Advertisement

மழை 11:
பற்பல எதிர்பார்ப்புடன் ஸ்ரீராமன், “ஹலோ” சொன்னான்.

மறுமுனையில் கம்பிரமான ஆண் குரல், “ஹலோ” என்றதும் ஸ்ரீராமனுக்கு பெரும் அதிர்ச்சி.. அதிர்ச்சியில் உடனே அழைப்பை துண்டித்தான்.

“மாலினி சொன்ன நம்பருக்கு தானே போட்டோம்! எப்படி? ஒருவேளை ஏதும் கிராஸ்-டாக் இருக்குமோ! திரும்ப ட்ரை பண்ணுவோம்” என்று மனதினுள் கூறிக்கொண்டு மறுபடியும் மாலினி கொடுத்த எண்னை அழைத்தான்.

மறுபடியும் அதே குரல். அதிர்ச்சியும் குழப்பமுமாக ஸ்ரீராமன் அமைதி காக்க, மறுமுனையில் பலமுறை ஹலோ சொல்லிவிட்டு எரிச்சலுடன் அழைப்பை துண்டிக்கும் தருவாயில் ஸ்ரீராமன் தயங்கி தயங்கி, “மாலினி.. மாலினி இருக்காளா?”

“நான் மாலினியோட அப்பா.. நீங்க யாரு?”

ஸ்ரீராமனை அதிர்ச்சி, பயம், கலக்கம் எல்லாம் சேர்ந்து ஆட்கொள்ள தானாக அவனது விரல் அழைப்பை துண்டித்தது. 


ஸ்ரீராமன் தன்னை தானே திரும்ப திரும்ப “ஏன் இப்படி செஞ்சா?” என்று கேட்டுக் கொண்டான்.

“ராஜசேகருக்கும் சிவகுருக்கு மட்டும் தெரிஞ்சுது! சை.. இப்படி பண்ணிட்டாளே.. இப்படி நோஸ் கட் பண்ணிட்டாளே!
இதுக்கு தர முடியாதுனே சொல்லிருக்கலாமே!
சை.. இப்படி ஏமாத்திடாளே!” என்று மாலினி மேல் பெரிதும் கோபம் கொண்டான்.
ஆனால் சிறிது நேரம் கழித்து, “எதுக்கு அப்பா நம்பர் குடுத்தா?
இனி என்னை தொந்தரவு செய்யாதே னு மறைமுகமா மிரட்டுராளோ?” என்று சிறிது பயந்தான், பிறகு,
“ச ச.. அப்படி இருக்காது.. என்னை தவிர்கிறதா இருந்தா ஏன் காப்பாத்துறா?” என்று யோசித்தவன் தலையை பியித்துக் கொள்ளாத குறையாக, “ஐயோ.. இவளை புரிஞ்சுக்கவே முடியலையே!” என்று அலுத்துக் கொண்டான்.

அதே நேரத்தில் மாலினியின் கைபேசி சிணுங்கியது. அழைத்தது அவளது தந்தை.
மாலினி, “ஹலோ.. நான் மோனி வீட்டுல இருக்கிறேன் பா.. அவளுக்கு பிவர்.. பயத்துல ஏதேதோ பினாத்திட்டு இருக்கா.. நான் அப்பறம் பேசுறேன்”

“என்னாச்சு? எதை பார்த்து பயந்தா?”

மாலினி இயலாமையுடன், “அதான் எனக்கும் தெரியலை”

“கவலைப் படாத.. மோனி சீக்கிரம் சரி ஆகிடுவா.. டாக்டரிடம் காமிச்சீங்களா? அங்கிள் ஆன்ட்டி எப்படி இருக்காங்க?”

“அங்கிள் தைரியமா தான் இருக்காங்க, இப்ப தான் டாக்டரை கூட்டிட்டு வர போயிருக்காங்க.. ஆன்ட்டி தான் கொஞ்சம் பயந்து போயிருக்காங்க?”

“அம்மாவும் அங்க தான் இருக்காளா?”

“அம்மா ஆன் தி வே.. நான் காலேஜில் இருந்து இங்கே வந்துட்டேன்.. ஆன்ட்டி பயந்து போய் இருக்காங்க னு சொன்னதும் அம்மா கிளம்பி வந்துட்டு இருக்காங்க” 

“ஹ்ம்ம்.. ரெண்டு பேரும் அங்கேயே இருங்க.. நானும் ஆபீஸ்ஸில் இருந்து அங்கேயே வந்துறேன்..”

“அப்பா…”

“என்னடா”

“நான்…………”

“ஓகே.. நீ வேணா அங்க தங்கிகோ.. நான் அம்மாவை கூட்டிட்டு போறேன்”

“தன்க் யூ அருணா”

அருணாசலம் புன்னகைத்தார். 


மாலினி அவசரமாக, “ஏதோ சத்தமா புலம்புறா.. நான் வைக்கறேன்”

அப்பொழுது தான் அருணாச்சலத்திற்கு தான் அழைத்ததின் காரணம் நினைவிற்கு வர, அவசர அவசரமாக, “மாலு என் நம்பரை யாருக்கும் குடுத்தியா?”

“ஆமா.. அந்த லூசு ஸ்ரீராமனுக்கு கொடுத்தேன்.. நான் அப்பறம் பேசுறேன்.. பாய்”

அவசரமாக மாலினி மோகனா அருகே சென்று அமர்ந்தாள்.

மீண்டும் மாலினியின் கைபேசி சிணுங்கியது. இப்பொழுது அழைத்தது பிருந்தா. ஆனால் அதை கவனிக்காமலேயே மாலினி, “நான் அப்பறமா பேசுறேன் அருணா..” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

கைபேசி மீண்டும் சிணுங்கியது. மீண்டும் அழைத்தது பிருந்தா தான். இந்த முறையும் மாலினி அதை கவனிக்கவில்லை, எடுத்ததும், “ஏன் அருணா படுத்துற.. இப்ப என்ன எதுக்கு அந்த லூசுக்கு உன் நம்பரை குடுத்தேன் னு தெரியனுமா.. 
அந்த என்குவரி விஷயமா ஏதோ பேசணும் னு செல் நம்பர் வேணும் னு கேட்டான்.. உடனே உன் நம்பரை கொடுத்தேன்.. போதுமா.. பாய்..” என்று கூறியவள் அழைப்பை சரியாக துண்டிக்காமல்,

“மோனி.. மோனி.. என்னாச்சு மோனி” என்று கூறியபடியே குனிந்து அவளது முணங்கல்களை காதுகொடுத்து கேட்க தொடங்கினாள்.

அதே நேரத்தில் பிருந்தா குழப்பத்துடன் முழிப்பதை பார்த்த ராஜசேகர், “என்னாச்சு பிருந்தா?”

பிருந்தா, “அவ அங்கிள் போன் பண்றதா நினைச்சே என்னிடம் பேசிட்டு வச்சுடா” என்று குழப்பத்துடனே கூறவும் ராஜசேகரும் சிவகுருவும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

சிவகுரு, “என்ன குழப்பம் பிருந்தா?”

“அவ மோனி வீட்டில் இருக்கா னு நினைக்கிறேன்.. பட் அவ பேசுனதே எனக்கு புரியலை..” என்று தலையை குழப்பத்துடன் இருபுறமும் ஆட்டினாள்.

ராஜசேகர், “சிஸ்டர் என்ன பேசுனாங்க?”

பிருந்தா சொன்னாள்.

ராஜசேகரும் சிவகுருவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.

பிருந்தா எரிச்சலுடன், “ஏன் சிரிக்கிறீங்க?”

ராஜசேகர், “சிஸ்டரின் மூளையை நினைத்து தான்” என்று சிரிப்புடன் கூறினான்.

பிருந்தா எரிச்சலும் கடுப்புமாக, “இப்ப எதுக்கு அவளை பாராட்டுற?”

ராஜசேகர் ஸ்ரீராமனுடன் நிகழ்த்த சண்டையைப் பற்றி கூறினான்.
பிருந்தா சிவகுருவை முறைத்தாள்.

சிவகுரு, “நான் ஸ்ரீராம் இல்லை”

பிருந்தா, “தெரியும்.. அதான் என்னிடம் அடி வாங்காம இருக்க”

‘பார் டா!’ என்பது போல் பார்த்த சிவகுரு அவளிடம், “அப்பறம் எதுக்கு இந்த முறைப்பு?”

ராஜசேகர், “ஹ்ம்ம்.. அந்த …. (ஏதோ கெட்ட வார்த்தை சொல்ல வந்தவன் பிருந்தா இருப்பதால் அந்த வார்த்தையை தொண்டைக்குள்ளேயே தள்ளினான்) அவனை இன்னும் அடிக்க விடாமல் என்னை தடுத்து…………”

சிவகுரு, “உனக்கு தெரியாது பிந்துஸ்…” என்றவன் பிருந்தாவின் முறைப்பையும் ராஜசேகரின் ஆச்சரிய பார்வையை பார்த்ததும் தான் பசங்களிடம் ‘பிந்து அப்பளம்’ என்று அழைக்கும் ஞாபகத்தில் இன்று அவனையும் அறியாமல் புதிதாக ‘பிந்துஸ்’ என்று அவளை அழைத்ததை கவனித்தான். அதற்காக மன்னிப்பு கேட்டால் அது சிவகுரு அல்லவே! அவன் சிறிதும் அலட்திக்கொல்லாமல், “இப்ப எதுக்கு முறைக்கிற.. நீங்க எங்களுக்கு நிக் நேம் வைக்கலையா.. அது மாதிரி தான் இதுவும்”

பிருந்தா, “சரி குரங்கு” என்றாள்.

இதை எதிர்பார்த்திராத சிவகுரு வாயடைத்து நிற்க, ராஜசேகர் வாய்விட்டு சிரித்தான்.

சுய-உணர்வு பெற்ற சிவகுரு எதுவும் நடக்காதது போல், “நான் மட்டும் தடுக்கலை.. இன்னேரம் இவன் கொலை கேஸில் மாட்டிருப்பான்”

பிருந்தா சிறிது ஆச்சரியமாக பார்க்கவும், சிவகுரு, “உண்மை.. அப்ப மட்டும் நீ இவனை பார்த்துருக்கணும்…..” 

ராஜசேகர், “அவனுக்கு இதுலாம் பத்தாது டா”

பிருந்தா, “அதான் செல்வா கிட்ட சொல்லு னு சொல்றேன்”

ராஜசேகர், “நீ அதுலேயே நில்லு”

பிருந்தா, “பின்ன அவனை சும்மா விடுறதா? (என்றவள் அப்போது தான் ஞாபகம் வந்தவளாக) ஆமா நீங்க ரெண்டு பேரும் ஏன் சிரிச்சீங்க?”

சிவகுரு, “சிரிக்கிறது கூட தப்பா?”

பிருந்தா சிவகுருவை முறைத்துக் கொண்டே, “மொக்க போடாத.. சகிக்கலை”

சிவகுரு, “தன்க் யூ”

பிருந்தா சொல்வதறியாது அவனை மீண்டும் முறைத்தாள்.

ராஜசேகர் சிரிப்புடன், “அவனை சமாளிக்க உன்னால் முடியாது.. விடு”

பிருந்தா, “பெரிய இவன்.. சோட்டா பாய்” என்று நாடியை இடது தோள்பட்டையில் இடித்தாள்.

சிவகுரு, “ஏதோ பாய்(boy) னு ஒத்து கிட்டே! பட் உனக்கு ஒன்னு தெரியுமா பிந்துஸ்!!! எறும்பு சிறுசு தான்.. ஆனா யானை காதுக்குள்ள போச்சு… யானை க்ளோஸ்”

பிருந்தா, “ஏய்.. இப்ப எதுக்கு யானை எறும்பு னு எக்ஸ்சம்பில் சொல்ற?”

சிவகுரு அசால்ட்டாக தோளைக் குலுக்கி, “நான் சாதாரணமா தான் சொன்னேன்.. குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்”

பிருந்தா பல்லைக் கடித்துக் கொண்டு, “டேய்”

இவர்களின் சண்டையை ரசித்து சிரித்துக் கொண்டிருந்த ராஜசேகர் பிருந்தா பக்கம் திரும்பி, “ஓகே.. ஓகே.. இப்ப நாங்க எதுக்கு சிரிச்சோம் னு தெரியனுமா வேண்டாமா?”

பிருந்தா சிவகுருவை முறைத்து, மீண்டும் நாடியை இடது தோள்பட்டையில் இடித்து ராஜசேகர் பக்கம் திரும்பி, “தெரியனும்” என்றாள்.

ராஜசேகர், “அந்த டஷ்(கெட்டவார்த்தை சொல்ல முடியாததால் அவன் பெயரை சொல்ல விரும்பாமல் dash என்கிறான்) சிஸ்டர் நம்பர் குடுத்துட்டாங்க னு பெருசா பீட்டர் விட்டானே.. சிஸ்டர் கொடுத்தது அவங்க நம்பரை இல்ல.. அப்பா நம்பரை கொடுத்திருக்காங்க”

பிருந்தா, “ஓ.. அதை தான் மாலு சொன்னாளா” என்று புன்னகைத்தாள்.

சிவகுரு பிருந்தா கூறிய ராகத்திலேயே, “ஆஆ..மாமா” என்றான்.
பிருந்தா மீண்டும் அவனை முறைத்தாள்.

ராஜசேகர், “மோகனாக்கு என்னாச்சு?”
பிருந்தா, “தெரியலை.. இவனிங் கிளம்பும் போது லைட்டா தான் பிவர் இருந்துது..”

மோகனா, பலவற்றை அரைகுறையாக உளறினாள்.

“ஷங்கர் நல்லவன்..” “ஷங்கர் அப்படி செய்ய மாட்டான்..” என்று சிறிது திடமான குரலில் கூறியவள், பயம் கலந்த அழுகை குரலில், “அப்படி சொல்லாத ஆர்லி.. அப்படி சொல்லாத” என்றாள்.
“பொய் சொல்றது அம்மாக்கு பிடிக்காது” என்றவள் உடனே பதறியபடி, “ஐயோ.. வேணாம்” என்றாள் பிறகு பயத்துடன், “மாலு பாவம்.. “ என்றாள்.

சில நொடிகள் அமைதியாக இருந்தாள், பிறகு மீண்டும் முணங்க தொடங்கினாள்.

“நிஜமா மாலு என் பிரெண்ட்..”
“ஓகே நான் சொல்லலை.. “
“செல்வா மாலுவை அடிக்க மாட்டான் தானே..”
“ஆர்லி.. நீ சொன்னபடியே கேட்கிறேன்..”
“நான் சொல்லலை.. ஆர்லி.. மாலுக்கு ஒன்னும் ஆகாது தானே..”

மருத்துவர் வந்தார். மோகனாவை சோதித்துவிட்டு, “ஏதோ பயத்துல தான் பிவர் வந்திருக்கிறது.. பயப்பட வேண்டாம்.. ஜஸ்ட் டூ டேஸ் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.. தூங்குறதுக்கு இன்ஜெக்ஷன் போட்டுருக்கிறேன்.. நல்ல தூங்குவாங்க.. டிஸ்டர்ப் பண்ண வேணாம்.. எழுந்ததுக்கு அப்பறம் உடனே ஏன் பயந்தாங்க னு கேள்வி கேட்காதீங்க.. தெளிவானதுக்கு அப்பறம் மெல்ல கேளுங்க.. நீங்களே காரணத்தை கண்டு பிடிச்சுட்டா, அதை பத்தி பேசாதீங்க, மறைமுகமா அந்த பயத்தை தெளிய வைங்க..” என்று கூறி சென்றார்.

மாலினியின் அன்னை வந்து ஆறுதல் சொல்லி தைரியம் சொன்ன பிறகு மோகனாவின் அன்னை சற்று தைரியம் பெற்றார்.

மோகனாவின் முணங்கல் மெல்ல மெல்ல குறைந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்.

மாலினியின் தந்தையும் வந்தார்.

மோகனாவின் முணங்களில் இருந்து மாலினி புரிந்து கொண்ட விஷயம் இது தான், “செல்வராஜ் தன்னை எதுவும் செஞ்சிருவானோ னு பயந்துருக்கா” 

இதையே பெரியவர்களிடமும் சொன்னாள்.

மாலினி தங்குவதாக சொன்னதும் மோகனாவின் பெற்றோர், “இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை மா”
“எப்படியும் அவ தூங்க தான் போற.. நீ கிளம்பு”
“நைட்டும் ஸ்லீபிங் டோஸ் கொடுத்துருக்கார்.. நீ நாளைக்கு காலேஜ்க்கு வேற போகணும்.. நீ கிளம்பு” என்று பலவாறு சொல்லி கிளப்பினர்.

மாலினி மனமின்றி கிளம்பினாள். விடைபெற்ற நேரத்தில் மோகனாவின் தந்தை மாலினியின் தலையை வருடி, “மோனிக்கு ஒன்னும் இல்லை.. நீ நிம்மதியா தூங்கு” என்று சிறு புன்னகையுடன் சொல்லி அனுப்பினார்.

அருணாசலம் கிளம்பும் நேரத்தில் மோகனாவின் தந்தையிடம், “எந்த நேரம்னாலும் தயங்காம போன் பண்ணு” என்று கூறிக் கிளம்பினார்..
வீட்டிற்கு செல்லும் வழியில் மோகனாவின் முணங்கலையே நினைத்துக் கொண்டு வந்த மாலினி,
‘எதுக்கு ஷங்கர் பெயர் சொன்னா? 
ஆர்லி சொல்றதை கேட்கிறேன் னு சொன்னாளே! ஏன்? 
ஆர்லியும் இவளும் என்ன பேசினாங்க? 
இவனிங் கூட ரெஸ்ட்ரூம் ஒண்ணா தானே போனாங்க? அது கூட ஓகே பட் மோனி தலை வலி னு என்னிடம் சொல்லாம ஆர்லி கிட்ட சொல்லி இருக்காளே! 
ஏதோ இடிக்குதே’ என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.
மாலினியின் தந்தை ‘மாலு’ ‘மாலு’ என்று அவளை உலுக்கவும் தான் சுய-உணர்வு பெற்றாள்.
மாலினியின் தந்தை, “என்ன மாலு.. மோனி பற்றியே யோச்சிட்டு இருக்கியா? டோன்ட் வொர்ரி டா.. சீக்கிரம் சரியாகிடும்”
“ஹ்ம்ம்.. அது ஓகே பா.. பட் அவ பயந்தது செல்வா என்னை எதுவும் செஞ்சிருவானோ என்றது மட்டும் தானா னு சந்தேகமா இருக்குது?”
“அப்படி தானே புலம்புனா?”
“ம்.. பட் அதுக்கு முன்னாடி நிறைய சொன்னா.. கடைசியா சொன்னதுடன் லிங்க் ஆகுற மாதிரி தான் இருக்குது பட் டீப் ஆ யோசிச்சா மோனி கரக்டருக்கு ஏதோ இடிக்கிற மாதிரி தோணுது.. குழப்பமா இருக்குது”
“ரொம்ப குழம்பாத டா.. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ, அப்பறம் தெளிவா யோசி.. இப்ப உள்ள போகலாம் வா” என்றதும் தான் தங்கள் வீட்டிற்கே வந்துவிட்டதை கவனித்தாள் மாலினி.
மாலினி முகம் கழுவிக் கொண்டு வந்ததும் முகத்தில் சிறு தெளிவு இருந்தது. 
மாலினியின் தந்தை, “என்ன மேடம் என்ன இடிக்குது னு கண்டு பிடிச்சுடீங்களா?”
“அது இல்லை.. பட் ஆர்லி கிட்ட பேசினா தெளிவாகலாம்”
“ஹ்ம்ம்.. ஓகே..  அது இருக்கட்டும்.. ஸ்ரீராம்க்கு எதுக்கு என் நம்பர் குடுத்த?”
“அதுவா அருணா, இன்னைக்கு இவனிங் அந்த லூசு…….” என்று ஆரம்பித்து நடந்ததை கூறினாள், பிறகு, “என்குவரி பற்றி அவன் சொல்ல வரதை தெரிஞ்சுக்கணும் தான் பட் அதை காரணமா வச்சு என்னிடம் கடலை போட ட்ரை பண்ணா! அதான் உன் நம்பரை கொடுத்தேன்” என்று சிரித்தாள். 
மாலினியின் கடைசி இரு வாக்கியத்தை மட்டும் கேட்ட படி வந்த அவளது அன்னை கணவனை முறைத்துக் கொண்டே கோபமாக, “அப்பாவும் மகளும் பேசுற பேச்சை பாரு” என்றார்.
மாலினி தந்தையிடம் ரகசியமாக, “எதுக்கு அருணா உன் டார்லிங் இப்படி பொரிறா?”
அருணாசலம் சிரிப்புடன், “கடலை போடுறது பற்றி பேசினதுக்கு”
மாலினி, “ஓ” என்று சத்தமாக கூற, அன்னை, “என்னடி ஓ?”
மாலினி, “உனக்கு பொறாமை புஷ்பா..”
அன்னை முறைக்கவும், “ரியல்லி புஷ்..”
அன்னை, “என் பெயரை கேவல படுத்தாத னு எத்தனை முறை சொன்னாலும் ரெண்டு பேரும் கேட்க மாட்டீங்களே! நான் என்ன கதவா, சும்மா புஷ் புஷ் னு சொல்லிட்டு”
“ஓகே பிளவர்.. நோ டென்ஷன்…”
அன்னை மீண்டும் முறைத்தார்.
மாலினி, “உன்னோட பெரும் தொல்லை.. புஷ்பா னு சொன்னாலும் முறைக்கிற, புஷ் னு சொன்னாலும் முறைக்கிற, பிளவர் னு சொன்னாலும் முறைக்கிற, நீ இப்படியே முறைச்சுட்டு இருந்த, செந்தில் சொன்னது போல், ‘பூ வ பூ னும் சொல்லலாம், புய்ப்பம் னும் சொல்லலாம் நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்’ னு உன்னை புய்ப்பம் னு சொல்ல ஆரம்ச்சிடுவேன்”
அன்னை இதற்கும் முறைக்க, மாலினி போலி அலுப்புடன், “கஷ்ட காலம் டா.. சிவா சொல்றது போல் நீ கண்ணகி கஸின் சிஸ்டர் தான்”
“யாருடி சிவா?”
“உனக்கு அந்த குரங்கை நல்லா தெரியும், என் கூட ஸ்கூலில் படிச்சானே!”
“அவன் எதுக்கு டி என்னை…………..”
“ஹலோ மேடம்.. வெயிட் வெயிட்.. அவன் உன்னை ஒன்றும் சொல்லலை.. அவன் பொண்ணுங்க யார் முறைச்சாலும், ‘ஆமா இவ பெரிய கண்ணகி கஸின் சிஸ்டர்’ னு கமெண்ட் பண்ணுவான்.. அதை தான் சொன்னேன்”
“எனக்கு எதுக்குடி பொறாமை?”
“ஹ்ம்ம்.. பார்த்தியா.. டாபிக்கை எப்படி சேஞ் பண்ணிட்ட”
“யாரு நானா?”
“பின்ன இல்லையா?” என்றவள் அன்னையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த தந்தை பக்கம் திரும்பி,  “ஹே அருணா உன் டார்லிங்யை அப்பறம் சைட் அடிச்சிக்கோ, இப்ப நியாத்தை சொல்லு”
அன்னை  பொறுமையிழந்து அடிக்க வர, மாலினி தந்தை பின் சென்று நின்றுக் கொண்டு அன்னைக்கு அழகு காட்டினாள்.
அன்னை, “ஹே வெளிய வாடி”
“ஐயோ ஐயோ.. என்ன புஷ்பா.. உனக்கு வெவரமே பத்தலை.. இதான் நல்ல சான்ஸ்.. என்னை அடிப்பது போல் நீ அருணாவை நல்ல அடிக்கலாம்”
அருணாசலம், “ஹே” என்று கூறி அவளது கையை பிடித்து இழுத்து முன் பக்கம் கொண்டுவந்தார், மாலினி இரு கைகளும் தந்தையின் கையில் சிக்கி கொண்டிருக்க, மாலினி, “சும்மா சொன்னேன் அருணா.. நம்ம புஷ் மலை இறங்க சொன்னேன்.. நீ என் செல்ல அருணா தானே.. என்ன விட்டுரு.. நீயே என்ன காபாத்தல னா………. ஐயோ புஷ் வரா.. அடி பின்னிடுவா.. விட்டுரு அருணா.. ப்ளீஸ்…” என்று கெஞ்ச அருணாசலமும் புஷ்பாவும் சிரித்தனர். 
சிரிப்பின் நடுவே புஷ்பா  அடிக்க வர சரியாக அந்த தருணத்தில் அருணாசலம் மாலினியின் கையை விட்டுவிட, அடியில் இருந்து தப்பித்து அன்னைக்கு மீண்டும் அழகு காட்டி சிரித்தாள்.
மாலினி, “ஓகே புஷ்.. உனக்கு இப்போ என்ன தெரியனும்.. எதுக்கு பொறாமை னு சொன்னேன் னு தானே.. அது ஒன்னுமில்லை.. உனக்கு ஏன் பொறாமை னா.. உன் டாடி இப்படி ப்ரீ-யா உன்னிடம் பேசலையே னு தான்” என்று இழுத்து  இழுத்து  கூறியபடியே தந்தையின் கைபேசியை எடுத்துக் கொண்டு தன் அறை நோக்கி ஓடினாள்.
அருணாசலம், “ஹே மாலு.. அது என் மொபைல்”
“தெரியும்.. தெரிஞ்சு தான் எடுத்தேன்” என்று அறையினுள்ளே இருந்தே குரல் கொடுத்தாள்.
வெளியே புஷ்பா வழக்கம் போல் தன் கணவரை திட்டித் தீர்க்க, அதற்கு வழக்கம் போல் அருணாசலம் சிரித்துக் கொண்டிருந்தார்.
மாலினி முதலில் தன் கைபேசியில் இருந்து பிருந்தாவை அழைத்தாள்.  பிருந்தா வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்கவும் ‘ச்ச்’ என்று அலுத்துக் கொண்டு தன் தந்தையின் கைபேசியில் இருந்து ஸ்ரீராமனுக்கு,
“உண்மையாகவே என்குவரி பற்றி பேசணும் என்றால் இப்போது கூப்பிடு – மாலினி” என்ற குறுஞ்செய்தியை ஆங்கிலத்தில் அனுப்பினாள்.
மாலினி குறுஞ்செய்தி அனுப்பிய இரண்டாவது நிமிடம் ஸ்ரீராமனிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஸ்ரீராமன் தயக்கத்துடன், “ஹலோ” என்றான்.
மாலினி, “ஹலோ” என்றதும் ஸ்ரீராமனுக்கு யாரோ பூக்களை தன் மீது தூவியது போல் இருந்தது.
[உடனே ஸ்ரீராமன் பாவம் என்று நினைத்து விடாதீர்கள், எந்த ஒரு பெண் பேசினாலும் அவன் இப்படி தான் ரியாக்ட் பண்ணுவான்]
ஸ்ரீராமன் குழைவான குரலில், “ஹாய் மாலு”
“மாலினி னு கூப்பிடு”
“இப்போ நான் பிரெண்ட் தானே!”
“அது நீ நடந்துக் கொள்ளும் முறையில் இருக்கிறது.. மாலினி னு கூப்பிடு” என்று அவள் கறாராக சொல்லவும்,
அவன் மனதை தேற்றிக் கொண்டு, “ஓகே மாலினி”  என்றான்.
“என்குவரி விஷயமா என்ன பேசணும்?”
ஸ்ரீராமன் மனதினுள், ‘எப்போதும் டைரக்ட் டா விஷயத்துக்கே வா’ என்று கூறிக்கொண்டு, “நீ ஏன் அங்கிள் நம்பர் குடுத்த?”  
“நான் ஏன் என் நம்பர் குடுக்கணும்?”
ஸ்ரீராமன்  திணறினான், “அது.. அது. .ஹம்.. நான் உன் பிரெண்ட்.. சரி இப்போதைக்கு உன் கிளாஸ் மேட்.. இது ஓகே வா” 
“ஹ்ம்ம்.. இதையே மெயிண்டேன் பண்ணு”
“மாலினி”
“லுக் ஸ்ரீராம்………”
“எங்க பார்க்கிறது…” என்று சலித்துக்  கொள்ள..
“இப்படியே பேசிட்டு இருந்த நான் வச்சிருவேன்”
“ஓகே.. ஓகே.. சொல்லு”
“நீ தான் சொல்லணும்”
“எதை?”
மாலினி பல்லைக் கடித்துக் கொண்டு, “என்குவரி பத்தி ஏதோ பேசணும் னு சொன்னியே”
“ஓ.. அதுவா”
“பின்ன வேற எதுக்கு போன் பண்ண?”
“அது.. அது.. அதுக்கு தான்” என்று அசடு வழிந்தான்.
“…”
“ஜிண்டா கிளாஸில் நான் புக் எடுக்க போனேனே அப்போ……….” என்று ஆரம்பித்து நடந்ததை கூறினான். கொஞ்சம்  அதிகமாக தான் சொன்னான், அதாவது ரவி சார் அவனை ரொம்ப மிரட்டியதாகவும் அவன் விட்டுகொடுக்கவில்லை என்றும் கூறினான்.
அனைத்தையும் அமைதியாக கேட்ட மாலினி, “இதை ஏன் என்னிடம் சொல்ற?”
“என்ன மாலினி இப்படி சொல்லிட்ட?”
“என்ன சொல்லிட்டேன்?”
“நீ தானே நம்ம கிளாஸ்ஸில் யாரயாச்சும் நீ பிரெண்ட் ஆ நினைக்கிறியா னு கேட்ட?”
“அதுக்கு?”
“இப்ப நான் நம்ம பிரெண்ட்ஸ் விட்டு குடுக்காம பேசிருக்கேனே”
“அதுக்கு இப்ப நான் என்ன பண்ணனும்?”
“என்ன மாலு?”  
“என் பெயரை சுருக்காதே”
‘ச.. என்ன சொன்னாலும் மசிய மாட்டிக்கிறாளே!’ என்று மனதினுள் நொந்துக் கொண்டு, “சைக்கோ உன்னை என்ன கேட்டாரு?”
“எதுக்கு கேட்கிற?”
“தெரிஞ்சுக்க தான்.. இப்ப நான் எல்லாத்தையும் சொல்லலையா?”
“நான் சொல்ல சொல்லலையே”
“சொல்ல வேண்டாம் னும் சொல்லலையே”
“….” (முதல் முறையாக மாலினியை மடக்கினான்)
“என்ன மா(மாலு என்று சொல்ல வந்து திருத்தினான்)..மாலினி?”
 
“நீ எதையும் உளறி கொட்டினியா னு தெரிஞ்சுக்க நினைத்தேன் தான் பட் அதை நானாக வந்து உன்னிடம் கேட்கலை”
“மாலினி”
“ஓகே.. சொல்றேன்.. H.O.D நீ என்னிடம் திரும்ப திரும்ப என்குவரியில் என்ன கேட்டாங்க னு  ஏன்  கேட்ட னு கேட்டார், அப்புறம் நீ என் பெயரை சொன்னதாகவும், எனக்கு யார் சொன்னது னு தெரியும் னு நீ சொன்னதாக சொன்னார்”
“நான் உன் பெயரையே சொல்லலை மாலினி”
“..”
“நிஜமா மாலினி……..”
“ஓகே.. ஓகே”
“மாலினி உனக்கு நிஜமாவே உண்மை தெரியுமா?”
“எந்த உண்மை?”
“பார்த்தியா என்னிடமே……………”
“அது என்ன உன்னிடமே?”
“ஓகே.. ஓகே.. கூல்.. நான் ஸ்டாஃப் இல்லை.. உன் பிரெண்ட்.. ஓகே உன் கிளாஸ் மேட்  தான்,  ஸோ உண்மையை சொல்லலாமே னு மீன் பண்ணேன்”
“அதான் எந்த உண்மையை?”
ஸ்ரீராமன் உண்மையாகவே நொந்து போனான், பெருமூச்சொன்றை வெளியிட்டான், பிறகு, “கஷ்ட காலம்”
“யாருக்கு?”
“வேற யாருக்கு உன்னை என்குவரி பண்ணவங்களுக்கு தான்”
மாலினி சிரிப்பை அடக்கிக் கொண்டு சாதாரணமான குரலில், “அப்படியா?”
“முடில மாலினி.. சத்தியமா முடியலை”
“என்ன முடியலை?”
ஸ்ரீராமன் தலையில் கைவைத்துக் கொண்டான்.
மாலினி, “ஓகே.. வேற ஒன்னுமில்லையே.. பாய்”
ஸ்ரீராமன் அவசர அவசரமாக, “மாலினி.. மாலினி”
“என்ன?”
மாலினியுடன் பேச்சை வளர்க்க விரும்பினான் ஆனால்  என்ன சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை,  யோசித்து, “யார் சொன்னது னு உனக்கு தெரியுமா?”
“எதை?”
“எப்பாபாபாபா… பிரியா மேமை போடி னு திட்டினது யார் னு உனக்கு தெரியுமா? போதுமா?”
மாலினி மெளனமாக சிரித்தாள், பிறகு, “பிரியா   மேமை ‘போடி’ னு சொன்னாங்களா?” என்று ஆச்சரியமாக கேட்டாள். 
ஸ்ரீராமன் அசந்து போனான், கௌண்டமணியை போல், “எப்பா சாமி.. இது உலக மஹா நடிப்புடா சாமி” என்றான்.
இப்பொழுது மாலினி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட, அவ்வளவு தான் ஸ்ரீராமன் உச்சிகுளிர்ந்தான்.
மாலினி, “உன்னை விடவா நடிச்சிற போறேன்?”
“ரியல்லி மாலினி.. யூ ஆர் சான்ஸ்லெஸ்”
“ஓகே நான் வைக்கிறேன்.. பாய்”
“மாலினி.. மாலினி”
“எனக்கு கடலை பிஸ்னெஸ்ஸில் இன்ட்ரெஸ்ட் இல்லை.. ஸோ பாய்” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.  
மாலினி அழைப்பை துண்டிக்கவும் பிருந்தா அவளை அழைத்தாள்.
மழை தொடரும்….

Advertisement