Advertisement

“கொஞ்சம் கஷ்டப் படனும் போலவே” என்று அவள் முணுமுணுக்க ஆஷா சிரித்தாள். ஜெனிஷா அவளை முறைத்தாள்.
சக்திவேல் சிவகுருவிடம்,  “எப்படி டா இவன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற?” 
“விட்ரா விட்ரா.. காதல்ன்னு வந்துட்டா சில அடிகள் விழ தான் செய்யும்” என்று வடிவேல் போல் கூறவும்,
சக்திவேல், “காலக் கொடுமை”
அந்த வகுப்பு முடிந்ததும், இன்னும் ஒரு வாரத்தில் மற்றொரு கல்லூரியில் நடக்கவிருக்கும் பண்பாட்டுப் போட்டியில்(Cultral Competition) கலந்துக்கொள்ளும் மாலினி, ஜெனிஷா, செல்வராஜ் மற்றும் ராகேஷ் பயிற்சிக்காக வெளியே சென்றனர். ஜெனிஷா தன்னவனை பார்த்துக் கொண்டே செல்ல அவனோ இவளை கண்டுகொள்ளவில்லை. 
மத்திய தேநீர் இடைவேளையில் சக்திவேல், “கண்டிப்பா அப்பாவை வர சொல்லனுமா டா?”
சிவகுரு, “அப்படி தான் தெரியுது”
சக்திவேல் ராகேஷிடம், “எதுவும் செய்ய முடியாதா தல?”
“ஏன் டா இப்படி பயப்படுற?”
“உனக்கென்ன!!! பிரேமம் அப்பா போல் ஒருத்தர் இருக்கார் எனக்கு அப்படியா! அது போக நான் ஹாஸ்டல் வேற”
சிவகுரு, “ஹாஸ்டல் உனக்கு பிளஸ் டா..”
சக்திவேல் முறைக்கவும், சிவகுரு, “நிஜமா டா.. நான் என் அப்பாவிடம் போய் சொன்னா கழுவி கழுவி ஊத்துவார்.. இன்னும் ஒரு வாரத்திற்கு வீட்டில் நான்-ஸ்டாப் இடியுடன் கூடிய திட்டு மழை தான்.. அதில் இருந்து நீ எஸ்கேப்”
“ஆமா மச்சி,.. இவன் சொல்றது சரி தான்” என்று அனீஸ் கூற, சக்திவேல் அவனை முறைத்தான்.
செல்வராஜ், “நான் படிச்ச ஸ்கூல் கூட இவன்களை விட பெட்டர் டா”
“ஆமா டா” என்று ஒருவன் கூறினான்.
வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும் அவர்கள் பேச்சு நின்றது. அவரவர் இடத்தில் சென்று அமர்ந்தனர். சக்திவேல் பழையபடி முதல் இருக்கையில் அமர்ந்தான்.
அன்று வகுப்புகள் முடிந்து கல்லூரி அருகே இருந்த தேநீர் கடை முன் செல்வராஜ், ராகேஷ், சிவகுரு, ராஜசேகர், வினோத் மற்றும் மூன்று மாணவர்கள் கூடி இருந்தனர். சக்திவேல் மற்றும் அனீஸ் கல்லூரி விடுதியில் இருப்பதால் அவர்கள் வரவில்லை.
செல்வராஜ், “காயின் பூத்தில் இருந்து போன் பண்ணி திட்டுவோமா மச்சி?”
ராகேஷ், “இப்போ வேணாம்.. கண்டு பிடிச்சுருவான்க”
“கண்டு பிடிச்சா என்ன? அவன்களால ………….” என்று அவன் கெட்ட வார்த்தையில் திட்ட,
சிவகுரு, “உன் முன் கோபத்தை கொஞ்சம் குறை மச்சி”
செல்வராஜ் முறைக்க, ராகேஷ், “டேய் விடு டா” என்றான்.
ராஜசேகர், “கொஞ்ச நாள் கழிச்சு ஆசை திற திட்டு.. இப்போ வேணாம்”
செலவர்ஜ், “என்ன கொஞ்ச நாள்!!! நமக்கு எப்பவும் பிரச்சனை இருந்துட்டே தான் இருக்கும்”
வினோத்,. “நமக்கு இல்லை மச்சி.. நம்மால்னு சொல்லு.. ஏன்னா பிரச்சனை பண்றதே நீங்க தான்”
“நீ ரொம்ப ஒழுங்கோ..”
“அப்படி எங்கே சொன்னேன்! உங்களை விட பெட்டர்”
“உங்களைனா யாரை சொல்ற?”
“நீ ராக்கி குரு சேகர்”
“எங்களை விட நீ ஒன்னும் பெட்டர் இல்லை”
“அதை நீ சொல்ல கூடாது”
“வேற யாரு சொல்லணும்?”
ராகேஷ், “ஏன்டா நீங்க சண்டை போடுறீங்க.. செல்வா இப்போ அமைதியா இரு..”
“என்னையே எப்போதும் சொல்லு”
சிவகுரு, “ஏன்னா எப்போதும் நீ தான் அடங்க மாட்டிக்கிற” 
ராகேஷ் சிவகுருவை பார்த்து, “அடுத்து நீயா டா!” என்றவன் பொதுவாக, “கொஞ்ச நேரம் அமைதியா இருங்க டா” என்றுவிட்டு செல்வராஜிடம், “நீ சொன்னது போல் வாத்தீஸ் யாரையும் இப்போ திட்டிராத”
ஒருவன், “நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு.. இப்போ அவங்களை திட்டியே ஆகணும்”
“டேய் அவனே இப்போ தான் அடங்குறான்.. நீ திரும்ப ஏத்தி விடாதே”
“என்ன தலை இப்படி சொல்லிட்ட”
“கொஞ்சம் மூடிட்டு இரு”
அவன் ஏதோ சொல்ல வர ராகேஷ் தன் கையால் வாயை மூடி ‘வாயை மூடு’ என்று சொல்லாமல் சொன்னான். சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்.
அடுத்த நாள் காலை இண்ரடாவது வகுப்பு நடந்துக் கொண்டிருந்த போது ராகேஷ், செல்வராஜ், சக்திவேல், ராஜசேகர் மற்றும் இரண்டு மாணவர்கள் கேண்டீனில் அமர்ந்திருந்த போது உள்ளே நுழைந்த சிவகுரு, “ஒரு டீ சொல்லு மச்சி” என்றபடி ராகேஷ் அருகில் அமர்ந்தான்.
சக்திவேல், “என்னாச்சு டா?”
“என் பையன் இனி இப்படி நடந்து கொள்ள மாட்டான் னு என் அப்பாவிடம் லெட்டர் எழுதி வாங்கிட்டு விட்டுட்டான்க.. அது சரி உன் அப்பா எப்போ வரார்?”
“பக்கத்துல வந்துட்டார்.. இன்னும் பத்து நிமிஷத்தில் வந்திருவார் னு நினைக்கிறேன்”
சிவகுரு ராகேஷை நோக்கி, “உன் அப்பா?”
“பதினோரு மணிக்கு வரேன் சொன்னார்”
“உண்மையிலேயே உன் அப்பா வந்தா இவன்க டப்பா டான்ஸ் ஆடும்கிற!”
ராகேஷ் மென்னகையுடன், “பார்க்க தானே போற!”
“நாங்க பார்க்க முடியாதே!”
“நான் பார்த்துட்டு வந்து படத்தை ஓட்டி காட்டுறேன்”
“ஹ்ம்ம்.. சரி உங்களுக்குளாம் என்ன சொன்னாங்க?” என்று மற்றவர்களை கேட்டான். 
மற்றவர்கள், “அதே தான்.. அப்பா லெட்டர் எழுதி கொடுத்ததும் விட்டான்க”

“கிளாஸ் போகலை”
“பிரேக் முடிஞ்சு போய்க்கலாம்”
“ஹ்ம்ம்..”
ராஜசேகர், “அப்பா என்ன சொன்னாங்க?” என்று சிவகுருவிடம் வினவ,
அவன், “ஹ்ம்ம்.. அவன்க என்னை திட்டி முடிச்சதும் இவர் சும்மா இருக்காம ‘சேர்க்கை சரியில்லை’ னு சமாதானம் செய்ய அந்த குச்சி ஐஸ் ஹீரோ உங்க பையன் கூட சேர்ந்து தான் மத்த பசங்களும் ஆடுறான்க னு சொல்ல அவர் என்னை முறைக்க நான் எப்பொழுதும் போல் நிற்க ஜிண்டா அடுத்து எடுத்து விட னு மொத்தத்தில் வச்சு செஞ்சான்க மச்சான்.. உனக்கு?”
“அப்பா இங்கே எதுவும் வாய் திறக்கலை.. வீட்டுக்கு போனதும் இருக்குது”
“எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதை பார்க்க மாட்டோமா!” என்றதும் இருவரும் சிரித்தனர்.
செல்வராஜ், “உங்க அப்பவாது பரவா இல்லை டா.. என் அப்பா.. இவன்களுக்கு எடுத்து கொடுக்கிறார்.. பத்தாததுக்கு லெட்டரில் என்ன அக்சன் வேணாலும் எடுங்க னு இவராவே எழுதி கொடுத்துட்டு வரார்” என்றதும் அனைவரின் முகத்திலும் மெல்லிய புன்னகை.
அப்பொழுது சக்திவேல் தந்தை வரவும் அவன் தந்தையுடன் ஆசிரியர்களை பார்க்க சென்றான். சிறிது நேரம் கழித்து அவனும் ‘வை பிளட்.. சேம் பிளட்’ என்றது போல் வந்து நின்றான்.
அப்பொழுது ராகேஷ் கைபேசியில் அழைப்பு வரவும், “ஓகே டா.. அப்பா வந்துட்டாங்க” என்றபடி கிளம்பினான்.
ராகேஷ் தந்தையை அழைத்துக் கொண்டு முதலாமாண்டு ஆண்கள் ஆசிரியர் அறைக்கு சென்றான்.
ரவி சார் அவனை முறைத்தபடி பேச தொடங்கும் முன் ராகேஷின் தந்தை, “H.O.D சாரும் இருந்தால் நல்ல இருக்கும்”
ரவி சார், “அவர் கிளாஸ் எடுத்துட்டு இருக்கார்”
“அவர் வந்த பிறகு ஆரம்பிக்கலாம்”
பி.டி ஆசிரியர், “ஏன் எங்களிடம் பேச மாட்டீங்களா?” 
“அப்போ நான் பிரின்ஸிபால் அல்லது சேர்மன் கிட்ட பேசிக்கவா” என்றபடி அவர் எழ, பி.டி சார், “என்ன சார் மிரட்டுறீங்களா?”
“இதில் மிரட்டல் எங்கே இருக்கிறது? இப்படி தான் அறையும் குறையுமா என் பையனை விசாரிச்சீங்களா?”
மற்றொரு சார், “நீங்க இப்படி இருப்பதால் தான் உங்க பையன் எங்களை மதிப்பதில்லை”
அவர் அந்த ஆசிரியரை தீர்க்கமாக பார்த்து, “அப்படி மரியாதை இல்லாம என்ன செய்தான்? உங்களை பார்த்தால் விஷ் பண்ணாம இருக்கிறானா?”
“இல்லை”
“வகுப்பில் ஆசிரியர் நுழையும் போது எழாமல் உட்கார்ந்து இருக்கிறானா?”
“இல்லை”
“உங்களிடம் ஒருமையில் பேசினானா?”
“இல்லை”
“உங்கள் காதுபட உங்களை பற்றி தவறா பேசினானா?”
“இல்லை”
“அப்போ எதை வைத்து அவன் மரியாதை தரதில்லைன்னு சொல்றீங்க?”
அந்த ஆசிரியர் திணற, ரவி சார், “ஒரு நாளாவது வகுப்பை கவனித்து இருக்கிறானா கேளுங்க”
“கவனிக்கும் படி சுவாரசியமா நீங்க எடுக்கலை”
ரவி சார் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக இருக்க, பி.டி ஆசிரியர் சிறு சுவாரசியத்துடன் அமர்ந்திருக்க, மற்ற ஆசிரியர்கள் சிறு திணறலுடன் அமர்ந்திருந்தனர். 
சில நொடிகள் மௌனத்தில் கழிய அப்பொழுது உள்ளே வந்த சைக்கோ, “அவனிடம் எப்பொழுதுமே தெனாவெட்டு இருக்கிறது”
“நீங்க?”
“நான் பஸ்ட் இயர் H.O.D”
“உங்களை தான் கேட்டுட்டு இருந்தேன்”
“என்ன?”
“இப்படி சின்ன சின்ன விஷயத்திற்கு கூப்பிட்டு விடாதீங்க னு சொல்ல தான்”
“உங்களிடம் இருந்து தான் அவனுக்கு தெனாவெட்டு வந்திருக்கிறது”
“அதை நான் தன்னம்பிக்கை னு சொல்றேன்.. பிற்காலத்தில் என் தொழில் சாம்ராஜ்யத்தை ஆள போறவனுக்கு இருக்க வேண்டியது தான்.. அவன் ஏதாவது தப்பு செய்தால் சொல்லுங்க கண்டிக்கிறேன்.. இப்போ என்னை எந்த விஷயமா கூப்பிட்டு விட்டீங்க?”
“என்ன பிரச்சனைன்னு சொன்னானா?”
“ஆசிரியர் ஒருவரை யாரோ ‘டி’ னு சொல்லிருக்காங்க.. அப்பறம் சீனியர்ஸ் கூட நடந்த பிரச்சனை”
“ஹ்ம்ம்.. உங்க பையனை கண்டிச்சு வைங்க.. இனி இப்படி செய்ய மாட்டான் னு லெட்டர் எழுதி குடுத்துட்டு போங்க”
“சபாஷ்.. ஆசிரியர்கள் தான் அரைகுறை என்றால் நீங்களும் அப்படி தான் போல.. ஒருவேளை உங்களை பின்பற்றி தான் இவர்களோ”
“என்ன சொல்றீங்க?” என்று சைகோ எரிச்சலுடனும் கோபத்துடனும் கேட்டார்.
அவர், “அந்த ஆசிரியரை என் பையன் டி னு சொன்னானா?”
“தெரியலை”
“அதை யாருன்னு முதலில் கண்டு பிடிங்க.. சும்மா இவனை டார்ச்சர் பண்ணாதீங்க.. என் பையன் நிச்சயம் அப்படி சொல்லி இருக்க மாட்டான்.. அப்பறம் அந்த சீனியர்ஸ் விஷயம்.. பிரச்சனை ஆரம்பித்ததும், முதலில் கையை நீட்டியதும் அந்த சீனியர்ஸ் தான்.. அதன் பிறகு தான் இவங்க  கை நீட்டி இருக்கிறாங்க.. ஸோ ரெண்டு விஷயத்திலும் இவன் மேல் தப்பு இல்லை.. ஸோ நான் லெட்டர் எழுதி தர மாட்டேன்.. சின்ன சின்ன கலாட்டாக்கள் கல்லூரி வாழ்க்கையில் சகஜம் தான்.. இது மிலிடரி ஸ்கூல் இல்லை.. இனி இப்படி சில்லறை விஷயத்திற்கெல்லாம் என்னை கூப்பிடாதீங்க.. மீறி அழைத்தால் நான் சேர்மேனிடம் தான் பேசுவேன்” என்றடி எழுந்தவர் ராகேஷை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.  
வெளியே சென்றவர் ராகேஷிடம், “உங்களுக்குள் ஆசிரியரை ஒருமையில் பேசுவது வேறு ஆனால்…………”
“இனி அந்த தவறு நடக்காது.. என் நண்பனிடம் சொல்லிட்டேன்”
அவர் மென்னகையுடன் அவன் தோளை தட்டிவிட்டு கிளம்பினார்.
அங்கே ஆசிரியர்கள் முகத்தில் ஈயாடவில்லை.. பிரேமம் திரைப்படத்தில் வந்த பி.டி ஆசிரியர் விசில் அடித்தது போல் இங்கே பி.டி ஆசிரியருக்கு விசில் அடிக்கத் தோன்றியது தான் இருப்பினும் சூழ்நிலை கருதி அமைதி காத்தார். சைகோ தலையை பிடித்தபடி அமர்ந்தார்.
மழை தொடரும்….

Advertisement