Advertisement

மழை 21:
மோகனாவின் புன்னகையில் ஆர்லியின் முகம் மேலும் புன்னகையில் விரிந்தது. ஆனால் மோகனா வாய் திறந்து பேசும் முன் மாலினி அவளை முறைத்துவிட்டு வேகமாக செல்ல, மோகனா ஆர்லியை மறந்து, மாலு என்று அழைத்தபடி மாலினி பின்னால் ஓடினாள். ஆர்லியின் முகத்தில் சட்டென்று புன்னகை மறைய பெரும் கோபத்துடன் மனதினுள் மாலினியை திட்டித் தீர்த்தபடி உள்ளே சென்றாள்.
மோகனாவின் கெஞ்சல் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் மாலினி அதை பொருட்படுத்தவே இல்லை, மோகனா முகத்தை பார்க்காமல் அமர்ந்திருந்தாள்.
பிருந்தாவும் நந்தினியும் மாலினியை சமாதானப் படுத்த முயல, மாலினி வரவழைத்த கோபத்துடன், நீங்க இதுல தலை இடாதீங்க” என்று கறாராக கூறினாள்.
வகுப்பில் இருந்த சிலரின் கவனம் இவர்கள் பக்கம் திரும்புவதை நந்தினி சுட்டி காட்டியதும் மாலினி, அவளை அவ கிளாஸ்க்கு போக சொல்லு நந்து”
மோகனா அழுவது போல், மாலு” என்று அழைக்க, மாலினி சுவற்றை வெறித்தபடி, என்னை பிரெண்ட் ஆ நினைத்தால் அவளை இப்பவே கிளாஸ்க்கு போக சொல்லு நந்து” 
மோகனா கண்கள் கலங்க வெளியே சென்றாள்.
மோகனா சென்றதும் மாலினி கண்களை மூடி மூடி திறந்து கண்ணில் துளிர்த்த நீரை சரி செய்தாள்.
நந்தினி, ஏன் டி நீயும் கஷ்டப் பட்டு அவளையும் கஷ்டப் படுத்துற?”
இது அவளுக்கு தேவை”
பிருந்தா, அதுக்குன்னு இப்படியா? இன்னைக்கு தான் காலேஜ் வந்திருக்கா.. பாவம் டி அவ”
மாலினி கசப்பான புன்னகையுடன், நான் மட்டும் சந்தோஷமாவா இப்படி செய்றேன்?” என்று கூறி பெருமூச்சொன்றை வெளியிட்டவள், நந்து நீ போய் அவளை சமாதானப் படுத்தேன் ப்ளீஸ்”
நந்தினி புன்னகைத்து சிறு தலையசைப்புடன் எழுந்து என்றாள்.
படியில் அதிர்ச்சியுடன் நின்றுக் கொண்டிருந்த ஷங்கரை யோசனையுடன் பார்த்தபடி மோகனாவை பார்க்க நந்தினி IT வகுப்பறையை நோக்கி சென்றாள். வகுப்பறையில் தன் இடத்தில் அமர்ந்து, மேஜை மேல் தலை வைத்து மோகனா அழுதுக் கொண்டிருந்தாள்.
அதிர்ச்சியுடன் ஷங்கர் நின்றுக் கொண்டிருந்ததையும், மோகனாவின் அழுகையையும் சேர்த்து யோசித்த நந்தினி மோகனா ஷங்கரிடம் ஏதோ பேசிவிட்டாளோ! அதான் ஷங்கர் அப்படி நின்னுட்டு இருந்தானோ! என்று யோசித்தபடி மோகனா அருகே சென்று அவளது தலையை வருடினாள்.
நிமிர்ந்து பார்த்த மோகனா நந்தினியின் இடையை கட்டிக் கொண்டு அழுதாள்.
CSE வகுப்பறை:
வகுப்பறை உள்ளே வந்த ஷங்கர் நேராக மாலினியிடம் சென்று, மீளாத அதிர்ச்சியுடன், நீ மோனி கிட்ட என்ன சொன்ன?”
ஷங்கரின் முகத்தை பார்த்த மாலினி யோசனையுடன், ஏன்?”
ஷங்கர் புன்னகையுடன் கைகுலுக்குவதற்காக தன் கையை நீட்ட, மாலினி முதலில் விநோதமாக அவனை பார்த்தாள், பிறகு வெளியே வராண்டாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எதற்கென்று புரியாமலேயே ஷங்கருடன் கைகுலுக்கினாள்.
இந்த காட்சியை பார்த்து சில மாணவர்கள் பொறாமையுடன் ஷங்கரை பார்க்க, ஒருவனுக்கு மட்டும் பொறாமை, எரிச்சல், கோபம் என்று வயிறேரிந்தது. நான் சொல்லாமலேயே அது யாரென்று உங்களுக்கு தெரியுமே! ஹ்ம்ம்.. மிகவும் சரி.. அது ஸ்ரீராமனே தான். அவனுக்கு மட்டும் நெற்றி கண் இருந்திருந்தால் இந்நேரம் ஷங்கரை பஸ்பம் ஆக்கியிருப்பான்.
கைகுலுக்கிவிட்டு ஷங்கர், கலக்கிட்ட மாலினி”
என்ன விஷயம்?”
என்னால இன்னமும் கூட நம்ம முடியலை”
ச்ச்.. விஷயத்தை சொல்லு”
எப்படி மாலினி? எப்படி முடிஞ்சுது உன்னால?”
டேய்!”
இன்ப அதிர்ச்சியில் இருந்த ஷங்கர் இயல்பிற்கு திரும்பினான். 
மாலினி, நானே டென்ஷனில் இருக்கிறேன்.. நீ வேற ஏன்டா! ஒழுங்கா விஷயத்தை சொல்லு”
ஷங்கர் கூறினான்……..
முதல் தளத்தை வந்தடையும் படியில் ஷங்கர் ஏறிக் கொண்டிருந்த போது, இரண்டாம் தளத்திற்கு செல்லும் படியில் மோகனா ஏறிக் கொண்டிருந்தாள். (அதாவது ஷங்கர் ஏறிக் கொண்டிருந்த படியின் முடிவில் ‘U’ வடிவில் திரும்பினால் மோகனா ஏறிக் கொண்டிருக்கும் படியின் தொடக்கம்)
முதல் தளத்திலிருந்து அவசரமாக வந்த ஆர்லி “மோனி.. மோனி” என்று அழைத்தபடி இரண்டாம் தளத்திற்கு செல்லும் படியில் ஏறினாள். ஆர்லியின் அழைப்பில் சட்டென்று நிமிர்ந்து பார்த்த ஷங்கர் வேகமாக, இரண்டிரண்டு படிகளாக ஏறினான்.
ஆர்லியின் அழைப்பில் திரும்பிய மோகனா கலங்கிய விழிகளுடன் கோபமாக, உன்னால தான்.. உன்னால.. தான்.. எல்லாம்.. உன்னால தான் மாலு என் கூட பேச மாட்டிக்கிறா! நீ என் கூட பேசவே பேசாத.. எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கலை.. பேசாத..” என்று கூறி ஆர்லியின் முகத்தை திரும்பிப் பார்க்காமல் வேகமாக படியில் ஏறி சென்றுவிட்டாள்.
அதிர்ச்சியுடன் நின்ற ஆர்லி இரண்டே நொடிகளில் தன்னை சமாளித்து சுற்றிப் பார்த்தாள். அதிர்ச்சியுடன் நின்றுக் கொண்டிருந்த ஷங்கரையும், வகுப்பறை வெளியே வந்த நந்தினியையும் பார்த்தவள் அவசரமாக மேலே ஏறிச் சென்றாள்.  நந்தினி மோகனாவை பார்க்க தான் வருகிறாளோ என்ற சந்தேகத்தில் தன் வகுப்பிற்கு செல்லாமல் வேறு வழியாக கீழே இறங்கி ECE வகுப்பறைக்கு சென்றாள்.
ஷங்கர் மீண்டும் உற்சாக குரலில், எபப்டி மாலினி! மோனிக்கு கோபம் வரும் னு நான் கனவுல கூட நினைக்கலை”
மாலினி புன்னகையுடன், ரொம்ப சந்தோஷப் படாத.. இது டெம்ப்ரரி கோபம் தான்.. இதை நினைச்சு அசால்ட்டா இருந்துறாத.. மோனியை பத்திரமா பார்த்துக்கோ.. அவ ஒரு குழந்தை மாதிரி தான்.. குழந்தைகளுக்கு சட்டுன்னு கோபம் வரும் சட்டுன்னு கோபம் போய்டும்……………………………”
ஐயோ”
என்ன?”
மோனியை தனியா விட்டுட்டு வந்துட்டேனே! நேத்து நீ படிச்சு படிச்சு சொன்னியே!”
ரிலாக்ஸ்.. இப்போ மோனி கூட நந்தினி இருப்பா.. ஸோ டென்ஷன் ஆகாத பட் இனி……………”
ஹ்ம்ம்.. இப்படி நடக்காது.. சாரி மாலினி”
பரவால விடு”
அகேன் சாரி”
இது எதுக்கு?
நேத்து……..”
மாலினி சிறு புன்னகையுடன், லீவ் இட்”
இல்ல மாலினி.. நேத்து நான் சொன்ன விஷயம் ப்ரக்டிகலி ட்ரூ தான் பட் அதை சொன்னப எனக்குள்ள, ‘மோனி பத்தி எனக்கும் எல்லாம் தெரியும்னு ஒரு மிதப்பு இருந்துது.. பட்……………”
உனக்கும் தெரியும் தான்.. இன்ப அதிர்ச்சில கொஞ்சம் தடுமாறிட்ட.. தட்ஸ் ஆல்”
இல்ல………..”
நந்தினி தனியா எவ்ளோ நேரம் தான் சமாளிப்பா! நீ போய் உன்(அழுத்தத்துடன் கூறினாள்) மோனியை சமாளி”
ஹ்ம்ம்.. ஓகே.. தன்க் யூ” என்று கூறி தன் வகுப்பிற்கு சென்றான்.
ஷங்கர் வகுப்பறை உள்ளே நுழைந்ததும்மோகனா உற்சாக குரலில், ஹாய் ஷங்கர்! குட் மார்னிங்!” என்றாள்.
ஷங்கர் விரிந்த புன்னகையுடன், குட் மார்னிங்” என்றான்.
(நந்தினி புன்னகையுடன் கிளம்பி தன் வகுப்பிற்கு சென்றாள்)
மோகனா, ஏய்! ஒழுங்காவே சொல்ல மாட்டியா?”
என்ன!”
நான் எப்படி குட் மார்னிங் சொன்னேன்?”
எப்படி?”
ஹாய் ஷங்கர்! குட் மார்னிங் னு சொன்னேன்.. அப்போ நீ எப்படி சொல்லணும்?”
ஷங்கர் அவளது பேச்சை ரசித்தபடி புன்னகையுடன், எப்படி சொல்லணும்?”
உனக்கு ஒன்னுமே தெரியலை! நான் தான் சொல்லி குடுக்க வேண்டியதிற்கு”
ஷங்கர் மனதினுள், நேரம் தான் என்று கூறி கொண்டு, அவளிடம், சரி சொல்லிக் கொடு”
மோகனா தன் தலையில் அடித்து, உனக்கே ஒன்னும் தெரியலை.. இதுல மாலு என்னடா னா.. எனக்கு தெரியலை னா உன்னிடம் கேட்க சொல்றா!”
ஷங்கர் மனதினுள், ஹே! செல்லக்குட்டி நீ இவ்ளோ பேசுவியா! என்று நினைத்துக் கொண்டு, எனக்கும் தெரியும் நீ என்ன சொல்ற னு பார்க்க தான்………….”
சொல்றதை கேட்க தான் முடியும்.. ஐயோ! ஐயோ!” என்று சிரித்தவள், சரி உனக்கு தெரியும்னா நீயே சொல்லு”
ஷங்கர் புன்னகையுடன், ஹாய் மோனி(மனதினுள் செல்லம்‘).. குட் மார்னிங்.. என்ன கரெக்ட்டா சொல்லிட்டேனா!”
மோகனா புன்னகையுடன், ஹ்ம்ம்… கரெக்ட்.. அப்போ ஏன் பஸ்ட்யே சொல்லலை?” என்று கேட்டவள் அவன் பதில் கூறும் முன் அவளே, ஓ.. நான் என்ன சொல்றேன் னு கேட்க..ஹ்ம்ம்.. இல்ல.. பார்க்க அப்படி சொன்னியா!” என்று பதிலை கூறி புன்னகைத்தாள்.
ஷங்கருக்கு அவளை மென்மையாக அணைத்து என் செல்லக்குட்டிஎன்று கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. 24 மணிநேரமும் அந்த சிரிப்பை ரசித்துக் கொண்டே இருக்கவேண்டும் போல் தோன்றியது.
இவை அனைத்தையும் மன-எரிச்சலுடனும் கொதிப்புடனும் பார்த்தபடி தன் இடத்தில் அமர்ந்தாள் ஆர்லி.
பிருந்தா புன்னகையுடன், இனி ஷங்கருக்கு ஆர்லி மட்டும் எதிரி இல்லை”
மாலினி, என்ன?”
நம்ம க்ளாஸ் பசங்க பலர் அவனுக்கு எதிரி இப்போ”
என்ன சொல்ற?”
உன் கூட எவ்ளோ ஈஸியா கைகுலுக்கிட்டு போறான்!!!!!”
ஓ” என்று மாலினி புன்னகைத்தாள்.    
சிம்பிள் ஆ ஓ சொல்ற?”
வேற என்ன சொல்ல?”
பிருந்தா மாலினி அருகே நகர்ந்து அவளது காதருகில், எந்த நேரத்திலும் ஜொள்ளுஎன்ற புயல் நம்மிடத்தில் மையம் கொள்ளலாம்”
அது புயல் இல்லைடி வெள்ளம்.. கேரளா வெள்ளத்தை விட பெருசு”
ஹ்ம்ம்.. அது சரி தான்” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், ஸ்ரீராமன் எழவும், நான் சொல்லலை! இவனுக்குலாம் சூடு சுரணையே கிடையாதாடி!”
அவனிடமே கேட்க வேண்டியதானே!”
பிருந்தா பதில் கூறும் முன், ஸ்ரீராமன், மாலு” என்று அழைத்தபடி புன்னகையுடன் நின்றான்.
மாலினி சிறு கோபத்துடன், எத்தனை முறை சொன்னாலும் உன் மண்டைல ஏறவே ஏறாதா? டோன்ட் காள் மீ மாலு”
ஸ்ரீராமன் அசடு வழிய, பிருந்தா, ஒரு வேலை சாருக்கு இங்கிலீஷ் புரியலையோ என்னவோ!”
ஸ்ரீராமன் பிருந்தாவை முறைத்துவிட்டு, மாலினியிடம் புன்னகையுடன், அப்படிலாம் இல்லை.. ஐ நொ இங்கிலீஷ்”
பிருந்தா, ஐ கேன் வாக் இங்கிலீஷ், டாக் இங்கிலீஷ், லாஃப் இங்கிலீஷ் னு சூப்பர் ஸ்டார் சொன்னது போல் இல்ல”
ஸ்ரீராமன் தன் கோபத்தை அடக்கி பிருந்தாவை பார்த்து புன்னகையுடன், தன்க் யூ” என்றான்.
பிருந்தா, எதுக்கு?”
சூப்பர் ஸ்டார் கூட என்னை கம்பர் பண்ணதுக்கு”
பிருந்தா தலையில் அடித்துக் கொள்ள, மாலினி, வெளிய சொல்லிடாத”
ஏன் மாலு?”
மாலினி அவனை முறைக்கவும், ஏன் மாலினி?” என்று மாற்றினான்.
ஹ்ம்ம்.. இந்த விஷயம் சூப்பர் ஸ்டாருக்கு தெரிஞ்சு, அவர் சூசைட் பண்ணிகிட்டா கொலை முயற்சி னு உன்னை போலீஸ் பிடிச்சுர போகுது”
ஸ்ரீராமன் புன்னகையுடன், என் மேல் அக்கறையா நீ சொல்றப்ப அதை நான் தட்டுவேனா!”
நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும்” என்று மாலினி கூற, பிருந்தா, சார் எதுக்கு வந்தாரு னு கேளு மாலு”
ஸ்ரீராமன் அசடு வழிந்தபடி, அது வந்து..” என்று யோசித்து, “ஹாம்.. உன் மேக்ஸ்(Maths) நோட் தாயேன்”
மாலினி, எதுக்கு?”
ஒரு டவுட்”
மாலினி, மூர்த்தி” என்று அழைத்தாள்.
ஸ்ரீராமன் அவனை எதுக்கு கூப்பிடுற?’ என்று மனதினுள் நினைக்க, கிருஷ்ணமூர்த்தி மாலினியை திரும்பிப் பார்த்தான்.
மாலினி, இவனுக்கு மேக்ஸில் டவுட்-ஆம்.. கொஞ்சம் கிளியர் பண்றியா?”
கிருஷ்ணமூர்த்தி பதில் கூறும் முன் ஸ்ரீராமன் அவசரமாக, உன் நோட் பார்த்தா புரிஞ்சுடும்.. உன் நோட் போதும்”
அவன் தான் மேக்ஸ்ஸில் புலி.. நீ அவனிடமே கேட்டுகோ”
எனக்கு புலியெல்லாம் வேணாம்” என்று ஸ்ரீராமன் கூறிக் கொண்டிருக்க
மாலினி கிருஷ்ணமூர்த்தியை பார்த்தாள். அவன் எழுந்து வந்து ஸ்ரீராமன் தோள் மீது கைபோட்டு, என்ன டவுட் டா? நான் கிளியர் பண்றேன்” என்று பேசியபடி அவனை அழைத்துச்(இழுத்துச்) சென்றான்.
பிருந்தா புன்னகையுடன், அண்ணனும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.. இருவரும் நோக்கி நோக்கி..
கண்ணும் கண்ணும் நோக்கியா..
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா
சொஃபியாயாயா” என்று பாடத் தொடங்கினாள்.
எப்பா! உன் தொல்லை பெரும் தொல்லைடி”
நாங்க தொல்லை யா! உனக்கு மூர்த்தியை தவிர எல்லோரும் தொல்லை தான்”
ச்ச்”
அது எப்படி டி! மேடம் கண்ணசைவில் செயல் படுறான்? பெயர் கிருஷ்ணனாச்சே! அதான் ஆபத்பாந்தவனா வந்து ஹீரோயினை காப்பாத்திட்டார்”
மாலினி கோபத்துடன், ஸ்டாப் இட் பிருந்தா.. திஸ் இஸ் தி லிமிட்”
இப்படிலாம் கத்தினா பயப்பட நான் மோனி இல்லை மேடம்”
மாலினி ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினாள். பிருந்தா அந்த புத்தகத்தை பிடுங்க, மாலினி கோபமாக அவளை முறைத்தாள், பிருந்தா புன்னகை மறைய அமைதியாக புத்தகத்தை கொடுத்தாள்.
பிருந்தா மனதினுள், கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ! ச்.. பரவால.. எவ்ளவோ சமாளிச்சுடோம் இத சமாளிக்க மாட்டோமோ! ஆனாலும் இவ மனசுக்குள்ள என்ன இருக்குதுனே தெரியலையே! என்று நினைத்துக் கொண்டவள் சில நொடிகள் மைதியாக இருந்தாள், பிறகு திடிரென்று “மாலு” என்று அழைத்து, “6” என்றாள்.
மாலினி புரியாமல் பார்க்க, பிருந்தா, இல்ல.. பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொன்னா உன் நெஞ்சுக்குள்ள யாரென்று சொல்வாயோ னு”
மாலினி கோபமாக முறைக்க, பிருந்தா, ஓகே..ஓகே.. கூல்.. கூல்.. மீ பாவம்.. ஸோ நோ கண்ணகி அவதாரம்..” என்று கூற, அவள் கூறிய விதத்தில் சிரிப்பு வந்தாலும், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு புத்தகத்தில் மீண்டும் பார்வையை திருப்பினாள்.
பிருந்தா, வட போச்சே!” என்று கூற, அங்கே வந்த நந்தினி, என்னடி?” என்று வினவினாள்.
பிருந்தா, அது ஒரு பெரிய கதை.. அதை அப்பறமா சொல்றேன் நீ மோனி பத்தி சொல்லு” என்று கதை கேட்கும் ஆர்வத்துடன் அவளை பார்த்தாள்.
மாலினி, நந்து என் பக்கத்துல நீ உட்கார்” என்றாள்.
நந்தினி இருவரையும் மாற்றி மாற்றி பார்க்க, பிருந்தா வலதுகை சுட்டுவிரலை தன்னை நோக்கி வைத்துக் கொண்டு, இந்த அவமானம் உனக்கு தேவையா?” என்றாள்.
நந்தினி பிருந்தாவிடம், “என்னடி பண்ண?”
ஏன் அதை அவ கிட்ட கேட்க மாட்டியோ!”
நீ தான் ஏதோ பண்ணிருப்ப?”
நான் ஒன்னும் பண்ணலை.. உண்மையை சொன்னா……………………” மாலினியின் முறைப்பில் அவளது பேச்சு நின்றது.
பிருந்தா மனதினுள், இதை தான் சொந்த காசுல சூனியம் வச்சுகிறது னு சொல்வாங்களோ.. மலை இறங்கிட்டு இருந்தவளை உன் வாயால மீண்டும் மலை ஏத்திட்டியே பிருந்து!
நந்தினி, என்னடி பண்ண?” என்று அதட்டலாக கேட்டாள்.
பெருசா ஒன்னுமில்லை.. ஜஸ்ட் சின்னதா ஒன்னு சொன்னேன்”
மாலினி, நந்து மோனி பத்தி நீ சொல்லு”

Advertisement