Advertisement

சாரல் 2:

ஒருவழியாக CSE-IT மாணவர்கள் செட்டிலானார்கள். அப்போது ஒரு ஆசிரியை வகுப்பறையினுள் நுழைந்தார்.

மாணவர்கள் யாரும் எழும்பாமல் இருக்கவும், “ஒரு staff உள்ளே வந்தா எழுந்து விஷ் பண்ணனும்னு யாருக்கும் தெரியாதா?” என்று கோபமாக கேட்கவும்,

சிவகுரு எழுந்து, “நாங்க என்ன ஸ்கூல் பசங்களா மேடம்?”

ஆசிரியை,”காலேஜ் வந்தா ரெண்டு கொம்பா முளைச்சுருக்கு.. இனி கிளாஸ் குள்ள எந்த staff வந்தாலும் எழுந்து விஷ் பண்ணுங்க.. அண்டர்-ஸ்டாண்ட்?”

சிவகுரு உடம்பை விறைப்பாக வைத்துக் கொண்டு, “எஸ் மேடம்” என்று கூறி இராணுவ வீரனை போல் சல்யுட் அடித்தான்.

ஆசிரியை அவனை முறைக்கொண்டே “சிட் டோவ்ன்” என்றார்.

பின், “அம் ஐஸ்வர்யா.. அம் யுவர் Faculty-Advisor”

சிவகுரு தன் அருகில் இருந்த செல்வராஜிடம், “ஏண்டா குண்டு ஆர்த்தி மாதிரி இருந்துட்டு இவளுக்கு ஐஸ்வர்யா னு பெயரா! என்ன கொடுமை சார் இது!” என்று முணுமுணுத்தான்.

செல்வராஜ்,“விடு டா அவ அப்பன் ஐஸ்வர்யா fanஆ இருக்கும்”

ராகேஷ்,”இவளை பார்த்தா சின்ன பொண்ணு மாதிரியா தெரியுது?”

செல்வராஜ் ஆச்சிரியமாக ராகேஷை பார்த்து,”ஏன் இந்த கொலைவெறி?”

“இல்லை அவ அப்பா ஐஸ்வர்யா fanனு சொன்னியே! ஐஸ்வர்யா மிஸ்-வேர்ல்ட் ஆனது 1994 ல தான்..” என்றதும் செல்வராஜ் அவனை முறைத்தான்.

சிவகுரு,“விடு விடு.. அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா” என்றான்.

இப்படி தன் பெயரை பற்றி ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டிருப்பதை அறியாத அந்த ஆசிரியை,”சைலென்ஸ்.. கீப் quite”என்றார்.

பிருந்தா,“மாலினி ‘சைலென்ஸ்.. கீப் quite’ ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தானே!” என்று முணுமுணுக்க, சிரிப்பை அடக்கிய மாலினி,“சும்மா இரு பிருந்தா” என்றாள்.

ஆசிரியை,“1st செம் காமன் சிலபஸ் என்றதால CSE-IT 1st செம் சேர்ந்து இருப்பீங்க, 2nd செம்ல இருந்து தனியா உங்க டிப்பார்ட்மென்ட்க்கு போய்டுவீங்க.. இப்ப எல்லோரும் ஆடிட்டோரியம் போங்க.. பிரின்சிபால் & சேர்மன் சார் உங்களிடம் காலேஜ் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பற்றி பேசுவாங்க”

சக்திவேல் தன் அருகில் இருந்த அனிஷ்யிடம்,“5mins இவ குடுத்த லெக்சருக்கே தூக்கம் கண்ண கெட்டுதே! இதுல பிரின்சிபால் & சேர்மன் பேசுனா?”

அனீஸ்,“இவ லெக்சருக்கு தூக்கம் தான் கண்ணகெட்டும் அவங்க பேசுற ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் கேட்டா துக்கம் நெஞ்சைகெட்டும்” என்றவன் ஒரு நிம்மதிமூச்சை வெளியிட்டு, “ஆனா ஒன்னு டா.. இந்த காலேஜ் பற்றி கேட்ட பில்ட்-அப் ல டீச்சர்ஸ் எல்லாரும் தஸ் புஷ்னு இங்கிலீஷ் ல தான் பேசுவாங்களோ னு பயதுட்டே இருந்தேன்” 

சக்திவேல்,“நீ ஒன்னும் கவலை படாதேடா மச்சான்..ஒன்னு ரெண்ட தவிர இங்க இருக்குறதுலாம் நம்மள மாதிரி படிப்பேராம வேலை கிடைக்காம இங்க வந்ததுகளா தான் இருக்கும்.. இவங்களுக்கு தெரிஞ்சா தானே இங்கிலீஷ் ல பேசுவாங்க..” 

அனீஸ்,“அப்போ நமக்கும் கண்டிப்பா வேலை கிடைக்கும்னு சொல்லு”

இருவரும் நகைத்தபடியே வகுப்பறையை விட்டு வெளியேறினர்.

அரங்கத்தில் அனைத்து கிளையை சேர்ந்த மாணவர்களும் வந்து அமர்ந்தனர். தங்களுக்குள் பேசி கூச்சலிட்டு கொண்டிருந்தனர். கால் மணி நேரத்தில் அரங்கத்தினுள் வந்த பிரின்சிபாலும் சேர்மனும் மேடையில் அனைத்து கிளைகளை சார்ந்த H.O.Dயுடன் சேர்ந்து அமர்ந்தனர்.

முதலில் இரண்டு மணி நேரத்திற்கு சேர்மன் பேசி முடித்ததும் மாணவர்களுக்கு ஐந்து நிமடங்கள் இடைவெளி கொடுக்க பட்டது. மாணவர்களுக்கு தேநீர் அளிக்கப் பட்டது.

ஸ்ரீராமன்,“இது என்னடா அதிசயம்?”

சிவகுரு,”இது தான் டா தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறது” என்றான். 

அனீஸ்,“என்னவோ வேற்று கிரகத்திற்கு வந்த மாதிரி ஒரு பீல் டா.. மனுஷன் ஒரு வார்த்தை தமிழ்ல பேச கூடாதா.. என்னடா பேசுனாரு? எதாச்சும் உனக்கு புரிஞ்சுதா?”

சக்திவேல்,“ப்ரீயா விடுடா மச்சி.. எப்படியும் இதே ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எல்லாத்தையும் அழகா தமிழ்ல அழகேயில்லாத நம்ம ஐஸ் கிளாஸ்கு போனதும் சொல்லுவா.. அப்போ கேட்டுக்கலாம்..” என்று சிரித்தான்.

இப்படி மாணவர்கள் சிரித்து பேசுவதை பொறுக்காமல் கூஜா ஒரு ஆசிரியரிடம் கண்ணால் செய்கை செய்ய அவர் ஒலிவாங்கியில் மாணவர்களை இடத்தில் அமருமாறு அறிவித்தார்.

பிருந்தா,“வாங்கடி அடுத்த ஷிபிட் தூக்கத்துக்கு அழைப்பு வந்துருச்சு” என்று கூற மோகனா ஏதோ கேட்க வரவும் பிருந்தா, “அவங்க தூங்க கூபிடலையே! னு தானே சந்தேகம் கேட்க போற.. பரதேவதையே நீ இருக்குறதை கவனிக்காம.. தெரியாம பேசிட்டேன்.. வாமா வந்து உட்காரு” என்று அலுத்துக் கொள்ள, 

‘நானா அடங்குவேன்!’ என்று மோகனா,“பரதேவதை னா என்ன பிருந்து?” என்று வினவ பிருந்தா தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

மாலினி சிரிப்புடன்,“உன்னை ஏஞ்சல் னு சொல்றா?”என்றாள்.

மோகனா ஒரு குதுகலத்துடன், “அப்படியா மாலு!.. ஹே பிருந்து தங் யூ.. தங் யூ சோ மச்” என்றாள்.

பிருந்தா மாலினியிடம்,“எப்படிடி இவளை சமாளிக்குற?”என்று வினவ அவள் புன்னகைத்தாள்.

ஸ்ரீராமனின் பார்வை மாலினியையே தொடர்வதை பார்த்து கடுப்படைந்த செல்வராஜ்,“பிரின்சிபால் சேர்மன் இருக்குற ஆடிட்டோரியத்துல வச்சே இந்த பார்வையா!.. வேண்டாம் தம்பி.. டின்னு கெட்டிடுவாங்க” என்று தனக்கேயுரிய தேனாவட்டுடன் குரலை உயர்த்தி கூறினான். 

‘நீ என்னடா சொல்றாது நான் என்னடா கேட்பது’ என்று முறைத்து விட்டு மாலினியை பார்த்தபடியே இருக்கையில் அமர்ந்தான் ஸ்ரீராமன்.

அடுத்து பேசிய டம்மி பியீஸ் இல்லை இல்லை இந்த இடத்தில் காகா என்று தான் கூறவேண்டும் என்னென்றால், ஒரு மணி நேரத்திற்கு சேர்மன் வீரபத்ரனை புகழோ புகழ்னு புகழ்ந்து பாடிட்டு அடுத்த அரை மணி நேரத்திற்கு கல்லூரியை பற்றி புகழ்ந்து பேசிவிட்டு, அடுந்த முக்கால்மணி நேரத்திற்கு கல்லூரியின் சட்ட-திட்டங்களை பற்றி கூறிவிட்டு தன் உரையை முடித்து மதிய உணவிற்கு இடைவெளி விட்டார். 

விட்டால் இன்னும் பேசிக் கொண்டே தான் இருந்திருப்பார், ஆனால் ஹிட்லரே இரண்டு மணி நேரம் தானே பேசினார், அவரை விட அதிகமா பேசினால் எங்க ஹிட்லர் தன்னை தப்பாக நினைத்து விடுவாரோ என்ற ஒரே காரணத்திற்காக மனமின்றி தன் உரையை முடித்துக் கொண்டார் சுவாமிநாதன்.

இதன் மூலம் சுவாமிநாதனுக்கு புதிதாக கிடைத்த பட்டங்கள், ‘ஜால்ரா, ரம்பம், பிளேட்…………’

உணவு இடைவேளைக்கு பிறகு மாணவர்கள் தங்கள் வகுப்பறைக்கு சென்றனர். 

இரண்டு கிளைகள் ஒரே வகுப்பில் இருப்பதால் இரண்டு H.O.Dயில் ஒருவர் பேசி மற்றவர் மேல் மரியாதை இல்லாமல் போய்விட கூடாதே என்ற எண்ணத்தில் இரண்டு H.O.Dகளுமே பேசாமல், மாணவர்களை F.A என்று அழைக்கப்படும் அவர்களின் Faculty Advisorயிடம் ஒப்படைத்தனர்.

CSE -IT வகுப்பறை:

நந்தினியிடம்,“நீ கமெண்ட் ஏதும் அடிக்கவும் மாட்ட ரசிக்கவும் மாட்ட ஸோ நான் மாலு பக்கத்துல உட்காந்திருக்கிறேன்” என்று கூறி நந்தினியின் இடத்தில் பிருந்தா அமர்ந்தாள். 

வகுப்பறையினுள் நுழைந்த ஐஸ்வர்யா,“ஸ்டுடென்ட்ஸ் யூ ஆள் நொ மீ.. அம் …….” என்றதும் நம்ம மாப்பிள்ளை பெஞ்சிலிருந்து,

“உலக அழகி நான் தான்

உலக அழகி நான் தான் 

பூம் பூம் பூம் மாட்டுக் காரா

மாட்ட ஆமாம்-னு சொல்ல சொல்லுடா

நல்ல காலம் இங்கே 

என் பருவ காலம் நானே

குடு குடு குடு குடுப்பக் காரா 

இத நீ ஊருக்குள்ள சொல்லி போடா

குளு குளு காத்து கொதிக்குதடா 

தாவணி பார்த்து

கத-கலி ஆட தோணுதுடா 

ஆமாண்டா இதோடா 

உலக அழகி நான் தான்

உலக அழகி நான் தான் “ என்ற படால் ஒலித்து, சில வினாடிகளில் நின்றது.

அதை கேட்டதும் மாணவர்கள் தங்களுக்குள் புன்னகைக்கவும் நம்ம மோகனா குழந்தை வழக்கம் போல் கேள்வி கேட்க தொடங்கியது.

“ஏன் மாலு எல்லாரும் சிரிக்கிறீங்க?”

மாலினி தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு,“உனக்கு பாட்டு கேட்கலையா?”என்று வினவினாள்.

“கேட்டுதே அதுக்கு என்ன?”

இதற்கு என்னவென்று பதில் சொல்வது என்று விழித்தாள் மாலினி, ‘ஐஸ்வர்யா மேடம் தன் பெயரை சொல்லவரவும் அவரது பெயரை கிண்டல் பண்ணி இந்த பாட்டை போட்டாங்க னு சொன்னா’ 

‘என்னனு கிண்டல் பண்றாங்க? 

அந்த பாட்டுல அப்படி என்ன கிண்டல் இருக்கு? 

ஏன் கிண்டல் பண்றாங்க? 

யார் கிண்டல் பண்றாங்க? 

மேடம கிண்டல் பண்ணலாமா?’ என்று பல கேள்விகளை அடுக்கிவிடுமே நம்ம வளர்ந்த குழந்தை.

மோகனா,”சொல்லு மாலு” என்று சிணுங்க தொடங்கினாள்.மாலினி பதில் சொல்ல தெரியாமல் திணறவும் பிருந்தா மோகனாவை போல் முகபாவங்களுடன்,“அதுவா மோகனா.. அந்த பாட்ட போட்டதும் பின்னாடி ஒரு பையன் ஆடினானே! நீ பார்க்கலையா?”என்று கேட்கவும், மோகனா, “அப்படியா நான் பார்கலையே.. யாரு ஆடினா?”

இப்போது திணறுவது பிருந்தாவின் முறையாயிற்று.

அந்த பாட்டை கேட்டு கொதிநிலைக்கு போயிருந்த ஐஸ்வர்யா பிருந்தா மோகனா இருவரையும் பார்த்து, “சைலேன்ஷ்” என்று கத்தவும் மோகனா தன் கேள்வியை மறந்து அமைதியானாள்.

பிருந்தா,“என்ன மாலு சைலேன்ஷ்க்கு அடுத்து சொல்ற கீப் quite சொல்லலேயே” என்று முணுமுணுக்கவும் ஐஸ்வர்யா இப்போது பிருந்தா அருகே வந்து, ஒரு விரலால் அவளை எழும்புமாறு சைகை செய்து, “என்ன கிண்டல் பண்ணிட்டு இருக்க? மேடம் என்ற பயம் கொஞ்சம் கூட உனக்கு இல்லையே! திஸ் இஸ் மை பஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்” என்று கூறினாள், இல்லை இல்லை பசங்க மேல் கொண்ட கோபத்தில் கத்தினார்.

பிருந்தா,”நான் ஒன்…………………”

ஐஸ்வர்யா, “சிட் டோவ்ன்” என்று கத்திவிட்டு ஸ்டேஜ் ஏறி கோபமாகவே பேச தொடங்கினார், “அல்ரெடி சேர்மன் அண்ட் பிரின்சிபால் சொன்னது தான்.. எனி வே இட்ஸ் மை டுட்டி டு டேல் யூ..

பசங்க-பொண்ணுங்க பேச கூடாது,

7.45க்கு காலேஜ் கம்புஸ் குள்ள வந்துருக்கணும்,

கிளாஸ் டைம்ல வெளியே சுத்த கூடாது,

ID-Card எப்போதும் போட்டுருக்கணும்,

பாய்ஸ் நீட்டா ஹேர் கட் பண்ணி கிளீன்லி சேவ் பண்ணி ஷர்ட் நீட்டா tuck-in பண்ணி வரணும்,

கேள்ஸ் தலை முடியை போனிடேல் போட கூடாது, ப்ரீ ஹேர்ல வர கூடாது, ஷால் டபுள்-சைடு பின் பண்ணிருக்க வேண்டும்,

போத் பாய்ஸ் அண்ட் கேள்ஸ் மஸ்ட் வியர் சாக்ஸ் அண்ட் சூ,

செல் போன்ஸ் நாட் அல்லோவ்டு இன்சைடு தி காலேஜ் கம்புஸ்

எனி டவுட்?” என்று கேள்வியில் முடித்தாள் தன் உரையை.

அனீஸ்,“full தமிழ் இல்லனாலும் ஐஸ் தங்களீஷ் எனக்கு புரிதுடா மச்சி” என்றான்.

மாணவர்கள் ஏதும் சந்தேகம் கேட்காததால்,ஸ்டேஜை விட்டு கீழிறங்கிய ஐஸ்வர்யா,

“ஓகே.. நொவ் இன்ட்ரோ செஸ்ஷன்.. ஒன் பை ஒன்னா ஸ்டேஜ்க்கு போய் உங்களை இன்ட்ரோடுஸ் பண்ணுங்க” 

மாணவர்கள் ஒவ்வொருவராக மேடையேறி ஆங்கிலத்தில் தங்களை அறிமுகபடுத்தினர். 

அனீஸ் தமிழில் தன்னை அறிமுக படுத்தவும் பின்னாலிருந்து “தமிழன்டா” என்ற கமெண்ட் வந்தது.

புழா பேச ஆரம்பித்ததும், தேவர்மகன் ரேவதியின் குரலில் ,“வெறும் காத்து தாங்க வருது” என்றனர்.

ஸ்ரீராமன் மாணவிகளை மட்டும் பார்த்து,“வெள் அம் ஸ்ரீராமன்.. வெள் ஐ டிட் மை ஸ்கூலிங்ஸ் இன் XXXX… வெள் மை ஹொபீஸ் ஆர்..வெள்” என்று கூறவும்,

“நீ கிணறு வெட்டியது போதும் ராசா..போய் உட்காரு” என்றனர்.

சக மாணவர்கள் யாரையும் பார்க்காமல் நேர் பார்வையுடன் தன்னை பார்த்து பேசிய மாலினியை ஐஸ்வர்யாவிற்கு பிடித்துவிட்டது.

முதல் நாள் என்பதாலோ என்னவோ மாணவிகளின் அறிமுகத்திற்கு எந்த கமெண்ட்யும் வரவில்லை.ஆனால் பட்ட பெயரை வைக்க தவறவில்லை.

அனீஸ் – தமிழன்

சக்திவேல் – வெள்ளை பூசணி

புழா – காத்து, ஏற் பாக்டரி

ஸ்ரீராமன் – கிணற்று தவளை

சிவகுரு – ராணுவ வீரன்

செல்வராஜ் – விருமாண்டி

ராகேஷ் – அண்ணாச்சி, எங்கள் அண்ணா

நந்தினி – அமைதிப் படை

மாலினி – மிஸ் பியூடி

பிருந்தா – பிந்து அப்பளம்(பெயரில் பிந்து வருவதாலும் கொஞ்சம் குண்டாக இருப்பதாலும் பிந்துகோஷ் என்று வைத்து, ரொம்ப குண்டாக இல்லாததினால் பாவம் என்று நினைத்தோ என்னவோ ‘பிந்து அப்பளம்’ என்று மாற்றினர்.)

மோகனா – சரவெடி @ சிரிப்புவெடி 

தாரிகா – ராணி ரெங்கம்மா 

என்று பட்டப் பெயர்களை சூட்டினர்.

ஒருவழியாக அறிமுகம் முடிந்ததும் வீட்டிற்கு கிளம்பலாம் என்ற அறிவிப்பு வந்ததும் மாணவர்கள் வகுப்பறையை வேகமாக காலி செய்தனர்.

பிருந்தா, “ஹே மாலு.. இப்பவே கிளம்பனுமா?”

மாலினி, “பின்ன இங்க இருந்து என்ன பண்ண போற?”

“ஒன் ஹார் பிஃபொர் விட்டுட்டாங்க, சோ கான்டீன் போயிட்டு போகலாமே!” 

மாலினி ‘சரி’ என்று கூற மோகனாவும் ‘சரி’ என்று தலையை ஆட்டினாள் 

ஆனால் நந்தினி முறைக்கவும், பிருந்தா, “அம்மா சின்சியர் சிகாமணி.. ரொம்ப நேரமில்லை, கொஞ்ச நேரம் தான்.. சும்மா கொஞ்ச நேரம் உட்காந்து பேசிட்டு போகலாம்.. முறைக்காம கான்டீன் வா” 

நந்தினி முறைத்துக் கொண்டே “நீ பேச மட்டுமா செய்வ?”

பிருந்தா, “ஹே விட்டா நீ காத்த குடிச்சுடே உயிர் வாழ்ந்துருவ, என்னால் அப்படி முடியுமா? பேசிட்டே கொஞ்சம் சாப்பிட தான் செய்வேன்..போதுமா” 

மாலினி, “ஏன் சாப்பிட்டா தான் என்ன?”

பிருந்தா, “அதானே!”

நந்தினி, “அதானே டெய்லி சட் ஐட்டம்ஸ் சாப்ட்டு இன்னும் குண்டா ஆனா இப்ப என்ன.. ஒன்னுமில்லையே” என்றதும் பிருந்தாவின் முகம் சிறிது வாடியது.

மாலினி, “ஏன் நந்து.. இப்படி சொல்ற, பாரு பிருந்து முகம் வாடிருச்சு”

நந்தினி, “நீ வேற மாலு.. இது சும்மா அக்டிங்.. இவளாது இதுக்கு வருத்த படுறதாது.. இன்னைக்கு தானே பார்க்கிற, போக போக உனக்கே இவ அக்டிங் புரிஞ்சிரும்.. இன்னைக்கு கான்டீன் ஆரம்ச்சா டெய்லி போகணும் சொல்லுவா, அப்பறம் டெய்லி லேட் ஆகுறது மட்டுமில்லாம சட் ஐட்டம்ஸ் தான்.. வெயிட் அதிகமாச்சு இவ  புலம்புற டார்ச்சர் என்னால தாங்க முடியாது..

டாக்டர் அட்வைஸ் படி இப்ப தான் கஷ்ட பட்டு வெயிட் குறைத்திருக்கிறாள்..”

மாலினி அதிசியத்தை கண்டது போல் பார்த்து, “நந்து! இவளோ நீளமா கூட பேச தெரியுமா உனக்கு?”

நந்தினி, “தேவைனா பேசுவேன்.. இப்ப அதுவா முக்கியம் மாலு”

“ஓகே ஓகே.. இப்ப என்ன பிருந்தா டெய்லி சட் ஐட்டம்ஸ் சாப்பிட கூடாது.. அதானே.. இன்னைக்கு விடு.. இனி நான் பாத்துக்குறேன்” என்று சமாதன படுத்திவிட்டு “பிருந்தா” என்று அழைத்தால் அவளையும் மோகனாவையும் காணவில்லை.

மாலினி, “ஹே பிருந்தா மோகனா எங்க?”

நந்தினி, “ரொம்ப பதறாத, கன்டீன் போய் பார்க்கலாம் வா” என்று கூறி மாலினியை அழைத்து சென்றாள்.

மாலினியும் நந்தினும் கன்டீன் சென்று கண்ட காட்சியில் நந்தினி சினம் கொள்ள மாலினி சிரித்துக் கொண்டு நின்றாள். அப்படி என்ன காட்சியை பார்த்தார்கள்னு கேட்கிறீங்களா! பெருசா ஒன்றுமில்லைங்க, நம்ம பிருந்தா இரண்டு சீஸ் பர்கர், ஒரு ஹாட் டாக்,ஒரு எக் புப்ஸ், ஒரு மாதுளம் பழச்சாறு என்று சின்ன சட் ஸ்டால் முன்னே அமர்ந்து கொண்டிருந்தாள்.

நந்தினி முறைத்துக் கொண்டே பிருந்தா அருகே செல்லவும் அவள், “ஹே உங்களுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணேன்” என்று கூறவும் அங்கு வந்த மோகனா, “பிருந்து தஹி பூரி இல்லையாம்.. வேற என்ன சொல்றது உனக்கு?” என்று கேட்டாள்.

நந்தினியின் முறைப்பில் மோகனாவின் கேள்விக்கு பிருந்தா திருதிருவென முழிக்க மோகனா, “சீக்கிரம் சொல்லு பிருந்து” என்றாள்.

மாலினி, “நீ உட்கார் மோகனா”

“அஹ்ம்ம்.. பிருந்துக்கு வாங்கியாச்சு.. அப்பறம் நந்துக்கு டீ, உனக்கு ஜூஸ், எனக்கு ஐஸ்-கிரீம் வாங்க வேண்டாமா?” என்றதும் நந்தினி பிருந்தா முதுகில் இரண்டு அடிகள் போட,

மாலினி, “இது வேறயா? வேற என்னலாம் சொல்லிருக்க?” என்று வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தபடியே பிருந்தாவை பார்த்து கேட்டாள்.

பிருந்தா, “ஏன்டி அடிக்கிற?”

நந்தினி, “பின்ன நீ செஞ்சதுக்கு கொஞ்சுவாங்களா?”

பிருந்தா அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, “நான் என்னடி செஞ்சேன்?”

நந்தினி மீண்டும் அடிக்க கையை ஓங்க அவளை மாலினி தடுத்து அமர செய்தாள், பின், “நந்து நீ சொன்னது கரெக்ட்.. “ 

பிருந்தாவும் மோகனாவும் என்னவென்று கேட்கவும் மாலினி பிருந்தாவிடம், “நீ நல்ல நடிப்ப னு சொன்னா, இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பெட்டர் ஆ நடி உனக்கு ஆஸ்கார் அவாடே குடுக்கலாம்” என்று கூறி மீண்டும் சிரித்தாள்.

“யூ டூ மாலு”

மோகனா, “ஏன் மாலு சிரிக்குற? நந்து ஏன் கோபமா இருக்கா?”

“நீ முதல உட்காரு.. நீ சொன்ன லிஸ்ட் ஆர்டர் குடுத்துடியா?”

“அய்யய்யோ.. தஹி பூரி இல்லைனதும் பிருந்துக்கு என்ன வேணும்னு கேட்க வந்துட்டேன்.. அது ஆர்டர் குடுக்கவே இல்லையே.. இரு நான் போய் ஆர்டர் பண்ணிட்டு வரேன்” என்று எழுந்த மோகனாவை பிடித்து நிறுத்திய மாலினி, “இங்க இருக்குறதே போதும்.. நீ உட்கார்” என்றாள்.

“அப்போ.. எனக்கு ஐஸ்-கிரீம்” என்று மோகனா இழுக்கவும், மாலினி, “இப்ப தான் கோல்ட் சரி ஆகிருக்கு.. இன்னைக்கு ஐஸ்-கிரீம் வேண்டாம்”

“ஹ்ம்ம்.. என்ன மாலு.. ப்ளீஸ் ப்ளீஸ்.. ஒரே ஒரு ஐஸ்-கிரீம் மட்டும் சாப்பிடுறேன்.. ப்ளீஸ் மாலு ப்ளீஸ்” என்று கெஞ்சத் தொடங்கிய மோகனா மாலினியின் “மோகனா” என்ற அழுத்தமான அழைப்பில் அடங்கினாள் ஆனால் அடுத்த நிமிடமே, “சரி.. அப்போ ஜூஸ் குடிக்கட்டா” என்று கெஞ்சலாக கேட்டாள்.

மோகனாவின் முகத்தை பார்த்து மாலினியின் உள்ளம் உருக தான் செய்தது ஆனால் தன் உருகல் தன் தோழியின் உடல் நலத்திற்கு நல்லதில்லையே என்ற நினைப்பில் கடுமையான குரலில், “இன்னைக்கு நோ ஐஸ்-கிரீம் நோ ஜூஸ்” என்றாள்.

மோகனாவின் முகம் வாடியதை பார்த்த மாலினி உற்சாகமான குரலில், “ஹே மோனி.. இங்க பார்த்தியா.. உனக்கு பிடிச்ச சீஸ் பர்கர்.. உனக்குன்னு பிருந்து வாங்கி வச்சிருக்கா” என்றாள்.

மோகனா அதே உற்சாகத்துடன், “ஹை… பிருந்து இது எனக்கா?” என்று கேட்கவும் அந்த குழந்தை மனதை வருத்தபடுத்த மனமில்லாமல் வேற வழியே இன்றி அந்த சீஸ் பர்கரை மோகனாவிற்கு கொடுத்தாள் பிருந்தா.

மோகனா ஆசையாக அதை உண்ணத் தொடங்கவும் மாலினி அவள் தலையை வருடி, “அடுத்த வாரம் ஐஸ்-கிரீம் வாங்கி தரேன் ஓகே” என்று கூறவும் மோகனா படு உற்சாகமாக தலையை ஆட்டினாள்.

மாலினி, “பிருந்து இந்த சீஸ் பர்கர் அண்ட் ஜூஸ் நீ எடுத்துக்கோ, நான் எக் புப்ஸ் எடுத்துக்குறேன், நந்து நீ ஹாட் டாக் எடுத்துக்கோ” என்றதும் 

பிருந்தா, “இந்த மேடம் இதலாம் சாப்பிட மாட்டாங்க”

“ஏன்?”

“நான் தான் சொன்னேனே இவள் காத்தை குடிச்சே உயிர் வாழ்ந்திருவாள்னு”

நந்தினி பிருந்தாவை முறைக்கவும் அவள், “நான் என்ன தப்பா சொல்லிட்டேன்! எங்க இந்த ஹாட் டாக் சாப்ட்டுறேன் பாப்போம்” என்று சவால் விடுவது போல் கேட்கவும் நந்தினி மீண்டும் முறைத்தாள்.

பிருந்தா, “இந்த முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..” என்று கூறி “முறைப்பு மன்னி” என்று முணுமுணுத்தாள்.

மாலினி, “ஏன் நந்து இதை சாப்பிட்டால் என்ன? இது வெஜ் தானே!”

பிருந்தா, “நீ வேற மாலு.. கன்டீன் வந்தா அதிக பட்சமா டீ குடிப்பா.. அவளோ தான்.. வீட்டு சாப்பாடு மட்டும் தான் மேடம் சாப்பிடுவாங்க அதுவம் அவங்க வீட்டு சாப்பாடு மட்டும் தான், அவ கொண்டு வர லஞ்ச் ஷர் பண்ணுவா ஆனா நம்ம சாப்பாட்டை சாப்பிட மாட்டா, சரியான நொர்நாட்டியம் மன்னி”

மாலினி, “சரி விடு.. அது அவ பழக்கம்” என்று கூறி நந்தினிக்கு ஒரு டீ வாங்கி வந்தாள். அவள் வருவதற்குள் பிருந்தா சீஸ் பர்கர் மற்றும் ஹாட் டாக் சாப்பிட்டு முடித்திருந்தாள். 

மாலினி வந்ததும் அவளிடம் எக் புப்ஸ் கொடுத்த பிருந்தாவிடம், “அடி பாவி.. அட்லீஸ்ட் இதயாது விட்டு வட்சியே” என்று சிரிப்புடன் கூறினாள்.

நந்தினி தேநீரை பருகியவாறு, “இதை நீ எடுத்துக்கின்னு சொல்லிருக்காட்டி இதுவும் காலியாயிருக்கும்” என்றாள்.

சிறிது நேரம் பேசிவிட்டு கன்டீனை விட்டு வெளியே வந்த போது சீனியர் மாணவன் கிருஷ்ணன் இவர்கள் அருகே வந்தான்.

“ஹாய் மாலினி.. உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்” என்றான்.

மாலினி, ‘என்னிடம் ஏன் தனியா பேசணும்?’ என்பதை போல் பார்க்கவும், கிருஷ்ணன், “நான் உன் சீனியர்.. செகண்ட் இயர் CSE” என்றான்.

பிருந்தா, “முதல் நாளிலேயே அப்ளிகேஷன்ஸ் ஆரம்பித்து விட்டதா ஆகிருச்சா மாலு” என்று முணுமுணுக்க மாலினி, “சும்மா இருடி” என்று பிருந்தாவை கடித்துக் கொண்டு கிருஷ்ணனிடம் திரும்பி, “இங்கேயே பேசுங்குங்க” என்றாள்.

“தனியா” என்று கிருஷ்ணன் இழுக்கவும் 

மாலினி, “பேசுறதா இருந்தா இங்கேயே பேசுங்க இல்லை நான் கிளம்புறேன்” என்று கூறவும்,

“வெயிட் வெயிட் நான் பேசிடுறேன்” என்று அவசரமாக கூறியவன் இரண்டு நிமிடங்கள் பேச தெரியாதவனை  போல் திணறவும், மாலினி சலிப்புடன் கிளம்பவும் அவன் அவளது வழியை மறித்து,

“ஹை மாலினி..

ஐ அம் கிருஷ்ணன்..

நான் இதை சொல்லியே ஆகணும்.. 

நீ அவ்வளவு அழகு..

இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு..

இவ்ளோ அழகா பார்த்திருக்க மாட்டான்க..

அண்ட் அம் இன் லவ் வித் யூ” என்று ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் வசனத்தை திக்கி திணறி ஒருவாறு சொல்லி முடித்தான். 

‘கிருஷ்ணன் னு பெயர் இருந்தா நீ ‘வாரணம் ஆயிரம்’ கிருஷ்ணன் ஆகிருவியா! எனக்கு பிடித்த சூர்யாவின் அருமையான டையலாகை இப்படி கேடுத்துட்டியே டா!

அருணா (அவளது  தந்தை அருணாசலம்) எனக்கு ஏன் மாலினி னு பெயர் வைத்த!! உன்னால கண்டவன் கிட்டலாம் இந்த வசனம் கேட்க வேண்டியது இருக்குதே!’ என்று மனதினுள் நொந்து கொண்ட மாலினி முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு, “இங்க எதுவும் காம்படிஷன் நடக்க போகுதா? ‘முன்தினம் பார்த்தேனே’ பாட்டு பாட போறீங்களா? இன்னும் பெட்டரா ப்ராக்டீஸ் பண்ணிட்டு காம்படிஷன் ல கலந்துகொங்க.. நான் கிளம்புறேன்” என்றாள்.

“மாலினி.. மாலினி.. நான் உண்மையாவே……….”

“என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்னு………..”

“தெரிந்து வந்தால் அது காதல் இல்லை”

காலையில் அந்த மரத்தடியில் உங்களை பார்த்த மாதிரி ஞாபகம்! நீங்க காலையில் பார்த்த சீனியர் அண்ணா பிரெண்ட் தானே! பிரெண்டோட தங்கை உங்களுக்கும் தங்கை தானே!”

“அவன் என் பிரெண்ட் இல்லை ஸோ நீ என் தங்கை இல்லை”

“பட் எனக்கு நீங்க அண்ணனா தான் தெரிறீங்க”

“ச்ச்.. என்ன மாலினி இப்படி ஆல் இந்தியன்ஸ் ஆர் மை ப்ரோதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் னு நினைச்சா நீ யாரை கல்யாணம் பண்ணிப?”

“உங்களுக்கு தேவை இல்லாத கவலை இது”

“நான் கவலைப் படாம வேற யாரு படுவா?”

‘இவனிடம் எனகென்ன பேச்சு’ என்று நினைத்து மாலினி கிளம்பவும் கிருஷ்ணன் கையை நீட்டி வழியை மரித்தான்.

“ஹலோ மிஸ்டர்… வழியை விடுங்க” என்று மாலினி குரலை உயர்த்தி பேசினாள்.

அதற்கு அசராமல் கிருஷ்ணன், “எனக்கு பதிலை சொல்லிட்டு போ”

மாலினி பல்லை கடித்துக் கொண்டு, “வழியை விடுங்க” என்றாள். 

அவன் நகராமல் நிற்கவும் ‘என்ன செய்வதென்று’ அவள் யோசித்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த ஸ்ரீராமன், எனி  ப்ராப்ளம் மாலினி?” என்று வினவினான்.

பிருந்தா நந்தினியிடம், “இந்த சீனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை”  என்று முணுமுணுத்தாள்.

மாலினி ஸ்ரீராமனிடம், “நோ ப்ராப்ளம்.. யூ கரி ஆன் யுவர் ஜாப்” என்றாள்.

அதை கேட்டு ஸ்ரீராமன் ‘சை.. இப்ப கூட பிடி குடுத்து பேச மாட்டிக்கிறாளே’ என்று நினைக்க, கிருஷ்ணனின் கண்கள் மின்னின.

கிருஷ்ணனின் முக மலர்ச்சியை பார்த்த மாலினி அவனை முறைத்துக் கொண்டே ஸ்ரீராமனிடம், “இவர் எனக்கு தெரிந்த அண்ணா(ஒரு அழுத்தத்துடன்) தான்.. யூ கரி ஆன் யுவர் ஜாப்” என்றாள்.

பிருந்தா நந்தினியிடம், “ஸ்பை squard கன்டீன் பக்கம் வர மாதிரி இருக்கே” என்று அனைவருக்கும் கேட்கும்படி முணுமுணுக்கவும் கிருஷ்ணனும் ஸ்ரீராமனும் போட்டி போட்டுக் கொண்டு சிட்டாக பறந்தனர்.

மாலினி ஒரு நிம்மதி மூச்சை வெளியிட்டு பிருந்தாவிடம், “தேங்க்ஸ் டி” என்றாள். பிறகு நால்வரும் வாகனங்கள் நிருத்திமிடத்தை நோக்கி நகர்ந்தனர்.

பிருந்தா, “இவனுங்க எபப்டியும் இந்நேரம் நமக்கு நிக் நேம்ஸ் வச்சிருபான்க, நாம அவன்களுக்கு வைக்க வேணாமா?”

மாலினி, “வச்சிட்டா போச்சு..”

நந்தினி, “ஏன்டி நீயும் இவ கூட சேர்ந்துட்டு” என்று மாலினியை கடித்துக் கொள்ள,

மாலினி, “இதுல என்ன இருக்கிறது நந்து.. முதல்ல உனக்கு ஒரு நிக் நேம் வைக்கணும்” என்றதும்,

பிருந்தா, “இவளுக்கா பஞ்சம்! சின்சியர் சிகாமணி, ஊமை விழிகள், முறைப்பு மன்னி, நொர்நாட்டியம் மன்னி… இப்படி சொல்லிகிட்டே போகலாமே” என்றதும் நந்தினி அவளை இரண்டு அடி அடித்தாள்.

மாலினி, “ஹ்ம்ம்.. அதுலாம் ஓகே.. நான் இனி உன்னை நண்டு னு தான் கூப்பிட போறேன்”

நந்தினி, “ஹே மாலு..நீயுமா?” என்று அவளுக்கும் இரண்டு அடி கொடுத்தாள்.

“ஓகே ஓகே அடுத்து நம்ம செல்ல மோகனாக்கு என்ன பெயர் வைக்கலாம்!” என்று பிருந்தா கூறவும் ஆர்வமாக மோகனா அவளை பார்த்தாள்.

பிருந்தா, “ஹ்ம்ம்.. குழந்தை…. இல்லை இல்லை எப்பவும் மாலினியிடம் செல்லம் கொஞ்சுறதால செல்லம்ஸ் னு வச்சுக்கலாம்” என்றதும் மோகனா கைதட்டி அதை வரவேற்றாள். அதை பார்த்து மற்ற மூவரும் புன்னகைத்தனர்.  

பிருந்தா, “அடுத்து.. மாலினி.. ஸ்கூல் டேஸ் ல ‘ஸ்லீபிங் பியுட்டி’ னு ஒரு நான்-டி-டேல் படிச்சேன், அதை போல் ஸ்மைலிங் பியுட்டி னு வச்சுறலாம்! ஹ்ம்ம்.. வேண்டாம் வேண்டாம் பசங்க எப்படியும் அப்படி தான் வச்சுருபாங்க, சோ நாம வேற பேர் வைக்கலாம்.. 

ஹாம்ம்… பசங்க சைக்காலஜி புரிஞ்சு அழகா டக்கில் பண்றதால ‘லேடி ஜேம்ஸ் பாண்ட்’ எப்படி?” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டு கேட்டாள்.

மாலினி புன்னகைக்க, நந்தினி தலையில் அடித்துக் கொள்ள, மோகனா, ” ‘லேடி ஜேம்ஸ் பாண்ட்’ சூப்பர் சூப்பர்” என்றாள்.

மாலினி, “உனக்கு என்ன பெயர் வைக்குறது?” என்று யோசிக்கவும் 

நந்தினி, “ஹ்ம்ம்.. கும்மகரணி, சோம்பேறி,சாப்பாட்டு ராமி… எப்படி சொல்லிகிட்டே போகலாம்” என்றாள்.

அதை கேட்டு அலட்டாமல் பிருந்தா தூசி தட்டுவதை போல் தன் தோளை தட்டினாள். 

மோகனா மாலினியின் காதில் ஏதோ கூறவும், மாலினி சிரித்தாள். நந்தினியும் பிருந்தாவும் ‘என்னவென்று’ கேட்கவும், மாலினி, “ஸ்கூல் ல எங்க கிளாஸ் ல பார்க்குறதுக்கு கொஞ்சம் உன்ன மாதிரி ஒரு பொண்ணு இருந்தா, அவ ‘தில்லானா மோகனா’ படத்துல வர மனோரம்மா மாதிரி கொஞ்சம் நீட்டி நீட்டி பேசுவா சோ அவளுக்கு ‘ஜில் ஜில் ரமாமணி’ னு பேர் வச்சேன், அந்த பெயரை உனக்கு வைக்கலாமா னு கேட்குறா” என்று சிரிப்புடன் கூற மோகனா முன்னெச்சரிக்கையா மாலினி பின் சென்று ஒளிந்துக் கொண்டாள்.

பிருந்தா, “ஹே மோகனா உனக்கு நான் எவளோ அழகா பேர் வச்சேன் நீ என்னடானா” என்று கூறவும்,

மாலினி, “ஓகே..ஓகே.. இனி உனக்கு ‘ஜில்லு’ னு பேர் வச்சுக்கலாம்” என்றாள்.

பிருந்தா, “ஓகே.. ஓகே.. இப்ப பாய்ஸ்.. பெயர் பொருத்தமே இல்லாத அந்த ஸ்ரீராமனுக்கு ,முதல ஒரு பெயர் வைக்கணும்.. உன்னிடம் நோஸ் கட் வாங்கியும் அசராம முயற்சி செய்றதை பாராட்டி ‘கஜினி’ னு……..”

மாலினி, “தயவு செஞ்சு ‘கஜினி’ என்ற பெயரை கேவல படுத்தாத”

“ஓகே.. ஓகே.. சீன் பார்ட்டி, இனி நடந்துக்கிறதை பொருத்து ஜொள்ளன், ஜொள் பாக்டரி இப்படி ஏதாவது வச்சிக்கிலாம்.. அடுத்து அந்த அனீஸ் பையனை பார்த்தா எனக்கு ‘ஜங்கிள் புக்’ கார்டூன்ல வர மௌக்லி கரெக்டர் ஞாபகம் வருது சோ ‘ஜங்கிள் புக்’ சக்திவேல் குண்டு கத்திரிக்கா

சிவகுரு………….”

மாலினி, “அவன் எங்க ஸ்கூல் தான்.. சரியான வாலு.. சேட்டை அதிகமா செய்வான், குரங்கு தான் கரெக்டா இருக்கும்.. செல்வராஜ் பார்க்கவே முரடனா தெரிறான்.. ஸோ.. முரட்டுக் காளை.. ரஜினிய கேவல படுத்துராப்புல தான் இருக்கு இருந்தாலும் பரவா இல்லை.”

பிருந்தா, “ஷங்கர்… என்ன பெயர் வைக்கலாம்?” என்று யோசிக்கவும், இதுவரை கவனமே இல்லாமல் இருந்த மோகனா ஏதோ ஒரு எதேர்பார்ப்புடன் கவனமாக கேட்க ஆரம்பித்தாள்.

மாலினி, “நல்ல பையனா தெரிறான்.. இப்பதைக்கு நிக் நேம் வேண்டாம்.. அப்பறமா பார்த்துக்கலாம்” என்றதும் பிருந்தாவும் நந்தினியும் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்.

அதை பார்த்த மாலினி சிறு புன்னகையுடன், “அவன் கூட சண்டை போட்டேன் தான் பட் யோசிச்சு பார்த்தா அவன் கண்ணில் வழியல் இல்லை கண்ணியம் இருந்தது, என்னவோ மோகனாகாக உண்மையா வருந்தினான் னு புரிஞ்சுது” என்றாள்.

மாலினி ஷங்கரை பாராட்டியதில் ஏனோ மோகனாவின் முகம் மலர்ந்தது.

நந்தினி, “உனக்கு உண்மையிலேயே ‘லேடி ஜேம்ஸ் பாண்ட்’ பொருத்தமான பெயர் டி” என்றாள். பிருந்தா மீண்டும் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்.

பிருந்தா, “கிருஷ்ணமூர்த்தி… கிராமத்தான் னு வட்சுரலாமா?”

மாலினி, “அது வேண்டாம் அவனை கேவல படுத்துறது போல் இருக்கும்.. அப்பறமா நல்ல பெயர் யோசிக்கலாம்”

பிருந்தா, “ஓகே.. அந்த புழ-முத்து-குமார-சுவாமி.. ரொம்ப அமைதி, நம்ம நந்தினி போல் பேசாம மிஸ்டர் நந்தினி னு வட்சுரலாமா?” என்றதும்,

நந்தினி, “அறிவுகேட்டவளே.. எதுல தான் விளையாடுறதுன்னு இல்லை” என்று சரமாரியாக திட்ட தொடங்கினாள். மாலினியின் முயற்சிகள் வீணாக ஐந்து நிமிடங்கள் கழித்தே நந்தினி அமைதியானாள்.

“ஓகே..ஓகே.. விடு விடு.. கிளம்பலாமா?” என்று பேச்சை திசை திருப்பிய பிருந்தா வண்டியை கிளப்பும் சமயத்தில் மாலினியிடம், இருந்தாலும் மாலு.. அந்த சீனியர் சொன்னதுல ஒரு பாயிண்ட் கரெக்ட்.. ஆல் இந்தியன்ஸ் ஆர் மை ப்ரோதர்ஸ் னா எப்படி?”

“ஹ்ம்ம்.. ஒரு பிரச்சனையும் இல்லை.. ஒரு பாரினரா பார்த்து கல்யாணம் பண்ணிக்குறேன்.. போதுமா” என்றதும் நந்தினி கோபம் மறந்து சிரித்தாள்.

ஒருவழியாக நால்வரும் கிளம்பிச் சென்றனர்.

அவர்கள் வைத்த பட்டபெயர்களின் அணிவகுப்பு இதோ…

மோகனா – செல்லம்ஸ்

நந்தினி – நண்டு, சின்சியர் சிகாமணி, ஊமை விழிகள், முறைப்பு மன்னி, நொர்நாட்டியம் மன்னி

மாலினி – லேடி ஜேம்ஸ் பாண்ட்

பிருந்தா – ஜில்லு,கும்மகரணி, சோம்பேறி,சாப்பாட்டு ராமி

ஸ்ரீராமன் – சீன் பார்ட்டி, ஜொள்ளன், ஜொள் பாக்டரி

அனீஸ் – ஜங்கிள் புக்

சக்திவேல் -குண்டு கத்திரிக்கா

சிவகுரு – குரங்கு

செல்வராஜ் – முரட்டுக் காளை

புழா – மிஸ்டர் நந்தினி

சாரல் தொடரும்….

Advertisement