Advertisement

மழை 3:
அடுத்த நாள் காலையில் ராஜசேகர்(நியூ என்ட்ரி) தனது இரு-சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கும் வழியில் ‘யாரை கேட்டு இந்த ஹார்ன் வச்சான்.. கேட்கவே கேவலமா இருக்குது.. இன்னைக்கு அவனுக்கு பூஜை இருக்குது’ என்று யாரையோ மனதினுள் திட்டிக் கொண்டே வந்தவன் இன்னும் சற்று நேரத்தில் அந்த யாரோவிற்கு நன்றி கூற போவதை அறியமாட்டான்.
கல்லூரி வாசலருகே வரும் பொழுது இவனது வாகனம் எழுப்பிய அந்த கேவலமான ஒலியை கேட்டு வாசலின் முன் காரில் இருந்து இறங்கிய ஜெனிஷா(நியூ என்ட்ரி) ஒரு திடுக்கிடலுடன் திரும்பி பார்த்தாள்.
ஜெனிஷாவின் முதல் பார்வையிலேயே மயங்கினான் ராஜசேகர். இந்த கேவலமான ஹார்ன் வைத்ததிற்காக திட்டியவன் அந்த யாரோவிற்கு இப்பொழுது நன்றி கூறினான்.
‘உனக்கு கண்டிப்பா ட்ரீட் டா மச்சான்’ என்று மனதினுள் கூறிக் கொண்டே அவன் ஜெனிஷாவை பார்த்து வசிகர புன்னகையை வீச அவளோ தன்னை சிறிது பயமுறுத்திய அந்த ஒலியை எழுப்பிய ராஜசேகரை உஷ்ண பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.
ஜெனிஷாவை பார்த்தபடியே வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு சென்ற ராஜசேகர் மனதினுள், ‘கடவுளே கண்டிப்பா இவ என் கிளாஸ்ஸா தான் இருக்கணும் ப்ளீஸ்’ என்று வேண்டிக் கொண்டான்.
ஜெனிஷா பள்ளி தோழி ஆஷாவுடன் பேசியபடியே வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தாள். முன்தினம் நிகழ்ந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டே வந்தவள், “என்னடி இது.. ராகிங் கிடையாதா? பசங்க பொண்ணுங்க பேச கூடாதா? பசங்க வழிய சான்ஸ்யே இல்லையா? ச என்னடி காலேஜ் இது.. இப்படி தெரிஞ்சுருந்தா நான் இந்த காலேஜ் சேர்ந்திருக்கவே மாட்டேனே!” 
ஆஷா, “உன்னை பற்றி தெரிந்து தான் உன் அப்பா இந்த காலேஜ்ஜில் சேர்த்து விட்டுருக்கனும்” என்று சிரித்தாள்.
“இவங்க ரூல்ஸ் போட்டா என்ன? பசங்க பேச தான் செய்வான்க, வழிறது வழிய தான் செய்வான்க..”
“அப்டீங்கிற?”
“இல்லாட்டி நாம மாத்திருவோம்” என்று நகைத்தபடி CSE-IT வகுப்பறைக்குள் நுழைந்தாள்.
இவர்களுக்கு பின் வந்து கொண்டிருந்த மாலினிக்கு இவர்களின் பேச்சு தெள்ளத் தெளிவாக கேட்டது. முதல் பார்வையிலேயே ஜெனிஷா மீது சிறு வெறுப்பு பிறந்தது. அதே போல் முத்தினம் நிகழ்வுகளை பற்றி கேட்ட பொழுது ஆஷா மாலினியை பற்றி சொன்னதில் மாலினியின் முகத்தை பார்க்கும் முன்பே ஏனோ ஜெனிஷாவிற்கு மாலினி மேல் சிறு வெறுப்பு பிறந்தது. 
[ஜெனிஷா – மாலினியை போலவே சுண்டி இழுக்கும் அழகு உடையவள், நன்றாக படிப்பவள், இவள் இருக்கும் இடத்திலும் சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது. பெரும்பாலும் இவளும் மாலினியும் ஒத்த குணங்களை கொண்டவர்கள் தான் ஆனால் ஒரு பெரிய வித்யாசம் என்னவென்றால் இவள் தன் அழகில் சிறு கர்வம் கொண்டவள்.
ராஜசேகர் – மாநிறத்தில் ஆறடிக்கு சற்று குறைவான உயரத்தில், உயரத்திற்கு ஏற்ற இடையில் பார்பதற்கு அம்சமாக இருக்கும் வாலிபன். பெண்களிடம் வழிய மாட்டான், பிறருக்கு உதவும் நல்லெண்ணம் கொண்டவன். சுமாராக படிப்பவன்.]
சற்று நேரத்தில் CSE-IT வகுப்பறையினுள் ராஜசேகர் நுழையவும் ஜெனிஷாவின் முகம் சுருங்கியது, இதழ்கள் எரிச்சலுடன், ‘இவனும் இந்த கிளாஸ் தானா’ என்று முணுமுணுக்க ஜெனிஷாவை பார்த்த ராஜசேகரின் இதழ்கள், ‘தங் காட்.. இவளும் இந்த கிளாஸ் தானா’ என்று மகிழ்ச்சியாக முணுமுணுத்தது.
ஜெனிஷா நான்காவது வரிசையில் அமர்ந்திருந்ததால் ராஜசேகரும் நான்காவது வரிசையில் அமர்ந்தான். ராஜசேகரின் பார்வையையும் முகத்தின் மலர்ச்சியையும் பார்த்த சிவகுரு, “என்ன தம்பி முதல் நாளே இந்த பார்வை?” என்று வினவினான்.
தன்னை தம்பி என்று அழைத்தவனை ஏற இறங்க பார்த்த ராஜசேகரின் பார்வை, ‘பொடியனா இருந்துட்டு நீ என்னை தம்பி னு கூப்பிடுறியா?’ என்று கேட்க, 
சிவகுரு, “என்ன பாஸ்.. ‘மூர்த்தி சிறுசுனாலும் கீர்த்தி பெருசு’ னு கேள்வி பட்டது இல்லை அது மாதிரி தான் நானும்” என்றான்.
ராஜசேகர் புன்னகைக்கவும் சிவகுரு, “உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் பாஸ்.. அந்த பொண்ணு கிட்ட பார்த்து பழகுங்க”
ராஜசேகரின் முகத்தில் சிரிப்பு மறைந்து சிறு கோபம் எட்டி பார்க்கவும் சிவகுரு, “வெயிட்.. வெயிட்.. ஏன் பாஸ் கோபம்.. அந்த பொண்ண பத்தி தெரிஞ்சதால சொல்றேன்.. சைட் அடிக்குறதுனா ஓகே.. பட் லவ் கிவ் பண்றதா இருந்தா வேற நல்ல பொண்ண பார்த்……………………………….”
ராஜசேகர் கை உயர்த்தி சிவகுருவின் பேச்சை நிறுத்தினான், “நீ அந்த பொண்ண லவ் பண்றியா?”
சிவகுரு பலமாக சிரித்தான். பிறகு, “நானா.. ஐயோ என்ன பாஸ் நீங்க.. எவனாது லவ் பண்ற பெண்ணை நீ சைட் அடிச்சுக்கோ னு சொல்லுவானா?” என்று மீண்டும் சிரிக்கவும் ராஜசேகர், ‘அதானே!’ என்று மனதினுள் கூறி மானசீகமாக தன் தலையில் ஒரு தட்டு தட்டிக் கொண்டான். கோபம் மறைந்து சிவகுரு சொல்வதை கவனமாக கவனிக்க தொடங்கினான் ராஜசேகர்.
சிவகுரு சிரிப்புடன், “எனக்கு லவ் பண்ணும் உத்தேசம் இல்லை அதுவும் இந்த பொண்ணை கண்டிப்பா இல்லை”
“ஏன் இந்த பொண்ணுக்கு என்ன குறை?’
“குறையா! எல்லாமே ஜாஸ்தி தான்.. அழகு, திமிர், கர்வம் etc.. etc..”
“உனக்கு எப்படி தெரியும்?”
“என் பிரெண்ட் நூல் விட்டு பார்த்து அலுத்து போய்ட்டான்”
“ஏன்?”
“இவ அழகுல மயங்கி இவ கிட்ட பேசி பழகினான்.. அவன் தன்னிடம் வழிஞ்சது தெரிந்தும் அவனை அவாய்ட் பண்ணவும் இல்லை அவன் காதல் சொன்ன போது ஓகே சொல்லவும் இல்லை..”
“அவளுக்கு பிடிச்சிருக்காது”
“இருக்கலாம்.. நல்ல பொண்ணா இருந்தால் ஒருத்தன் வழிகிறான்னு தெரிந்தால்  அவனை பிடிக்கலைனா  உடனே விலகிடுவா பட் இவ அப்படி கிடையாது.. பசங்க வழிகிறது பிடிக்கும் பட் கமிட் ஆக மாட்டா.. அதுக்குன்னு மோசமான பொண்ணுனும் சொல்லலை.. வழிகிறதை என்கரேஜும் பண்ண மாட்டா டிஸ்டன்ஸ் மெயிண்டேன் பண்ணுவா பட் விலகவும் மாட்டா.. 
ஸோ என்னை பொறுத்தவரை சைட் அடிக்க பேசி பழக ஓகே பட் லவ்………… இவ ஒத்துவர மாட்டா” 
ராஜசேகர் ஜெனிஷாவின் சிறு பயம் கலந்த முதல் பார்வையையும் இரண்டாவது உஷ்ண பார்வையையும் நினைத்துப் பார்த்தான். சிவகுரு சொன்னதில் ஒரு துளி கூட உண்மை இல்லை என்று தோன்றியது, ஆனால் சிவகுருவின் முக-பாவனைகள் அவன் பொய் சொல்வது போல் இல்லாமல் இருக்கவும் ஒரே ஒரு நொடி குழம்பினான், பிறகு ‘இவன் தவறாக புரிந்திருப்பான்’ என்று தன்னை சமாதனம் படுத்திக் கொண்டான்.
ராஜசேகர், “பார்க்கலாம்” என்று கூறவும்,
சிவகுரு தோளைக்குலுக்கி, “விதி வலியது  என்று சிரித்துவிட்டு, “நான் சிவகுரு” என்று தன்னை அறிமுக படுத்தினான். ராஜசேகரும் தன்னை அறிமுக படுத்திக் கொண்டான். சிவகுரு கடைசி வரிசையை விட்டுவிட்டு ராஜசேகர் அருகில் அமர்ந்துக் கொண்டான்.
ஜெனிஷாவின் முக-சுருக்கத்தை பார்த்த ஆஷா, “என்னடி ஏன் ஒரு மாதிரி இருக்க?”
ஜெனிஷா ராஜசேகரை காட்டி கல்லூரி வாசலில்  நிகழ்ந்ததை பற்றி கூறினாள். ஆஷா சிரிக்கவும் ஜெனிஷா கடுப்புடன், “ஏன்டி சிரிக்கிற?”
“இல்லை உன்னையே ஒருத்தன் பயமுறுத்திட்டானே!!!”
“நான் ஒன்னும் பயப்படலை”
“நீ தானே சொன்ன”
“என்ன சொன்னேன்?”
“அந்த ஹார்ன் சவுண்ட் கேட்டு பயந்து போய் திரும்பி பார்த்த.. அவன் சிரிச்சுட்டு இருந்தான்னு”
“அது..அது”
“எது.. எது”
ஜெனிஷா பல்லை கடித்துக் கொண்டு, “உன்னிடம் போய் சொன்னேன் பாரு என்னை சொல்லணும்”
“சரி விடு.. அவனை பார்த்து எதுக்கு கோபப் படுற?”
“பின்ன அவன் செய்ததுக்கு…………..”
“பசங்க உன்னிடம் வழிகிறது புதுசா..”
“அவன் வழியலைடி”
“ஓ.. அதான் இந்த கோபமா?”
ஜெனிஷா முறைப்புடன், “பசங்க வழிஞ்சா அதை நான் பொருட்படுத்த மாட்டேன் தான் அதுக்குன்னு நீ என்னை இப்படி கீழ் தனமா நினைச்சிட்டியே!”
“நீ ஒரு புரியாத புதிர்டி”
“லுக் ஆஷா.. ஒரு பையன் என் கிட்ட வழிஞ்சா அவன் என் அழகை ரசிக்கிறான்.. வழிகிறது பசங்களோட விக்னேஸ்.. அதை நமக்கு எதுவும் தேவைனா சின்ன லெவலில் யூஸ் பண்ணிக்கலாம்…”
“இது தப்பில்லையா?”
“மிஸ்யூஸ் பண்ணலையே! சும்மா சின்ன சின்னதா நமக்கு தேவையான தகவல் சேகரிக்கிறது, டைம் பாஸ்க்கு ஜாலியா பேசிக்கிறது.. அவளோ தான்.. நான் அவங்களை என்கரேஜ் பண்ண மாட்டேனே..”
“பட் அவாய்ட் பண்ணாததும் தப்பு தானே! உன்னுடைய இந்த குணம் உன்னை தப்பாக பிக்சரைஷ் பண்ணும்”
“என்னிடம் யாரும் தப்பா பழகினது இல்லை”
“பட் மனதில் நினைச்சுப்பாங்க”
“ஆமா நீ போய் அவங்க மனசுல இருக்கிறதை பார்த்துட்டு வர.. போடி”
ஆஷா பதில் சொல்லாமல் தோளை குலுக்கினாள். பிறகு, “நீ ஏன் கோபப்பட்டேன் னு சொல்லவே இல்லையே”
“எப்படி சிரிச்சான் தெரியுமா.. என்னை பயமுறுத்தின மிதப்பு.. என்ன ஒரு திமிர் தெரி………” என்று ராஜசேகரை பார்த்துக் கொண்டே பல்லை கடித்துக் கொண்டு சொல்லிக் கொண்டிருந்தாள், அதே நேரத்தில் அவனும் ஜெனிஷாவை பார்த்தான். ஜெனிஷாவின் ஆத்திரம் மின்னிய முகத்தில் என்ன கண்டானோ அதே வசீகர புன்னகையுடன் ஜெனிஷாவை பார்த்து கண்சிமிட்டவும் ஜெனிஷாவின் பேச்சு பாதியிலேயே நின்றது. ஒரே ஒரு நொடி தடுமாறியவள் அடுத்த நொடியே கோபமாக முறைத்தாள். ராஜசேகரின் சிரிப்பு அதிகரித்தது.
ஜெனிஷாவின் பேச்சு நின்றதும் அவளது பார்வை சென்ற இடத்தை ஆஷா பார்க்கவும் ராஜசேகர் சிரிப்பை மறைத்து அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சிவகுருவுடன் பேசத் தொடங்கினான்.
ஆஷா, “என்ன ஜெனி! என்ன ஆச்சு? ஏன் இப்படி முறைக்கிற? அப்போ சிரிச்சதுக்கா இப்படி முறைக்கிற?”
ஆஷாவின் கேள்விகளில் சுயயுணர்விற்கு வந்த ஜெனிஷாவிற்கு கோபம் தனியவே இல்லை. இடத்தைவிட்டு எழுந்து சென்று ராஜசேகரிடம், “ஏய்! உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்க?”
ராஜசேகர் கண்களில் சிரிப்புடன், “அதை தெரிஞ்சு நீ என்ன செய்ய போற?”
இரண்டு நொடிகள் ‘என்ன சொல்வது’ என்று திணறிய ஜெனிஷா, “ஏய்! எதுக்கு என்னை பார்த்து சிரிச்ச?”
“உன்ன பார்த்து சிரிச்சேனா? நீ என்ன என் அத்தை மகளா சிரிச்சு கொஞ்சுறதுக்கு!”
“திமிரா?”
சிவகுரு ‘உன்னைவிடவா?’ என்று முணுமுணுக்க ஜெனிஷா அவனை பார்த்து முறைத்தாள்.
அதற்கும் சிவகுரு, ‘ஆமா இவ கண்ணகி கஸின் சிஸ்டர்.. வந்துட்டா’ என்று மீண்டும் முணுமுணுத்தான்.
ஜெனிஷா சிவகுருவிடம், “மைன்ட் யூர் டங்” என்று குரலை உயர்த்தி பேசவும், 
சிவகுரு, “யூ மைன்ட் யூர் டங் பஸ்ட்” என்று திருப்பினான்.
ஆஷா ஜெனிஷாவின் கையை பற்றி, “ஜெனி அமைதியா இரு…………”
ராஜசேகர் ஏதோ சொல்ல வரவும் ஸ்ரீராமன் வழக்கம் போல் ஆஜரானான்.
ஸ்ரீராமன், “ஹே என்னடா.. பொண்ணுங்க கிட்ட எப்படி பேசணும்னு தெரியாது? அதுவும் இந்த அழகான பொண்ணை ஏன் தேவை இல்லாம டென்ஷன் பண்றீங்க…”
“வந்துட்டார்டா நாட்டாமை..” என்று சத்தமாக முணுமுணுத்த சிவகுரு ஸ்ரீராமனிடம் திரும்பி, “அது எப்படி டா உனக்கு மூக்கு மேல வேத்துருது.. எங்க…………….”
ஸ்ரீராமன், “அநியாயம் எங்க நடந்தாலும் தட்டி கேட்பான் இந்த ஸ்ரீராமன்” என்று தன் காலரை தூக்கிவிட்டுக் கொண்டான்.
ராஜசேகர், “ஆமா இவரு பெரிய ஜஸ்டிஸ் ராமநாதன்.. வந்துட்டான்” என்று கோபத்திலும் கடுப்பிலும் கூற, 
ஸ்ரீராமன், “தப்ப தட்டிக் கேட்க ஜஸ்டிஸ் ஆ தான் இருக்கணும்னு இல்லை” என்று சொன்னவன் ஜெனிஷாவிடம் திரும்பி, “இவனுங்க இப்படி தான் அறிவே கிடையாது.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க.. நீங்க போங்க.. நான் பார்த்துக்குறேன்”
ஆஷா ஜெனிஷாவை இழுத்துக் கொண்டு தங்கள் இடத்திற்கு சென்றாள்.
ஜெனிஷாவின் பார்வை இங்கேயே இருக்கவும் ஸ்ரீராமன் ராஜசேகரிடம், “பொண்ணுங்க பூ மாதிரி.. அவங்களை……………..”
ராஜசேகர், “என் கோபத்தை கிளப்பாம இடத்தை காலி பண்ணு” என்று பல்லை கடித்துக் கொண்டு கூற,
ஸ்ரீராமன், “நான் என்ன சொல்ல வரேன்னா…………….”
“நீ ஆணியே புடுங்க வேண்டாம்.. இடத்தை காலி பண்ணு” 
ஜெனிஷாவின் பார்வை தங்கள் பக்கம் இல்லை என்பதை உறுதி செய்ததும் ஸ்ரீராமன்,
“என்னடா ரொம்ப தான் துள்ற.. இந்த உதாருக்கெல்லாம் அசருற ஆள் நான் இல்லை..” 
“ஆமா நான் பாப்கார்ன் பாரு.. துள்றேனாம்.. போடா உன் வேலையை பார்த்துட்டு”
ஜெனிஷாவின் பார்வை மீண்டும் இந்த பக்கம் திரும்பவும் ஸ்ரீராமன் சத்தமாக, “நல்லதுக்கே காலம் இல்லை” என்று சொல்லிக் கொண்டு தன் இடத்தில் அமர்ந்தான்.
ஜெனிஷா ராஜசேகரை பார்த்து முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.
ராஜசேகர் சிவகுருவிடம், “இவனுக்கு ‘கிணற்று தவளை’ னு வச்சதுக்கு பதில் பச்சோந்தி இல்லை இல்லை பெண்சோந்தி னு வச்சிருக்கலாம் டா” என்றான்.
———————————————————————————————————————————————————–
பிருந்தா மாலினியிடம், “மால்ஸ் இனி அந்து ஜொள்ளு பாக்டரி கிட்ட இருந்து உனக்கு விடுதலை”
“என்னடி சொல்ற?”
“நீ ரெஸ்ட்ரூம் போயிருந்தப்ப இங்க என்ன நடந்துது தெரியுமா” என்று ஆரம்பித்து ஜெனிஷா, ராஜசேகர், சிவகுரு மற்றும் ஸ்ரீராமன் இடையே நடந்ததை பற்றி கூறினாள்.
மாலினி, “ஹ்ம்ம்.. ஜொள்ளும் ஜொள்ளும் சரியான ஜோடி தான்” என்று புன்னகைக்கவும், 
பிருந்தா, “என்னடி சொல்ற?” என்று வினவினாள்.
மாலினி தான் கேட்ட ஜெனிஷாவின் உரையாடலை பற்றி கூறினாள்.
பிருந்தா, “ஹ்ம்ம்.. லேடி ஜேம்ஸ் பாண்ட் சொன்னா தப்பாவா இருக்கும்” என்று புன்னகைக்கவும் மாலினி சிறு புன்னகையுடன் பிருந்தாவின் கையில் லேசாக தட்டினாள்.
சற்று நேரத்தில், “ஹாய் பிந்து, ஹாய் நந்து.. நீங்க இந்த காலேஜ் தானா” என்ற உற்சாக குரலில் நிமிர்ந்து பார்த்த மாலினி பிருந்தாவிடம், “யார் ஜில்லு இது?” என்று வினவினாள்.
பிருந்தா, “எங்க ஸ்கூல் மேட் ஆர்லி கிறிஸ்டோஃபர்”
“ஆள் எப்படி?”
“நல்ல பொண்ணு தான் பட் கொஞ்சம் எக்ஸ்ஷாஜிரேட் பண்ணற டைப்”
“ஓ”
பிருந்தா, “ஹாய் அரளி.. ஓ.. சாரி.. ஆர்லி.. நீ CSE எடுதிருக்கியா IT எடுத்திருகியா?”
சிறு முறைப்புடன் ஆர்லி, “IT”
மோகனா, “நானும் IT தான்” என்று குதுகளித்தாள்.
“இஸ் இட்.. அம் ஆர்லி கிறிஸ்டோஃபர்.. நீ?” என்று கை நீட்டினாள்.
ஆர்லியின் கையை குலுக்கிய மோகனா, “அம் மோகனா.. இது என் பிரெண்ட் மாலினி.. CSE டிப்பார்ட்மென்ட்”
ஆர்லி மாலினியுடன் கை குலுக்கினாள். நால்வர் கூட்டணி ஐவர் கூட்டணியாக மாறியது.  
மாலினி மனதினுள் ஓர் எண்ணம் இருந்தது, ‘ஆர்லி IT  டிப்பார்ட்மென்ட் ஸோ நெக்ஸ்ட் செம்மில் இருந்து மோகனா தனியா பீல் பண்ண வேண்டாம், தப்பானவங்களுடன் பழகுவாளோ னு பயப்பட வேணாம்’ என்பது தான் அந்த எண்ணம். ஆனால் இந்த ஆர்லியால் தான் தன் உயிர் தோழி மனவருத்தம் கொள்வாள் என்பதை இப்பொழுது அறியமாட்டாள்.
முதல் வகுப்பு கெமிஸ்ட்ரி – 
30-35 வயதை சேர்ந்த ஒரு ஆசிரியர் வகுப்பறையினுள்ளே வந்தார்.
“டியர் ஸ்டுடென்ட்ஸ் அம் ராமலிங்கம் யுவர் கெமிஸ்ட்ரி ப்ரோபஸ்ஸர்..” என்று கூறியவர் மேடை ஏறி கரும்பலகையில்(Black Board) எழுத தொடங்கினார்.
அனீஸ் சக்திவேலிடம், “என்னடா முதல் நாளே கிளாஸ் நடத்துறார்!”
சக்திவேல், “எப்போ கிளாஸ் ஆரம்பித்தால் என்னடா?”
அனீஸ் சக்திவேலை மேலும் கீழும் பார்த்தான்.
சக்திவேல், “டேய்.. நான் பையன் டா”
அனீஸ் மீண்டும் சக்திவேலை மேலும் கீழும் பார்த்தான்.
சக்திவேல், “என்னடா திரும்பவும் ஒரு மார்க்கமா பார்க்குற!”
“நீ பையன் னு புதுசா சொல்றியே அதான்”
“புதுசா சொல்றேனா! நான் எப்பவும் பையன் தான் டா”
“அட சீ.. ஏன்டா காலைலேயே மொக்க போடுற.. சொல்றதை ஒழுங்கா சொல்லு”
“நீ முதல பார்க்குறதை ஒழுங்கா பார்”
“என் பார்வைக்கு என்ன?”
“எதுக்குடா மேலும் கீழும் பார்த்த?”
“நீ உலக அழகி ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகா இருக்க அதான்”
“இதை தான் டா சொன்னேன்”
“எதை?”
“ஒரு பொண்ண பார்க்குற மாதிரி மேலும் கீழும் என்னை பார்க்காத.. நான் பொண்ணு இல்லை பையன்”
“தூ……..” என்று துப்புவது போல் செய்தவன், ” ‘எப்போ கிளாஸ் ஆரம்பித்தால் என்னடா?’ னு நீ கேட்டதும் என்னடா இவனுக்கு படிப்பில் இவளோ ஆர்வமா னு ஆச்சிரியமா பார்த்தா உன் நினைப்பு எங்க போகுது” என்று கடுப்பாக கூறினான்.
“இதான் ஆச்சிரியமா பார்க்கிறதா?”
“உன் நினைப்பு உன்னை போல் தானே இருக்கும்..”
“ஆமா இவரு பெரிய ஸ்ரீராமன்.. சைட்டே அடிக்க மாட்டார்”
அனீஸ் மீண்டும் சக்திவேலை மேலும் கீழும் பார்க்கவும் சக்திவேல், “இப்ப எதுக்கு டா திரும்பவும் லுக் விடுற?”
“உனக்கு என்னவோ ஆகிருச்சு டா.. இவளோ நேரம் நல்ல தானே இருந்த”
“நேரம் டா.. நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீ சொல்ற”
“எனக்கு என்ன டா?”
“ஒரு மார்க்கமாவே பார்த்து தொலைக்கிறியே!”
“நீ அப்படி பேசி வைக்கிற”
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு அப்படி பார்த்த?”
“நம்ம கிளாஸ்கே தெரியும் ஸ்ரீராமன் ஒரு ஜொள்ளு பாக்டரி னு அவனை போய் சைட் அடிக்க மாட்டான் னு சொல்றியே”
“டேய்.. நான் எங்க டா சொன்னேன்?”
“நீ தானே ‘ஆமா இவரு பெரிய ஸ்ரீராமன்.. சைட்டே அடிக்க மாட்டார்’ னு சொன்ன”
சக்திவேல் தலையில் அடித்துக் கொண்டு, “நான் ராமாயணத்தில் வர ஸ்ரீராமனை சொன்னேன் டா மடையா”
“ஓ”
“என்ன ஓ?”
“அதை விடு.. நீ எதுக்கு ‘எப்போ கிளாஸ் ஆரம்பித்தால் என்னடா?’ னு கேட்ட.. படிப்பில் அவளோ இன்டிரெஸ்ட்டா?” 
சக்திவேல் நெஞ்சை பிடித்துக் கொண்டு, “என்ன பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டியே” என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனை போல் கூறினான்.
அனீஸ் மனதினுள், ‘நிஜமாவே இன்டிரெஸ்ட் இருக்குதோ! தெரியாம இவன் பக்கத்தில் உட்கார்ந்துட்டோமோ!’ என்று யோசித்துக் கொண்டிருக்க சக்திவேல், “படிப்பில் அவளோ இன்டிரெஸ்ட்டா னு என்னை பார்த்து கேடுட்டியே”
அனீஸ், “சாரி டா மச்சான் தெரியாம கேட்டுட்டேன்”
“என்னை பார்த்து இப்படி கேடுட்டியே” என்று மீண்டும் சிவாஜி போல் சொல்லவும் அனீஸ் சிறிது கடுப்படைந்து, “டேய்.. ரொம்ப சீன் போடாத.. அதான் தெரியாம கேட்டுட்டேன் னு சாரி சொல்லிட்டேனே!”
சக்திவேல், “அது இல்லடா…. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை படிப்பு” என்று கூறவும் அனீஸ் அவனை பார்த்து முறைத்தான்.
சக்திவேல் மனதினுள், ‘கொஞ்சம் ஓவரா தான் சீன்  போட்டுடோமோ! விடுறா சக்தி.. சமாளிக்கலாம்.. எவ்வளவோ பார்த்துட்ட இதை பார்க்க மாட்டியா?’ என்று கூறி முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு அனீஸிடம், “எதுக்குடா முறைக்கிற?”
அனீஸ் பல்லை கடித்துக் கொண்டு, “எதுக்கு டா ‘எப்போ கிளாஸ் ஆரம்பித்தால் என்னடா?’ னு சொன்ன?”
“எப்படியும் கிளாஸ் கவனிக்க போறதில்லை.. அதான் எப்போ கிளாஸ் ஆரம்பித்தால் என்ன னு”
அனீஸ் சக்திவேலை முறைத்துக் கொண்டிருக்க, சக்திவேலின் தலையில் ஒரு சாக்பீஸ் துண்டு பட்டு விழுந்தது. சக்திவேல் திரும்பி பார்க்க ராமலிங்கம் கோபமாக அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
அனீஸ், “லிங்கம் னு பேர் வச்சதுக்காக இப்படி ருத்ர அவதாரம் எடுக்கிறாரே?” னு சக்திவேலிடம் முணுமுணுக்க, 
சிரிப்பை அடக்கிக் கொண்டு சக்திவேல், “சும்மா இருடா..” என்றான்.
ராமலிங்கம், “போத் ஆஃப் யூ கெட் அப்”
இருவரும் எழுந்ததும், “கிளாஸ் நடத்திட்டு இருக்கும் போது அங்க என்னடா பேச்சு?”
சக்திவேல், “இல்ல சார்.. 1st டே 1st ஹாரே கிளாஸ்………..”
“திஸ் இஸ் யுவர் செகண்ட் டே இன் திஸ் காலேஜ்”
“…”
“என்ன பேசிட்டு இருந்தீங்க?”
அனீஸ், “இன்ட்ரோ குடுக்காம………….”
“அதான் நேத்தே முடிஞ்சுதே”
“எங்க நேம்ஸ் உங்களுக்கு தெரியாதே…………..”
“வாட் இஸ் யுவர் நேம்?”
“அனீஸ்”
“அண்ட் யூ” என்று சக்திவேலை பார்க்கவும் அவன், “சக்திவேல்” என்றான்.
“மத்தவங்க நேம்ஸ்…………” என்று அனீஸ் இழுக்கவும், ராமலிங்கம், “கிளாஸ் முடிஞ்சு அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது தெரிஞ்சுக்கி’றேன்.. இப்போ ஒழுங்கா கிளாஸ் கவனீங்க” என்று கூறி அவர்களை அமர சொல்லிவிட்டு வகுப்பை தொடர்ந்தார்.
ராகேஷ் செல்வராஜிடம், “என்னடா உன்னை விட விரைப்பா இருக்கான் இந்த வாத்தி.. பெரிய விருமாண்டி தான் போ” என்று சிரித்தான்.
ஆஷா, “ஜெனி இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கியா?”
ஜெனிஷா, “இல்லையே” என்று கூறினாலும் உண்மையிலேயே அவள் எரிச்சலாக தான் இருந்தாள்.
ஆஷா, “பொய் சொல்லாத”
“நான் ஏன் பொய் சொல்ல போறேன்?”
“யூ ஆர் நாட் நார்மல். நார்மலா இருந்திருந்தால் இந்நேரம் கெமிஸ்ட்ரி சார் பத்தி கமெண்ட்ஸ் வந்துருக்குமே”
“இப்ப என்ன கமெண்ட்ஸ் வேணும்.. சொல்லிட்டா போச்சு” என்று சிறிது யோசித்தவள், “இன்று புது வரவாக வந்திருக்கம் ராம்ஸ் பற்றிய விமர்சனத்தை நாளை பாப்போம், இப்போது அவரது நடவடிக்கைகளை கவினிப்போமாக” என்று ‘டாப் டென்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளரை போல் கூறவும் ஆஷா சிரித்தாள்.
ராமலிங்கம் ஆஷாவை பார்த்து, “கெட் அப்” என்றார்.
ஆஷா மனதினுள், “என் வாய் தான் எனக்கு எதிரியே.. அமைதியா இருந்தவளிடம் கமெண்ட் பத்தி பேசி… ஹ்ம்ம்.. தேவையா எனக்கு” என்று நொந்துக் கொண்டே எழுந்தாள்.
ராமலிங்கம், “எதுக்கு சிரிச்ச?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். 
“….”
ராமலிங்கம், “சொல்லு”
ஜெனிஷா, “நீங்க நடத்துற அழகை பார்த்து தான் சிரிச்சேன் னு சொல்லுடி” என்று முணுமுணுக்கவும் ஆஷா திருதிருவென முழித்தாள்.
ராமலிங்கம், “நேரத்தை வீணாக்காம சீக்கிரம் சொல்லு”
ஆஷா, “நத்திங் சார்”
ராமலிங்கம், “நீ என்ன லூசா?”
ஜெனிஷா, “மத்தவங்களை உங்களை போலே நினைக்கலாமா ராம்ஸ்?” என்று பவ்வியமாக கூறவும் சிரிப்பை அடக்க ஆஷா பெரும் பாடுபட்டாள்.
ஆஷா தணிந்த குரலில், “நோ சார்….சாரி சார்” என்றாள்.
ஜெனிஷா, “என்னடி ‘நோ சார்.. எஸ் சார்.. சாரி சார்’ னு கனாகாணும் காலங்கள் P.T சொல்ற மாதிரி சொல்ற”
ஆஷா மனதினுள், “இவ வேற நேரம் காலம் தெரியாமல்.. எல்லாம் என்ன சொல்லணும்” என்று தன்னையும் தன் தோழியையும் திட்டினாள்.
ராமலிங்கம், “டோன்ட் ரிபீட் திஸ்.. சிட் டௌன்” என்று கடுமையான குரலில் கூறினார்.
ஆஷா அமர்ந்த பின் ராமலிங்கம், “ஸ்டுடென்ட்ஸ் கிளாஸ் நடத்தும் போது பேசினால் எனக்கு பிடிக்காது.. பஸ்ட் டே னு விடுறேன்.. அதர்வைஸ் யூ வில் பேஸ் சிவியர் பணிஷ்மேன்ட்ஸ்” என்று கூறி போர்டில் எழுத தொடங்கினார்.
ஜெனிஷா, “ஆஷ் நீ சிரிக்க தானே செஞ்ச?”
“அதான் வாங்கி கட்டிகிட்டேனே அப்பறம் என்ன கேள்வி?” 
“இல்ல பேசினா பிடிக்காது னு சொல்லிட்டு சிரிச்ச உன்னை திட்டுறாரே அதான்”
ஏதோ சொல்ல வாய் திறந்த ஆஷா ராமலிங்கத்தின் பார்வை அந்த பக்கம் திரும்பவும் வாயை இறுக மூடிக் கொண்டாள்.
சிவகுரு ராஜசேகரிடம், “கிளாஸ் நடத்தும் போது பேசினா பிடிக்காதா! அப்போ இவளோ நேரம் நடத்திட்டா இருந்தார்!!! சொல்லவே இல்லையே மச்சான்!!!”
“அதான் இப்போ சொல்லிட்டாரே”
ராமலிங்கம் எழுதிய படியே மாணவர்கள் பக்கம் திரும்பாமலேயே, “சைலென்ஸ்” என்று அதட்டினார்.
பிருந்தா, “மால்ஸ் இந்த காலேஜ் staffs எல்லார்கிட்டயும் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா?”
மாலினி ‘என்ன’ என்பது போல் புருவத்தை உயர்த்தவும் பிருந்தா, “சைலென்ஸ் னு சொல்றது தான்”
“இது எல்லா டீசெர்ஸ் சொல்ற வார்த்தை”
“இல்ல மாலு………………..”
“ஷ்ஷ்ஷ்…… கிளாஸ் கவனி”
“அடுத்த சின்சியர் சிகாமணி” என்று பிருந்தா முணுமுணுக்க, அது காதில் விழாதது போல் மாலினி குறிப்புகளை எழுத தொடங்கினாள்.
வகுப்பின் நடுவில் கிருஷ்ணமூர்த்தி கேட்ட சந்தேகத்திற்கு பதில் சொல்ல முடியாமல் சிறிது திணறினாலும் ராமலிங்கம் ஏதோ ஒரு பதிலை  சொல்லி சமாளித்தார். கிருஷ்ணமூர்த்தி சந்தேகம் கேட்டதும் ஆர்லி தனது சந்தேகங்களை கேட்க தொடங்கினாள். ராமலிங்கம் அவளது சந்தேகங்களை தீர்ப்பதோடு எதிர் கேள்வி கேட்கவும் அவள் அமைதியானாள்.
வகுப்பு முடிய ஐந்து நிமிடங்கள் இருந்த தருவாயில் ராமலிங்கம் மாணவர்களிடம் கேள்விகளை கேட்க தொடங்கினார். முதல் கேள்வியை அனீஸிடம் கேட்டார். அவனுக்கு பதில் தெரியவில்லை என்றதும் சக்திவேலிடம் கேட்டார். அவனுக்கும் தெரியவில்லை என்றதும்  ஆஷாவிடம் கேட்டார்.
ஜெனிஷாவின் உதவியுடன் ஆஷா பாதி பதிலை கூறவும் அவளை அமர செய்த ராமலிங்கம், அனீஸ் மற்றும் சக்திவேலிடம், “ரைட் 10 டைம்ஸ் இம்போசிஷன்” என்றார்.
அதன் பிறகு அவர் அட்டெண்டன்ஸ் எடுத்து முடிக்கவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. ராமலிங்கம் வெளியே செல்லவும் கணித ஆசிரியர் ரத்னவேல் பாண்டியன் உள்ளே வந்தார்.
முதல் வகுப்பின் முடிவில் ராமலிங்கத்திற்கு அனீஸ் வைத்த பட்ட பெயர், ‘சைக்கோ’
ஆர்லி கிறிஸ்டோபருக்கு கிடைத்த பெயர், ‘டவுட் கிறிஸ்டோஃபர்’.

Advertisement