Advertisement

மழை 20:
ராஜசேகர்-ஜெனிஷா ஊடல் தொடர்ந்தது.
மதிய இடைவேளையில் மாலினி தன் கைபேசியில் ஏதோ செய்து கொண்டிருக்கவும், பிருந்தா, “என்ன பண்ற?”
“மூர்த்தி ஏன் வரலை னு மெசேஜ் பண்ணிட்டு இருக்கிறேன்”
“மாட்டுனியா!”
“என்ன லூசு சொல்ற?”
“உண்மையை சொன்னா நான் லூசா?”
“முதல்ல உண்மை என்னன்னு சொல்லு”
“யாரோ பிரெண்ட் பிரெண்டுனு சொன்னாங்க பா ஆனா யாருக்கும் தராத அவங்க நம்பரை அந்த ஸ்பெஷஷஷல் பிரெண்டிற்கு மட்டும் தந்திருக்காங்க”
“கரெக்ட்.. அவன் ஸ்பெஷல் பிரெண்ட்(அழுத்தம் கொடுத்து கூறினாள்).. அதான் தந்தேன்”
“ஏய்.. உண்மையை சொல்லு”
“அதான் சொல்லிட்டேனே”
“மாலு!!!!!!!!!!!!!!”
“போடி லூசு.. உனக்கு சொன்னால் புரியாது.. நீ எத்தனை முறை கேட்டாலும் சரி எப்படி கேட்டாலும் சரி மூர்த்தி என் பிரெண்ட் மட்டும் தான்”
“அது என்ன எனக்கு புரியாது?”
“புரியாது தான்”
“இரு நாளைக்கு நந்து வரட்டும்”
“அவளுக்கு நான் சொல்றது தெளிவா புரியும்”
“அவளுக்கு புரியும், எனக்கு புரியாதா?”
“ஜில்லு நீ சில விஷயத்தில் டியுப் லைட் தான்”
“நந்தினி மட்டும் எல்லா விஷயத்திலும் ப்ரைட்டோ!”
“நீ எதை மீன் பண்றே னு தெரியுது.. நீ நினைப்பது போல் இல்லை.. அவளுக்கு எல்லாம் புரியும் பட் புரியாதது போல் இருந்துப்பா.. அவ்ளோ தான்”
“அப்படியா சொல்ற?”
“அப்படியே தான்”
“ஹ்ம்ம்” என்று தலையை ஆட்டியவள், “ஹே.. டாபிக் மாத்திட்ட.. உண்மையை……………….”
“என்னை படுத்தாதடி” என்று கூறியபடி தன் கைபேசியை பார்க்க, பிருந்தா அவளது கைபேசியை பிடுங்கி பார்க்க, மாலினி சிறு கோபத்துடன், “பிருந்தா அதை கொடு”
“இரு.. இரு.. பார்த்துட்டு தரேன்” என்று கூறியபடி மாலினியின் கையை தட்டிவிட்டபடி கைபேசியில் வந்த குறுஞ்செய்தியை அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் படித்தாள்.
‘மூர்த்தி’ என்ற பெயரில் இருந்த அந்த குறுஞ்செய்தி – “அஞ்சு நிமிஷம் லேட்டா வந்தேன்னு வாட்ச்-மேன் ரொம்ப ரூல்ஸ் பேசினான்.. கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.. ஒரு விஷயம் மாலினி – டொக்கு டொக்கு னு தட்டி மெசேஜ் அனுப்புறது எனக்கு பிடிக்காது.. ஸோ மெசேஜ் பண்ணாத.. ரிப்ளை பண்ண மாட்டேன்”
பிருந்தா, “ரொம்ப தான் ஸீன் போடுறான்டி”
“அவன் என்னவும் பண்ணிட்டு போறான்.. முதல்ல என் செல்லை தா” என்று கூறி கைபேசியை பிடுங்கினாள்
பிருந்தா, “பார்க்க தானே போறேன்”
மாலினி மனதினுள், ‘இருந்தாலும் கொஞ்சம் ஓவர் தான்.. இப்படியா மூஞ்சுல அடிச்சது போல் சொல்றது!’ என்று கூற அவளது மனசாட்சி, ‘நீ மட்டும் என்ன செய்வியாம்?’
‘நான் பிரெண்ட்ஸ் கிட்ட இப்படி ஒன்னும் பட்டுன்னு சொல்ல மாட்டேன்.. கொஞ்சம் பாலிஷ்டா தான் சொல்வேன்’ .என்று தன் மனசாட்சியிடம் சொன்னவள் வீட்டிற்கு சென்ற பிறகு அவனிடம் பேச(திட்ட) வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
ஆஷா, “என்ன தான்டி பிரச்சனை? நானும் காலையில் இருந்து கேட்டுட்டு இருக்கிறேனே!”
ஜெனிஷா, “ஹ்ம்ம்.. நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டா நான் தான் ஜெனி இல்லையே!”
“நிஷா இப்போ ஜெனி யா மாறிடிச்சாக்கும்!”
“மூடிட்டு உன் வேலையை பார்”
“வாட்ச்-வுமன் வேலையா!”
ஜெனிஷா முறைக்கவும் ஆஷா அமைதியானாள்.
அதே நேரத்தில் சிவகுரு, “விடுடா மச்சான்.. பார்த்துக்கலாம்” என்று ராஜசேகரிடம் கூறிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் பரபரப்பாக வந்த ராகேஷ் மேடை மேல் ஏறி, “பிரெண்ட்ஸ்.. ஸ்பை ஸ்குவார்ட் வர போறாங்க.. மொபைல் ரைட்.. நேரமில்லை.. சீக்கிரம் எல்லோரும் மொபைலை ஸ்விட்ச் ஆப் பண்ணி ஒரு பேபரில் சுத்துங்க.. பேப்பர் மேல் உங்க பெயரை எழுதுங்க.. சைலென்ட் மோட் கூட வேண்டாம்.. ஸ்விட்ச் ஆப் பண்ணிடுங்க.. ஹ்ம்ம்.. குய்க்.. குய்க்…” என்று அதி வேகமாக கட்டளைகளை பரப்பினான். 
எல்லோரும் அவன் சொன்னதை செய்ய தொடங்க, அவன், “கேர்ள்ஸ் யாராச்சும் ஐந்து பேர் மட்டும் உங்கள் டிஃப்பன் பாக்ஸ் பேப்பரால் கிளீன் பண்ணுங்க..  அதே மாதிரி பாய்ஸ் ஐந்து பேர் பண்ணுங்க.. கம் ஆன்.. ஹர்ரி அப்” என்று அவசரபடுத்தினான்.
அவன் கூறியது போல் அனைவரும் செய்ததும், வேக வேகமாக உணவு டப்பாக்களை எடுத்து கைபேசிகளை அதனுள் அடைத்து, டப்பாக்களை மேடை அடியில் தள்ளியவன் அவசரமாக தன் இடத்தில் அமரவும் ஸ்பை-ஸ்குவார்ட் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அவர்கள் வந்த பிறகு தான் சக்திவேல் வந்தான். அனீஸ் வாய் திறக்கும் முன் ஸ்பை-ஸ்குவார்ட் அனைவரையும் வெளியே வர சொன்னார்கள். ஸ்பை-ஸ்குவாட்-யை சேர்ந்த சிலர் வகுப்பின் உள்ளே இருந்த மாணவர்களது பைகளை சோதனை செய்ய மற்றவர்கள் வெளியே நின்ற மாணவர்களை சோதனை செய்தனர்.
ஒரு கைபேசி கூட கிடைக்கவில்லை என்ற ஆச்சரியத்துடன் அவர்கள் அடுத்த வகுப்பை நோக்கி சென்றனர்.
மாணவர்கள் சிரிப்புடன் வகுப்பறையினுள் சென்றனர். ராகேஷ் தன் இடத்தில் நின்று, “பிரெண்ட்ஸ்.. இப்ப யாரும் மொபைலை எடுக்க வேண்டாம்.. இன்டர்வெல் டைமில் பார்த்துட்டு எடுத்துக்கலாம்.. இல்லை வீட்டிற்கு போகும் முன் எடுத்துக்கலாம்”
பசங்க, “கலக்கிட்ட மச்சான்” என்று மகிழ்ச்சியுடன் கூறி கை குலுக்க, மாணவிகள் தங்களுக்குள் அவனை பாராட்டினர்.
அனீஸ் சக்திவேலிடம், “நீ இன்னைக்கு மொபைல் கொண்டு வரலையா?”
“கொண்டு வந்திருக்கிறேனே!”
“அப்பறம் எப்டி டா எஸ் ஆன!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!”
புன்னகையுடன் சக்திவேல் தனது சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டு, “எல்லாம் அய்யாவோட திறமை டா” என்று கூறியபடி கையில் இருந்த புத்தகத்தை திறந்தான்.
அந்த புத்தகத்தின் நடு பக்கங்களில் கைபேசியின் வடிவத்திற்கு ஏற்றார் போல் ஓட்டை இருக்க, அதனுள் கைபேசி இருந்தது.
அனீஸ், “அட பாவி” என்று வாயை திறக்க, சக்திவேல் சிரித்தான்.
அனீஸ், “புது புக் டா.. இப்படி வேஸ்ட் பண்ணிட்டியே!”
“எப்படியும் படிக்க போறதில்லை.. அட்லீஸ்ட் இதுக்காவது உதவட்டுமே!”
“ஹ்ம்ம்” என்றபடி புத்தகத்தை பார்த்த அனீஸ், “லைப்ரேரி புக் மாதிரி தெரியுது!”
“லைப்ரேரி புக்கே தான்”
“திருப்பி குடுக்கும் போது அந்த குள்ளன்(லைப்ரேரியன்) கேட்பானே! என்ன சொல்லுவ?”
“திறந்து பார்த்தா தானே!”
“பார்த்துட்டா?”
“குட் குவெஸ்டீன்.. என்ன பதில் சொல்றதுன்னு இப்போவே யோசிக்க ஆரம்பி”
“நான் ஏன் டா யோசிக்கணும்?”
“ஏனா.. இந்த புக் உன் கார்டில் எடுத்தது”
“அட நாதாரி” என்று அனீஸ் கெட்ட வார்த்தைகளில் திட்டியபடி சக்திவேலை அடிக்க தொடங்கினான்.
“வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்! ஆர் யூ ஸ்கூல் கிட்ஸ்” என்ற சைக்கோவின் குரலில் அனீஸ் அடிப்பதை நிறுத்திவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு எழுந்தான். சக்திவேல் அவனுக்கு மேல் ஒன்றும் அறியாத அப்பாவி சிறுவனின் முக பாவத்துடன் எழுந்து நின்றான். சைக்கோ இருவரையும் ஆங்கிலத்தில் சிறிது வசை பாடிவிட்டு வெளியே நின்று கவனிக்க சொல்லிவிட்டு வகுப்பை தொடங்கினார்.
இருவரும் வகுப்பின் வாயிலில் நின்று ஒருவரை ஒருவர் பார்த்தனர். அந்த பார்வை, “‘H.O.D ஆனதில் இருந்து துரை இங்க்லீஷில் பேசியே கொல்லுது” என்று கூறியது.
அதன் பிறகு வழக்கம் போல் திட்டோடும் இம்போசிஷனோடும் வகுப்பு சென்றது.
மாலை வீட்டிற்கு சென்ற பிறகு மாலினி கிருஷ்ணமூர்த்தியை அழைத்தாள்.
கிருஷ்ணமூர்த்தி, “ஹலோ”
“ஏன் அப்படி மெசேஜ் அனுப்பின?”
“எப்படி அனுபினேன்?”
“ரிப்ளை பண்ண மாட்டேன்னு!”
“அந்த மெசேஜே முதல் முறை னு தான் அனுப்பினேன்”
“அதுக்குன்னு இப்படியா அனுபுவ?”
“ஏன்? அதுக்கு என்ன?”
“என்ன வா?”
“ஆமா! எனக்கு லொட்டு லொட்டு னு தட்டி மெசேஜ் அனுப்புறது கொஞ்சம் கூட பிடிக்காது.. அதுக்கு போன் பண்ணி பேசிடுவேன்”
“சோம்பேறி”
“எனக்கு பிடிக்காது அவ்ளோ தான்”
“உன் சோம்பேறி தனத்தை மறைக்க இப்படி சொல்ற!”
“இருக்கலாம்.. அதில் உனக்கு என்ன பிரச்சனை? ஏதோ முதல் முறைன்னு உனக்கு பதில் அனுப்பினேன்.. இனி அனுப்பாதே பதில் வராது”
“கிளாஸ்ஸில் மெசேஜ் தானே அனுப்ப முடியும்”
“அதுக்கு நான் ஒன்றும் பண்ண முடியாது”
“மாத்திக்கோ”
“எதுக்கு மாத்தனும்?”
“எதுக்கு னா!”
“எதுக்குனா எதுக்கு தான்”
“போடா லூசு”
ஒரு நொடி சிறிது அதிர்ந்தவன் பின் புன்னகையுடன், “அதை ஒரு லூசு சொல்ல கூடாது”
“ஹும்ம்ம்”
“இதோ பாரு மாலினி………………..”
“போனில் பார்க்க முடியாது”
“ஏன் முடியாது! வீடியோ காளில் பார்க்கலாமே!”
“அய்யோடா! எங்களுக்கு தெரியாததை சொல்லிட்டார்”
“உனக்கு தெரியாதுன்னு சொன்னேனா?”
“அப்போ எதுக்கு சொன்ன?”
“நீ சொன்னதில் சிறு திருத்தம் செய்தேன்”
“நீர் நக்கீரர் பரம்பரையோ!!!”
வாய்விட்டு சிறிது சிரித்தவன், “எனக்கு மெசேஜ் அனுப்புறது பிடிக்காது.. அவ்ளோ தான்.. அல்ரெடி என் தங்கையும் அக்காவும் மாற்ற முயற்சித்து முடியாம விட்டுட்டாங்க.. ஸோ நீ முயற்சி பண்ணாதே!”
“என்னவோ போ! சரி இன்னைக்கு ஏன் லேட்?”
“லேட் ஆகிருச்சு.. ஏதும் முக்கியமான கிளாஸ் நடந்ததா?”
“ஹ்ம்ம்.. PDS மேம் நடத்துனாங்க” என்று கூறி சிறிது நேரம் பாடத்தை பற்றி பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
இரவு உணவை முடித்துவிட்டு ஷங்கரிடம் தன் தந்தையின் கைபேசியில் இருந்து பேசினாள். ஆர்லி பற்றி மோகனா கூறிய அனைத்தையும் கூறினாள்.
“மோனியை பத்திரமா பார்த்துக்கோ” என்று அவள் பல முறை கூறவும் ஒரு கட்டத்தில் அலுத்துப் போனவன், “மாலினி! நீ மோனியோட பெஸ்ட்-எவர் பிரெண்டா இருக்கலாம் பட் உன்னை விட அவள் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்”
“அது எப்…………………”
“பிரக்டிகலா யோசிச்சு பாரு.. நீ மோனி கூடவே இருக்க முடியும் என்பது உன் மரேஜ் வரை தான் பட் நான்.. அவளின் வாழ்நாள் வரை கூடவே இருந்து பார்த்துப்பேன்.. ஸோ நீ கவலை படாதே!”
“ஹ்ம்ம்” என்று சுருதி இறங்கி கூறியவள், “ஓகே.. பை.. குட் நைட்” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
அவன் கூறிய உண்மை மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் அவனது அன்பில் மோகனா பற்றிய கவலை சற்று குறைந்து நிம்மதியாக உறங்கினாள்.
ஆஷா தன் கைபேசில் ராஜசேகரை அழைத்தாள்.
ராஜசேகர், என்ன ஆஷ் இந்த நேரத்தில்?”
உனக்கும் ஜெனிக்கும் என்ன பிரச்சனை?”
அதை அவளிடமே கேட்க வேண்டியதானே!”
இதையே தான் அவளும் சொல்றா”
“….”
படுத்தாம நீயாது விஷயத்தை சொல்லு”
“..”
“எதில் ஒற்றுமை இருக்குதோ இல்லையோ! ரெண்டு பேருக்கும் என்னை படுத்துறதில் நல்லாவே ஒற்றுமை இருக்கிறது”
சேகர் சிரிக்கவும் அவள் கடுப்புடன், “டேய் கடுப்பை கிளப்பாதே”
“சரி.. நான் சிரிக்கலை” என்று அவன் கூறினாலும் அவன் சிரிப்பு சத்தம் இவளுக்கு கேட்கவும், அவள், “இப்போ விஷயத்தை சொல்ல போறியா இல்லையா?” என்று சிறு கோபத்துடன் கேட்டாள்.
இல்ல ஆஷ்.. நான் சொன்னா சரிவராது.. அவ சொல்லணும் னு நினைச்சா சொல்லட்டும்..”
ஏன் டா நீயும் படுத்துற?”
உனக்கே நிஷா பத்தி தெரியும்.. நீ அவளோட க்ளோஸ் பிரெண்ட் அப்படி இருந்தும் அவ சொல்லாத விஷயத்தை நான் சொன்னா.. அது சரி வராது…. நான்.. என்ன…………………………”
நீ இந்த விஷயத்தை சொன்னா, அவளை விட என்னிடம் க்ளோஸ் ஆகிட்ட னு கோபம் வரும் னு சொல்ல வரியா?”
ஹ்ம்ம்..”
இவ்ளோ லவ் இருக்குது தானே! அப்புறம் என்ன டஷ்-க்கு ஈகோ உனக்கு?”
எனக்கென்ன ஈகோ?”
ஈகோ இல்லாமையா அவளை சமாதானப் படுத்தாம இருக்க?”
நான் முயற்சி பண்ணலை னு உனக்கு தெரியுமா?”
என்ன பண்ண?”
என் கோபம் பஸ்ட் ஹவர் வரை கூட இல்லை.. அவளிடம் பேச முயற்சி பண்ணா! தெரிந்தும் தெரியாதது போல் இருந்தது அவ தான்.. எவ்ளோ முயற்சி பண்ணியும், அதை மதிக்காம, லஞ்ச் நேரத்தில் வேணும் னு ECE கிளாஸ் போய் சாப்பிடுறா.. எனக்கு கோபம் வருமா வராதா?”
ஹ்ம்ம்.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு கிறிஸ்டி(ECE) கூட சாப்பிட்டதை வைத்து தான் உங்களுக்குள் பெரிய பிரச்சனையோ னு கேட்டேன்..”
இப்போ கூட போன் பண்ணேன் எடுக்கலை”
இதுக்கு என்ன தான் தீர்வு?”
முடிவு கட்டுறேன்..”
என்ன பண்ண போற?”
வெயிட் அண்ட் ஸீ”
என்னவோ பண்ணு.. ஊடல் போய் கூடல் வந்தா சரி”
ராஜசேகர் புன்னகையுடன் அழைப்பை துண்டித்தான்.
அடுத்த நாள் காலையில் மாலினி, அருணா இன்னைக்கு என்னையும் மோனியையும் காலேஜில் ட்ராப் பண்ணனும் னு சொன்னேனே.. கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க? போய் குளிங்க”
அருணாசலம் புன்னகையுடன் செய்தித்தாளை மூடிவிட்டு எழும்ப, மாலினியின் முதுகில் புஷ்பா ஒரு அடி வைத்தார்.
மாலினி முதுகை தடவியபடி, பின்னால் இருந்து தாக்குறது வீரனுக்கு. ஓ நீ லேடியோ.. அப்போ வீராங்கனைக்கு அழகல்ல புஷ்”
ஆமா இது போர்க்களம் பாரு.. அப்பாவை பேர் சொல்லி கூப்பிடாத னு எத்தனை முறை சொல்றேன்”
நானும் எத்தனை முறை சொல்றேன்.. நான் இப்படி தான் பேசுவேன் னு.. அக்சுவளி புஷ்.. உன்னால தான் இது.. முன்னாடிலாம் எப்பவாது தான் பேர் சொல்லி கூப்பிடுவேன்.. இப்போ உனக்காகவே பேர் சொல்லி கூப்பிட தோணுது.. ஒருமையில் கூட பேச தோணுது”
புஷ்பா முறைக்க, மாலினி, இந்த பாசமான லுக் எல்லாம் உன் டார்லிங் கிட்ட வச்சுக்கோ”
புஷ்பா மீண்டும் அடிக்க வர மாலினி அடியில் இருந்து தப்பித்து ஓடினாள்.
(எல்லோரும் ஜோரா கை தட்டுங்க பா.. நம்ம மோனி செல்லம் காலேஜ் கிளம்பிட்டா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)
காரில் செல்லும் போது, மாலினி, என்ன மோனி சொல்லிட்டு இருக்க?”
நீ சொன்னதை தான் எனக்கு நானே சொல்லிட்டு இருக்கிறேன்”
என்னது?”
செல்வா நல்லவன், ஷங்கர் என் பெஸ்ட் பிரெண்ட், ஆர்லி கூட பேச கூடாது”
மாலினி சொல்வதறியாது புன்னகைத்தாள்.
காரை விட்டு இறங்கியதுமே மோகனாவிற்கு சோதனை தொடங்கியது..
மாலினி தந்தையுடன் ஏதோ பேசிக்கொண்டிருக்க, சற்று தள்ளி நின்று கல்லூரியை ஆர்வத்துடன் மோகனா பார்த்துக் கொண்டிருந்த போது, ஹாய் மோனி..” என்ற உற்சாக குரலுடன் ஆர்லி அவளை நெருங்கினாள்.
என்ன தான் ஸ்ரீராம ஜெயம்போல் ஆர்லி கூட பேச கூடாது என்று சொல்லிக் கொண்டே இருந்தாலும், ஆர்லி புன்னகையுடன் வந்ததும் மோகனாவால் ஆர்லியை ஒதுக்க முடியவில்லை, மோகனாவும் புன்னகைத்தாள்.
மழை தொடரும்….

Advertisement