Advertisement

நல்ல கவனி மோனி.. இது தான் ரொம்ப முக்கியமான விஷயம்..  இனி நீ ஆர்லி கூட பேசக் கூடாது.. நீ அவ கூட பேசுனா நான் உன் கூட பேச மாட்டேன்…….”
மாலு.. நான் கண்டிப்பா அவ கூட பேசமாட்டேன்..” என்று அவசரமாக மோகனா கூறினாள்.
குட்..  அவளே வந்து பேசினாலும் நீ பேச கூடாது.. அவ காரணம் கேட்டு  தொந்தரவு பண்ணா,  ‘மாலு உன் கூட பேச கூடாது னு சொல்லிருக்கானு சொல்லிடு..”
ஹ்ம்ம்..”
மாலினி கறாரான குரலில் பேசினாள், அவ திட்டினாலோ மிரட்டினாலோ பதிலுக்கு நீயும் திட்டனும்.. எனக்கு கோபம் வராது னு சொல்லாத, கொஞ்சம் கொஞ்சமா உன்னை நீ மாத்திக்கணும்.. எதுகெடுத்தாலும் பயப்படக் கூடாது.. தைரியமா இருக்கணும்.. என்ன புரிதா?”
ஹ்ம்..” என்று தலையை ஆட்டிய மோகனா, எப்படி மாத்திக்கிறது மாலு? அதுக்கு நான் என்ன செய்யணும்?” என்று கேட்டாள்.
மாலினி மனதினுள், இவளை மாத்துறது ரொம்ப கஷ்டம் பட் மாத்தி தான் ஆகணும்என்று நினைத்துக் கொண்டாள்.
மாலினி, நீ தான் அதை யோசிக்கணும்”
மாலு” என்று மோகனா சிணுங்க, மாலினி, முதல்ல இப்படி சிணுங்குறதை  நிறுத்து”
மோகனா கண்ணிமைக்காமல் மாலினியை பார்க்க, மாலினிக்கு பாவமாக தான் இருந்தது ஆனால் மோகனாவை மாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், மாலினி கறாராகவே நடந்துக் கொண்டாள்.
ஆர்லியிடம் பேசாதே ஆனால் அவள் திட்டினால் நீயும் திட்டுற, அதை விட்டுட்டு பயந்து போய் என்னிடம் வந்து அழுத, நான் உன் கூட பேசவே மாட்டேன்”
மோகனா அதே நிலையில் தான் இருந்தாள்.
மாலினி, மோனி நான் சொன்னா சொன்னதை செய்வேன் னு உனக்கு தெரியும்.. நீ இனி ஆர்லிக்கு பயந்த நான் கண்டிப்பா உன் கூட பேசவே மாட்டேன்.. புரிதா?”
ஹ்ம்ம்”
மோகனாவின் அன்னை செல்வி சாப்பிட அழைக்கவும் இருவரும் சென்றனர். மோகனா அமைதியாகவே இருந்தாள்.
அதை பார்த்து அருணாசலம் கண்ணசைவில் என்ன?’ என்று மாலினியிடம் கேட்க, அவளும் கண்ணசைவில், நத்திங்.. அப்பறம் சொல்றேன் என்றாள்.
உணவை முடித்துக் கொண்டு அருணாசலமும் மாலினியும் கிளம்பினர்.

காரில் சென்று கொண்டிருந்த போது அமைதியாகவே வந்த மாலினியிடம் அருணாசலம், என்ன டா யோசிக்கிற? மோனி ரொம்ப பயந்து போயிருக்காளா?”
பயந்து இருந்தா.. இப்போ ஓகே தான்”
அப்பறம் என்ன டா யோசனை?”
யோசிக்க நிறைய இருக்கிறதே!”
என்ன?”
மாலினி மோகனாவிடம் பேசியதை கூறினாள். பிறகு,
இப்போ எனக்கு இருக்கிற டவுட்ஸ்..
  1. என்ன தான் நான் செக் வச்சாலும்ஆர்லி மோனி கிட்ட பேசாம இருக்க மாட்டா! எப்படி மோனியை பார்த்துக்கிறது?
  2. மோனி ஷங்கர் விஷயத்தில் யோசிச்சது.. அவனுக்கு சப்போர்ட் பண்ணது எல்லாம் அவ மனசை தெளிவுபடுத்துது.. பட் அதை அவ எப்போ உணர்வா னு தெரியலை.. பட் அவளுடைய சிந்திக்கும் திறன் கொஞ்சம் கூடியிருக்கிறது.. இந்த காதல் ஒரு குழந்தையை குமரியாக்குதே!
ஷங்கர்-மோனி, சேகர்-ஜெனி, சிவா..  இவங்கலவ்லாம் எனக்கு சின்சியரா தான் படுது.. இந்த குறுகிய காலத்தில் இப்படி? எனக்கு புரியவே மாட்டிக்குது!!!!!!!!!!!!”
அருணாசலம் புன்னகைத்தார்.
மாலினி, சிரிக்காதீங்க! அம் சீரியஸ்.. நீங்க எப்போ அம்மாவை லவ் பண்ணீங்க? எத்தனை நாள்…………………”
நாளா! எத்தை நொடிகள் னு கேட்கணும்”
வாட்!”
அருணாசலம் புன்னகையுடன் “புஷ்பாவை பார்த்ததும் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்.. ஒரு கல்யாண வீட்டுல ரெண்டு வாண்டுகளை அவ மிரட்டிட்டு இருந்தப்ப தான் நான் அவளை பார்த்தேன்.. பார்த்ததும் இவ தான் என் மனைவி னு ஹார்ட்டில் பிக்ஸ் ஆகிருச்சு டா…”
அது எப்படி பா பார்த்ததும் இப்படி தோணும்?”
அருணாசலம் சிரித்தார்.
மாலினி, சிரிக்காம பதில் சொல்லுங்க”
டேய்! லவ் என்பது ஒரு பீலிங் அதை உணர தான் முடியும், விளக்கமெல்லாம் சொல்ல முடியாது”
அது ஏன் முடியாது? நான் உங்க மேல் வச்சிருக்க லவ்-வயோ நீங்க என் மேல் வச்சிருக்க லவ்-வயோ விளக்க முடியும் தானே!!!”
மாலு.. உன் அம்மா மேல் இருக்கும் காதலை என்னால் எக்ஸ்ப்ளைன் பண்ண முடியும் பட் நீ கேட்பது.. சரி இதை சொல்லு.. உனக்கு ஏன் என் மேல் அதிக பாசம்? இப்போனு இல்லை.. சின்ன வயசுல இருந்தே, விவரம் தெரியாத வயசுல இருந்தே உனக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும்”
ஸோ சிம்பள் எப்போதும் என்னை புரிந்துக் கொண்டு எனக்கு வேண்டியதை   நான் கேட்கும் முன்பே தருவீங்க.. என்னை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிறீங்க.. அறியாத வயசு என்றாலும் இது தான் காரணமா இருக்கும்”
மாலு.. காதலுக்கு காராணம் கிடையாது.. காரணம் இருந்தால் அது காதலே கிடையாது”
அப்போ எனக்கு உங்க மேல் லவ் இல்லையா?”
நீ இப்போ சொன்ன காரணம் ஏன் என் மேல் பாசம் என்பதற்கு இல்லை.. என் மேல் ஏன் அதிக  பாசம் என்பதற்கு தான்.. ஸோ புரிதா பாசம் லவ் இதுக்குலாம் காரணம் சொல்ல முடியாது”
என்னவோ போங்க”
அருணாசலம் புன்னகையுடன், உனக்கு லவ் வந்தா புரியும் டா”
அது என்னவோ எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லையே! நான் லவ் பண்ணுவேன்னும் தோணலை” என்று தோளை குலுக்கினாள்.
நிறைய டவுட் னு சொன்ன!”
ஹ்ம்ம்.. சொல்றேன். பஸ்ட் டவுட் கிளியர் பண்ணுங்க”
ஷங்கர் கிட்ட மோனி சொன்னதை சொல்லு.. அவன் பார்த்துப்பான்”
நானும் இதை யோசிச்சேன் பட் நான் எபப்டி ஆர்லி சொன்னதை சொல்ல னு கொஞ்சம் தயக்கமா இருக்குது”
ஹ்ம்ம்.. நான் வேணும்னா பேசட்டா?”
ஹ்ம்ம்.. பார்க்கலாம்.. மோனி எப்படியும்  நாளானைக்கு தான் காலேஜ் வருவா.. நாளைக்கு ஷங்கர் கிட்ட பேசி பார்க்கிறேன். என்னால் சொல்ல முடியலை னா நாளைக்கு போனில் நீங்க பேசுங்க”
ஓகே.. வேற என்ன டவுட்?”
அந்த சீனியர் கிருஷ்ணன் விஷயம் தான்.. எப்படி இன்னைக்கே வந்து சாரி கேட்டான்? அதுவும் சாரி கேட்குறதுக்குனே காலேஜ் வரை வந்திருக்கிறான்! அவன் பேசினது என்னவோ உண்மை போல தான் இருந்துது.. அவன் பார்வை கூட குற்ற-உணர்ச்சி, மன்னிக்க வேண்டும் என்ற தவிப்பு இப்படி தான் இருந்தது”
எனக்கு தெரிந்து அவன் இயல்பில் நல்லவனா தான் இருக்கணும் ஏதோ  கெட்ட சகவாசத்தில் தெரியாம தப்பு செஞ்சுருப்பான்.. வீட்டுக்கு  போய் யோசிச்சு பார்த்திருப்பான்…. பீல் பண்ணிருப்பான்.. உன்னிடம் உடனே நேர்ல  மன்னிப்பு கேட்கணும் னு தோன்றியிருக்கலாம் “
ஹ்ம்ம்…”
பட்.. எதுக்கும் ஜாக்கிரதையாவே இரு டா”
மாலினி புன்னகையுடன், “sure.. டோன்ட் வொர்ரி”
மாலினி, லாஸ்ட் டவுட்.. நான் செல்வா கிட்ட பேசிறட்டா? பேசி பக்குவமா உண்மையை சொல்லிடவா?”
திடீர்ன்னு ஏன் இப்படி யோசிச்ச? மோனி பயப்படுறா னா?”
அதுவும் ஒரு காரணம் தான்.. ஒரே கிளாஸ்ஸில் இருந்துட்டு சும்மா சும்மா காரணமே இல்லாம தேவையே இல்லாம முறைச்சிக்கிறது, என்னவோ போல் இருக்குது.. அதான்”
ஓகே.. பேசு.. பட் அவன் பொறுமையா கேட்கணுமே!”
அதே தான் என் யோசனையும்.. என்ன பண்ணலாம்?”
சிறிது யோசித்த அருணாசலம், அந்த இன்டர்-காலேஜ் காம்படிஷன்க்கு செல்வா போறான் தானே”
போ பா.. அதுக்கு என்னால் போக முடியாது”
மாலு.. இது என்ன சிறுபிள்ளைத் தனம்.. ஜெனிஷா வந்தா உனக்கென்ன?”
அவ தேவை இல்லாம சீண்டிட்டே இருப்பா.. நிம்மதியா போயிட்டு வர முடியாது.. எரிச்சலா இருக்கும்.. பஸ்ட் இயர் கேர்ள்ஸ் ஜெனி, ஆஷா தவிர வேற யாரும் செலக்ட் ஆகலை.. முக்கியமா ஆர்லியிடம்  மோனியை தனியா விட்டுட்டு என்னால் எப்படி போக முடியும்?”
மோனியை பார்த்துக்க தான் ஷங்கர் இருக்கானே! ஸோ மோனி பற்றி கவ……………..”
ஷங்கர் இருந்தா! மோனி என் கிட்ட தானே…………….”
நீ என்ன அவ கூடவே IT கிளாஸ்ஸில் இருக்கிறியா? அவ கூடவே மக்ஸிமம் இருப்பது அவன் தான்..”
இருந்தாலும்” என்று மாலினி இழுக்க அருணாசலம், மோனி பற்றி நீ கவலை படாத.. தென்…. ஜெனிஷா போறா னு நீ போகாம இருப்பது.. இது ஒரு காரணமா! அடுத்தவங்களுக்காக காரணமே இல்லாம நீ ஏன் உன் திறமையை வீணாக்குற?
என் லிட்டில் டார்லிங் அப்படி இல்லையே”
ஓகே.. நானும் போறேன்.. அவளுக்காக ஒன்னும் நான் போகலை னு சொல்லலை. முக்கிய காரணம் மோனி தான்.. 95% மோனி.. 5% தான் ஜெனி”
(வீடு வந்து சேர்ந்திருந்தனர்.)
அந்த 5% கூட ஏற்றுக்கொள்ளப் படாது”
ஓகே ஓகே.. தெரியாம சொல்லிட்டேன்..” என்று கூறியபடியே கதவை திறந்து இறங்கினாள் மாலினி.
வீட்டின் உள்ளே சென்றதும் மாலினி அன்னையை பார்த்து  புன்னகையுடன், இன்னைக்கு தான் ஒரு விஷயம் புரிந்துது புஷ்”
புஷ்பா முறைக்கவும், அதை பொருட் படுத்தாமல், மாலினி, என்ன விஷயம் னு கேளு புஷ்ஷி கேட்
எப்படி டி இப்படி விதவிதமா என் பெயரை கொலை பண்ற?” 
அதுவா பூ.. உன் ரியாக்ஷன் பார்த்தும், உன் மேல் இருக்குற லவ்-லயும் அதுவா வருது”
வரும் டி வரும்.. நாலு சாத்து சாத்துனா! எல்லாம் காணாம போய்டும்”
எது காணாம போய்டும் ?”
ஹ்ம்ம்.. உன் கொழுப்பு”
அச்சோ.. ப்ளட்-டில்  கொலெஸ்ட்ரால் அதான் கொழுப்பு  கொஞ்சமாது இருக்கணும் இல்லாட்டி  கஷ்டமா போய்டும்.. இது கூட உனக்கு தெரியாதா புஷ்ஷு!
உன்னை…………….”
சரி இதை விடு.. என்ன விஷயம் னு கேட்கவே இல்லையே!”
நான் கேட்கலைனா சொல்லாம இருந்துருவியா!”
இல்லை தான்.. என்ன இருந்தாலும் நீ கேட்டு நான் சொல்றது தானே நல்லா இருக்கும்”
சரி.. சொல்லு என்ன விஷயம் புரிந்தது உனக்கு?”
நீ எப்போ திட்டினாலும்  அருணா  ஏன் சிரிச்சுட்டே.. ஹ்ம்ம்.. இல்லை இல்லை.. ரசிச்சு சிரிச்சுட்டே இருக்கார் னு புரிஞ்சுது”
புஷ்பா புரியாமல் பார்க்க மாலினி, ஒரு கல்யாண வீட்டுல ஏதோ ரெண்டு வாண்டுகளை நீ திட்டிட்டு இருந்தப்ப தான் உன் டார்லிங் உன்னை முதல் முதல பார்த்தாராமே! அதான் நீ எப்போ திட்டினாலும் மலரும் நினைவுகளா மைண்டு அங்க போய்டுது போல.. அதான் உன் திட்டை ரசிச்சு, சிரிக்கிறார்”
அப்பொழுது தான் உள்ளே நுழைந்த அருணாச்சலத்தை புஷ்பா முறைக்க, அருணாசலம் சிறிது புன்னகைத்துவிட்டு, மாலினியிடம் மேடை ரகசியமாக, என்ன விஷயம் டா! என் டார்லிங் ஏன் இப்படி பாசமா பார்க்கிறா?”
மாலினி வாய்விட்டு சிரித்தபடி, பார்த்தியா நான் சொல்லலை.. அவர் ரசிச்சு சிரிப்பார் னு.. உன் முறைப்பு பாசமா தெரிதாம்..”
புஷ்பா பல்லை கடித்தப்படி, எதை எதை பொண்ணுகிட்ட பேசணும்னே தெரியாதா உங்களுக்கு! ஆள் தான் வளர்ந்துருக்கீங்க! கொஞ்சம் கூட வெவஸ்த்தையே இல்லை…………” என்று பொரிய தொடங்க, மாலினி புன்னகையுடன் அருணாச்சலத்திடம், என்ஜாய்” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றாள்.
மழை தொடரும்….

Advertisement