Advertisement

மழை 25:
அடுத்த நாள் ஜெனிஷா வகுப்பிற்குள் நுழைந்த போது பசங்களுக்குள் ஏதோ சலசலப்பு நிகழ்ந்துக் கொண்டிருக்கவும் ஆஷாவிடம், “என்ன பிரச்சனை?”
ஆஷா கருப்பு பலகையை நோக்கி கையை நீட்டினாள்.
அங்கே TOP 10 BEAUTIFUL GIRLS என்று எழுதி இருந்தது.
ஜெனிஷா, “என்னடி இது?”
“இன்னும் கொஞ்ச நேரத்தில் அனௌன்ஸ் பண்ணப்படும் சொன்னதில் இருந்து இந்த சலசலப்பு தான்”
“நம்மகிட்ட இருந்து சலசலப்பு இல்லாம இவன்க கிட்ட ஏன்?”
“பொண்ணுங்க யாரும் பெருசா கண்டுக்கலை..”
“அப்படியா!!!” என்று சிறு கிண்டல் குரலில் கூறவும்,
“சரி கண்டுகிட்டது போல் காட்டிக்கலை”
“ஹ்ம்ம்.. இது ஓகே.. சரி யாரு அனௌன்ஸ் பண்ண போறா?”
“அங்கே தான் பிரச்சனையே! ஒவ்வொரு பொண்ணுக்கும் பாட்டு போட போறான்க.. யாருக்கு யார் பாட்டு போடுறது.. ஐ மீன் யார் பெயரை யார் அனௌன்ஸ் பண்றதுன்னு பிரச்சனை”
“ஓ” 
“என்னடி நீ ஏதோ பிளான் பண்றது போல தெரியுதே” என்றதும் ஜெனிஷா விஷமமாக சிரித்தாள்.
“ஆத்தி நான் ஆட்டத்துக்கு வரலை”
“பெருசா ஒன்னுமில்லைடி”
“அதை நான் சொல்லணும்”
“என்னை பத்தி தெரியாதா?”
“தெரிந்ததால் தானே அலறுறேன்”
“ஷ்.. டோன்ட் டிஸ்டர்ப்” என்றபடி தீவிரமாக யோசிக்க ஆரம்பிக்கவும் ஆஷா உண்மையாக திகிலடைந்தாள்.
அவளை திசை திருப்பும் பொருட்டு, “ராஜ் என்ன சொல்றான்?”
சட்டென்று சிந்தனையில் இருந்து வெளி வந்தவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அதுக்கும் சேர்த்து தான் யோசிக்கிறேன்” என்று கண்சிமிட்டி கூறியவள் மீண்டும் யோசிக்கத் தொடங்கினாள்.
அங்கே மாணவர்களுக்குள் சண்டை நடந்துக் கொண்டிருந்தது.
ராகேஷ், “ரொம்ப பண்ணாதீங்க டா.. முடிவா என்ன தான் சொல்றீங்க”
ராஜசேகர், “சிஸ்டருக்கு இவன் பாட கூடாது” என்று ஸ்ரீராமனை பார்த்து கூற,
ஸ்ரீராமன், “அப்போ நான் ஜெனிஷாவிற்கு பாடுறேன்” என்றதும் ராஜசேகர் வேகமாக எழ, ராகேஷ் அவனை தடுத்து, “சேகர்.. உன் ஆளுக்கு நீ பாடுற.. அத்தோட நீ அமைதியா இரு.. வேற யாரு இவன் பாட கூடாதுனு சொல்றது?”
ஐந்து மாணவர்கள் கை தூக்க ஒருவாறு அவர்களை சமாளித்த ராகேஷ் இறுதியாக, “மாலினி இதுவரை நல்லா பேசியது சேகர், குரு, கிருஷ்ணா, செல்வா மற்றும் இவனுடன் தான்.. சேகர் சிஸ்டர் சொல்லிட்டான்.. குருவும் கிருஷ்ணாவும் தோழி னு சொல்லிடாங்க.. செல்வா முடியாது சொல்லிட்டான்.. ஸோ இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே டா..” என்றதும் மற்றவர்கள் அரை மனதுடன் சரி என்றனர்.
ராஜசேகரின் முறைப்பில் ஸ்ரீராமன், ‘கொஞ்சம் ஓவரா தான் சொல்லிட்டமோ! அவன் ஆள் பற்றி பேசியிருக்க கூடாதோ! சேதாரம் இல்லாம இன்னைக்கு வீடு போய் சேர்வோமா!’ என்று உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே ராஜசேகரை முறைக்க தவறவில்லை.
அடுத்து வேறு சில மாணவிகளுக்கு யார் பாடுவது என்பதில் பிரச்சனை கிளம்பியது……………………..
அமைதியாக ஆஷாவுடன் மேடை ஏறிய ஜெனிஷா, “பிரெண்ட்ஸ்.. இப்போ டாப் டென் ஹன்ட்சம்.. ஓ.. அது கொஞ்சம் கஷ்டம் தான்.. டாப் டென் பசங்க யாருன்னு சொல்றேன்” என்றதும் மாணவிகள் “ஓஓஓஒ” என்று கத்த, மாணவர்கள் “ஏய்” என்று கத்தினர்.  
ஜெனிஷா புன்னகையுடன், “சரி சரி.. பாவம் பயபுள்ளைங்க ஆசை படுதுங்க.. டாப் டென் ஹன்ட்சம் கைஸ்-னே சொல்லுவோம்” என்றதும் சிரிப்புடன் கூடிய மெல்லிய கரகோஷம் எழுந்தது.
ராஜசேகர் தன்னவளின் கலாட்டாவை உள்ளே ரசித்தாலும் வெளியே அவளை முறைக்கவே செய்தான்.
ராகேஷ் எழுந்து வெளியே செல்ல பார்க்க, ஜெனிஷா, “எங்க போறீங்க நாட்டாமை! கண்காணிக்க வெளியே ஆள் ஏற்பாடு செய்தாச்சு” என்றாள்.
அவன் வெளியே பார்க்க, ECE துறையை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் இருவர் வெளியே நின்றுக் கொண்டிருந்தனர். ராகேஷ் அமைதியாக இருக்கையில் அமர்ந்தான். மாணவர்கள் அவளது அறிவிப்புக்காக ஆர்வமாக அமர்ந்திருந்தனர்.
ஜெனிஷா, “பார்ப்பதற்கு கொஞ்சம் நன்றாகவே இருந்து முதல் மூன்று இடத்தினுள் நுழையும் வாய்ப்பு இருந்தும் குணத்தின் காரணமாக பத்தாவது இடத்தை தான் இவர் பிடித்து இருக்கிறார்” என்று கூறி ஆஷாவிடம் சிமிக்கை செய்ய, அவள்,
“மாமா டவுசர் கலன்டுசு
ஆமா டவுசர் அவுந்துசு..
ஓ.. மாமா டவுசர் கலன்டுசு
ஆமா டவுசர் அவுந்துசு..
மாமா டவுசர் அவுந்துசு..
மாமா..
மாமா டவுசர்..” என்ற பாடலை(சூது கவ்வும் திரைப்படம்) ஒலிக்கவிட்டாள்.
ஜெனிஷா, “யாருன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா!!! ஹ்ம்ம்.. எப்போதும் பல்பு மட்டுமே வாங்கும் ஸ்ரீராமன் தான் பத்தாவது இடத்தை பிடித்தது” 
ஸ்ரீராமன் பல்லை கடித்துக் கொண்டு அவளை முறைக்க மாணவர்கள் அனைவரின் முகத்திலும் சிரிப்பு. சிரித்துக் கொண்டிருந்த ராஜசேகர் ஜெனிஷா அவனை பார்க்கவும் சிரிப்பை நிறுத்தி முறைத்தான். அவளோ சிரிப்புடன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
நந்தினி புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்கவும், பிருந்தா, “ஓவர் சின்சிரியாட்டி உடம்புக்கு ஆகாதுடி”
“போடி.. உங்களுக்கு வேற வேலை இல்லை.. பஸ்ட் பிரியட் ஐஸ்வர்யா மேம்.. இன்னைக்கு கண்டிப்பா டெஸ்ட் உண்டு”
“எப்போ வச்சாலும் எனக்கு கவலை இல்லை”
“மாலு வராத அன்னைக்கு வச்சாலுமா?”
“உனக்கு ஏன்டி இந்த கொலைவெறி! நான் உன்னை ஒன்னும் சொல்லலை ஆத்தா.. நீ படி” என்றவள், “பார்டா.. மிஸ்டர் நந்தினி கூட புக்கை தான் புரட்டிட்டு இருக்கார்”
நந்தினி முறைக்கவும் பிருந்தா தோளில் தூசி தட்டுவது போல் தட்டிவிட்டுவிட்டு ஜெனிஷாவை கவனிக்க தொடங்கினாள். 
ஜெனிஷா, “அடுத்து” என்று கூறி ஆஷாவை பார்க்கவும், 
“டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
எங்க தல எங்க தல டி.ஆரு
செண்டி மெண்டுல தாறு மாறு…………..” என்ற பாடல்(ரோமியோ-ஜூலியட் படம்) ஒலித்தது. ஜெனிஷா, “டி.ஆரின் தீவிர விசிறியான நிதின் ஒன்பதாவது இடம்” என்றாள்.
அடுத்து, 
“ஏ ராயபுரம் பீட்டரு ரவுசு இவன் மேட்டரு
ஏ சவுண்ட எத்துபா
ஏ உட்டுக்குள்ள வெத்து தான் ஏரியால கெத்து தான்..
ஆ உதார் உதார் உதார் உதார் உடுறான் பீட்டரு
ஆ டுபார் டுபார் டுபார் டுபார் டுபாகூர் பீட்டரு” என்ற பாடல் (மான் கராத்தே படம்) ஒலித்தது. ஜெனிஷா, “எப்பொழுதும் பொண்ணுங்க கிட்ட பீட்டர் விடும் மகேஷ் எட்டாவது இடம்” 
அடுத்து,
“ஒரு முறை பழகிட்டா மறு நொடியில் சொந்தம்
உசுரத்தான் தருவோம் கேட்டா
கேட்டா எதிரிக்கும் இங்க இடமில்ல..
ஏ.. டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும் 
ஏ.. டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்” என்ற பாடல்(விக்ரம் வேதா படம்) ஒலித்தது. ஜெனிஷா, “நம்ம கிளாஸ் விஜய்-சேதுபதி வினோத் ஏழாவது இடம்”
அடுத்து,
“டமாலேலேஹே ஹே டமா டமா டமாலே
ஹே டமா தனக்கு டே டே
டஸ்கு டனக்கு டே டே
டண்டனக்கு டஸ்கு நக்கு டே டே
டே டே டே டே
ஹே அரகிறுக்கிற முக்கா முழம் லோட்டே
மருன்னு கனக்கின வாட்டு எடுத்து
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாயக்கிறாயா
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாயக்கிறாயா” என்ற பாடல்(நேரம் படம்) ஒலித்தது.
ஜெனிஷா, “நம்ம கிளாஸ் பிஸ்தா பருப்பு சிவகுரு ஆறாவது இடத்தில்”
சிவகுரு ராஜசேகரிடம், “என்னை எதுக்கு மச்சான் பிஸ்தா னு உன் ஆளு சொல்லுது”
“அதை அவளிடம் போய் கேளு”
“உன்னை என்ன சொல்லுவா” என்று வினவியவன் ராஜசேகரின் பார்வையில் அடங்கினான்.
அடுத்து,
“காளை காளை காளை மயிலக்காளை
காளை காளை காளை மயிலக்காளை
காளை காளை மயிலக்காளை
கவலை இல்லா செவலக்காளை
மேல மேல எகிறும் காளை
மெரண்டுடாத ஒயில காளை……………” என்ற பாடல் (கடைக்குட்டி சிங்கம் படம்) ஒலித்தது.
வெளியே நின்ற ECE மாணவிகள் வகுப்பின் உள்ளே நுழையவும் ஜெனிஷாவும் ஆஷாவும் அவசர அவசரமாக தங்கள் இடத்தில் அமர்ந்தனர்.
அப்பொழுது அவர்கள் வகுப்பை கடந்து சென்ற பி.டி ஆசிரியர் திரும்பி வந்து அவர்கள் வகுப்பின் உள்ளே நுழைந்து, “என்னங்கடா.. ரொம்ப அமைதியா இருக்கிறீங்க!” என்று சந்தேகமாக வினவ,
வினோத், “எல்லாத்துக்கும் சந்தேகப்பட்டா எப்படி சார்?”
“எல்லாம் நேரம் டா” என்றுவிட்டு வெளியே சென்றார். அவர் சென்றதும் ராகேஷ், “சக்தி போர்ட்” என்று கத்தவும் சக்திவேல் வேகமாக சென்று பலகையில் எழுதி இருந்த வாக்கியத்தை அழித்தான்.
பி.டி ஆசிரியர் பலகையை பார்க்காததால் ஒரு விசாரணையில் இருந்து தப்பித்தனர்.
பி.டி ஆசிரியர் சென்ற இரண்டு நிமிடங்கள் கழித்து ஜெனிஷவும் ஆஷாவும் எழ, ராகேஷ், “உங்க பிளேஸ்ஸில் இருந்தே சொல்லுங்க.. பி.டி எப்போ வேணா வரலாம்”
ஜெனிஷா, “கடைசியா கேட்ட பாட்டு வச்சு எனி கெஸ்ஸஸ் பிரெண்ட்ஸ்!!!!”
“கிருஷ்ணமூர்த்தி” என்று ஒரு சிலர் கூற,
ஜெனிஷா, “எஸ்.. கிராமிய பாசாமும் வீரமும் நிறைந்த கிருஷ்ணமூர்த்தி ஐந்தாவது இடத்தில்”
அனீஸ் சக்திவேலிடம், “இவளுக்கு எப்படி டா பசங்க பற்றி தெரியுது! எல்லோருக்கும் சரியா அடைமொழி தரா!”
சக்திவேல், “எல்லாம் ஒரு ஜெனரல் நாலெட்ஜ் தான்”
“அப்படினா!!!!”
“பொது அறிவு னு சொன்னேன் மச்சி”
“அப்போ எனக்கு அந்த வார்த்தையை பிடிக்கலை”
“ஏன் டா”
“அதில் அறிவு வருதே”
“விடுடா.. நம்ம கிட்ட இல்லாததை பற்றி எதுக்கு பேச்சு”
“அதுவும் சரி தான்”
அடுத்து, 
challenges are welcome to this Game.. I am the DON..
Any language I blend them.. Hola.. Vanakkam.. Salam.. Hanji.. Hello.. Bonjour.. Ciao.. Aloha.. Ahlam Wa Sahlan.. 
No matter, the Vernacular.. I’M always talking strong” என்ற பாடல்(செக்கச் சிவந்த வானம் படம்) ஒலிப்பெர,
ஜெனிஷா, “சலேன்ஞ்ஸ் எல்லாத்தையும், ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுறது போல னு சொல்லி அசால்ட்டா டீல் பண்ற நம்ம கங் லீடர் ராகேஷ் நான்காவது இடத்தில்” 
ராகேஷ், “அடபாவிகளா! நீங்களே என்னை டான் ஆக்கிருவீங்க போல”
சிவகுரு, “அப்போ அது உண்மை இல்லையா சித்தப்பு” என்று பருத்திவீரன் திரைப்பட கார்த்தி போல் கேட்கவும் ராகேஷ் அவன் முதுகில் இரண்டு அடி போட மாணவர்கள் சன்னமாக சிரித்தனர்.
அடுத்து ஜெனிஷா தனி சிரிப்புடன் ராஜசேகரை ஒரு பார்வை பார்க்க, அவனோ அதை அறியவுமில்லை இவள் பக்கம் திரும்பவுமில்லை.
சிவகுரு, “மச்சான் அடுத்த பாட்டு உனக்கு தான்”
ராஜசேகர் முறைக்க, சிவகுரு, “நிஜமா மச்சான்.. உன் ஆளு முழியே சொல்லுது” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,
“ராசா ராசா என்
மன்மத ராசா தனியா
ஏங்குது ரோசா 
கொஞ்சம் சேத்துக்க ராசா
மன்மத ராசா மன்மத ராசா
கன்னி மனச கிள்ளாதே கண்ணுல லேசா” என்ற பாடல் (திருடா திருடி படம்) ஒலித்தது. ராஜசேகர் ஜெனிஷாவை பார்த்து கடுமையாக முறைத்தான் ஆனால் அவள் கண்களிலோ குறும்புன்னகை மின்னியது.

Advertisement