு சிவகுருவின் மனமும் புரியத் தொடங்கியது. 
இந்த ஆராய்ச்சியில் இருந்தவள் தப்பு தப்பாக தட்டச்சிடு செய்திருக்க அவளது ‘ப்ரோக்ராமில்’ பல ‘எரர்’ வந்தது. 
இவள் முழித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்த நந்தினி இவளது ‘ப்ரோக்ராமை’ பார்த்து, “என்னடி பண்ணி வச்சிருக்கிற? ப்ரோக்ராம் தான் சொந்தமா எழுத மாட்ட! அட்லீஸ்ட் கொடுத்ததையாவது ஒழுங்கா டைப் பண்ண வேண்டியது தானே!” என்று திட்டினாள்.
இவள் அவளை முறைக்க அவள் இவளை முறைக்க அங்கே வந்த ஆசிரியர் ஐஸ்வர்யா, “அவுட்புட்” என்று கூற, நந்தினி தனது ‘அவுட்புட்’-யை காட்டி கையெழுத்து வாங்கினாள்.
பிருந்தா, “பைவ் மினிட்ஸ் மேம்” என்று கூற ஆசிரியர், “ஹ்ம்ம்.. சீக்கிரம்” என்று கூறிவிட்டு சென்றார்.
அவர் அந்த பக்கம் சென்றதும் பிருந்தா மாலினியை அழைத்து, “எந்த டிரைவ்வில் போட்டு வச்சிருக்க?” என்று வினவ,
மாலினி பதில் சொல்லும் முன் நந்தினி, “சொல்லாத மாலு.. இவளே போடட்டும்” என்று கூற, 
பிருந்தா, “இவ கிடக்கிறா.. நீ சொல்லு மாலு” என்று கூற,
நந்தினி, “மாலு சொல்லாத” என்று கூற,
மாலினி யார் பக்கம் பதில் கூற என்று ஒரு நொடி முழித்து பின், “நீயே சொன்ன பிறகு நான் சொல்லுவேனா நந்து” என்று கூறியவள் பிருந்தா கேட்ட கேள்விக்கு பதிலை கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பினாள்.
பிருந்தா, “மாலு” என்று சிணுங்க, அவள் கைபேசியை கண்காட்டிவிட்டு திரும்பிக் கொண்டாள்.
புன்னகையை மறைத்தபடி திரும்பிய பிருந்தா நந்தினி அறியாமல் கைபேசியை நோண்டி மாலினியின் ‘ப்ரோக்ராமை’ தேடி எடுத்து ‘அவுட்புட்’ காட்டி கையெழுத்து வாங்கினாள்.
[ஆய்வகத்தில் மாணவர்கள் தங்கள் ‘ப்ரோக்ராம்’ அச்சிடு(print) எடுப்பதற்காக அணைத்து கணினிகளும் இணைப்பில் இருக்கும்.. அதை ஆசிரியர் அறியாமல் மாணவர்கள் இப்படி பயன்படுத்திக்கொள்வர். அதாவது ஒரு வகுப்பில் மூன்று அல்லது நான்கு மாணவர்கள் மட்டுமே உண்மையாக ‘ப்ரோக்ராம்’ போட்டு ‘அவுட்புட்’ எடுப்பர்.. மற்றவர்கள் இவர்களின் ‘ப்ரோக்ராமை’ எடுத்து ‘அவுட்புட்’ காட்டிவிடுவார்கள் பிருந்தா செய்தது போல்]
வகுப்பு முடிந்து கல்லூரி உணவகத்தில் அமர்ந்தபடி தோழிகள் பேசிக் கொண்டிருந்தனர்.
நந்தினி ஆச்சரியத்துடன் பிருந்தாவை பார்த்து, “எப்படிடி அவுட்புட் வாங்கின?” என்று வினவ,
பிருந்தா, “ஹ! நாங்க யாரு!” என்று பெருமையாக கூறி சல்வாரில் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்.
மாலினி அதை பார்த்து சிரிக்கவும் நந்தினி சந்தேகமாக இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.
அப்பொழுது அங்கே வந்த ஜெனிஷா, “தேங்க்ஸ் ஜில்ஸ்.. மாலினி சேவ் பண்ண டிரைவ் சொன்னதால் ஈஸியா அவுட்புட் காட்டிட்டேன்” என்றாள்.
நந்தினி தோழிகளை முறைக்க பிருந்தா, “பத்த வச்சிட்டியே பரட்ட!” என்று ஜெனிஷாவை பார்த்து கூற, 
ஜெனிஷா புன்னகையுடன் கண்சிமிட்டிவிட்டு சென்றாள்.
நந்தினி மாலினியிடம், “நீ தான் இவளை கெடுக்கிற” என்று திட்ட ஆரம்பிக்க,
மாலினி, “எனக்கு ப்ராக்டிஸ்க்கு நேரமாச்சு” என்றபடி ஓடிவிட எப்பொழுதும் போல் நந்தினியின் அர்ச்சனையில் நனைந்தது பிருந்தா மட்டுமே.
அடுத்த நாள் ராகேஷ் செல்வராஜ், ஜெனிஷா மற்றும் மாலினி கல்லூரியிலிருந்து மற்ற பங்கேற்பாளர்களுடன் பி.டி சார் மற்றும் ஒரு பெண் ஆசிரியருடன் கல்லூரி பேருந்தில் போட்டி நடக்கும் கல்லூரிக்கு சென்றனர்.
அந்த கல்லூரிக்கு இவர்கள் சென்ற சிறிது நேரத்தில் இவர்கள் கூட்டத்துடன் ராஜசேகரும் சிவகுருவும் வந்து சேர்ந்துக் கொண்டனர்.
மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் கண்களை விரிந்த ஜெனிஷாவை புன்னகையுடன் பார்த்த ராஜசேகர் புருவம் உயர்த்தினான்.
ஜெனிஷா, “எப்படி டா? அதான் போன் பண்ணப்ப எடுக்காம ட்ராபிக்கில் மாட்டிட்டேன் டைமுக்கு வர முடியலை னு மெசேஜ் அனுப்புனியா?”
“என் அழகியின் அழகிய ஆட்டத்தை எப்படி மிஸ் பண்ணுவேன்”
ஜெனிஷா பூரிப்புடன் சிறு வெக்கப் புன்னகையை உதிர்க்க, அதை ரசித்து இவன் சிரிக்க,
இறுதி ஆண்டு மாணவன் ஒருவன், “டேய் போதும் டா.. அடக்கி வாசி.. நீங்க மாட்டி எனக்கும் ஆப்படிச்சிராத” என்றான்.
[அந்த மாணவன் தான் போட்டி நடக்கும் கல்லூரியில் இருக்கும் அவனது நண்பனிடம் கேட்டு போலி நுழைவு சீட்டு வாங்கி கொடுத்து இருந்தான்]
சிவகுரு, “நாங்க விசாரிச்ச்டோம் பாஸ்.. எங்களை மாதிரி இங்கே நிறைய பேர் சுத்திட்டு தான் இருக்கிறான்க”
“டேய்.. இந்த காலேஜ்காரன் கிட்ட மாட்டினா பிரச்சனை இல்லை ஆனா வெட்டுக்கிளி கிட்ட மாட்டினோம்!”
ராஜசேகர், “சும்மா பதறாதீங்க பாஸ்” என்றும்,
ஜெனிஷா, “வெட்டுக்கிளி யாரு பாஸ்?”
ராஜசேகர், “நம்ம பி.டி தான்”
“ஓ! எதுக்கு இந்த பெயர்?”
“இப்போ ரொம்ப முக்கியம்” என்ற இறுதி ஆண்டு மாணவன், ராஜசேகரை சுட்டிகாட்டி, “இவனை கொஞ்சம் அடக்கி வை மா.. உனக்கு புண்ணியமா போகும்” என்றான்.
“ட்ரை பண்றேன்”
“எல்லாம் என் நேரம்” என்றவன் வெட்டுக்கிளி வரவும்(அதாங்க பி.டி சார் வரவும்), “டேய்.. காதல் மன்னா! காதல் ரசம் பொழிந்தது போதும் டா.. கொஞ்ச நேரம் இங்கே வராத” என்று ராஜசேகரின் முதுகில் கைவைத்து அந்த இடத்தை விட்டு நகர்த்தியபடி சிவகுருவை பார்த்து, “உனக்கு வேற தனியா சொல்லனுமா! கிளம்பு டா” என்றான்.
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “வெட்டுக்கிளி பார்த்து நீங்க ஏன் வலிப்பு வந்தவன் மாதிரி துள்றீங்க.. நாங்க கிளம்பிட்டோம்” என்றபடி நகர்ந்தான்.
இவர்கள் நகரவும் வெட்டுக்கிளி வரவும் சரியாக இருந்தது. அந்த மாணவன் நிம்மதியாக மூச்சை வெளியிட்டான். 
சிறிது நேரத்தில் போட்டிகள் தொடங்கவும் இவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து பங்கேற்க ஆரம்பித்து பரிசுகளை குவிக்க ஆரம்பித்தனர்.
மாலினி ‘சோலோ சாங்’ போட்டியில் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் இருந்து ‘வான் வருவான் வருவான்’ என்ற பாடலை பாடினாள். இவளது அழகில் மயங்காது திடமாக இருந்த மாணவர்கள் கூட இவளது குரலின் இனிமையில் மயங்கினர். சில பெண்கள் கூட இவளது விசிறியாக மாறினர்.
ராஜசேகர், “வாவ்.. செம சிஸ்..”
“தேங்க்ஸ் ப்ரோ”
“உருகி பாடினதை பார்த்தா”
“பார்த்தா!”
“ஏதும் லவ்?”
அவள் செல்லமாக முறைக்கவும் அவன், “இல்லை சிஸ் நீங்க அனுபவிச்சு பாடினதை வச்சு கேட்டேன்”
“அதற்கு இசை மீது காதல் இருந்தா போதும்”
“ஏன் சிஸ் லவ் பண்ண கூடாது னு கொள்கையில் இருக்கிறீங்க?”
“நான் எப்போ அபப்டி சொன்னேன்?”
“அன்னைக்கு ஸ்ரீராம் கிட்ட சொன்னீங்களே!”
“அது அவனை ஆஃப் பண்ண”
“ஓ!” என்று அவன் ராகம் இழுக்க,
அவள் புன்னகையுடன், “என் அப்பா அம்மா லவ் மரேஜ் தான் பட் எனக்கு என்னவோ பெருசா லவ் பண்ணி கல்யாணம் பண்றதில் இன்ட்ரெஸ்ட் இல்லை”
“என்ன சிஸ் இருக்கு ஆனா இல்லைங்கிற மாதிரி சொல்றீங்க”
“என்ன!”
“லவ் பண்ண மாட்டேன் னு கொள்கை இல்லை ஆனா லவ் மேல இன்ட்ரெஸ்ட் இல்லை னு சொல்றீங்களே”
அவள் மென்னகையுடன், “அது அப்படி தான்” என்றவள், “மே பி பல்ப் எரிற அளவிற்கு யாரும் என்னை இம்ப்ரெஸ் பண்ணலை”
“ஹ்ம்ம்.. பார்க்கலாம்” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கே வந்த சிவகுரு, “மச்சி உன் ஆளு டான்ஸ் தான் இப்போ” என்றதும்,
ராஜசேகர், “ஓகே சிஸ் அபாரம் பார்ப்போம்” என்றபடி சிவகுருவை இழுத்துக் கொண்டு ஓடினான்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் போட்டி நடக்கும் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இருவர் மாலினி அருகே வந்து, “ஹாய் மாலினி” என்றனர்.
அவள் அமைதியாக பார்க்கவும் ஒருவன், “பதிலுக்கு ஹாய் சொல்ல மாட்டியா?” என்றும்,
இன்னொருவன், “நான் பாடினது எப்படி இருந்தது?” என்று வினவினான்.
அவர்களை தீர்க்கமாக பார்த்தவள், “இப்போ உங்களுக்கு என்ன வேணும்?”
முதலில் பேசியவன், “என்ன கேட்டாலும் கிடைக்குமா?” என்றபடி அவளை சற்று நெருங்க,
“கேட்காததும் கிடைக்கும்” என்று கூறியபடி மாலினி அருகே வந்து செல்வராஜ் நின்றான்.
முதலில் பேசியவன், “நீ யாரு? இவளோட பாய் பிரெண்ட்டா? ஆனா மேடம் எந்த கொம்பனும் அவங்களை இம்ப்ரெஸ் பண்ணலை னு சொன்னாங்களே!”
செல்வராஜ் கையை முறுக்கியபடி முன்னால் வர மாலினி, “செல்வா பிரச்சனை வேணாம்..” என்றாள்.
அந்த மாணவன், “அதான் மேடம் சொல்றாங்களே!” என்று நக்கலுடன் கூற,
செல்வராஜ், “உன் கிட்ட கேட்டுட்டு நான் இங்கே வரலை.. வாயை மூடிட்டு இரு” என்று மாலினியிடம் எரிந்து விழுந்தவன் அந்த மாணவனை பார்த்து, “இப்போ உனக்கு என்ன டா தெரியனும்?” என்று எகிறினான்.
அந்த மாணவனும், “என்ன டா ரொம்ப துள்ற! இது எங்க காலேஜ்.. ஒரு சவுண்ட் கொடுத்தா உன் நிலைமை அவ்ளோ தான்” என்று எகிறினான்.
மாலினி சிறு பதற்றத்துடன் மற்றவர்களை அழைக்க முயற்சிக்க கைபேசியிலோ சிக்னல் சிறிதும் இல்லை.
செல்வராஜ், “சவுண்ட் கொடுறா” என்று கூற, இருவரும் முட்டிக்கொள்ளும் நேரத்தில்,
“ரிலாக்ஸ் பாய்ஸ்” என்றபடி சிறு புன்னகையுடன் அங்கே வந்தவன் விறைத்துக் கொண்டு நின்றிருந்த இருவரின் நெஞ்சிலும் கையை வைத்து சுலபமாக இருவரையும் நகர்த்தினான்.
பின் செல்வராஜை பார்த்து மெல்லிய புன்னகையுடன் , “ஈஸி பாஸ்.. அவங்க ஏதோ விளையாட்டுக்கு அப்படி பேசிட்டாங்க” கூறியவன் அந்த மாணவனை தீர்க்கமான பார்வையுடன், “விளையாட்டு வினையாகும் கேள்விபட்டது இல்லை! நீ பேசியதிற்கு இந்த பொண்ணு கிட்ட மன்னிப்பு கேளு” என்றான்.
“நீ யாரு டா?” என்று செல்வராஜ் மற்றும் அந்த மாணவன் ஒன்றாக வினவினார்.
அந்த மாணவனை பார்த்து, “உன் கிளாஸ் மேட் யாழினியோட அண்ணன்” என்றதும் அந்த மாணவனின் உடல் மொழி அப்படியே மாறியது.
அவன் மாலினியை பவ்வயமாக நோக்கி, “சாரி சிஸ்டர்.. ஜஸ்ட் பார் ஃபன் அப்படி பேசினேன்” என்றவன் செல்வராஜ் கையை குழுக்கி, “ரிலாக்ஸ் பாஸ்” என்று கூறிவிட்டு நண்பனை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.
புதியவன் மென்னகையுடன் மாலினியை பார்த்து, “நல்ல பாடுனீங்க.. ஸ்வீட் வாய்ஸ்”
அவளும் மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்றாள்.
“ஓகே கேரி ஆன்” என்றுவிட்டு அவன் நகர்ந்தான்.
செல்வராஜ் மாலினியை முறைத்துக் கொண்டு நின்றான்.
அவள் ‘என்ன?’ என்பது போல் பார்க்கவும் அவன், “தெரியாதவன் கிட்ட சிரிச்சு பேசாத” என்று முறைப்புடனே கூறினான்.
அதை தவறாக எடுக்காதவள், “தேங்க்ஸ்.. பட் அவர் என் கண்ணை பார்த்து சாதரணமா தான் பேசினார்.. அதான் பதில் சொன்னேன்”
“அவர் னு மரியாதை பலமா இருக்குது!”
“அவரை பார்த்தா நம்ம ஏஜ் மாதிரியா தெரியுது?”
“ரொம்ப கவனிச்சு இருக்க போல!”
“பிரச்சனை பண்ணவன் பைனல் இயர் ஸ்டுடென்ட்.. அவனோட கிளாஸ் மேட்டோட அண்ணன் னு சொன்னார்.. ஸோ அவருக்கு ஏஜ் கூட தான்.. உனக்கு என் மேல் நல்ல அபிப்பராயம் இல்லை அதனால் தப்பாவே தான் யோசிக்கிற…………”
“ஆமா அப்படி தான்.. இப்போ உனக்கு ஹெல்ப் பண்ணதை வச்சு என் மனசு மாறினதா தப்பு கணக்கு போடாத.. என்னை பொறுத்தவரை நீ எட்டப்பி தான்”
மாலினி பதில் கூறும் முன், “டேய் இன்னுமா அதை விடலை” என்றபடி சிவகுரு வந்தான், கூடவே ராஜசேகரும்.
செல்வராஜ், “உன் விசிறிகள் வந்துட்டான்க உன்னை பாதுகாக்க” என்றபடி கிளம்ப,
மாலினி, “செல்வா” என்று அழைத்தாள்.
அவன் அதே விறைப்புடன் திரும்பி பார்க்க, அவள், “தேங்க்ஸ்” என்றாள்.
அவனோ, “உன் தேங்க்ஸ்க்குகாக நான் எதையும் செய்யலை”
அவள் மென்னகையுடன், “தெரியும்” என்றாள்.
அவளது சிரிப்பில் அவன் இன்னும் அதிகமாக முறைக்க, ராஜசேகர், “டேய் எட்டப்பன் வேலையை பார்த்தது அந்த செம்பு நக்கி(ஸ்ரீராமனுக்கு கிடைத்த புது பட்டப் பெயர்)என்றான்.
செல்வராஜ் மாலினியை பார்க்க, அவள், “நான் பொண்ணு னு நீ அடிதடியில் இரங்கலை.. போட்டு கொடுத்தது அவன் னு தெரிந்தால் பசங்க அடிச்சிப்பீங்க.. அதை தான் ஸ்டாஃப்ஸ் எதிர்பார்க்கிறாங்க.. அதான் நான் அமைதியா இருந்துட்டேன்”
சில நொடிகள் அமைதியாக இருந்த செல்வராஜ் அவளை பார்த்து, “சாரி அண்ட் தேங்க்ஸ்” என்றான்.
அவள், “உன் தேங்க்ஸ்க்குகாக நான் எதையும் செய்யலை” என்று அவனை போல் சொல்லிக்காட்ட, முதல் முறையாக செல்வராஜ் இதழோரம் மென்னகை அரும்பியது.
[அந்த புதியவன் மாலினிக்கு தான் அறிமுகமற்றவன் ஆனால் நமக்கு அறிமுகமானவன் தான்.. அது யாரு னு கண்டு பிடிங்க பார்ப்போம்
  
மழை தொடரும்….

Advertisement