Advertisement

மழை 16:
மாலினி, “ஷங்கர் கூல் டோவ்ன்.. கேன்டீன் போகலாம்”
“staffs பார்த்தா” என்று தயங்கவும், மாலினி, “நந்தினியும் பிருந்தாவும் அங்க தான் இருக்காங்க.. எனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. நம்ம பசங்க எப்படியும் அங்க தான் இருப்பாங்க.. ஸோ நோ ப்ராப்ஸ்”
ஷங்கர் அமைதியாக வரவும் மாலினி, “உனக்கு இவ்வளவு கோபம் வருமா?”
“இது தான் முதல் முறை நான் கோபப் படுறது”
மாலினி சிறு ஆச்சரியத்துடன் பார்க்கவும், அவன், “நிஜம் மாலினி” என்று கூறி புன்னகைத்தான்.
மாலினி குறும்பு சிரிப்புடன், “இப்ப மட்டும் ஏன் இவளோ கோபம்?”
ஏதோ சொல்லவந்த ஷங்கர் மாலினியின் முகத்தை பார்த்ததும் சிறு வெக்கத்துடன் சிரித்தான்.
“ஹே பசங்க கூட வெக்கப் படுவீங்களா?”
“மாலினி.. மோனி………….” என்று தயங்கவும், மாலினி, “அன்னைக்கு மோனி கிட்ட ப்ரொபோஸ் பண்ணியா?”
ஷங்கர் இல்லை என்று தலையை ஆட்டினான்.
மாலினி, “ஹ்ம்ம்.. இப்ப உன் காதலை சொல்லாத.. அதை புரிஞ்சிக்கிற பக்குவம் அவளுக்கு இல்லை.. அது மட்டுமில்லை.. இது காதல் தானா னு நீ தெளிவா அனலைஸ்……………”
“இதில் நான் தெளிவா தான் இருக்கிறேன்”
மாலினி புன்னகைத்தாள். ஷங்கர், “ரியலி மாலினி.. நான் என் அம்மா கிட்ட கூட பேசிட்டேன்”
“அட பாவி.. எப்போ பேசின? அம்மா என்ன சொன்னாங்க?
“அது.. முந்தாநேத்து தான் சொன்னேன்.. அம்மா ‘எதிர் பார்த்தேன்’ னு சொன்னாங்க”
“ஸோ வீட்டில் முழு நேரமும் மோனி புராணம் பாடியிருக்க!”
ஷங்கர் சிரித்தான். பிறகு சிறு தயக்கத்துடன், “மாலினி அன்னைக்கு…………”
“அது உங்க பெர்சனல்…………..”
“இல்லை மாலினி உனக்கு தெரிறது தான் பெட்டெர்.. ஆர்லி என்ன சொல்லி மிரிட்டினா னு தெரியலை.. ஸோ உனக்கு தெரியனும்.. ஆனால் என்னை தப்ப நினைக்காத மாலினி ப்ளீஸ்..
(மாலினி மனதினுள் ‘என்ன பண்ணான்? ஏன் இப்படி தயங்குறான்.. பீல் பண்றான்?’ என்று கேட்டுக் கொண்டாள்)
நான் வேணும் னு செய்யலை.. என்னை அறியாம தான்.. 
அன்னைக்கு லஞ்ச் பிரேக்கில் மோகனா முகபாவங்களையே பார்த்துட்டு இருந்த நான் என்னையே மறந்த நிலையில் இருந்தேன்.. அப்போ அவ என்னை திரும்பி பார்க்கவும்………….. உதட்டசைவில் சின்னதா…… சின்னதா முத்தம் குடுத்துட்டேன்..”
மாலினி அதிர்ந்தாள்.
“அட பாவி.. இப்படியா பண்ணுவ?”
ஷங்கர் பெரிதும் வருந்திய குரலில், “இல்லை மாலினி.. எனக்கே தெரியாம தான்…
மோனி முகத்தில் பயத்தை பார்த்ததும் தான் என்ன பண்ணேன் என்பதே உரைத்தது.. அம் வெரி சாரி மாலினி..”
“அதான் அன்னைக்கு என் கையை பிடிச்சுட்டு ‘பயமா இருக்குது மாலு’ னு சொன்னாளா! ஹ்ம்ம்.. சமாளிக்கிறேன்.. முதல்ல இந்த ஆர்லி என்ன மிரட்டினா னு கேட்டு தெரிஞ்சுக்கணும்”
“அவ ஏன் மோனியை மிரட்டினா?”
கேன்டீன் வாசலுக்கு வந்திருந்தனர். மாலினி புன்னகையுடன், “சிம்பிள் அவ உன்னை லவ் பண்றா” என்று கூறிவிட்டு தன் தோழிகள் இருந்த இடத்திற்கு சென்றாள்.
“வாட்?” என்று ஷங்கர் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான்.
அப்போது அங்கே வந்த கிருஷ்ணமூர்த்தி அவனது தோளை தொட்டு, “இங்கேயே நின்னு என்ன பண்ணிட்டு இருக்க?”
“ஹ்ம்ம்.. மாலினி ஒன்னு சொன்னா.. அதான்…………” என்று இழுத்தான் ஷங்கர்.
“என்ன சொன்னா?”
“ஹ்ம்ம்.. அதை அப்பறம் சொல்றேன்.. வா உள்ள போகலாம்”
இருவரும் உள்ளே சென்றனர்.
இதே நேரத்தில் CSE வகுப்பறையில் –
ராஜசேகர் ஜெனிஷாவிடம் ஒரு பரிசு பொருளை நீட்டினான்.
ஜெனிஷா அதை வாங்காமல், “என்ன இது?”
“சின்ன கிப்ட்”
“எதுக்கு?”
ராஜசேகர் கண்ணில் காதலுடன், “உனக்கே தெரியும்”
அந்த பார்வையில் ஒரு நொடி தடுமாறினாலும் தன்னை சமாளித்து, ஒன்னும் அறியாதவள் போல், “எனக்கு தெரியாதே! எதுக்கு இந்த கிப்ட்?”
ஜெனிஷா என்ன தான் சமாளித்தாலும் அவளை அறியாதவனா ராஜசேகர்!!!
ராஜசேகர் வழக்கமான வசீகர புன்னகையுடன், “சரி.. எனக்கு குடுக்கணும் னு தோனுச்சு குடுக்கிறேன்”
ஜெனிஷா கண்ணில் சிறு புன்னகையுடன், “எனக்கு வாங்கணும் னு தோனலையே”
 “ஹ்ம்ம்.. என்ன பண்ணலாம்!” என்று சிறிது யோசிப்பது போல் பாவனை செய்தவன், ஆஷாவிடம், “ஆஷ்.. உனக்கு வாங்க இஷ்டமா?”
ஜெனிஷாவை ஓரப்பார்வை பார்த்த ஆஷா புன்னகையுடன், “ஓ எஸ்” என்று தலையை ஆட்டினாள்.
ஜெனிஷா எரிச்சலுடன், “அடுத்தவங்களுக்கு வாங்கினதை உன் தலையில் கட்டுறான்.. நீயும் வெக்கமே இல்லாம இளிச்சுட்டு வாங்க போற”
ஆஷா, “அடுத்தவங்களா! நீ அடுத்தவங்க இல்லையே ஜெனி.. ஸோ எனக்கு நோ ப்ராப்ஸ்.. நீ குடு சேகர்” என்று கையை நீட்டவும், ராஜசேகர் குறுஞ் சிரிப்புடன் ஜெனிஷாவை பார்த்தபடியே பரிசு பொருளை நீட்டவும், ஜெனிஷா அவசரமாக அதை பிடுங்கினாள்.
ராஜசேகர் அவளையே பார்த்தபடி சிரித்துக் கொண்டு நின்றான்.
ஆஷா, “ஏய்! நீ எதுக்கு பிடுங்குற? அ………………..”
ஜெனிஷா ராஜசேகரை முறைத்துக் கொண்டே, “அவன் எனக்கு தானே வாங்கிட்டு வந்தான்”
ஆஷா, “அதை தான் வேண்டாம் னு சொல்லிட்டியே”
ஜெனிஷா இப்பொழுதும் ராஜசேகரை முறைத்துக் கொண்டே, “இப்போ வேணும் னு சொல்றேன்”
ஆஷா, “பதில் இங்க லுக் அங்கயா!”
“உன் வேலையை மட்டும் பாரு”
“தோடா.. உங்க போதைக்கு நான் ஊறுகாவா!!!”
ராஜசேகர் சிரிப்புடன் ஜெனிஷாவை பார்த்துக் கொண்டு இருக்க, ஜெனிஷா தன்னை மறந்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இவர்களை பார்த்த ஆஷா, “ஹ்ம்ம்.. இனி என்ன பேசுனாலும் இதுங்க காதில் விழாது… ஒரு டயலாக் அ வேஸ்ட் பண்ணிட்டியே ஆஷ்!” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் வகுப்பறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆசிரியர்கள் யாரும் வருகிறார்களா என்று வெளியே நோட்டமிட தொடங்கினாள்.
ராஜசேகர் மென்மையான குரலில், “பிரிச்சு பாரு”
ஜெனிஷா பிரித்து பார்த்தாள். உள்ளே அழகான பேனா இருந்தது.
ஜெனிஷாவிற்கு அது மிகவும் பிடித்திருந்தது, ஆனால் சிறிது சுருங்கி முகத்துடன் அதை அவனிடம் நீட்டி, “பென் வேணாம்..” என்றாள்.
“ஏன்?”
“பென் வாங்கினா அவங்களுக்குள் பிரெண்ட்ஷிப் கட் ஆகிடும்”
ராஜசேகர் உல்லாசமாக சிரித்தபடி, “பிரெண்ட்ஷிப் தானே கட் ஆகும்.. அப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை.. நீயே வச்சுக்கோ” என்றான்.
ஜெனிஷா சிறு தடுமாற்றத்துடன் ராஜசேகரை பார்க்காமல், “இல்ல.. அது…” இழுக்கவும்,
ராஜசேகர் சிறிது வாய்விட்டு சிரித்தான்.
“அந்த பார்வைக்கும்  இந்த வெக்கத்துக்கு நாளைக்கு ஒரு ஸ்பெஷல் கிப்ட் தரேன்” என்று கூறி சென்றுவிட்டான்.
இரண்டு நொடிகள் கழித்து ஜெனிஷா நிமிர்ந்து பார்க்க, ராஜசேகரை வகுப்பறையில் காணாமல் ஏமாற்றமடைந்தாள்.
“நனநன நனா.. நனநன நனா..
ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா
ஒரே ஓர் ஆற்றில்.. ஒரே ஓர் ஓடம்..
தள்ளாடும் உன்னை தாங்குவானா!
வா என்று கட்டளையிட்டானா!
முத்தத்தில் கைவிலங்கிட்டானா!
கைதாகினாள் ஜெனிஷா…..” என்று பாஹுபலி திரைப்பட பாடலை ஜெனிஷாவிற்கு ஏற்ப மாற்றி ஆஷா பாட, 
ஜெனிஷா, “ஏய்!”
“பாருடா… நம்ம ஜெனிக்கு கூட வெக்கம் வருது!!!”
“ரொம்ப பண்ணாதடி”
ஆஷா மனநிறைவோடு சிரித்துவிட்டு, “எப்பா உன்னை ஒத்துக்க வைக்குறதுக்குள்ள நான் என்னலாம் பண்ணவேண்டியது இருக்குது?”
“நீ என்னடி பண்ண? சும்மா கதை விடாத”
“ஹ்ம்ம்.. ஏன் சொல்ல மாட்ட.. வேணும் னு உன்னை உஷுபேத்தி விட்டேன்.. அது கூட பரவா இல்லை, இப்போ நீங்க ரெண்டு பேரும் லவ்ஸ் பண்ண நான் காவல் காத்தேன் பாரு………….”
ஜெனிஷா அலட்டிக் கொள்ளாமல், “இதை விட உனக்கு வேற என்ன வேலை?”
“அடி பாவி! இதை தான் உன் வேலையை பாரு னு சொன்னியா”
“பின்ன வேற என்ன னு நினைச்ச?”
“படு பாவி.. பேச்சுகாது ‘இல்லை’ னு சொல்றியா?”
“இப்போ ஒரு பேச்சு அப்பறம் ஒரு பேச்சு னு கிடையாது.. இந்த நிஷா எப்போதுமே ஒரே பேச்சு தான்”
“ஹ்ம்ம்.. ஜெனி போய் நிஷா வா.. ரொம்ப தான் முன்னேற்றம்.. அது சரி எனக்கு ஒரு டவுட் மேடம்”
ஜெனிஷா ‘என்ன’ என்பது போல் பார்க்கவும் ஆஷா, “கொஞ்ச நாள் முன் ‘அவன் ஒரு லூசு.. நானாது லவ்-வாது’ னு சொன்னது நீங்க தானே மேடம்!”
ஜெனிஷா தன் வலது காதை தேய்த்தபடி, “நீ ஏதும் பேசுனியா ஆஷ்? எனக்கு எதுவுமே கேட்கலையே!”
“ஹ்ம்ம்.. எல்லாம் என் நேரம்.. காலக் கொடுமை”
“இப்போ கூட ஏதும் கேட்கலை ஆஷ்”
“ஹ்ம்ம்.. இன்னைக்கு சாயங்காலம் ENT கிட்ட கூட்டிட்டு போறேன்.. சரியாகிடும்”
“என்ன சொல்ற? சாயங்காலம் என்னை தனியா போக சொல்றியா.. ஓகே டி”
கேன்டீன்:
மாலினி ஆர்லியுடன் நிகழ்ந்த உரையாடலை சொல்லி  முடித்திருக்க, பிருந்தா கோபமாக, “இன்னும் ரெண்டு அடி குடுத்திருக்கணும்.. மோனி குழந்தையை போய் என்ன பாடு படுத்தி இருக்கா..”
மாலினி, “ஹ்ம்ம்.. மோனி CSE டிப்பார்ட்மென்ட் எடுத்துருக்கலாம்” என்று சோகமாக கூறினாள்.
நந்தினி, “கவலைப் படாத மாலினி.. ஷங்கர் பார்த்துப்பான்”
மாலினி, “ச்ச்.. அவன் எப்போதும் கூடவே இருந்து பார்த்துக்க முடியுமா?”
பிருந்தா, “அதான் வாழ்க்கை முழுவதும்  பார்த்துக்க சார் ரெடியா இருக்காரே!!!”
[ஷங்கர் மோகனாவை காதலிப்பதை மட்டும்  மாலினி  கூறியிருந்தாள்.. அவனின் அந்தரங்கமான விஷயத்தை பற்றி சொல்லவில்லை]
மாலினி மெலிதாக சிரித்தாலும் அவள் முகத்தில் கவலையின் ரேகை ஓடியது. அவளது தோளை தட்டி நந்தினி, “கவலைப் படாதே.. அவளுக்கும் பக்குவம் வரணும் தானே! அதுக்காக தான் கடவுள் இந்த விளையாட்டை நடத்துறாரோ என்னவோ!”
மாலினி வரவழைத்த சிறு புன்னகையுடன், “ஹ்ம்ம்…” என்றாள்.
நந்தினி மாலினியிடம், “அம்மா காலையிலேயே கல்யாண வீடு னு கிளம்பினதால் நான் லஞ்ச் கொண்டுவரலை.. நீ ஏன் கொண்டு வரலை?”
மாலினி சிறு புன்னகையுடன், “அதே பெரிய கதை தான் காரணம்.. போனில் சொல்றேன் டா.. இங்க வேண்டாம்”
பிருந்தா, “எப்போதும் சஸ்பென்ஸ் வைக்கிறதே உனக்கு வேலையா போச்சு”
மாலினி புன்னகைத்துவிட்டு, “ஹ்ம்ம்.. சரி.. எனக்கு தக்காளி சாதம்.. நட்டீஸ் உனக்கு சாம்பார் சாதம் தானே!”
நந்தினி, “நட்டீஸ் ஆ!”
“ஆமா எப்பவும் ஸ்வீட்டா பேசுறியே! என்னோட பேவரெட் சாக்லெட் நட்டீஸ் தான்..  அதான் நண்ட்ஸ் என்ற பெயரை நட்டீஸ் ஆ மாத்திட்டேன்”
நந்தினி புன்னகைக்க, பிருந்தா முறைப்புடன், “இவ எப்பயும் ஸ்வீட்டா பேசுறாளா? என்னிடம் கேட்டா மிர்ச்சி மிளகா னு தான் சொல்வேன்”
“அது உன் அனுபவம் இது என் அனுபவம்” என்று மாலினி புன்னகையுடன் கூறினாள்.
நந்தினி பிருந்தாவை முறைக்க அவள், “பாரு இப்போ கூட முறைக்க தான் செய்றா”
“நான் போய் வாங்கிட்டு வரதுக்குள் உங்க சண்டையை முடிங்க” என்றபடி எழ, நந்தினி, “இரு.. நானும் வரேன்” என்றபடி எழுந்தாள்.
ஓரடி எடுத்து வைத்த மாலினி திரும்பி, “ஹே பிந்துஸ்…………”
பிருந்தா பல்லை கடித்துக் கொண்டு, “ஹே அப்படி கூபிடாத”
மாலினி, “சரி..சரி… உனக்கு என்ன வேணும்?”
“நான் தான் லஞ்ச் கொண்டு வந்துட்டேனே.. நீங்க ரெண்டு பேரும் தான் கொண்டு வரலை”
மாலினியும் நந்தினியும் பிருந்தாவை ஆச்சரியமாக பார்க்க, பிருந்தா, “நீங்க தானே உடம்பை குறை னு சொன்னீங்க” என்று எழும்பாத குரலில் முணுமுணுக்க, மாலினி மயக்கம் வருவது போல் நடித்தாள்.
பிருந்தா மாலினியை முறைக்க, நந்தினி, “என்னால நம்பவே முடியலை மாலு”
மாலினி, “ஹ்ம்ம்.. என்னாலையும் தான்.. நம்பமுடியவில்லை.. வில்லை..வில்லை..” என்று பாடினாள்.
பிருந்தா, “ஓவரா சீன் போடாம போய் வாங்கிட்டு வா.. எனக்கு பசிக்குது..”
மாலினியும் நந்தினியும் புன்னகையுடன் உணவை வாங்க சென்றனர். செல்லும் போது நந்தினி யோசனையுடன், “நீ என்ன நினைக்கிற மாலு?”
“எதை?”
“பிருந்தா எடை குறைக்கும் எண்ணத்தை  பற்றி”
“ஹ்ம்ம்.. யோசிக்க வேண்டிய விஷயம் தான்”
அப்பொழுது அங்கே வந்த ஸ்ரீராமன், “மாலினி” என்று அழைக்க, மாலினி முகத்தில் எரிச்சலை காட்டி விலக, அவன், “மாலினி ப்ளீஸ்.. எதுக்கு கோபப் படுற னு காரணத்தை சொல்லு”
மாலினி கோபமாக, “உனக்கே தெரியும்”
“சத்தியமா தெரியாது”
“பொய்யா சத்யம் செய்றதுலாம் உனக்கு அவளோ ஈஸி யா இருக்குது!!!!”
ஸ்ரீராமனுக்கு உண்மையாவே மாலினியின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை. அவன், “மாலினி ப்ளீஸ்” என்று உண்மையாகவே கெஞ்சவும்,
மாலினி, “முந்தா நேத்து இவனிங் சேகர், சிவா கிட்ட என்ன சொன்ன?”
ஸ்ரீராமன் அதிர்ந்தான். நொடி பொழுதில் தன்னை சமாளித்துக் கொண்டு, “ஒன்..னும்.. சொல்லலையே”
மாலினி அவனை கடுமையாக முறைத்தாள்.
“..”
“ஓகே.. நேத்து ஏன் நீ வரலை?”
“அது.. உடம்பு சரி இல்லை”
“ஏன் சரி இல்லாம போச்சு?”
“இதுக்குலாமா காரணம் இருக்கும்?”
“சை.. உன் கூட பேசுறதே வேஸ்ட்” என்று கூறி மாலினி செல்ல, ஸ்ரீராமன் அவசரமாக, “மாலினி.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ரொம்ப  சாரி.. நான் பேசினது தப்பு தான்.. நான் ஏன் அப்படி………………..”
“போய்டு.. இங்க இருந்து போய்டு.. இல்ல கேவலப் பட்டுபோவ..”
“மாலினி ப்ளீஸ்.. நா………………………………….”
மாலினி தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, “சை” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
ஸ்ரீராமன் பசங்க இருந்த இடத்திற்கு சென்றான்.
[கேன்டீன் விதிமுறை பற்றி சொல்லவே இல்லையே.. இடது புறம் பசங்க என்றும் வலது புறம் பொண்ணுங்க என்றும் தான் அமர வேண்டும்.. பசங்க பொண்ணுங்க சேர்ந்து அமரவே கூடாது.. நடுவில் ஆசிரியர்களுக்கான இடம்.. இடது புறம் பொண்ணுக அமரக் கூடாது, அதே போல் வலது புறம் பசங்க அமரக் கூடாது]
ஸ்ரீராமன் வருவதை பார்த்த சிவகுரு சிரிப்புடன் சத்தமாக சக்திவேலிடம், “அசிங்கப் பட்டான் ஆட்டோக்காரன்” என்று சந்தானம்(நகைச்சுவை நடிகர்) போல் கூறினான்.
ஸ்ரீராமன் சிவகுருவை முறைத்து மனதினுள் கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டே வேறு மேஜையில் அமர்ந்தான்.
சிவகுரு சிரிப்பின் நடுவே, “ஐயோ ஐயோ” என்று இப்பொழுது வடிவேல்(நகைச்சுவை நடிகர்) போல் கூறினான்.
ஸ்ரீராமன் எழுந்துவந்து, “டேய் என்ன நக்காலா?”
“ஆமா அதுக்கு இப்போ என்னங்கிற?”
ஸ்ரீராமன் குரலை உயர்த்தி, “டேய்!”
சிவகுரு வலது கையை ஆட்டி, “போடா.. போடா..” 
ஸ்ரீராமன் பல்லை கடித்து, “உன்னை” என்று கூறி சிவகுரு சட்டையை பிடிக்க, 
சிவகுரு அலட்டிக் கொள்ளாமல் அவனது கையை தட்டி விட்டு, “சும்மா வெட்டி சீன் போடாத.. அன்னைக்கு வாங்கினது பத்தாதா!!!”
கிருஷ்ணமூர்த்தி, “குரு கேன்டீனில் எதுக்கு சண்டை!” என்று கூறி இருவரையும் அடக்கினான்.
மாலினி தங்கள் மேஜைக்கு சென்றதும், பிருந்தா, “என்னடி ஒன்னும் வாங்காம வர?”
மாலினி எதுவும் பேசவில்லை, கோபமும் எரிச்சலுமாக இருந்தாள்.
பிருந்தா, “என்னாச்சுடி?”
மாலினி தண்ணீரை எடுத்து குடித்து தன்னை நிதானத்திற்கு கொண்டு வர முயற்சித்தாள். நந்தினி இரண்டு தட்டுக்களுடன் வந்தமர்ந்தாள்.

Advertisement