Advertisement

மழை 15:
அடுத்த நாள் காலை 7 மணிக்கு மாலினி கிருஷ்ணமூர்த்தியை தன் கைபேசியில் இருந்து அழைத்தாள்.
கிருஷ்ணமூர்த்தி, “ஹலோ”
“ஹலோ.. மே ஐ ஸ்பீக் டு மூர்த்தி?”
சிறு மௌனம் நிலவவும் மாலினி, “ஹலோ ஹலோ”
“ஹ்ம்ம்.. கிருஷ்ணமூர்த்தி தான் பேசுறேன்.. நீங்க?”  
“ஹாய் மூர்த்தி! குட் மார்னிங்.. நான் மாலினி பேசுறேன்”
“குட் மார்னிங் மாலினி! எப்படி இருக்க?”
“யா பைன்.. நீ எபப்டி இருக்க?”
“எனக்கு என்ன? நான் நல்லா தான் இருக்கிறேன்”
“இல்லை அப்பா உனக்கு பீவர் இருந்ததுனும், தலையில் வேற அடி பட்டதுனும் சொன்னாங்க”
“ஓ! பீவரெல்லாம் பெரிய விஷயமே இல்லை.. தங்கச்சி தான் அதை காரணம் காட்டி தங்க வச்சிட்டா..” 
“ஓ! தலை”
“அது ஒன்னும் இல்லை”
“ஹே! அலட்சியமா விடாத.. ஒழுங்கா ஆயின்மென்ட் போடு.. என்ன!” என்று சிறிது மிரட்டவும் கிருஷ்ணமூர்த்தி திகைத்தான், பிறகு சமாளித்து, “என்ன மிரட்டல் பலமா இருக்குது?”
“என் பிரெண்ட் நான் மிரட்டுறேன்! உனக்கு என்ன?”
கிருஷ்ணமூர்த்தி அசந்து போனான். சிரித்தான்.
“என்ன இளிப்பு?”
“என் வாய் நான் இளிக்கிறேன்.. உனக்கு என்ன?”
“ஹ்ம்ம்.. கேட்கிறது என் காதாச்சே!”
“காதை மூடிக்கோ”
“அதுக்கு நீ உன் வாயை மூடிக்கலாமே!”
“அப்பறம் எப்படி நீ கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றது?”
“பேசும் போது வாயை திறந்துகோ”
கிருஷ்ணமூர்த்தி சிரித்தான். மாலினியும் சிரித்தாள்.
மாலினி, “மூர்த்தி ரொம்ப தேங்க்ஸ்.. சொல்ல வார்த்தை இல்லை.. தேங்க்ஸ்”
“என் பிரெண்ட் நான் காப்பாத்தினேன்.. நீ ஏன் தேங்க்ஸ் சொல்ற?”
மாலினி சிரித்தாள்.
கிருஷ்ணமூர்த்தி, “என்ன…………….”
“இளிப்பு.. அதானே.. காபி கேட் பண்ணாம சொந்தமா யோசிங்க சார்”
மீண்டும் இருவரும் மெலிதாக சிரித்தனர்.
மாலினி, “போன் நீ தானே எடுத்த?” 
“ஆமா.. ஏன் கேட்கிற?”
“இல்லை உன்னிடம் பேசணும் னு சொன்னதும் அமைதியா இருந்தியா அதான் கேட்டேன்”
“என்னை யாரும் மூர்த்தி னு கூப்பிட்டது இல்லை.. அதான்……..”
“ஓ! எனக்கு கிருஷ்ணா னு சொல்லவே பிடிக்கலை.. நான் உன்னை மூர்த்தி-னே கூப்பிடுறேன்.. ஓகே!”
கிருஷ்ணமூர்த்தி சிறு புன்னகையுடன், “ஓகே” என்றான்.
மாலினி, “ஓகே .. காலேஜில் பார்க்கலாம்”
“ஓகே”
“மூர்த்தி.. ஒன்ஸ் அகேன் தேங்க்ஸ் அ லாட்.. அண்ட் ஆல்சோ டேக் கேர் ஆப் யுவர் வூண்டு”
“sure” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
மாலினி வழக்கம் போல் தந்தையிடம் சென்று தான் பேசியதை ஒப்பித்தவள், “என் நம்பரில் இருந்து தான் பா பேசினேன்.. அவன் உங்களை அப்பா னு தானே கூப்பிட்டு பேசினான், நல்ல பையனும் கூட, என்னை காப்பாற்றியதால் மட்டுமில்லை எதோ தோனுச்சு.. என் நம்பரில் இருந்து பேசினேன்.. நீங்க சொல்வது போல் கெட்டதில் நல்லதாக இதன் மூலம் எனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைப்பான்னு தோணுது.. பார்க்கலாம்”
அருணாசலம் புன்னகயுடன் மகளில் தோளை தட்டிக் கொடுத்தார்.
மாலினி, “என் செல்லில் உன் பெயருடன் I.C.E னு நீ தான் சேர்த்தியா?”
“ஆமா டா.. நீ பாட்டுக்கு நிக் நேம்ஸ் வைத்து சேவ் பண்ணி வச்சிருக்க, அது ஒரு வகையில் நல்லது தான் என்றாலும் நேத்து என் நம்பர் கண்டு பிடிக்க முடியாம கிருஷ்.. மூர்த்தி திணறிட்டான்.. அதான்” 
“ஹ்ம்ம்.. ஓகே.. நான் போய் கிளம்புறேன்”
புஷ்பா, “இன்னைக்கு காலேஜ் லீவ் போட்டுரு மாலினி”
மாலினி, “ஏன்?”
அருணாசலம், “அம்மா சொல்றது சரி தான் டா.. ரெஸ்ட் எடுத்துக்கோ”
“இல்லை பா.. மோனி காலேஜ் வரதுக்குள்ள அங்க முடிக்க வேண்டிய வேலை ஒன்னு இருக்குது.. நான் போயே ஆகணும்” என்று உறுதியுடன் சொல்லி கிளம்ப சென்று விட்டாள்.
வழக்கம் போல் புஷ்பா, “நான் சொல்றதை இந்த வீட்டில் யார் கேட்கிறா?” என்று புலம்ப, மாலினி தன் அறை வாசலில் இருந்து, “நீ சொல்றதுக்கு பூம்-பூம் மாடு போல் தலையை ஆட்ட அருணா ரெடியா இருக்கும் போது………………”
“ஹே! அப்பா னு மரியாதை…………………”
“நான் குளிக்க போய்டேன் புஷ்” என்று கத்தியபடி குளியலறைக்குள் நுழைந்தாள்.
அருணாசலம் புன்னகையுடன் செய்தித்தாளை புரட்ட, புஷ்பா தலையை அடித்துக் கொண்டு சமயலறைக்கு சென்றார்.
மாலினி காலை உணவை முடித்துவிட்டு கிளம்பவும் அருணாசலமும் வெளியே வந்தார். மாலினி ஆச்சரியமாக பார்க்கவும், “இன்னைக்கு நான் ட்ராப் பண்றேன் டா”
“அப்பா…………”
அருணாசலம் புன்னகையுடன், “நோ மோர் ஆர்கியுமென்ட்ஸ்..” என்று கூறி மாலினியை அழைத்துச் சென்றார்.
கல்லூரிக்கு சென்ற மாலினியின் நெற்றியை பார்த்து, நந்தினி, “ஹே மாலு! என்ன காயம்?”
“அது ஒரு பெரிய கதை நண்ட்ஸ் (நந்து நண்டு என்று மாறி தற்போது நண்ட்ஸ் என்றானது) அப்பறம் சொல்றேன்”
பிருந்தா, “என்ன மாலு! கனவுல யாரையும் கட்டி பிடிக்கிறதா நினைத்து தலையாணியுடன் புரண்டு கட்டிலில் இருந்து கீழ விழுந்துட்டியா? யாருடி அந்த ஹீரோ?”
நந்தினி தலையின் அடித்துக் கொள்ள மாலினி புன்னகையுடன், “கண்டிப்பா உன் ஹீரோ இல்லை”
“என் ஹீரோ வா?”
“வேற யாரு வால் இல்லாத குரங்கு தான்” என்று கூறவும் சிவகுரு வகுப்பின் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. பிருந்தா அவனை பார்த்து முறைக்க அவன் மனதினுள், ‘என்ன வரவேற்பு பலமா இருக்குது!’ என்று நினைத்தவன் தன் இடத்திற்கு செல்லாமல் நேராக மாலினி இடத்திற்கு சென்றான் அதாவது பிருந்தாவின் இடத்திற்கு.
சிவகுரு, “குட் மார்னிங் பிந்துஸ்! எதுக்கு இந்த முறைப்பு? நேத்து எதுவும் மெச்செஜ் அனுப்பலை னா?”
மாலினி சிறு ஆச்சரியத்துடன் சிவகுருவை பார்த்தாள். அவள் அறிந்தவரை சிவகுரு பொண்ணுகளிடம் வம்பு பேசமாட்டான். சிறு கலாட்ட பேச்சு உண்டு ஆனால் இப்படி நேரடியாக வம்பு பண்ணி பார்த்தது இல்லை, அதுவும் அவனது ‘பிந்துஸ்’ என்ற அழைப்பும் அதை அவன் உச்சரித்த விதமும் அவளை ஆர்ச்சரியத்தில் ஆழ்த்தியது.
பிருந்தா, “டேய் வேணாம்?”
“என்ன வேணாம்?”
பிருந்தா பல்லை கடித்துக் கொண்டு, “மாலினி இந்த குரங்கை இங்கிருந்து போக சொல்லு”
“ஏன் மாலினி யானை(பிருந்தாவை பார்த்து அழுத்தத்துடன் கூறினான்) குரங்கு லாம் வரதுக்கு இது என்ன ஜூ வா?”
பிருந்தா கோபத்துடன் கையில் கிடைத்த பேனாவை தூக்கி எறிய, “கேட்ச்” என்று கூறி சிவகுரு அதை சரியாக பிடித்தான். பிறகு புன்னகையுடன், “இன்னைக்கு பென் கொண்டு வரலையே என்னாடா செய்றது னு நினைத்தேன்ன்.. தன்க் யூ பிந்துஸ்” என்று கூறி தன் இடத்திற்கு சென்றான்.
பிருந்தா கோபமாக தன் மேஜையை குத்தினாள். நந்தினி மாலினியிடம் கண்ணசைவில் ‘என்ன?’ என்று கேட்க மாலினி கண்ணசைவில், ‘பொறு’ என்றாள்.
மாலினி, “பிருந்தா”
பிருந்தா கோபமாக, “பேசாதடி..”
“நான் என்னடி செஞ்சேன்?”
“அதான் நீ ஒன்னுமே செய்யலை.. ஏன்?”
“என்னடி சொல்ற?”
“அந்த குரங்கை திட்டவும் இல்லை ஒன்னும் சொல்லலை.. போக சொல்லலை.. எனக்கு சப்போர்ட் பண்ணலை”
“நான் என்ன செய்யணும்?”
பிருந்தா மாலினியை கோபமாக பார்க்க, மாலினி, “நீ காரணம் இல்லாம முறைச்ச.. அவன் கிண்டல் பண்ணான்.. நீ குரங்கு னு சொன்ன அவன் யானை னு சொன்னான்.. நீ பென்னை தூக்கி எறிந்த அவன் தன்க் யூ னு சொல்லிட்டு போனான்.. இதில் நான் என்ன செய்ய முடியும்?”
பிருந்தா, “அந்த குரங்கு என்ன என்னை யானை னு சொல்றது!”
நந்தினி, “அப்போ உடம்பை குறை”
“குறைக்கிறேன்” என்று தீவிரமாக பிருந்தா கூறவும் நந்தினியும் மாலினியும் ஆச்சரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 
ராஜசேகர், “என்ன டா.. ட்ரக் எங்கியோ போறது போல் இருக்கே!”
“எங்கியும் போகலை”
“டேய் நீ அவ நம்பர் கேட்கும் போதே லைட்டா டவுட் வந்துது” 
“என்ன டவுட்?”
“வேற என்ன! பையன் ரூட் போடுறானோ னு தான்”
சிவகுரு சிரிப்புடன், “ட்ரக் போடுறது ரூட் விடுரதுலாம் உன் வேலை டா”
“அப்போ இதுக்கு பேர் என்ன சார்?”
“எதுக்கு பேர்?”
“மெசேஜ் அனுப்புறது, செல்ல பெயர் வைக்கிறது.. காலைலேயே வம்பு இழுக்கிறது.. etc etc”
“எல்லாருக்கும் தான் மெசேஜ் அனுப்புறேன்.. எல்லாருக்கும் தான் நிக் நேம் வைக்கிறேன்.. எல்லோரையும் தான் வம்பு பண்றேன்”
“எஸ்.. பட் அப்போலாம் ஜொலிக்காத உன் முகம் இப்போ மட்டும் ஜொலிக்குதே!”
“ஹ்ம்ம்.. விம் போட்டு கழுவினேன் அதான் ஜொலிக்குது.. போடா…”
ராஜசேகர் கிண்டலை விட்டுவிட்டு, தீவிரமான குரலில், “குரு.. ஆர் யூ சிரியஸ்?” 
சிவகுருவும் மழுப்பாமல் உண்மையை கூறினான், “தெரியலை சேகர்! அவளிடம் வம்பு பண்ண ரொம்ப பிடிச்சிருக்குது.. இதுக்கு பெயர் காதலா னு தெரியலை.. லெட் மீ சி”
ராஜசேகர் புன்னகைத்தான், பிறகு, “ஜமாய் மகனே ஜமாய்!” என்றான்.
அந்த நேரத்தில் ஜெனிஷா உள்ளே வரவும் ராஜசேகரின் பார்வை மாறியது, இப்பொழுது சிவகுரு சிரிப்புடன், “ஜமாய் மகனே ஜமாய்!” என்றான்.
மாலினி தன் இடதுபுறம் திரும்ப அதே நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியும் தன் வலது புறம் திரும்ப இருவரும் சிநேகமாக புன்னகைத்தனர்.
மாலினி புன்னகையுடன், “குட் மார்னிங்”
கிருஷ்ணமூர்த்தியும் புன்னகையுடன், “குட் மார்னிங்”
புழா ஆச்சரியமாக பார்த்தான்.
மாலினி ஏதோ கேட்க வரவும் கிருஷ்ணமூர்த்தி சட்டென்று திரும்பிக் கொண்டான். கிருஷ்ணமூர்த்தியின் இந்த செய்கையில் மாலினிக்கு சிறு அதிர்ச்சியும் கோபமும் ஒருங்கே வந்தது, அவளும் திரும்பிக் கொண்டாள்.
நந்தினி ஆச்சரியமாக பார்த்தாள். சிவகுரு மேல் கொண்ட கோபத்தில் இருந்து மீளாத பிருந்தா இதை கவனிக்கவில்லை. 
புழாவும் நந்தினியும் தங்கள் தோழன்/தோழியை எதுவும் கேட்கவில்லை. அவர்களும் எதுவும் சொல்லவில்லை.
“குட் மார்னிங் மாலினி” என்ற உற்சாக குரலில் திரும்பிய மாலினி ஸ்ரீராமனை பார்த்ததும் அவனை கடுமையாக முறைத்தாள்.
அவன், “என்ன மாலினி?” என்று கேட்கவும் மாலினி கோபமாக திரும்பிக் கொண்டாள். 
ஆங்கில ஆசிரியர் உள்ளே வரவும் மாணவர்கள் அமைதி காத்தனர்.
மதிய இடைவேளையில் ஸ்ரீராம் மாலினியிடம் பேச வரும் முன் அவள் வெளியே சென்று விட்டாள்.
மாலினி சென்றது முதலாமாண்டு IT வகுப்பிற்கு. 
தன் எதிரே வந்த ஷங்கரிடம், “ஷங்கர் முக்கியமான விஷயம் பேசணும்.. கிளாஸ் குள்ள போய்டலாமே!”
இருவரும் வகுப்பறை நோக்கி நடந்தனர்.
நடந்தபடியே ஷங்கர், “sure.. மோனி எப்படி இருக்கா?”
“பெட்டெர்.. (வகுப்பறை வந்திருந்தனர்) அவ விஷயமா தான் பேசணும்”
“என்ன விஷயம் மாலினி? நேத்து கூட………………….”
“ஹாய் மாலினி” என்றபடி ஆர்லி வந்து நின்றாள். இதை எதிர் பார்த்து வந்த மாலினியின் முகத்தில் எந்த வேறுபாடும் இல்லை.
[என்ன தான் H.O.D CSE IT மாணவர்களை பிரித்திருந்தாலும் உணவு இடைவேளையில் முக்கால்வாசி IT மாணவர்கள் CSE வகுப்பறையில் தான் இருந்தனர்.. சிலர் கேன்டீன் சென்றிருக்க, IT வகுப்பறையில் இவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர்.]  
மாலினி  ஆர்லி பக்கம் திரும்பாமல் ஷங்கரிடம், “முந்தாநேத்து நீ மோனி கிட்ட என்ன பேசுன ஷங்கர்?”
ஷங்கர் ஆர்லி இருவருமே அதிர்ந்தனர். மாலினி இப்படி நேரடியாக கேட்பாள் என்று ஆர்லி எதிர்பார்கவில்லை. ஷங்கரோ ‘என்ன பதில் சொல்வதென்று’ திகைத்தான்.
ஷங்கரின் முகத்தை பார்த்த மாலினி, “நீ கண்டிப்பா அவளை ஹர்ட் பண்ற மாதிரி பேசியிருக்க மாட்ட னு தெரியும்………….. “
ஆர்லி, “மாலினி…………………”
மாலினி கோபமாக ஆர்லி பக்கம் திரும்பி சுட்டுவிரலை நீட்டி, “ஏய்! நடுவுல பேசுன” 
மாலினியின் கோபத்தை பார்த்து ஆர்லி அரண்டாள். 
ஷங்கர் மாலினியை ஆச்சரியமாக பார்க்க, தன் முகத்தை சீர் செய்துக் கொண்டு ஷங்கர் பக்கம் திரும்பிய மாலினி, “ப்ளீஸ் ஷங்கர்.. என்ன பேசுன னு சொல்லு”
ஷங்கர் ஆர்லியை பார்த்தான் பிறகு, மாலினியிடம், “கண்டிப்பா சொல்லனுமா மாலினி?” என்று கேட்டவன் மீண்டும் ஆர்லியை பார்த்தான்.
மாலினி ‘ஏன் இந்த தயக்கம்’ என்பது போல் பார்க்கவும் ஷங்கர் தயக்கத்துடன், தரையை பார்த்தபடி, “அது கொஞ்சம் பர்சனல்.. கண்டிப்பா சொல்லணும் னா தனியா சொல்றேன்” என்றான்.
மாலினிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது, அவளுக்கு கோபம் கொள்வதா மகிழ்வதா என்றே தெரியவில்லை.
[‘ஷங்கர் ப்ரொபோஸ் செய்து, அதுவும் சேர்ந்து மோகனாவிற்கு பயத்தில் காச்சல் வந்ததோ என்று கோபம் கொள்வதா?
இல்லை..
ஷங்கருக்கு மோகனா மேல் தனி அக்கறை உண்டு என்பது மாலினி அறிந்ததே! அதனால், இந்த நல்லவன் குழந்தை குணம் கொண்ட தன் தோழியை நன்றாக பார்த்துப்பான் என்று மகிழ்வதா 
என்று அவளுக்கு தெரியவில்லை.. காதல்! மோகனாவிற்கு புரியுமா! என்று தன் தோழியை நினைத்த போது அவள் குழம்பினாள். ]
ஆர்லி, “என்ன ஷங்கர்! மாலினிக்கு சொல்றதை எனக்கும் சொல்லலாமே! நான் என்ன 3rd பெர்சன் ஆ?” என்று சிறிது கொஞ்சும் குரலில் பேசவும் மாலினிக்கு எரிச்சலும் கோபமும் வந்தது.
ஷங்கர், “எஸ்” என்றான்.
ஆர்லி அதிர்ச்சியுடன், “ஷங்கர்”
மாலினி அலட்சியமாக ஆர்லியை பார்த்தாள்.
ஷங்கர், “நான் மாலினி கூட தனியா பேசணும்…………..”
மாலினி, “இல்லை ஷங்கர் அவளும் இருக்கட்டும்”
ஷங்கர், “மாலி……………….”
“காரணமா தான் சொல்றேன்.. “ என்றவள் ஆர்லியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இவ மோனியை ஏதோ சொல்லி மிரட்டி இருக்கா.. அந்த பயத்தில் தான் காச்சல் வந்திருக்குது(ஷங்கர் கோபமாக ஆர்லியை பார்த்தான்).. என்ன மிரட்டினா னு தெரியலை.. மோனி புலம்பினதை சொல்றேன்..” என்று கூறி மோகனா புலம்பினதையும் ஆர்லியுடன் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலையும் ஒன்று விடாமல் கூறினாள்.
ஷங்கர் குழம்பினான். மாலினியிடம், “இவ சொன்னதிற்கும் நான் மோகனாவிடம் பேசியதிற்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் கேட்கிற?”
“இவ செல்வா பெயரை சொல்லி மிரட்டினது உண்மை.. பட்.. எனக்கு கரெக்ட்டா சொல்ல தெரியலை.. இவ கண்டிப்பா மோனியை வேற ஏதோ சொல்லி மிரட்டி இருக்கா.. மோனியை என்னிடம் எதையோ சொல்ல விடாம தடுக்கிறாளோ னு தோணுது..”
ஷங்கர், “ஏன் அப்படி சொல்ற?”
“என் சந்தேகத்திற்கு சில காரணங்கள் இருக்குது.. அன்னைக்கு இவனிங் மோனியை பேச விடாம இவளே அவளுக்கும் சேர்த்து பேசினா.. மோனி இவ கிட்ட தலை வலி னு சொன்னதா சொன்னா.. மோனி உடம்பு சரி இல்லை னா என்னிடம் தான் சொல்வா.. ஏதோ சரி இல்லை..”
மாலினியின் குரலில் இருந்தே அவள் மனம் படும் படு ஷங்கருக்கு புரிந்தது, அதனுடன் சேர்ந்து மோகனாவின் நிலைமை பற்றிய கவலையும் கூடியது.
ஆர்லி மனதினுள், ‘மாலினி இவ்வளவு புத்திசாலியா இருக்க கூடாது’ என்று நொந்து போனாள், இருந்தாலும் நிலைமையை மாற்ற முயற்சித்தாள்.
ஆர்லி, “ஷங்கர்.. இவ தேவை இல்லாம என் மேல் பழி போடுறா.. நீ எனக்கு சப்போர்ட் பண்ணாம அவளுக்கு சப்போர்ட் பண்ற”
“நான் ஏன் உனக்கு சப்போர்ட் பண்ணனும்?” என்ற கேள்வி ஷங்கரிடம் இருந்து கூர்மையாக வந்தது. 
[மாலினி சொன்ன, “மோனியை என்னிடம் எதையோ சொல்ல விடாம தடுக்கிளோ னு தோணுது” என்ற வாக்கியமும்,
மோகனாவின் “ஷங்கர் நல்லவன்.. ஷங்கர் அப்படி செய்ய மாட்டான்” என்ற புலம்பலையும் யோசித்த போது அவனுக்கும் ஆர்லி மேல் சந்தேகம் வந்தது.
தனக்கும் மோகனாவிற்கும் இடையே நிகழ்ந்தது இவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்ற சந்தேகம் வந்தது. அந்த தருணத்தில் அவனுக்கு ஆர்லியிடம் ஏதோ தவறு இருப்பதாக தோன்றியதே தவிர ‘அவள் தன்னை காப்பாற்ற மாலினியிடம் உண்மையை மறைக்கிறாளோ’ என்று சிறிதும் தோன்றவில்லை.]  
ஆர்லி அந்த கேள்வியில் திணறினாள், பிறகு சமாளித்து, “நான்.. நான் உன் பிரெண்ட்”
ஷங்கர், “மாலினியும் என் பிரெண்ட் தான்”
“நான் உன் கிளாஸ் மேட்”
“அவளும் தான்”
“இப்போ நாம தனி தனி கிளாஸ்”
“ஸோ வாட்?”
“ஷங்கர்!”
“சொல் ஆர்லி.. எந்த விதத்தில் நீ அவளை விட மேல்?”
ஆர்லி கோபமாக, “எந்த விதத்தில் அவள் என்னை விட மேல்?”
“அவள் என் மோனியின் உயிர் தோழி.. அந்த விதத்தில் மேல்”
ஆர்லி பேச்சிழந்தாள். எது நடக்க கூடாது என்று அவள் இவ்வளவு பாடு பட்டாளோ அவை அனைத்தும் பயனின்றி போனது. அவளால் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் மனம் எரிமலையின் தீக்குழம்பை போல் கொதித்தது. 
ஆர்லியின் முகத்தில் பல்வேறு பாவங்களை பார்த்துக் கொண்டிருந்த ஷங்கருக்கு புரியவில்லை என்றாலும் மாலினிக்கு தெள்ள தெளிவாக புரிந்தது.
மாலினி, “ஷங்கர்.. இன்னைக்கு இவனிங் நீ என்னுடன் மோகனாவை பார்க்க வர” என்றாள்.
ஷங்கர் திகைப்புடன், “மாலினி நான்..” என்று திணற, மாலினி புன்னகையுடன்,
“ஐ கேன் அண்டர் ஸ்டாண்ட்”
ஆர்லி, “ஏய்!……………..”
மாலினி, “இனி நீ உண்மையை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மோனியின் பயத்தை போக்க எனக்கு தெரியும்”
“கிழிச்ச.. இவனை கூட்டிட்டு போனா அவ பயம் கூட தான் செய்யும்”
ஷங்கர் கோபமாக, “ஏய்! என்ன சொல்லி அவளை மிரட்டின?”
ஆர்லி வாய்விட்டு சிரித்தாள். பிறகு, “அவ உன்னை கண்டாலே பயப்படுவா! அவ உனக்கு கிடைக்க மாட்டாள்.. “
அடுத்த நொடி ஆர்லியின் கன்னத்தில் பளார் என்று ஷங்கர் அறைந்தான்.
ஆர்லியின் சிரிப்பு நின்றது, அதிர்ச்சியுடன் கன்னத்தை பிடித்தபடி நின்றிருந்தாள். மாலினிக்கும் அதிர்ச்சியே.
மாலினி, “ஷங்கர்! என்ன இது.. கண்ட்ரோல் யுவர்ஸெல்ப்”
“மோகனா ஒரு குழந்தை மாதிரி மாலினி.. அவளை போய் இவ.. சை” என்றவன் ஆர்லி பாக்கம் கோபமாக திரும்பினான், சுட்டுவிரலை நீட்டி, “இனி அவளை தொந்தரவு செஞ்ச.. கொன்னுடுவேன்.. ஜாக்கிரதை” என்று மிரட்டிவிட்டு வேகமாக வெளியே சென்றான்.
மாலினி அவனை பின் தொடர்ந்து சென்றாள்.
அவர்களை ஆர்லியின் குரல் தொடர்ந்தது..
“போயும் போய் அந்த பயந்தாங்கோளியை லவ் பண்றியே! போடா போ! அவளுக்கு லவ் னா என்ன னு கிளாஸ் எடுத்தே உன் ஆயுள் முடிஞ்சிரும்”
மழை தொடரும்….

Advertisement