Advertisement

மழை 35:
அன்று காலையில் வெளியே செல்ல கிளம்பி வந்த வெற்றிவேலை பார்த்து அவனது தங்கை யாழினி, “குட் மார்னிங் ணா” என்றபடி உணவு மேஜையில் அமர்ந்தாள்.
புன்னகையுடன், “உலக அதிசயமா இருக்குதே!” என்றவன் மணியை சுட்டிக் காட்டியபடி அவனும் உணவுண்ண அமர்ந்தான்.
அவள் செல்ல முறைப்புடன், “உனக்கு போய் குட் மார்னிங் சொன்னேன் பாரு! போடா.. உனக்கு பேட் மார்னிங் தான் இன்னைக்கு” என்றாள்.
வெற்றிவேலின் தந்தை, “இவனுக்கு பேட் மார்னிங்னா இவன் கிட்ட மாட்டுறவனுக்கு வெரி பேட் மார்னிங்” என்றார்.
அப்பொழுது அங்கே வந்த அவனது அன்னை மகளை பார்த்து, “குளிக்காம என்னடி சாப்பிட உட்கார்ந்து இருக்கிற?”
“அம்மா இது டூ மச்.. சண்டே ஒன்பது மணிக்கு எழுந்ததே பெருசு”
அன்னை முறைப்புடன் ஏதோ சொல்ல போக அவள், “அம்மா நோ.. உன் சுப்ரபாதத்திற்கு பயந்து தான் கஷ்டப்பட்டு ஒன்பது மணிக்கு எழுந்ததே”
வெற்றிவேலும் அவனது தந்தையும் இதை மென்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க, அன்னை இவனிடம், “எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான்” என்றபடி அனைவருக்கும் தட்டில் பருமாரிவிட்டு தனக்கும் எடுத்துக் கொண்டு அமர்ந்தார்.  
உணவின் நடுவே அவன் அன்னை, “யாழுக்கு நல்ல வரன் ஒன்னு வந்திருக்குது வெற்றி” என்றதும் அவன் சட்டென்று தங்கையை திரும்பி பார்த்தான். 
அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்து மறுப்பாக தலையை அசைத்தாள்.
வெற்றிவேல் உணவை உட்கொண்டபடி, “இன்னும் படிப்பே முடியலையே மா”
“அதான் இன்னும் நாலு மாசத்தில் முடிஞ்சிருமே! அதுவும் ப்ராஜெக்ட் னு பாதி நாள் ப்ரீ தானே.. நல்ல வரன்………………”
“அம்மா இப்பவே என்ன அவசரம்?” என்றவன் தந்தையை பார்த்து, “என்னப்பா இதெல்லாம்” என்றான்.
அவனது தந்தை, “நானும் சொல்லிட்டேன்.. உன் அம்மா கேட்டா தானே!” என்று கூற,
கணவரை முறைத்து, “நீங்க சும்மா இருங்க” என்றவர் இவனிடம், “நல்ல இடம்.. படிப்பு முடிந்த பிறகு தான் கல்யாணம்.. அப்பறம் என்ன?”
யாழினி வாய் திறக்க போக அன்னை கோபத்துடன், “உன்னிடம் எதுவும் கேட்கலை.. வாய் மூடிட்டு இரு” 
“அது எப்படி? இது என் வாழ்க்கை.. நான் பேசுவேன்” என்று அவளும் கோபத்துடன் கூற,
அன்னை, “வாயிலேயே போடுவேன்.. என்ன பேச்சு பேசுற?”
வெற்றிவேல், “அம்மா.. எதை மனசில் வச்சிட்டு இப்படி பேசுறீங்க னு எனக்கு தெரியும்.. யாழினி நிவேதா மாதிரி கிடையாது.. அதற்கு நான் உத்திரவாதம் தரேன்.. இப்போ இந்த கல்யாண பேச்சை விடுங்க” என்று அவன் தீர்க்கமாக கூறினான்.
வெற்றிவேலின் அன்னை அன்பானவர் தான் ஆனால் சில காலமாக அவரது இயல்பு சற்று மாறியிருந்தது. அதுவும் கல்யாண விஷயத்தில் அதிக கெடுபிடி தான். அதற்கு காரணம் வெற்றிவேலின் முதல் தங்கை நிவேதா. 
நிவேதா காதலை வீட்டில் சொல்ல தைரியமின்றி யாரிடமும் சொல்லாமல் கல்யாணம் செய்துக் கொண்டு வந்து நின்றாள். அதன் தாக்கமே யாழினி மேல் விடிகிறது. அவர்களது ரகசிய கல்யாணத்தை மறைத்து ஊரறிய கல்யாண மண்டபத்தில் கல்யாணத்தை நடத்தி தங்கைக்கு கௌரவத்தை ஏற்படுத்தினான் வெற்றிவேல். வெளியாட்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் கல்யாணம் போல் காட்டிக் கொண்டனர். இரு வீட்டிலும் மனஸ்தாபம் இருந்தாலும் பையன் வீட்டில் ஏற்றுக் கொண்டனர் ஆனால் நிவேதாவை இவர்கள் இன்னும் ஏற்கவில்லை.. இவர்கள் என்று சொல்வதை விட வெற்றிவேலின் அன்னை என்று தான் சொல்ல வேண்டும். அன்னை தங்கையை தலை முழுகினாலும் வெற்றிவேல் தந்தையை ஓரளவிற்கு சமாதானம் செய்து தங்கைக்கு செய்ய வேண்டியதை செய்து புகுந்த வீட்டில் அவளது மரியாதையை காப்பற்றிக் கொண்டு தான் இருக்கிறான் ஆனால் அதை அன்னை அறியாமல் பார்த்துக் கொண்டான்.
வெற்றிவேலின் தீர்க்கமான குரலை மீற முடியாமல் அவனது அன்னை, “சரி.. அப்போ உனக்கு பெண் பார்க்கட்டுமா?” என்று ஆரம்பித்தார்.
“அம்மா!!!!!!!”
“என்ன டா? அதான் இருவத்தியாறு வயசு ஆகுதே!”
“இப்போலாம் பொண்ணுங்களே இருவத்தியேழு வயசில் தான் கல்யாணம் செய்துக்கிறாங்க”
ஆவனது அன்னை முறைக்க, அவனோ, “எனக்கு இப்போ நேரமாச்சு.. நான் கிளம்புறேன்” என்றபடி எழுந்தான்.
அன்னை, “இன்னைக்கு சண்டே தானே!”
அவன் திரும்பி அன்னையை பார்த்த பார்வையில் அவர், “இப்படியே எல்லா நாளும் கேஸ் னு திருடன் கொள்ளைக்காரன் கொலைகாரன் பின்னாடியே சுத்து டா.. இந்த வேலை வேணாம் னு தலைப்பாடா அடிச்சுகிட்டேன்.. என் பேச்சை யாரு இந்த வீட்டில் கேட்கிறா?” என்று புலம்ப,
வெற்றிவேல், “ப்ச்.. அம்மா.. காலையிலேயே ஆரம்பிக்காத.. இந்த வீட்டில் இப்போதைக்கு கல்யாண பேச்சு இல்லை.. அவ்ளோ தான்” என்றபடி ஷூவை மாட்டினான்.
அன்னை, “அப்போ எப்போ ஆரம்பிக்கிறது?”
“நான் சொல்லும் போது”
“நீ எப்போ சொல்லுவ?”
“தோணும் போது” என்று இவன் கூற, 
யாழினி மெல்ல தந்தையின் காதில், “ஒரு மூனரை இல்ல நாலு வருஷம் கழித்து அண்ணா சொல்லுவான் பா” என்று முணுமுணுக்க, அது வெற்றிவேலின் காதில் விழ, அவன் தங்கையை முறைத்தான்.
அன்னை, “அங்கே என்னடி முணுமுணுப்பு?”
“ஒன்னுமில்லை மா” என்றவள் உணவை எடுத்துக் கொள்வது போல் தலையை குனிந்துக் கொண்டாள்.
“வரேன் மா” என்றவன் அன்னை பதில் கூறும் முன் கிளம்பியிருந்தான். 
வண்டியை ஓட்டியபடி தங்கையின் கூற்றை நினைவு கூர்ந்தவனின் இதழோரம் மென்னகை அரும்ப அவனது மனமோ ‘மாலினி’ என்று காதலுடன் முணுமுணுத்தது.
அவனது மனம் பின்னோக்கி சென்றது. மாலினியை முதல் முதலாக அந்த கலை நிகழ்ச்சியில் சந்தித்த அன்று தங்கையிடம் ‘தன் மனதில் எதுவும் இல்லை’ என்று சாதித்தவன் அன்று இரவு தன் மனதை ஆராய்ந்த போது அது பிடித்ததிற்கு மேல் என்பதை உணர்ந்து கொண்டான் ஆனால் வயது வித்யாசத்தை மனதில் கொண்டு அந்த நினைப்பை கடந்து வர முயற்சித்து வெற்றியும் பெற்றான். ஆனால் அது தற்காலிகமான வெற்றி என்று சில நாட்களிலேயே உணர்ந்துக் கொண்டான். 
ஆம் வேலை பளுக்களுக்கு நடுவில் பனித்துளியை போல் மாலினியின் நினைவு அவனை குழுமை படுத்துகிறது. 
தன் மனம் அறிந்ததும் அவன் செய்த முதல் வேலை, தங்கை அறியாமல் தங்கை கல்லூரிக்கு சென்றது தான். அன்று நடந்த போட்டிகளில் பாட்டு போட்டியின் காணொளியை மட்டும் பெற்றுக் கொண்டான். அதில் யாழினியும் பங்குபெற்று வெற்றி பெற்றிருந்ததால் பிரின்சிபால் சந்தேகமின்றி அந்த காணொளியை இவனுக்கு கொடுத்தார். 
ஒரு பெண்ணின் அனுமதி இன்றி அவளது புகைப்படத்தையோ காணொளியையோ தனது கைபேசியில் வைத்துக்கொள்வது தவறு என்ற எண்ணத்திலும் அதுவும் தான் ஒரு பொறுப்பான காவலனாக இருந்துக் கொண்டு நிச்சயம் அப்படி செய்யக் கூடாது என்ற உறுதியுடன் இருக்கிறவன் அந்த கானொளியில் இருந்து மாலினி பாடியதை ஒலிதம்(audio) வடிவில் தனது கைபேசியில் ஏற்றிக் கொண்டான். வேலைப்பளு காரணமாக எந்த ஒரு நெருக்கடியான இறுக்கமான மனநிலையில் இருந்தாலும் மாலினியின் குரல் அவனுள் ஒரு அமைதியை கொடுக்கம். அதில் இருந்தே தனது காதலின் ஆழத்தை அறிந்துக் கொண்டவன் மாலினி படிப்பு முடியும் வரை அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்ற முடிவில் இருக்கிறான். 
‘ஒருவேளை அவள் வேறு யாரையும் காதலித்தால்?’ என்ற கேள்வி மனதினுள் எழு, ‘நான் ஒதுங்கிக் கொள்வேன்’ என்று தனக்கு தானே கூறிக் கொண்டவன், ‘அவள் எனக்குன்னு இருந்தால் எனக்கு கிடைப்பாள்.. அவள் எனக்கானவள் தான்’ என்றும் கூறிக் கொண்டான்.  
ஹ்ம்ம்.. பார்க்கலாம்.. காலம் என்ன வைத்திருக்கிறது என்று.. வெற்றி மாலினியிடம் பல்ப் வாங்குகிறானா? அருணாவை கரெக்ட் பண்ணி காதலில் வெற்றி பெருகிறானா என்று காலம் தான் பதில் சொல்லணும்..
[தோழமைகளே! வெற்றியின் விசிறிகளே! இனி வெற்றி இந்த கதையில் வர மாட்டான்.. வெற்றிக்கு தனி கதை அதனால் இங்கே தேடாதீர்கள்……………………………] 
நாட்கள் அல்ல மாதங்கள் மெல்ல கடந்திருந்தது. இப்பொழுது தான் கல்லூரி ஆரம்பித்தது போல் இருந்தது ஆனால் ஆறு மாதங்கள் முடிந்திருந்தது. நம் மாணவ செல்வங்கள் முதல் வருடத்தின் முதல் அரைக் கல்வியாண்டு முடித்து இரண்டாம் அரைக் கல்வியாண்டில் நுழைந்திருந்தனர். [அதாவது இரண்டாவது செமஸ்டர் ஆரம்பித்து ஒரு மாதம் கடந்திருந்தது].
ஒவ்வொருவரிடமும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தது. ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ என்ற எண்ணத்தில் சில மாணவர்கள் சுற்றிக் கொண்டிருக்க, சில மாணவிகள் கூட ‘ஏன் பொண்ணுங்களுக்கு மட்டுமென்ன! ‘துல்கர் இல்லைனா நிவின் பௌலி’ என்று சுற்றிக் கொண்டிருகிறார்கள். அவர்களை பற்றி நமக்கு என்ன நாம் நமது ஹீரோஸ் ஹீரோயின்ஸ் காமடியன்ஸ் வில்லன்(லீ)ஸ் பற்றி பார்ப்போம்…
பிருந்தா – சிவகுரு ? இப்பொழுதும் டாம் அண்ட் ஜெர்ரி தான். இருவரும் மற்றவர் காதலை உணர்ந்திருந்தாலும் அதை அறியாதது போல் காட்டிக் கொண்டு ‘நீயே முதலில் சொல்’ என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.
மாலினி – கிருஷ்ணமூர்த்தி ? நெருங்கிய தோழமை உருவாகியிருந்தது. இவர்களின் நட்பு பற்றி மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கு கூட பரிட்சியம் தான். ஒரு சிலர் ‘அது எப்படி ஒரு பொண்ணும் பையனும் நட்புடன் மட்டும் இருக்க முடியும்?’ என்றும் ‘இன்னும் மூனரை வருஷம் இருக்கிறதே! நிச்சயம் அதற்குள் காதலர்களா மாறிடுவாங்க’ என்றும் கூறுகின்றனர் தான் ஆனால் அதை இவர்கள் இருவரும் பொருட்படுத்துவதில்லை.  
மாலினி – நந்தினி – பிருந்தா ? ‘த்ரீ ரோசஸ்’ என்று அழைக்கும் அளவிற்கு இவர்கள் நட்பு அனைவருக்கும் பரிட்சியம். மோகனா ‘த்ரீ ரோசஸ் னா அப்போ நானு?’ னு சிணுங்க மாலினி ‘நீ அழகான ரோஜா மொட்டு டா’ என்று கூறி சமாதானம் செய்தாள்.
ஸ்ரீராமன் – கிருஷ்ணமூர்த்தி – புழா ? நல்ல ஆரோக்கியமான நட்பு மலர்ந்திருந்தது. ஸ்ரீராமன் நிறைய மாறியிருந்தான். அவ்வபோது பிறவி குணமான சுயநலம் தலை தூக்கும் தான் ஆனால் அதை கிருஷ்ணமூர்த்தியோ புழாவோ இரண்டு தட்டு தட்டி அதை சரி செய்துவிடுவார்கள். என்ன தான் சில நேரங்களில் சுயநலம் தலை தூக்கினாலும் வகுப்பு என்று வரும் போது தன்னலமின்றி பசங்களுடன் ஒற்றுமையாக சேர்ந்துக் கொள்வான். இபொழுதும் ஸீன் போடுவதை நிறுத்தவில்லை தான் ஆனால் அது அனைவருக்கும் பழகிவிட்டது. 
மாலினி – ஸ்ரீராமன் ? மாலினி மெல்லிய நட்பை ஆதரிக்க அவனோ சில நேரங்களில் நட்பிற்கு அந்த பக்கம் செல்ல பார்ப்பான்.. உடனே மாலினி கோபித்துக் கொண்டு பேசுவதை தவிர்க்க இவன் காலில் விழாத குறையாக கெஞ்சி நட்புடன் பழகுவான் பின் திரும்ப குரங்கை போல் அவன் மனம் தாவத் துடிக்கும்.. பின் திரும்பவும் கெஞ்சல் என்று ஓடிக் கொண்டிருக்கிறது. பிருந்தா கூட திட்டுவாள் ‘அவன் திருந்த மாட்டான்.. அப்படி என்னடி உனக்கு அவன் மேல் சாப்ட் கார்னர்?’ என்று. மாலினி ‘நான் நானா தான் இருப்பேன்.. அவன் மனம் தாவ நினைக்க ஆரம்பிக்கும் போதே நான் முட்டுக்கட்டை போட்டு விடுவேன்.. அவன் என்றாவது அதிகமா போனால் நிரந்தரமா பேசுவதை நிறுத்திவிடுவேன்’ என்பாள். ஆனால் அதில் பிருந்தாவிற்கு உடன்பாடு கிடையாது.. இவனால் தான் இருவருக்கும் சண்டை வரும். 
ஜெனிஷா – ராஜசேகர் ? நாளுக்கு நாள் காதலின் ஆழம் கூடிக் கொண்டே தான் போகிறது. நடுவில் ஒருமுறை கல்லூரி சீருடையுடன் வெளியே சுற்றி வெட்டுக்கிளியிடம் மாட்டினர். ஏதேதோ காரணம் சொல்லி தப்பித்தாலும் இவர்களை பற்றி ஆசிரியர்களுக்கு தெரிந்ததோடு பெற்றோர்களுக்கு சிறு சந்தேகம் முழைத்திருக்கிறது. இருப்பினும் ஊர் சுற்றுவதை நிறுத்துவதில்லை. 
ஜெனிஷா – ஆஷா ? பெரும்பாலான ஜெனிஷாவின் சேட்டைகளில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்குவது ஆஷா தான். இருப்பினும் இருவரும் நெருங்கிய தோழிகள். 
ராஜசேகர் – சிவகுரு ? உற்ற நண்பர்கள். 
ராகேஷ் – செல்வராஜ் ? நெருங்கிய நண்பர்கள். ராகேஷ் CSE மட்டுமில்லாது மொத்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கே தலைவன் போல் இருக்க செல்வராஜ் துணை தலைவன். 
அனீஸ் – சக்திவேல் ? ‘உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட’ என்பதற்கு எடுத்துகாட்டு இவர்கள் நட்பு.
தாரிக்கா ? இப்பொழுதும் இவளது குழு தனி தீவு தான் இருப்பினும் தோழிகளின் வற்புறுத்தலில் வேறு வழியின்றி கடுப்புடனும் கோபத்துடனும் எரிச்சலுடனும் வகுப்புடன் சேர்ந்து தண்டனை பெற்றுக் கொள்வாள்.
பிரியா – செல்வராஜ் ? பிரியா தன் காதலை சொல்ல அதை மறுத்துவிட்ட செல்வா ‘கெத்து சிங்கிளாக’ சுற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால் ப்ரியா ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆஷா – வினோத் ? வினோத் காதலை சொல்லியிருக்க ஆஷா மனதிற்கு பிடித்திருந்தாலும் பதில் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாள். 
மாலினி – ஜெனிஷா ? ஒட்டி உறவாடவில்லை என்றாலும் மெல்லிய நட்பு இருக்கிறது.
ஸ்ரீராமன் – ராஜசேகர், சிவகுரு ? அவ்வபொழுது சண்டை போட கிருஷ்ணமூர்த்தி தான் சமாதானம் செய்வான்.
மோகனா – ஷங்கர் ? ஷங்கரின் மனதினுள் காதல் ஆலமரம் போல் வளர்ந்திருக்க அதை புரிந்துக்கொள்ளும் பக்குவம் மோகனாவிற்கு இன்னும் வரவில்லை. ஷங்கர் அவளது குழந்தைத் தனத்தை தான் இன்னும் அதிகமாக விரும்புகிறான். அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறான். மோகனாவின் மனதில் மெல்ல மெல்ல உயர்ந்து மாலினிக்கு பின் தான் ஷங்கர் என்ற நிலையில் இருந்து இப்பொழுது ஷங்கரும் மாலினியும் சமம் என்ற நிலைக்கு முன்னேறியிருக்கிறான்.
ஆர்லி ? உதட்டில் போலி புன்னகையுடனும் நெஞ்சில் அதே வஞ்சினத்துடனும் தான் இருக்கிறாள். 
ஆக மொத்தம் CSE மாணவர்களிடையே ஒற்றுமை வலுப்பெற்றிருந்தது. முன்பே ஆசிரியர்கள் திணறுவார்கள் இனி!!!!!!!!!!!!!!!!!!
இவர்களின் அட்டூழியங்களை அடுத்த மழையில் பார்க்கலாம்….
  
மழை தொடரும்….

Advertisement