Advertisement

மழை 13:
ஆர்லியிடம் மறுநாள் கல்லூரியில் நேரில் பேசிக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்த பிறகு மாலினி ராஜசேகரை தன் தந்தை எண்ணில் இருந்து அழைத்தாள்.
ராஜசேகர், “ஹலோ”
“நான் மாலினி பேசுறேன்”
“சொல்லுங்க சிஸ்டர்”
“இது அப்பா நம்பர்”
“ஓகே சிஸ்டர்.. “
“நீ என்னிடம் பேசணும் னு சொன்னதா பிருந்தா சொன்னா”
“நீங்க எதுக்கு சிஸ்டர் ஸ்ரீராம் தான் போட்டு குடுத்தான் னு சொல்லலை?”
“சேகர் உனக்கே செல்வராஜ் குணம் தெரியும்.. கோபம் இருந்தாலும்  நான் பொண்ணு னு அமைதியா இருக்கான், இதுவே ஸ்ரீராம் னு தெரிஞ்சா நிச்சயம் அடிதடி தான் நடக்கும், அதை தானே ஸ்டாஃப்ஸ் எதிர் பார்க்கிறாங்க”
“பட்.. அதுக்காக நீங்க……….”
“அவன் ஒருத்தன் என்னை தப்பா நினைக்கிறதால எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே!”
“அப்படி இல்லை சிஸ்டர்…….” என்று ராஜசேகர் தயங்கினான்.
“என்ன?”
“சிஸ்டர்.. அது..”
“சொல்லு சேகர்”
“நீங்க ஸ்ரீராம் பெயரை சொல்லாததினால் ஸ்ரீராம் தப்பா நினைக்கலாம்……………”
“தப்பா னா?”
“நீங்க அவனை காப்பாத்த நினைக்கிறீங்க.. அவன் மேல்…..”
“சேகர் சொல்ல வந்ததை சொல்லிமுடி”
“அவன் மேல் சாப்ட் கார்னர் னு அவன் தப்பா நினைச்சிகிட்டா?”
“ஸ்ரீராமை ஹண்டில் பண்ண எனக்கு தெரியும்.. நீ கவலை படாதே”
“சிஸ்டர் என்னால் வெளிப்படையா சொல்ல முடியலை.. நீங்க அப்பா நம்பர் கொடுத்தது  தெரியாம உங்க நம்பர் நினைச்சுகிட்டு  அவன் பண்ண அலும்பல் தாங்களை.. ஓவர் சீன் போட்டான்..  அவன் உங்களை தப்பா நினைக்கிறான்.. உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்”
“ஹ்ம்ம்.. ஓகே நான் பார்த்துக்கிறேன்.. நான் நம்பர் தந்த காரணம், அவன் என்குவரி விஷயமா பேசணும் னு சொன்னான்”
“பேசுனீங்களா சிஸ்டர்?”
“ஹ்ம்ம்.. பேசினேன்” என்று கூறி ஸ்ரீராமன் கூறியதை கூறினாள். பிறகு, “சேகர்.. தப்பா நினைக்காதே.. நீ என் நம்பரை சிஸ்டர் னு ஸ்டோர் பண்ணுவ, உனக்கு தெரியாமல் உன் மொபைலில் இருந்து பசங்க…………………. 
“சிஸ்டர்.. விளக்கம் தேவையே இல்லை..” என்று புன்னகைத்தான்.
“தன்க் யூ” என்று மாலினி புன்னகைத்தாள்.
“சிஸ்டர்” என்று சிறு கண்டிப்புடன் சேகர் கூறவும் மாலினி சிரிப்பின் நடுவே, “ஓகே ஓகே தேங்க்ஸ் வாபஸ்” என்றாள்.
பிறகு, “ஜெனிஷா என்ன சொல்றா?”
ராஜசேகர் உற்சாகம் நிறைந்த குரலில், “சக்செஸ் சிஸ்டர்” என்றான்.
மாலினி மகிழ்ச்சியுடன், “இஸ் இட்.. வாழ்த்துக்கள்.. சொல்லவே இல்லை”
“அது.. அவ சொல்லலை சிஸ்டர் பட் அவ கண்கள் சொன்னது”
“ஹ்ம்ம்.. கலக்குறியே சேகர் கலக்குறியே!”
சேகர் புன்னகைத்தான்.
மாலினி, “சேகர்.. லவ் ஒரு பக்கம் இருக்கலாம் பட் படிப்பு முக்கியம்..”
“ஓகே  சிஸ்டர்”
“காதல் உன்னை பலபடுத்தனுமே தவிர திசைத் திருப்பக் கூடாது”
“கண்டிப்பா சிஸ்டர்”
“ஹ்ம்ம்.. பைன்..”
“சிஸ்டர் எதுக்கும் ஸ்ரீராம் கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. அவன் பசங்க கிட்ட உங்களை தப்பா பேசுவான்.. அவனை தவிர்க்கிறது நல்லது”
மாலினி யோசனையுடன், “என்னை பத்தி என்ன சொன்னான்?”
“நீங்க பிருந்தா கிட்ட கேட்டுகோங்க சிஸ்டர் ப்ளீஸ்”
“ஹ்ம்ம்.. ஓகே.. ஐ வில் டேக் கேர்.. ஹார்ட்டி தேங்க்ஸ்..”
“இட்ஸ் மை டுட்டி சிஸ்டர்”
“ஓகே.. டேக் கேர்.. பை” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
மாலினி பிருந்தாவை அழைக்க ‘switched off’ என்ற செய்தி கிடைத்தது, ‘மேடம் ரொம்ப கோபத்துல இருக்காங்க போல’ என்று மனதினுள் கூறிக்கொண்டு வீட்டு எண்ணிற்கு அழைத்தாள். பிருந்தாவின் அம்மா எடுக்கவும் அவருடன் சிறிது பேசிவிட்டு பிருந்தாவை அழைத்தாள்.
பிருந்தா, “ஹலோ”
“என்ன ஜில்ஸ் ரொம்ப சூடா இருக்கீங்க போல?”
“என்னடி என்னை பார்த்தா உங்களுக்குலாம் கிண்டலா இருக்கா?”
“உங்களுக்கா? யாரைடி கூட்டு சேர்க்கிற?”
“ச்ச்.. நீ எதுக்கு இப்போ போன் பண்ண அதை சொல்லு” என்று பிருந்தாவின் குரல் அலுப்புடன் வரவும் மாலினி, “என்னாச்சு பிருந்து?”
“ஒன்னுமில்லை டி”
“என் மேல் கோபமா பிருந்து?”
“இப்போ இல்லை”
“அப்பறம் ஏன் என்ன பிரச்சனைன்னு சொல்ல மாட்டிக்கிற?”
(ஏன் மாலினி நீ என்ன பிரச்சனை தாங்கியா?(சுமைதாங்கி போல்) உனக்கு இருக்கிற பிரச்சனைகள் போதாதா?)
“பெருசா ஒன்னுமில்லைடி.. அந்த குரங்கு பண்ற லொள்ளு தாங்கலை”
“சிவாவை சொல்றியா?”
“ஆமா அந்த குரங்கே தான்”
“பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ண மாட்டானே!”
“யாரு அந்த குரங்கா? போடி அவன் மட்டும் என் கைல கிடைச்சான்…………”
“கூல்.. கூல்.. என்ன விஷயம் டா?”
பிருந்தா அந்த குறுஞ்செய்தியை பற்றி கூறவும் மாலினி வாய்விட்டு சிரித்தாள். பிருந்தா கடுப்புடன், “ஏய்.. இதுக்கு தான் போன் பண்ணியா?”
“ஓகே..ஓகே.. சாரி..” என்று கூறி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினாள் மாலினி.
“மாலினி”
“ஓகே..ஓகே.. நான் ஒரு முக்கியமான விஷயமா தான் போன் பண்ணேன்”
“என்ன?”
“ஸ்ரீராம் என்னை பத்தி என்ன சொன்னான்? சேகர் சொல்ல தயங்குறான்.. உன்னிடம் கேட்க சொன்னான்?  ஸ்ரீராம் என்னையும் அவனையும் ஐ மீன் என்னையும் தன்னையும் லிங்க் பண்ணி பேசினானா?”
“அந்த நாதாரி வேற என்ன செய்வான்?” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறிய பிருந்தா ஸ்ரீராமன் பேசியதையும் சேகரிடம் உதை வாங்கியதையும் கூறினாள்.
புஷ்பா மாலினியை இரவு உணவருந்த அழைக்கவும், மாலினி, “ஓகே டி.. நான் பார்த்துக்கிறேன்.. அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க.. நாளைக்கு பார்க்கலாம்.. பை..”
“ஆர்லி கிட்ட பேசுனியா?”
மாலினி, “இதோ வரேன் மா” என்று ஒரு குரல் கொடுத்துவிட்டு, இறுக்கமான குரலில் பிருந்தாவிடம்,  “ஹ்ம்ம்.. பேசினேன்.. நாளைக்கு சொல்றேன்.. பை” என்று கூறிவிட்டு உணவருந்த சென்றாள்.
இரவு உணவிற்கு பிறகு அருணாசலம், “என்னடா இன்னைக்கு ஒரே போன் தான் போல.. அப்பா மொபைலில் பலென்ஸ் இருக்கா?”
மாலினி புன்னகையுடன், “நீ வேற அருணா.. இந்த பிரச்சனைகளை சமாளிப்பதுகுள்…………”
[அவளுக்கு தெரியாதே இவை எல்லாம் பிரச்சனையே இல்லை.. ஒரு பெரிய பிரச்சனை அவளுக்காகவே காத்திருக்கிறது  என்பது அவளுக்கு தெரியாதே!]
அருணாசலம், “ஸோ பலென்ஸ் இல்லை”
“என்ன அருணா.. பேச தானே மொபைல் இருக்குது”
புஷ்பா, “இப்படி நாள் பூராவும் பேசுவதற்கில்லை”
மாலினியின் விழிகள் தந்தையை பார்த்து கெஞ்ச, அருணாசலம், “ஓகே டா.. நேரமாச்சு.. நீ போய் தூங்கு” என்று கூறவும் தந்தையை கட்டிக் கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து, “குட் நைட் அருணா” என்று கூறிவிட்டு, அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டு, “குட் நைட் புய்ப்பம்.. ஓ சாரி சாரி.. குட் நைட் புஷ்பா” என்று கூறி சிட்டாக பறந்தாள்.
புஷ்பா வாய் திறக்கும் முன் அழைப்பு வராத கைபேசியில், “ஹலோ.. ஹலோ” என்று கூறிக் கொண்டு அருணாசலம் நகர்ந்தார்.
புஷ்பா, “ராமா” என்று தலையில் அடித்துக் கொண்டு சமையலறையை சுத்தம் செய்ய சென்றார்.
அடுத்த நாள் மோகனா கல்லூரிக்கு வரவில்லை. ஆர்லி சரியாக வகுப்பு தொடங்கும் நேரத்தில் தான் வந்தாள், மாலினி பக்கமே திரும்பவில்லை. H.O.D செய்த சதியை அறியாத  மாலினி மனதினுள், ‘எங்க போய்ட போற..’ என்று நினைத்துக் கொண்டாள்.
முதல் வகுப்பு கணிதம்.
நம்ம ‘ஜிண்டா’ கணக்கை போர்டில் போட்டுக் கொண்டிருந்தார், ஏதோ தவறால் அவரால் அந்த கணக்கிற்கான சரியான விடையை காண முடியவில்லை. உடனே,
“ஸ்டுடென்ட்ஸ்.. சால்வ் இட்” என்று கூறி கீழே இறங்கி வகுப்பறையினுள்ளே சுற்றி வந்து மாணவர்களை நோட்டமிட தொடங்கினார்.
சிவகுரு ராஜசேகரிடம், “மச்சான்.. தெரியலைனதும் நம்ம கிட்ட தள்றதை பார்த்தியா?”
“விடு டா.. அவரும் தெரிந்த மாதிரியே எவ்ளோ தான் நடிப்பார்!”
இருவரும் சிரித்தனர்.
ரத்னவேல், “ஹே.. யூ பாய்ஸ் வொய் லாபிங்?”
சிவகுரு, “நோ சார்.. வி நோ லாஃப்”
“டோன்ட் லை”
“நோ சார்.. மீ நோ லை”
ரத்னவேல் சிவகுருவை முறைத்தார். சிவகுரு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றான்.
அப்பொழுது கிருஷ்ணமூர்த்தி (ஹே!.. எல்லோரும் ஜோரா கை தட்டுங்க, நீங்க எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்த நம்ம கிருஷ் ஒரு வழியாக இன்று வந்துவிட்டான் பா..) 
“சார் ஐ சால்வ்டு தி சம்” என்றான்.
ராஜசேகர், “கிருஷ்ணாவால தப்பிச்சடி மகனே!”
“போடா.. ஜிண்டா வெளிய போ னு திட்டிருப்பான்.. சந்தோஷமா போயிருப்பேன்.. இந்த கிருஷ்ணா கெடுத்துட்டான்”
ரத்னவேல் கிருஷ்ணமூர்த்தியின் நோட்டை வாங்கி பார்த்தார். பிறகு, “யூ ஆல்! வாட் லிஸ்ஷன் கிளாஸ்? ஹி அப்சென்ட் பட் டிட் இட்.. யூ ஆல் வேஸ்ட்” என்று திட்டிக் கொண்டிருக்க,
ஜெனிஷா, “நீ ஒழுங்கா சொல்லி குடுத்தா தானே புரிறதுக்கு!”
பிருந்தா, “இவர் தங்கலீஷ் புரிறதுக்குள்ளேயே  கிளாஸ் முடிஞ்சுருது, இதுல எங்க சம் புரிறது!”
வகுப்பு முடியவும் ரத்னவேல் வெளியேறினார்.
மாலினி, “ஷங்கர்” என்று அழைக்கவும், ஆர்லி திகிலுடன் திரும்பி பார்த்தாள்.
ஷங்கர் திரும்பி பார்க்கவும், மாலினி, “கிருஷ்ணமூர்த்தி நோட்” என்று கேட்கவும் தான் ஆர்லியின் மூச்சு இயல்பானது.
[இன்று ஷங்கர் தான் வெளிப்புறம் அமர்ந்திருந்தான்]
ஷங்கர் நோட்டை தந்தான். மாலினி அதை உற்று உற்று பார்த்தாள், பிறகு ஷங்கரிடம் கொடுத்துவிட்டு, “ஒன்னுமே புரியலை” என்று கூறினாள். 
ஷங்கர், “சம் புரியலையா? கையெழுத்து புரியலையா?”
மாலினி, “ரெண்டும் தான்”
ஷங்கர் புன்னகைத்தான். கிருஷ்ணமூர்த்தி உதட்டோரம் மெல்லிய புன்னகை அரும்பியது.
அடுத்த வகுப்பு கெமிஸ்ட்ரி. அந்த வகுப்பு முடியும் தருவாயில் சைக்கோ, “IT ஸ்டுடென்ட்ஸ் கெட் அப்..”
IT துறையை சார்ந்த மாணவர்கள் எழுந்ததும் சைக்கோ, “பிரேக் டைம்மில் உங்க திங்க்ஸ் எடுத்துட்டு 1st ப்ளோர் ரூம் நம்பர் 102க்கு போங்க” என்றார்.
மாணவர்கள் திருதிருவென்று முழிக்கவும், சைக்கோ, “இனி அதான் உங்க கிளாஸ் CSE IT யை பிரிக்கிறோம்” என்றார்.   
மாலினி பெரிதும் அதிர, ஆர்லி பெரிதும் மகிழ்ந்தாள்.
மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள, சைக்கோ, “சைலன்ஸ்” என்று கத்தினார். வகுப்பு முடிந்ததும் சைக்கோவின் மேற்பார்வையில் IT மாணவர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வகுப்பறைக்கு சென்றனர்.
மாலினி நெஞ்சம் நிறைந்த கவலையுடன் மதிய உணவை தவிர்த்தாள். பிருந்தாவோ நந்தினியோ என்ன சொல்லியும் கேட்கவில்லை. 
பிருந்தா, “மாலு படுத்தாத………….” என்று பேசிக்கொண்டிருக்கையிலேயே மாலினி எழுந்து வெளியே சென்றாள். நந்தினி மாலினியை தொடர்ந்து சென்றாள்.
மாலினி நேராக IT வகுப்பறைக்கு சென்றாள். உள்ளே நுழையும் போதே அவளது கண்கள் ஷங்கரை தான் தேடியது. அவன் அங்கு இல்லை என்றதும் வாசலருகே நின்றாள்.
நந்தினி, “ஆர்லி உள்ள தானே இருக்கா மாலு!” என்று குழப்பத்துடன் வினவ, 
மாலினி, “நான் அவளை பார்க்க வரலை” என்று கோபமாக கூறினாள்.
ஆர்லியோ இவர்களை கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தாள். அதை இவர்கள் இருவருமே  கவனிக்க தவறவில்லை. ஷங்கர் படியேறி வரவும் மாலினி அவசரமாக நகர்ந்தாள். நந்தினி குழப்பத்துடன் மாலினியை பின் தொடர்ந்தாள்.
ஷங்கர் மாலினி முகத்தில் படிந்திருந்த கவலையை பார்த்ததும், “என்னாச்சு மாலினி?”
“மோனி………..”
“மோகனாக்கு என்ன மாலினி? ஏன் அவ இன்னைக்கு வரலை?”
“அவளுக்கு பிவர்” என்ற பதிலை சொன்னது மாலினி இல்லை, அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த  ஆர்லி.
ஷங்கர் பேச வாய் திறக்கும் முன், மாலினி, “அப்பறம் பேசலாம் ஷங்கர்.. பை” என்று கூறி விருட்டென்று நகர்ந்தாள்.
ஷங்கர், “என்னாச்சு இவளுக்கு?” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டு நகர்ந்தவன், திரும்பி, “ஆர்லி” என்று அழைத்தான்.
ஆர்லி மேல் யாரோ பூ-மழை பொழிந்தது போல் இருந்தது. ஆர்லி தன் ஆர்வத்தை அடக்கிக் கொண்டு, “என்ன ஷங்கர்?”
ஷங்கர், “மோகனாக்கு என்ன ஆச்சு? எப்போ பீவர் வந்துது? இப்போ எப்படி இருக்கா?”
ஷங்கர் ஒவ்வொரு கேள்வியாக கேட்க ஆர்லிக்கு மலர்கள் எல்லாம் நெருப்பாக மாறியது போல் இருந்தது. ஆர்லி தன் எரிச்சலையும் கோபத்தையும் மறைத்து இறுகிய முகத்துடன், “இப்ப ஓகே தான்”
“எப்போ காலேஜ் வருவா?”
ஆர்லி மனதினுள், ‘1st டைம் பேசுற, என்னை பற்றி கூட பேச வேண்டாம் அந்த லூச பற்றி பேசாமயாது இருக்கலாமே’ 
ஷங்கர், “ஆர்லி”
“ஹ்ம்ம்..”
“எப்போ வருவா னு கேட்டேனே”
“மாலினியிடம் கேட்டுகோ” என்று கூறிக் கொண்டு இவளும் விருட்டென்று சென்றுவிட ஷங்கர் நிலைமை தான் திண்டாட்டமாக போனது.
ஷங்கர் மனதினுள், ‘அம்மா இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலையே’ என்று நொந்துக் கொண்டு வகுப்பறையினுள் சென்றான்.
வகுப்பறையில், நந்தினி, “மாலு என்ன பிரச்சனை?”
“ஆர்லி தான் பிரச்சனை”
“என்ன பண்ணா?”
மாலினி மோகனாவின் உளறலையும் ஆர்லியுடன் நிகழ்ந்த உரையாடலையும் பற்றி கூறினாள். 
பிருந்தா, “அவ வந்தான்னு நீ ஏன் ஷங்கர் கிட்ட பேசாம வந்த? அவ முன்னாடியே ஷங்கரிடம் கேட்டிருக்கணும்.. அவ முகத்திரையை கிளிச்சுருக்கணும்” என்று கோபமாக சொன்னாள்.
நந்தினி, “பொறுமையா இரு பிருந்தா”
பிருந்தா, “அதுக்கு தான் நீ இருக்கியே”
மாலினி, “பிருந்தா”
பிருந்தா, “வந்துட்டா அடுத்த நந்தினி” என்று முணுமுணுத்தாள்.
நந்தினி, “நீ என்ன நினைக்கிற மாலு?”
மாலினி, “நான் ஷங்கரிடம் தனியா பேசணும் னு நினைக்கிறேன்.. மோனி விஷயத்துல அவனுக்கும் ஏதோ பங்கு இருக்குது”
பிருந்தா, “அவன் என்ன………………..”
நந்தினி கறாரான குரலில், “ஏய் அவசரக் குடுக்கை.. கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருக்கிறியா?” என்று கூறவும் பிருந்தா ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அமைதியானாள்.
மாலினி, “ஷங்கர் மோனி ஹர்ட் ஆறது போல் கண்டிப்பா எதுவும் செஞ்சிருக்க மாட்டான் பட்….. ஹ்ம்ம்.. லெட் மீ ஸ்பீக் வித் ஹிம்.. அவன் போன் நம்பர் தெரிஞ்சா போதும்..”
பிருந்தா, “நான் ஒன்னு சொல்லலாமா?”
நந்தினி சிறு எரிச்சலுடன், “என்ன?”
பிருந்தா நந்தினியை பார்த்து தன் வாயை சுளித்து, நாடியை இடதோளில் இடித்துவிட்டு, மாலினியிடம், “சேகர் கிட்ட ஷங்கர் நம்பர் கேளு” என்றாள்.
மாலினி, “ஹ்ம்ம்.. நான் அதான் யோசித்தேன்”
பிருந்தா, “இப்பவாது சாப்பிடலாமாடி பசிக்குது” என்று கூறவும் மணி அடித்தது.
பிருந்தா, “போச்சு டா.. “ என்று கூறி மாலினியையும் நந்தினியையும் முறைத்தாள்.
ங்கே வகுப்புகள் நடுந்து கொண்டிருக்க ஒரு வீட்டில்,
சீனியர் மாணவன் கிருஷ்ணன் மற்றும் இரண்டு மாணவர்கள்(அவனது வகுப்பை சேர்ந்தவர்கள்) பீர் அடித்துக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணன், “எனக்கு தான் சஸ்பென்ஷன் நீங்க ஏன்டா காலேஜ்க்கு போகலை?” என்று சிறிது போதையுடன் பேசினான்.
ஒருவன், “வேற எதுக்கு ஓசி பீருக்கு தான்” என்று முணுமுணுத்துவிட்டு, “என்ன டா இப்படி சொல்லிட்ட? நீ எங்க நண்பன் டா” என்று கூறி கிருஷ்ணனை தோளோடு சேர்ந்து அணைத்தான்.
சிறிது நேரத்தில் ஒருவன், “இருந்தாலும் அந்த மாலினி பண்ணது தப்பு டா”
மற்றொருவன், “ஆமா டா.. நீ அவளை சும்மா விட்டுருக்க கூடாது”
கிருஷ்ணன், “திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு.. விடுங்க டா..”
ஒருவன், “அது எப்படி டா.. அவளை சும்மா விட கூடாது”
 
மற்றொருவன், “அதானே.. டேய் கிருஷ்ணா.. நீ ஆம்பளை தானே”
கிருஷ்ணன், “டேய்” என்று கத்த, மற்றொருவன், “கத்தாத.. நீ ஆம்பளை னா அவளை எப்படி சும்மா விட்ட?”
கிருஷ்ணனுக்கு மாலினி மேல் கோபம் ஏற தொடங்கியது. மற்ற இருவரும் இன்னும் சில வார்த்தைகளால் கிருஷ்ணனை நன்றாக ஏற்றிவிட்டனர். அதன் விளைவு, கிருஷ்ணன், “இன்னைக்கு.. அவளை என்ன செய்றேன் பாருங்க டா” என்று கூறிக் கொண்டு அவர்களையும் அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினான். காரில் செல்லும் போது யாரையோ தன் கைபேசியில் அழைத்து பேசினான்.
[அவனது பெற்றோர்கள் ஊருக்கு சென்றிருக்க அவர்களின் அனுமதி இன்றி காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தான். இவன் சஸ்பெண்டு ஆனதே அவர்களுக்கு தெரியாது. தற்போது இருக்கும் வீடு சில சகமாணவர்கள் தங்கியிருக்கும் வீடு]
முதலில் கிருஷ்ணன் ஒரு மருத்தவமனையின் முன் நிறுத்தினான். மற்ற இருவரும் ஒன்றும் புரியாமல் விழிக்க, கிருஷ்ணன் தன் கைபேசியை எடுத்து யாரையோ அழைத்தான். ஒருவன் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே  கையில் எதையோ மறைத்து மறைத்து கொண்டு வந்து இவனிடம் கொண்டுத்தான், பிறகு, “தம்பி என்ன மாட்டிவிட்டுறாத..” என்று கூற கிருஷ்ணன் சிரிப்புடன் அவன் கையில் பணத்தை திணித்தான்.
பிறகு வண்டியை கல்லூரிக்கு செலுத்தினான். அவன் கல்லூரிக்கு செல்லும் வழியில், ஒருவன், “மச்சான்.. பச்சி அந்த பஸ்ஸில் ஏறிடுச்சு” என்றான்.
[சந்தேகமே வேண்டாம் இவர்களால் பச்சி என்று சொல்லப் படும் நபர் நம்ம மாலினியே தான்]
கிருஷ்ணன், “இவ வீட்டுக்கு போற பஸ் இல்லையே” என்று கூறிக் கொண்டே பேருந்தை தொடர்ந்து சென்றான். மாலினி ஒரு நிறுத்தத்தில் இறங்கினாள்.
மாலினி மோகனாவை பார்க்க சென்று கொண்டிருந்தாள். கிருஷ்ணன் அவளை தொடர்ந்து சென்றான். 
ஒருவன், “மச்சான் வெயிட் பண்ணலாம்.. அவ யாரையோ பார்க்க போறா னு நினைக்கிறேன்.. வெளிய வரட்டும்.. இருட்டுனா நமக்கும் வசதி” என்றான். 
கிருஷ்ணனுக்கும் அது சரியென்றே பட்டது. மாலினியின் வரவிற்காக காத்துக் கொண்டு இருந்தனர். சும்மா இருக்கவில்லை, பீர் அடித்துக் கொண்டு தான் இருந்தனர்.
7.10 மணிக்கு மாலினி வெளியே வந்தாள். ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் மாலினியின் முன் வழியை மறித்து வண்டியை நிறுத்தினான் கிருஷ்ணன். அந்த தெருவில் இரு புறமும் மரங்கள் இருந்ததால், தெரு-விளக்கின் ஒளி மிகவும் மங்கலாக தான் தெரிந்தது.
மாலினி யார் என்று பார்க்க, கிருஷ்ணன் வில்லத்தனமாக சிரித்துக் கொண்டு இறங்கினான். மாலினி சுதாரிக்கும் முன் அவளது முகத்தில் மயக்க மருந்து தடவிய கைக்குட்டையை வைத்தான். என்ன நடக்கிறது என்று புரிவதற்கு முன் மாலினி மயங்கினாள்.
மழை தொடரும்….

Advertisement