Advertisement

பிருந்தாவும் மாலினியும் வழியை மாற்றுவதை பார்த்த சிவகுரு சத்தமாக, “மச்சான் கேன்டீன் போக வேண்டாம் டா.. வா க்ளாஸ்க்கே போகலாம்”
ராஜசேகர் ஏன்?’ என்று கேட்கவில்லை ஆனால் சிவகுரு மீண்டும் சத்தமாக பேசினான், “எதுக்கா.. இப்போ கேன்டீனில் ஒன்னும் இருக்காது டா.. எல்லாம் காலியாகி இருக்கும்..”
பிருந்தா கோபமாக அவனை முறைக்க, மாலினி, “பிருந்தா எதுவும் பேசாம வா..”
“அது எப்படி மாலு! அவன் என்னை தான் சொல்றான்”
“நீ பேசுனா தான் ஏதாது சொல்வான்.. நீ அவனை கண்டுக்கவே இல்லை னா விட்டுருவான்”
“பேசலைனா இன்னும் அதிகமா தான் பேசுவான்.. இரு அவனை ஒரு கை பார்த்துட்டு வரேன்”
“சொன்னா கேளு பிருந்தா……………..”
பிருந்தா சிவகுருவை நோக்கி சென்றாள். மாலினி, ‘சொன்னா கேட்க மாட்டியே!’ என்று முணுமுணுத்தபடி பிருந்தா பின் சென்றாள்.
பிருந்தா கோபமாக சற்று குரலை உயர்த்தி , “டேய் கொழுப்பா?”
சிவகுரு இரண்டு கைகளையும் முகத்திற்கு அருகே வைத்து, தோள்களை லேசாக குலுக்கி, பயப்படுவது போல் பாவனை செய்து, “ஐயோ பயமா இருக்கே! சேகர் என்னை காப்பாத்து டா” என்று அலறுவது போல் கூறியவன்(பிருந்தா கை முஷ்டியை இறுக்கமாக மூடிஅவனை முறைத்துக் கொண்டு நின்றாள்) சிறு புன்னகையுடன், “என்ன கேட்ட! கொழுப்பா னா.. (முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு) கொழுப்பு இல்லையே நேத்து கூட ப்ளட் டெஸ்ட் பண்ணி பார்த்தேனே!”
பிருந்தா உதட்டை பிதுக்கி, “ஒழுங்கா செக் பண்ணு.. ரொம்ப லோ கொலெஸ்ட்றால் இருந்தா நியுரோ-பயோலாஜிக்கல் ப்ராப்ளம் ஆர் கன்சர் இருக்கும் னு முன்னாடி எதுலையோ படிச்சேன்”
சிவகுரு புன்னகையுடன், “தகவலுக்கு நன்றி.. பட் இது உன் ஸ்டைல் இல்லையே (பிருந்தாவை போல் உதட்டை இடது புறமாக சுளித்து, நாடியை இடது தோள்பட்டையில் இடித்து) இது தானே உன் ஸ்டைல்”
பிருந்தா கண்களை லேசாக சுருக்கி, தலையை ஆட்டியபடி வழித்து காண்பித்துவிட்டு நகர முற்பட, சிவகுரு விரிந்த புன்னகையுடன் அதை ரசித்தான்.
சிவகுரு, “நான் சொன்னேன் னு டயட் ஆரம்சுட்ட போல” என்று புன்னகையுடன் கூற,
பிருந்தா பின்னால் திரும்பி மாலினியை முறைத்தாள்.
சிவகுரு, “ஸோ நான் சொன்னது உண்மை..” என்று சத்தமாக சிரித்தவன்“மாலினியை ஏன் முறைக்கிற.. அவ ஒன்னும் சொல்லலை.. நேத்து நீ கேன்டீனில் எதையும் வாங்கி சாப்பிடலை.. அதை பார்த்து தான் ஒரு கெஸ்ஸில் கேட்டேன்.. நா………………….”
பிருந்தா சிவகுருவை கோபமாக  முறைத்துக் கொண்டு நிற்கமாலினி வேகமாக தலையை ஆட்டி எதுவும் சொல்லாதேஎன்று கண்ணால் செய்கை செய்தாள். மாலினி கூறுவது புரியவில்லை என்றாலும் சிவகுரு பேச்சை நிறுத்தினான்.
ஆனால் மாலினி எதற்காக அவசரமாக தலையை ஆட்டி சிவகுருவின் பேச்சை நிறுத்தினாளோ அது பயனின்றி போனது. பிருந்தா கோபமாக, சிறு ஆவேசத்துடன்“நீ சொன்னேன் னு டயட் இருக்கேனா! லூசு.. நீ சொல்லி நான் செய்வதா.. நான் டயட் ஒன்னும் இருக்கலை.. இருக்கவும் மாட்டேன்”
மாலினி தனக்கு தானே  தலையை மறுப்பாக ஆட்டி பெருமூச்சை வெளியிட, சிவகுருவுக்கு முன்பு மாலினி என்ன சொன்னால் என்பது புரிந்துவிட, சிறு புன்னகையுடன் பிருந்தாவிடம், “அதானே பார்த்தேன்.. என்ன டா இவ டயட் இருக்க போறாளா! அது இவளால முடியாத காரியமாச்சே னு ரொம்ப ஆச்சரியப் பட்டேன்”
பிருந்தா ஆவேசமாக, “டேய் குரங்கு.. டயட் இருந்து காமிக்கிறேன் டா “
சிவகுரு சிரிப்புடன், “ஏய் பிந்துஸ் காமெடி பண்ணாத டா.. டயட் னா ஒரு நாள் இருக்கிறது இல்லை”
பிருந்தா பல்லை கடிக்கொண்டு, “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கடா?”
“அது இருக்கு நிறைய.. அது எதுக்கு உனக்கு?”
“ஹ்ம்ம்.. குப்பையில் போட”
“என் மனசுக்குள்ள தனியா ஒரு ரிசைக்கில்-பின் வச்சிருக்கிறேன்.. ஸோ அந்த வேலையை நானே பார்த்துக்கிறேன்.. நீ வீணா கவலைப் படாத”
பிருந்தா  உதட்டை இடது புறமாக சுளித்து, நாடியை இடது தோள்பட்டையில் இடித்தாள்.
சிவகுரு  புன்னகையுடன், “இத இத இதத்தான் எதிர்ப்பார்த்தேன்”
பிருந்தா பல்லை கடித்து, கையை கோபமாக உதறிவிட்டு வேகமாக வகுப்பறையை நோக்கி சென்றாள்.
பிருந்தா போன திசையை பார்த்து ராஜசேகர், “பாவம் டா அவ..”
“தோடா.. சொல்ல வந்துட்டார் பாசமலர் சிவாஜி.. நீ ஜெனிஷாவை பண்ணாததா?”
“அது.. நீ ரொம்ப பண்றியோ……………..” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் அப்போழுது தான் மாலினி அங்கே நிற்பதை பார்த்து, “என்ன சிஸ்டர்?” என்றான்.
மாலினி சிவகுருவை பார்த்து சிறு புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்றாள்.
ராஜசேகர் ஆச்சரியமாக பார்க்கவும், மாலினி புன்னகையுடன் ராஜசேகரிடம், “தேங்க்ஸ் சொன்னது பிருந்தா இனி டயட் மெயிண்டன் பண்ணுவா..  அக்ஷுவலி.. நியாயமா பார்த்தா கோபம் தான் வரணும் பட் எனக்கு சிவாவை பற்றி தெரியுமே.. அதான் இதில் தலையிடலை”
சிவகுரு, “என்ன தெரியும்?”
அவர்கள் இருந்த இடத்தை சுற்றி ஒரு பார்வை பார்த்த மாலினி சிறு புன்னகையுடன் , “நீ பிருந்தாவை லவ் பண்றது”
சிவகுருவும் ராஜசேகரும் வாயடைத்து நிற்க, மாலினி, “எதுக்கு இவ்ளோ ஷாக்? கிளாஸ்க்கு தானே.. நடந்துட்டே பேசலாமே.. ரொம்ப நேரம் இங்கேயே நிற்பது நல்லதல்ல”
நடந்தபடியே சிவகுரு,”அவ்ளோ வெளிபடையா வா தெரிது?” என்றும் 
ராஜசேகர், “எப்படி சிஸ்டர்?” என்றும் ஒரே நேரத்தில் சிறு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கேட்டனர்.
மாலினி, “மத்தவங்களுக்கு ஈஸியா தெரியாது பட் நான் உன்னை ஸ்கூலில் இருந்தே பார்த்துட்டு இருக்கிறேனே!”
சிவகுரு, “பட் நாம ஒரே கிளாஸ் இல்லை.. ஈவன் பேசிகிட்டது கூட இல்லையே”
“செல்வா விஷயத்தில் நீ எப்படி என்னை நம்புன?”
“…”
“பசங்க பொண்ணுங்களை பற்றி பேசுவது போல் பொண்ணுங்க பசங்களை பற்றி பேசுவாங்க தானே.. நான் ஓரளவுக்கு ஒருத்தரை  கரெக்ட்டா தான்  ஜட்ஜ் பண்ணுவேன்.. ஆல்ஸோ(புன்னகையுடன்) நீ தான் ஸ்கூலில் பேமஸ் அவுட் ஸ்டாண்டிங் பர்ஸ்னாலிட்டி ஆட்சே”
சிவகுரு தன் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொள்ள, ராஜசேகர், “ஸ்கூலில் மட்டும் இல்லை சிஸ்டர்.. இங்கேயும் தான்..”
சிவகுரு, “விடுடா.. ஓவரா புகழாத”
ராஜசேகர், “சிஸ்டர் PT” என்று கூற, மாலினி இரண்டடி இடைவெளி விட்டு முன்னால் அமைதியாக  செல்ல, ராஜசேகரும் சிவகுருவும் தங்களுக்குள் பேசிக் கொள்வது போல் பாவனை செய்து மாலினியை கண்டுக் கொள்ளாமல் நடந்து சென்றனர்.
  
மாலினி வகுப்பறை உள்ளே சென்று அமர்ந்ததும் பிருந்தா சிறு கோபத்துடன், “அந்த குரங்கு கூட உனக்கு என்ன அரட்டை”
“நான் சிவா கூட தான் பேசினேன் னு எப்படி சொல்ற?”
“வேற யார் கூட பேசிட்டு இருந்தயாம்?”
“சேகர் கூட தான் அங்க இருந்தான்”
“என்னவோ போ.. ஆனா நீ பண்றது எனக்கு பிடிக்கலை மாலு”
“என்ன பிடிக்கலை?”
“நீ பார்ஷியாலிட்டி பார்க்கிற”
“வாட்?”
“என்ன வாட்? புடலைங்கா வாட்..” என்று பிருந்தா எரிச்சலுடன் கூற, மாலினி சிரித்தாள்.
பிருந்தா கோபமாக, “மாலு.. அம் சீரியஸ்”
மாலினி தீவிரமான குரலில், “ஓகே சொல்லு.. நான் என்ன பார்ஷியாலிட்டி பார்க்கிறேன்?”
“மோனிக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ற.. பட் என் விஷயத்தில் அந்த குரங்கை நீ ஒண்ணுமே சொல்வதில்லை”
“ஹே லூசு.. நீயும் மோனியும் ஒன்றா?”
“…”
” அவ குழந்தை மாதிரி.. பட் நீ அப்படியா! முதல்ல சிவா விஷயத்தை நீ ஏன் இவ்ளோ பெருசா நினைக்கிற?”
“நான் பெருசா நினைக்கிறேனா… அப்போ அவன் என்னை இன்சல்ட் பண்றது சப்ப மேட்டர் னு சொல்றியா?”
“நான் அப்படி சொல்லலை டா.. நீ பதிலுக்கு பதில் பேசுறதால் தான் அவன் உன்னை சீண்டிட்டே இருக்கிறான்”
“அவன் என்ன வேணாலும் பேசுவான் நான் அமைதியாவே இருக்கனுமா.. என்னால முடியாது”
“அப்போ அவனும் சீண்டிட்டே தான் இருப்பான்”
“ச்ச்”
“அவன் ஏன் சீண்டுறான்னு யோசிச்சியா?”
“…”
“மே பீ அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கலாம்.. அதான் வி……………………”
“அவனுக்கா சான்ஸ்யே இல்லை..(பிருந்தா ஆவேசமாக பேசுவதை பார்த்துக் கொண்டே சிவகுரு தன் இருக்கையில் அமர்ந்தான்.. அதை கவனித்த பிருந்தா ) 
பார்க்கிறதை பாரு.. கண்ணு ரெண்டையும் நோண்டணும்.. முதல்ல அந்த வாயை தைக்கணும்”
மாலினி சிரிப்புடன், “இதை மேக்ஸ் சார் கிட்ட சொல்லு.. சந்தோஷமா ஆதரவு தருவார்”
“என் நிலைமையை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா!”
“இல்லை டா.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. கூல் டோவ்ன்..” என்று கூறி தண்ணீர் பருக கொடுத்தாள்.
பிருந்தா நீரை பருகிவிட்டு, சிறிது சாந்தமான பிறகு, மாலினி மெல்ல பேச்சை திசை திருப்பி அவளை இயல்பிற்கு கொண்டு வந்தாள்.
அதே நேரத்தில், ஜெனிஷா ராஜசேகரை முறைத்துக் கொண்டே, “கேன்டீன் போனமா வந்தோமா.. இல்லாம வரவழில என்ன அரட்டை”
(ராஜசேகர் மாலினியுடன் பேசியபடியே வரண்டாவில் நடந்து  வந்ததை ஜன்னல் வழியாக ஜெனிஷா பார்த்துவிட்டாள்.)
ராஜசேகர், “குரு தானே பிருந்தா கூட பேசினான்.. நான்…………..”
“அது எனக்கு தெரியாது.. நான் அதை சொல்லலை”
“பின்ன.. (சிறு புன்னகையுடன்) ஓ சிஸ்டர் கூட பேசினதை சொல்றியா?” 
“அவ என்ன உன் கூட பிறந்தவளா?அவ கூட என்ன பேச்சு உனக்கு?”
ராஜசேகர் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது, தீவிரமான குரலில், “கூட பிறக்கலை-னாலும் மாலினி என் சிஸ்டர்……….”
“அதுக்குள்ளே அப்படி என்ன பாசமலர் சிஸ்டர்?”
“பார்த்த முதல் நாளிலேயே  உன்னை என் உயிராய் நினைக்கலையா?”
ஜெனிஷா கோபமாக“டோன்ட் கம்பர் ஹர் வித் மீ”
“நீ கேட்டதுக்கு விளக்கம் கொடுத்தேன்.. அவ்ளோ தான்”
“நீ அவ கூட பேசுறது எனக்கு பிடிக்கலை”
“எனக்கு கூட தான் நீ சிஸ்டரை மதிக்காதது பிடிக்கலை”
“என்னை விட அவ முக்கியமா?”
“நான் அப்படி சொல்லலை.. பட் நீயும் சிஸ்டரும் எனக்கு முக்கியம்” 
ஜெனிஷா அதிகரித்த கோபத்துடன், “ரெடிகுலஸ்”
ராஜசேகர் அமைதியாக இருக்கவும் அவள் பல்லை கடிதத்துக் கொண்டு, “உனக்கே இது ஓவரா தெரியலை?”
“ஏன்?”
“அவ உன் கூட பிறந்தவள் இல்லை” 
“இதற்கு நான் பதில் சொல்லிட்டேன்”
“ஓ!” என்றவள் அடக்கப்பட்ட கோபத்துடன் “ரெண்டில் ஒன்னு தான் னா?”
“உனக்கு சிஸ்டரை ஏன் பிடிக்கலை? ஒரு வலிட் ரீசன் சொல்லு”
“….”
“பார்த்தியா காரணமே இல்லாம வெறுப்பை வளர்க்கிற”
“பிடிக்காததுக்குலாம் காரணம் சொல்ல முடியுமா! எனக்கு பிடிக்கலை அவ்ளோ தான்”
“ஒருத்தரை பிடிக்கிறதுக்கு வேணா காரணம் இல்லாம போகலாம், பிடிக்காததுக்கு கண்டிப்பா காரணம் இருக்கும்”
“அவளை வச்சு நமக்குள்ள வாக்குவாதம் தேவையா?”
“அதை நீ தான் சொல்லணும்.. நீ தான் இதை ஆரம்ச்ச”
“ச்ச்.. எனக்கு அவளை பிடிக்கலை ராஜ்..”
“அது தான் ஏன்?”
“..”
ராஜசேகர் தீர்க்கமாக ஜெனிஷாவையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஜெனிஷா, “தெரியலை”
“உன் காரணமற்ற பேச்சுக்களை என்னால் ஏற்க முடியாது நிஷா”
“தேங்க்ஸ்” என்று கூறி கோபமாக ஜெனிஷா திரும்பிக் கொண்டாள். ராஜசேகரும் திரும்பிக் கொண்டான்.
வகுப்பு தொடங்கும் நேரத்தில் பிருந்தா, எங்கடி உன் காவலனை காணும்?”
மாலினி முறைக்கவும், பிருந்தா“ஓகே.. எங்கடி பூந்தோட்ட காவல்காரனை காணும்?”
“என்னை கேட்டா?” என்று மாலினி அக்கறையற்று பதிலளித்தாலும் மனதினுள்‘ஏன் வரலை?காயத்தை ஒழுங்கா கவனிக்காம பிவர் வந்துருக்குமோ!’ என்று கவலைக் கொண்டாள்.
“பின்ன உன்னை கேட்காம?”
“பிருந்தா.. நான் ஆல்ரெடி சொல்லிட்டேன்.. அவன்…………”
“உன் பிரெண்ட்.. அதானே.. நான் இப்போ என்ன கேட்டுட்டேன்! உன் பிரெண்ட் ஏன் வரலை னு உன்னை கேட்டா தானே தெரியும்”
“கிளாஸ் ஸ்டார்ட் ஆக போகுது.. அதை கவனி”
“எஸ்கேப் ஆகாத”
“நான் ஏன் எஸ்கேப் ஆகணும்.. தெரிஞ்சா தானே சொல்வேன்.. அப்படி உனக்கு அவசியம் தெரியனும்னா புழாவை கேளு”
“ஆமா நான் கேட்டதும்  அந்த மௌனகுரு வாய் திறந்து முத்தை உதித்திர போறான்..”
மாலினி பிருந்தாவை பார்த்து சிறிது புன்னகைத்துவிட்டு வகுப்பை கவனிக்க தொடங்கினாள்.
பிருந்தா, ‘ஹ்ம்ம்.. இனி பேசுனா திட்டு தான் விழும்.. நாம வழக்கம் போல் தூங்க ஆரம்பிப்போம்’ என்று மனதினுள் கூறிக் கொண்டு உறங்கும் முயற்சியில் இறங்கினாள்.
மழை தொடரும்….

Advertisement