Advertisement

மழை 37:
CSE வகுப்பே பரபரப்பாக இருந்தது. ஏனெனில் அன்று அதிகாலை மூன்று மணி அளவில் அவர்களின் முதல் அரையாண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்திருந்தது.  ஒரு சில மாணவர்களை தவிர அனேக பேருக்கு கல்லூரிக்கு வந்த பிறகு தான் தேர்வு முடிவுகள் வெளியான விஷயமே தெரிந்தது.
ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொரு விதமாக இருந்தது. 
தங்கள் தேர்வு முடிவுகளை அறியாதவர்களில் சிலர் அதிக பதற்றத்தில் இருக்க, சிலர் சிறு பயம் கலந்த பதற்றத்தில் இருக்க, 
சக்திவேல் போன்ற சிலர் ‘எப்படியும் தேற போறது இல்லை’ என்ற எண்ணத்தில் பதற்றமின்றி இருக்க, 
சிலர் நல்ல மதிப்பெண் வர வேண்டுமே என்ற தவிப்பில் இருக்க, 
விதிவிலக்கான ராகேஷ் மற்றும் செல்வா ‘என்ன வந்தா என்ன!’ என்ற தெனாவெட்டுடன் இருந்தனர்.
முடிவுகள் தெரிந்தவர்களில் சிலர் மகிழ்ச்சியுடன் இருக்க, சிலர் ‘இன்னும் கொஞ்சம் நல்ல வாங்கியிருக்கலாம்’ என்ற எண்ணத்தில் இருக்க, ஒரு பாடத்தில் தொல்வியற்றவர்கள் ‘ச.. இது மட்டும் போயிருச்சே!’ என்ற வருத்தத்தில் இருக்க, இரண்டு மூன்று பாடத்தில் தோல்வியுற்றவர்கள் ‘இப்படி ஆகிருச்சே!’ என்று வருத்தத்தில் இருந்தனர். ஒரு சில மாணவிகள் தோல்வியை நினைத்து அழுதுக் கொண்டிருந்தனர்.
சக்திவேல் மகிழ்ச்சியுடன் அனீஷிடம், “மச்சி.. நான் ரெண்டு பேப்பர் பாஸ்.. நீ ஒன்னு பாஸ்” என்று கூற,
அனீஷ் முறைப்புடன், “மத்த அஞ்சு புட்டுகிச்சே”
“எதையும் பாசிட்டிவ்வா சொல்லணும் மச்சி”
அனீஷ் அதிகமாக முறைக்க, சக்திவேல், “அதிக முறைப்பு உடம்புக்கு ஆகாது மச்சி”
“எப்படி டா இப்படி இருக்கிற?” என்றான் சிறு எரிச்சலுடன்.
“வேற என்ன பண்ண? பொண்ணுங்க மாதிரி உக்கார்ந்து அழனுமா?”
“உனக்கு கொஞ்சம் கூட வருத்தமா இல்லையா?”
“த்ரிஷா இல்லைனா நயன்தாரா”
“பக்கி நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற?” என்றபடி அவனை அடிக்க,
அனீஷை தடுத்த சக்திவேல், “பக்கி.. அடுத்த செம்மில் எழுதிக்கலாம் னு மீன் பண்ணேன் டா..”
“ச்ச்”
“இன்னும் மூனரை வருஷம் இருக்குது.. இன்னும் ஏழு அட்டெம்ப்ட் இருக்குது.. டோன்ட் வொர்ரி மச்சி”
“வீட்டில் என்ன சொல்லுவ?”
“நான் தான் என் ரெஜிஸ்டர் நம்பரை குடுக்கவே இல்லையே! ஒன்னே ஒன்னு போச்சு பா னு கண்ணீர் விட்டு.. அடுத்த செம்மில் கிளியர் பண்றேன் னு சொல்லுவேன்”
“நான் ரெஜிஸ்டர் நம்பரை அப்பா கேட்டப்ப குடுத்துட்டேனே!”
“எதையும் பிளான் பண்ணி பண்ணும் டா வெண்டரு”
“அவரு கேட்டாரு”
“என்னையும் தான் என் அப்பா கேட்டார்.. நான் ஞாபகம் இல்லை னு சொல்லிட்டேன்”
“அப்படி சொன்னா.. என்னோட அப்பா கழுவி கழுவி ஊத்துவரே!”
“நானும் தான் வாங்கிகட்டினேன்.. ஆனா இதுக்கு அது மேல்..”
“இப்போ நான் என்ன பண்ண?”
“குரு மாதிரி காதில் பஞ்சு வச்சுக்கோ”
“ச்ச்”
“வேணா ஒன்னு பண்றியா?”
“என்ன டா?” என்று அவன் ஆர்வத்துடன் வினவ,
சக்திவேல், “என் கிளாஸ்ஸில் எல்லாத்துலையும் பெயில் ஆனவன்க இருக்காங்க.. நான் ஒரு பேப்பரில் பாஸ் ஆகிட்டேன் னு சொல்லு”
அனீஷ் அவனை கொலைவெறியுடன் முறைக்க, சக்திவேலோ, “வேண்டாடி போ” என்றான்.
வினோத் சோகமாக அமர்ந்திருக்க ஒருவன், “நீ தான் எல்லாத்துலையும் பாஸ் ஆகிட்டியே! அப்பறம் ஏன் இப்படி இருக்க?”
“ஆஷா பேசவே மாட்டிக்கிறா டா.. இரண்டு நாளா கெஞ்சி பார்த்துட்டேன்.. மலை இறங்கவே மாட்டிக்கிறா” என்று சோகமாக கூற, ஒரு பாடத்தில் தோல்வியுற்றிருந்த அந்த மாணவன் இவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தான்.
ராகேஷ் மூன்று பாடங்களிலும், ராஜசேகர் மற்றும் செல்வராஜ் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்திருந்தனர். 
மோகனா, ஆஷா, பிருந்தா, சிவகுரு மற்றும் ஸ்ரீராமனும் ஒருவாறு கஷ்டப்பட்டு அனைத்து பாடங்களிலும் தேறி இருந்தனர்.
மாலினி, ஜெனிஷா, நந்தினி, தாரிக்கா, ஆர்லி, ஷங்கர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் புழா நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
முதல் வகுப்பு கணிதம். இந்த முறையும் ஜிண்டா தான் கணித ஆசிரியர். அவர் எவ்வளவோ சொன்னார் தான் ‘நான் CSE போகலை’ என்று ஆனால் சைக்கோ கேட்டால் தானே! சைக்கோவின் சைக்கோத்தனத்தினால்(ஜிண்டா மனநிலை இது தான்) பயபுள்ள இந்த செம்மிலும் சிக்கி சின்னாபின்னமாக இங்கே வந்திருக்குது..
ஜிண்டா உள்ளே வந்ததும் ஆங்காங்கே நின்றிருந்த மாணவர்களை பார்த்து, “ஹே யூ ஆல் சிட்” என்றார்.
அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்ததும் வருகை எண்ணிக்கையை எடுத்து முடித்துவிட்டு அவர், “ஆல் ஸீ மார்க்?”
“நோ சார்” என்று சிலர் கூற,
அவர், “நோ வொர்ரி.. வெயிட் பியூ மினிட்.. ரவி சார் கம் அண்ட் கிவ் ஆல் மார்க்ஸ்” என்றார்.
“ஓகே சார்” 
“ஓகே.. டேக் நோட்.. லெட் ஆல் டூ சம்ஸ்”
சிவகுரு, “சார் டுடே ரிசல்ட் கம்.. ஸோ நோ சம்ஸ்”
“வொய் மேன்.. வொய்? வொய் ரிசல்ட் கம்? வொய் நோ சம்ஸ்?” என்று அவர் வினவ,
ராஜசேகர், “என்ன சொல்றார் மச்சி?”
“ஏன் னு கேட்கிறார் டா.. ரிசல்ட்டுக்கும் சம் போடுறதுக்கும் என்ன சம்பந்தம் னு தான் இந்த அழகில் கேட்கிறார்”
“ஓ.. உனக்கு மட்டும் எப்படி மச்சி இந்தாளு பேசுறது புரியுது?”
“ஹ… அவரு படிச்ச ஸ்கூலில் தான் நானும் படிச்சேன்”
“பார்த்தியா சொல்லவே இல்லை” என்று ராஜசேகர் கிண்டலாக கூற,
ஜிண்டா, “ஹே யூ டூ.. கெட் அப்” என்று இருவரையும் பார்த்து கூற, இருவரும் எழுந்தனர்.
அவர், “வாட் யூ டூ மம்மர்?”
ராஜசேகர், “இப்போ என்ன மச்சி சொல்றார்?” என்று வாய் அசைக்காமல் முணுமுணுக்க, 
சிவகுருவும் வாய் அசைக்காமல், “அது மர்மர் டா”
“அப்படினா?”
“இப்போ பண்றியே அதான்.. முணுமுணுப்பு”
“ஓ”
ஜிண்டா, “ஹே! வாட்!! அகேன் அகேன் மம்மர்.. வாட் யூ தின்க் இன் ஹார்ட்?”
பின்னால் இருந்த செல்வராஜ், “சீக்கிரம் ஏதாவது பதிலை சொல்லி தொலைங்க டா.. இந்தாளு இங்கிலீஷை கேட்க முடியலை” என்றான்.
சிவகுரு, “வி நோ மம்மர் சார்”
அவர், “யூ ஆல்வேஸ் லை.. ஹெட் டு தோ(டோ-toe) லை.. பாடி புல் லை”
சிவகுரு ஏதோ சொல்ல வர அவர், “யூ நோ ஸ்பீக்.. யூ சேகர்.. ஸ்பீக்.. டோன்ட் டெல் லை.. வாட் யூ டாக்? வாட் ஹீ டெல்லிங்?”
செல்வராஜ், “ஹம்.. அவன் லவ்வ சொன்னான்” என்று சற்று சத்தமாக கூற, 
அவர், “வாட்?”
செல்வராஜ் மீண்டும், “வொய் ப்ளட்? சேம் ப்ளட்” என்றான்.
அவர் கோபத்துடன், “யூ ஆல் ஸ்பீக் திஸ் லைக்.. யூ ஆல் கெட் நோ மார்க்”
வினோத், “எஃப்.பி(FB) மார்க் நமக்கு எதுக்கு மச்சி?”
“அதானே” என்று ஒருவன் கூற,
ஜிண்டா கோபத்துடன், “யூ ஆல் மன்கீஸ்.. யூ ரிபீட் திஸ்.. ஐ வோன்ட் கம் யுவர் கிளாஸ்” என்றார்.
அதற்கும் ஒருவன், “தன்க் யூ சார்” என்றான்.
அப்பொழுது ஆசிரியர் ரவி வந்து அவர்களின் தேர்வு மதிப்பெண்கள் பட்டியலை கொடுத்தார்.
ரவி, “ஒரு சார் வந்தா எந்திரிக்க மாட்டீங்களா?” என்று சத்தம் போடவும் அனைவரும் எழுந்தனர்.
ஒருவன் ஆரம்பித்து அனைத்து மாணவர்களும், “குகுகுகுட் மாமாமார்ர்ர்ர்னிங் சார்” என்று ராகம் பாட,
ரவி, “இப்படி பண்ணி தான் இந்த அழகுல மார்க்ஸ் வாங்கி இருக்கிறீங்க.. இனியாவது அடக்கி வாசிங்க டா” என்றுவிட்டு செல்ல,
அதற்கும், “ததததன்க்க் யூ சார்” என்றனர்.
அதன் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் மதிப்பெண்களை பார்ப்பதில் அந்த வகுப்பு நேரம் முடிந்தது.
இரண்டாவது வகுப்பில் இருந்து இயல்பு நிலை திரும்பியது. 
மதிய உணவு இடைவேளை ஆரம்பித்ததும் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து வந்த மோகனா, “மாலு நான் பாஸ் ஆகிட்டேன்” என்று கூற,
சிவகுரு, “ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன்” என்று பின்பாட்டு பாட,
பிருந்தா அவனை முறைக்க, மோகனா, “எதுக்கு ஜில்லு அவனை முறைக்கிற?” என்று வினவினாள்.
பிருந்தா, “ஹ்ம்ம்.. வேண்டுதல்” என்றாள்.
மோகனா, “என்ன வேண்டுதல்?”
சிவகுரு வாய்விட்டு சிரிக்க, தண்ணி பாட்டில் ஒன்று அவனை நோக்கி பாய்ந்து வந்தது. அதை சரியாக பிடித்தவன், பிடித்த வேகத்தில் அதை பிருந்தா நோக்கி எரிவது போல் பாவனை செய்ய, ஒரு நொடி பதறிய பிருந்தா, “ஏய்!” என்று அலறினாள்.
சிவகுரு விரிந்த புன்னகையுடன் கண்ணடித்து தண்ணீர் பாட்டிலிற்கு முத்தம் கொடுத்துவிட்டு அதில் இருந்த நீரை முழுவதுமாக ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.
பிருந்தா சிறு அதிர்ச்சியுடன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவளை உலுக்கிய மோகனா, “சொல்லு ஜில்லு.. என்ன வேண்டுதல்?”
“ஹன்.. என்ன வேண்டுதல்?” என்று பிருந்தா முழிக்க,
மோகனா நெற்றியில் தட்டி, “ஐயோ! நீ தானே சொன்ன வேண்டுதல் னு”
சட்டென்று சுதாரித்த பிருந்தா மாலினியை பார்க்க, மாலினி, “வேண்டுதல் வெளியே சொன்னா பலிக்காதே மோனி” என்றாள்.
மோகனா, “ஓ! ஆமால” என்றாள்.
அப்பொழுது அங்கே வந்த கிருஷ்ணமூர்த்தி, “மாலு எனக்கு பசிக்குது” என்றான்.
பிருந்தா அவனை வினோதமாக பார்க்க, மாலினி மென்னகையுடன், “அவனுக்கு ட்ரீட் வேணும் னு சொல்றான் டி” என்றாள்.
பிருந்தா கிருஷ்ணமூர்த்தியிடம், “எதையும் நேரிடையா பேச மாட்டியா?”
கிருஷ்ணமூர்த்தி, “அவளுக்கு புரிஞ்சுச்சு தானே!” 
பிருந்தா, “எங்களுக்கு புரிய வேண்டாமா?”
அவன், “நான் அவளிடம் தானே பேசினேன்” என்றவன் மாலினியை பார்த்து, “எதுக்கு ட்ரீட் னு கேட்க மாட்டியா?”
“நீ சொல்ல மாட்டியா?”
அவளுக்கு பிடித்த டைரிமில்க் சாக்லேட்டை நீட்டியவன் அவள் வாங்கியதும், “நீ தான் டாப்பர்.. நம்ம கிளாஸ் மட்டுமில்லை.. பஸ்ட் இயர் டாப்பர்..” என்றான் மென்னகையுடன்.
ஆம் மாலினி வகுப்பில் மட்டுமின்றி அனைத்து பிரிவுகளையும் சேர்த்து முதலாவதாக வந்திருந்தாள். தாரிக்காவும் புழாவும் வகுப்பில் இரண்டாவதாக வந்திருக்க, நந்தினி, ஜெனிஷா, கிருஷ்ணமூர்த்தி வகுப்பில் அடுத்தடுத்த இடத்தில் இருந்தனர். 
ஷங்கர் அவனது வகுப்பில் முதலாவதாக வந்திருக்க ஆர்லி மூன்றாவதாக வந்திருந்தாள்.
பிருந்தாவும் மோகனாவும் “ஹே!” என்று கத்தி கூச்சலிட்டனர்.
மாலினி மென்னகையுடன் கிருஷ்ணமூர்த்தியை பார்த்து, “உனக்கு எப்படி தெரியும்?”
“தெரியும்” என்றான் சிறு தோள் குலுக்கலுடன்.
பிருந்தா மாலினியின் கையை குலுக்கி, “சூப்பர் மாலு.. கலக்கிட்ட” என்று கூற,
மோகனா பெருமையுடன், “எப்போதுமே மாலு தான் பஸ்ட் வருவா” என்றாள்.
நந்தினி மகிழ்ச்சியுடன், “காங்கரட்ஸ் டி” என்றாள்.
அனைவருக்கும் நன்றியை சொன்ன மாலினி கிருஷ்ணமூர்த்தியை பார்த்து, “பெட்ரமாஸ் லைட் தான் வேணுமா?”
அவன் மென்னகையுடன், “ஆமா” என்றான்.
மாலினி அவனை முறைக்க, பிருந்தா முறைப்புடன், “இவனுடன் சேர்ந்து நீயும் புரியாத பாஷையில் பேசுற” என்றாள்.
கிருஷ்ணமூர்த்தி, “நாங்க தமிழில் தானே பேசுறோம்?”
பிருந்தா, “ஜோக்கா.. ஹீஹீஹீ.. சிரிச்சிட்டேன்.. போதுமா?”
ராஜசேகருடன் அங்கே வந்த சிவகுரு, “போதும் சொல்லிடு மாப்பி.. இல்ல திரும்ப சிரிச்சு காட்டி பயமுறுத்த போறா” என்றான்.
பிருந்தா பல்லை கடித்தபடி, “டேய் வேணாம்” என்றாள்.
அவனோ, “எனக்கு வேணுமே” என்றான் ஒரு மாதிரி குரலில்.
சட்டென்று பிருந்தா அமைதியாகிவிட சிவகுரு மென்னகையுடன் அவளை பார்த்துவிட்டு மாலினியிடம், “கங்கரட்ஸ் மாலினி” என்றான்.
மாலினி, “தன்க்யூ” என்றதும்,
ராஜசேகர், “ஹார்ட்டி கங்கரட்ஸ் சிஸ்டர்” என்றான்.
மாலினி மென்னகையுடன், “தேங்க்ஸ் ப்ரோ”
“ட்ரீட் இல்லையா சிஸ்டர்?” 
மாலினி கிருஷ்ணமூர்த்தியை பார்க்க, ராஜசேகர், “என்ன சிஸ்டர்?”
மாலினி, “நான் வெளியே ட்ரீட் தரேன் சொல்றேன் மூர்த்தி கேன்டீன் போதும் னு சொல்றான்”
பிருந்தா, “கேன்டீனை தான் பெட்ரமாஸ் லைட்டுனு சொன்னியா?”
சிவகுரு, “பல்ப் எரிஞ்சுடுச்சு” 
மோகனா, “நம்ம கிளாஸ்ஸில் பல்ப்பே இல்லையே”
பிருந்தா சிவகுருவை பார்த்து கிண்டலாக சிரிக்க அவனோ அலட்டிக் கொள்ளாமல் மோகனாவிடம், “நான் ஜில்லு வ தான் அப்படி சொன்னேன்” என்றான்.
மோகனா, “எதுக்கு அப்படி சொன்ன?”
சிவகுரு, “அவளுக்கு புரிஞ்சிருச்சு னு அப்படி சொன்னேன்”
“ஓ” என்று மோகனா இழுக்க, 
மாலினி, “கேன்டீன் போகலாமா?”
ராஜசேகர், “இங்கேயே ட்ரீட்டை முடித்து ஏமாத்த பாக்குறீங்களே சிஸ்டர்”
பிருந்தா, “எல்லாம் இந்த கிறு கிறு கிருஷ் பண்ண வேலை.. அவன் சொல்றதை இவ என்னைக்கு மீறி இருக்கிறா?”
ராஜசேகர், ‘ஏன்டா!’ என்பது போல் கிருஷ்ணமூர்த்தியை பார்க்க,
மாலினி, “அது என்னடி கிறு கிறு கிருஷ்?”
“அவன் பேசுறது உனக்கு மட்டும் தானே புரியுது.. அதான்”
மாலினி முறைக்க, பிருந்தா, “நீ என்ன சொன்னலும் இந்த பெயரை நான் மாத்த மாட்டேன்.. சில நேரம் அவன் பேசுறது செய்றது அப்படி தானே இருக்குது!”
மாலினி, “ஜீனியஸ்ஸை எல்லோராலும் புரிந்துக்கொள்ள முடியாது”
“ஜீனியஸ் ஏன் டாப்பரா வரலை?”
“அவனுக்கு இருக்கிற பரக்டிக்கள் நாலேட்ஜ் நம்ம யாருக்கும் கிடையாது.. ரியலி மூர்த்தி ஜீனியஸ் தான்” என்று தீர்க்கமான குரலில் சிறு கோபத்துடன் கூறினாள்.
கிருஷ்ணமூர்த்தி, “மாலினி எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற? அவ சும்மா கிண்டலுக்கு தானே சொல்றா.. விடு” 
பிருந்தா முறைப்புடன், “அதான் சப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சே” என்றாள்.
மோகனா, “என்னாச்சு மாலு?” 
மாலினி முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு, “ஒன்னுமில்லை டா” என்றாள்.
அப்பொழுது அங்கே வந்த ஷங்கர் மாலினி முதலிடம் வந்த விஷயம் அறிந்து தன் வாழ்த்தை கூறினான். அதன் பிறகு அவர்கள் அனைவரும் புழாவை இழுத்துக் கொண்டு கல்லூரி உணவகத்திற்கு சென்றனர். 
[குறிப்பு:- ஸ்ரீராமன் இன்று கல்லூரி வரவில்லை]
மழை தொடரும்….

Advertisement