Advertisement

மழை 24:
மதிய தேநீர் இடைவேளையில் ராஜசேகர் ஜெனிஷா இடத்திற்கு வந்து, “தினேஷ் சாரிடம் என்ன சொன்ன?”
“நான் ஒன்னும் சொல்லலையே!”
ராஜசேகரின் ஆழ்ந்த பார்வையில் அவள், “அதான் ஒன்னும் பிரச்சனை இல்லையே! விடு”
“என்ன சொன்னனு கேட்டேன்”
“அது”
“உனக்கே தப்புன்னு தெரியுது!”
“நான் தப்பாலாம் பேசலை ஆனா உனக்கு கோபம் வருமோ னு”
“நீ தப்பா பேசலைனா எனக்கு ஏன் கோபம் வர போகுது?”
“அது அப்படி தான்”
“சரி சொல்லு”
“என்ன?”

“நிஷா”
“உங்களை பார்த்து கண்ணடிக்கலைன்னு கோபமா னு கேட்டேன்” என்று அவள் கூற அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு தன் இடத்திற்கு சென்று அமர்ந்தான்.
ஜெனிஷா, “ராஜ்” என்று அழைத்தாள் ஆனால் அவன் திரும்பவில்லை. அவள் மனதினுள் ‘ச்ச்’ என்று அலுத்துக் கொண்டு எழுந்து அவன் அருகே சென்று அடக்கிய கடுப்புடன், “இங்க பாரு.. ரவி சார் னா நான் அப்படி பேசியிருக்க மாட்டேன்.. அந்த ஜொள்ளுவாயன் கிட்ட பேசினது தப்பில்…………………….”
கடும் கோபத்துடன் திரும்பிய ராஜசேகர் கடித்த பற்களிடையே, “அவன் தான் ஜொள்ளுவாயன் னு தெரியுதே! அப்போ அவனிடம் இப்படியா பேசுவ? அறிவு வேண்டாம்? ஒரு பொண்ணு இப்படியா பேசுவா?”
அவனது கடைசி வாக்கியத்தில் அவளுக்கு சட்டென்று கோபம் வர, “நான் இப்படி தான்.. இப்படி னு தெரிந்து தானே லவ் பண்ண ஆரம்ச்ச?” என்று கோபத்துடன் கூறினாள்.
“ஆமா அதுக்காக நீ செய்றது எல்லாம் சரி னு சொல்லிட்டு இருக்க மாட்டேன்”
“ஓ”
“என்ன ஓ?”
“ப்ரொபோஸ் பண்ணும் போது இது தப்பு னு தெரியலையா?”
“நீ அப்போ இப்படி பேசலை……………………”
“பேசி இருந்தா? வேணாம் னு போயிருப்பியா?”
அவளை முறைத்தவன், “அப்போ பேசியிருந்தா தப்பு னு சொல்லி இப்படி பேசாதேன்னு சொல்லிட்டு ப்ரொபோஸ் பண்ணியிருபேன்”
மனதினுள் அடித்த சாரலை மறைத்துக் கொண்டு, “இப்போ என்ன தான் சொல்ல வர?”
“உனக்கு தெரியலைன்னு சொல்றியா?”
“இதே ஒரு பையன் பேசினால் தப்பு சொல்லுவியா?”
“இதையே வேற பொண்ணு சொல்லி இருந்தால் தப்பு சொல்லுவேனா னு எனக்கு தெரியாது ஆனால் என் மனைவி சொல்லக் கூடாது”
“இது ஆணாதிக்கம்”
இரண்டு நொடிகள் அவளை ஆழ்ந்து நோக்கியவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
அப்பொழுது மதிய வகுப்புக்கள் தொடங்குவதற்கான மணி அடிக்கவும் அவள் எரிச்சலுடனும் கோபத்துடனும் தன் இடத்தில் அமர்ந்தாள். 
இவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்த அதே நேரத்தில் பிருந்தா மாலினியிடம், “அது எப்படி டி ரெண்டு பேரும் பார்வையிலேயே பேசிக்கிறீங்க?”
நந்தினி, “என்னடி சொல்ற?”
பிருந்தா, “நான் என்ன பேசுறேன்னு இவளுக்கு புரியும்”
மாலினி அமைதியாக பார்க்கவும் பிருந்தா, “இப்படி பார்த்தா என்ன அர்த்தம்? உன் பார்வையில் நீ சொல்ல நினைப்பதை படிப்பதற்கு நான் கிருஷ்ணமூர்த்தி இல்லை”
“நந்து கூட தான் என் பார்வையில் எழுந்து நின்றாள்” என்று மாலினி அமைதியான குரலில் கூறினாள்.
“அவளும் இவனும் ஒன்றா?”
மாலினி மீண்டும் ஆழ்ந்து நோக்கினாள் ஆனால் பிருந்தா, “பதில் சொல்லு டி”
நந்தினி பிருந்தாவை திட்ட வர, பார்வையிலேயே அவளை தடுத்த மாலினி தீவிரமான குரலில், “இன்னொரு முறை நீ எங்கள் நட்பை கொச்சை படுத்தி பேசினால் அது தான் நான் உன்னிடம் கடைசியா பேசுறது.. விளையாட்டுக்கு னு சொல்லாதே! உன் மனதில் நீ அப்படி நினைக்கவில்லை.. அவன் எனக்கு நல்ல தோழன்.. நீ சொல்வது சரி தான் அவன் எனக்கு ஸ்பெஷல் தான்.. அவனுடன் இருக்கும் போது அருணா கூட இருக்கிற பாதுகாப்பை என்னால் உணர முடியும் னு தோணுது.. நான் அவனிடம் பழகியது மிக குறுகிய காலம் தான் ஆனால் என்னால் இதை உணர முடிகிறது.. காதல் மட்டுமில்லை நட்பும் கூட ஒரு அழகிய உணர்வு தான்.. அதுவும் சட்டென்று மலர கூடியது தான்.. உனக்கு சந்தேகம் இருந்தால் எங்கள் கண்களை பாரு.. எங்கள் கண்களில் நட்பு மட்டுமே தெரியும்..” என்று நீளமாக பேசியவள் வாயடைத்து போய் அமர்ந்திருந்த பிருந்தாவை பார்த்து,  “என்ன!” என்று வினவினாள்.
பிருந்தா மெல்லிய குரலில், “சாரி”
“நான் நானாக தான் இருப்பேன்.. மற்றவர்கள் பேசுகிறார்கள் னு அழகிய நட்பை இழக்க என்னால் முடியாது.. என்னை பற்றி எங்கள் நட்பை பற்றி என் அப்பா அம்மாவிற்கு தெரியும், புரியும்.. அது போதும் எனக்கு.. மற்றவர்கள் தப்பாக நினைகிறார்கள் னு ஒவ்வொருத்தரையா பார்த்து எங்கள் நட்பை விளக்கும் அவசியம் எனக்கு கிடையாது.. கொஞ்ச நாள் போனால் அவர்களே புரிந்து கொள்வார்கள்.. புரிந்து கொள்ளாதவர்களை பற்றிய கவலை எனக்கு இல்லை.. நீ என் தோழி என்பதால் தான் இந்த விளக்கம்”
“ரியல்லி சாரி மாலு”
“அப்போ முதல்ல சும்மா கேட்டியா!”
பிருந்தா திருதிருவென்று முழிக்கவும் மாலினி சிரித்துவிட்டாள்.
பிருந்தா, “அப்பா! சிரிச்சிடியா!”
“பிருந்தா…………………..”
“பஸ்..பஸ்..பஸ்.. இனி உன் நண்பனை பற்றி வாயே திறக்க மாட்டேன்..” என்று வாயை அவள் மூடவும் மாலினி, “அது” என்பது போல் பார்த்தாள்.
பிருந்தா, “இன்று முதல் நீ டீச்சரம்மா என்று அழைக்கப் படுகிறாய்”
மாலினி செல்லமாக முறைக்கவும், பிருந்தா, “பின்ன.. இவ்ளோஓஓஒ பெரிய லெக்சர்” என்று பஞ்சதந்திரம் தெய்வயானி போல் கூறவும் சிரிப்பலை எழுந்தது.
முதல் வகுப்பு நடந்துக் கொண்டிருந்த போது திடீரென பிருந்தா, “பாட்டு பாடுறது ரொம்ப கஷ்டமா மாலு?”
மாலினி பார்வையை ஆசிரியரிடம் வைத்தபடியே, “இல்லையே!” என்றாள்.
“அப்போ நானும் பாடட்டுமா?”
“அப்போ கேட்கிற எங்களுக்கு கஷ்டமாச்சே!”
பிருந்தா அவளை முறைக்க, இப்பொழுதும் ஆசிரியரை பார்த்தபடியே, “நீ முறைச்சா நான் சொன்னது பொய்னு ஆகிடுமா!”
“நான் முறைச்சது உனக்கெப்படி தெரியும்?”
“ஹ்ம்ம்.. நான் தான் லேடி ஜேம்ஸ் பாண்டு ஆச்சே!”
“சொல்லுடி”
“கிளாஸ் கட்டடிக்க இந்த விஷ பரிட்சை வேணாம்.. இப்போ என்னை கிளாஸ் கவனிக்க விடு”
“ச்ச்.. போடி” என்று பிருந்தா அலுத்துக் கொண்டாள்.
இரண்டு நிமிடங்களில் பிருந்தா, “நீ தான் டீச்சரம்மா ஆட்சே! சொல்லி கொடு டி”
“ஹ்ம்ம்.. கையை கொஞ்சம் தூக்கு”
“எதுக்கு?”
“தூக்கு சொல்றேன்” என்றதும் பிருந்தா கையை தூக்க இயற்பியல்(Physics) ஆசிரியர் அவள் புறம் திரும்பி, “எஸ்” என்றதும் முழித்தவள் அவளையும் அறியாமல் எழுந்து நின்றாள்.
அவர் மீண்டும், “வாட் டூ யூ வான்ட்?” என்று வினவ, திரு திருவென முழிக்கவும் மாலினி மெல்லிய குரலில், “புரியலை.. ப்ளீஸ் எக்ஸ்ப்ளேன் அகேன் சொல்லு” என்று கூறவும் அவளும் அப்படியே சொன்னாள்.
அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு ஆசிரியர் அவளுக்கு கொடுத்த விளக்கத்தில் நொந்து போய் அமர்ந்தளிடம் மாலினி, “இனி பாடவா னு கேட்ப?” என்று வினவ, பிருந்தா கொலைவெறியுடன் அவளை பார்த்தாள். மாலினியோ அலட்டிக் கொள்ளாமல் பாடத்தில் கவனத்தை செலுத்த, நந்தினி சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தாள்.
சிவகுரு அருகே அமர்ந்திருந்த சக்திவேல், “என்னடா உன் ஆளு சந்தேகமெல்லாம் கேட்கிறா!”
“அவ எழுந்து நின்னு முழிச்சதை பார்த்தா அவளா கேட்டதா தெரியலை.. காலையில் நீ இருந்த நிலைமையில் இருந்திருப்பா” என்றவன், “ஏய்! நீ இப்போ என்ன சொன்ன?”
“என்ன சொன்னேன்?”
“டேய்”
“நிஜமா எதை கேட்கிறன்னு தெரியலை மச்சி”
“அவளை என்னனு சொன்ன?”
“உன் ஆளு னு.. “
“உனக்கு எப்படி?”
“இது பெரிய ராணுவ ரகசியம்! முசப் பிடிக்கிற நாயை மூஞ்சியை பார்த்தா தெரியாதா!”
“அவ்ளோ வெளிப்படையா வா தெரியுது?”
“எல்லோருக்கும் இல்லை.. அன்னைக்கு அவ உன்னை கழுவி கழுவி ஊத்திட்டு இருந்தும் நீ கோபப்படாம இருந்தப்ப சந்தேகம் வந்தது.. இப்போ கன்பார்ம் ஆகிருச்சு”
“ஓ!”
“ஆமா.. இவன் ஏன் அமைதியா இருக்கிறான்” என்று ராஜசேகரை சுட்டி காட்டினான்.
“ஏதோ குடும்ப பிரச்சனை?”
“என்னடா சொல்ற? என்னாச்சு?” 
“எதுக்கு இவ்ளோ ஜெர்க்?”
“என்ன டா?”
“என்ன என்ன டா?”
“அவனை சமாதனம் செய்யாம……………” என்று பேசிக் கொண்டிருந்தவன் சிவகுரு பார்வையில், “என்ன டா?” என்றான்.
“ஜெனிஷா கூட சண்டை”
“ஓ!”
ஆசிரியர், “அங்க என்ன சத்தம்?” என்றதும், செல்வராஜ், “சும்மா பேசிட்டு இருந்தோம் மாமா” என்று வடிவேல் போல் கூற சிரிப்பலை எழுந்தது.
ஆசிரியர், “சைலென்ஸ்” என்று கத்திவிட்டு பாடத்தை தொடர்ந்தார்.
இவ்வளவு நேரம் ராஜசேகர் கூறியதை பற்றி யோசித்துக் கொண்டிருந்த ஜெனிஷா அவன் தன் மேல் உள்ள அன்பினால் தான் அப்படி பேசினான் என்பதை சரியாக புரிந்துக் கொண்டாள். அவள் மெல்லிய குரலில் ஆஷாவிடம், “ஆஷ்.. ராஜை மலை இறக்க ஒரு ஐடியா சொல்லு”
“…”
ஜெனிஷா எரிச்சலுடன் ஆஷாவிடம், “என்னடி அமைதியா இருக்கிற?”
“நான் இன்னைக்கு மௌன விரதம்” என்று அவள் எழுதி காட்டவும் ஜெனிஷா, “இன்ஸ்டன்ட் முடிவா?” என்று வினவ ஆஷா பாவம் போல் ஆம் என்று தலையை ஆட்டினாள்.
ஜெனிஷா மென்னகை புரிய, அதை பார்த்த ராஜசேகரின் கோபம் கூடியது. தன் கோபத்திற்கு அவளிடம் மதிப்பில்லை என்பதே அதற்கு காரணம். அதே நேரத்தில் அவனை பார்த்த ஜெனிஷா மென்னகை புரிய அவன் திரும்பிக் கொண்டான். 
ஜெனிஷா, “ஷ்..ஷ்,..ஷ்..” என்று சத்தம் கொடுக்க, அதை அறிந்தும் அறியாதது போல் ராஜசேகர் அமர்ந்திருக்கவும் அவள் சிறு சுண்ணத்துண்டு(CHALK-PEICE) எடுத்து அவன் மீது எறிந்தாள். அது சக்திவேல் காது மடல் மேல் படவும் அவன், “ஆ” என்று சிறு அலறலுடன் திரும்பிப் பார்க்க இவளோ பாடத்தை உன்னிப்பாக கவனிப்பது போல் அமர்ந்துக் கொண்டாள்.
எறிந்தது யாரென்று அறிய முடியாமல் சக்திவேல் திரும்பிக் கொண்டதும் மீண்டும் எறிந்தாள். இந்த முறை அவள் சரியாக தான் எறிந்தாள் ஆனால் அவள் எறிந்ததை அறிந்த ராஜசேகர் சற்று குனியவும் சக்திவேல் கழுத்தில் பட்டது. 
“அடிங்க” என்று சிறு கடுப்புடன் அவன் திரும்ப, இந்த முறையும் அவள் அகப்படவில்லை.
இரண்டு நொடிகள் கழித்து சக்திவேல் கவனம் தன்னிடம் இல்லை என்பதை உறுதி செய்த்துக் கொண்டு அவள் எரிய போன நொடியில் சட்டென்று சக்திவேல் திரும்பவிட, அகப்பட்டுக் கொண்ட பதற்றம் ஒரே ஒரு நொடி தான் அவளிடம் இருந்தது. அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டு அவனை பார்த்து இளித்து விட்டு ராஜசேகர் மேல் எறிந்தாள். 
சக்திவேலிடம் அகப்பட்டதால் அவள் ஏறியமட்டாள் என்று அவன் அமர்ந்திருந்ததால் அவன் கன்னத்தில் அது வேகமாக வந்து தாக்கியது. அவன் கோபத்துடன் திரும்ப இவள் புன்னகையுடன் கண்ணடிக்க, அவன் ஒரு நொடி தன்னை மறந்தாலும் அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டு முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டான்.

Advertisement